Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலிகள் பின்வாங்கும் மர்மம்...! -குமுதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் பின்வாங்கும் மர்மம்...! என்ற தலைப்பில் குழுதத்தில்(17.11. 2008) வந்த ஆக்கத்தில் ஈழம் பற்றிய பகுதிகளை இங்கே இணைத்துள்ளேன்.

அவசரக்கூட்டம் என்ற அழைப்போடு நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் கூடியது அலப்பறை டீம். ஆழ்ந்த யோசனையில் இருந்த சித்தன் "என்ன சோதனையோ தெரியலப்பா. இந்த தி.மு.க அரசுக்கு அடிமேல அடி விழுந்துகிட்டு வருது. அதிலிருந்து எப்படி மீளப்போறாங்கன்னுதான் தெரியல..." என்று புலம்பினார்.

"எந்த விஷயத்தைச் சொல்றீங்க. இந்த விஷயம்னு குழம்பாம சொன்னாதான தெரியும்..."- கோட்டை கோபாலு.

"எந்த விஷயம்னு சொல்றது..? தொட்டதெல்லாம் வம்பாயில்ல போயிட்டிருக்கு. ஏற்கெனவே விலைவாசி உயர்வு, மின்வெட்டுன்னு தி.மு.க அரசு பேர் ரிப்பேராகி கிடக்கு. இதுல இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவா கலைஞர் எடுத்த எந்த முயற்சியும் எடுபடலை. எல்லாமும் அப்படியே இருக்கு. இந்தியா வந்து பிரதமர் மன்மோகன்சிங்கை சந்திச்ச இலங்கை அதிபர் ராஜபக்சே எம்புட்டு கூப்பாடு போட்டாலும் அங்க போர் நிறுத்தம் செய்ய முடியாதுன்னு சொல்லிட்டு போயிருக்காரு. இதுக்கு பிறவும் கலைஞர் தலைமையில போர் நிறுத்தம்னு சொல்ற குரல் எப்படி எடுபடும்னு எதிர்க்கட்சி எல்லாமும் கேள்வி கேட்குது. கேட்டா எங்க முயற்சியாலதான் இலங்கைத் தமிழர் களுக்கு நிவாரணப் பொருள் போய்க்கிட்டு இருக்கேன்னு சொல்றது பொருத்தமில்லே. போர் நிறுத்தத்துக்கு என்னா செய்யுறதா உத்தேசம்..? உருப்படியான பதில் என்னான்னு போட்டு குடையறாங்க..."

"அதான் தெரிஞ்ச விஷயமாச்சே. இனிமே என்னா பண்ணப் போறாங்களாம்..? மொதல்ல அதைச் சொல்லுப்பா...."- அன்வர்பாய்.

"சொல்றேன். இலங்கையில் போர்நிறுத்தம் என்கிற கோரிக்கையை நம்ப இந்திய அரசு ஐ.நா. சபைகிட்ட கொண்டுபோய் வைக்கணும். அதுக்கு தி.மு.க அரசு தீவிரமா அழுத்தம் கொடுக்கணும்னு வலியுறுத்துது எதிர்க்கட்சி.

--------------------------------------------------------

"சரிப்பா. நம்ப இலங்கைத் தமிழர் மேட்டர் எப்படி இருக்காம்..?" என்றார்.

"புலிகளின் முக்கிய தளமான பூநகரியை புடிச்சிட்டாங்களாம். அது வழியா யாழ்ப்பாணத்துக்கான தரைவழி பாதையையும் திறந்திருக்காங்களாம். இன்னும் கொஞ்சநாளில் கிளிநொச்சியையும் பிடிச்சுடுவாங்க. அப்படியே புலித்தலைவர் பிரபாகரனையும் பிடிச்சுடப் போறாங்களாம். அப்படீன்னு இலங்கை அதிபர் ராஜபக்ஷே சொல்றாரு" என்று கூறி சிரித்த சித்தன்,

"போனவாரம் நம்ப குமுதம் ரிப்போர்ட்டர் இதழுக்காக அங்க இருக்குற தமிழ் கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. சேனாதிராஜா ஜெயனந்த மூர்த்திகிட்ட பேசுனம். அப்பவே அவர் சொன்னார். அதாவது ராணுவம் சில இடங்களை பிடிச்சிருக்கிறதா சொல்றது உண்மைதான். ஆனா அந்த பகுதிய எல்லாம் போர்கள முனைக்கு அவசியம் இல்லாத பகுதின்னு புலிகளே விட்டு பின்நகர்ந்து போன பகுதி. அவ்வளவு எளிதில் புலிகளை வெல்ல முடியாதுங்கிறதுதான் போர்க்கள நிலவரம்.

