Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தற்கொலைக் குண்டுதாரியுடன் லோஷனுக்குத் தொடர்பாம்: ஊடகத்துறை அமைச்சர்

Featured Replies

வெற்றி வானொலியின் பொது முகாமையாளர் ஏ.எர்.வாமலோஷனன் விடுதலைப் புலிகளின் தற்கொலைக் குண்டுதாரியுடன் தொடர்புவைத்திருந்தவர் என ஊடகத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

“தற்கொலை அங்கி வைத்திருந்த தற்கொலைக் குண்டுதாரி ஒருவருடன் லோஷன் தொடர்பு வைத்திருந்துள்ளார். குறிப்பிட்ட தற்கொலைக் குண்டுதாரி சைனட் அருந்தித் தற்கொலை செய்துவிட்டார். அவர் குறித்து விசாரணை செய்யும் போதே லோஷனுக்கும் தொடர்பிருப்பது தெரியவந்தது” என இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன்யாப்பா அபயவர்த்தன தெரிவித்தார்.

விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புபட்டிருப்பதாகக் கூறி கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு லோஷன் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுத் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு, தடுத்துவைக்கப்பட்டிருக்கும

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம் ஒரு ஆளை பிடித்திட்டிங்கள் அதுக்கு இப்ப இப்பிடி ஒரு காரணம் வேற. இப்பிடி பார்த்தால் பிள்ளையானையும் கருணாவையும் பிடிக்கவேணுமல்லோ உவையும் எல்லாரோடையும் தொடர்பு வைத்திருந்தவைதானே எப்ப பிடிப்பிங்கள் :) ??? முக்கிய ஆக்கள் இவர்கள் கிழக்குக்கு சூரியனை தூக்கி பிடித்து வெளிச்சம் காட்டி கொண்டு திரியினம் அவையளை விட்டுட்டு ஒரு ஆளை பிடித்து வைத்து இருட்டறைக்குள்ள போட்டிருக்கிறிங்கள் விட்டுடோனும் சொல்லிட்டன் சுப்பன்னைக்கு கோவம் வந்தால் தெரியும் தானே ....................அது :(

Edited by suppannai

  • கருத்துக்கள உறவுகள்

அமைதி அமைதி சுப்பண்ணை. :)

லோஷன் ஒரு தரமான பல்சுவை நடுநிலை ஊடகவியலாளர்...

அவரின் சகாப்தம் சிறையிலேயே முடிந்துவிடுமோ என்று கவலையாக உள்ளது

அவரின் வலைப்பதிவில் வந்த சில கட்டுரைகள் தான் இதற்கு காரணம் என நினைக்கிறேன். இணையத்தில் உலாவரும் சில கூலிக் கும்பல்கள் இதனாலேயே லோசனை புலி என்று மாட்டிவிட்டிருக்கிறார்கள்!

லோசனின் கட்டுரை ஒன்று

இலங்கையில் ஒரு தமிழ் ஜனாதிபதி!

அமெரிக்க வரலாற்றில் புதிய சரித்திரப் பதிவை ஏற்படுத்திய பராக் ஒபாமா பற்றியே நேற்றும் இன்றும் பரபரப்பு!

ஆபிரிக்கப் பின்னணியுடன் சாதாரண நடுத்தர வாழ்வு வாழ்ந்த ஒரு வழக்கறிஞர் இன்று உலகின் மிகப் பெரும் வல்லரசின் முதல் குடிமகன்.

முன்னொரு காலத்தில் அடிமைகளாகக் கருதி சிறுமைப்படுத்தி, கொடுமைப்படுத்திய இனத்திலிருந்து (இன்று வரை கறுப்பினத்தவரின் உரிமைகளுக்காகப் போராடும் ஜெஸி ஜக்ஸன் போன்றவர்கள் இருக்கின்றார்கள்) பெரும்பான்மையினரான வெள்ளையர் பலபேரின் வாக்குகளோடும் அமெரிக்கத் தலைவனாகியுள்ளார்.

