Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கருணாநிதியின் அரசியல் நாடகம்

Featured Replies

கருணாநிதியின் அரசியல் நாடகம்

தி.மு.க தலைவரும் தமிழக முதலமைச்சரும் சிறந்த திரைக்கதை வசனகர்த்தாவுமான மு.கருணாநிதியின் நெறியாள்கை மற்றும் திரைக்கதை வசனம், இயகத்தில் 'தமிழக மீனவருக்கான உண்ணாவிரதப் போராட்டம்' என்னும் திரைப்படமொன்று தமிழகமெங்கும நேற்று சனிக்கிழமை திரையிடப்பட்டது. இதன் மூலம் தமிழக மக்களை முட்டாள்களாக்கும் வல்லமை தற்போதும் கருணாநிதிக்கு உண்டென்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்லும் இலங்கை கடற்படைக்கெதிராகவும் தமிழக மீனவர் பிரச்சினையை டில்லிக்கு உணர்த்தும் வகையிலுமே இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடத்தபட்டததாக தனது கதைக்கு கருணாநிதி முன்னுரை வழங்கியுள்ளார் இந்தக் கதையில் அமைச்சர்களான ஆற்காடு வீரசாமி, அன்பழகன், மு.க.ஸ்டாலின் ஆகியோர் தமது பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர்.

கச்ச தீவுப் பிரச்சினையை தீர்க்க அதிகார வாய்ப்புகள் இருந்த காலத்தில் அதனை செய்யாமல் இப்போது கச்சதீவில தமிழக மீனவரின் உரிமைகளை நிலைநாட்டும் நேரம் வந்து விட்டதென கூறி உண்ணாவிரதப் போராட்ட திரைப்படத்தை கருணாநிதி காண்பித்ததற்கு பின்னணிக் காரணிகளாக விஜயகாந்தின் பின்னால் அணி திரண்ட மீனவர்களும் மன்மோகன் சிங்கிடம் முறையிட்ட பா.ம.க வினருமே காணப்படுகின்றனர்.

1974ம் ஆண்டு கச்சதீவு இலங்கைக்கு தாரைவார்த்துக் கொடுக்கபட்டதிலிருந்து இன்று வரை நான்கு தடவைகள் முதலமைச்சராகவிருந்த கருணாநிதிக்கு தமிழக மீனவரின் உரிமைகளை கச்சதீவில் நிலைநாட்ட அப்போதெல்லாம் வராத நேரம் இப்போது மட்டும் வந்ததேப்படி?

மத்திய அரசின் முக்கிய பங்காளிக் கட்சியாக இருந்து கொண்டும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தாமல் தற்போது உண்ணாவிரத நாடகமாடியுள்ளார் கருணாநிதி.

தனது ஆட்சியதிகாரத்;தைப் பயன்படுத்தி அரசியல் எதிரிகளைப் பந்தாடும் கருணாநிதி அதே அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி தமிழக மீனவரின் உயிர்களைக் காப்பாற்ற பின்னடிக்கிறார்.

இந்த உண்ணாவிரதப் போரட்டத்தை கருணாநிதி டில்லியில் நடத்தியிருந்தால் கூட தமிழக மீனவர் மீது சிறிதளவேனும் அக்கறையிருக்கின்றதென்பதை ஏற்றுக் கொண்டிருக்க முடியும்.

அதைவிட தற்போது மத்திய அரசின் ஆட்சி ஊசலாடிக் கொண்டிருக்கின்றது. 22ம் திகதி அது தப்புமா அல்லது சாகுமா என்பது தெரிந்துவிடும். இவ்வாறான நிலையில் மத்திய அரசுடன் சுண்டைக்காய் கட்சிகள் கூட பேரம் பேசி தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்கின்றன. தன்னைக் காப்பாற்றிக் கொள்ள எதைக் கேட்டாலும் கொடுக்கும் நிலையிலலேயே மத்திய அரசும் உள்ளது.

