Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வன்னிப்பகுதியில் யுத்த பிரதேசத்தினுள் சிக்கியுள்ள மக்களின் பாதுகாப்புக்காக மோதலற்ற பிரதேசம் அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வன்னிப்பகுதியில் யுத்த பிரதேசத்தினுள் சிக்கியுள்ள மக்களின் பாதுகாப்புக்காக மோதலற்ற பிரதேசம் அறிவிப்பு

வீரகேசரி இணையம் 1/21/2009 6:51:40 PM - விடுதலைப் புலிகளின் பிரதேசத்தினுள் இருக்கும் உள்ளுரில் இடம்பெயர்ந்த மக்கள் மற்றும் அங்கு வசிக்கும் பொதுமக்களின் பாதுகாப்புக்காக மோதலற்ற பிரதேசம் ஒன்றினை இராணுவம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வன்னி இராணுவ தலைமையகம் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு அரசாங்க அதிபர்களுக்கு அறிவித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பரந்தன் – முல்லைத்தீவு வீதியில் 25 ஆம் கிலோ மீற்றரில் இருந்து 32 ஆம் கிலோ மீற்றர் மைல் கல் வரையிலான சுமார் 7 கிலோ மீற்றர் நீளமான பிரதேசத்தில் அந்த வீதியின் வடக்குப் பக்கமாக உள்ள சுமார் 4 கிலோ மீற்றர் தூரமுள்ள பகுதியே இவ்வாறு பாதுகாப்பான பிரதேசமாக இராணுவத்தினரால் அறிவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பரந்தன் – முல்லைத்தீவு வீதியில் உள்ள உடையார்கட்டுச் சந்தி (இருட்டு மடு வீதி) யில் இருந்து மஞ்சள் பாலத்தடி (நாவலடி ஆற்றுப்பாலம்) வரையிலான பகுதியே இந்த பாதுகாப்பான பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் பரந்தன் முல்லைத்தீவு வீதியில் சுதந்திரபுரம் சந்தி, தேவிபுரம் சந்தி என்பன அமைந்திருக்கின்றன.

உடையார்கட்டு சந்தியில் இருந்து வடக்காக 4 கிலோ மீற்றர் நீளமும், மஞ்சள்பாலத்தடியில் இருந்து வடக்காக தேவிபுரம் கொலனியின் வடக்கு பகுதியில் 4 கிலோ மீற்றர் தொலைவும் இந்த பாதுகாப்பு பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பாதுகாப்பு பிரதேசத்தினுள் தேவிபுரம் கிராம சேவையாளர் பிரிவின் முழு பிரதேசமும், சுதந்திரபுரம் கொலனியின் ஒரு பகுதியும் அடங்கியிருக்கின்றது. சுதந்திரபுரம் கொலனியின் வடபகுதி, உடையார்கட்டு வடபகுதி, மூங்கிலாறு என்பன இதில் அடங்கவில்லை என்பதும் குறி்ப்பிடத்தக்கது.

பரந்தன் சந்தியில் இருந்து முல்லைத்தீவு செல்லும் வீதியில் உடையார்கட்டுச் சந்தி 25 கிலோ மீற்றர் தொலைபில் அமைந்துள்ளது. இந்த பாதுகாப்பு பிரதேசத்தின் கிழக்கு எல்லையாகிய மஞ்சள் பாலத்தடி, புதுக்குடியிருப்பு சந்தியில் இருந்து மேற்காக சுமார் நான்கு, நான்கரை கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வன்னிப்பிரதேசத்தில் தற்போது நாலரை லட்சம் மக்கள் இருப்பதாக அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர்கள் அனைவரும் இந்த பாதுகாப்பு பிரசேத்தினுள் சென்று வசிக்க முடியுமா, அவர்களுக்கு இந்தப் பிரதேசம் போதுமானதாக இருக்குமா என்பது கேள்விக்குறியாக இருக்கின்றது .

விடுவிக்கப்படாத பிரதேசத்தில் உள்ள மக்கள் மோதல்களில் பாதிக்கப்படாமல் இருப்பதற்கும், இந்த மக்களை விடுதலைப் புலிகள் கேடயமாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்காகவுமே இந்த பாதுகாப்புப் பிரதேசம் அறிவிக்கப்பட்டுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது.

