Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யுத்தம் தொடர வேண்டும் என்று மட்டகளப்பில் பேரணியாம் - கருணா.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கருணா என்று அழைக்கப்படும் சிறீலங்கா சிங்களப் பயங்கரவாத அரசின் தமிழ் ஆயுதக் கைக்கூலியான வி.முரளிதரன் என்பவர், தமிழ்நாட்டு மக்கள் ஈழத்தில் போரை நிறுத்தச் சொல்லி செய்யும் போராட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாகவும், தமிழர் தாயகத்தில் சிங்களப் பேரினவாத அரசின் போரை தொடர்ந்து முன்னெடுத்து "இலங்கைத் தீவை சிங்களத் தீவாக" பிரகடனப்படுத்துவதை ஆதரிக்கும் வகையிலும் மட்டக்களப்பில் பிரமாண்டப் பேரணி நடத்தப் போகிறாராம் என்று ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார்.

இதற்கிடையே.. சிறீலங்கா சிங்களப் பயங்கரவாத அரசின் படைகளுக்கு உணவு மற்றும் ஆயுத விநியோகம் தடுக்கப்படுவதைக் கண்டித்து.. ஈபிடிபி எனும் இன்னொரு தமிழ் ஆயுதக் கைக்கூலிக் கும்பல் இன்று யாழ்ப்பாணத்தில் ஹர்த்தால் நடத்தி வருகின்றமை.. இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

அதுமட்டுமன்றி சுத்த சிங்களப் பேரினவாதம் பேசும் விமல் வீரவன்சவை.. நட்புரீதியாக சந்தித்து கட்டியணைத்து முத்தமிட்டுக் கொண்டபின் கருணா என்ற ஆயுத-சனநாயக கைக்கூலி இந்தத் தகவலை தமிழ்நாட்டு மக்களுக்கு சிங்கள ஊடகங்களின் துணையுடன் அறியத்தந்துள்ளார்.

Massive public rally in Batti against TN – MP Karuna

Member of Parliament Karuna Amman today said that a ‘massive public rally’ will be held in Batticaloa on October 26 against Tamil Nadu for mounting undue pressure on New Delhi to stop Sri Lanka’s ‘war against terrorism”.

dailymirror.lk

கருணா என்று அழைக்கப்படும் சிறீலங்கா சிங்களப் பயங்கரவாத அரசின் தமிழ் ஆயுதக் கைக்கூலியான வி.முரளிதரன் என்பவர், தமிழ்நாட்டு மக்கள் ஈழத்தில் போரை நிறுத்தச் சொல்லி செய்யும் போராட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாகவும், தமிழர் தாயகத்தில் சிங்களப் பேரினவாத அரசின் போரை தொடர்ந்து முன்னெடுத்து "இலங்கைத் தீவை சிங்களத் தீவாக" பிரகடனப்படுத்துவதை ஆதரிக்கும் வகையிலும் மட்டக்களப்பில் பிரமாண்டப் பேரணி நடத்தப் போகிறாராம் என்று ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார்.

இதற்கிடையே.. சிறீலங்கா சிங்களப் பயங்கரவாத அரசின் படைகளுக்கு உணவு மற்றும் ஆயுத விநியோகம் தடுக்கப்படுவதைக் கண்டித்து.. ஈபிடிபி எனும் இன்னொரு தமிழ் ஆயுதக் கைக்கூலிக் கும்பல் இன்று யாழ்ப்பாணத்தில் ஹர்த்தால் நடத்தி வருகின்றமை.. இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

அதுமட்டுமன்றி சுத்த சிங்களப் பேரினவாதம் பேசும் விமல் வீரவன்சவை.. நட்புரீதியாக சந்தித்து கட்டியணைத்து முத்தமிட்டுக் கொண்டபின் கருணா என்ற ஆயுத-சனநாயக கைக்கூலி இந்தத் தகவலை தமிழ்நாட்டு மக்களுக்கு சிங்கள ஊடகங்களின் துணையுடன் அறியத்தந்துள்ளார்.

Massive public rally in Batti against TN – MP Karuna

Member of Parliament Karuna Amman today said that a ‘massive public rally’ will be held in Batticaloa on October 26 against Tamil Nadu for mounting undue pressure on New Delhi to stop Sri Lanka’s ‘war against terrorism”.

dailymirror.lk

முடியலா என்னால முடியலா :D

இந்திய மத்திய அரசு + சிங்கள அரசு + கருணா ( ஒட்டுக் குழுக்கள்) + சர்வதேசம் = ?????????????????

