Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிட்னியில் சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு பொய் சொல்லவரும் சிறிலங்காவின் வெளிவிவகரா அமைச்சரை(ரோகித போகலகாமா) எதிர்த்து கவனயீர்ப்பு நிகழ்வு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரெலியாவில் பொய்பிரச்சாரம் செய்யும் சிறிலங்கா அரசின் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகலகாமா மெல்பேர்ண், கன்பராவினைத் தொடர்ந்து இன்று மாலை சட்டம் படிக்கும் மாண்வர்களுக்கு "சிறிலங்காவின் வடக்கு கிழக்கில் சட்டமும் ஒழுங்கும் சீராக்கம்" பற்றி பொய்யுரைக்க வருகிறார். தமிழர்கள் இந்நிகழ்வு நடைபெறும் இடத்துக்கு வெளியே இருந்து கவனயீர்ப்பு நிகழ்வில் கலந்து கொள்வதன் மூலம் அவுஸ்திரெலியர்களுக்கு எங்களின் உண்மைச்செய்திகளைச் சொல்லலாம். அத்துடன் போகலகாமாவின் உரையில் கலந்து கொண்டு, சிறிலங்காவின் பொய் முகத்தைக் கிழிக்க கேள்விகள் கேட்க விரும்புவோர் பின்வரும் மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு உங்களின் பெயரைப் பதியுங்கள். law.scil-rsvp@usyd.edu.au

பதியும் போது நான் வளர்ந்து வரும் நாடுகளில் அபிவிருத்தி பற்றி அறிய ஈருபாடு உடையவன். ஆகவே இந்நிகழ்வில் கலந்து கொள்ளவிரும்புகிறேன் என்றும் , நீங்கள் சட்டக்கல்லூரி மாணவர்கள் என்றால் " நான் சட்டக்கல்லூரி மாணவர். இதில் கலந்து கொள்ளவிரும்புகிறேன்" என்றும் எழுதிப் பதியுங்கள்.

Restoration of Law and Order in the North and East Provinces of Sri Lanka - The Humanitarian Aspect

The Honourable Rohitha Bogollagama MP, Minister of Foreign Affairs, Sri Lanka

Wednesday 15 October, 5.30 – 6.45 pm

Minter Ellison Room, Level 13, Law School

173-175 Phillip St , Sydney (crn King & Elizabeth Sts) (near ST JAMES Station)

Edited by கந்தப்பு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
sydneylawschoolmaped1.gif
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரோகித போகலகாமாவின் உரையில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலோர் தமிழர்கள். அவர்கள் எதிர்க்கேள்வி கேட்டு சிறிலங்கா அரசின் பொய் முகத்தைக் கிழிக்கவே சென்றார்கள். தமிழர்களுக்கு அடுத்ததாக அதிகளவில் கலந்து கொண்டவர்கள் சிங்களவர்கள். ரோகித போகலகாமாவின் உரைக்கு ஆதரவு தெரிவிக்க சென்றார்கள். கை தட்டலுடன் ஆதரவு தந்தார்கள். விரல் விட்டு எண்ணக்கூடியளவில் வெள்ளைக்காரர்கள் கலந்து கொண்டார்கள். இதே வேளை போகலகாமாவின் உரையினைக் கேட்காது தமிழர்களில் பலர் கிங்ஸ், பிலிப் வீதி சந்திக்கும் வளைவில் இருந்து சிறிலங்காவின் தமிழர்களின் மீது மேற்கொள்ளும் இன அழிப்பை அவுஸ்திரெலியர்களுக்கு வெளிப்படுத்தியபடி கவனயீர்ப்பு நிகழ்வினை நடாத்தினார்கள். ரோகித போகலகாமா மண்டபத்தின் பின்பக்கமாக எலிசபத் வீதியினூடாக மகிழுந்தில் மகிழுந்து தரிப்பிடமூடாகச் சென்றார். இதனால் உரை முடிந்து வரும் ரோகித போகலகாமாவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க கிங்ஸ், பிலிப் வளைவிலும், எலிசபத் வீதியிலும் இருபிரிவுகளாக தமிழர்கள் சிறிலங்காவின் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளும் இன அழிப்பினை வெளிப்படுத்தியபடி கவனயீர்ப்பினைத் தொடர்ந்தார்கள். வேலை முடிந்து செல்லும் அவுஸ்திரெலியர்கள் பலர் இக்கவனயீர்ப்பினூடாக சிறிலங்காவில் நடைபெறுவதை அறிந்தவண்ணம் சென்றார்கள். 5.30 மணிக்கு உரையினை ஆற்ற வேண்டிய போகலகாமா பிந்தி வந்து உரையினைத் தொடர்ந்தார். பார்வையாளர்கள் கேட்ட பெரும்பாலான கேள்விகளுக்கு புலிகளின் மேல் பலியைப்போட்டுச் சமாளித்தார்.

