Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரங்காடல் நிகழ்வு

Featured Replies

கனடாவில் உள்ள மனிரோபா மனிலத்தில் வருடாந்தம் Folklorama எனும் ஒரு அரங்காடல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி ஆரம்பித்து இப்போது 39 ஆண்டுகள் ஆகிவிட்டன. Winnipeg Folkloramaகொண்டாட்டமே உலகில் நடைபெறும் இந்த வகையை சேர்ந்ததவற்றில் மிகப்பெரியது என யுனெஸ்கோ அமைப்பின் ஆலோசகராக இருக்கும் International Council of Organiztion for folklore festival அமைப்பு கூறியுள்ளது. இந்த நிகழ்வை வின்னிபெக் பாரம்பரிய கலை கழகம் (Winnipeg Folk Arts Council நடாத்துகிறது. ஆகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி தொடக்கம் 16 ஆம் திகதி வரை வருடாந்தம் நடைபெறும் கலாச்சார நிகழ்வுகளில் மொத்தமாக 44 வெவ்வேறு வகை இனக்குழுமத்தை சேர்ந்த மக்கள் தமக்கென அமைக்கப்பட்ட தனியான அரங்கத்தில் நடத்துவார்கள். அதிக எண்ணிக்கையான இனகுழுமங்களின் அரங்காடல் நிகழ்வுகள் இருப்பதால் முதல் வாரத்தில் 22 இனக்குழுமங்களின் அரங்காடல் நிகழ்வுகளும், மிகுதி 22 குழுமங்களின் அரங்காடல் நிகழ்வுகள் இரண்டாவது வாரத்திலும் நடைபெறுகிறது.

Tamil Pavilion 2008

Folklorama,

Winnipeg, Manitoba, Canada

August 3-9

தமிழ் அரங்கம் 2008

இந்த பாரம்பரிய அரங்காடல் நிகழ்வுகளில் தமிழ் கலாச்சார நிகழ்வுகளை உள்ளடக்கிய அரங்காடல் நிகழ்வு முதல் வாரத்தில் அதாவது ஆகஸ்ட் 3- 9 ஆம் திகதி வரை வருடாந்தம் நடைபெறுவது வழக்கமாகும். தமிழ் அரங்காடல் நிகழ்வு இந்த வருடத்துடன் தனது 11 ஆவது வருடத்தை நிறைவு செய்கிறது.

தமிழ் அரங்கம் பிரதானமாக 2 பகுதிகளை கொண்டது.

1. தமிழ் மக்களின் கலாச்சார பின்னணியை எடுத்துக்கூறும் கண்காட்சி

இப்பகுதியில் தமிழ் மொழியின் தொன்மை, மக்களின் வாழ்கை அமைப்பு, வரலாறு இசை போன்ற விடயங்களை பற்றிய புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருக்க

Edited by KULAKADDAN

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் குளக்காட்டான் நீங்கள் நலமா?

நல்லதொரு தகவலை இணைத்துள்ளீர்கள், உங்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஆமா வினிபேக்கில் அதிகளவு தமிழர்கள் வசிக்கின்றார்களா? அவர்களது வாழ்க்கை முறையை சற்று விபரமாக கூறுவீர்களா?

  • தொடங்கியவர்

வணக்கம் குளக்காட்டான் நீங்கள் நலமா?

நல்லதொரு தகவலை இணைத்துள்ளீர்கள், உங்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஆமா வினிபேக்கில் அதிகளவு தமிழர்கள் வசிக்கின்றார்களா? அவர்களது வாழ்க்கை முறையை சற்று விபரமாக கூறுவீர்களா?

வல்வை மைந்தன் வணக்கம். நலமா?