புலிகள் + புலம் பெயர் தமிழர்கள் + தமிழ்நாட்டு ஆதரவு + உள்நாட்டு தமிழர்கள் = ??????????????????

சசி ஏன் ஒட்டுக்குழுவில் கருணாவை மட்டும் சேர்த்துள்ளீர்கள் டக்லஸ் மறந்து விட்டீர்களா?

?????????????? இதற்கு பதில் என்ன என்றும் சொல்லுங்கள் அல்லது எதனுடன் சமன்படும் என்றாவது சொல்லுங்கள்.

சசி ஏன் ஒட்டுக்குழுவில் கருணாவை மட்டும் சேர்த்துள்ளீர்கள் டக்லஸ் மறந்து விட்டீர்களா?

?????????????? இதற்கு பதில் என்ன என்றும் சொல்லுங்கள் அல்லது எதனுடன் சமன்படும் என்றாவது சொல்லுங்கள்.

அப்படி இல்லை தற்போது நடக்கும் ஒரு மறைமுக போட்டியில் அதாவது கருணாவா டக்கிளாஸா அல்லது ஆனந்த சங்கரியா என்ர போட்டியில் கருணா வுக்கு தான் கூடுதலாக எலும்பு கிடைக்கிக்கும் அதனால் தான்................

ஒட்டுக்குழுக்கள்( கருணா, டக்கி, ஆனந்தம், இப்படி பட்டியல் தொடரும்......................

எனக்கு உங்கல் கோவம் புரிகிறது டக்கிளச்ஸ் என்ன விதத்தில் கருணாவுக்கு குரைந்து விட்டார்கள் என்று.................

  • கருத்துக்கள உறவுகள்

யுத்தத்தை விரும்பும் ரத்த வெறி கொண்டவர்கள்................இவர்களும் ஒரு ...........?

இதை விவாதிப்பதை விட்டு வேறு வேலை பார்ப்பது நன்று .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

344u4vbp2pemop551e4phh45_main600.jpg

ஜேவிபி இல் இருந்து பிரிந்த சிங்களப் பேரினவாதக் கூலி விமல் வீரவன்சவும்.. சிங்களப் பேரினவாத அரிவருடும் தமிழ் ஆயுதக் குழுக் கூலி வி. முரளிதரனும்.. ஒன்றை ஒன்று கட்டியணைக்கும் அற்புதக் காட்சி..! :blink::D

டெலியிலிமிரர். (மேலதிக படங்கள் அங்குண்டு. புதுமாப்பிள்ளை போல.. பொம்பிளையச் சந்தித்த மகிழ்ச்சி.. தமிழ் ஆயுதக் குழுக் கைக்கூலி சிரித்து மகிழ்வதைக் காணலாம். ஏதோ.. நடக்குது.. கூத்து..!) :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ச்சே...எப்படி முடியுது உந்த ஆளால?!..

இப்பத்தான் ஒருத்தர்...எரியிற தீயில எண்ணெய்வார்க்கிறமாதிரி ஒரு குழுமத்தில் கேள்வி எழுப்பி இருந்தார். 'ஏன் ஈழத்தில ஒரு ஆதரவுப்போராட்டமும் நடக்கேல்லையோ எண்டு"....அதுக்குள்ள இப்படி ஒரு செய்தி..

மக்கள் ஒற்றுமையாக இருந்து உந்த ஆளை கலைக்க வேணும்..

இறைவா, தமிழ் மக்களைக் காப்பாற்று.

  • கருத்துக்கள உறவுகள்

கருணாவின் கூற்று: தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் கூற்றல்ல: கட்சியின் செயலாளர் தெரிவிப்பு

[ வியாழக்கிழமை, 23 ஒக்ரோபர் 2008, 01:33.56 AM GMT +05:30 ]

கருணாவுக்கும் பிள்ளையானுக்கும் இடையிலான பிளவு மேலும் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கருணா நேற்று முன்தினம் கொழும்பில் ஜனாதிபதியுடன் நடத்திய ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின்போது, வெளியிட்ட கருத்துக்களை அடுத்தே இந்த முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் பொதுச்செயலாளர் ஏ கைலேஸ்வரராஜா, இது தொடர்பில் வெளியிட்டுள்ள கருத்தில்,

கருணா,ஊடக சந்திப்பின்போது கிழக்குக்குப் பொலிஸ் அதிகாரங்கள் தேவையில்லை எனக் குறிப்பிட்டமைக்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

