Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நம்மோட பற்களை பாதுகாப்பதற்கு புதிய ஒரு உபகரணம் 2010ம் ஆண்டு பாவனைக்கு வருகின்றது

Featured Replies

அனைவருக்கும் இனிய பல்லு வணக்கங்கள்,

எல்லாரும் பல்லு அடைக்கிறது பற்றி அறிஞ்சு இருப்பீங்கள். பல்லு அடைச்சு இருப்பீங்கள் அல்லது அதப்பாத்து இருப்பீங்கள். பல்லில சூத்தை வந்தால் அதை அடைக்க வேணும். இல்லாட்டிக்கு கொஞ்ச காலத்தில முழுப்பல்லையும் புடுங்கவேண்டிவரும் அல்லது பல்லு தானாகவே விழுந்திடும். :lol:

பல் அடைக்கேக்க நோயாளிகள் பலத்த சிரமங்கள அடையவேண்டி இருக்கிது. முதலில X-Ray படம் எடுப்பாங்கள். பிறகு வாயுக்க விறைப்பூசி போடுவாங்கள். பிறகு ஒரு மிசினால பல்ல தோண்டுவாங்கள். பிறகு இன்னொரு மிசினால பல்லை பேஸ்ட் போட்டு அடைப்பாங்கள். பேஸ்ட் போட்டு அடைச்சாலும் பல்லுக்கு உத்தரவாதம் இல்ல. கொஞ்ச காலத்தில அந்த பேஸ்ட் கழற திரும்பவும் ஓட்டை வரும். திரும்பவும் பல்லை இன்னும் கொஞ்சம் ஆழமாக தோண்டி அடைக்கவேண்டி இருக்கும். இல்லாட்டிக்கு இழக்கவேண்டி இருக்கும்.

வரும் 2010 ம் ஆண்டில இருந்து இந்த துன்பங்கள் இல்லாமல் போகப்போகிது. அது எப்பிடி எண்டால்..

இப்ப Laser கதிர் மூலம் இயங்குகின்ற ஒரு உபகரணத்தை டொரண்டோ பல்கலைக்கழக விஞ்ஞானி ஒருத்தர் கண்டுபிடிச்சு இருக்கிறார். இந்த உபகரணம் என்ன செய்யும் எண்டால்.. Laser கதிரை பாய்ச்சுவதன் மூலம் பல்லில வரும் சூத்தையை மிகவும் ஆரம்ப நிலையிலேயே துல்லியமாக கண்டுபிடிச்சு விடும். அதாவது X-Ray மூலம் சூத்தை காண்பிக்கப்படுவதற்கு சூத்தை குறிப்பிட்ட அளவுக்கு பிடிக்க வேண்டும் (300 மைக்கிரோன் படரவேண்டும்). X-Ray மூலம் சூத்தை காண்பிக்கப்படுற நிலையில பல்லை பாதுகாக்க செய்யக்கூடிய ஒரே ஒரு வழி பல்லை அடைக்கிறதுதான். ஆனால்..

Laser கதிரை பாவிக்கும்போது சூத்தை மிகச் சொற்ப மைக்கிரோன் அளவுக்கு பரவும் போதே அதாவது மிகவும் ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிச்சு விட முடியும். இந்தநிலையில இந்த குறிப்பிட்ட உபகரணம் கொடுக்கின்ற முப்பரிமாண தகவல் படம் மூலம், இந்த உபரணத்தையே பாவிச்சு தேவையான அளவு பல்லின் எனாமல் பகுதியை Laser கதிரின் வெப்பம் மூலம் தோண்டி (உருகவைச்சு) மீண்டும் அந்த எனாமல் இயற்கை முறைமூலம் வளர்ந்து இயற்கையான முறையில் பல் பாதுகாக்கப்பட முடியும். (எனாமல் எண்டுறது பல்லிண்ட மிளிரி எண்டு நினைக்கிறன் தமிழில.. பிழை எண்டால் கோவிக்காதிங்கோ :lol: )

இந்த உபகரணத்திண்ட இன்னொரு சிறப்பு என்ன எண்டால் இரண்டு பற்களுக்கு இடையில இருக்கிற சூத்தையை கண்டுபிடிச்சு அதையும் அகற்றி இயற்கையான முறையில பல்லை பாதுகாக்க முடியும். தற்போது உள்ள X-Ray பயன்பாடு மூலம் இரண்டு பற்களுக்கு இடையில இருக்கிற சூத்தையை கண்டுபிடிப்பது மிகவும் கடினமானது.

இந்த புதிய லேசர் கதிர்மூலம் இயங்கும் உபகரணம் பல் மருத்துவ துறையில பயன்படுத்தப்படுறதால என்ன லாபங்கள் கிடைக்கும் எண்டால்..