இந்நிலையில் மத்திய அரசில் தனது 6 உறுப்பினர்களை வைத்திருக்கும் கருணாநிதி எவ்வித கோரிக்கைகள், நிபந்தனைகளுமின்றி தனது விசுவாசத்தைக் காடடுகின்றார். 2,3 உறுப்பினர்களை வைத்துள்ள கட்சிகள் கூட, மத்திய அரசிடமிருந்து பல சலுகைகளை பெறுகின்றன. இவ்வாறான நெருக்கடியான நிலையைக் கூட தனது குடிமக்களின் உயிர்ப்பிரச்சினைக்கு பயன்படுத்த கருணாநிதி தயாரில்லை. சிலவேளைகளில் தனது குடும்ப நலனுக்கு பயன்படுத்த நினைக்கின்றாறோ தெரியவில்லை.

தற்போது மத்திய அரசின் வாழ்வா சாவா என்ற போரட்டத்தில், இலங்கையுடனான கச்சதீவு ஒப்பந்தத்தை ரத்துச் செய்யுமாறு கருணாநிதி கோருவதுடன் அவ்வாறு ரத்தாக்காவிட்டால் 6 உறுனர்களும் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளமாட்டார்களென அறிவித்தால் போதும் தமிழக மீனவர் பிரச்சினைக்கு அடுத்த நிமிடமே முற்றுப்புள்ளி வைத்துவிடலாம்.

ஆனால் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தாமல் உண்ணாவிரதப் போரட்டத் திரைப்படத்தை கருணாநிதி காட்டியமை அவரின் சுயநல அரசியலின் வெளிப்பாடேயாகும்

இராமேஸ்வரத்தில் தே.தி.மு.க. தலைவர் விஜயகாந்த் நடத்திய இலங்கை கடற்படைக்கெதிரான ஆர்ப்பாட்டத்தில் திரண்ட மீனவர்களைப் பார்த்த கருணாநிதி அரண்டுவிட்டாh. தி.மு.க.வுக்கு உள்ள வாக்கு வங்கிகளில் மீனவர் சமூகங்களின் வாக்கு வங்கி கணிசமானது அதற்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற அச்சம் கருணாநிதிக்கு ஏற்பட்டது.

அடுத்ததாக தி.மு.க.வுடன் உறவை முறித்துக் கொண்ட பாட்டாளி மக்கள் கட்சியினர் டில்லிக்குச் சென்று தமிழக மீனவர் பிரச்சினை தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கிடம் நேரில் முறையிட்டனர். இதற்கு சார்க் மாநாட்டுக்காக இலங்கை செல்லும் பொது தமிழக மீனவர் பிரச்சினை தொடர்பாக இலங்கை ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுப்பதாக பிரதமர் உறுதியளித்தார். இந்த சந்திப்பும் கருணாநிதிக்கு அவமானத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் 19ம் திகதி இலங்கை கடற்படைக்கெதிராக நாகபட்டடினத்தில் பெரும் ஆர்ப்பாட்டம் இடம் பெறுமென அ.தி.மு.க ஜெயலலிதா அறிவித்தார். நிலைமை கட்டு மீறிப் போவதையும் மீனவர்களின் உணர்வுகள் தமக்கு எதிராக திரும்புவதையும் உணர்ந்து கொண்டதாலே வேறு வழியின்றி மீனவர் பிரதிநிதிகளை சந்தித்த கருணாநிதி பின்னர் தனது உயர்மட்டக் குழுவுடன் ஆராய்ந்துவிட்டு உண்ணாவிரதப் போராட்ட அறிவிப்பபை வெளியிட்டார்.

இந்த உண்ணாவிரதப் போராட்டம் தமிழக மீனவர்களின் நலன்களை விட தி.மு.க.வின் நலன்களுக்காகவே நடத்தப்பட்டது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்தினால் சரிந்த தனது செல்வாக்கை கருணாநிதி தக்க வதை;துக் கொள்ள முடியுமே தவிர, தமிழக மீனவர்களுக்கு எந்த விமோசனமும் ஏற்பட்டு விடப்போவதில்லை.

இதனை கருணாநிதியையும் மத்திய அரசையும் நன்குணர்ந்தவர்கள் புரிந்து கொள்ள முடியும்.

ஏனேனில் கச்சதீவு தாரைவார்க்கப்பட்டதும் இந்த முதல்வரின் ஆட்சியில் தான்.

