Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்களத்தில் கவனயீர்ப்பு அணுகுமுறை பற்றிய போட்டி

Featured Replies

புலம்பெயர்ந்த சமூகங்களில் அவர்களது கலாச்சார வாழ்வு முறைகள் பொழுது போக்குகள் பழக்கவளக்கங்களிற்கு ஏற்ற முறையில் கவனயீர்பு நிகழ்வுகளை எப்படி ஒழுங்கமைக்கலாம் என்பது பற்றி ஒரு போட்டி யாழ்களத்தில் நடத்தப்பட இருக்கிறது.

இதற்கு உங்களின் ஆர்வமான பங்களிப்பு வேண்டப்படுகிறது.

போட்டியை ஒழுங்கமைக்கவோ அல்லது பங்குபற்றவோ விரும்புவர்கள் உங்கள் ஆர்வத்தை இந்த திரியில் தெரிவிக்கவும்.

மேலதிக விபரங்கள் விரைவில்.

  • கருத்துக்கள உறவுகள்

இவை போட்டிகளுக்கான வழிமுறைகள் அல்ல. எமது மக்களின் அன்றாட வாழ்வோடு.. எமது ஈழத்து உறவுகளின் வாழ்வின் நிலைகளை.. ஒருங்கிணைத்துக் காட்டும் சில வழிமுறைகள்..

1.. தமிழ் பள்ளிகள் மற்றும் கலை பயில்விக்கும் இடங்கள் என்று கூடும் சிறுவர்கள் சிறுமிகள் மத்தியில் முத்திரை மூலம்.. வன்னியில் சிறுவர்களுக்கு பங்களிப்புச் செய்ய நிதி திரட்டக் கோரலாம். இங்கிலாந்தைப் பொறுத்தவரை.. பாடசாலை மட்டத்தில் கூட இவ்வாறான பொது தொண்டுகளை மாணவர்கள் செய்ய ஊக்குவிக்கும் நிலை இருப்பதால்.. நிதிப்பங்களிப்புக்கு முத்திரை (ஸ்ரிக்கர்) என்ற வகையில் எமது சிறார்களின் துன்பங்களை விளக்கும் சிறிய படங்கள்.. வாசகங்களை ஆங்கிலத்தில்... அல்லது அந்தந்த நாட்டு மொழிகளில் அடக்கி ஒரு பொதுச் சேவையைக் காண பங்களிப்பை மாணவர்கள் மத்தியில் ஊக்குவிக்கும் திட்டத்தின் கீழ் ( இப்படியான முத்திரைகள் வெளியிடப்படின்.. நிறைய மாணவர்களிடமிருந்து இதற்கான பங்களிப்பை என்னாலும் பெற்றுத்தர முடியும்).. நிதிப்பங்களிப்புக்களையும்.. தகவல் பரி்வர்த்தனைகளையும் செய்ய முயலலாம். இவ்வாறான ஸ்ரிக்கர்களை தமிழர் அச்சகங்கள் தொண்டு அடிப்படையில் பிரசுரித்து வழங்கலாம்.

2. அண்மையில் பலஸ்தீனச் சிரார்களுக்கான நிதிச் சேகரிப்புத் தொடர்பான கூப்பன்கள்.. இலவச பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தப்பட்டு ஆர்வமுள்ள மக்களிடமிருந்து பங்களிப்புக் கோரப்பட்டுள்ளன. பத்திரிகைகளில் வரும் கூப்பன்களில் கோரப்படும் விபரங்கள் மூலமே நிதிப்பங்களிப்பைச் செய்யலாம். அந்தக் கூப்பன்களில் அதற்குரிய விபரங்கள் கோரப்பட்டுள்ளன. (உதாரணத்துக்கு இங்கிலாந்தில் வசிப்பவர்கள் 12-01-2009 மற்றும் அதன் பின்னர் வெளியான மெற்றோ ஆங்கிலப் பத்திரிகையை பார்க்கவும்.) எமது பத்திரிகைகளும் இவ்வாறான செயற்பாடுகளை செய்யலாம். அவை நம்பிக்கைகுரிய தமிழர் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன்.. அவ்வவ் நாட்டு சட்டதிட்டங்களுக்குள் நின்று இதைச் செய்யலாம். குறிப்பாக வன்னிச் சிறார்களை மையப்படுத்தி பல செயற்பாடுகளை செய்யலாம். அதற்கு யுனிசெப் போன்ற நிறுவனங்கள் நிச்சயம் உதவ முன்வரும்..!

