Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் வீட்டில் இந்திய இராணுவம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமைதி காக்கும் படை என இலங்கையின் வடகீழ் மாகாணத்துக்கு வந்திருந்த இந்திய இராணுவத்தினர், மேற்கொண்ட அமைதிக்கு மாறான நடவடிக்கையின் ஓரு கட்டமாக, யாழ்ப்பாணத்தில் வெளிவந்துகொண்டிருந்த முரசொலி நாளிதழ்களின் அச்சியந்திரங்களை, இரவு நேரத்தில் குண்டு வெடிக்கவைத்துத் தகர்த்துவிட்டுச் சென்றனர். அடுத்த நாள் காலை, வழமைபோல் கடமைக்கு அலுவலகம் சென்று, நடந்ததை அறிந்து அதிர்ச்சியுற்றது, உடைந்து கருகிக்கிடந்த இயந்திர பாகங்களைப பார்த்து பிறகு இருண்ட மனதுடன் வீடு திரும்பினேன். இனி வேலை இல்லை. வருவாய் இல்லை. எங்கே வேலை கேட்டது, யாரைக் கேட்பது? இன்னும் என்ன செய்வான்களே!;.......... கேள்விகளுடன் பேருந்து நிலையம் நாடி நடந்தேன். அடுத்த சில நாளில் இந்த இராணுவத்தின் பிரிவு ஒன்று தென்மராச்சிக்கு வந்து நிலை கொண்டது. சாவகச்சேரி நகரிலும் புற ஊர்காளிலும் முகாம்கள் அமைத்துத் தங்கினர். விடுதலைப் போராளிகளை, ‘பயங்கரவாதிகள்’ எனப் பெயரிட்டு தேடுதல் நடத்தினர். இரவு பகலாய், தெருக்களில், பற்றைகள் இடையில், பயிரிட்ட தோட்டங்களில், நெல்வயல்களில் அணியணியாய் நடமாடினர். இரவில், மக்கள் நித்திரையான பின்பும், படலையை உதைத்துத் திறந்து வீடுகளில் புகுந்து சத்தமிட்டு வீடடாரை வெளியில் அழைத்து, முற்றத்தில் நிற்கப் பணிந்து, அறைகளைச் சோதளையிட்டனர். சந்தேகத்துக் குரியவர்களைத் தங்கள் வாகனங்களில் ஏற்றிப் போய் தடுத்து வைத்து சித்திரவதை செய்து விசாரித்தனர். ‘பயங்கரவாதிகள்’ தங்களின் முகாம்களைத் தாக்க இரவில் வருவார்கள் எனப் பயந்த இராணுவத்தினர் இடையிடையே எறிகணைகளை ஏவிக்கொண்டிருந்தனர். இவற்றைத் தவிர்க்க எண்ணிய மக்கள் பலரும் இரவுச் சாப்பாட்டின் பின் வீடுகளைப் பூட்டிக் கொண்டு போய் கோயில் மண்டபங்களில் படுத்து உறங்கினர்.

. அதிகாலை, மருதடிப் பிள்ளையார் கோயிலிருந்து நானும் மனைவியும் மகனும் பெருந்தெருவை நோக்கி வந்துகொண்டிருந் நேரம் எதிரே வந்த எங்கள் வீட்டு அயலவர் இருவர் எங்களைப் பார்த்து “உங்கள் வீட்டில் ஆமி” என்றனர். “அடுத்த வீட்டார் எல்லாரையும் கூப்பிட்டு, தெருவில் இருக்க வைத்து, உங்களை கூட்டிவந்தால் தான் எங்களை விடமுடியும் “என்றான்கள். நீங்கள் வராவிட்டால் நாங்கள் நாள முழுதும் தெருவில் வெய்யிலில் இருக்கவேண்டி வரும் என்றார் ஒருவர் சற்று கண்டிப்பாக. வேறுவழியில்லை. போனால் நாங்கள் கைதுசெய்யப்படுவது நிச்சயம். ஓடி ஒளித்தால் ஊரவரின் பகைக்கும் பழிச்சொல்லுக்கும் ஆளாக வேண்டும். அந்த ஊரிலிருந்து முதலில் ஒரு போராளியை களத்துக்கு அனுப்பிய வீடு எங்கள் வீடு. “சரி வருகிறோம்” என்று, அவர்களுடன் வீடு நோக்கி நடந்தோம்.

அழையா விருந்தாளிகளாக, எங்கள் வீட்டில் குவிந்திருந்த சிப்பாய்களைப் பார்க்க எனக்கு உள்ளுக்குச் சிரிப்பு. என்ன துணிவு! மனித உரிமை மீறல்! அனுமதியின்றி எங்கள் வீட்டில் அந்நியா! “

