Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இன ஒடுக்குமுறை இடம்பெறக் கூடிய நாடுகளின் வரிசையில் இலங்கையின் பெயரும் இடம்பெற்றுள்ளது

Featured Replies

இன ஒழிப்பு இடம்பெறும் நாடுகளின் சிகப்பு சமிக்ஞை பட்டியலில் இலங்கைக்கு முக்கிய இடம் - ஐநா கவனம் செலுத்த வேண்டும் எனக் கோரிக்கை:

உலக நாடுகளில் இடம்பெற்றுவரும் இன ஒழிப்புக்களுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் அமைப்பு அதிக கவனம் செலுத்த வேண்டுமென இன ஒழிப்புக்கு எதிரான அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

பலமுனைகளில் மேற்கொள்ளப்படும் தடுப்பு நடவடிக்கைகளின் மூலமே இன ஒழிப்பை ஓரளவுக்காவது தடுக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் செயலகமும், பாதுகாப்புப் பேரவையும் இன ஒழிப்புக்கு எதிராக அதிக முனைப்புடன் செயற்பட வேண்டும் என இன ஒழிப்புக்கு எதிரான அமைப்பின் திட்டப் பணிப்பாளர் ஜில் சாவிட் தெரிவித்துள்ளார்.

இன ஒழிப்பு இடம்பெறக்கூடிய நாடுகள் குறித்து சிகப்பு சமிக்ஞை பட்டியலொன்று வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை, கொங்கோ, சூடானின் டார்பூர், மியன்மார், ஈராக், ஆப்கனிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் சோமாலியா ஆகிய நாடுகளில் இன ஒழிப்பு குறித்த அபாயம் நிலவுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இன ஒழிப்புக்கு எதிரான ஐக்கிய நாடுகள் பிரகடனத்தின் 60 ஆவது ஆண்டு பூர்த்தி நாளைய தினம் அனுஸ்டிக்கப்படவுள்ளதனை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

http://www.globaltamilnews.net/tamil_news....=3115&cat=1

இன ஒடுக்குமுறை இடம்பெறக் கூடிய நாடுகளின் வரிசையில் இலங்கையின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது

உலகின் இனஒடுக்குமுறை இடம்பெறக் கூடிய சாத்தியம் காணப்படும் நாடிகளின் வரிசையில் இலங்கையும் இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய நாடுகளின் அறிக்கையொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இனஒடுக்குமுறைகள் குறித்து ஆராயும் பொருட்டு நியமிக்கப்பட்ட ஐந்து வெவ்வேறு நிறுவனங்களின் அறிக்கைகளிலும் இலங்கையின் பெயர் முன்னிலை பெற்றிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மொத்தமாக உலகின் 33 நாடுகளில் இனஒடுக்குமுறை ஏற்படக் கூடிய அபாயம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது. மிகவும் மோசமான இனஒடுக்குமுறை இடம்பெறக் கூடிய நாடுகளின் வரிசையில் சூடான், கொங்கோ, மியன்மார், பாகிஸ்தான், சோமாலியா மற்றும் இலங்கை ஆகியன சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

இனஒடுக்குமுறை இடம்பெறும் நாடுகளுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பின் மூலம் இதனைக் கட்டுப்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக பொருளாதாரத் தடைகளோ அல்லது இராஜதந்திர அழுத்தங்களின் மூலமாகவோ மட்டும் இந்த நிலைமையை கட்டுப்படுத்த முடியாதென ஐக்கிய நாடுகளின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