3. பல்கலைக்கழகங்களில் மாணவர் அமைப்புக்களில்.. உள்ளவர்களைக் கொண்டு.. எமது சிறார்கள்.. மற்றும் மக்கள் சார்ந்த மனிதாபிமான மற்றும் உரிமைப் பிரச்சனைகளை எடுத்துச் சொல்ல.. சிறிய அல்லது மத்திய அளவிலான Canvassing செய்யலாம். அதற்கான விளம்பர உடைகளை.. அணிந்து கொண்டு.. இதனைச் செய்யலாம். இதனைத் தொடர்ச்சியாக ஒரு ஒழுங்கமைக்கட்ட முறையில் மேற்கொள்ள வேண்டும். ஓரிரு நாள் அல்லது வாரங்களுக்கு என்று செய்துவிட்டு விடுவதால்.. அதனால் பிரயோசனம் குறைவு. குறிப்பாக அரசுகளை.. போராளிகளை பகிரங்கமாக சம்பந்தப்படுத்தாமல்.. படங்கள் வாயிலாக மறைமுகமாக இனங்காட்டிக் கொண்டு.. அதற்குரிய வகையில் உடையணிந்து கொண்டு.. செய்யலாம். Canvassing பங்கெடுக்கும் மக்களை ஊக்குவிக்கும் வகையில்.. எமது சிறுவர்கள்.. அல்லது மக்களின் நிலையை விளக்கும் சிறிய பொம்மைகள் அல்லது பட்ச் வழங்கலாம். அத்தோடு பங்களிக்க விரும்புபவர்களிடம் நிதியும் சேகரிக்கலாம்..!

4. எம்மவர்கள் கலந்து கொள்ளும் களியாட்ட நிகழ்வுகளில்.. இலத்திரனியல் மயப்படுத்தப்பட்ட விளம்பரங்களை வைத்தல். இப்போ ஓரிரு புரோகிராம் செய்யப்பட்ட ஸ்கிரின் டிஸ்பிளே களில் காண்பிக்கப்படும் விளம்பரங்களை.. மக்களின் கவனத்தை கவரும் வகையில் வடிவமைத்து.. வழங்குதல். குறிப்பாக.. ஒரு போர் விமானம் கண்ணை உறுத்தும் வகையில் பறந்து வருவது போன்றும்.. அது போடும் பொருள் வெடித்து மக்கள் கதறி அழுவதையும்.. அவர்கள்.. தமிழில் அழுவதாக.. தமிழிலும்.. ஆங்கிலத்திலும் செய்தியாக விடலாம்.

இவ்வாறான ஸ்கிரின் டிஸ்பிளே விளம்பரங்களில் வரும்.. வீடியோ செய்திகளை.. கையடக்கத் தொலைபேசிகளில் பரிமாறவும் செய்யலாம். ஒரே சோகமாக அன்றி.. மக்களை கவரச் செய்து.. அதன் மூலம்.. துன்பங்களை இனங்காட்டும் வகைக்கு.. அமைக்க வேண்டும்.

5. மற்றும் தனியார் வாகனங்களில் எமது மக்களின் துயர் விளக்கும் ஸ்ரிக்கர்களை ஒட்ட விற்பனை செய்யலாம். அவற்றில் பங்களிப்புக்கள் சேர வேண்டிய விபரங்களையும் அடக்கலாம்.

6. எம்மவர்கள் நடத்தும் உணவு விடுதிகளில்.. எம் சிறார்களின், மக்களின் நிலை விளக்கும்.. பொம்மைகளை செய்து வைக்கலாம். அல்லது பொதி செய்யும் பைகளில்.. படங்களாக அச்சடித்து வழங்கலாம். சிறுவர்கள் மத்தியில்.. டிஸ்பிளே விளையாட்டு பொருட்களை வழங்கலாம். அவை பெறுமதிமிக்க மூலப் பொருட்களால் அன்றி.. சாதாரண மூலப் பொருட்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டு.. சிறுவர்கள் சிறுமிகள் மத்தியில்.. தமது உறவுகளை நிலையை எடுத்துச் சொல்ல செய்யலாம்.

உதாரணத்துக்கு.. பிளாஸ்ரிக் உறைகளில் இதயம் ஒன்று பேசுவது போல செய்து.. அதனை விரிக்கச் சொல்லி சொல்ல.. அதனை விரிக்கும் போது.. குருதி சொட்டுவது போன்று.. ஒரு ஈழக்குழந்தை இருப்பதாகக் காட்டலாம்..! குழந்தைகள்.. பயப்பிடும் படியாக அன்றி.. அவர்கள் உணரத்தக்க வகையில் அமைவது நன்று.