சர்வதேச பொலிஸ்காரன் என்று சகலநாடுகளின் விடயங்களிலும் மூக்கை நுழைத்து அடாவடி அமெரிக்கா ஒபாமாவின் வெற்றி மூலம் நல்ல பெயரை சம்பாதித்துள்ளது.

விளையாட்டுக்களில் வெற்றிகளையும் பதக்கங்களையும் குவிக்க மட்டுமல்ல; வேலைத்தளங்களில் கடினவேலை செய்யமட்டுமல்ல ; போர்க்களங்களில் இரத்தம் சிந்த மட்டுமல்ல ; தமது நாட்டை வழிநடத்த தலைவனாகவும் சிறுபான்மையினரில் ஒருவரான கறுப்பர் ஒருவரைத் தம்மால் தெரிவுசெய்ய முடியும் என்பதைப் பறைசாற்றியுள்ளனர்.

உண்மையிலேயே ஜனநாயகம் மீது பற்றுக்கொண்ட நாடு அமெரிக்கா என்பதற்கு இதைவிட வேறு என்ன சாட்சிவேண்டும்?

அதுசரி இந்தியா என்ற மிகப் பெரியநாட்டில் ஒரு சீக்கியர்,ஒரு ஆந்திரர்,ஒரு வடநாட்டவர் என்று யார் வேண்டுமானாலும் பிரதமராகலாம்...(வெளிநாட்டுப் பெண் என்றால் மட்டும் கொஞ்சம் சிக்கல்!!!) எந்த இனத்தவரானாலும் இந்தியாவின் முதல் குடிமகனாகலாம் (ஒரு தமிழர் - இஸ்லாமியர் கூட )

அமெரிக்காவிலே ஒரு கறுப்பினத்தவரால் முடிந்திருக்கிறது.

ஆனால்

இலங்கையில் மட்டும் சிங்கள பௌத்தராக இருந்தால் மட்டுமே ஜனாதிபதியாகலாம். ஜே ஆர் ஜயவர்த்தனா முதல் இன்றுள்ளவர் வரை பலபேர் உண்மையில் கிறிஸ்துவ மதத்தினராக இருந்தாலும் அவையெல்லாவற்றையும் மறைத்து பூந்தட்டு ஏந்தி, போதி (அரசமரம்) வழிபாடு செய்து ஜனாதிபதி ஆனது தனிக்கதை.

எனினும்,எந்த அரசினதும் அரசு கட்டில்களைத் தாங்கி நிற்கும் சிறுபான்மையினர் யாருக்கும் (தமிழரோ, முஸ்லிமோ) பிரதமர் பதவி கூடக் கிடையாது இலங்கையிலே!

1977இல் தமிழ்பேசுவோர் பெரும்பான்மையாக வாழும் வடகிழக்கின் அமோக வாக்குகளோடு தமிழர் விடுதலைக் கூட்டணியின் வெற்றியும், எதிர்கட்சித் தலைவராக அமிர்தலிங்கம் தெரிவு செய்யப்பட்டதும் அப்போதைய ஜனாதிபதி ஜெயவர்தனாவின் கண்களை உறுத்தின.

அதன்பின்னர் உருவாக்கப்பட்ட யாப்பின் பிரகாரம் தான் இந்த சிங்கள பௌத்தரல்லாதோர் ஜனாதிபதியாக மாற முடியாத நிலை விகிதாச்சாரத் தேர்தல் முறை மூலமும் சிறுபான்மைக்கட்சி எதுவுமே எதிர்க்கட்சி ஆகவும் முடியாது.

மூன்றில் இரண்டு பெரும்பான்மை வந்தாலே யாப்பு மாற்றப்படலாம். எந்தப் பேரினவாதி தான் சிறுபான்மையை ஸ்ரீலங்காவில் தலை தூக்கி விடுவான்? இதேவேளை நேற்று அமெரிக்காவில் ஒபாமா வென்றது கொழும்பில் பல சிங்கள நண்பர்களுக்கு பிடிக்கவில்லை.