இந்த அறிவித்தலை இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கும் சிவிலியன்களுக்கும் அறிவித்து அவர்களை இந்த பாதுகாப்பான பிரதேசத்திற்குச் உடனடியாகச் செல்லும்படி அறிவுறுத்துமாறு இராணுவம் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களின் அரசாங்க அதிபர்களைக் கேட்டுள்ளது.

அத்துடன் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையையும் உடனடியாக இந்த பாதுகாப்பான பிரதேசத்திற்குச் செல்லுமாறும் இராணுவம் தெரிவித்துள்ளது.

என்ன கூட்டிவைத்து நவாலி போல் குண்டு போடவா?

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கூட்டிவைத்து நவாலி போல் குண்டு போடவா?

மதுகா சரியாகக் சுட்டியுள்ளீர்கள். பரவலா அடிக்கிறது செலவெண்டு ஒரேயடியாக் கொன்றுகுவிக்கிற திட்டம்போலதான் இருக்குது. நவாலித் தேவாலயம், நாகர்கோயில், மருத்துவமனைகள், என்று தமிழர்களின் அனைத்துப் பகுதிகளும் கொலைவலையமாக்கப்பட்டமையை இப்போதும், அந்த மக்களின் அவலக்குரல். அதன் தொடராக இன்றும். அன்று நாம் எமது பங்கைச் சரியாகச் செய்யத்தவறியதன் விளையே இந்த அவலங்களாகும். இதன் பின்னும் எத்தனைபேர் உணர்ந்துள்ளொம். அதிசயங்கள் நிகழாதா என்ற அங்கலாய்ப்புடன், எமது அழிவுக்கு நாமே காரணமாகலாமா?

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே ஒன்றை அறிவிச்சு.. அதை மையப்படுத்தி இராணுவ நடவடிக்கையும் எடுத்து.. அது இப்ப இராணுவக் கட்டுப்பாட்டுக்குள்ள போயிட்டுது. இது அடுத்ததா..??!

சர்வதேச தொண்டர் அமைப்புக்களின் மேற்பார்வையின் கீழ்.. இரு தரப்பு இணக்கப்பாட்டோடு.. அமைக்கப்படும்.. மோதலற்ற பாதுகாப்பு வலயமே.. உபயோகமானது.

இவையெல்லாம் மக்களை மனிதக் கேடயமாகப் பயன்படுத்தி.. இராணுவ இலக்குகளை அடையச் செய்யப்படும் சிங்களப் பேரினவாதிகளின் நகர்வுகள் என்பதை உலகம் நன்கு அறிந்து கொண்டுள்ளதை பிபிசி செய்தி கோடிகாட்டியுள்ளது.

உண்மையாக தமிழ் மக்களில் அக்கறையுள்ள அரசாக இருந்திருந்தால்.. ஐநா மன்றம் உட்பட சர்வதேச உதவி நிறுவனங்களை வன்னியை விட்டு வெளியேறக் கோரி இருக்காது. அதுமட்டுமன்றி.. இப்படியான ஒரு பாதுகாப்பு வலயத்தை பிரகடனப்படுத்திவிட்டு.. வன்னிக்கான போரை ஆரம்பித்திருக்கும். அங்கு சர்வதேச தொண்டர் அமைப்புக்களின் கண்காணிப்பின் கீழ் மக்களை கவனித்திருக்கும். தேவையான உதவிகளை வழங்கி இருக்கும். ஆனால்.. நடந்தது என்ன..???!

The Sri Lankan government has strongly denied the claims and criticised the BBC and other news outlets for broadcasting them over the weekend.

The announcement of the buffer zone came as the army continued its offensive into the Tigers' sole remaining stronghold in the north - the area surrounding the town of Mullaitivu.

Our correspondent says that the government announced a similar zone a few months ago but those areas have now been captured.

http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/7842612.stm

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கூட்டிவைத்து நவாலி போல் குண்டு போடவா?

இரண்டு பக்கமும் மாத்தி மாத்தி உடுத்துறியள்

நீங்கள் எழுதுவதுபோல் வேண்டாம் விட்டுவிடுவோம் எல்லாவற்றையும் என்று நினைத்தால் போகலாம்தானே............????

அதுக்கும் விருப்பமில்லைப்போல.........???

என்னதான் செய்வதாக உத்தேசம்...........???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.