http://www.tamilwin.com/view.php?20IWnz20e...d43oQH3b02PLS3e

  • கருத்துக்கள உறவுகள்

உலகின் இனஒடுக்குமுறை இடம்பெறக் கூடிய சாத்தியம் காணப்படும் நாடிகளின் வரிசையில் இலங்கையும் இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய நாடுகளின் அறிக்கையொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இனஒடுக்குமுறைகள் குறித்து ஆராயும் பொருட்டு நியமிக்கப்பட்ட ஐந்து வெவ்வேறு நிறுவனங்களின் அறிக்கைகளிலும் இலங்கையின் பெயர் முன்னிலை பெற்றிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மொத்தமாக உலகின் 33 நாடுகளில் இனஒடுக்குமுறை ஏற்படக் கூடிய அபாயம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது. மிகவும் மோசமான இனஒடுக்குமுறை இடம்பெறக் கூடிய நாடுகளின் வரிசையில் சூடான்இ கொங்கோஇ மியன்மார்இ பாகிஸ்தான்இ சோமாலியா மற்றும் இலங்கை ஆகியன சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

இனஒடுக்குமுறை இடம்பெறும் நாடுகளுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்இ சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பின் மூலம் இதனைக் கட்டுப்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக பொருளாதாரத் தடைகளோ அல்லது இராஜதந்திர அழுத்தங்களின் மூலமாகவோ மட்டும் இந்த நிலைமையை கட்டுப்படுத்த முடியாதென ஐக்கிய நாடுகளின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

நன்றி:- தமிழ்வின்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

On the group's "red alert" watch list of the countries of most concern for genocide are Sudan, Myanmar, Somalia, Iraq, Pakistan, the Democratic Republic of Congo, Sri Lanka and Afghanistan.

http://www.iht.com/articles/ap/2008/12/09/...ng-Genocide.php

நல்ல விடயம்.முதல் முதலாக ஸ்ரீ லங்காவில் இடம்பெறுகிறது என்று தமிழர் தரப்பு அல்லாதவர்களால் தெரிவிக்கப்பட்டிருக்கின்றத

Edited by காட்டாறு

  • கருத்துக்கள உறவுகள்

இனவழிப்புக் கொடூரம் இடம்பெறும் தேசங்களின் வரிசையில் இலங்கை

[10 டிசம்பர் 2008, புதன்கிழமை 9:50 மு.ப இலங்கை]

இன்று - டிசம்பர் 10 ஆம் திகதி - சர்வதேச மனித உரிமைகள் தினம்.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச்சபையால் 1948 ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் திகதி மனித உரிமைகளுக்கான சர்வதேச பட்டயம் ஏற்று பிரகடனப்படுத்தப்பட்டது. அன்று முதல் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 10ஆம் திகதி சர்வதேச மனித உரிமைகள் தினமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

இந்த வரிசையில் இம்முறை இப்பிரகடனத்தின் அறுபதாவது ஆண்டுப் பூர்த்தியில் இத்தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது.

இப்பிரகடனத்தை ஏற்றுக்கொண்டுள்ள இலங்கை, பிரிட்டிஷ் சாம்ராச்சியப் பிடியிலிருந்து விடுபட்டு சுதந்திரத் தீவாக மாறிய அறுபதாவது ஆண்டும் இந்த வருடமே அனுஷ்டிக்கப்பட்டது. இந்தப் பின்புலத்திலே நாம் வாழும் இந்த இலங்கைத் தீவில் மனித உரிமைகளின் நிலைமையை இந்த சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் ஒரு தடவை மீள் மதிப்பீடுசெய்வது பொருத்தமாகிறது.

பிரிட்டிஷ் பிடியிலிருந்து இலங்கைத் தீவு விடுபட்ட காலம் முதல் இங்கு தனது பிரதான - அடிப்படை - உரிமைகளை இழந்து, அடிமைப்பட்ட சமூகமாகத் துன்பியலில் உழலும் பேரவலம் சிறுபான்மையினமான தமிழினத்தின் கதியாக இருந்து வருவதுதான் வேதனைக்குரிய யதார்த்தமாகும்.

பிரிட்டனின் பிடியிலிருந்து அரசியல் அதிகாரம் பெரும்பான்மையினமான சிங்களவரிடம் கைமாறியமையை அடுத்து, சிங்களப் பேரினவாதமே இத்தேசசத்தின் மேலாண்மைக் கருத்தாதிக்கமாக மாறியது. அன்று முதல் தமிழர்களுக்கு எதிரான இன அடக்குமுறை, குரூர வன்முறை மற்றும் பலாத்கார வடிவம் எடுத்தது.

