Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவுஸ்திரெலியாவில் சுற்றுலா - பகுதி 1 பிரிஸ்பனும், சூழவுள்ள இடங்களும்

Featured Replies

  • தொடங்கியவர்

அன்று யாழ்கள உறுப்பினர் யமுனாவுக்கு பிறந்த நாள். ஸ்ரிவ் ஏர்வின் வாழ்த்துச் சொல்ல, பார்வையாளர்களும் வாழ்த்துச் சொன்னார்கள்.

தற்பொழுது நான் அவதாரில் உபயோகிக்கப்படும் படம் கீழே இருக்கிறது.

pc280134pt5.jpg

முதலையின் காட்சி முடிவில், உணவினைக் காட்டி முதலையை அவ்விடத்தில் இருந்து முதலையின் இருப்பிடத்துக்கு கொண்டு சென்றார்கள். பிறகு கழுகு ஒன்றின் காட்சி நடைபெற்றது. ஸ்ரிவ் ஏர்வின் தான் கழுகின் காட்சியையும் நடாத்தினார்.

pc280135zb5.jpg

Edited by Aravinthan

  • Replies 172
  • Views 19k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

சென்ற வருடம் சென்ற போது ஸ்ரிவ் ஏர்வின் உயிருடன் இல்லை. 2005ல் சென்ற போது இரசிக்கத்தக்கதாக இருந்த முதலையின் காட்சி , 2007ல் யில் இருக்கவில்லை. 2007ல் சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில.

pa290359rd8.jpg

pa290360gg7.jpg

pa290361aj8.jpg

  • தொடங்கியவர்

யானைகளின் காட்சிகள்

pa290348fi7.jpg

pa290349pu3.jpg

pa290356az7.jpg

இவ்மிருகக்காட்சியில் முதலை,பறவைகள்,பாம்புகள் என ஒன்றுக்கு மேற்பட்ட காட்சிகளை ஒரே இடத்தில் பார்வையாளர்கள் வந்து பார்க்கும் படி அமைக்க ஸ்ரிவ் ஏர்வின் நீண்டகாலமாக விரும்பினார். இதனால் தான் அவர் ஒரு மணித்தியாலம் எல்லாப் பார்வையாளர்களும் இருந்து இரசிக்கும் படியாக Animal Planet Crocoseum பகுதியை உருவாக்கினார்.

Edited by Aravinthan

ம்ம்..சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டிருக்கும் அரவிந்தன் அண்ணாவிற்கு நன்றிகள்..ள் :o ..ம்ம் எனது பிறந்த தினத்தை இங்கே கொண்டாடியதை என்னும் என்னால மறக்க ஏலாது..து..!!

கந்தப்பு தாத்தாவின்ட..ட குஞ்சாச்சி தான்..ன் "சர்ப்ரைஸ்" கொடுக்க செய்தவா..வா ஆனா என்ன அவ்வளவு சனதிற்கு முன்னால..ல "ஸ்ரிவ் ஏர்வின் மாமா" என்ன கூப்பிட...ட நான் போகல்ல..ல அல்லோ..எப்படி போறது "மொதலை" நிற்குது எவன் போவான்..ன்..!! :lol:

ஆனா என்ன..பாவம் மனிசன் எனக்கு பிறந்த நாள் சொன்ன நேரமோ..மோ.. தெரியல்ல..அடுத்த வருசமே மண்டையை போட்டிடுது..(எனக்கும் கொஞ்சம் கவலையா தான் இருந்தது).. :lol:

மற்றும்..!!

அரவிந்தன் அண்ணா..ணா பாம்புகளை கொண்டு வந்து கையில் தருவார்கள்..அல்லோ அப்ப கந்தப்பு தாத்தா..தா பயந்து கத்தி..குஞ்சாச்சியிட்ட ஏச்சு வாங்கினது ஞாபகம்..ம் இருக்கின்றதோ.. :rolleyes: !!..தொடரட்டும் உங்கள் பயணம் அரவிந்தன் அண்ணா.. :D

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

உங்களின் அனுபவங்களை இங்கு பகிர்ந்தமைக்கு நன்றிகள் யமுனா.

உங்கள் கட்டுரையை வாசிக்கும் பொழுது எனக்கு பிரிஸ்பனிற்கு போய் வந்த ஒரு உணர்வு வருகிறது.அழகாக விபரித்துள்ளீர்கள் நீங்கள் சுற்றுலாதுறையில் பணி புரிகிறீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்! தொடருங்கள் அரவிந்தன்!!!