இது வரை 800 மீனவர்களை இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லபட்டதும் இதே கருணாநிதியின் ஆட்சியில் தான். இதைவிட இரண்டாயிரம் பேர் காயப்பட்டதுடன் பலர் காணாமற் போயுள்ளனர். பலர் இலங்கை சிறையில் வாடுகின்றனர்.

ஆனால் கருணாநிதியோ தமிழர்கள் தன்னை கடலில் தூக்கிப் போட்டாலும் நான் கட்டுமரமாக மிதப்பேன் அதில் தமிழாகள் ஏறிப் பயணிக்கலாம், கவிழ்த்து விடமாட்டேன் என்று தனது தொலைக்காட்சியில் கவிதை வடிக்கிறார். இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான்; தமிழ், தமிழர்கள் என்று கலைஞர் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கப் போகின்றார்.

4 தடவையாக முதலமைச்சராக பதிவி சுகம் அனுபவித்த போதும் தற்போதும் அவர் பதவி வெறி, பணவெறியில்தான் அலைகிறார். தினகரன் அலுவலகத்தை தீயிட்ட போது 3 ஊழியர்கள் பலியான சம்பவத்துடன் தனது மகன் அழகிரி தொடர்பு பட்டிருந்தபோது மகனைக் காப்பதற்காக டில்லி வரை ஓடிய கருணாநிதிக்கு பாக்குநீரிணையில் தினமும் பலியாகும் தமிழக மீனவரின் உயிர் பெரிதாகத் தெரியவில்லை.

இந்தக் கச்ச தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்;ட போது முதலமைச்சராகவிருந்த கருணாநிதி அன்றைக்கு இந்த ஒப்பந்தத்தை எதிhத்திருந்தால் எத்தனையோ தமிழக மீனவர்களின் உயிர்கள் பாதுகாப்பட்டிருக்கும். தமிழக மீனவர்களின் வாழ்வும் வளம் பெற்றிருக்கும். ஆனால் அன்றும், அப்பபோதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் சுயநல அரசியலுக்கு கருணாநிதி துணைபோய் தமிழகத்தின் உரிமையை விட்டுக் கொடுத்தார்.

தற்போதாவது அந்த ஒப்பந்தத்தை கிழித்தெறியுமாறு கேட்டால் இந்திய-இலங்கை நட்புறவை பறிக்கும் என்கிறாh. தமிழக மீனவர் உயிருக்கு உத்தரவாதமில்லாத அந்த ஒப்பந்தம் எதற்கு. இந்தியாவுடன் 1989 ஆம் ஆண்டு இலங்கை செய்து கொண்ட ஒப்பந்தத்தை தன்னிஷ்டப்படி அந்த நாடு ரத்தாக்கியது. அதற்கு என்ன செய்தீர்கள்? உங்கள் நட்புறவு சீர்கெட்டு விட்டதா? இல்லையே இன்னும் பலமாகியுள்ளது.

இமயமலையில் இல்லாத ஒப்பந்தங்களா? காஷமீரில் கையெழுத்திடாத ஒப்பந்தங்களா? அதையெல்லாம் மீறியவர்கள் ஏன் கச்சதீவு ஒப்பந்தத்;தை மட்டும் பாதுகாக்க முற்பட வேண்டும். இதனால் கருணாநிதிக்கு என்ன லாபம்?

தொட்டதற்கெல்லாம் சோனியாவுடனும் மன்மோகன் சிங்குடனும் தொலைபேசியில் பேசும் இந்தக் கருணாநிதி தமிழக மீனவருக்காக எத்தனை தடவை தொலைபேசியில் பேசினார்?

விடுதலைப் புலிகளின் ஊடுருவலைத் தடுப்பதற்கெனக் கூறி 24 மணி நேரமும் இந்தியக் கடலோர காவல்படை கண்காணிப்பை மேற்கொண்டுள்ளது. ஆனால் ஒரு முறை கூட அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்த தமிழக மீனவர்களை சுட்டுத்தள்ளும் இலங்கை கடற்படைப் படகுகளை இந்திய கடலோர காவல்படை வழிமறித்தாதாகவோ எச்சரித்ததாகவோ அல்லது தமிழக மீனவர்களை பாதுகாத்ததாகவோ தகவல்கள் இல்லை.