அல்லது இலவசமாக வழங்கத்தக்க வகையில் puzzles விளையாட்டுக்களை வடிவமைத்து.. ஈழத்தின் துயர் விளக்கும் உருவங்களையும் பொருத்தச் செய்து காண்பிக்கலாம்..!

7. பத்திரிகைகளில்.. தொலைக்காட்சிகளில்.. ஈழத்தின் நிலை விளக்கும்.. சிறுவர்களுக்கான சிறிய காட்டூன் கதைகளை.. ஆங்கிலத்தில் அல்லது பிற நாட்டு மொழிகளில் கீறி, எழுதி வழங்கலாம். பல சிறுவர்கள் காட்டூன் படிப்பதில் ஆர்வமுள்ளவர்களாகவே இருக்கின்றனர். குறிப்பாக வானொலி.. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பாடல் கேட்க வரும் சிறுவர்கள் சிறுமிகள் மத்தியில் கேட்கப்படும் இதர கேள்விகளோடு.. தாயகம் சம்பந்தப்பட்ட அவலங்களைச் சொல்லத் தக்க சில விடயங்களையும் உள்ளடக்கிக் கொள்வது நன்று.

உதாரணமாக.. நீங்கள் பி எஸ் பியில் இப்போ என்ன கேம் விளையாடுகிறீர்கள்.. என்றால் பிள்ளை ஒரு பதிலைச் சொல்லும். அப்போது அது பற்றி உங்கள் அபிப்பிராயத்தைச் சொல்லி பிள்ளையின் கவனத்தை ஈர்க்கும் வகையி பேசி உற்சாகப்படுத்தி விட்டு.. உங்களுக்கு இந்த உலகில்.. இவ்வாறான கேம் விளையாட முடியாத சிறுவர்கள் உள்ள இடம் இருக்கு தெரியுமா என்று கேட்கலாம். நிச்சயம்.. பல சிறுவர்களுக்கு எமது வன்னிக் குழந்தைகளுக்கு பி எஸ் பி என்றால் என்னென்று தெரியாத சங்கதி தெரியாது..!

வெறுமனவே விஜய் மாமாவை பிடிக்குமா.. நயனதாராவை பிடிக்குமா என்று சிறுவர்களிடம் கேள்வி கேட்பதை கட்டுப்படுத்திக் கொண்டு.. இவ்வாறான எமது மக்களின் துயர் விளக்கும் கேள்விகளையும் கலந்து கேட்பதை வானொலி.. தொலைக்காட்சி நிகழ்ச்சி வடிவமைப்பாளர்கள் உள்வாங்கிக் கொள்ள வேண்டும்..!

இவ்வாறு.. பலவற்றை நாம் பட்டியலிட்டுக் கொண்டு போகலாம். ஆனால் செயற்படுத்த.. எம்மவர்களிடம்.. உள்ள வளங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு பயன்படுத்தப்படவும்.. தேவையான ஒத்துழைப்பும் அவசியம். அதை செய்ய முன்வந்தால்... நிச்சயம்.. நிறைய விடயங்களைச் செய்யலாம். இப்போதைய அளவில் இருப்பதை விட.. மக்களின் ஒவ்வொரு அன்றாட நிகழ்வுக்குள்ளும் தாயகம் பற்றிய விடயங்களைப் புகுத்திக் கொண்டால் மட்டுமே மக்களை தாயகம் நோக்கி தொடர்ச்சியாக சிந்திக்க வைக்க முடியும்..! ஆண்டுக்கொருக்கா ஆவணிக்கொருக்காக கூடிவிட்டுப் போவதால்.. நிச்சயம்.. அதன் தாக்கம் பெரிதாக அமையாது..! :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

த‌மிழ‌ர்க‌ள் ஓன்று கூடும் இட‌ங்க‌ளான கோயில்க‌ள்,த‌மிழ் பாட‌சாலைக‌ள்,விழாக்களுக்கு செல்லும் இட‌ங்க‌ளில் வெறும‌னே அர‌சிய‌லும் ம‌க்க‌ளின் அவல‌ங்க‌ளை ப‌ற்றி க‌தைத்து விட்டு அந்த‌ இட‌ங்க‌ளில் அதை மறந்து விட்டு செல்லாமல் தாயக‌த்தில் உள்ள ம‌க்களுக்காக ஆக்க பூர்வ‌மான நட‌வ‌டிக்கையில் ஈடுபட‌லாம்.