வாங்க.....வாங்க...” என்றான் ஒருவன். “விநாயகமூர்த்தி....” “எத்தனை பிள்ளைகள் உனக்கு?.......” “நான்கு பேர்....” “இவன் பெயரென்ன?....” “பார்த்திபன்....” “மற்றவன்கள் எங்கே...?” “ஒருவன் வெளிநாட்டில.... மற்றவன் கோயில்ல படுக்கப் போனவன்..... இப்ப வருவான். “அவன் பெயர் என்ன?...” “பிரபானந்தன்...” “அடுத்தவன்...என்ன பெயர்?.;;.... “பிரபஞ்சன்.....” “அவன் வீட்டிலிருந்து போய் நான்கு வருடமாச்சு...... எங்கே என்று தெரியாது.....” “பொய் சொல்லுறாய்....” “இல்லை..... உண்மையைத்தான் சொல்கிறேன்...” அவன் தான் தொலைத் தொடர்பு கருவியில் பேசினான். பிறகு, “போங்க...... பல் துலக்கி குளிச்சிட்டு வாங்க” என்றான். பல்தீட்டி, முகம், கால் கழுவி, முன் அறைக்குப் போக துவாய் எடுத்து முகம் துடைத்தபோது அNது துவாயினால் என் கண்களையும் அங்கே கட்டிலில் கிடந்த பெட்சீற் எடுத்துக் கிழித்து மனைவி, மகன் கண்களையும் மூடிக் கட்டினான், ஒருவன். கையில் பிடித்து இழுத்துப் போய் தெருவில் நின்றிருந்த ஜீப்பில் ஏறப் பணித்தான். பின்னால் நின்ற ட்றக்கில் சில சிப்பாய்கள், துப்பாக்கிகளை தயார் நிலையில் பிடித்துக்கொண்டு ஏறினார்கள். அரைமைல் வரை ஓடிய வாகனங்கள், நான் படித்த கலைமகள் பாடசாலை முன்னால் நின்றன. அதுவும் அவர்களுடைய கிளைமுகாம்.

எங்களை இறக்கி உள்ளே கூட்டிப் போய் கதிரையில் அமரவைத்தார்கள். கண் கட்டுக்களை அகற்றிவிட்டு, இடதுகையில் வெள்ளைக் கயிறு கட்டி மறு முனையை கதிரைக் காலில் கட்டினான், ஒருவன். சீக்கிய சிப்பாயை காவலுக்கு வைத்தான்;. தேனீரும் சப்பாத்தியும் வந்தது. “சாப்பிடுங்க....” என்றான் ஒரு சிப்பாய். அவன் அன்பாக தமிழில் பேசினான், என் மகனைப் பார்த்து “தம்பி சாப்பிடுங்க பயப்படாதீங்க” விசாரிச்சிட்டு விட்டிருவாரு பெரியவரு.... என்றான். அந்த ஆறுதல் வார்த்தை கேட்டு முகம் மலர்ந்து ஓரு சப்பாத்தியை எடுத்துக் கடித்தான், பார்த்திபன். அதன் பின் அந்த தமிழ் இராணுவ வீரன் எங்கள் பக்கம் வரவில்லை! பாடசாலை அதிபரின் அறையில் இருந்த இராணுவ அதிகாரியிடம் என்னைக் கூட்டிப் போனான். ஒருவன். அவன் மேசையில் இருந்த கடதாசியைப பார்த்து விட்டு, “உன் மகன் பிரபாஞ்சன் எங்கே?” என்றான். “அவன் வீட்டுக்கு வருவதில்லை.....எங்கே என்று தெரியாது” “வீட்டுக்கு வருவதில்லையா? எங்கே இருப்பான் என்று சொல்ல முடியுமா?....” “தெரியாது சார்....” வாசலில் நின்ற சிப்பாயைக் கூப்பிட்டான், இந்தியில் ஏதோ சொன்னான். சிப்பாய் என்னை, வெளியில் கூட்டிப் போனான். மூன்று பேரினதும் கண்களைக் கட்டினான். ஐPப்பில் ஏற்றப்பட்டோம். ஐPப்பும் ட்றக்கும் கண்டி வீதியில் திரும்பி ஓடிக்கொண்டிருந்தன.

ஆர் எங்கள் அருகில் ஒரு சிப்பாய், முன் இருக்கையில் இருவர் துப்பாக்கிகளுடன் இருந்தனர். கண்கள் கட்டியிருந்தாலும் கீழ் நோக்கிப் பார்க்க முடிந்தது. வாகனங்கள் சாவகச்சேரி இந்துக் கல்லூரி வாசலில் நின்றன. எங்களை இறக்கி குருடர்களுக்கு வழிகாட்டுவது போல், என் கையைப் பிடித்து கல்லூரி வாசலைக் கடந்து மண்டபத்தின் பின்புறமாக சுற்றி இழுத்துப் போய் புறப்பட்ட இடத்துக்கே வந்து கல்லூரி அதிபரின் அலுவலகத்தின் பின்னால், பிராத்தனை மண்டபத்தில் விட்டு எங்கள் கண் கட்டுக்களை அவிழ்த்து விட்டான், சிப்பாய். திரும்பி யன்னலூடாகத் தெருவைப் பார்த்தேன். சிரிப்பு வந்தது. மண்டபத்தில் ஒரு மூலையில், மூவரும் தரையில் அமர வைக்கப்பட்டோம். கையில் இருந்த நூல்கள் அகற்றப்பட்டன. ஒரு சிப்பாய் வந்து காவலுக்கு நின்றான். தாகத்துக்கு தண்ணீர் கேட்டேன், அவனிடம், அவனுக்கு விளங்கவில்லை, தூர நின்ற மற்றொருவனை அழைத்தான். என்னிடம் அனுப்பினான். “என்ன தேவை?” என்று கேட்டான். “ தண்ணீர்” என்றேன். மண்பனையில் நீரும் பிளாஸ்ரிக் குவழையும் கொண்டுவந்து வைத்தான். பன்னிரண்டரை மணிக்குப் பகல் உணவு வந்தது. வெள்ளை அரிசிச் சோறு, பருப்பு, முழுக்கடலை எண்ணெயில் மிதக்கும் குழம்பும். பசி தணிக்க சிறிதே எடுததுச்சாப்பிட்டோம். ஒரு பகலும் இரவும் கழிந்தன.