  • தோண்டல், சுரண்டல், விறைப்பூசி வேதனைகள் இல்லை.
  • பல் இயற்கையான முறையில பாதுகாக்கப்படுகிது
  • பல் சூத்தை மிகவும் ஆரம்ப நிலையில கண்டுபிடிக்கப்படக் கூடியதாக இருக்கிது
  • இந்த உபகரணம் மூலம் சிகிச்சை பெறுவதற்கு பல் மருத்துவரிட்ட போகத்தேவை இல்லை.

இந்த புதிய உபகரண அமைப்பு Canary என்று அழைக்கப்படுகின்றது.

இதில முக்கிய விசயம் என்ன எண்டால்... மூண்டு மாதத்துக்கு ஒரு தடவை ஆய்வுகூடத்துக்கு போய் பல்லை பரிசோதிச்சு பார்க்கவேணும். சூத்தை வந்து பல்லு கொதிக்கிறநேரம் இஞ்ச போனால் பயன் இல்லை. அதாவது இது ஒரு வருமுன் காத்தல் திட்டம். வந்தாப்பிறகு.. சூத்தை தெரியேக்க கடைசி நேரத்தில பல் வைத்தியரிட்ட போற ஆக்களுக்கு இது சரிவராது. கிரமமாக தமது பல்லை பாதுகாப்பதில் அக்கறை செலுத்துற ஆக்களுக்கு மாத்திரமே இது பயன்படக்கூடியது. :lol:

காணொளிகள்:

CANADA CITY-TV: http://www.citynews.ca/news/news_24743.aspx

CANADA CTV: http://watch.ctv.ca/news/health/lifetime-w...atys/#clip64385

இந்த இணைய தளத்துக்கு போனால் விரிவான தகவலை அறியலாம்: http://www.thecanarysystem.com/introducing/index.aspx

New Dental Technology May Help Replace The Dreaded Drill

Monday July 14, 2008

CityNews.ca

The days of dreading a visit to the dentist may soon be over, as new technology could take the drill out of the process.

A laser diagnostic system called "The Canary" is undergoing testing that would put an end to what one company calls the "drill, fill, and bill" method patients are usually subjected to.

The old routine, which requires X-rays to find cavities, drilling to clear out the decaying parts of the tooth, and filling the hole back in, may go by the wayside. The new technique uses lasers to find imperfections in the enamel's surface before they become cavities, and then uses a remineralization process to rebuild the tooth.

While most current methods test how teeth interact with light (its luminosity), the new device also uses temperature, heating up the tooth, causing it to glow and release warmth.

The laser can read the signal it gives back, which changes according to the condition of the enamel. Because of this extra touch, it's potentially able to find lesions in your teeth before an X-ray would, especially those hard-to-see ones in between the teeth.

The new approach is currently being tested, and if all goes well it could be in use in dentists' offices by 2010.

http://www.citynews.ca/news/news_24743.aspx

நன்றி! வணக்கம்!

Edited by முரளி

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல தகவல். நன்றி முரளி. :lol:

ஓ..அப்படியா குருவே...தகவலிற்கு நன்றி :lol: ..எனக்கு இன்னொரு பிரச்சினை அதுவென்னவெண்டா காலம எழும்பி வேலைக்கு போக முன்னம் பல்லு மிணுக்க பஞ்சியா இருக்குது பாருங்கோ உதுக்கு நாம ஏதாவது செய்யலாமோ எண்டு ஒருக்கா சொல்லுறியளே..?? :o

எல்லாம் சரி...

எல்லாரும் ஒவ்வொன்றை கண்டு பிடிக்கீனம் நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து ஏதாச்சும் கண்டு பிடிப்பொமோ..??இத பத்தி தாங்கள் என்ன நினைக்கிறியள்..?? :lol:

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா..வாழ்க்கையில பல்லு போச்சுன்னா எல்லாமே போச்சு.." :lol:

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

நன்றி நுணாவிலான், யமுனா..

--------

குறிப்பிட்ட ஒரு விஞ்ஞானியும் இடைக்கிடை யாழுக்கு வந்து செய்தி வாசிக்கிறவர். நான் நேற்று இரவு உத எழுதிப்போட்டு நித்தாவுக்கு போட்டன். இண்டைக்கு அப்பிடியே அந்தமாதிரி நான் நித்தாவில ஜாலியா கனவுகண்டு கொண்டு இருக்கேக்க திடீரெண்டு phone பண்ணி இதில இருக்கிற சில பகுதிகளை தணிக்கை செய்யுமாறு சொன்னார். நானும் திடுக்கிட்டு எழும்பி அவர் சொன்ன சில பகுதிகளை தணிக்கை செய்துபோட்டு திரும்பவும் நித்தாவுக்கு போனன். :wub:

  • கருத்துக்கள உறவுகள்

2010 வரை காத்திருக்க அதுவரை பல்லிருக்குமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.