Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீமான், அமீர் கைது: தமிழர்கள் தீபாவளியை தவிர்க்க வேண்டும்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

தமிழினத்தின் ஒற்றுமையை உறுதிப்படுத்தும் வகையில் நடைபெற்ற மனிதசங்கிலி என்னும் `தமிழர் சங்கிலி' அறப்போர் முதல்வர் தலைமையில் வெற்றிகரமாக நடந்து அரசியலரங்கில் மிகப்பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னராவது இந்திய அரசு ஈழத் தமிழினத்திற்கெதிரான `இனப்படுகொலை' யினைத் தடுத்தும் நிறுத்துமென நம்புகிறோம்.தலைவர்கள் தொண்டர்கள், பொதுமக்கள் ஆகிய அனைவருக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

திரைப்பட இயக்குநர்கள் சீமான்,அமீர் ஆகியோரும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவை தொடர்ந்து கைது செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது இது கருத் துரிமையைப்பறிக்கும் அரசு வன்கொடுமையென விடுதலைசிறுத்தைகள் கருது கிறது.

ஆகவே கைது செய்யப்பட்டோரை உடனடியாக விடுதலை செய்ய வெண்டு மென முதல்வரை கேட்டுக் கொள்கிறோம். சிங்களப்படையினரின் குண்டுவீச்சில் மடிந்துகொண்டிருக்கும் ஈழத் தமிழ்ச் சொந்தங்களின் துக்கத்தைப் பகிர்ந்து கொள்ளும் வகையில், பட்டாசு கொளுத்தாமல், புத்தாடை உடுத்தாமல் தீபாவளியைத் தவிர்த்திட வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

http://maalaimalar.com/

தமிழா!!!

அன்று.. திராவிடனை கொன்றவனுக்கு தீபாவளி !!..

இன்று.. தமிழனை கொன்று குவிப்பவனுக்கு என்ன வழி??

Edited by Tamilmagan

தமிழா!!!

அன்று.. திராவிடனை கொன்றவனுக்கு தீபாவளி !!..

இன்றைய நிலையில் இது பற்றி நாம் விவாதம் பண்ணி எமக்குள் மோதிக் கொள்வது தேவையற்றது

உங்கள் கருத்து ஆதாரமற்றது!!!

தயவு செய்து கொஞ்சம் சமயோசிதமாக கருத்துக்களை வையுங்கள்.

நாம் எந்த மதத்துக்கும் மதநம்பிக்கைகளுக்கும் எதிரானவர்கள் அல்ல!

உங்கள் தனிப்பட்ட கொள்கைகளை ஈழப்போராட்டத்துடன் கலந்து குழப்பி அடிக்காதீர்கள்!

இன்னும் சொல்லப்போனால் இன்று எம்.கே நாராயணன், மேனன் போன்ற திராவிடர்கள் தான் ஈழத்தமிழர்களை கொன்று கொண்டு இருக்கிறார்கள்!!!

கொஞ்ச நாளைக்கு முன் இந்து பண்டிகைகளுக்கு விடுதலை புலிகள் தடை விதித்துள்ளதாக சிங்களம் ஒரு பொய்ப்பிரச்சாரத்தை கையில் எடுத்து இருந்தது.

இது போன்ற கோசங்கள் எம்மை இந்து மதத்திற்கு எதிரானவர்களாக டெல்லியை நம்ப வைக்க சிங்கள அரசுக்கு மிகவும் உதவி செய்யும்

சிக்கலான இந்திய அரசியல் விளையாட்டுக்களை புரிந்து கொள்ளாவிட்டால் எமது விடுதலை போராட்டத்திற்கு பெரும் தீங்கு விளைவித்தவர்கள் ஆவோம்!

Edited by vettri-vel

எங்களின் விடிவுக்காய் வாழ்வுக்காய் எம்மினத்தவர்கள் எம்முறவுகள் செந்நீரையும் கண்ணீரையும் வேர்வையையும் உயிரையும் தியாகம் செய்கிறர்கள்...... இதனுடன் ஒப்பிடும்போது ஒருதீபாவளி ஒரு பெரும் பொருட்டல்ல... இருந்தாலும் அதையும் (புறக்கணிப்பையும்) நீங்கள் அடகு வைக்கச்சொன்னால் அதுவும் பொருட்டல்ல.... எம்மக்களின் விடிவைத்தவிர வேரொறும் பொருட்டல்ல என்றிருக்கும் மக்களும் இருக்கிறார்கள்.