காலைக்கடன் கழிக்க கழிவறை செல்லும் வழி கேட்டேன், சைகை மொழியில். காவல் சிப்பாய் மற்றொரு சிப்பாயை அழைத்து என்னிடம் அனுப்பினான். அவன் தமிழன், அவன் என்னை அழைத்துப் போனான். என் பின்னால் மனைவியும் வந்தாள். கழிவறை நிரம்பி கதவுக்கு வெளியே குவிந்திகுந்து, திறந்த வெளிக் கழிப்பமாக சாரத்தை மடித்துக்கட்டிக்கொண்டு மூக்கைப் பொத்தியபடி, அமர்ந்தேன். எதிரே இருந்த கழிவறைக்கு மனைவி போனாள். அதுவும் நிரம்பி வழிந்திருந்தது. சிப்பாய் துப்பாக்கியை ‘தயாராய்’ பிடித்தபடி எங்களைப் பாராது திரும்பி நின்றான். நாங்கள் எழுந்துநின்ற போது அவன் தண்ணீர்த் தொட்டியைக் காட்டினான். மண்டபத்துக்குத் திரும்பினோம். நாங்கள் போனபின் பார்த்திபன் கழிப்பறைக்குப் போக வேண்டும் என்றான். அவன் கையைப் பிடித்துக் கூட்டிப்போய் மிகக் கவனமாக திரும்பக் கூட்டிவந்தான் அந்த தமிழ்ச் சிப்பாய். எட்டு மணியானதும் தேனீரும், சப்பாத்தியும் குழம்பும் வந்தன. பானையிலிந்த தண்ணீரில் பல் துலக்கி கழுவினோம். மனைவி தேனீர் மட்டும் குடித்தாள். நானும் பார்த்திபனும் சப்பாத்தியைப் சாப்பிட்டோம். பகல் உடனடியாக சோறும் சாம்பாரும் கீரையும் வந்தன. அதனையும், பசி போக்க சிறிது உண்டோம். பாத்திரங்கள் எடுக்க வந்த சிப்பாய் மலையாளி போல் தெரிந்தது, ஏன் சாப்பிடல்லையா? என்று கேட்டான். “போதும் என்றேன். மீதியை எடுத்துக்கொண்டு போனான். மூன்று மணியானபோது ஒரு சிறு மேசையும் கதிரையும் எங்கள் முன்னால் வைக்கப்பட்டன. ஒரு மேஐர் வந்து அமர்ந்தான். எங்கள் பெயர், பிள்ளைகளின் பெயர்,வயது விபரம் கேட்டு எழுதினான். பிரபஞ்சன் எங்கே? என்றான். தெரியாது வீட்டுக்கு வருவதில்லை என்றேன். பார்த்திபனுக்கு ஒரு வரை படம் தென்மராட்சி நிழல்படம் காட்டி “இங்கே போயிருக்கிறாயா? இந்த இடம் தெரியுமா? இங்கே இவனைத் தெரியுமா? எனப் பல கேள்விகள் கேட்டான். ‘தெரியாது’ என்றும் ‘தெரியும் என்றும் சொல்லிக்கொண்டிருந்தான் பார்த்தீபன். “இங்கே கமலன் வீடு தெரியுமா? என்று மேஐர் கேட்டான். “ஓ தெரியும் “என்றான் பார்த்தீபன். கூட்டிப் போனால் காட்டுவாயா? எனக் கேட்டான். “இவன் ஏன் தெரியும் என்கிறான்” எனக்கு வியர்த்தது. “அவனதை;தான் போன கிழமை இராணுவம் சுட்டது.....பேப்பர்ல பார்த்தேன்... என்றான் பார்த்தீபன். அவன் சாதுரியத்தைப் பார்த்து வியந்தேன். அப்படியா? ... சரி இரு நான்கு மணிக்கு நீ எங்களோட வரனும்.... சில இடங்களைப பார்க்க..... சரியா....” போன மேஐர் மீண்டும் வரவில்லை. கமலன் சுடப்பட்டதும் ...பதுங்கு குழிக்குள் வைத்து ஒரு போராளியின் பெற்றார் சுடப்பட்டதும், அவன் படத்தில் காட்டிய கனகன்புளியடியில் தான் நடந்தது. அதை நினைத்து என் உடல் நடுங்கியது. எங்களை இவன்கள் போக விடுவான்களா? அல்லது புலியின் பெற்றார் என்று குற்றம் சுமத்தி..... அந்த இரவு நித்திரையின்றிக் கழிந்தது. மூன்றாம்நாள் விடிந்தது. முதல்நாள் போலவே கழிப்பறைக்கு காவலுடன் போய் திரும்பினோம். பல் துலக்கிக் கொண்டோம்.