தமிழரின் தேசிய வாழ்விற்கும் இனத்துவத்தின் தனித்துவத்துக்கும் அடிப்படை ஆதாரங்களாகவும், அத்தியாவசிய அடித்தளமாகவும் இருந்த அம்சங்களையும், கட்டமைப்புகளையும் படிப்படியாக இலக்கு வைத்துத் தகர்த்துவிடும் கொடூர வடிவமாக இந்த இன அடக்குமுறை இங்கு விரிவாக்கம் பெற்றமையே இந்த அறுபது ஆண்டுக்கால சுதந்திர(?) இலங்கையின் வரலாறாகக் கட்டவிழ்ந்துள்ளது.

இந்த இனவழிப்பு அடக்குமுறை காலத்துக்குக் காலம் பல வடிவங்களை எடுத்துத் தமிழர்களுக்கு எதிராகப் பாய்ந்தது.

ஆரம்பத்தில் தமிழரின் தனித்துவ இன அடையாளமான மொழி உரிமை முதலில் பறிக்கப்பட்டது. அதனை அடுத்து, கல்வி உரிமை பிடுங்கப்பட்டது. அதன்பின், வேலைவாய்ப்பு உரிமைக்கு ஆப்பு வைக்கப்பட்டது. தொடர்ந்து பாரம்பரிய நிலங்கள் மீதான சொத்துரிமைக்கு வேட்டு வைக்கப்பட்டது. அதேசமயம், தமிழ்ப் பேசும் மக்களின் வாக்குரிமை, பாரம்பரிய வாழ்விடங்களில் இனத்துவத்தைப் பேணும் தாயக உரிமை போன்றவற்றுக்கும் திட்ட மிட்டுக் கேடு விளைவிக்கப்பட்டது.

இப்படித் தமிழர்களின் அடிப்படை - பிரதான - உரிமைகளுக்கு கட்டப்பட்டு வந்த சமாதி, கடைசியில் இனப்படுகொலைக் கொடூரமாக இப்போது விஸ்வரூபம் எடுத்து, அவர்களின் வாழ்வியல் உரிமைகளுக்கே நிரந்தர சாவுமணி அடிக்கும் கட்டத்தை எட்டிவிட்டது.

பேயாட்டம் போடும் பேரினவாதத் திமிர், தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்து, கொடூரப் போர் மூலம் துவம்சம் செய்யும், இனவழிப்பின் உச்சத்தை எட்டியிருப்பதை இன்று உலகு வேதனையோடு பார்த்திடும் நிலைமை.

சர்வதேச மனித உரிமைகள் பட்டயத்தின் கீழ் இனப் படுகொலை அல்லது இன அழிப்பு சகித்துக்கொள்ள முடியாத விடயமாக அமைகின்றது.

இந்தப் பின்புலத்திலேயே இனவழிப்பு பேராபத்து நிலவும் ‘சிவப்பு எச்சரிக்கை’ நாடுகளின் வரிசையில் - முதல் எட்டு தேசங்களுள் - இலங்கைக்கும் இடம் அளித்திருக்கின்றது அமெரிக்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மடலின் அல்பிரைட் அம்மையார் தலைமையில் இவ்விடயங்களை ஆராய்ந்த அமெரிக்காவின் விசேட செயலணிக்குழு.

இந்தத் தேசங்களில் இனவழிப்பு அல்லது இனப் படுகொலைகள் இடம்பெறாமல் தடுக்கும் நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுக்கும்படி அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் பராக் ஒபாமாவை அந்த செயலணிக் குழு வலியுறுத்திக் கேட்டிருக்கின்றது.