அதேபோல் எதையுமே அறிய விம்பாதவர்ளும் இருக்கிறார்கள்....

நீலனையும் கதிர்காமரையும் வைத்து சிங்கள பேரினவாதம் இல்லை என்று சொல்ல முடியாது போலவே மேட்டுக்குடி மேனன் நாராயணன் போன்றவர்களின் வரட்டுக் கொளரவ திராவிட எதிர்ப்பு சேவைகளை வைத்து வரலாற்றை பொய் என்று சொல்ல முடியாது.

தனிப்பட்ட நம்பிக்கையால கட்டுண்டு கிடப்பவர்களுக்குத்தான் சிலவற்றை ஏற்றுக் கொள்ள கடினமாக இருக்கு சுத்தி வளைச்சு சமாளிக்கப்பாக்கிறார்கள். எப்பிடி வியாக்கியானம் குடுத்தாலும் சதுரம் வட்டமாகாது <_<

power peddler சிந்தனையோட்டத்தை கொண்டவர்கள் எப்படி தொடர்புகளை ஏற்படுத்தி தம்மை சோடிச்சுக் கொண்டாலும் leader ஆக முடியாது. அந்த இயலாமை சிலரின் விசுவாசத்தை மாத்திவிடுகிறது. உந்தப் பிரச்சனை இலங்கைத் தீவில் இந்தியாவில் மாத்திரமல்ல உலகத்தில் உள்ள எல்லா சமூகத்திலும் இருக்கும் குறைபாடு.

சீனாவிற்கு தாய்வான்

அயர்லாந்திற்கு யுனியனிஸ்ற்கள்

திராவிடத்திற்கு மேனன் நாராயணனின் சந்ததிகள்.

Edited by kurukaalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தமிழா!!!

அன்று.. திராவிடனை கொன்றவனுக்கு தீபாவளி !!..

இன்று.. தமிழனை கொன்று குவிப்பவனுக்கு என்ன வழி??

அப்படியென்றால் இராமயணம் உண்மை என்கின்றீர்களா? இராமர் பாலம்?.....

நீலனையும் கதிர்காமரையும் வைத்து சிங்கள பேரினவாதம் இல்லை என்று சொல்ல முடியாது போலவே மேட்டுக்குடி மேனன் நாராயணன் போன்றவர்களின் வரட்டுக் கொளரவ திராவிட எதிர்ப்பு சேவைகளை வைத்து வரலாற்றை பொய் என்று சொல்ல முடியாது.

தனிப்பட்ட நம்பிக்கையால கட்டுண்டு கிடப்பவர்களுக்குத்தான் சிலவற்றை ஏற்றுக் கொள்ள கடினமாக இருக்கு சுத்தி வளைச்சு சமாளிக்கப்பாக்கிறார்கள். எப்பிடி வியாக்கியானம் குடுத்தாலும் சதுரம் வட்டமாகாது <_<

power peddler சிந்தனையோட்டத்தை கொண்டவர்கள் எப்படி தொடர்புகளை ஏற்படுத்தி தம்மை சோடிச்சுக் கொண்டாலும் leader ஆக முடியாது. அந்த இயலாமை சிலரின் விசுவாசத்தை மாத்திவிடுகிறது. உந்தப் பிரச்சனை இலங்கைத் தீவில் இந்தியாவில் மாத்திரமல்ல உலகத்தில் உள்ள எல்லா சமூகத்திலும் இருக்கும் குறைபாடு.

வேலூரின் ஞானசேகரன்கள் மேட்டுக்குடியை சேர்ந்தவர்கள் அல்லவே!

மாயாவதிக்களும் மேட்டுக்குடியை சேராத இன்னும் பலரும் நமக்காக குரல் கொடுப்பதாக சொல்ல முடியாதே!

உணர்ச்சிகளால் மட்டும் வழிநடத்தப்படுவதல்ல அரசியல் சதுரங்கம்.

சதுரம் வட்டமாகாது சரிதான்!