காலை உணவு வந்தது சாப்பிட்டோம். மற்றொரு மேஐர் நெற்றியில் வீபூதியும் சந்தனமும் குங்குமப் பொட்டோடு, மண்டபத்துக்குள் வந்தான். அவன் மெய்க்காவலன் போலும், ஒரு சிப்பாய் துப்பாக்கியை தயாராயப் பிடித்துக் கொண்டு, பின்னால் வந்தான். மேஐர் எங்களைப் பார்த்தும் றாழ யசந லழர pநழிடந? என்று கேட்டான். “"we were brought here three days back......inquiry is over but ...”நான் முடிக்கு முன்னர், “we will release you dont worry....” என்றான் அவன். போய்விட்டான். சிறிது நம்பிக்கை பிறந்தது. சில நிமிடங்கள் செல்ல, மண்டபத்திள் நடுவில் வரிசையாய்க் கதிரைகள் போடப்பட்டன. அவற்றில் வெள்ளைத்துணிகள் வைக்கப்பட்டன. தாடி வளர்ந்த நிலையில் பத்துக்கு மேற்பட்ட சிப்பாய்கள் வந்தனர். அங்கே நின்ற சிப்பாய்களைக் கட்டிதழுவினர். பின்னர் கதிரையில் அமர்ந்தனர்.

முடிவெட்டும் கருவிகளுடன் இரு சிப்பாய்கள் வந்தனர். கதிரையில் இருந்தவர்களின் சிகை, தாடியை மழிந்து அலங்கரித்தனர்.ஒன்றும் புரியாமல் நான் பார்த்திருக்க பார்த்தீபன் மெல்லச் சொன்னான். “அப்பா இவன்கள்தான் எங்கட ஆட்களிடம் பிடிபட்ட இருபது பேர்.....” உயிருடன் விடுவிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது என்று பேப்பரில் செய்தி இருந்தது நினைவில் வந்தது. பொட்டு வைத்த மேஐர் அவற்றை கண்காணிக்கப் போலும் மண்டபத்துக்குள் வந்தான். அங்கு நடப்பவற்றைப் பார்த்துவிட்டு திரும்பிய நேரம், நான் எழுந்து போய், ளுசை லநளவநசனயல லழர ளயனை வாயவ லழர றடைட அநநவ அந யனெ என்றேன். லுநள i றடைட உயடட லழர... “அவன் விரைந்து திரும்பி தன்னுடன் வந்த சிப்பாயிடம் ஏதோ சொன்னான்.

ஒரு சிப்பாய் வந்து “உங்களை சார் வரச்சொல்லுறது” என்றான். காவலுக்கு நின்ற சிபாயிடம் இந்தியில் சொல்லி விட்டு எங்களைக் கூட்டிக்கொண்டு முன்பக்கம் போனான். அங்கே எங்களை இரண்டாம் நாள் விசாரிக்க வந்த மேஐர் முன்னாள் விட்டனர்@ எங்களைக் காட்டி இந்தியில் கதைத்தான். ‘ உட்காருங்க’ என்றான் மேஐர். அவன் எதிரே போடப்பட்டிருந்த வாங்குகளில் பல ‘பெற்றார்’ இருந்தனர். அவன் எங்களுக்கு பயங்கரவாதம் பற்றிச் சொன்னான். உங்கள் பிள்ளை பாடசாலைக்குப் போவதில்லையா? என்று தமிழில் கேட்டான். “படிக்கிறார்....” என்றேன். “பயங்கரவாத வேலைகளில் மூன்று மைல் தொலைவில் இருக்கும் வீட்டுக்கு. விடுதலையானதே பொரிய காரியம் நடை ஒன்றும் கடினமல்ல, கல்வயல் வழியே சென்றால் கிட்ட. நடந்தோம். இந்திய இராணுவம் எங்களை கைதுசெய்து கொண்டுபோன செய்தி ஊரெல்லாம் பரவியிருந்தது. இப்போ சுதந்திரமாய் தெருவில் நடந்து போவதைப் பார்த்தவர்கள் ஆச்சரியப்பட்டனர். “விட்டடிட்டான்களா?” என்று கேட்ட ஒருவரின் முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது. “இவன்களைக் சுட்டிருக்கவேண்டும்” என் அவர் மனம் நினைத்திருக்கும். கல்வயலில் எங்கள் சொந்தக்காரர் இருக்கிறார்கள்.

அந்த வீட்டுப் படலையைத் திறந்தோம். ஆச்சரியபம் மேலிட எங்களை வரவேற்றார்கள் அன்புடன் உபசரித்தார்கள். படைமுகாம் அனுபவங்களை மனைவி சொல்லிக் கண்கலங்கினாள். கேட்டவர்கள் வருத்தம் தெரிவித்தனர். மதிய உணவு சாப்பிட்டு ஓய்வெடுத்து நான்கு மணிளவில், வீடு நோக்கி நடந்தோம். நாங்கள் விடுதலையான செய்தி எங்களை முந்திக்கொண்டு ஊருக்குள் போயிருந்தது. கேள்விப்பட்ட எங்கள் மூத்த மகன் பிரானந்தனும் அவன் நண்பர்களும் எங்களை எதிர்கொண்டனர். தாய் மகனைக்கட்டித் தழுவி கண்ணீர் சொரிந்தாள். வீட்டை அடைந்தோம். வேலிக் கிடுகுகள் அகற்றப்பட்டிருந்தன. வீட்டுக் கதவுகள் திறந்தே கிடந்தன. முற்றத்தில் நின்ற பூச் செடிகளும் நெடிதுயர்ந்து வளர்ந்து நின்ற அசோக மரங்களும் வெட்டிச் சரிக்கப்பட்டிருந்தன. தளபாடங்களும் பாவனைப் பொருள்களும் அங்கும் இங்கும் தெருக்கரையிலும் கிடந்தன. நாங்கள் வந்துவிட்டதைப் பார்த்து அயலவர் ஓடி வந்தனர். “இப்பதானே போறான்கள்....என்றார் ஓருவர். “உங்கட இட்டிலிச் சட்டில உங்கட கோழியை புடிச்சு வெட்டி கறி வைச்சான்கள்...... இருந்தாற்போல் அதையும் தூக்கிக்கொண்டு ஓடுறான்கள்” என்றான் அக்காள் மகன்.“