ஏதோ தமிழ்ப்புலியொன்று வெற்றி பெற்று விட்டதாகவோ அல்லது பராக் ஹூசைன் ஒபாமா என்ற முஸ்லீம் தமது உரிமைகளை எடுத்துவிட்டார் என்ற எரிவு!

மக்கெயின் வென்றிருந்தால் மகிந்தவே அமெரிக்கா ஜனாதிபதி ஆனது போல ஆடியிருப்பார்கள்...

கட்டுரைக்கு வந்த பதில்கள்

13 comments:

சுகா said...

எனது சிங்கள பல்கலைக்கழக சக மாணவர்களுக்கும் சரியான கவலை. தமிழர்களின் சம உரிமையை மறைமுகமாகக் குத்திக் காட்டுவதாலும்..

November 6, 2008 2:08 PM

தங்க முகுந்தன் said...

அருமையான ஆக்கம்!

நன்றி லோசன் வாழ்த்துக்கள்!

மனமுண்டானால் இடமுண்டு!

எமது நாட்டில்தான் அது கிடையவே கிடையாதே!!

November 8, 2008 12:30 AM

IRSHATH said...

நான் BBC இல் கேட்டதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

ஒபாமா வின் பிரசாரம் ஒரு போதும் கறுப்பின மக்களை நோக்கி குவிந்ததாக இருக்கவில்லை. அது ஒரு தேசத்தின் பெருவாரியான மக்களின் நலன் சார்ந்து இருந்தது. அதனால் தான் அவர் வென்றார்.

இங்குதான் முழு தேசதிட்குமாக பேசினால் கைக்கூலி என்று போட்டு தள்ளுகிறார்களே. கதிர்காமருக்கு அந்த வாய்ப்பு இருந்ததை நாம் மறக்க கூடாது.

இர்ஷாத்

November 8, 2008 4:51 PM

LOSHAN said...

அது சரி கதிர்காமர் தமிழர் என்பதில் அவரது பெயரைத் தவிர வேறு ஆதாரம் ஏதாவது உண்டா? அவர் தமிழில் பேசி நாம் யாராவது ஒருவர் கேட்டிருகிறோமா?

அவர் சர்வதேசம் எங்கும் பிரயாணம் செய்து விடுதலைப் புலிகளைத் தடை செயுமாரி கோரியதைத் தவிர வேறு என்ன உருப்படியாக செய்தார்?

என் அவருக்கு பிரதமர் பதவியைப் பெறமுடியாமல் போயிற்று?

இர்ஷாத் உங்கள் பார்வை கோணத்தை கொஞ்சம் மற்ற வேண்டும் நீங்கள்..

அதுசரி A.C.S.ஹமீதுக்கு அல்லது M.H.Mohamadக்கும் பிரதமர் பதவி கிடைக்கவிலையே.. ஏன்???

November 8, 2008 6:21 PM

நந்தவனத்து ஆண்டி said...

வணக்கம் அண்ணா ! உங்கள் பதிவு அருமை

அதற்கு வந்த பின்னூட்டமொன்றில் . . . இர்ஷாத் என்ற நண்பர் ? ? ?

// கதிர்காமருக்கு அந்த வாய்ப்பு இருந்ததை நாம் மறக்க கூடாது. // என்று பெரிய காமடியொன்றை பின்னூட்டமாக இட்டுப்போயிருக்கிறார். இவரெல்லாம் இலங்கைப்பதிவராக இருந்து கொண்டு குறுகிய வட்டத்துக்குள் சிந்திப்பதால் தான் இலங்கைப்பதிவரது மானம்,அவர்களது எழுத்துக்கள் எல்லாம் கேலிக்குரியவையாக இருக்கின்றன . .