சௌராஷ்டிரா கடலோரப்பகுதி இந்திய-பாகிஸ்தான் கடற்பகுதியில் மிக நெருக்கமாக உள்ள பகுதியாகும். சௌராஷ்டிரப் பகுதி மீனவர்கள் எல்லையறியாமல் வழிதவறிச் செல்லும் போதேல்லாம் அவர்களை பாகிஸ்தான் கடற்படையினர் கைது செய்துள்ளனரே தவிர ஒருவரைக் கூட சுட்டுக் கொன்றதில்லை.

பாகிஸ்தான் இந்தியாவின் பரம விரோதியாக இருந்த போதும் அவர்க்ள மனிதாபிமானத்தோடு நடக்கின்றார்கள்.

ஆனால், மாங்காய் அளவு இருக்கும் இலங்கையின் கடற்படை தமிழ்நாட்டு மீனவர்களைப் படுகொலை செய்கின்றது. ஒவ்வொரு முறையும் கருணாநநிதி கடிதம் எழுதுவார். மத்திய அரசு மௌனம் காக்கும். இது தான் நடைமுறை. ஒரு தொலைபேசி அழைப்பில் இலங்கை அரசைக் கட்டுப்படுத்தும் வல்லமை பெற்ற மத்திய அரசு தமிழக மீனவர்களையே குற்றம் சாட்டுகிறது.

இலங்கை அரசோ கச்சதீவு பூர்வீகமாவும் பூகோள ரீதியாகவும் தங்களுக்குத் தான் சொந்தமென உரிமை கொண்டாடத் தொடங்கியுள்ளது. ஆனால், கச்சதீவு இந்தியாவுக்கே சொந்தமானது.

1922ம் ஆண்டு கிழக்கிந்திக் கம்பனி கச்சதீவை குத்தகைக்கு கேட்டு ராமாநாதபுரம் சமஸ்தானத்தோடுதான் ஒப்பந்தம் செய்து கொண்டது. இலங்கையோடு அல்ல. பேரரசி விக்டோரியா மகாராணி காலத்தில் இலங்கையின் அமைச்சு செயலாளராக இருந்தவர் பி.வி.பியர்ஸ்.

இந்த பியர்ஸ் தயாரித்த வரைபடத்தில் கச்சதீவு ராமநாதபுரம் ராஜவுக்குச் சொந்தமானது. இலங்கைக்கு சொந்தமானதல்லவெனக் குறிப்பட்டுள்ளார்.

1968ம் ஆண்டு கச்சதீவில் இலங்கை இராணுவம் போர்ப் பயிற்சி நடத்தியபோது அதைக் கண்டித்து இந்திய பாராளுமன்றத்தில் கண்டனத் தீர்மானமி நிறைவேற்றபட்டடுள்ளது. எனவே, கச்சதீவு இந்தியவின் ப+ர்வீகச் சொத்து.

காலத்தின் கட்டாயத்தினாலலேயே கச்சதீவு இலங்கைக்குத் தாரைவாhக்கப்பட்டது.. இந்தியாவின் பூகோள அமைப்பே தமிழழக மீனவர்களுக்கு எமனாக அமைந்து விட்டது. 1971ம் ஆண்டு இந்திய பாகிஸ்தான் போரின் போது பங்களதேஷ் உருவானது. அதனை விரும்பாத அமெரிக்கா, இந்தியாவை அச்சுறுத்த 'என்டர் பிரைஸ்' என்ற அணுவாயுதம் தாங்கிய கப்பலை அனுப்பியது.

கொல்கத்தாவைத் தாக்குவதே அவர்களின் இலக்கு. அந்த நேரத்தில் அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாயிருந்த ரஷ்யா இந்தியாவுக் ஆதரவாக களமிறயங்கியதால் அமெரிக்கா பின்வாங்கியது. அதன் பின் ஐ.நாவில் உலக நாடுகள் இந்துமா கடலில் நின்று கொகொண்டோ. பறந்தகொண்டோ எந்த நாடும் கடலோரப் பகுதி நாடுகளை அச்சுறுத்தக் கூடாதென்ற தீர்மானத்தை நிறைவேற்றன.