உங்கட பாண்வெட்டிற மேசைக் கத்தியாலதான் கோழி வெட்டினாங்கள்” என்றாள் அக்கா. நீங்கள் தோசைக்கு மா கரைச்சு வைத்திட்டுப் போனீங்கள்...... அவன்கள் சுட்டுத் தின்றான்கள்...... எங்களுக்கும் தந்தான்கள்” என்றான் எதிர்வீட்டுச் சிறுவன். “திடீரென்று வெளிக்கிட்டுப் போறான்கள்......ஏன் என்று யோசித்தம். ... நீங்கள் வர்றது தெரியுமோ? ... என்று கேட்டாள் மருமகள். “ஓ, எயர்போனில் அறிவிச்சான்கள்....” என்றேன். “உங்களைக் கூட்டிக்கொண்டு போனது இங்க சிலருக்கு சந்தோசம்..... இயக்கத்துக்கு மகனை விட்டினம்..... இப்ப கண்ணைக் கட்டிக்கொண்டு ஐPப்பில போகினம்... விடமாட்டான்கள்..... சுட்டுபோடுவான்கள்.... “என்று சொன்னவரின் பொயரைக் சொல்லாமல்.....கண்கலங்கினான் அண்ணன் மகள். வீட்டைக் கொழுத்தவேணும்.... இவன்களை இந்த ஊரிலை இருக்கவிட்டால் எங்களுக்கும் கரைச்சல் “என்று தெருவில் நின்று சொன்னாராம் ஒரு அண்ணன். இரகசியமாய்.... இரவிரவாய் வந்து போனங்கள்..... இவை சாப்பாடு குடுத்தினம்...... இப்ப எங்களை றோட்டில இருக்க வைச்சிட்னம்..... என்றாராம் ஒரு பெரியவர். முன் அறையில், அலுமாரியில் அடுக்கியிருந்த புத்தகங்கள் கீழே பரவிக் கிடந்தன. சில அட்டைகளில் இந்தி வார்த்தைகள் எழுதப்பட்டிருந்தன. தோல் கைப்பை திறந்துகிடந்தது. அதனுள் இருந்த முக்கிய பத்திரங்களும் ரூபா 5000 ற்கான காசோலையும் கொட்டுண்டு தரையில் கிடந்தன. கதவுத் தாட்பாள்கள் வளைந்தும் உடைந்தும் கிடந்தன. எங்கும் குப்பை, எதிலும் ஒரு புது வாடை. கிணற்றைச் சுற்றித் தண்ணீர், அழுக்கு வெள்ளமாய் தேங்கி நின்றது. கிணற்றிலிருந்து வித்தியாசமான வாடை வீசியது. அக்காவின் மகள் சொன்னாள், “அன்கள் கிணற்றுக்குள்ள இறங்கி குளிச்சவன்கள்.” வீடு கூட்டிக் கழுவி, முற்றம், சூழல் துப்பரவாக்கி சாணம் தெளித்து, கிணற்று நீர் இறைத்து, சாம்பிராணி தூபமிட்டு வழமைக்கு வர மூன்று நாளாயிற்று. அதுவரை அக்காள் வீட்டிலிருந்து உணவு வந்தது. மூன்றாம் நாள் இரவு எங்கள் குசினியில் சமையில் செய்தோம். இரவில், பூட்டு இல்லாத கதவுகளை வெறுமனே சாத்திவிட்டுத் தூங்கினோம். அதுவரை எங்களுடன், இரவில் தூங்கிய பார்த்திபனும் வெளியில் நண்பர் வீட்டில் இரவைக் கழித்துவிட்டு காலையில் வருவான். கதை இத்தோடு முடிந்து விடவில்லையே.

ஐந்தாம் நாள் காலை ஐந்து மணியளவில் இராணுவ வண்டிகள் வந்து தெருவில் நின்றன. எங்கள் நாயுடன் ஊர்நாய்களும் குரைத்தன. நித்திரை குழம்பி எழுந்து கதவு இடுக்கால் வெளியே பார்த்தேன். படையினர் மளமளவென்று குதித்து, படலையை உதைத்து விழுத்திவிட்டு உள்ளே வந்தனர். “வெளியே வா” என்றான் ஒருவன். ஓடி ஓடி அறைகளைத் திறந்து பார்த்தானர், வீட்டைக் சுற்றிப பார்த்தானர். “எங்கே மகன்” என்று கேட்டான் ஓரு குஞ்சம் தொங்கும் தொப்பி அணிந்தவன். “எங்களை விசாரித்து முடிஞ்சுது....” என்றான்.