இவ்வளவு இடத்தை பிடித்து விட்டோம்னு சொல்றப்போ, புலிகள் தரப்பில் மரணம் நிறைய இருந்திருக்கணுமே. ஏன் இல்லாம இருக்கு?. அதுலதான் சூட்சுமம் இருக்கு. எந்த சூழ்நிலையிலும் புலிகள் கிளிநொச்சியை விட்டுக் கொடுக்க மாட்டார்கள். அதை நெருங்கும் போது ராணுவப்படை பெரிய இழப்பை சந்திக்கும்னு சொன்னவரு போர் தந்திரங்களுக்காக பின்நகர்ந்து வருகிறோம். விரைவில் மிகப்பெரிய தாக்குதல் நடக்கும்னு புலித்தலைவர் தமிழ் எம்.பி.கிட்ட சொன்னதாகவும் கூறினார். அதுதான் இப்போது செய்தியா வெளிவந்து பரபரப்பாகிகிட்டு இருக்கு.

அதுக்கேற்ற மாதிரி உலகளவில் போர் நிலவரங்களை ஆய்வு செய்து வரும் நிபுணர்கள் எல்லாம்...

"புலிகள் தரப்பில் உக்கிரமான போர் தொடுக்கப்படவில்லை. கரும்புலிகளின் வேகம் அதிகமிருக்கும். ஆனால் இதுவரையிலான போரில் கரும்புலிகளின் பங்களிப்பே இல்லை. அந்தப்படை நுழைந்து விட்டால் சிங்கள ராணுவத்துக்கு பெரிய இழப்பு ஏற்படும். இதுவரை அப்படி ஏதும் நடக்கவில்லை எனும் போது, ஏதோ ஒரு திட்டத்தோடு புலிகள் அமைதி காத்து பின்நகர்கிறார்கள் என்பது உண்மைதான். அதனையடுத்து எப்படிப்பட்ட போர் நடக்கும் என்பதுதான் புரியாத புதிராக இருக்கும்னு சொல்றாங்க"

ஆக, உச்சக்கட்டப் போர் என்பது இனிமேல்தான் நடக்கும். அதுதான் அடுத்த கட்டத்தை தீர்மானிக்கும்"- அன்வர்பாய்.

"ஆமாம். அப்படித்தான் சொல்றாங்க. அந்த சமயத்துல, இலங்கை ராணுவத்தின் தாக்குதல் எல்லாம் அப்பாவி தமிழ் மக்கள் மீது மேலும் மோசமாக நடக்கும். அதனால்தான் இந்த விஷயத்தை அலட்சியப்படுத்தாம இந்திய அரசு ஐ.நா. மன்றத்துக்கு புகாரா எடுத்துக்கிட்டு போகணும்னு, பா.ம.க தரப்புல ராமதாஸ் சொல்றாரு. இன்னைக்கு அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்துற இந்திய கம்யூனிஸ்டு கோரிக்கையும் அதுதான்.

உலகில் எல்லா நாடுகளிலும்தான் தீவிரவாதம் இருக்கிறது. எந்த நாடும் தன் சொந்தப் பகுதியில் விமானத்தாக்குதல் நடத்துறதில்ல. இலங்கையில் அப்படி நடக்கிறது. அது ஒரு இன அழிப்பு முறை. அதனால் ஐ.நா. தலையிட நிர்ப்பந்திக்க வேண்டும்னு ம.தி.மு.க தலைவர் வைகோ, திருமாவளவன் எல்லாரும் சொல்றாங்க"

"எல்லாம் சரிப்பா. அடுத்த முதல்வர் கனவுல இருக்கிற கேப்டன் விஜயகாந்த் கட்சி என்ன உத்தேசத்தில் இருக்காம்"- சித்தன்.

பெரிய சிரிப்பாய் சிரித்த சுவருமுட்டி "அவரு உள்ளூர் தமிழன் விலைவாசியில பாதிக்கப்பட்டிருக்கானே அதுக்கு வாய்ஸ் கொடுத்திட்டிருக்காரு. எல்லோரும் இலங்கைத் தமிழர்களுக்காக பேசிட்டிருந்தா என் தமில் மக்களை பத்தி யாரு கவலைப்படறது. அதான் நான் மட்டுமே கவலைப்படறேன் அப்படீன்னு போராடிகிட்டிருக்காரு. எம்புட்டு அக்கறை பார்த்தியா?"