அவர் இங்கு 2 புத்தகங்களைக் கொண்டுவந்து பார்வையாளர்களுக்கு கொடுத்தார். கன்பராவில் 3 புத்தகங்கள் ஊடகவியலாளருக்கு கொடுத்திருந்தார். (ஒருவேளை 3வது புத்தகம் கொடுத்து முடிந்து விட்டதோ?). அப்புத்தகத்தில் தான் விடுதலைப்புலிகளினால் கொல்லப்பட்டவர்களைப் பற்றி எழுதப்பட்டது. அதில் இராணுவத்தினாலும், ஒட்டுப்படைகளினாலும் கொல்லப்பட்ட சிலரையும் புலிகள் கொன்றதாக பொய்யாக இணைத்திருக்கிறார்கள் . உ+ம் - மாமனிதர் ரவிராஜ். மற்றையபுத்தகங்களில் ஒன்றில் சிறிலங்கா அரசின் பொய்ப்பிரச்சாரம் காரணமாக,சர்வதேச ஊடகங்களில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக வெளியிட்ட செய்திகள், கட்டுரைகள் இடம்பிடித்தன. அத்துடன் சிறிலங்காவின் ஆங்கில ஊடகங்களில் வந்த புலிகளுக்கு எதிரான ஆக்கங்கள், எட்டப்ப ஆங்கில ஊடகங்களில் வந்த ஆக்கங்களும் இருந்தன. 3வது புத்தகத்தில் தமிழ் நாட்டு ஊடகங்களில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக வந்த செய்திகள், கட்டுரைகள் இடம்பெற்றன. அதிலும் சென்றவருடம் மீனவர்கள் சிலரை விடுதலைப்புலிகள் சுட்டதாக தமிழ் நாட்டில் ஏற்பட்ட தமிழீழ உணர்வைக்குறைக்க றோவினால் புனையப்பட்ட கதைகள் அதிக இடம் பிடித்தன. றோவின் கதை கேட்டு சன் தொலைக்காட்சி உட்பட தமிழக ஊடகங்களில் பொய்யான செய்திகள் வெளிவந்தது தெரிந்ததே. ஆனால் மருத்துவர் இராமதாசின் மக்கள் தொலைக்காட்சியில் தான் சிறுவன் ஒருவனின் பேட்டி ஒளிபரப்பாகி உண்மையினை வெளிக்கொண்டு வந்ததும் தெரிந்ததே. இந்து, துக்ளக் ,தினமலர் போன்ற ஈழத்தமிழர்கள் பற்றிய பொய்யான செய்திகளை வெளியிடும் ஊடகங்களில் வந்த புலி எதிர்ப்புச் சோடனைக் கதைகளும் 3வது புத்தகத்தில் இடம்பெற்றன.

கிழக்கில் பயங்கரவாதிகளிடமிருந்து விடுவித்து தேர்தல் நடாத்தி அபிவிருத்தி செய்தது போல விரைவில் வடக்கிலும் புலிகளை அழித்து தமிழ் மக்களுக்கு உதவி புரியப்போவதாகக் கதை விட்டார் ரோகிதா போகலாகாமா. விடுதலைப்புலிகளின் தலைவருக்கு அடுத்ததாக இருந்தவர் தங்களுடன் இணைந்ததினால் அவருக்கு பாரளுமன்றப் பதவி கொடுத்ததாகவும் , மற்றைய புலிகளின் தலைவர்களும் தங்களுடன் இணைந்தால் அவர்களுக்கும் பதவி வழங்குவோம் என்றார். இப்படி இப்படித்தான் வெளினாடுகளில் சென்று பொய் கூறி பிச்சை வாங்கி தமிழர்களை அழிக்க சிங்களம் செய்து கொண்டிருக்கிறது. புலம் பெயர்ந்த தமிழர்கள் சிங்களத்தின் பொய்ப்பிரச்சாரத்தினைத் தகர்த்து உண்மையினை உலகுக்கு சொல்ல தொடர்ந்து பங்களிப்புச் செய்யவேணும்.

தொடர்ந்து தகவல்களை தருவதற்கு நன்றிகள்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரெலியாவில் இருந்து ரோகித போகலகாமா நேராக டெல்லிக்கு பயணம் செல்கிறார். அவுஸ்திரெலியாவில் விடுதலைப்புலிகளைத் தடை செய்ய அவுஸ்திரெலியா வெளிவிவகார அமைச்சர் உட்பட பல அமைச்சர்களைச் சந்தித்து பொய்யுரைத்த போகலகாமா, ஊடகவியலாளர்கள், சட்டக்கல்லூரி மாணவர்கள் போன்றவர்களையும் சந்தித்து பொய்யுரைத்தார். பொய்யுரைக்கும் போது இராஜீவ் காந்தி மரணம், விடுதலைப்புலிகளின் 2வது தலைவர் தங்களுடன் வந்து சேர்ந்து அமைச்சராகி விட்டார், வடக்கில் புலிகளை அழித்தது கிழக்கைபோல வடக்கில் அபிவிருத்தி செய்யவுள்ளோம், புலிகள் மிகவும் பயங்கரவாதிகள் என்பவற்றை தனது சந்திப்பின் போது சொல்லி வருகிறார். அத்துடன் 3 புத்தகங்களை சந்திப்பவர்களுடன் கொடுத்து வருகிறார். தற்பொழுது தமிழ் நாட்டில் ஏற்பட்ட ஈழ ஆதரவுப் போராட்டங்களினால் டெல்லியில் மாற்றம் ஏற்படுமோ என்று டெல்லிக்கு அழுத்தம் கொடுக்க சிறிலங்காவுக்கு செல்லாது நேரடியாக செல்கிறார் ரோகிதா. அவுஸ்திரெலியாவில் வைத்திருந்த 3 புத்தகங்களில் ஒன்றில் இருக்கும் தமிழ் நாட்டு ஊடகங்களில் வந்த விடுதலைப்புலிகளுக்கு எதிராக வெளிவந்த செய்திகள், கட்டுரைகளை நிச்சயம் டெல்லிக்கு கொடுத்து பொய்யுரை செய்வார்.

தகவலுக்கு நன்றி.

இந்த பொய்கள் எவ்வளவுக்கு எடுபடும் என்று தான் பார்ப்போமே...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.