மேலே சொல்லியுள்ளது போலவே தமிழ் மக்களுக்கான தனியான அரங்கம் அமைக்கப்பட்டு இந்த வருடத்துடன் 11 வருடங்கள் ஆகிவிட்டது. தமிழ் அரங்கம் என்பதால் அதன் அர்த்தம் (technically) ஈழம், தமிழ் நாடு, மலேசிய, சிங்கபூர் என அனைத்து பகுதி தமிழர்களையும் உள்ளடக்கியது என்பதே. ஆனால் இந்த நிகழ்வில் பெரும்பங்கு வகிப்பது ஈழத்தமிழர்களே. எண்ணிக்கையில் பெரும்பான்மையோரும் ஈழத்தமிழர்களே. இங்கு இருக்கும் முக்கிய பலவீனமும் பலமும் போதுமான எண்ணிகையில் தமிழ் மக்கள் இல்லை என்பதே. மொத்த தமிழ் மக்களின் எண்ணிக்கை 300- 350 இருக்கும். அதிலும் 50 பேர் இந்திய தமிழ் மக்கள். மிகுதி 250 பேர் தான் ஈழத்தமிழர்கள். ரொரண்டோ, மொன்றியால், வன்கூவர், எட்மண்டன் போல அதிக தமிழ் மக்கள் இல்லாவிட்டாலும் வருடாந்தம் ஊடகங்களாலும், பார்வையாளர்களாலும், இன்நிகழ்வை ஒழுங்கு செய்யும் வின்னிபெக் பாரம்பரிய கலைகள் அமைப்பாலும் சிறப்பான நிகழ்ச்சிகளை வழங்கும் ஒரு அரங்கமாக பாராட்டப்படுவதை குறிப்பிட்டே ஆக வேண்டும். மிக சிறிய எண்ணிக்கையில் மக்கள் இருப்பதால் பல வகையான நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்குவதற்கு போதுமான ஆசிரியர்களும் இல்லை, மாணவர்களும் இல்லை. இதுபெரும் குறை. அதே நேரம் ரொறண்டோவில் தெருவிற்கு ஒரு கொண்டாட்டம் என ஆளளளுக்கு பிளவு பட்டு போகாமல் ( குடும்பங்களுக்கிடையே தனிப்பட்ட மனஸ்தாபங்கள் இருந்தாலும்) நிகழ்ச்சிகளை செய்வது பலம். ஆனால் இந்த நிகழ்வில் அப்படி ஆளளாளுக்கு அரங்கங்களை உருவாக்க முடியாது. அத்துடன் அரசியல் பேச முடியாது. போர், இன முரண்ப்பாடுகள் பற்றி பேச முடியாது. இருந்த போதும் கண் காட்சியில் நேரடியாக குறிப்பிடாது போரின் தாக்கங்களை குறிக்கும் சில படங்களை கலந்தே அமைத்துள்ளார்கள்.

Edited by KULAKADDAN

  • கருத்துக்கள உறவுகள்

கேட்கவே பெருமையாக இருக்கின்றது, அதாவது ரொறண்டோவிலை 2லட்சம் மக்களாலை சாதிக்க முடியாத விடயத்தை கிட்டத்தட்ட 300 மக்கள் வசிக்கும் வினிபேக்கிலை சாதித்துக் காட்டுகின்றீர்கள்.

இதுதான் உண்மையான மொழிப்பற்று.

பாராட்டுக்கள்!

Edited by Valvai Mainthan

  • தொடங்கியவர்

tamilpavilionsg3.th.jpg

இது இந்த வருட தமிழ் அரங்கம் பற்றி winnipeg freepress பத்திரிகை வெளியிட்ட குறிப்பு. அவர்கள் இந்த வாரத்தில் நடைபெறும் அரங்குகளை பற்றி குறிப்புக்களை வெளியிட்டாலும் தமிழ் அரங்கம் கட்டாயமாக பார்க்க வேண்டிய அரங்கம் என குறிப்பிட்டுள்ளார்கள். அவர்களால் ஒரு குறையாக சுட்டிக்காட்டப்பட்டது கண்காட்சியில் இருக்கும் காட்சி பொருட்கள் வருடந்தம் ஒரே வகையாக இருப்பதென்பதே. ஈழத்தில் தற்போது நிலவும் போர் சூழலும், போதிய நிதி பலம் ஆட் பலம் இல்லாமையும் புதிதாக காட்சி பொருகளை சேகரிப்பதோ அல்லது எமது பாரம் பரிய கைப்பணிப் பொருட்களை மேலும் தருவிப்பதோ இயலாத காரியமாக இருக்கிறது.

வின்னிபெக்கை பொறுத்தவரை நான் புதியவன். எனது பங்களிப்பு என்று சொல்ல கூடிய வகையில் பெரிதாக எதுவுமே இல்லை. இங்கு நீண்ட காலமாக இருக்கும் மக்களே பாராட்டுக்கு உரியவர்கள்

Edited by KULAKADDAN

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குளக்காட்டான் இணைப்புக்கு முதலில் நன்றி.

ஒரு அருமையான விடயம் வெறும் 300 பேர் வசிக்கும் சூழலில் இப்படி ஒரு நிகழ்வு நடந்ததையிட்டு மிக்க மகிழ்ச்சி.

இனிவருங்காலங்களில் அந்த பத்திரிகையில் சுட்டிக்காட்டிய கருத்தை கருத்தில் கொண்டு செயற்படுவார்கள். என நினைக்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.