Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக அரசு விலக வேண்டும்: மதுரை ஆதினம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திருவாரூர்: இலங்கை தமிழர் பிரச்சனையில் தமிழக அரசு பதவி விலக முன் வர வேண்டும் என்று மதுரை ஆதினம் கூறியுள்ளார்.

திருவாரூர் வந்த மதுரை ஆதினம் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கை தமிழர் பிரச்சனையில் மத்திய அரசுக்கு தமிழக அரசு கொடுத்துள்ள நெருக்கடி சரியான முடிவாகும்.

28ம் தேதி மத்திய அரசு சரியான முடிவு எடுக்காவிட்டால் தமிழக அரசு பதவி விலக வேண்டும்.

இலங்கை தமிழர் பிரச்சனையில் ஜாதி, மதம், அரசியல் பாராமல் அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து போராட முன் வரவேண்டும்.

இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு தேவைப்படும் உணவு, உடை, மருந்துகள் அனுப்ப மத்திய அரசு விதிகளை தளர்த்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

யாழ்பாணத்தில், திரிகோணமலையில், திருச்சேரத்தில் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற ஸ்தலங்கள் உள்ளது.

நாடு முழுவதும் தீவிரவாதம் அதிகரித்து வருகிறது. வெளியில் செல்லும் பொது மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. இதை அரசு கட்டுப்படுத்த முடியவில்லை.

சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகள் ஆகியும் இன்னும் அமைதி ஏற்படவில்லை. மூத்த அரசியல்வாதிகள், நல்ல சிந்தனையாளர்கள், முக்கிய தலைவர்களுக்கு பாதுகாப்பில்லாத நிலை உள்ளது.

கோயில் நிலங்களில் குடியிருப்பவர்களுக்கே பட்டா தர வேண்டும் என்பதை ஒரு போதும் மதுரை ஆதினம் ஏற்றுக் கொள்ளாது.

ஆதினங்கள் கீழ் உள்ள பெரும்பாலான கோயில்கள் பணம் இன்றி திருப்பணிகள் செய்ய முடியாத நிலையில் உள்ளது. மதுரை ஆதினத்திற்கு சொந்தமான 4 கோயில்கள் ரூ 4 கோடி ரூபாய் இல்லாததால் திருப்பணிகள் நடத்த முடியால் உள்ளது.

தமிழக அரசு மத நல்லிணக்கத்திற்காக தனியாக ஒரு அமைச்சகத்தை ஏற்படுத்த வேண்டும். அத்துறைக்கு திருமுறை, திருவாசகம், குரான், பைபிள் தெரிந்தவரை அமைச்சராக நியமிக்க வேண்டும் என்றார் அவர்.

http://thatstamil.oneindia.in/news/2008/10...of-tn-govt.html

இந்த வேண்டுகோள் புலிகளை ஆயுதங்களை கைய்யளித்துப் போட்டு பேச்சுவார்த்தைக் வாருங்கள் எண்ட மாதிரி கிடக்கு.

ஆதீனங்கள் நல்ல விசுவாசமாகத்தான் இயங்கீனம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த வேண்டுகோள் புலிகளை ஆயுதங்களை கைய்யளித்துப் போட்டு பேச்சுவார்த்தைக் வாருங்கள் எண்ட மாதிரி கிடக்கு.

ஆதீனங்கள் நல்ல விசுவாசமாகத்தான் இயங்கீனம்.

<<<

குறுக்ஸ் அண்ணை,

எதை வைச்சு இப்படிச் சொல்லுறீங்கள்?!!!.....

கருணாநிதி அரசிலும் பார்க்க nஐயலலிதா அரசு இருந்திருந்தால் இந்தளவிற்கு ஈழ ஆதரவு உணர்வலைகள் சிறிது சிறிதாகவேனும் பலம் பெற்றிருக்குமா?

கலைஞர் மத்திய அரசின் பங்காளி கட்சியாக தனது அங்கத்துவர் பலத்தை வைத்து சில அழுத்தங்களை கொடுக்க உள்ளிருந்து முயற்சிப்பது பலன் தருமா அல்லது வெறும் எதிர்க்கட்சியாக அல்லது அரசியல் கட்சியாக இருந்து குரல்கொடுப்பதா அதிக கனதி கொண்டது?