“கேட்டதுக்கு பதில் சொல்” என்று முறாய்த்தான் அவன். “இங்கே வருவதில்லை” என்றேன். தூர நின்ற ஒருவன் ஏதோ இந்தியில் சத்தமிட்டான். எல்லாரும் வெளிலே ஓடினார்கள். வாகனங்களில் ஏறிக்கொண்டார்கள். மீண்டும் இராணுவம் எங்கள் வீட்டுக்கு வந்தது ஏன்? ஊரவர் கூடிப் பேசிக்கொண்டார்கள். பிரபஞ்சனைத் தேடி..... இது வேற குறூப்.... இரவிலை வந்து போறர்போல.....அதுதான் விடியமுன் வர்ராங்கள்... பிடிச்சிடலாம் என்று.... இப்படிப், பலரும் பேசிக்கொள்வர். கிழமைக்கு ஒரு தடவையாவது வந்து போனர்கள். வந்தவுடன் எங்களை “வெளியே போ” என்பதும் அவர்கள் உள்ளே வந்து அறைகளைப் பார்ப்பதும் வழமையாயிற்று. ஒருநாள், எனது மேசையில் இருந்த போட்டோ ஒன்றை எடுத்து “இவனா பிரபஞ்சன்” என்று கேட்டான் ஒரு சிப்பாய். “இல்லை, இவன் வெளிநாட்டில் இருக்கிறவன்” என்றேன். அவனோ அந்தப் படத்தை எடுத்துக்கொண்டு தெருவுக்குப் போனான். போவேர் வருவோரிடம் “இவன்தானா பிரபஞ்சன்” என்று கேட்டுக்கொண்டு நின்றான். ‘இல்லை’ என்று பதில் கிடைத்தாலும் படத்தைத் தன் பொக்கற்ல் வைத்துக்கொண்டான். மற்றொரு நாள், காலை ஏழு மணிக்கு வந்தார்கள், அந்நேரம் மனைவி குசினியில் இடியப்பம் அவித்துக்கொண்டிருந்தாள். அவள் முன்னாள் வந்து நின்ற ஒரு அதிகாரி “இடியப்பம் புலிக்கா?” என்று கேட்டான். அவள் “இல்லை” என்றாள் தலை குனிந்தபடி. அவன் போன பிறகு சப்பாத்துக் காலோட எனக்கு முன்னால் வந்து நிக்கிறானே... என்ன கொடுமை.. என்று முணுமுணுத்தபடி தண்ணீர் ஊற்றித் தரையைக் கழுவினாள்.

அவர்கள் வாகனங்களில் ஏறப்போனவேளை, இரவுப் பொழுதை வெளியில் கழித்துவிட்டு வந்த பார்த்திபனைக் கண்டார்கள், இவன் யார்? என்று என்னிடம் கேட்டான் அந்த அதிகாரி. “என்னுடைய மகன். அவனை விசாரித்து விடுதலை செய்துவிட்டார்கள்” என்றேன். “ஓ...நோ... உன்னை விசாரிக்க வேணும்” என்று அவன் கையைப் பிடித்தான், “அவனை ஏறு ட்றக்கில்” என்றான். “நானும் வருகிறேன்” என்றேன். “நீ போ....” என்று கையை ஓங்கினான். ட்றக்கில் கடைசியாய் ஏறிய ஒரு தமிழ்சிப்பாய், நீ கொஞ்சம் பொறுத்து வா” என்றான். சைக்கிளை எடுத்துக்கொண்டு சாவகச்சேரி இந்துக்கல்லூரிக்கு ஓடினேன். அன்று எங்களை விசாரித்த மேஐர் முன் அறையில் இருந்தான். “சார் எங்களை விசாரித்து வீடு போக அனுமதித்தீங்க..... இப்ப திரும்பவும் என் மகனைப் பிடித்து வந்திட்டார்கள்....? என்றேன். “இன்னும் விசாரிக்க இருக்கு.....நீ நாளைக்கு வந்து அவனைக் கூட்டிப்போ......ஒரு கவண்மேன்ற் ஆபிசரோடு வந்து கையொப்பமிட்டு.....கூட்டிப்போ...எ

ன்றான். அடுத்த நாள் காலை பத்துமணிக்கு, எங்கள் கிராம உத்தியோகத்தருடன் சென்று கல்லூரிவாசலில் நின்ற சிப்பாய்களிடம் உள்ளே போக அனுமதி கேட்டபோது, மறுத்து தமிழ் சாயலில் ஏதோ மொழியில் பேசினார். முதலில் தமிழிலில் சொன்னதோ பிறகு ஆங்கிலத்தில் சொன்னதோ இவர்களுக்கு விளங்கவில்லை. திரும்பவும “மேஐர் கர்வால்” என்றும் “இவர் கவண்மேன்ற் ஆபிசர்” என்றும் சைகை மொழியில் வரச்சொன்னார் என்றும சொன்ன பிறகு.... ஆ... சர்க்கார் ஆபிசர்....ஓ போ...போ...என்றான் ஒருவன். பின்னர்தான் அறிய முடிந்தது அவர்கள் கன்னடர் என்று. “குட் மேனிங் சார்....” “யேஸ்...” “ஒரு கவண்மென்ற் ஆபிசருடன் வந்திருக்கிறேன்.... என்னுடைய மகனை விடுவதாக நேற்று சொன்னீங்க....” “உட்காருங்க....” என்றான். அருகில் நின்ற ஐவானுடன் ஏதோ இந்தியில் பேசினான். “பெயரென்ன....? என்னிடம் கேட்டான். “பார்த்திபன்” என்றேன். ஐவான் உள்ளே போய் என்மகனை கூட்டிவந்தான். அவன் கையில் வெள்ளைக் கயிறு கட்டப்பட்டிருந்தது. மறுமுனையில் ஐவான் வைத்திருந்தான். மேஐர் சொன்ன பிறகு ஐவான் கயிற்றை அவிழ்த்துவிட்டான்.