"ஏம்பா. நாற்காலி கனவு, அடுத்த முதல்வர் நினைப்பு ஏதும் இல்லாத நடிகர் விஜய், இலங்கைத் தமிழர்களுக்காக உண்ணாவிரதம் நடத்தினாரே. அவிங்களுக்கு மட்டும் வேறு விலைவாசி இருக்கா என்ன?"- கோபாலு.

"அதை என்கிட்ட கேட்டா..? கேப்டன்கிட்டதான் கேட்கணும். உண்மையில இந்த விஷயத்துல நடிகர் விஜய எல்லோரும் பாராட்டுறாங்க. சில முக்கிய தமிழ் உணர்வாளர்கள் தொடர்ந்து எடுத்துச் சொன்னதை புரிஞ்சுகிட்டு பாலிட்டிக்ஸ் பதவி ஆசைன்னு கணக்குப் போடாம ஒரு உண்மையான போராட்டத்தை நடத்தியிருக்காரு. ஆகாதவங்க ஆயிரம் காரணம் சொல்வாங்க. அது கிடக்கட்டும்" என்றபடியே எழுந்தார்.

-சபை களைகட்டும்

ஒட்டுக்கேட்டவர்: பா. ஏகலைவன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

11.11.2008 ல் வந்த ஆக்கம்

11.11.08 குழப்பத்தில் கலைஞர், கலகத்தில் காங்கிரஸ்!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் கூட இருக்கின்ற நேரத்தில் நமது அலப்பறைக்கூட்டத்தையும் கூட்டியாக வேண்டும். தவறினால் சித்தனின் பதவியை பறிப்பதற்கான தீர்மானத்தையும் கொண்டு வந்தாக வேண்டும் என சுவருமுட்டி சுந்தரம் அனைவருக்கும் மெசேஜ் அனுப்ப சித்தன் அலறிப்போனார்.

மாலையே அலப்பறைக் கூட்டத்தையும் கூட்டினார்.

இடம்: மெரீனா கடற்கரை, அண்ணா சமாதியின் பின்புறம்.

கைகூப்பி, "எல்லோருக்கும் வணக்கம். ரொம்ப நாளா அலப்பறை கூட்டாததற்கு மன்னிச்சிடுங்க"ன்னு கூறியபடியே வந்து அமர்ந்த சித்தன், "தலைக்கு மேல நிறைய வேலை இருந்தது. நம்ப கூட்டணி கட்சிகள் எப்ப, யார் காலை வாரி விடுறதுன்னு நேரம் பார்த்திட்டிருக்கு. அதுக்கு நம்மாலான கலகம் உதவி ஏதாவது செய்ய முடியுமான்னுதான் அவிங்க கூட திரிஞ்சுட்டிருந்தேன்" என்றார்.

"என்னய்யா. வந்ததும் வராததுமா உளற ஆரம்பிச்சுட்டே. யார் காலை யார் வாற இருக்காங்க"- கோட்டை கோபாலு.

"என்னப்பா. தெரியாத மாதிரி கேட்குறே. நம்ப தி.மு.க.வின் காலை வாரிவிட காங்கிரஸ்தான் நேரம் பார்க்குது. அந்த கட்சியில இருக்குற முக்கிய தலைங்க எல்லாம் வர்ற தேர்தல்ல தி.மு.க.கூட கூட்டணி வச்சுக்கிட்டா ஒரு சீட்டு கூட கிடையாதுங்கிறத டெல்லி மேலிடத்துக்கு தெளிவா சொல்லி விட்டுருக்காங்க.

தமிழ்நாட்டுல இப்போ இலங்கைத் தமிழர் அலை ஏற்பட்டிருக்கு. இந்த நிலையில தி.மு.க காலை வாரிவிட்டா பார்த்தீரா தமிழர்களே என்று கலைஞர் ஈழத்தமிழர் ஆதரவு டிராக் மாத்தி ஆதரவு அறுவடை செய்துடுவாரு.

ஈழமக்கள் விஷயத்தை காங்கிரஸ் ஆதரிக்காம விட்டா வர்ற தேர்தல்ல ஜனங்ககிட்ட ஓட்டு கேட்க போக முடியாது. அதனால ராஜபக்ஷேகிட்ட பேசி, போர் நிறுத்தத்துக்கு வழிய செய்யணும். அது முடியாட்டிப் போனா நிவாரண பொருட்களையாவது இந்தியா சொல்ற கண்டிஷனோட கொடுக்க வைக்கணும். அதாவது எந்தவித தடையுமில்லாம அந்த மக்கள்கிட்டே நிவாரணப் பொருட்கள் சொதப்பல் இல்லாம போய்ச் சேரணும்.