மறுவளத்தில் தலையங்கம் நல்ல நோக்கத்தோடுதான் தீட்டப்பட்டது என்றே வைத்துக் கொள்ளுவம். செய்தியின் தலையங்கம் கொடுக்கும் எதிர்பார்ப்பிற்கு ஏற்றமாதிரி உள்ளடக்கத்தில் ஈழத்தமிழர் அவலம்பற்றி சொல்லப்பட்டிருக்கா?

ஏறத்தாள 10 வசனங்களைக் கொண்ட செய்தியில் எத்தனை வசனங்கள் ஈழத்தில் மக்களின் அவலங்கள் பற்றி சொல்கிறது? 1 அல்லது 2? அதில் எந்தளவிற்கு தாயகத்தில் ஈழத்தவர்களின் அவலங்கள் பற்றிய விபரங்கள் அடங்கியிருக்கிறது?

யாழ்பாணத்திலும் திருகோணமலையிலும் திருஞானசம்பந்தர் ஒண்டுக்கிருந்த இடங்கள் பற்றி இருக்கும் அக்கறை இருக்க வீடின்றி மாரிகால மழைக்குள் தவிக்கும் 3 லட்சம் மக்கள் பற்றி இருக்கா? இல்லை சிறீலங்கா பொருளாதார மருத்தவத்தடை பற்றிய இருக்கா? இல்லை சிறீலங்காவின் இராணுவ இயந்திரத்தால் கொல்லப்படும் மக்கள் பற்றி இருக்கா?

இதில் இருந்து அவர்களிற்கு அங்குள்ள மக்களின் அவலங்கள் பற்றி கொடுக்கும் முன்னுரிமை? சந்தர்ப அரசியல்?

சரி ஈழத்தில் உள்ளவர்களைத்தான் புலிகள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருப்பவர்கள் தடை செய்யப்பட்ட அமைப்பு என்ற சட்டசிக்கல்கள் இருக்கு என்று விடுவோம். அதிகம் வேண்டாம் தமிழ்நாட்டில் அகதி முகாம்களில் உள்ள அகதிகளிற்கு எந்தளவிற்கு உதவியிருக்கிறார்கள்? உடைந்த கோவில்களை திருத்தும் திருப்பணிக்கு 4 கோடி நிதி தேவையாம்.

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதி அரசு விலத்தி கோவணத்தோடு நின்று ஆதரவு தரச் சொல்வது தேவையற்றது. அது சில சக்திகளுக்கு துணையாகவும் போய்விடும்.

மதுரை ஆதீனம் தொடக்கம் அனைத்து தரப்பினரின் ஆதரவும் தேவையாகும். யாரையும் பகைக்க வேண்டிய தேவையில்லை. தவிரவும் மதுரை ஆதினம்கருணாநிதி அரசுக்கு எதிராக எவ்வித கருத்தும் சொல்லவில்லை. ஆனால் குறுக்கார் ஏன் இதற்குள் சிராப்புத் தேடும் வேலையைச் செய்கின்றார் என்றால், அவருக்குள்ள மதம் பக்றறிய கடுப்பு வருத்தமே காரணம். இதற்குள்ளும் தங்களின் வெறியைத் தீர்க்கும் அற்பப்பிராணிகள்.

நான் ஆட்சியில் இருந்தால் வைகோ- சீமான்- அமீருக்கு சிறை: ஜெயலலிதா எச்சரிக்கை

//கருணாநிதி ஆட்சிக்கு வந்தாலே வன்முறை வெறியாட்டம், பயங்கரவாதம், தீவிரவாதம், இந்திய இறையாண்மைக்கு எதிரான போக்கு ஆகியவை தலைவிரித்து ஆடும் என்பதைத் தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். அதே போன்று, தற்போதைய கருணாநிதியின் மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியிலும், இந்திய இறையாண்மைக்கு சவால் விடும் சம்பவங்கள் அனைத்தும் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கின்றன.

தமிழகத்தில் அமைதி நிலவவும், இந்தியாவின் இறையாண்மை காக்கப்படவும், பயங்கரவாத இயக்கமான விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட வேண்டும் என்று 1991 ஆம் ஆண்டு நான் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, மத்திய அரசை வற்புறுத்தினேன்.