அவரது பதிவுகளும் ஆங்காங்கே இடும் பின்னூட்டங்களும் கேவலமாக இருக்கின்றன !

உங்களகல் இயன்றஅளவு உங்கள் கோபத்தைக்கட்டுப்படுத்தி அவருக்கு உண்மையைப்புரியவையுங்கள்

நன்றிகளுடன்

ஆண்டி

November 8, 2008 8:03 PM

சயந்தன் said...

என்னது

கதிர்காமர் தமிழரா.. எப்பேல இருந்து ? :) சொல்லவேயில்லை..

பாவம் அந்த மனுசன் உலகமெல்லாம் திரிந்து புலிகளை தடை செய்தவர். ஆனா ஒரு பிரதமர் பதவியை கூட குடுக்கிறதுக்கு சிங்கள மேலாண்மை விட வில்லை. கடைசிநேரத்திலயாவது அதை பற்றி சிந்தித்து மனம்வருந்தியிருப்பாரோ..

November 8, 2008 9:06 PM

IRSHATH said...

நான் சொன்னது ஒபாமா தேசிய ரீதியில் அரசியல் நடத்தினார் என்பதே! அவர் இன ரீதியாக நடத்தவில்லை.

அவ்வாறன ஒப்பீட்டுக்கு கதிரை தவிர வேறு யாரும் இல்லை.

ஹமீட் மற்றும் முஹம்மது இருவரும் ஒரு பிரதமர் பதவிக்கான எத்தனிப்பையும் செய்யவில்லை.

ஆண்டி, உங்கள் கருத்துக்களை ஏற்று கொள்ளாவிட்டால் அது கேலிக்குரியதா? நான் நானாகவே இருக்க விரும்புகிறேன்!

பின்னூட்டம் போட வேண்டாம் என்று இந்த வலை உரிமையாளர் சொன்னால் இதில் என் கருத்துக்களை சொல்லமாட்டேன். அவ்வளவுதான்!

அல்லது உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள். இருவரில் யாருக்காவது தெளிவு கிடைக்கும்

இர்ஷாத்

November 9, 2008 3:33 PM

Anonymous said...

ஒரு தமிழர் இலங்கையில் சனாதிபதியாக வர முடியாது. அப்படி வருவதாக வைத்துகொள்வோம்.என்ன நடக்கும்? அவர் புலிகளை ஆதரிக்காவிட்டால் இர்ஷாத் கூறியமாதிரி கைக்கூலி என்று போட்டு தள்ளப்படுவார்.

November 9, 2008 5:17 PM

Anonymous said...

//புலிகளை ஆதரிக்காவிட்டால் இர்ஷாத் கூறியமாதிரி கைக்கூலி என்று போட்டு தள்ளப்படுவார்.//

புலியை விடுங்களையா. புலி இல்லை என்றே வைத்துக்கொள்வோம் .......... உங்களால் ஒரு மயிரையும் (தமிழ் தானே ) ஒன்றும் பண்ண முடியாது . எடுத்ததுக்கெல்லாம் நாங்க புடுங்கி இருப்போம் புலி விடாது புலி விடாது என்று எத்தின நாளைக்கு பேய் காட்ட போறீங்க.

November 9, 2008 7:37 PM

Paheerathan said...

அதிகமாக இந்தியாவுக்கு கடிதம் எழுதுபவருக்கு கொடுப்பதாக இருந்தால் ......ஆநோந்த சங்கரிக்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது.

ஹி ஹி ஹி நானும் ஏதாவது காமெடி பண்ணலாமெண்டு பார்த்தேன்.

November 9, 2008 8:28 PM

IRSHATH said...

என்ன உருப்படியாக செய்தார் எண்டு எல்லாம் கேட்க கூடாது! யார்தான் செஞ்சிருகாங்க உருப்படியா?