த‌மிழ் பாட‌சாலைக‌ளிலும்,கலைக‌ள் படிப்பிக்கும் ஆசிரிய‌ர்க‌ள் த‌ங்க‌ள் மாண‌வ‌ர்க‌ளுக்கு தாயக‌த்தில் மக்க‌ள் ப‌டும் கஸ்ட‌ங்க‌ளையும்,இல‌ங்கை வர‌லாற்றினையும் போதிக்க‌ வேண்டும்.

எங்க‌ளுக்கு தெரிந்த‌வ‌ர்க‌ளுக்கு விழிப்புணர்வினை ஊட்ட வேண்டும்.

இதை எங்கு குறிப்பிடுவது என்று தெரியவில்லை.... அதனால் இங்கு எழுதுகிறேன்..!

சிரிலங்கா அரசாங்கம் மற்றும் மக்கள் ராணுவவெற்றியில் தன்முனைப்பு பெற்றுள்ளனர். முல்லைத்தீவு வீழ்ச்சி அல்லது பிரபாகரன் கைது அல்லது தப்பியோட்டம் என்ற செய்திக்காக மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்து இருக்கின்றனர். இந்தச் செய்தி அவர்களுக்கு கிடைக்குமா அல்லது கிடைக்க எவ்வளவு காலம் செல்லும் என்பது குறித்து நாங்கள் இங்கே விவாதிக்க வேண்டாம்!

இவர்களின் இந்த மனோநிலையை எப்படி எங்களுக்கு சாதகமாக பயன்படுத்தலாம் என்பது குறித்து சிந்திப்பது நல்லது. இந்த நிலையில் எவர் சமாதானம், மனிதஉரிமை என்று பேசிக்கொண்டு வந்தாலும் சிங்களம் அவர்கள் முகத்தில் காறி உமிழும். அல்லது உதாசீனம் செய்தும். இதன் மூலம் குறித்தரப்பினரை எங்கள் பக்கம் கொண்டுவருவது இலகுவானது. திறமையான இராஜதந்திர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால் இது சாத்தியமாகும்! இது குறித்து புலம்பெயர்ந்த புத்திஜீவிகள் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். அரசுகள் மாத்திரமல்ல... ஊடகங்களை கூட இந்த முயற்சியில் அணுகலாம்... உதாரணமாக இதுவரை அரசை ஆதரித்து எழுதிய பிரபல ஊடகங்களில் மனிதாபிமான அவலங்களை விமரிசித்து அரசிற்கெதிரான கட்டுரை வெளிவந்தால் அதற்கெதிராக அரசும் அரசுசார்ந்தவர்களின் செயற்பாடுகளும் மூர்கத்தனமானதாக இருக்கும். இதன் மூலம் எமது எதிரிகளையும் நண்பர்களாக்கிக் கொள்ள முயலலாம்.

இரண்டாவது, இலங்கை அரசு சகலவழிகளிலும் போரை காரணம் காட்டி ஜனநாயக செயற்பாடுகளை முடக்கியுள்ளது. இந்த யுத்தத்தில் அரசு முழுவெற்றி பெற்று யுத்தம் ஒரு ஓய்வுக்கு வந்தாலும், இலங்கை அரசு இந்த ராணுவபலத்தை தொடர்ந்து பேணவே முயற்சிக்கும். அதற்காக இனி ஒரு ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுமா என்பதே சந்தேகமாக உள்ளது. அப்படி ஒரு இராணுவ அரசாக மாறும் பட்சத்தில் ஏற்படும் சர்வதேச மாற்றங்களை சாதகமாக பயன்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இதை எங்கு குறிப்பிடுவது என்று தெரியவில்லை.... அதனால் இங்கு எழுதுகிறேன்..!

சிரிலங்கா அரசாங்கம் மற்றும் மக்கள் ராணுவவெற்றியில் தன்முனைப்பு பெற்றுள்ளனர். முல்லைத்தீவு வீழ்ச்சி அல்லது பிரபாகரன் கைது அல்லது தப்பியோட்டம் என்ற செய்திக்காக மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்து இருக்கின்றனர். இந்தச் செய்தி அவர்களுக்கு கிடைக்குமா அல்லது கிடைக்க எவ்வளவு காலம் செல்லும் என்பது குறித்து நாங்கள் இங்கே விவாதிக்க வேண்டாம்!