என்னுடைய பெருமுயற்சியின் காரணமாகத் தான் விடுதலைப் புலிகள் இயக்கம் 14.5.1992 அன்று மத்திய அரசால் தடை செய்யப்பட்டது. அந்த இயக்கத்தின் மீதான தடை இன்று வரை தொடருகிறது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில், நிர்ணயிக்கப்பட்ட நீதிமன்றத்தால், பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளியாக வி.பிரபாகரன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இப்படிப்பட்ட தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவான செயல்கள் தமிழ்நாட்டில் தற்போது மீண்டும் நடைபெற்று வருகின்றன.

//

http://www.puthinam.com/full.php?2eWStB00b...d421OG2b02mTR3e

ஜெயலலிதா, சோ ராமசாமி, இந்து ராம் மற்றும் சில பூனைகள்

(The dangers of bharamins chauvinism)

பொன்னிலா

ஈழமும் தமிழகமும் ஒன்றிலிருந்து இன்னொன்றாக பிரிக்க முடியாத கலாசாரப் பின்னணியைக் கொண்ட இரு வேறு நாடுகள். அதாவது ஒரு கடல் இரு கரைகள் (நன்றி சா.பாலமுருகன்) அவ்வளவுதான்.

கடந்த பத்து ஆண்டுகளாக வெள்ளம் பாத்தியில் ததும்பிக் கொண்டிருந்தது. இப்போது அது உடைந்து ஓடிக் கொண்டிருக்கிறது.... காலம் கிழித்து விட்ட இந்த பத்தாண்டுகள் இடைவெளியில் நீங்கள் நீங்களாகவே இருக்கிறீர்கள்; நாங்கள் நாங்களாகவே இருக்கிறோம் என்பதைக் காலம் இன்னுமொரு முறை நீரூபித்திருக்கிறது.

நீங்கள் இது வரை காட்டிய புலிப்பூச்சாண்டியையே மீண்டும் காட்டுகிறீர்கள். ஜெயலலிதா, ‘சோ’ ராமசாமி, இந்து ராம், சுப்ரமணியன் ஸ்வாமி நீங்களெல்லாம் யார்? யாரின் நலனுக்காக இப்படி வரிந்து கட்டிக் கொண்டு தமிழர்கள் மீது உங்கள் கொதிப்பைக் கொட்டுகிறீர்கள்? இலங்கை தமிழர் பிரச்சனையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலையிடும் வரை கலைஞர் பட்டும் படாமலுமே இருந்தார். காரணம் இரண்டு முறை அநியாயமாக அவரது ஆட்சி கலைக்கப்பட்டது. எவ்வித சம்பந்தமும் இல்லாமல் திமுக பெரும் நஷ்டத்தை சந்தித்திருக்கிறது. ஆனாலும் இன்று மீண்டும் தன் முழு சக்தியையும் செலவழிக்க கலைஞர் வீதிக்கு வந்திருக்கிறார். தன் அதிகாரத்தை இன்னொரு முறை ஈழ மக்களுக்காக துறக்க கலைஞர் உணர்வுப்பூர்வமாய் வந்திருக்கிறார்.

கம்யூனிஸ்டுகளின் உண்ணாவிரதத்துக்கு திமுக அழைக்கப்படாத சூழலில் அழைத்து, வருவதாக ஒப்புக் கொண்ட ஜெயலலிதா கடைசி நேரத்தில் காலை வாரினார். ‘‘ஈழத்தமிழர் படுகொலைக்கு மத்திய அரசே மௌன சாட்சி’’ என்று ஈழ மக்கள் மீது பரிவு காட்டினார். ஆனால் ஒரு இரவுக்குள் காட்சி மாறியது. மறுநாள் போய்ஸ்கார்டனில் நடந்தது அந்தச் சந்திப்பு. சோ ராமசாமியும் ‘ஜெ’வும் போயஸ் கார்டனில் சந்தித்துக் கொண்டனர். மறுநாளே ஜெயலலிதாவின் குரல் மாறுகிறது. கருணாநிதி பதவி விலக வேண்டும். மத்திய ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் என்று அம்மா சாமியாடியது.

