Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சுயமரியாதையுடன் வாழவிரும்பும் தமிழ் ஈழத்தினர் வெறும் 5 % மட்டும்தானா?

Featured Replies

''உறுபசியும் ஓவாப்பிணியும் செறுபகையும் அற்றது நாடு'' என்ற வாழ்வை 2000 ஆண்டுகள் சரித்திரமாக்கிய தமிழினத்தின் வாழ்வை ,மாண்பை, மரபுகளை, தன்மான உணர்வோடு வாழும் உரிமைகளை, மதியிலிருத்தி தமிழர்கள் வாழ முனையாது வயிற்றுப் பசியையும், வாழ்க்கை வசதிகளையும் எண்ணி இவற்றை எல்லாம் மறக்கவே முன்வருவர் என்று தப்புக் கணக்குப் போடும் குறுமதியாளர்களின் குதர்க்கங்களின் வெளிப்பாடே

5% தமிழர்கள் மட்டும்தான் தமிழ் ஈழத் தாயகக் கோட்பாட்டை ஆதரிக்கும் மக்கள் என்ற அமெரிக்க அரசுத் தூதுவரின் அண்மைய பிதற்றலாகும்.

திறந்த சிறையிலே 40இ000 ஸ்ரீ லங்காவின் இராணுவ காட்டு மிராண்டி வெறித்தன சித்திர வதைகளினிடையிலே நாளும் பொழுதும் சுதந்தரக் காற்றை சுவாசிக்க வழியின்றி பசியும், பொருட்தட்டுப்பாடுகளும், விலையேற்றங்களும் தலைவிரித்தாட, மரண பயம் உடல் உணர்வுகளை உறையவைக்க விடிவை நோக்கி ஏக்கப் பெருமூச்சோடு யாழ் குடாநாட்டில் வாழும் மனிதர்களில் 5% தானாம் முழு விடுதலைபெற்று அமைதியோடு செழிப்பும், சிறப்புமாக தமது மண்ணோடு ஒட்டி உறவாடி வாழவிரும்பும் மக்கள.; அமெரிக்கரின் கணிப்பீடு இது.

வாழ்ந்த மண்ணை, வீடுவாசல்களை, செல்வங்களை, உற்றம் சொற்றம் உறவுகளை, கனவுகளை, எதிர்பார்ப்புக்களை எல்லாம் விட்டுவிட்டு உயிர் தப்பினால் போதும் என்று கூண்டோடு தப்பி ஓடி, கடலிலும், அலைகளிலும் பல உயிர் உறவுகளைப் பரிதாபமாகப் பலிகொடுத்துவிட்டு இன்று அன்னிய நாடுகளிலே அகதிகளாக உறைவிடம் தேடியுள்ள 10 இலட்சம் தமிழர்களில் தாயகத்திற்காக ஏங்கிக் காத்துக்கிடக்கும் மக்கள் வெறும் 5% தானா?.

அடிமைத் தளைகளை தகர்த்தெறிந்து ஏழ்மையும், அறியாமையும் நீக்கி இல்லாமையும், போதாமையும் ஒழித்து, பேதமும், பிளவுகளும் நீக்கி, பிறரைத் தாழ்த்தாமல், பிறர்தாழ் விழாமல், சுரண்டாமல், சுரண்டப்படாமல் தாம் உழைத்த உழைப்பின் பயனை மட்டுமே அனுபவித்து விடுதலைபெற்ற பேரானந்தத் தோடு வாழவிரும்பும் மக்கள் தமிழர்களில் 5% தானா?

எம்மை அடக்க வந்த பீரங்கிகளை அழித்து, பல்குழல் துப்பாக்கிகளை துவம்சம்செய்து, வானத்திலிருந்து குண்டு மழை பொழிந்து அப்பாவிப் பொது மக்களை கொன்று குவித்த கோழைத்தனங்களை குண்டு வீசியளித்து, காட்டாற்று வெள்ளங்களாக தரைவளியே நகர்ந்து எமது வாழ்வை, வளங்களை சாம்பலாக்கிய பேய்க் கூட்டத்தின் நிழல் இனி என்றுமே எமது வாழ்வில் பட இடமளிக்கக் கூடாது என்று கங்கணம் கட்டி போராடிவரும் வீர பரம்பரையினர் வெறும் 5% மட்டுமா?.

வேட்டுக்கேட்டால் மிரண்டு ஓடிவிடுவார்கள், இவர்கள் சிறை என்றவுடன் சிந்தை குளப்பி சிறு நரிகள் போல் குலைநடுங்க ஓடுவார்கள், இவர்கள் இழந்த அரசை, இனி இவர்கள் மீட்பதாவது, இவர்கள் ஒன்றுபட்டு எம்மை எதிர்ப்பதாவது, என்று இறுமாப்போடு இருந்த சிங்கள இனவெறியினரை கதிகலங்க வைத்த வீரத்தாய்க் குலத்தின் செல்வங்களும் இந்த 5% ல் அடங்குகின்றனரா?