இவர்களின் இந்த மனோநிலையை எப்படி எங்களுக்கு சாதகமாக பயன்படுத்தலாம் என்பது குறித்து சிந்திப்பது நல்லது. இந்த நிலையில் எவர் சமாதானம், மனிதஉரிமை என்று பேசிக்கொண்டு வந்தாலும் சிங்களம் அவர்கள் முகத்தில் காறி உமிழும். அல்லது உதாசீனம் செய்தும். இதன் மூலம் குறித்தரப்பினரை எங்கள் பக்கம் கொண்டுவருவது இலகுவானது. திறமையான இராஜதந்திர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால் இது சாத்தியமாகும்! இது குறித்து புலம்பெயர்ந்த புத்திஜீவிகள் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். அரசுகள் மாத்திரமல்ல... ஊடகங்களை கூட இந்த முயற்சியில் அணுகலாம்... உதாரணமாக இதுவரை அரசை ஆதரித்து எழுதிய பிரபல ஊடகங்களில் மனிதாபிமான அவலங்களை விமரிசித்து அரசிற்கெதிரான கட்டுரை வெளிவந்தால் அதற்கெதிராக அரசும் அரசுசார்ந்தவர்களின் செயற்பாடுகளும் மூர்கத்தனமானதாக இருக்கும். இதன் மூலம் எமது எதிரிகளையும் நண்பர்களாக்கிக் கொள்ள முயலலாம்.

இரண்டாவது, இலங்கை அரசு சகலவழிகளிலும் போரை காரணம் காட்டி ஜனநாயக செயற்பாடுகளை முடக்கியுள்ளது. இந்த யுத்தத்தில் அரசு முழுவெற்றி பெற்று யுத்தம் ஒரு ஓய்வுக்கு வந்தாலும், இலங்கை அரசு இந்த ராணுவபலத்தை தொடர்ந்து பேணவே முயற்சிக்கும். அதற்காக இனி ஒரு ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுமா என்பதே சந்தேகமாக உள்ளது. அப்படி ஒரு இராணுவ அரசாக மாறும் பட்சத்தில் ஏற்படும் சர்வதேச மாற்றங்களை சாதகமாக பயன்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

சிங்கள அரசின் உண்மை முகத்தை வெளிக்காட்டி எமது போராட்ட நியாயத்தை இனங்காட்ட இதுவே சரியான தருணம். அப்படி ஒரு நியாயப்பாட்டை நாம் உலகின் பார்வையில் எமது போராட்டம் நோக்கி உருவாக்கிவிட்டால்.. சிறீலங்கா அரசின் பயங்கரவாதக் கோசமும்.. போரும்.. போர்க்களத்தினூடன்றிக் கூட வெற்றி கொள்ளப்படக் கூடிய ஒன்றாக அமையும்.

பலஸ்தீன தேச உருவாக்கம்.. கிழக்குத்திமோர் போன்றவை.. போராடி இராணுவ வெற்றிகளால் வெல்லப்பட்ட தேசங்கள் அல்ல. மாறாக.. சர்வதேசத்தின் கவனத்தை தம்பக்கம் ஈர்த்துக் கொண்டதால் அவற்றின் அனுதாபத்தைப் பெற்றுக் கொண்டதால்.. சர்வதேசத்தின் ஆதாய பக்கங்களை தம்பக்கம் வைத்துக் கொள்ள முயன்றதால் பெறப்பட்ட வெற்றிகள். ஆயுதப் போராட்டங்கள் அதற்கான கருவியாக மட்டும் பாவிக்கப்பட்டன.

சாணக்கியனின் இக்கருத்து வரவேற்கப்படக் கூடியது மட்டுமன்றி.. காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்ற எம்மவர் பழமொழிக்கு அமைய நாம் செயற்பட வேண்டிய கட்டாயத்தையும் உணர்த்தி நிற்கிறது..!

வெறும்.. நில அபகரிப்புக்காக ஒப்பாரி வைப்பதிலும்.. சோகப்பட்டு வாடி வீழ்வதிலும்.. மனித உரிமைகளை முன்னுறுத்தி.. சிறீலங்காவின் உண்மை முகத்தை.. பேரினவாத சிந்தனைப் போக்கை வெளி உலகுக்கு உணர்த்த இதுவே சரியான தருணமாகும். இதை அடைய நாம் பெரும் தியாகங்களைச் செய்தே வந்துள்ளோம்.

எமது போராட்ட முதன்மை இலக்கை அடைய... சாத்தியமான எல்லாச் சூழ்நிலைகளையும் எமக்கு சார்ப்பாக ஆக்கிக் கொள்ளும் திறனை வளர்க்கவும் பாவிக்கவும் நாம் முனைய வேண்டும்..! :rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நாம் எல்லோரும் ஒன்றினைந்து செயற்பட வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.