தொடர்ந்து 14ஆம் தேதி சர்வக் கட்சிக் கூட்டத்தை அறிவிக்கிறார் கலைஞர். அன்று காலையில்தான் இந்து பத்திரிகை தன் வரலாற்றுச் சிறப்பு மிக்க மாலினியின் கட்டுரையை வெளியிடுகிறது. அனைத்துக் கட்சி கூட்டத்தில் எடுத்த முடிவின்படி அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜ்யசாபா உறுப்பினர்களும் பதவி விலகுவார்கள் என்றார் கலைஞர். வைகோ தான் எங்கே ஈழ விவகாரத்தில் தனிமைப்பட்டு விடுவோமோ என்று பயந்து தனது எம்பிக்களும் பதவி விலகுவார்கள் என்று அறிவிக்கிறார்.

மத்திய அரசுக்கு தமிழகம் என்ன நெருக்கடியைக் கொடுக்க முடியுமோ அந்த நெருக்கடியை கொடுக்கிறார் கலைஞர். உடனே ஜெயலலிதா சொல்கிறார். ‘‘இலங்கை அரசை போரை நிறுத்தச் சொல்லி இந்திய அரசு உத்தரவிட முடியாது. அது புலிகளுக்கு ஆதாயமாகப் போய் முடியும்’’ என்கிறார். முந்தின நாள் ஈழ மக்களுக்கு எதிரானதாகத் தெரிந்த போர் ஒரு இரவுக்குள் புலிகளுக்கு எதிராக திரும்புகிற வித்தையை நாம் போயஸ்கார்டனில் மட்டுமே கற்றுக் கொள்ள முடியும். சந்திப்புகள் போரை தங்கள் சுயலாபத்துக்கு மாற்றுகிறது.

ஹிந்து பத்திரிகை மாலினி பார்த்தசாரதியின் கட்டுரையும் ஜெயலலிதாவின் இந்த அறிக்கைகளும் ஒரு புள்ளியில் இணைகின்றன. அந்தப் புள்ளி பார்ப்பனீயம் என்னும் இந்திய தத்துவ மரபில் இருக்கிறது. ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் சந்திரிகா அம்மையார் அடிக்கடி சென்னைக்கு வருவார். இருவரும் சந்தித்துப் பேசுவார்கள். இலங்கை அதிபரான சந்திரிகாவுக்கு பல முறை போயஸ்கார்டனில் விருந்து சமைக்கப்பட்டிருக்கிறது.

சந்திரிகாவின் கணவர் ஹிந்து ராமுக்கு நண்பர். சந்திரிகாவை போயஸ் கார்டனுக்கு அழைத்துப் போனது ஹிந்து ராம். அன்றிலிருந்துதான் தமிழகத்தின் பிரதான திட்டமான சேதுக் கால்வாய் திட்டத்தை தடுக்கப் போராடினார் ஜெயலலிதா. இதே சேதுக் கால்வாயை சந்திரிகா அம்மையாரும் எதிர்த்தார். ஜெயலலிதாவும் சந்திரிகாவும் நட்புக்கூட்டணி போட்ட காலத்தில்தான் (2006ல்) ஹிந்து ராமிற்கு இலங்கை அரசால் வழங்கப்படும் மிக உயரிய விருதான ‘சிங்கள கேல்’ விருது சந்திரிகா அம்மையாரால் வழங்கப்பட்டது. அதற்கு நன்றிக் கடனகாக இந்து தன் பார்ப்பன பாசிசத்தை வெளிப்படுத்துகிறது என்பதை புரிந்து கொள்வதில் நமக்கு சிரமம் ஒன்றும் இல்லை.

உண்மையில் தமிழகத்தின் நாற்பது எம்பிக்களும் பதவி விலக வேண்டும் என்பது அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து எடுத்த முடிவு. ஆனால் ‘ஜெ’ கலைஞரை தனிமைப்படுத்தி தாக்க முயற்சிக்கிறார். இவர்கள் அனைவரும் ஒன்றிணையும் புள்ளி பார்ப்பன பாசிசம் அல்லாமல் வேறென்ன தோழர்களே? தமிழக எம்பிக்கள் தங்கள் ஆதரவை விலக்கிக் கொள்ளும் பட்சத்தில் என்ன நடக்கும். மத்தியில் ஆட்சி கவிழும் அல்லது திமுக மத்திய அரசில் இருந்து ஒதுங்கிக் கொள்ளும். இந்த இரண்டில் ஏதோ ஒன்று நடக்கும். ஈழத்தமிழர் பிரச்சனையில் என்ன நடக்கும்?