அதேபோல் ஒரு வட்டத்திற்குள் மட்டுமே சிந்தனையை செலுத்திக் கொண்டிருப்பது எமது அரசியல் வெற்றிகளுக்கு வழிவகுக்காது!!!

power peddler சிந்தனையோட்டத்தை கொண்டவர்கள் எப்படி தொடர்புகளை ஏற்படுத்தி தம்மை சோடிச்சுக் கொண்டாலும் leader ஆக முடியாது.

This statement is a sign of being in captivity of a belief system and with prejudice

Edited by vettri-vel

இந்த விவாதம் தொடாராமல் இருப்பதே தற்போது பொருத்தமானதாக இருக்கும் என நான் நினைக்கிறேன்

கருணாவும் மாத்தையாவும் மேட்டுக் குடி இல்லைத்தான் அதுக்காக? தனிமனிதர்களை வைத்து அதீதமாக எந்த ஒரு விவாதத்தையும் பொதுப்படுத்த முடியாது.

அரசியல் சதுரங்கத்திற்காக

எமது வரலாற்றை பெய்யாக்க முடியாது.

எமது சமூகச் சீர்திருத்தங்களை நிறுத்த முடியாது

எமது சொந்த பலம் தான் நிபந்தனையற்றது. அரசியல் பேரம் பேசல் சதுரங்கம் எல்லாத்திற்கும் அடித்தளமாக இருப்பது.

வரலாற்றுத் தெளிவு சமூகச் சீர்திருத்தங்கள் தான் எமது மனிதவளத்தில் இருந்து சொந்த பலத்தை கட்டியெழுப்ப உதவும். எமது தேசிய எழுச்சியை தடுக்க பலவீனப்படுத்த நடந்த வரலாற்றுத் திணிப்புகள் பற்றிய விவதாங்களை "அரசியல் சதுரங்கத்திற்கு" பயந்து செய்யாது இருக்க முடியாது. வெளியுறவுக் கொள்கையை உள்ளக சமூக சீர்திருத்தங்கள் சொந்த வரலாறுகள் பற்றிய விவாதங்களுடன் குழப்பத் தேவையில்லை. உது 1980 களில் இந்தியாவை நம்பி ஏனைய இயக்கள் இருப்பதற்கு கொடுத்த ஆலோசனை மாதிரி இருக்கு.

தமிழர்கள் சுயாட்சியை சட்டவாக்க நிறைவேற்று அதிகாரங்களை இழந்த காலத்தில் இருந்து நடந்த திரிப்புகள் திணிப்புகள் பற்றி தெளிவு பெற வேண்டும்.

இராமாயணம்் உண்மையா?

புட்பக விமானம் உண்மையா?

சீதை உண்மையா?

திரொளபதி உண்மையா?

இராமர் பாலம் உண்மையா?

தீபாவளி உண்மையா?

அடி முடி தேடின கதை உண்மையா?

நிச்சையமா கேட்பதற்கும் விளங்கிக் கொள்ளவும் பல விடையங்கள் இருக்கு.

சிறீலங்காவின் பாடவிதானம் தமிழர் வரலாறு பற்றி படிப்பிப்பதை விட சைவவினாவிடையை படிப்பீப்பதில் காட்டிய ஆர்வத்தை பற்றியும் அதுக்கு நடத்தப்பட்ட பல்வேறு பட்ட விசேட பரீட்சைகள் பற்றியும் யோசியுங்கள். எங்களை சந்ததி சந்ததியாக சைவப்பழங்களாக உருவாக்கிய படி அவர்கள் என்னென்ன ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார்கள் என்றும் சிந்தியுங்கள்.

http://www.island.lk/2008/10/05/features2.html

Edited by kurukaalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கே செல்லும் இந்தப் பாதை????

தீவளியைப் புறக்கணியுங்கள்.

1.பல கோடி ரூபாய்கள் துண்டுக் காகிதமாகின்றன

2.ஏழை வீட்டில் உலை கொதிப்பதில்லை

3.நடுத்தரவர்க்கத்துக்கு வரும் போனசை குடும்ப எதிர்காலத்துக்குப் பயன்படுத்துங்கள்.