  • தொடங்கியவர்

நன்றிகள் ஜில், சுவி.

நான் சுற்றுலாத்துறையில் வேலை செய்யவில்லை. கணனித்துறையில் வேலை செய்கிறேன். ஆனால் சுற்றுலாத்துறையில் ஆர்வமுண்டு.

  • தொடங்கியவர்

சில சுற்றுலாப் பயணிகள் Animal Planet ல் நடைபெறும் நிகழ்ச்சியினைப் பார்ப்பதற்காக மட்டுமே இந்த மிருகக்காட்சி சாலைக்கு வருவார்கள். காட்சி முடிவடைந்ததும் வெளியேறிவிடுவார்கள். புலிகளின் நிகழ்வு 2005ல் சென்ற போது Animal Planet ல் நடைபெற்றதாக சொல்லி இருந்தேன். ஆனால் தற்பொழுது புலிகளின் நிகழ்வு தனியாக புலிகள் அடைத்து வைக்கப்படும் இடத்தில் நடைபெறுகிறது.

pa290379nm1.jpg

pa290380pw6.jpg

இங்கு உள்ள புலிகள் சின்னதாக உள்ளது ஏன் அரவிந்தன்.

  • தொடங்கியவர்

யானைகள் இருக்குமிடத்தின் அருகில் பிள்ளையாரின் சிலை இருக்கிறது. இந்துக்களின் கடவுள் என்று அருகில் எழுதிவைத்திருக்கிறார்கள். சில பக்தர்கள் பிள்ளையாருக்கு பக்கத்தில் பூக்கள் வைப்பதுண்டு.

pa290382dn3.jpg

pc280098dv8.jpg

  • தொடங்கியவர்

இங்கு உள்ள புலிகள் சின்னதாக உள்ளது ஏன் அரவிந்தன்.

மேலே இணைத்த நான் இணைத்த படங்களில் இருப்பவை புலிக் குட்டிகள். இப்பதிவின் கருத்து இலக்கம் 19ல் பார்த்தீர்கள் என்றால் இங்குள்ள பெரிய புலியினைக் காணலாம்.

  • தொடங்கியவர்

pa290377qb4.jpg

pa290383wt1.jpg

pc280097qd7.jpg

pa290381yu4.jpg

pa290384zb1.jpg

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

இம்மிருகக்காட்சியில் ஒரு குறிப்பிட்ட சில மிருகங்களும் பறவைகளும் ஊர்வனவும் தான் இருக்கின்றன. அவுஸ்திரெலியாவில் உள்ள வேறு மிருகக்காட்சிசாலையில் இதைவிட அதிக மிருகங்களையும் பறவைகளையும் காணலாம். இங்கே உள்ள மிருகங்கள், பறவைகள், ஊர்வனக்கள் சிலவற்றைக் கீழே உள்ள படங்களில் காணலாம்.

fossilisedkangaroouz4.jpg

hpim2395zr7.jpg

pa290396hk8.jpg

pa290363ll2.jpg

pa290365yj6.jpg

hpim2414da2.jpg

pa290367na1.jpg

pa290368fn8.jpg

hpim2393uu4.jpg

யானைகள் இருக்குமிடத்தின் அருகில் பிள்ளையாரின் சிலை இருக்கிறது. இந்துக்களின் கடவுள் என்று அருகில் எழுதிவைத்திருக்கிறார்கள். சில பக்தர்கள் பிள்ளையாருக்கு பக்கத்தில் பூக்கள் வைப்பதுண்டு.

இது வேறா ;) கிகிகி

  • தொடங்கியவர்

இது வேறா ;) கிகிகி

நீங்கள் இந்த மிருகக்காட்சி சாலைக்கு சென்றிருக்கிறீர்களா?

நீங்கள் இந்த மிருகக்காட்சி சாலைக்கு சென்றிருக்கிறீர்களா?