எதுவும் நடக்காது.

உலகிலேயே இன்று பாசிச அரசாக திகழும் ராஜபக்ஷே அரசு இந்தியாவை தூக்கி எறிந்து விட்டு சீனாவின் பக்கமும் பாகிஸ்தான் பக்கமும் சாய்வது ஒரு பக்கம் இருந்தாலும் உதைக்கிற தம்பியை அண்ணன் எப்படி அணுகிறான் எனப் பார்ப்போம்.

நாம் மீண்டும் மீண்டும் சொல்கிறோம். இலங்கையை அது சிங்கள மக்கள் தமிழ் மக்கள் வாழும் பகுதியாக இருந்தாலும் போரற்ற பகுதியாக மாற்ற வேண்டும். ஈழத் தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்படும் போரை இலங்கை அரசு உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்கிறோம். ஆக்ரமிக்கப்பட்டு சிங்கள சிப்பாய்களின் பூட்ஸ் கால்களில் மிதிபடும் எமது விவசாய நிலங்களில் இருந்து ராணுவம் வெளியேற வேண்டும் என்கிறோம். அதுதான் இந்தியாவுக்கு தமிழகம் வைக்கும் நிபந்தனை அல்லது வேண்டுகோள்.

ஆனால் இந்தியா இலங்கையுடன் கெஞ்சுகிறது, எப்படி தெரியுமா? ‘‘யுத்தத்தால் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பது இந்தியாவுக்கு கவலையை ஏற்படுத்துகிறது. போரில் மக்கள் எவ்வகையிலும் பாதிக்கப்படக் கூடாது. மக்களுக்கு பாதகம் இல்லாமல் ஒன்றுபட்ட இலங்கைக்குள் பிரச்சனையை பேசித் தீர்க்க வேண்டும்’’ என மீண்டும் மீண்டும் கெஞ்சுகிறது இந்தியா.

சரத்பொன்சேகா சொல்கிற ஒன்றுபட்ட இலங்கை சிங்கள மக்களுக்கே சொந்தமாக இருக்கும்போது தமிழ் மக்கள் தங்களுக்கான ஒரு சுதந்திர ஈழத்தைக் கோருவதில் என்ன தவறு? ஒன்று அதைக் கண்டிக்கிற அரசியல் நேர்மை இருக்க வேண்டும் இல்லை என்றால் ‘‘போரை நிறுத்துங்கள் பிரச்சனையை பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்ல வேண்டும்’’ இந்த இரண்டு அரசியல் நேர்மையும் அற்ற இந்தியா இலங்கையில் தலையிட மாட்டோம் என்று சொல்லிக் கொண்டே ஆயுதங்கள் கொடுக்கிறபோது தெற்காசியாவில் பாசிசத்துக்கு நீங்கள் துணை போகிறீர்கள் என்றுதானே அர்த்தம்.

http://keetru.com/literature/essays/ponnila.php

தோழர்களே! நமக்கெல்லாம் இந்த நாட்டில் பூர்வீக இடமொன்று உண்டு. மலையாளிக்கும், தெலுங்கர்களுக்கும், கன்னட மக்களுக்கும், கூர்க்காக்களுக்கும், தமிழர்களுக்கும் ஓர் இடம் உண்டு. கலாசார ஓர்மைகளுடன் வாழவும் மொழியைப் பேணவும் ஒரு மாநில அமைப்புக்குள் முரண்பாடுகளோடு இருந்து கொண்டே இந்த தேச நலனில் அக்கறை பேணுகிறோம். ஆனால் இந்த நாட்டில் பார்ப்பனர்களுக்கான இடம் எது? எந்த மாநிலம் உங்கள் மாநிலம்? உங்கள் மொழி எந்த மாநிலத்தில் பெருமளவு மக்களால் பேசப்படுகிறது? என்றால் இந்த கேள்விகளுக்கு விடையாகத்தான் நீங்கள் இந்துப் பாசிச கலாசார தேசியத்தை கட்டமைக்கிறீர்கள். அதற்குத் தோதாக தேசிய இனங்களின் சிறைச்சாலையான இந்தியா உங்களுக்கு வாய்த்திருக்கிறது. சிறைகள் உடைவது இயல்பு வெலிக்கடை சிறையைப் போல....