4.வரி ஏய்ப்புச் செய்யும் நிறுவங்களுக்கு சம்பாதித்துக் கொடுப்பதன் மூலம் நாட்டுக்கு துரோகம் செய்யதீர்கள்.

வரலாற்றுத் தெளிவு சமூகச் சீர்திருத்தங்கள் தான் எமது மனிதவளத்தில் இருந்து சொந்த பலத்தை கட்டியெழுப்ப உதவும். எமது தேசிய எழுச்சியை தடுக்க பலவீனப்படுத்த நடந்த வரலாற்றுத் திணிப்புகள் பற்றிய விவதாங்களை "அரசியல் சதுரங்கத்திற்கு" பயந்து செய்யாது இருக்க முடியாது. வெளியுறவுக் கொள்கையை உள்ளக சமூக சீர்திருத்தங்கள் சொந்த வரலாறுகள் பற்றிய விவாதங்களுடன் குழப்பத் தேவையில்லை. தமிழர்கள் சுயாட்சியை சட்டவாக்க நிறைவேற்று அதிகாரங்களை இழந்த காலத்தில் இருந்து நடந்த திரிப்புகள் திணிப்புகள் பற்றி தெளிவு பெற வேண்டும்.

http://www.island.lk/2008/10/05/features2.html

முதல் தேவை அரசியல் அதிகாரம்!

சுவர் இருந்தால் தான் சித்திரம் தீட்டலாம், அவசரப்பட்டு வர்ணத்தை தரையில் கொட்டுவதால் சித்திரமும் வராது, சீர்திருத்தமும் வராது.

ஒரு புறம் திரு,நடேசன் டெல்லிக்கு ஆதரவுக்கரம் நீட்டுவதும் மறுபுறம் வேறு சிலர் ஆரிய திராவிட சீண்டல்கள் செய்வதும்

அரசியல் தெரிந்தவர்கள் செய்வார்கள் என்று நான் நினைக்கவில்லை

ஞாலம் கருதினும் கைகூடும் காலம் கருதி இடத்தாற்செயின்!!!

தீபாவளியை புறக்கணிப்பதற்கு எதிரானது அல்ல எனது கருத்துக்கள் நண்பர்களே.

தீபாவளிக்கு செலவு செய்வதை தாயகத்தில் அல்லலுறும் மக்களுக்கு அனுப்புவது வரவேற்கத்தக்கதே ஆகும்

Edited by vettri-vel

ஒருவரும் அவசரப்பட்டு ஒண்டும் கொட்டவில்லை.

புலிகள் அன்று தொடக்கம் நேசக்கரம் நீட்டிய படிதான் இருக்கிறார்கள். இந்தியா நோக்கி நேசக்கரத்தை நீட்டியபடிதான் இந்தியாவில் தங்கியிருக்க முடியாவிட்டால் முற்றாக அழிந்துவிடும் நிலையில் இருந்து தம்மை விடுவித்துக் கொள்ள தயார்படுத்தினார்கள். அதே நேரம் சமூக கலாச்சாரரீதியான சீர்திருத்தங்களும் தாயகத்தில் நடந்து கொண்டு தான் இருக்கு. 2 அயும் குழப்பாது தெளிவாக அவர்கள் செய்கிறார்கள். அதுவே புலம்பெயர்ந்த சமூகத்திலும் தேவை.

இந்தியாவின் மாறிவரும் பொருளாதார புவியல் தவிர்க்க முடியாத படி சமூக மற்றும் அரசியல் புவியலை அன்றோடு ஒப்பிடும் போது மாத்தியிருக்கிறது மேலும் மாற்றும். மற்றும் படி அன்றுமுதல் இன்றுவரை இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் எமது போராட்டத்திற்கு மூர்க்கமாக குரல் கொடுப்பவர்கள் யார் மூர்க்கமாக எதிர்ப்பவர்கள் யார் என்பது மாறவில்லை.

அமைதிப்படை செய்த அழிவுகள் பற்றியே மறைக்கவில்லை ஆரியர் திராவிடர் என்று சீண்டல்கள் செய்யிறம் என்று பூச்சாண்டி?

