Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜானக்க கொலை செய்யப்பட்ட அன்றே கருணா நாடாளுமன்ற உறுப்பினரானமை சந்தேகம் - மங்கள, சடலங்களின் சூடு தணிவதற்கு முன்னரே குற்றவாளியை இனங்கண்டது எவ்வாறு - ஐ.தே.க.வின் செயலாளர் திஸ்ஸ கேள்வி

Featured Replies

அரசாங்கத்திற்கு பாரிய சவாலாக இருந்த வடமத்திய மாகாண எதிர்கட்சித் தலைவர் ஜானக்க பெரேரா கொலை செய்யப்பட்ட தினத்திலேயே அரசாங்கத்தின் ஆசிர்வாதத்துடன் ஆயுத குழுவொன்றை நடத்திச் செல்லும் கருணா நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டிருப்பது

மக்கள் மத்தியில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மக்கள் பிரிவு ஏற்பாட்டாளர் மங்கள் சமரவீர தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் இன்று இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இதனை கூறியுள்ளார். அரசாங்க தலைவர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் சிலரின் துணையின் கீழ் ஆயுதக்குழுக்கள் இயங்குகிறது என்பது தற்போது எவருக்கும் ரகசியமான விடயமல்ல,

இதனைத் தவிர அரசாங்கத்தின் அனுசரணையுடன் கருணாவும் ஆயுதக்குழுவொன்றை நடத்தி வருகிறார். கடந்த காலத்தில் இடம்பெற்ற கொலைகள், ஆட்கடத்தல்கள், காணாமல் போகச் செய்தல், ஆகியவற்றுடன் இந்த துணைக்குழு தொடர்புபட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும், பரராஜசிங்கம், ரவிராஜ், மகேஸ்வரன் போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமல்ல,

அமைச்சர் ஜெயராஜ் பெர்ணான்டோபுள்ளேயின் கொலைக்கும், கிழக்கில் இடம்பெற்ற தேர்தலின் ஆரம்பத்தில் இருந்து இடம்பெற்ற கொலைகள், ஆட்கடத்தல்களுக்கு இந்த துணை ஆயுத குழு நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளதாக தாம் நம்புவதாகவும் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

தமக்கு தேவையான நேரத்தில் பயன்படுத்திக் கொள்ள துணை ஆயுதக்குழுக்களை பராமரித்து வருவது ராஜபக்ஷ அரசாங்கத்தின் ஓடுக்குமுறை கட்டமைப்பின் பிரதான அடையாளமாகும் எனவும் அரசாங்கத்தின் பலத்த சவாலாக இருந்த ஜானக்க பெரேராவின் கொலை இடம்பெற்ற நாளிலேயே துணை ஆயுதக்குழுவொன்ற நடத்திச் செல்லும் கருணா போன்றவர் அரசாங்கத்தின் ஆசிர்வாத்துடன் நாடாளுமன்றத்திற்கு நியமிக்கப்பட்டிருப்பது மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மக்கள் பிரிவின் ஏற்பாட்டாளர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்

சடலங்களின் சூடு தணிவதற்கு முன்னரே குற்றவாளியை இனங்கண்டது எவ்வாறு - ஐ.தே.க.வின் செயலாளர் திஸ்ஸ கேள்வி

வடமத்திய மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவருக்கு விடுதலைப்புலிகள், கருணா தரப்பினர் மற்றும் அரசாங்க தரப்பு என முத்தரப்பிலிருந்து அச்சுறுத்தல்கள் இருந்தன எனினும் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பின்னர் சடலங்களின் சூடு தணிவதற்கு முன்னரே குற்றவாளியை இனங்கண்டது எவ்வாறு என்று ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கேள்வி எழுப்பினார்.

யாரால் செய்யப்பட்டிருந்தாலும் இந்த சம்பவத்தை ஐக்கிய தேசியக்கட்சி வன்மையாக கண்டிக்கின்றது என்பதுடன் கட்சி காரியாலய திறப்பு விழா தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருக்கு எதுவுமே தெரியாது என்றால் தேசிய புலனாய்வு பிரிவு எதற்கு என்றும் கேள்வி எழுப்பினார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது;

நாட்டை பாதுகாப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட தேசிய வேலைத்திட்டத்தின் தேசிய வீரரை நாடு இழந்துவிட்டது , படையில் இருந்தபோது தேசிய வீரராக தென்பட்ட மேஜர் ஜெனரல் ஜானகபெரேரா ஐக்கிய தேசியக்கட்சியில் இணைந்து போட்டியிட்ட போது தேச துரோகியாக தென்பட்டார். அவரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தெரிந்துகொண்டே பாதுகாப்பு அமைச்சின் பிரதான தலையீட்டினால் அவருக்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டது.

முத்தரப்பிலிருந்து அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில் குண்டுவெடிப்பில் பலியான சடலங்களின் சூடு தணிவதற்கு முன்னரே குற்றவாளி கண்டுபிடிக்கப்பட்டமை எவ்வாறு?

தற்கொலை குண்டுதாரிகள் நுழைந்துள்ளனரா?

தமிழர்கள் பதியப்பட்டுள்ளனரா?

இனந்தெரியாதோர் நுழைந்துள்ளனரா?

என்று அனுராதபுர மாவட்டத்தில் கடந்தவாரம் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் இவ்வாறான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டமை எவ்வாறு? புலிகளுக்கு எதிராக இராஜதந்திர நடவடிக்கையை முன்னெடுத்தவரே பலியெடுக்கப்பட்டுள்ளார்.