அப்படி ஒரு வேளை இந்தியா சிதறுமானால் அழிந்து போவது பார்ப்பனர்கள் மட்டுமே... இப்போது உங்களுக்குப் புரிகிறதா, ‘ஜெ’ ஏன் மதமாற்றத் தடைச் சட்டத்தை கொண்டு வந்தார் என்பதும், காஷ்மீர் பண்டிட்களுக்கு ஆதரவாகப் பேசுகிறார் என்பதும். இந்து ராம் ஏன் ஈழத்துக்கும் காஷ்மீருக்கும் முடிச்சுப் போடுகிறார் என்பதும் என்ன காரணத்திற்காய் அவருக்கு சந்திரிகாவின் தலைமையிலான அரசு விருது கொடுத்தது என்பதும். அக்டோபர் 14ஆம் தேதி மாலினி பார்த்தசாரதிக்கு ஏன் கொதிப்பு வருகிறது என்பதும் உங்களுக்குப் புரிகிறதுதானே?

ஈழத்தமிழர்களுக்காக எழுந்திருக்கும் இந்தக் கொந்தளிப்புகள் தேர்தல் நேர ஸ்டன்ட் என்றிருக்கிறார்கள் சிங்களத் தலைவர்கள். ஜெயலலிதாவும், வைகோவும் வேறு வேறு நிலைப்பாடுகளை எடுத்திருப்பதாக பத்திரிகையாளர்களிடம் சந்தோசமாகச் சொல்கிறார்கள் சிங்களத் தலைவர்கள். அவர்கள் அப்படி சொல்லும் நிலையில்தான் வைகோவின் அரசியலும் இருக்கிறது என்பது வேறு கதை. ஆனால் இப்போது நம்முன்னால் திரண்டிருக்கும் கேள்விகள் இரண்டு.

ஒன்று இந்த கொந்தளிப்புகள் உண்மையிலேயே தேர்தல் நேர ஸ்டண்ட் மட்டும்தானா?

இரண்டு இந்த கொந்தளிப்புகளை எத்தனை காலத்துக்கு எடுத்துச் செல்லப் போகிறோம்.

இவைகள் சிக்கலான கேள்விகள். ஆனால் விடை கண்டாக வேண்டிய கேள்விகள். மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகள், வெளியுறவுக் கொள்கைகள் (அமெரிக்காவின் ராணுவக் கொள்கைதான் இன்று இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை) கூட இன்று நேரடியாக மாநில அரசுகளைப் பாதிக்கும் சூழலில் தமிழக அரசு மின்வெட்டு, விலைவாசி உயர்வு, போன்ற எளிய மக்களை பாதிக்கும் சிக்கல் சுழலில் சிக்கியிருக்கிறது. அது மக்களையும் பாதிக்கிறது. ஆனால் இதற்கு முழுக்க முழுக்க மாநில அரசு மட்டுமே பொறுப்பேற்க முடியாது. மக்கள் விரோத காங்கிரஸ் அரசுதான் இந்த விலைவாசி உயர்வுகளுக்கு காரணம். தமிழகத்தில் கொண்டு குவிக்கப்படும் அந்நிய முதலீடு மக்களை ஏற்றத் தாழ்வு என்னும் வகிடில் நின்று இரண்டாகப் பிரிக்கிறது என்பதை கலைஞர் அரசு உணர வேண்டும்.