மேஐர், “பயங்காரவாத செயல்களில் உங்கள் பிள்ளைகள் நாங்கள் யரையும் துன்புறுத்துவதில்லை.....we dont கேளுங்க.....யாராவது அவனை அடித்தவர்களா? என்று ....” என்னைப் பார்த்தான். “யாரும் அடித்தார்களா, உனக்கு?” என்று பார்த்திபனைக் கேட்டேன். அவன் “இல்லை” என்றான். “சார்.... இவனை திரும்பவும் யாரும் கைதுசெய்ய வந்தால்.....ஒரு சேட்டிபிக்கேற் தரமுடியுமா, காட்டுவதற்கு? என்று கேட்டேன். “yes I willgive you ....” என்றவன் ஒரு கடதாசி எடுத்து எழுதினான். என்னிடம் தந்தான்.

“Vinayagamoorthy Parthipan of Maduvil South, Chavakacheri was taken into custody and released after interrogation. MaJ. G.R.Garwal. என்றிருந்தது. “நன்றி” சொல்லிவிட்டு தெருவுக்கு வந்தோம். கொஞ்சதூரம் போனதும், என் கையைப் பற்றி அழுதபடி பார்த்திபன் சொன்னான், “அப்பா.. என்னைக் கூட்டிவந்தானே கயிற்றோட...அவன் எனக்கு அடிச்சவன் அப்பா, யாரிடமும் சொன்னால் கொன்று போவேன் என்றான்.

அப்பா....” “we dont hurt anyone என்றானே மேஐர் அங்கே உள்ளே நடக்கிற சித்திரவதை ஒன்றும் இவனுக்கு தெரியாதோ... இதயம் கணத்தது. வீட்டை அடைந்ததும் அயலவரும் பார்த்திபனின் நண்பர்களும் வந்து கூடினர். நடந்தவை எல்லாம் சொல்லி சேட்பிக்கற்றையும் காட்டினோம். “இனி எந்தப் படை வந்தாலும் இதைக்காட்டு” என்று சொல்லி சேட்டிக்கற்றை மேசையில் வைத்தேன்;. சொல்லிவைத்தாற் போல் அடுத்தநாளும் ஒரு பிரிவு, இருபது பேர்வரை வந்தனர். எங்களுக்குப் பழகிப்போன நடவடிக்கை ஆயிற்றது. மேசையில் தயாராய் வைத்திருந்த சேட்டிபிக்கேற்றை எடுத்து அவர்களில் அதிகாரிபோல் தெரிந்த ஒருவனிடம் காட்டினேன். மேசை விளிம்பில் அமர்ந்தபடி அதைப் படித்தவன் இந்தியில் ஏதோ பேசினான். ஐவான்களுக்கு கட்டளையிடுவது போல் தெரிந்தது. மறுகணம் எல்லாரும் வெளியேறினார்கள்.

ஒரு போராளியைத் தேடி, இந்திய அமைதி காக்கும் படை இரவு பகலாய், எங்கள் வீட்டுக்கு வந்து போவது தொடர்கதையாயிற்று. எங்கள் உறவினர்களுக்கும் அயலவர்களுக்கும் ஒவ்வாத சம்பவமாயிருந்தது. எங்கள் மீது அவர்களுக்குப் பரிவு இருக்கவில்லை. மாறாக சினமும் பகையும் பிறந்தன. படைகள் வந்திறங்கியதும் எங்கள் நாயுடன் ஊர் நாய்களும் சேர்ந்து குரல் எழுப்பும். அவர்கள், தூக்கம் கலையும். “இத் தொல்லை எப்போதுதான் முடியும் என்று அவர்கள் பேசிக்கொள்வார்கள். வீட்டை விட்டு இவர்களை விரட்டுவது எப்படி என்று சிலர் ஆலோசிப்பதும் எங்கள் காதிற்கு எட்டியது. இன்றிருக்கும் வீடு வீடாக இல்லை. சப்பாத்துக் கால்களால் உதைத்து உடைக்கப்பட்ட கதவுகள், யன்னல்களை திருத்துவதற்க்கும் பணமில்லை. அப்படி மாற்றியமைத்தாலும் அவர்கள் மீண்டும் வந்து உடைத்து உடைக்க மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதமில்லை. குறுக்காக வெட்டப்பட்ட முற்றத்து மரங்கள் செடிகள் பட்டுக்கொண்டிருந்தன. பந்தலாக நின்ற ஒன்பது வண்ணங்களில் பூ மலரும் போகன்வில்லாக்கள், செவ்வரத்தை, நந்தியாவட்டை, செவ்விளனீர் தென்னை, எலுமிச்சை,வாழை,அசோகா எவையுமே மீண்டும் துளிப்பதாக தெரியவில்லை. வீட்டுத் தளபாடங்கள், பாவனைப் பொருட்கள், பெரும்பகுதியும் உடைந்து காணாமலும் போயின. இவை யாவையும் மனதில் கொண்டு அரியாலையில் இருக்கும் சகோதரி வீட்டுக்கு மாறுவதற்கு முடிவுசெய்தோம்.