தீபாவளிக்கு வாழ்த்துக்களாம் எண்டு எங்கட ஆக்களுக்கு மத்தியில குறுஞ்செய்தி, மின்னஞ்சல் எல்லாம் வேகமாப் பரிமாறப்பட்டுக்கொண்டிருக்க

ஆமா எப்ப தீபாவளி ?

ஆமா எப்ப தீபாவளி ?

நான் சொல்லுவன் , ஆனா நாங்களே சொல்லி பிரச்சாரபடுத்திறம் எண்டு திட்ட வருவாங்க

Kilinochchi remains devoid of civilians. Activity has now shifted to Dharmapuram, a town 13 kilometres away. It is located on the Paranthan-Mullaitivu Road. In marked contrast to any festivity there, hectic arrangements are under way by residents of the Jaffna peninsula to celebrate Deepavali, the Hindu festival of lights tomorrow.

Situation report - Iqbal Athas October 26, 2008

எனக்கு அருகிலுள்ள ஒரு புதிதாக திறந்த எம்மவர் சாப்பாட்டுக்கடைக்கு, பசிக்குது என்று விட்டுஏதும் வாங்கி கடிப்பம் என்று போனேன், விளக்கெல்லம் கொழுத்தி தீபாவளி கொண்டாட்டம் பெரும் அட்டக்காசம்.

போவோர் எல்லோருக்கும் சில இனிப்புகளும் தீபாவளி அன்பளிப்பாம். சாப்படு வங்கி முடிய "கப்பி டிவாளி" சொன்னார்கள். நானோ தம்பி "டிவாளி இல்லை தீபாவளி" என்றேன் எனக்கும் இருக்கப்படாமல்.

ஆத்தை செத்தாலென்ன ... அப்பன் விழுந்தாலென்ன .... நாம் கொண்டாடுவோம் டிவாளியை!

  • கருத்துக்கள உறவுகள்

மற்றது, இராமாயணம் உண்மையோ பொய்யோ எண்டு கேக்கிறவை, 'இலங்கைமண்" நாடகத்துக்கு தேசியத்தலைவர் குடுத்திருக்கிற உரைய வாசிச்சுப் பாருங்கோ. அதிலயும் சந்தேகம் எண்டு கேள்வியோட போயிடாதேங்கோ. அவருக்கு நிறைய வேலையிருக்கு...

ஒன்றையே திருப்பித் திருப்பிக் கதைக்காதீர்கள்.இது பற்றி ஏற்கனவே பல தடவை விவாதிக்கப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆமா எப்ப தீபாவளி ?

நல்லாக் கேட்டீங்க பரணீ.

யாழ்ப்பாணத்தை விட்டு வந்த நாள் முதலாக தீபாவளி எப்ப எண்டு தெரியாது. கொண்டாடியதில்லை. நான் பார்த்த மட்டில் பல புலம்பெயர் தமிழர் நிலைமை இது. அப்படி இருக்க ஆண்டுதோறும் தீபாவளியை கொண்டாடும் தமிழக தமிழ் உறவுகளுக்கு தொல்.திருமாவளன் சொன்னதை இங்கே சொல்லி பழைய நினைவுகளை கிளறி தீபாவளியைக் கொண்டாட வைச்சு விடுவார்கள் போல.

தேசியத்துக்காக செய்யவேண்டியது எத்தனையோ இருக்க, அந்த திசையை நோக்காவிடாமல் செய்யும் இத்தகைய திசை திருப்பல் செய்திகளை பகிருவதை, பருகுவதை தவிர்த்து வேற வேலை பார்க்காமல் பதிலிலெழுதும் என்னையும் சேர்த்துக் கண்டிக்கின்றேன்.

உண்மை வாசகி

எப்ப எமக்கெல்லாம் விடிவு பிறக்கின்றதோ அன்றுதான் தீபாவளி;

நாட்டில் ஒரு நேர உணவுக்காக கஸ்டப்படுகின்றார்கள் எமக்கு இப்ப இது தேவைதானா

உண்மை வாசகி

எப்ப எமக்கெல்லாம் விடிவு பிறக்கின்றதோ அன்றுதான் தீபாவளி;

நாட்டில் ஒரு நேர உணவுக்காக கஸ்டப்படுகின்றார்கள் எமக்கு இப்ப இது தேவைதானா

என் எண்ணமும் அதே..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.