அதே சமயம், மீண்டும் தமிழக அரசியலில் ஜெயலலிதா என்கிற பார்ப்பன பாசிஸ்ட் ஆட்சிக்கு வருவார் என்றால் இதே விலைவாசியையும், மின்வெட்டையும் தமிழ் மக்கள் சந்திக்க நேரிடுவதோடு மக்கள் விரோத ஜனநாயகமற்ற ஒரு பாதையில் தமிழகம் இன்னொரு முறை பயணிக்க நேரிடும். ஏனென்றால் கருத்துரிமை, பேச்சுரிமை, வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்ட காலங்களை ஜெயலலிதாவின் கடந்த ஆட்சி வரை நாம் காண முடியும். திரட்சியான மக்கள் போராட்டங்களின் போது, மக்களுக்கு எதிரான தவறான திட்டங்களை தன்னுடைய ஆட்சியில் கலைஞர் ஒத்திப் போட்டே வந்திருக்கிறார்.

ஆனால் ஜெயலலிதாவின் ஆட்சியில் இவைகள் எதுவும் மறுக்கபட்டு ஜனநாயகமற்ற ஏதேச்சதிகாரமான நடைமுறைகளை மட்டுமே நாம் அனுபவிக்க நேர்ந்தது. காலமும் சூழலும் கனிந்துள்ள இந்த வேளையில் நாம் கலைஞரின் கரங்களை வலுப்படுத்த வேண்டும். ஈழத் தமிழர்களுக்காக.இல்லை என்றால் நாம் அழிந்துதான் போவோம். முதலில் அவர்கள் பின்னர் நாம்.

- பொன்னிலா

விடுதலைபுலிகள், தீவிரவாதம், ஈழத்தமிழர் நலன், வாழைக்காய் பஜ்ஜி, கத்தரிக்காய் சாம்பார் என்று மழுப்பாமல்

செல்வி. ஜெயலலிதாவுக்கு தைரியம் இருந்தால்

தமிழீழ விடுதலைக்கு ஆதரவு இல்லை என்று தெள்ளத்தெளிவாக அறிவித்து விட்டு

தமிழகத்தில் தேர்தல்களை சந்திக்கட்டும்!!!

செல்வி. ஜெயலலிதா அவர்களே உங்களுக்கு அறிவுரை என்ற பெயரில் போதை மருந்து கலந்த விச ஊசி ஏத்தும் சோ ராமசாமியும், இந்து ராமும், கோமாளி சுவாமியும்

தேர்தல் என்று வரும் போது ஒரு 100 வாக்குகளாவது தனித்து நின்று பெறக் கூடியவர்களா என்பதை சிந்தித்து பாருங்கள்.

சோ ராமசாமி போன்றவர்களின் அறிவுரைகள் உங்களை அரசியல் அஸ்தமனத்திற்கு அழைத்து செல்லவே உதவும்.

ஒரு ரஜினிகாந்தை முதல்வர் ஆக்கும் ஆசையில் அவருக்கு அரசியல் பாடம் எடுத்து உங்களின் முதுகில் குத்த திட்டமிட்ட சோ ராமசாமியின்

ஆலோசனையின் படி நீங்கள் செயற்பட தொடங்கினால், அடுத்த தேர்தலில் அடிக்க இருக்கின்ற அரசியல் அலையில்

நீங்கள் அப்படியே அடித்து செல்லப்படுவீர்கள்.

கடந்த லோக்சபா தேர்தலில் உங்களுக்கு கிடைத்த மறக்க முடியாத தோல்வியை மீண்டும் ஒருமுறை வாங்கித்தரவே

திரு. சோ. ராமசாமி கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்.

இன்று சோ.ராமசாமி போன்றவர்கள் உங்களுக்கு எடுக்கின்ற அரசியல் பாடங்கள்

வேதங்கள் சொல்கின்ற அரசியல் தர்மங்களுக்கு முற்றுமுழுதாக

விரோதமானது என்பதை வேதங்களை முறைப்படி கற்ற என்னால் நிரூபிக்க முடியும்.

அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும் என்பதை மறந்து விடாதீர்கள்!!!

Edited by vettri-vel

அம்மையாரே உங்கள் தலையில் நீங்களே மண்ணைவாரி போட்டுக்கொள்ள தயாராகி விட்டீர்கள் என்று உங்கள் அறிக்கையை வாசித்து தெரிந்து கொண்டேன்.

சோ என்று பெய்யும் மழையில் பூவொன்று சிக்கி சீரழியப் போகிறது!!!

விநாச காலே விபரீத புத்தி என்பது இதைத் தான்

Edited by vettri-vel

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.