Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கப்பல் தகர்ப்புக்கு ஈ.பி.டி.பி எதிர்ப்பு ஹர்த்தாலுக்கு அழைப்பு.

Featured Replies

காங்கேசன் துறை கடற்பரப்பில் கடற்புலிகளின் கரும்புலிகளால் தாக்கியழிக்கப்பட்ட இரு கப்பல்கள் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து ஹர்த்தால் அனுஸ்டிக்கக் கோரி அழைப்பு விடுத்து துரோகக் கும்பல் ஈ.பி.டி.பி நேற்று அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

யாழுக்கு அத்தியாவசியப் பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களையும் கப்பல் மூலமாகவே அனுப்பப்படுகின்றன. யாழ் குடாவிற்கு அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது எனவும், விலையுயர்வு ஏற்பட்டு வருகின்றது எனவும் வெறும் வாய்ப்பிரசாரம் செய்தவர்க்ள மக்களின் அவலங்களை எப்போதும் வேடிக்கi பார்த்ததே வரலாறு.

ஈ.பி.டி.பியாகிய நாம் வேடிக்கை பாhக்காமல் மக்களின் துயரங்களைப் போக்கும் ஆக்கபூர்வமான முயற்சிகளை அயராது எடுத்ததன் பயனாக பொருட்களின் தட்டுப்பாட்டையும், அதீத விலையுயர்வையும் கட்டுப்படுத்தியுள்ளோம். உணவுப் பொருட்கள் கட்டுமானப் பொருட்கள் அத்தியாவசியப் பொருட்கள் என்பனவற்றை தாராளமாக யாழ். குடா நாட்டு மக்களுக்குக் கிடைக்கச் செய்தோம். அதுவும் கொழும்பு விலயில் பொருட்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் நாம் பாடுபட்டோம்.

யாழிற்கு தரை வழிப்பாதையை மூடி புலிகள் தடுத்து நின்றபோதும், கடல் மார்க்கமாக பயணத்தினையும் தாக்குவோம் எனப் புலிகள் அச்சுறுத்தியிருந்த போதும் அவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல் மக்களுக்காக தேவைகளுக்கு முன்னுரிமையளித்த நாம் மக்களுக்காகச் செயற்பட்டோம், நியாயமானதும், சாத்தியமானதும் எமது இந்த முயற்சிக்கு, மஹிந்த உட்பட் அரச நிர்வாகத்தினரும் தமது ஒத்துழைப்பை வழங்கியிருந்தனா.

இத்தகைய நெருக்கடி மிகுந்த நேரத்தில் புலிகள் இன்று இரண்டு உணவுக் கப்பல்களை தாக்கியுள்ளனர். தாக்கப்பட்ட இரு கப்பல்களிலும் அரிசி சீனி கட்டடப் பொருட்கள் சீமெந்து ஆகிய பொருட்களே ஏற்றி வரபடப்டிருந்தன. அதுவும் அரிசியைக் கொழும்பு விலையில் கிடைக்கச் செய்வதற்கே ஏற்பாடுகள் செய்யபட்டிருந்தன. :rolleyes:

மக்களே புலிகளின் இந்த அழிவுப் பாதையிலிருந்து நாம் விடுபட வேண்டும். புலித்தலைமை தமக்குத் தாமே வெட்டிய குழியில் மக்ளையும் பலியிடத் துணிந்து விட்டது அதற்கு நாம் ஒரு போதும் இடமளிக்க முடியாது. புலிகளின் இத்தகைய பாசிச மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்ப்போம் எமது எதிர்ப்பையும், கண்டனத்தையும் உலகுக்கு எடுத்துககாட்ட உரத்துக் குரல் கொடுப்போம் எமது கண்டனத்தை வெளிப்படுத்த வன்முறையைக் கையில் எடுக்காமல், ஹர்த்தால் ஒன்றை அனுஷ்டிப்பதன் மூலம் வெளிப்படுத்துவோம். நாளைய தினம் (23ம திகதி) யாழ். குடாநாடடில் சகல பகுதிகளிலும் பூரண ஹாத்தால் அனுஸ்டிப்போம்.