இந்த நிலையில்தான் இந்தியா யோசிக்கத் தொடங்கியது. இந்தியவின் வடக்கே தரைப்பகுதி. அங்கே, பாகிதஸ்தானும் சீனாவும், கிழக்கும் மேற்கும் கடல்பகுதிகள். ஆபத்தில்லை. தெற்கிலுள்ள ஒரே தரைப்பகுதி இலங்கை மட்டும்தான். இவ்வாறான நிலையில் பங்களதேஷ் போரின் பின் இலங்கையில் விமானத்தளம் அமைக்க பாகிஸ்தான் கேட்டக் கொண்டிருந்தது.

இதைத் தடுக்க அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி இலங்கைப் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவுடன் பேசி பாகிஸ்தானுக்கு தளம் கொடுப்பதை தடுக்க முயன்றார். கச்சதீவை எங்களுக்குத் தந்துவிட்டால் தளம் அமைக்க பாகிஸ்தானுக்கு இடம் கொடுக்கமாட்டோம் என்று இலங்கை பிரதமர் பேரம் Nசியபோது இந்திரா காந்தியினால் அதனை மறுக்க முடியவில்லை.

எனவே, இந்தியாவைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக தமிழக தமிழர்களை பலிகடாவாக்கி கச்சதீவு 1974ம் ஆண்டில் ஒப்பந்த மூலம் இலங்கைக்குத் தாரைவார்த்தக் கொடுக்கபட்டது. பின்னர், இரு வருடஙகள் கழித்து 1976ம் ஆண்டில் மீண்டும் ஒரு ஒப்பந்தம். தமிழக மீனவர் கச்சதீவில் தங்கி ஓய்வெடுக்கலாம். வலைகளைக் காயப் போடலாம். ஆண்டுக்கு ஒருமுறை அங்கே நடக்கும் அந்தோனியார் தேவாலயத் திருவிழாவுக்குச் சென்று வரலாம் என்பதே அந்த ஒப்பந்தம்.

ஆனால், ஒப்பந்தப்படி இலங்கை அரசு நடந்து கொள்ளவில்லை. இந்த ஒப்பந்தத்தின் பின் 800 க்கும் அதிகமான தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை சுட்டுக் கொன்றது. இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோரைக் காயப்படுத்தியது. பலரைத் தனது நாட்டில் சிறை வைத்துள்ளது. பல மீனவர்கள் காணாமல் போயுள்ளனர். மீனவர்ரன்; உபகரணங்கள், வலைகள் அழிக்கபட்டன.

இலங்கை அரசினதும் அதன் கடற்படையினதும் அட்டூழியங்களைப் பார்த்துக் கொண்டு இந்திய அரசு மௌனம் சாதிக்கின்றது. ஏனெனில், இலங்கையைப் பகைத்துக் கொண்டால் சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் தளம் அமைக்க இலங்கை இடம் கொடுத்து விடுமென்ற பயம் இந்தியாவுக்குள்ளது.

அதனால்தான் தமிழக தமிழர்கள் கொல்லப்பட்டாலும் பரவாயில்லை தேசத்தைக் காக்க வேண்டும்மென மத்திய அரசு நினைக்கிறது.

1965ம் ஆண்டு இந்திய பாகிஸ்தான் போர் நடந்த போது இலங்கையிலுள்ள கட்டுநாயக்கா விமானத் தளத்தை பாகிஸ்தான் படைகள் பயன்படுத்த இலங்கைப் பிரதமர் ஸ்ரீமாவோ அனுமதி வழங்கினார். இதனால் பதறியடித்த லால் பாகதூர் சாஸ்திரி இலங்கையிடம் பாகிஸ்தானுக்கு தளம் கொடுக்க வேண்டாமென வேண்டினார்.

பாகிஸ்தானுக்கு விமானத்தளத்தை கொடுக்காமல் இருப்பதானால் அதற்கு பதிலாக இலங்கையிலுள்ள 5 இலட்சம் மலையகத் தமிழர்களை இந்தியாவுக்கு கப்பலேற்ற சம்மதமாவென இலங்கை கேட்டது. வேறு வழியில்லாமல் லால் பகதூர் தலையசைத்தார்.