அதை செய்துட்டா காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டுல காலரை தூக்கி விட்டுக்கிட்டு ஓட்டு கேட்கலாம் னு பிளான் வச்சிருக்கு.

அதாவது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி ஈழ மக்களுக்கு எப்பவும் துணையா ஆதரவாதானிருக்கு. புலிகளைத்தான் ஆதரிக்கலைன்னு பிரசாரம் வைக்கப்போறாங்க. எவ்விதத்திலேயும் இதில் கலைஞருக்கு தமிழ்க்குரல் ஆதரவு நிலையை முழுசா விட்டுக்கொடுத்துடாம இருக்கணும்கிறாங்க, தமிழக காங்கிரஸ்காரங்க"

"அடடே. அம்புட்டு ப்ளான் வச்சிருக்காங்களா. ஆனா தி.மு.க கூட இப்போ நல்ல உறவு மாதிரிதான காட்டுறாங்க. முதல்வரை சந்திச்சு 5லட்ச ரூபாயை இலங்கைத் தமிழருக்கான நிவாரண நிதியா கொடுத்திருக்காங்களே"- அன்வர்பாய்.

"அதெல்லாம் ஒரு டிராமாப்பா. முழுசா நான் சொல்றேன்...." என்ற சுவருமுட்டி சுந்தரம், மேலும் தொடர்ந்தார்.

"அதாவது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியும் இலங்கைத் தமிழர் விஷயத்தில் ஆதரவாகத்தான் இருக்கோம்னு காட்டுறதுக்காக 5லட்சத்தை கொடுக்கிறாங்க. ஆனா காங். எம்.எல்.ஏ.க்களுக்கு கலைஞர் மேல ரொம்ப கோபமாம். விடுதலைப்புலிகள் ஆதரவுக்குரல் வெளிப்படையா கிளம்ப கலைஞர்தான் காரணம்னு நினைக்கிறாங்க.

வைகோ, கண்ணப்பன், இயக்குனர்கள் சீமான், அமீர் ஆகியோர் கைது சும்மாங்கட்டிக்கும் நடந்ததாக கருதறாங்க. அவிங்க மேல ஜாமீன்ல வரமுடியாத படிக்கு நடவடிக்கை எடுத்திருந்தா நியாயம்னு நினைக்கிறாங்க. இப்போ திருமாவளவன் நாங்க புலிகளை ஆதரிப்போம் ன்னு ஓப்பனா பேசிகிட்டு திரியறாரு இல்லியா! அவர் மேலயும், அவர மாதிரி ஆதரிச்சுப் பேசுறவங்க மேலயும் நடவடிக்கை எடுக்கணும். புலி ஆதரவுக்குரலை ஒடுக்கணும்னு சட்டமன்றக் கூட்டத்தொடர்ல புயலைக் கிளப்பப் போறாங்க. காங்கிரஸோட அந்த சர்ச்சைக்கு அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களும் துணையிருப்பாங்க"

"அப்படிப்போடு. அப்படியே சவுண்ட் விட்டுக்கிட்டு அ.தி.மு.க.கூட கூட்டணி சேர்ந்துடுவாங்களோ?"- கோபாலு

" அப்படியும் நடக்கலாம். எதுவும் உத்திரவாதமில்ல. ஆனா ஒண்ணு. தமிழகத்துல இருக்கிற திராவிடக் கட்சிகள் இப்போ பலமிழந்து இருக்கு. இந்த நேரத்துல காங்கிரஸ் எழுந்து நின்னாதான் ஆச்சு அப்படீன்னு டெல்லி காய் நகர்த்துது.

வர்ற நாடாளுமன்ற தேர்தல்ல தி.மு.க கூட்டணி இல்லாமப்போனா, விஜயகாந்த் கட்சிய கூட வெச்சிக்கலாம்னு ஒரு மூவ் இருக்கு. நம்ப கேப்டனும், காங்கிரஸ் நிலைப்பாட்டுக்கு ஏற்ற மாதிரி இலங்கைத் தமிழர் பிரச்னையிலோ, விடுதலைப்புலிகள் விஷயத்திலோ பெரிசா குரல் எழுப்பாம அடக்கி வாசிக்கிறாரு. பெரிய தொகை, அதிக சீட்டு ங்கிற நிலைப்பாட்டுல நிக்குறாராம் கேப்டன். ஓ.கே.ஆயிடுச்சுன்னா காங்கிரஸ் கூட்டணி சரியாயிடும்னு இருக்காராம்"

"என்னப்பா...அநியாயமா சொல்ற. இப்படிக்கூட நடக்குமா?"