அன்றைய தினம் கடைகள், வேலைத்தலங்கள், திணைக்களங்கள், பாடசாலைகள் என அiனைத்தையும் மூடி புலித்தலைமையின் மக்கள் எதிர்ப்பு விரோதச் செயலுக்கு எது ஒன்றுபட்ட எதிர்ப்பை வெளிக்காட்டுவோம்.. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி சுடர் ஒளி

துரோகிகளே யார் ஏ9 பாதையை மூடி தமிழர்களை பட்டினிச்சாவுக்குள் தள்ளியது புலிகளா அல்லது நீங்கள் தொங்கும் சிங்கள இனவாதிகளா?

கொழும்பில் சிமேந்து 650யாக இருக்க யாழில் 1750யாக விற்பது ஏன்?

கொழும்பில் அரிசி கிலோ 70 -80 ரூபாய். யாழில் 140ரூபாய் இது தானா கொழும்பு விலைக்குக் கொடுக்கும் இலட்சனமா?

அது சரி அங்காடிகளில் பணம் கொடுத்துப் பொருள் வாங்கினால் தானே துரோகிகளே உங்களுக்கு விலைகளும் நிலைமையும் புரியும். துப்பாக்கி முனையும் வெள்ளை வானும் தானே உங்கள் வயிற்றை நிரப்புகிறது.

யாரை ஏமாற்றுகின்றீர்கள். அது சரி யாழ் மக்கள் ஆக்கிரமிப்பாளனை துரத்த முன் உங்களை அழிக்க வேண்டும் என துடிப்பது ஏதற்காக?

உங்கள் வெள்ளை வான் கலாச்சாரம் அகிம்சாவாதத்தின் ஓரங்கமா?

எது எப்டியிருப்பினும் ஆக்கிரமிப்பாளனின் பொய்யுரையைத் தகர்தது கப்பல் தாக்கி அழித்ததை ஒப்புக் கொண்டமைக்கு எம் மகிழ்சியையும் நன்றிகளும்.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் தாக்குதலால் சுண்டெலிகளுக்கு இப்போது கிலி பிடித்து ஆட்டுகிறது.

வெள்ளைவான் புகழ் ஒட்டுக்குழு கொள்ளைக்காரன் டக்கிளசின் எஜமானர் விசுவாசம் இமயத்தின் உச்சியைத்தொடுவதைப் பார்க்க புல்லரிக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

வடமராட்சியில் உள்ள சில வர்த்தக நிலையங்களுக்கு வந்து ஈபிடிபியினர் மூடச்சொல்லி மிரட்டி விட்டுச் சென்றாக உறவினர் ஒருவர் சொன்னார்.

உடனடியாக எல்லாளன் படையும் "ஏ9 பாதையை மூடி தங்கள் உழைப்பிற்கு வழிதேடிக் கொண்ட ஈ.பி.டி.பி க்கு எதிராக" ஒரு கர்த்தாலை இன்றே அறிப்பதன் மூலம் மக்களை சிக்கலில் இருந்து பாதுகாக்க முடியும்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

<வேற்றுமையில்லா ஒற்றுமையிருந்தால் இப்படி நேருமோ சோகம்>

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் ஈ.பி.டி.பி யின் தினமுரசு பத்திரிகையும் சேர்ந்து தாண்டுட்டுதோ??? :rolleyes::o

  • கருத்துக்கள உறவுகள்

இதே வாய்கள்.. 90 - 95 வரை சொன்னவற்றை எண்ணிப் பார்க்கிறேன்..

கொழும்பில் இருந்து றுகண புறப்படுகிறது...

இதே யாழ்ப்பாண மக்கள் அன்று விடுதலைப்புலிகளின் நிர்வாக யாழ்ப்பாணத்தில் வசிக்கின்றனர்...

கெளரவ அமைச்சர் அத்தியடி குத்தியன் கத்துகிறார்.. புலிகள் றுகண கப்பலில் போகும் பொருட்களை கொள்ளையடிக்கப் போகின்றனர்.. எனவே கப்பலை நடுக்கடலில் நிறுத்துங்கள்...

பருத்தித்துறை துறைமுகத்துக்கு வரவேண்டிய கப்பல்.. நடுக்கடலில் நங்கூரமிட்டு நிற்கிறது..