ஆமா! ஆனந்த சங்கரி இருக்கார்ல. சில நேரம் அவர் பெயர சொல்லியிருந்தன் எண்டால் தமிழர் என்பதில் அவரது பெயரைத் தவிர வேறு ஆதாரம் நிறைய இருந்திருக்கும். எல்லாரும் அவர் தமிழ்ல பேசி கேட்டிருக்காங்க.

November 10, 2008 10:17 AM

சாந்தி said...

இலங்கையில் ஒருதமிழ் ஜனாதிபதியென்றவுடன் ஏதோ நீங்கள் அடுத்த தேர்தலில் நிக்கிறீங்களாக்குமெண்டு நினைச்சுப்போட்டேன்.

ஒபாமா ஒபாமா இந்த கறுப்பினத் தலைவரும் என்னத்தை கொண்டுவருவாரோ ஆர் கண்டது.

பொறுத்தார் புவியாழ்வார். பழமொழியொண்டு தேவையில்லாமல் ஞாபகத்துக்கு வருது.

November 10, 2008 3:28 PM

கொழுவி said...

பொறுத்தார் புவியாழ்வார்//

யா யா

பொங்கினார் பொங்கல் சாப்பிடுவார்

http://loshan-loshan.blogspot.com/2008/11/blog-post_06.html

Edited by vasisutha

ஒரு வலைப்பூ

இன்று வலையாகிவிட்டது

கொடுமை

  • கருத்துக்கள உறவுகள்

நண்பர் சயந்தன் உற்பட பலர் இலங்கையில் இருந்து இப்படி எழுதுவது தொடர்பான ஆபத்துக்கள் பற்றி எடுத்துச் சொன்னார்கள். ஆனால் லோசன் பேசுகின்ற உரிமையை யாவது இலங்கையரசு கொடுக்கும் என்று நம்பியிருந்தார். அது கூட மறுக்கப்பட்ட நாடு என்பதை அவர் தனது 31 வயது வரை புரிந்து கொள்ளாமல் இருந்துவிட்டார்.

இலங்கையரசு சோடித்த விடயம் என்பது பொய்யான ஒன்று என்றே நினைக்கின்றேன். 90களின் முற்பகுதியிலேயே அவர் கொழும்பில் 15-16 வயதில் குடியேறி, அங்கேயே தனது நிரந்தர வாழ்வினைக் கொண்டிருந்தார். பின்பு வடக்குக்கிழக்கிற்குச் சென்று தங்கிய காலங்கள் மிகக்குறைவு.

தமிழர்களுக்கு இலங்கையில் பேசக்கூட உரிமையில்லை என்பது தான் லோசனுக்குப் போடப்பட்ட இரும்புச் சிறை.

மனுசன் இந்தவிசயங்களில ரொம்பக் கவனமாத்தான் இருந்தவர், வலைப்பதிவு ஆரம்பிக்கும்வரை.. நாங்கள் றேடியோவில ஏதாவது வாயத்திறந்தாலும் உடன போன் வரும் "தம்பி கொஞ்சம் அடக்கி வாசி" எண்டு. வலைப்பதிவுக்குள்ள வந்தபிறகு பலருடைய கேள்விகளுக்கும் பதில் சொல்லவேண்டிய நிலையில கொஞ்சங்கொஞ்சமாய் ஆரம்பிச்ச வினை இது.

ஆரம்பத்தில சூரியன் வானொலியின் முகாமைத்துவத்தால் கொடுக்கப்பட்ட அழுத்தம் என்றுதான் கருதப்பட்டது. திங்கட்கிழமை கழிந்தபிறகும் விடவில்லை என்றதும்தான் காரணம் வேறு என்பது தெரியவந்தது. வானொலியில் பிரபலமான ஒருவருடைய தொலைபேசி இலக்கம் சந்தேகத்துக்குரிய ஒருவரிடம் இருந்தது என்பதற்காக கைதுசெய்வதெல்லாம் கொடுமையப்பா....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.