கருணாவின் இந்தக்கூற்று கிழக்கில் உள்ள மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.எனினும் தமது கருத்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கருத்து என தெரிவித்துள்ளார். இதனை கிழக்கு மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் பொலிஸ் அதிகாரம் கிழக்குக்கு தேவையில்லை என தாம் தெரிவித்தமை தொடர்பில் கருணா, கட்சிக்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என கைலேஸ்வரராஜா கோரியுள்ளார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவராக குமாரசாமி நந்தகோபனே செயற்பட்டு வருகிறார். இந்த நிலையில் கருணா, எந்த ஒரு கருத்தை வெளியிடவேண்டுமானாலும் அதற்கு கட்சியின் அங்கீகாரத்தைப் பெறவேண்டும் என்றும் கைலேஸ்வராஜா குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு கோவிந்தன் வீதியில் அமைந்துள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் அச்சகம் ஒன்று அண்மையில் கருணா குழுவினரால் கைப்பற்றப்பட்டமையை அடுத்து அவரது குழுவுக்கும் கிழக்கு முதலமைச்சர் பிள்ளையான் குழுவுக்கும் இடையில் முறுகல் அதிகரித்துள்ளது.

http://www.tamilwin.com/view.php?2eIWnp00b...d430QH2b02nLW3e

தமிழன் வெளங்குவானா சார்???

என்று யாரோ எப்போதோ கேட்டது காதுகளில் ரீங்காரமிடுகிறது!!!

வேள்விக்கிடாய் நன்றாகத்தான் வளர்க்கப்படுகிறது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கனவயீர்ப்புப் போராட்டத்திற்கு வருமாறு கருணா, பிள்ளையான் குழு கடும் தொனியில் அழைப்பு.

வெள்ளி, 24 அக்டோபர் 2008, 07:30 மணி தமிழீழம் [செய்தியாளர் மகான்]

சிறிலங்கா படையினருடன் இணைந்து இயங்கி வரும் ஆயுதக்குழுக்களான கருணா மற்றும் பிள்ளையான் குழுக்கள் எதிர்வரும் 26 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை மட்டக்களப்பில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளன.

இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளவேண்டுமென கடுமையான தொனியில் உள்ளுர் அரச சார்பற்ற நிறுவனங்கள், பாடசாலைகள், அரச அலுவலகங்கள் மற்றும் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதையும் மீறி கலந்து கொள்ளாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர். ஞாயிற்றுக் கிழமை மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மைதானத்திற்கு பதாதைகள் சகிதம் வருமாறும் இவர்கள் கூறியுள்ளனர்.

அத்துடன் மட்டக்களப்பு நகருக்கு வடக்காக வாகரை, வாழைச்சேனை, செங்கலடி ஆகிய பகுதிகளில் இருந்தும் தெற்காக களுவாஞ்சிக்குடி வழியாகவும் மக்களை அழைத்துவரவும் ஊர்வலம் நடத்தவும் திட்மிடப்பட்டுள்ளது. இதற்காக நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பேருந்துகள் வரவழைக்கப்படவுள்ளன. அத்துடன் சிங்கள மக்களையும் அழைத்துவரவும் திட்மிடப்பட்டுள்ளது.

இந்த கவனயீர்ப்புப் போராட்த்தின் நோக்கம் விடுதலைப்புலிகளை நிராயுதபாணிகளாக்கவேண்டும் என்பதுடன் தமிழ் நாட்டில் ஏற்பட்டுள்ள மக்களின் பேரேழிற்சியை கொச்சைப்படுத்துவதுமாகும். அத்துடன் கிழக்கில் ஐனநாயம் மலர்ந்துள்ளது என்பதை சிறிலங்கா அரசின் உத்தரவின்பேரில் சர்வதேசத்திற்குக் காட்டுவதுமாகும். அத்துடன் கருணாவின் பாராளுமன்ற பிரவேசத்தை நியாயப்படுத்துவதுமாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொள்ள மக்களும் நிறுவனங்களும் அச்சம் தெரிவித்துள்ளதுடன் இருதலைக் கொள்ளி எறும்பாக அவர்கள் உள்ளனர். இவ்வாறான போராட்டங்களை வடகிழக்கு எங்கும் நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

pathivu.com

-----------------------

இப்படியான ஈனப்பிறவிகளும் எங்கள் மத்தியில் மனிதர்கள்.. தமிழர்கள் என்று வாழுதுகள் தானே..! இந்திய ஆக்கிரமிப்புப்படை இருந்த காலத்தில் வரதராஜப்பெருமாள் கொம்பனி இதே மாதிரி கூத்தடித்தன. இப்போ இவர்கள்.. இவர்களுக்கு எல்லாம் மக்கள் என்ன முடிவு கட்டப் போகிறார்கள். யார் மக்களை சரியாக வழிநடத்தப் போகிறார்கள்..! :):):wub:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.