கைகளில் சில பொருட்களை எடுத்துக்கொண்டு,மீதியை பார்த்துக்கொள்ளும்படி அடுத்த வீட்டு சகோதரியிடம் சொல்லிக் கொண்டு வெளியேறினோம். ஆளில்லா வீட்டையும் இராணுவம் விட்டுவைக்கவில்லை. அயலவருக்கும் ஆடு மாடுகளுக்கும்,வீடு தன்ளாயிறன்ற பங்;களிப்பை உதவியது. படையினர் வந்து திறந்தே கிடக்கும் வீட்டில் புகுந்து சோதனை நடத்திவிட்டுப் போக அயலவர் கதவு யன்னலல் பலகைகளை கழற்றி எடுத்தும் தென்னையில் ஏறி இளநீர் பறித்துக் குடித்தும் விழுந்த தேங்காய்களைப் பொறுக்கியும் பயனடைந்தனர். வீட்டுப் பாவனைப் பொருட்களும் தளபாடங்களும் ஒவ்வொன்றாக மறைந்தன. கிணற்றுக் கட்டில் ஆனி வைத்துப் பொருத்தப்பட்டிருந்த நீர் இறைக்கும் இயந்திரத்தை படையினர் தகர்த்தெடுத்து சாக்குப் பையில் வைத்து தூக்கிப் போனதைப் பார்த்தவர்ளில் ஒருவர் மட்டும் என்னிடம் சொன்னார். யாரோ கொடுத்த பொய்த்தகவளால், வீட்டின் பின்னால் இருந்த சிறு கொட்டிலில் பல இடங்களில் மண்வெட்டியால் தோண்டிப் பார்த் படையினர் எதுவும் கிடைக்காது ஏமாந்தனர். அந்த இடத்தில் புதைத்து வைக்கப்பட்ட சில போராளிகளின் போட்டோப் படங்கள் அடங்கிய பை மட்டும் தப்பிப் பிறந்தது. இடம் பெயர்ந்து போய் சகோதரி விட்டில் இருந்;த நிலையிலும் விட்டுவைத்தார்களா! சகோதரிகளின் பிள்ளைகளை,மருமக்கள் கொண்ட கூட்டுக் குடும்பம் அது. அவர்களுக்கு ஒரு கடிதம் வந்தது. “இவர்களை(என்பெயர் குறித்து) மாற்றுக் இயக்கத்தவர் தேடுகிறார்கள்” வைத்திருந்தால் உங்களுக்கும் ஆபத்து. வெளியேற்றி விடுங்கள். என்று எழுதப்பட்டிருந்தது. சகோதரிக்குத் தொல்லை கொடுக்க நான் விரும்பவில்லை. நாச்சிமார் கோவிலடிக்கு இடம் மாறினோம். அங்கே இருந்த நாளில் நான் கடத்தப்பட்டு பதினைந்து நாள்கள் தடுத்துவைக்கப்பட்டு அடியும் உதையும் வாங்கியது மற்றொரு அத்தியாயம்.

- எரிமலை

இப்படி எத்தனை எத்தனையோ கதைகள். மனம் கனக்கிறது. இந்திய ஆமியின் அட்டகாசங்களில் சிக்கியவர்களில் நானும் ஒருவன் தான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்படி எத்தனை எத்தனையோ கதைகள். மனம் கனக்கிறது. இந்திய ஆமியின் அட்டகாசங்களில் சிக்கியவர்களில் நானும் ஒருவன் தான்.

உங்களுக்கு நடந்த சம்பவங்களை எங்களுக்கு சொல்லுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய ராணுவத்தின் கொலைவெறிச் செயல்கள் பல கேள்விப்பட்டிருந்தாலும் இதைப் படிக்கும்போது மனம் கனக்கிறது. :lol:

அது சரியான வேலைதான் என்றும் தோன்றுகிறது. :o

இப்படி எத்தனை எத்தனையோ கதைகள். மனம் கனக்கிறது. இந்திய ஆமியின் அட்டகாசங்களில் சிக்கியவர்களில் நானும் ஒருவன் தான்.

ஓ..அப்படியோ அண்ணா..ணா..!!.. :wub:

பிறகு நீங்க எப்படி தப்பி வந்தனியள்..ள்..தப்பி வரகுள்ள விஜய் அண்ணாவின்ட படத்தில வாற மாதிரி யாரையும் இழுத்து கொண்டு வந்தனியளோ..ளோ.. :o

இல்லாட்டி தனிய தானோ ஓடி வந்தனியள்..ள்..கோவிக்காம சொல்லுங்கோ பார்போம்..ம்..!! :lol:

அப்ப நான் வரட்டா!!

இதை படிக்கும் போது எங்கள் குடும்பத்தில் நடந்தவற்றை பற்றி மேலும் எழுத வேண்டும் போல் உள்ளது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதை படிக்கும் போது எங்கள் குடும்பத்தில் நடந்தவற்றை பற்றி மேலும் எழுத வேண்டும் போல் உள்ளது

சொல்லுங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.