Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எழுத்துலக மௌனம் – “தமிழர்கள் இலங்கை பூமியின் பூர்வீகக் குடிகள்”

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எழுத்துலக மௌனம் – “தமிழர்கள் இலங்கை பூமியின் பூர்வீகக் குடிகள்”

on 07-12-2008 01:36

எழுத்துலக மௌனம் – “தமிழர்கள் இலங்கை பூமியின் பூர்வீகக் குடிகள்” : பா.செயப்பிரகாசம் : தமிழர்கள் இலங்கை பூமியின் பூர்வீகக் குடிகள். அமெரிக்கப் பூர்விகர்களான செவ்விந்தியத் தலைவன் 'சியால்த்' உணர்ந்து சொன்னது போல, "இந்த பூமி எங்களின் தாய். நாங்கள் இந்த பூமியின் ஒரு அங்கம். அது எங்களில் ஒரு அங்கம். வாச மலர்கள் எங்கள் சகோதரிகள். மானும் குதிரையும், ராஜாளிப் பறவையும் எங்கள் சகோதரர்கள். பாறை, மலைமுகடுகள், புல்வெளிகளில் படிந்திருக்கும் பனித்துளிகள், மனிதன் எல்லாமும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை. ஓடைகளிலும் ஆறுகளிலும் பளபளத்து ஓடும் நீர் வெறும் நீரல்ல. அது எங்கள் மூதாதையரின் ரத்தம். அது வெள்ளையனுக்குப் புரிவதில்லை"

அது போல "இந்த மண்ணிலேதான் அவர்களது பாதச்சுவடுகள், பதிந்திருக்கின்றன. அவர்களது மூச்சுக்காற்று கலந்திருக்கிறது. இந்த மண்ணிலேதான் எமது இளம் காலாதி காலமாக, கொப்பாட்டன், முப்பாட்டன், பாட்டன் என தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வருகிறது" - அமெரிக்க பூர்விகக் குடிகளான செவ்விந்தியர்களினதும், இலங்கையின் பூர்வீகக் குடியினரான தமிழர்களினதும் மூல வரலாற்றுப் புள்ளிகள் ஒன்றாகவே இருக்கின்றன. செவ்விந்தியக்குடி ஒரு பழங்குடி இனமாகவே இருந்து கழிந்தது. ஆனால் தமிழர்கள் என்ற பூர்வீகக் குடியினர் ஒரு இனமாக வளர்ச்சி பெற்று தனெக்கென தனி அரசை நிறுவி, தனி இறையாண்மை கொண்டிருந்தனர்.

செவ்விந்தியத் தலைவன் "அது வெள்ளையனுக்குப் புரிவதில்லை" - என்று சொன்னது போலவே, தமிழருடைய வரலாற்று மேன்மையும் சிங்களருக்குப் புரிவதில்லை. வரலாற்று உண்மையை ஆதிக்க இனம் என்ற நிலையிலிருந்து முற்றிலும் அழித்திடவே முயற்சி செய்கின்றனர்.

"இலங்கை ஒரு பௌத்த சிங்கள நாடு, இது சிங்களருக்குச் சொந்தமானது” ஓராண்டு பதவி நீட்டிப்புப் பெற்ற இலங்கை ராணுவத் தளபதி பொன் சேகா சொன்னார். (இவர் அமெரிக்கக் குடியுரிமையும் பெற்றவராக வாழுகிறார் என்பது

சிறப்புச் செய்தி)