இது தற்கொலையா? என்பது தொடர்பில் உரிய தகவல்கள் கிடைக்கவில்லை. எனினும் தாக்குதல் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. விசாரணைகள் ஆரம்பிப்பதற்கு முன்னரும் சடலங்கள் எடுத்துச்செல்வதற்கு முன்னரும் குற்றவாளிகள் இனங்காணப்பட்டமை எவ்வாறு? என்பதுடன் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.

http://www.tamilskynews.com/index.php?opti...-10-06-15-46-40

Demo Crazy With 10% Commission

- - - Sri Lanka, A Land Like No Other - - -

Edited by vettri-vel

http://srilanka.usembassy.gov/pr-6oct08.html

UNITED STATES STRONGLY CONDEMNS TERRORIST ATTACK IN ANURADHAPURA

Colombo, October 06, 2008: The United States condemns in the strongest possible terms the terrorist attack on October 6 in Anuradhapura that claimed the lives of Major General

http://www.adnkronos.com/AKI/English/Polit...=3.0.2549209120

Brussels, 6 Oct. (AKI) - European Union external relations commissioner Benita Ferrero-Waldner on Monday deplored the suicide bombing in northern Sri Lanka which killed 27 people and injured over 80.

இவர்கள் எல்லாம் கண்டன அறிக்கைகளை ரெடிமேடாக வைத்து இருக்கிறவை. இலங்கையில் குன்டு வெடிச்ச சத்தம் கேட்ட உடனேயே திகதியை போட்டுவிட்டு விசுக்கி விடுறவையள். றொபோட் ஓ பிளக் சட்டை பைக்குள்ளேயே கொண்டு திரியுரவர். கன்டியில் விடுமுறையில் இருந்தாலும் கண்டன அறிக்கை இடுப்பில் இருந்து சுடுகிற மதிரி வந்துடும்.

முன்பு எல்லாம்

குன்டு வெடிக்கும்.

போலிசு ஒரு அடையளம் காணமுடியத ஒரு உடலை எடுத்து தற்கொலை கொலையளி என்று சொல்லும்.

பின்பு கன்டன அறிக்கைகள் எல்லா பக்கத்தில் இருந்தும் பறக்கும்.

இப்ப எல்லாம் இவர்களுக்கு அதற்க்கு கூட பொறுத்து இருக்க விருப்பம் இல்லை. விசரணை இல்லை சந்தேக நபர் இலை சாட்சி இல்லை. தீர்ப்பு அடுத்த நிமிடம். இதுவே அமரிக்கவோ அல்லது இங்கிலாந்தாகவோ இருந்தால் விசாரணைகள் நடைபெற்று கொண்டு இருக்கின்றன நாம் இப்போது அது பற்றி கருத்து எதுவும் கூற முடியாது என்று அன்நாட்டு அதிகாரி சொல்லி இருப்பார். ஆனால் இலங்கையில் நடந்தால் கண்டன அறிக்கைகள் வெளியிடுவதற்கு இவர்களுக்கு இது எல்லாம் தேவை இல்லை. எமக்கு என்ன கொல்பவர் யாரோ. சாபவர் யாரோ. அழிவது யாரது நாடோ. அறிக்கையை விடுவதால் நன்மை அடைவது நாமே என்று அறிக்கையை விடவேண்டியது தான்.

கடைகெட்ட போக்கிரிகள்

Edited by rajcan

இவர்கள் எல்லாம் கண்டன அறிக்கைகளை ரெடிமேடாக வைத்து இருக்கிறவை. இலங்கையில் குன்டு வெடிச்ச சத்தம் கேட்ட உடனேயே திகதியை போட்டுவிட்டு விசுக்கி விடுறவையள். றொபோட் ஓ பிளக் சட்டை பைக்குள்ளேயே கொண்டு திரியுரவர். கன்டியில் விடுமுறையில் இருந்தாலும் கண்டன அறிக்கை இடுப்பில் இருந்து சுடுகிற மதிரி வந்துடும்.

முன்பு எல்லாம்

குன்டு வெடிக்கும்.

போலிசு ஒரு அடையளம் காணமுடியத ஒரு உடலை எடுத்து தற்கொலை கொலையளி என்று சொல்லும்.

பின்பு கன்டன அறிக்கைகள் எல்லா பக்கத்தில் இருந்தும் பறக்கும்.

இப்ப எல்லாம் இவர்களுக்கு அதற்க்கு கூட பொறுத்து இருக்க விருப்பம் இல்லை. விசரணை இல்லை சந்தேக நபர் இலை சாட்சி இல்லை. தீர்ப்பு அடுத்த நிமிடம். இதுவே அமரிக்கவோ அல்லது இங்கிலாந்தாகவோ இருந்தால் விசாரணைகள் நடைபெற்று கொண்டு இருக்கின்றன நாம் இப்போது அது பற்றி கருத்து எதுவும் கூற முடியாது என்று அன்நாட்டு அதிகாரி சொல்லி இருப்பார். ஆனால் இலங்கையில் நடந்தால் கண்டன அறிக்கைகள் வெளியிடுவதற்கு இவர்களுக்கு இது எல்லாம் தேவை இல்லை. எமக்கு என்ன கொல்பவர் யாரோ. சாபவர் யாரோ. அழிவது யாரது நாடோ. அறிக்கையை விடுவதால் நன்மை அடைவது நாமே என்று அறிக்கையை விடவேண்டியது தான்.

கடைகெட்ட போக்கிரிகள்

சரியாத்தான் சொல்லுறிங்க... ஆனா கேப்பாங்களா அவங்க?..

Edited by Sooravali

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.