இதேபோன்றே திருகோணமலையில் படைத்தளம் அமைக்க அமெரிக்க அனுமதி கேட்ட போது அப்படி நடந்து விடக்கூடாது என்பதற்காகவே 1987 ஆம் ஆண்டு இந்திய அமைதிப் படையை அப்போதைய இந்தியப் பிரதமர் ராதஜீவ் இலங்கைக்கு அனுப்பி வைத்தார். இத்தகவலை இலங்கைக்கு அமைதிப்படை தலைமை தாங்கிச் சென்ற தளபதி ஒருவரே தனது புத்தகமொன்றில் எழுதியுள்ளர்ர். எனவே இந்தியாவின் பாதுகாப்புக்காக தமிழகத் தமிழர்களையும் இலங்கைத் தமிழர்களையும் பலிகொடுக்க இந்திய அரசு எப்பவுமே பின்னிற்கப் போவதில்லை.

அண்மையில் கூட இலங்கையரசுக்கு நூறு கோடி டொலர் வரை இந்திய அரசு வழங்கிள்ளது. இந்தப் பணத்தில் இலங்கை அரசு பாகிஸ்தானிடமும் சீனாவிடமும் ஆயுதங்களை வாங்கி இலங்கைத் தமிழர்களையும் தமிழக மீனவர்களையும் அழிக்கப் போகின்றது. ஆனால் இவ்விடயத்தில் இந்திய அரசு தலையிடாது. ஏனேனில் அதற்கு தனது நாட்டுப்பாதுகாப்பு முக்கியமானது.

ஆனால், இந்த விடயத்தைத் தமிழக அரசியல் கட்சிகள் தமது சுயநலன்களுக்காக பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன. தமிழக மீனவர்களின் உயிர், உடைமை குறித்து கவலைப்படாத இந்த அரசியல் கட்சிகள் தமது வாக்கு வங்கியை இலக்கு வைத்து வெற்று அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டும் கண்துடைப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்திக் கொண்டும் இருக்கின்றன.

தமிழகத்தில் ஆட்சியல் உள்ள கட்சியின் சொல்லைத் தவிர வேறு கட்சிகளின் கூச்சல்களை மத்தி ஒரு போது காதில் போட்டுக் கொண்டதில்லை. அவ்வாறான நிலையில் ஏனைய கட்சிகள் நடத்தும் ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதங்கள் எவ்வித நலன்களையும் ஏற்படுத்தப் போவதில்லை. ஆட்சியிலுள்ள தி.மு.க தான் எதையாவது செய்ய வேண்டும்.

தமிழக மீனவர்களின்; பிரச்சினையைத் தீர்க்க வேண்டிய தி.மு.க அரசு, அதை விடுத்து உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியமை முற்றும் முழுதான அரசியல் நாடகமாகும். தமிழர்களை விட மத்திய அரசுக்கு எவ்வித நெருக்கடியும் ஏற்பட்டு விடக்கூடதென்பதில் தி.மு.க அரசு உறுதியாகவுள்ளது.

தனது குடும்ப நலனுக்கு மட்டுமே மத்திய அரசை மிரட்டும் கருணாநிதி தன் குடிமக்கள் பிரச்சனைக்கு மத்திய அரசை மிரட்டவோ, அடிபணிய வைக்கவோ தயாரில்லை..

தமிழக மீனவர் பிரச்சினையை முற்று முழுதாக தீர்க்கக்கூடிய சந்தர்ப்பத்தை தவற, விட்டு விட்டு சந்தர்ப்பவாத அரசியல் நடத்தும் கருணாநிதி இருக்கும் வரை தமிழ் மக்களுக்கோ தமிழக மீனவர்களுக்கோ விடிவு கிடைக்கப் போவதிலையென்பது தற்போது வெளிபட்டு வருகின்றது.

ஈழப்பிரச்சனையும் இந்தியாவும்

ஆக்கம் :கலைஞன்

நன்றி : தினக்குரல்

இலங்கைத் தமிழருக்கும் தமிழ் நாட்டு மீனவருக்கும் பாதகம் செய்து விட்டு நாடகம் - விஜய டி.ராஜேந்தர் சீற்றம்.