"தமிழர்களுக்குப் போவதற்கு இன்னொரு நாடு இருக்கிறது. அதுபோல் இஸ்லாமியர்களுக்கும் இன்னொரு தேசம் உண்டு. சிங்களவர்களுக்கு இது தான் நாடு "புத்தனுடைய சொல்லைப் புதைத்து விட்டு, அவனுடைய பல்லை வைத்து (அநுராதபுரம் புத்த விஹார்) ஆராதனை செய்கிற புத்த பிக்குகள் முதல் அதிபர் ராஜபக்க்ஷே வரை இந்த வாசகத்தை உதிர்க்கிறார்கள். 1958 - ல் இனக் கலவரம் வெடித்து தலைநகர் கொழும்புவில் தமிழர் அதிகம் வாழும் பகுதிகளில் சிங்களக் காடையர்கள் தாக்குதல் நடத்தினர். பண்டார நாயகா தலைமையிலான அரசும் போலிசும், ராணுவமும் வேடிக்கை பார்த்ததோடன்றி "பழி எடுங்கள்" என தூண்டியும் விட்டார்கள். அப்போது மே 26, தல் பவில சீவன் சதோரா என்ற புத்தத் துறவி "ஒரு சிங்களவன் உயிருக்கு ஆயிரம் தமிழர்கள் சமம்" என்று ஒரு நிகழ்ச்சியில் பேசியதை கொழும்பு மாலைத் தினசரியான ஆங்கில அப்செர்வர் வெளியிட்டிருந்தது.

"தமிழர்கள் எந்தப் பகுதிகளில் வாழுகிறார்களோ அங்கு தங்களைப் பலப்படுத்திக் கொண்டு வருகிறார்கள். சிங்களவர்கள் தமிழர்களால் அழிக்கப்படும் ஆபத்து இருக்கிறது, இதற்கு இடம் கொடுக்கப் போகிறோமோ?" என்று பொரணை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சாகர பலன சூரியா நாடாளுமன்றத்தில் கேட்ட நேரத்தில், அம்பாந்தோட்டை எம்.பி.-யான லக்ஷ்மன் ராஜபக்க்ஷே குறுக்கிட்டு "அவர்களை அழித்து விடுங்கள்" என்று கத்தினார். ஆனால் சாகர பலன சூரியா தெரிவித்ததற்கு மாறாக யதார்த்த நிலைமைகள் வேறொன்றைச் சித்தரித்துக் காட்டின.

இலங்கைப் பரப்பில் 29 விழுக்காடு தமிழ் வழித்தாயகப் பகுதியாகும். ஓரின ஒற்றையாட்சி முறையினால் தமிழ்ப் பகுதிகளில் திட்டமிட்டு சிங்களக் குடியேற்றம் நடத்தப்பட்டு, தமிழர் நிலம் பறிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. கிழக்கில் பெரும்பான்மையும், வடக்கில் முப்பது விழுக்காட்டுப் பரப்பிலும் சிங்களர் குடியேற்றப்பட்டனர். 1948-ஆம் ஆண்டில் கல்முனை மாவட்டத்தில் 4.5 சதவீதமாக இருந்த சிங்களர் 1950-ஆம் ஆண்டு முதல் அதிகரித்து, 1990-ல் 38 சதவீதமாக உயர்ந்து பின்னர் அதுவே பெரிய சமுதாயமாகி கல்முனை மாவட்டத்தை 'திகாமடுல்ல’ என்று சிங்களப் பெயர் மாற்றுமளவுக்கு குடியேற்றப் பெருக்கம் நடத்தப்பட்டது. அரசுப் பணிகள், இராணுவம் அனைத்திலும் சிங்களர் உயர்ந்து கொண்டே வர, இரண்டு விழுக்காட்டுக்கும் குறைவாக தமிழர்கள் கீழாகிக் கொண்டே போனார்கள். இலங்கைத் தீவில் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்ற அடையாளமே இல்லாமால் செய்வதற்கு எத்தனிப்புகள் எடுக்கப்பட்டன.

ஐ.நா. அவையில் முதலில் தமிழ் பேசிய இலங்கை அதிபர் என்ற பெயரை வாங்கிக் கொண்ட, ராஜபக்க்ஷே கீபிர் விமானங்களால், பீரங்கிகளால், ஏவுகணைகளால் அக்னி அர்ச்சனை நடத்திக் கொண்டு வருகிறார்.