இயற்கை வளம் கொஞ்சுகின்ற எங்கள் தமிழ் ஈழத்திருநாட்டின் வழங்களைப் பெருக்கி,விலைவாசி ஏற்றங்களைத் தடுத்து, கள்ள வாணிபம், கொள்ளை லாபம், குறுக்கு வழிகளில் கலப்படம் போன்ற கேடுகளைக் களைந்து, நல்லாட்சியும; ஒழுங்கும், நல்லொழுக்கமும் நிறைந்த நவீன தொழில் நுட்பம் நிறைந்த நாட்டைக் கட்டியெழுப்பும் கனவோடு கண்வழித்துத், கண் தூங்குகின்ற தமிழர்கள் வெறும் 5% தானா?

உச்சிவெயிலிலும் உழைத்து வாழ்ந்த உழவனும், பல தொழில்களில் ஈடுபட்டுப் பொருள் உற்பத்திசெய்த பாட்டாளிகளும், சிறுவர் சிறுமியர்களுக்கு அறிவுக் கண்களைத் திறக்க கல்வித் தொண்டாற்றிய ஆசிரியர்களும், நோய்நொடி நீங்கி நல்ல உடல்வளத்தோடு வாழ உதவிய மருத்தவத் துறையினரும், காட்டு வெள்ளத்தை அடக்கி நீர்வளத்தைத் தேக்கி நிலவளம் பெருக்கிய பொறியியலாளர்களும், நல்ல நாட்டு நிர்வாகத்திற்காகப் பல துறைகளில் சேவைபுரிந்த அரச சேவையினரும் நிறைந்துள்ள தமிழர் சமூகத்தில் 5% தானா விடுதலைத் தாகமுடையவர்கள்?.

வாழ்விடமில்லாமல் ஈழத்தில் கரை ஒதுங்கியவர்களின் வாரிசுகள் ஆதிக்க வெறியராகி இன்று தமிழினவெறி தலைக்கேறி கடந்த 60 வருடங்களாக தமிழர்களுக்கு கொடுத்த இன்னல்கள் எப்படி இவர்களோடு வாழமுடியும் என்ற எண்ணத்தைத் தமிழர்களுக்குக் கொடுக்க முடியும்.

தமிழின் தொன்மையை, அதன் மாண்பை உய்த்துணர விரும்பாது தமிழர்களின் தொழில் வாய்ப்புக்கள், நிலம், கல்வி என்று படிப்படியாகத் திட்டமிட்டுப் பறித்தவர்களோடு இனி எப்படி ஒரு வாழ்வு அமையமுடியும். இங்கே சர்வதேசத்தினரின் குறைபுத்தி பேதலித் தனங்களே வெளிப்படுகின்றன.

ஆனால் அடிமைத்தனத்தையும், சிங்கள காட்டுமிராண்டித்தனங்களையும

UK ல் வாழும் 150,000 தமிழர்களும் இப் பொங்கு தமிழ் நிகழ்வில் கலந்து கொண்டு உங்கள் முடிவான நிலைப்பாட்டை கோரிக்கைகளை உரக்க உலகிற்கு கூறுவது உங்கள் தலையாய கடமையாகும்.

ஆடித் திங்கள் 12ம் நாள் சனிக்கிழமை பி.ப 3 மணிக்கு அலைஅலையாய் வாருங்கள்.

''பொங்கு தமிழை'' தமிழர்களின் பெருவிழாவாகக் கொண்டாடி ஆனந்தக் கூத்தாடுவோம்.

இடம்: Richardson Evans Playing Field, Rohamton Vale, London SW15 3PQ

நேரம்: 3.00 pm

http://tamilthesiyam.blogspot.com/

தயவு செய்து எல்லோரும் வாருங்கள்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தயவு செய்து எல்லோரும் வாருங்கள்...

மாவிலாறுக்கு சி எழிலனை குறை சொல்லுவோர், எங்கே இளந்திரையன் அறிக்கை என்று விசனப் படுவோர்,

இறந்த மாவீரர்களின் உடலை புலிகள் ஏற்க மறுக்கிறார்கள் என்று அபாண்டம் சொல்லுவோர்,

எல்லோரும் தயவு கூர்ந்து உங்கள் *** பணியை நிறுத்தி விட்டு

பொங்கு தமிழில் கலந்து கொள்ளுங்கள்.

Edited by இணையவன்
*** நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜேர்மனியில் 8000பேர் வந்தார்கள் இங்கு10ஜ எதிர்பார்க்கிறோம். 100வந்தாலும் மகிழ்சிதான்.

இது புலம் பெயர்ந்த தமிழர்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு எங்களுடைய ஒற்றுமையையும் பலத்தையும் சர்வதேசத்துக்கு வெளிக்காட்ட வேண்டிய நேரம்.எங்களுடைய தாய்மண்ணை தாய் நாட்டை மீட்பதற்கான போராட்டத்துக்கு எங்களுடைய இளைய உறவுகள் அங்கே தங்களது விலைமதிக்க முடியாத உயிரையே கொடுக்கிறார்கள். அந்த உறவுகளின் உயிர்கள் அநியாயமாக பறிபோகாமல் இருப்பதற்கு புலம் பெயர்ந்த நாங்கள் போராட்டத்துக்கான பலத்தை கொடுக்க வேண்டும்.ஓரணியில் திரண்டிருக்கும் புலம் பெயர்ந்த மக்கள் சக்தி என்பது மிகப்பெரிய பலம் என்பதை நாங்கள் ஒவ்வொருவரும் உணரவேண்டும்.

Edited by athiyan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.