தமிழக மீனவர்களுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் தமிழக அரசு பாதகம் செய்துவிட்டதென இலட்சிய தி.மு.க. பொதுச் செயலர் விஜய.டி.ராஜேந்தர் குற்றம் சாட்டியுள்ளார்.

விஜய.டி.ராஜேந்தர் சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது :

இலங்கை தமிழர்களும் தமிழக மீனவர்களும் அநியாயமாக சுட்டுக கொல்லப்படுகின்றனர். இந்தப் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காண வேண்டும். பா.மா.க.வினர் கூட குரு பிரச்சினைக்காக பிரதமரை நேரில் சந்திக்கின்றனர். அவர்களுக்கு இருக்கும் தைரியம் கூட தி.மு.க.வுக்கு இல்லை. தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை நிறுத்தாவிட்டால் நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்குப் போட மாட்டோம் என்று அறிவிக்க வேண்டியது தானே?

இலங்கை தமிழர்களுக்கும் தமிழக மீனவர்களுக்கும் இத்தனை நாள் பாதகம் செய்துவிட்டு உண்ணாவிரத நாடகம் போடுகின்றனர். விலைவாசி ஏற்றத்தால் மக்கள் தெருக் கோடிக்கு வந்துவிட்டனர். ஆனால், எம்.பி.க்களின் விலையோ பல கோடி. தொடர் மின் வெட்டால் மக்கள் அவதிப்படுகினறனர். சிறு தொழில்கள் ஒட்டமொத்தமாக அழிந்துவிடும் நிலைக்கு வந்துவிட்டன. மக்கள் படும் கஷ்டங்களைப் பற்றி யாருக்கும் கவலை இல்லை.

தமிழகத்தைச் சேர்ந்த ஒரு மத்திய அமைச்சரின் மகன் பக்கத்து மாநில்த்தில் 5,000 ஏக்கர் நிலம் வாங்கியிருப்பதாக காற்று வழி செய்தி. சென்னையில் நடக்கும் தொடர் கொலைகளால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். பொலிஸ்காரர்களால் கொலையாளி யார் என்றே கண்டு பிடிக்க முடியவில்லை.

நன்றி தினக் குரல்

தமிழக மீனவாகளை ஏமாற்ற உண்ணாவிரத நாடகம். அ.தி.மு.க

கச்ச தீவை மீட்டுத் தாரவிட்டால் காங். கூட்டணியில் இருந்து விலகிவிடுவோம் எனக் கூற முடியாத கருணாநிதி மீனவர்களை ஏமாற்றுவதற்காக உண்ணாவிரத நாடகத்தை நடத்துவதாக அ.தி.மு.க பொருளாளர் ஓ.பன்னீர்செல்லவம் குற்றம் சாட்டினார்.

மேலும்

ஜூலை 22ம் திகதிக்குப் பின் மத்தியில் காங். ஆட்சி கவிழும். அதன் பின்னர் தமிழகத்தில் தி.மு.க ஆட்சியும் கவிழும்.

தி.மு.க அரசினால் இன்று விலைவாசி கட்டுக்கடங்காத நிலயில் உள்ளது. நாள் ஒன்றுக்கு ரூபா 100 செலவு செய்தால் தான் மதிய உணவு உட்கொள்ள முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகம் தடுமாறிக் கொண்டிருக்கும் போது, ராமேஸ்வரத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக கருணாநிதி அறிவித்துள்ளார். எதற்காக இந்தப் போராட்டம்? மத்தியில் உங்கள் கூட்;டணி ஆட்சி தானே உள்ளது. அவர்களிடம் பேசி கச்சதீவை மீட்காவிடால் கூட்டணியிலிருந்து விலகிவிடுவோம் என்று கூறலாமே?

கருணாநிதி மீனவர்களை ஏமாற்ற உண்ணாவிரத போராட்டம் என்ற நாடகத்தை நடத்துகிறார். இதற்கெல்லாம் விடிவு விரைவில் வரும்.

நன்றி : தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.