" ஆமாம்பா. நடக்கவும் வாய்ப்பு இருக்கு. காங்கிரஸ் தலைமையில கேப்டன், பா.ம.க.ன்னு ஒரு அணிய வச்சு ஜெயிச்சுடலாம்னு இருக்காங்க. விஜயகாந்தும், பா.ம.க.வும் பரம எதிரியா இருந்தாலும், அவிங்க ரெண்டு பேருக்குள்ள கூட்டணி கிடையாதே. அந்த ரெண்டு பேரும் காங்கிரஸ் கூடத்தானே கூட்டணி. அத மனசுல வச்சுதான் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவரு அடிக்கடி ராமதாஸ்கூட போன்ல பேசிகிட்டு வர்றாரு. இப்போ ராமதாஸையும் நேரில சந்திச்சு பேசுறாரு. அவருக்கேத்த மாதிரி டாக்டர் ராமதாஸும் எங்களுக்கு புலிகள் கூட எந்தவிதமான தொடர்பும் இல்லை. பார்த்ததும் இல்லை. ஆனா ஈழத்தமிழர் விஷயத்தை ஆதரிக்குறதுல விட்டுக் கொடுக்க மாட்டோம்னு கொஞ்சம் வாய்ஸ் மாத்துறாரு"

"புல்லா போதையை ஏத்திக்கிட்டாகூட இந்தளவுக்கு தலைசுத்தாது போலிருக்கு. நம்ம அரசியல்வாதிங்க என்னா மாதிரி குழப்புறாங்க பாரு. சரி. தி.மு.க தலைவரு என்ன செய்யப்போறாராம்"- அன்வர்பாய்

"அய்யோ. அவரு பாட்டை நினைச்சாதான் ஓவரா தலை சுத்துது. மொதல்ல ஈழத்தமிழருக்கு ஆதரவா எம்.பி.க்கள் ராஜினாமா என்றார். அப்புறம் அப்பிடி எல்லாம் எடுத்தவுடனேயே செய்திட முடியாதுங்கிறார். இலங்கையோட பிரச்னையில ஓரளவுதான் தலையிட முடியும்ங்கிறார். அட, அது தெரியாமலா அனைத்துக்கட்சி கூட்டத்துல போர்நிறுத்தம் செய்ய இந்திய அரசு வலியுத்தணும், இல்லேன்னா ராஜினாமான்னு சொன்னீங்கன்னு கேட்டா, இதுக்கு மேல என்னால முடியாது. வேற யாருனா முன்ன நில்லுங்க. நான், கூட இருந்து ஒத்தாசை பண்றேன்னு கோபிச்சுக்குறாரு. அப்படியே போர் நிறுத்தம்ங்கிற விஷயத்தை விட்டுட்டு நிதி கொடுங்கோன்னு வாய்ஸை உயர்த்தினாரு.

பா.ம.க, திருமா, வைகோ உள்ளிட்ட கட்சிங்க அப்போ போர்நிறுத்தம் என்னாச்சு? அப்படீன்னு கேட்டா உடனே கவிதை எழுதி திட்டுறாரு. அந்தப்பக்கம் காங்கிரஸ் கட்சி கோபப்படாதபடிக்கு நடந்துக்கணும். இந்தப்பக்கம் தமிழக மக்களோட ஈழஆதரவுக்கு எதிர்ப்பில்லாமலும் இருக்கணும். இதான் ரெண்டும் கெட்டான் ஆசைங்கிறது. கேட்டால் இதுதான் அரசியல் சாணக்கியத்தனம்னு சொல்லிக்கிறாங்கோ" என காய்ச்சி எடுத்தார்.