ஆயிரக்கணக்கான தபால் பொதிகள் கூட.. அதில் கிடக்கிறது..! நேர்முகத் தேர்வுக்கான கடிதங்கள்.. வெளிநாட்டுப் பல்கலைக்கழக விண்ணப்பங்களுக்கான படிவங்கள்.. ஏன்.. பாடசாலைகளுக்கான பரீட்சைப் பெறுபேறுகள் எல்லாமே கிடக்கின்றன..!

யாழ்ப்பாண சமூகம்.. கேட்கிறது.. புலிகள் கொள்ளையடிப்பதாகப் புலம்புபவர்களே.. கப்பலை சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கக் கொடியுடன்.. அதன் மேற்பார்வையின் கீழ் இயக்குங்கள். பொருட்களை இறக்குங்கள். களஞ்சியப்படுத்துங்கள். புலிகளைச் சாட்டி மக்களைப் பட்டினி போடாதீர்கள்..!

அது செவிடக் காதில் ஊதிய சங்காக.. கடல் கொத்தலிப்புக் காரணமாக.. பொருட்களை இறக்க முடியவில்லை. அறிக்கைக்கு பதிலறிக்கை பிறப்பிக்கிறது.. சிங்கள அரசும்.. அதன் வால்பிடித்தே வாழ்ந்துவிட்ட சொறி நாய்க்கூட்டமும்.

ஆனால்... பிறிதொரு முனையில்.. அதே.. கடல்கொத்தலிப்புக்குள்.. நயினாதீவுக்கும்.. ஊர்காவற்துறைக்கும்.. அத்தியடிக் குத்தியடின் சொந்தப் பணத்தில் வாங்கிய உல்லாசக் கப்பல் போகிறது. ஆனால்.. அது நடுக்கடலில் விடுதலைப்புலிகளால் வழிமறிக்கப்பட்டு.. தடுத்து வைக்கப்படுகிறது.

அமைச்சர் மட்டுமல்ல.. ஜனாதிபதியும் பொங்கி எழுகிறார்கள்.. "பயங்கரவாதிகள்.. மக்களின் போக்குவரத்தைச் சீர்குலைக்கின்றனர்"...

அத்தோடு.. காலையில்... உதயனைப் படிக்கிறேன்.. றுகண.. நடுக்கடலில்.. தத்தளிப்பு. பொருட்கள் இறக்க இருவார காலம் ஆகுமாம். களஞ்சியத்தில் கையிருப்பு தீரும் நிலை.... என்று சொல்லி மேலும் தொடகிறது...

"இன்று அதிகாலை... கிளாலியில் கடற்படை - கடற்புலிகள் சண்டை. மக்கள் போக்குவரத்தை தடுக்க முனைந்த கடற்படையை கடற்புலிகள் விரட்டியடிப்பு..." இங்கு அமைச்சர் அத்தியடிக் குத்தியன்.. என்ன முழு சிங்கள தேசமும்.. மெளனம்..!

ஆக.. அந்நிய இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் மக்கள் வாழ்வதானால்.. இராணுவத்துக்கு எல்லா வழங்கலும் செய்து கொண்டு தாமும்.. வாழலாம். அதுவே ஜனநாயகம்.. தூய.. மக்கள் பற்று. மக்கள் சுதந்திரமாக தமக்கான வழங்கலை.. தாமே தீர்மானிப்பது என்பது.. அமைச்சர் அத்தியடிக் குத்தியனுக்கு வருமான இழப்பு.. மட்டுமன்றி.. பாசிசம்.. புலிப் பயங்கரவாதம்.

இதிலையே தாண்டவை மண்ணெண்ணை.. மகேஸ்வரனின் கப்பல் எனின்.. அமைச்சர் அத்தியடிக் குத்தியனுக்கோ.. கப்பல்.. தகர்ப்பு குசியோ குசி. இப்போ.. தன் மடியில்.. குழி...!

வன்னிக்கு உணவு போக ஐநா கொடி வேண்டும். காரணம்.. பயங்கரவாதிகள் பறித்துத் தின்றுவிடுவார்கள்.