வன்னியிலிருந்து இடம் பெயர்ந்த அகதிகள் முகாமிற்கு அருகில் தடை செய்யப்பட்ட 'கிளாஸ்டர்' குண்டுகள் வீசப்பட்டன. இரண்டு குழந்தைகள் உட்பட மூவர் உயிரிழந்த இந்நிகழ்வில் அகதிகள் பலர் காயமடைந்தனர். நவம்பர் மாதத்தில் மட்டும் வன்னியில் ஐந்து முறை கிளாஸ்டர் குண்டுகள் வீசப்பட்டன. இந்த கிளாஸ்டர் குண்டுகள் இரண்டாம் உலகப் போரில் நாகஷாகி, கிரோஷிமா மீது வீசப்பட்ட அணுகுண்டுக்கு அடுத்தப்படியான பேரழிவு கதிர் வீச்சு ஆயுதம். இந்தக் குண்டுகள் வீசப்படுவது தடையில் இருந்த போதிலும் இலங்கை பயன்படுத்தியுள்ளது. இது யுத்த நெறிமுறைக்கு மாறானது. நூற்று ஏழு நாடுகள் கூடி 3 - ஆம் தேதி நார்வே தலைநகர் ஆஸ்லோவில் கிளாஸ்டர் குண்டுகள் பயன்படுத்துவதற்கு எதிரான உடன்படிக்கையில் கையெழுத்திட்டன.

வேறொங்கோ ஏழு கடல் தாண்டி, சத்தா சமுத்திரம் தாண்டி இந்த மானுட அவலம் கேட்கவில்லை. நமக்கு அருகேயுள்ள சிறு கடல் தாண்டிக் கேட்கிறது. நமது தோளில் வந்து உட்கார்ந்திருக்கிற அந்த அவலம், நமது தொப்புள் கொடி உறவாகவும் இருக்கிறது. தமிழகமெங்கும் எழுச்சிகள், எதிர் வினைகள் பெருகியுள்ளன. மாதம் அரைக்கோடி ரூபாய் ஊதியம் வாங்கும் கணினிப் பொறியாளர்கள் (Tidel Park - 17-11-2008) உடல் ஊனமுற்றோர் அமைப்பு என சமூகத்தின் சகல பகுதியினரும் எதிர்வினை ஆற்றிக் கொண்டிருக்க - தமிழகத்திலுள்ள 221 ஓவியர்களும் 14.11.2008 முதல் 21.11.2008 வரை ஓவிய படையல் செய்து, ஓவியங்கள் விற்ற தொகையை ஈழ மக்களுக்கு உதவிட - திரையுலகினரின் ஆவேசம் நம்மைப் பிரமிக்க வைத்திட - அரவாணிகள் என்றழைக்கப்படும் திருநங்கையர் 08.12.2008 ஆம் தேதி ஒரு நாள் போராட்டம் நடத்துகின்றனர். கோவையில் அனைத்துக் கலை இலக்கிய அமைப்புகளின் கூட்டமைப்பு 22.11.2008 உண்ணா நிலை போராட்டத்தினை எடுத்தது. சென்னை புழல் சிறையில் கைதிகள் உண்ணா நிலைப் போராட்டம், 24.10.2008 அன்று கொட்டும் மழையில் சென்னையில் நடந்த மனிதச் சங்கிலி - என மக்களின் சகல பிரிவினரும் ஈழத் தமிழருக்கு ஆதரவாக குரல் எழுப்பி வருகின்றனர். மானுடம் எங்கெல்லாம் சிதைவுக்கு ஆளாக்கப்படுகிறதோ அங்கெல்லாம் போய் தாங்கி நிற்பது கலைஞனின் நெஞ்சம். கூப்பிடு தூரத்தில் இருக்கிறது ஈழம், ஆனால் தமிழ் எழுத்துலகில் மௌனம் ...

கட்டுரையின் தொடர்ச்சி ... வரும் வாரங்களில் ......

அதிகாலை

  • கருத்துக்கள உறவுகள்

இனைப்புக்கு நண்றிகள் கறுப்பி........டமிழ் எழுத்துலகவாதிகள் எல்லாம் ஜனநாயகத்தின் கவலாளிகள் அதுதான் போல.......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.