"சுவருமுட்டிய பேச விட்டா இப்படித்தான். குண்டக்க மண்டக்க போட்டுத் தாக்குவாரு. சரி கிடக்கட்டும். அண்ணன் வைகோ விடுதலையாயிட்டாரு. அ.தி.மு.க. அம்மாகூட பேசினாராம். எப்படி. அ.தி.மு.க.கூட கூட்டணியில இருப்பாரா- மாட்டாரா?"- சித்தன்

"ஏன்யா. உண்மைய சொன்னா என்னைய திட்டுவீங்க. எதுக்குப் பேசணும். ஆனாலும் பேசாம இருக்க முடியாது. வைகோ அண்ணன் வரவர என்னை மாதிரியே கொள்கை தள்ளாட்டத்தில் இருக்காரு. அவருக்குள்ள ஈழஆதரவு, புலி ஆதரவு பற்றி குறைசொல்ல முடியாது. ஆனா அவரு கூட்டணி வச்சிருக்கிற அம்மா புலி வாடையே கூடாதுங்கிறாங்க.

ஒழிக்கப்படவேண்டிய இயக்கம்னு சொல்றாங்க. அதே மாதிரி இம்புட்டு நடத்திருக்கு. இன்னும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவா ஒரு புல், பூண்டைக்கூட தூக்கிப் போடல. அப்படிப்பட்ட அ.தி.மு.க.கூட, எங்க கூட்டணி தொடரும். யாரும் பிரிக்க சதி செய்ய முடியாதுங்கிறாரு. அ.தி.மு.க கூட்டணியில் இருந்து பிரிக்கத்தான் அவரை கலைஞர் கைது செய்தாருன்னு சவுண்ட் கொடுக்கிறாரு. அப்படீன்னா, இயக்குனர்கள் சீமானும், அமீரும் என்ன அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தா இருக்கிறார்கள்? அம்புட்டு ஏன்?. வைகோ அம்மாவை விட்டுக்கொடுக்காம பேசற அளவுக்கு, அந்த அம்மா ஏதாவது பேசணும் இல்ல. என் சகோதரர் வைகோன்னு ஏதும் பாசம் பொங்கின மாதிரி தெரியல. ஒரு கருத்தையும் சொல்லாம இருக்காங்க. பாவம். அண்ணன் வைகோதான் பெரிசா பேசிகிட்டு இருக்காங்க" என்று கலாய்த்து விட்டார்.

"சரி. போதும்யா. இதுக்கு மேல யாரும் கலாய்க்க வேணாம். அப்புறம் நம்ம அலப்பறைய தாக்கி அறிக்கை விடுவாங்க" என்ற சித்தன், "நான் கடைசியா ஒரு சேதிய சொல்றேன். பா.ம.க.கூட பழைய படி உறவு வச்சிக்கிடறதுக்கு நம்ப சென்ட்ரல் மினிஸ்டர் டி.ஆர்.பாலுவை கலைஞர் தூது அனுப்பினாரில்ல. அதுக்கு ராமதாஸ் தரப்புல யோசிச்சு சொல்றதா முடிவு செய்யப்பட்டுள்ளதாம். யோசிக்கிறதுக்கான கணக்கு என்னாங்கிறதுக்கு நிறைய பட்டியல் இருக்காம். விவரமா அடுத்த தபா சொல்றேன்யா. என்னமோ திடீர்னு சாரல் மழை வருது. பொழுதோட வீட்டுக்குப் போவோம்" என்றபடியே எழுந்தார் சித்தன்.

சபை கலைந்தது.

சபை களைகட்டும்

ஒட்டுக்கேட்டவர்: பா.ஏகலைவன்

"ஏம்பா. நாற்காலி கனவு, அடுத்த முதல்வர் நினைப்பு ஏதும் இல்லாத நடிகர் விஜய், இலங்கைத் தமிழர்களுக்காக உண்ணாவிரதம் நடத்தினாரே. அவிங்களுக்கு மட்டும் வேறு விலைவாசி இருக்கா என்ன?"- கோபாலு.

"அதை என்கிட்ட கேட்டா..? கேப்டன்கிட்டதான் கேட்கணும். உண்மையில இந்த விஷயத்துல நடிகர் விஜய எல்லோரும் பாராட்டுறாங்க. சில முக்கிய தமிழ் உணர்வாளர்கள் தொடர்ந்து எடுத்துச் சொன்னதை புரிஞ்சுகிட்டு பாலிட்டிக்ஸ் பதவி ஆசைன்னு கணக்குப் போடாம ஒரு உண்மையான போராட்டத்தை நடத்தியிருக்காரு. ஆகாதவங்க ஆயிரம் காரணம் சொல்வாங்க. அது கிடக்கட்டும்" என்றபடியே எழுந்தார்.

நன்றி விஜய்.

ஜானா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.