யாழ்ப்பாணத்துக்கு இராணுவத்துக்கு உணவு போக வேண்டின்.. அத்துடன் குடாநாட்டு மக்களையே கொல்ல வெடிபொருள் போக வேண்டி..குடா நாட்டு மக்களையே பணயக் கைதிகளாக்கி.. பத்திரமாகக் கொண்டு சென்று.. சிங்களவனுக்கு ஊத்திக் கொடுக்க வேண்டும்.

குடா நாட்டுக்குப் போக.. ஐநா கொடி தேவையில்லை.. செஞ்சிலுவைக் கொடி தேவையில்லை.. ஆனால்.. வன்னிக்குப் போக.. மட்டும்.. தேவை.

மக்களை அடைத்து வைத்து இராணுவம் தனக்கு தீனிபோடுவது.. ஜனநாயகம்.. ஏதிலியாய் அலையும் மக்களுக்கு உணவு போடு என்று கேட்பது பாசிசம் பயங்கரவாதம்..!

என்னே உலக நீதி....???! அதற்கு வக்காளத்து வாங்க ஒரு கூட்டம். மாற்றுக் கொள்கையினராம்.. நடுநிலைவாதமாம்.

கொல்லையில் வைச்சிருக்கிற கசாப்புக் கடைக்கு கள்ளக் கோழி பிடிக்கிற கள்வன்.. எல்லாம். ஜீவகாருணியம் பேசிறான்..ஜனநாயகம் .. பேசுறான்.. காலமடா சாமி..! :rolleyes:

Edited by nedukkalapoovan

யாழ் குடாநாட்டில் இன்று ஹர்த்தால்

யாழ்குடாநாட்டில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் அழைப்பின் பேரின் இன்று ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது.யாழ்கு

  • கருத்துக்கள உறவுகள்

அரச சார்பு ஊடகங்கள் மட்டக்களப்பில் சில தினங்களுக்கு முன்னர் நடந்த ஹர்த்தால் பற்றி மூச்சுக் கூட விடவில்லை. ஆனால் இன்று.. அனைத்து ஊடகங்களிலும்.. நேற்றைய படங்காட்டலின் பின்.. ஹர்த்தால் என்றும் சொல்லி மக்களை குழப்பியுள்ளனர்.

தோற்றுப்போன தாக்குதலுக்காக.. கடற்படையின் வலிமை மீது நம்பிக்கை இன்றி.. ஹர்த்தாலா... என்பது அரசின் பலவீனமாகத்தானே தெரிகிறது. அதைக் கூடப் புரிந்து கொள்ளாமல் அரசும்....??!

ஹர்த்தாலோ இல்லையோ மக்கள் இராணுவமும்.. ஈபிடிபி ஆயுதக் கும்பலும் நடத்தும் வியாபாரத்தூடுதான் பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டிய நிலை இருக்கிறது. எவ்வாறு.. வன்னி வரி அறவிடுகுது என்று கவலைப்பட்டிச்சினமோ.. அதை தாம் அறவிடுவதில் வந்த தடங்கலுக்காக.. மக்களின் இயல்பு வாழ்க்கையை சீரழித்துள்ளது.... அரச பயங்கரவாதமும்.. கொலை வெறி.. பாசிச டக்கிளசு தேவானந்தா கூலி ஆயுதக் கும்பலும். :rolleyes:

Hartal in Jaffna

According to Police there is a hartal in Jaffna today protesting against the LTTE attack on two merchant vessels carrying food and cement to the north. Police confirmed that only the hospitals are functioning.

daliymirror.lk

Edited by nedukkalapoovan

இவர்களின்ர அலம்பலுகளுக்கு அளவே இல்லை. இராணுவத்தின் வழங்கல் கப்பல் என்று புலிகள் தெளிவா சொல்லியிருக்கினம். அதுவும் பாவம் ஆமிக்காரன் என்று சாமான்கள் எல்லாம் இறக்கி கொண்டுபோன பிறகுதான் கரும்புலி வீரர்கள் கப்பலை அழித்தவர்கள்.

இது இராணுவ வழங்கல் கப்பல் இல்லை பொதுமக்களின் வழங்கல் கப்பல் என்று நம்பவைக்க இப்படி ஈபிசூப்பி சனத்தை மிரட்டி ஹர்த்தால் வைக்கினம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.