உண்டு ஆனால் பூ வைக்கவில்லை..கிகிகிகி

  • தொடங்கியவர்

இங்கு நடைபெறும் ஆமைகள், ஒட்டகம், கோலா, நரி போன்றவற்றின் காட்சிகளில் பெரும்பாலானவை, அவற்றுக்கு உணவினை வழங்கிக் கொண்டு அவற்றைப் பற்றிய தகவல்களைச் சொல்லும் நிகழ்ச்சிகளாக( அவை என்ன சாப்பிடும், எவ்வளவு காலமாக இங்கே இருக்கிறது) இருக்கிறது. மிருகங்கள், பறவைகள், ஊர்வனாக்களைப் பற்றி அறிய விரும்புவோருக்கு இது பிரயோசனமாக இருக்கும். ஆனால் பெரும்பாலோருக்கு பொறுமையாகக் கேட்பதற்கு மனம் இடம் கொடுப்பதில்லை.

pa290371xq1.jpg

  • தொடங்கியவர்

சில உயிரினங்களுடன் புகைப்படம்( உ+ம் -கோலா, பாம்பு, கழுகு ) எடுக்கலாம். சுற்றுலாப் பயணிகள் இவ்வுயிரினங்களைத் தூக்கி வைத்திருக்க , புகைப்பிடிப்பாளர் புகைப்படம் எடுப்பார். விரும்பினால் காசு கொடுத்து புகைப்படங்களை வாங்கலாம்.

pa290370ep7.jpg

pa290374hh4.jpg

pa290375ux5.jpg

  • தொடங்கியவர்

இம்மிருகக்காட்சியில் உள்ள அவுஸ்திரெலியாவின் தெற்குப் பகுதியில்(southern half of Australia) காணப்படும் (ஆனால் தென்கிழக்கு, கிழக்கு கடற்கரைப் பகுதியில் காணப்படுவதில்லை -eastern and south-eastern coastal areas) Shingleback Lizard என்ற ஊர்வனவின் வால் பகுதி அதன் தலைப்பகுதி போலத் தோன்றமுடையது. அதாவது இதற்கு இரண்டு முகங்கள் இருப்பது போலத் தோற்றமளிக்கும்.

pa290376fj3.jpg

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

pa290378vk6.jpg

இம்மிருகக்காட்சி சாலையை விட வேறு நல்ல மிருக்கக்காட்சி சாலைகள் அவுஸ்திரெலியாவில் இருக்கிறது. ஸ்ரிவ் ஏர்வினின் மிருகக்காட்சி சாலை என்பதினால் தான் இங்கு பலர் சுற்றுலா செல்கிறார்கள். ஸ்ரிவ் ஏர்வின் இருந்த போது நான் இவ்மிருகக்காட்சி சாலைக்கு செல்லும் போது இரசிக்கக்கூடியதாக இருந்தது. அவர் இல்லாத போது சாதாரண ஒரு மிருகக்காட்சி சாலை போல எனக்குத் தோன்றியது.

இம்மிருகக்காட்சி சாலையில் இருந்து 5 - 10 நிமிடங்கள் பயணித்தால் வருவது கண்ணாடி வீட்டுக் குன்றுகள் (Glass House Mountains).

smallmapgy6.gif

Edited by Aravinthan

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு அந்த பிள்ளயார் பிடித்தது.தொடரட்டும் உங்கள் பயணம்.

அழகாக புகைப்படங்களோடு விபரித்தீர்கள் அரவிந்தன் அண்ணா. :D

ந்ன்றிகள் ஆனால் ஜம்முவின் பேர்டே அங்கை அறிவிப்பு செய்ததை வன்மையாக கண்டிக்கின்றேன். ஹிஹி :(

அதுசரி பார்க்க நல்லா தான் இருக்குது இந்த இடம் மணக்காதோ? :lol::wub:

  • தொடங்கியவர்

வாசித்துக் கருத்துக்கள் பகிர்ந்தமைக்கு நன்றிகள் புத்தன், வெண்ணிலா.

அந்த இடம் பெரிதாக மணக்கவில்லை வெண்ணிலா.

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்டீவ் இர்வின்.இவரது சாகச விவரணப் ( டாக்குமென்டரி) படங்கள் பலவற்றைப் பார்த்திருக்கிறேன். கடைசியாக இர்வின்'த ஒஷன்ஸ் டெட்லியஸ்ட்" எனும் தனது விவரணப் படம் எடுக்கும்போதுதான் ஒரு மீனால்(ஷார்ட் டெய்ல் ஸடிங்ரே) தாக்கப் பட்டு இறந்துள்ளார். ஏன் அரவிந்தன் அந்த மீன் ஈழத்துக் கடற்புறங்களில் வாழும் குழுமுரல், வாழைமீன்கள் போன்று இருக்குமா?

உங்கள் கட்டுரை அருமை!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.