இந்த செயலணிக் குழுவின் மேற்படி அறிக்கை, புதிய அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்கவிருக்கும் பராக் ஒபாமாவையும், அவரின் கீழ் அமெரிக்காவின் புதிய வெளிவிவகார அமைச்சராகப் பதவியேற்கவிருக்கும் ஹிலாரி கிளிண்டன் அம்மையாரையும் வழிநடத்தும் கொள்கை வழிகாட்டியாக அமையும் என்று குறிப்பிடப்படுவது முக்கிய விடயமாகும்.

இனவழிப்புக் கொடூரம் இடம்பெறும் பேராபத்துள்ள ‘சிவப்பு எச்சரிக்கை’ நாடுகள் எட்டில் ஒன்றாக இலங்கையை இந்த அறிக்கை சுட்டிக் காட்டியிருக்கையில், சர்வதேச வல்லாதிக்க நாடான அமெரிக்காவின் புதிய நிர்வாகத்தை வெளிவிவகாரக் கொள்கையில் வழிநடத்தும் குறிப்பேடாக இந்த அறிக்கை அமையும் என்பது இலங்கையில் பெரும் கொடூரங்களை எதிர்கொண்டு வரும் தமிழர்களுக்கு ஆறுதல் தரும் செய்தியாகும்.

இந்தச் செய்தி தரும் தெம்புடனும், தமக்கும் வாழ்வியல் மற்றும் மனித உரிமைகள் கிடைக்கும் தினம் விரைவில் மலரும் என்ற நம்பிக்கை எதிர்பார்ப்புடனும் இன்றைய சர்வதேச மனித உரிமைகள் தினத்தை ஈழத் தமிழர்கள் எதிர்கொள்கின்றார்கள்.

uthayan

  • கருத்துக்கள உறவுகள்

Sri Lanka in "Genocide Red Alert" Watch List for the Killing of TAMILS

New York-based Genocide Prevention Project in a report to be published Tuesday includes Sri Lanka as one of the eight "red alert" countries where genocide and other mass atrocities are underway or risk breaking out. A comprehensive list of 33 countries is also contained in the report. Tuesday marks the 60th anniversary of the United Nation's convention on the prevention of genocide, and 20th anniversary of U.S's ratification of the treaty.

"Red alert" countries include Afghanistan, and Iraq alongside regions currently experiencing genocidal conflict such as Sudan's Darfur and the Democratic Republic of the Congo. These and Myanmar, Pakistan, Somalia and Sri Lanka all made the list's top eight because they appear in each of the five "expert" indexes.

The next 25 "orange alert" countries appear in at least three of the indexes. They include China, Colombia, Philippines and Indonesia as places where ongoing or simmering violence could flare to genocidal proportions.

"It is possible to identify early indicators of mass atrocity crimes. But what happens now is the international community sees what's going on, gets paralyzed and, if it acts, really only acts after the fact," said Jill Savitt, project executive director.

Savitt states three factors that are likely to change the "political will" lacking in the past.

First, the stated determination of Susan Rice, U.S. president-elect Barack Obama's choice for U.S. ambassador to the UN, to prevent future genocides after witnessing the after-effects of the 1994 Rwanda slaughter.

Second, current discussion around the 60th anniversary of the genocide prevention convention, which calls on countries to prevent and punish actions of genocide.

And third, the public "guilt" over what occurred in Rwanda and Bosnia, and what she called public "hunger for a response" to the Darfur crisis, Savitt says.

Meanwhile, a task force led by Madeleine K Albright, former Secretary of State, and an advisor to Obama and Clinton, released Monday a report on world genocide threats which will likely be used by the Obama administration as a guide post to prevent developing genocides.

"Preventing genocide is an achievable goal," the Albright report says. "Genocide is not the inevitable result of ancient hatreds or irrational leaders. It requires planning and is carried out systematically. There are ways to recognize signs and symptoms, and viable options to prevent it at every turn if we are committed and prepared," Washington Post said, quoting from the Albright report.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=27699

Edited by yarlpaadi

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.