Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மக்களே யோசியுங்கள்! முத்துக்குமார் எழுதிய கடைசிக்கடிதம்

Featured Replies

மக்களே யோசியுங்கள்! முத்துக்குமார் எழுதிய கடைசிக்கடிதம்

இலங்கையில் ஈழத்தமிழர் பிரச்சனை முடிவுக்கு வரவேண்டும் என்பதை வலியுறுத்தியும், ஈழத்தமிழர்கள் படுகொலையை கண்டித்தும் தூத்துக்குடியை சேர்ந்த் வாலிபர் முத்துக்குமார் என்பவர் சென்னை சாஸ்திரி பவன் அருகே இன்று காலை 10.45 மணிக்கு (பாஸ்போர்ட் அலுவலகம்), ஈழத்தமிழர்களுக்கான ஆதவான கோஷங்களை எழுப்பிக்கொண்டே மண்ணென்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.

உயிருக்கு போராடிய அவரை சிகிக்சைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது மருத்துவர்களிடம் பேசிய முத்துக்குமார், தீக்குளித்த தன்னை யாரும் காப்பாற்றி விடக்கூடாது என்பதற்காக, பெட்ரோல் கேனில் பெரிய அளிவில் ஓட்டை போட்டு, மண்ணென்ணெய்யை தன் மீது ஊற்றிக்கொண்டதாக தெரிவித்தார்.

இப்படி புத்திசாலித்தனமாக இருக்கும் நீ ஏன் தீக்குளித்தாய் என்று மருத்துவர்கள் கேட்டதற்கு, என்னைவிட புத்திசாலியான குழந்தைகள், சிறுவர்கள், வாலிபர்கள், பெண்கள் அனைவரும் இலங்கையில் கொல்லப்படுகிறார்கள். போர் முனையில் சிக்கித் தவிக்கிறார்கள். அவர்களை காப்பாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தித்தான் நான் தீக்குளித்தேன் என முத்துக்குமார் தெரிவித்தார்.

மேலும் பேசிய முத்துக்குமரன், எங்கள் ஊரில் போருக்காக உயிர் தியாகம் செய்தவர்கள் அதிகம். உலக அமைதிக்காக போராடுபவர்கள் அதிகப் பேர் இருக்கிறார்கள். 'கொள்கை நல்லூர்' என்றே எங்கள் ஊரை சொல்லுவார்கள் என்றார். அந்த ஊரில் பிறந்த நான் ஈழத்தமிழர்களுக்காக உயிர் விடுவதில் மிகவும் சந்தோஷப்படுகிறேன் என்றார்.

இன்று காலை முத்துக்குமரன் தூத்துக்குடியில் இருக்கும், தனது தந்தை குமரேசனிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது குடும்பத்தாரின் நலம் பற்றி விசாரித்த முத்துக்குமரன், தீக்குளிக்கும் சம்பவம் பற்றி தனது தந்தையிடம் எதுவும் பேசவில்லை என்று தெரிவித்தார்.

26 வயதான முத்துக்குமரன், இலங்கை தமிழர்களுக்காக சென்னையில் எங்கு கூட்டம் நடந்தாலும், தவறாமல் கலந்து கொள்வார். பத்திரிக்கையில் தட்டச்சு பணியில் இருந்தாலும், தமிழ் உணர்வுள்ளவர் என்றும், ஈழத்தமிழர்களைப் பற்றி அன்றாடம் வேதனையுடன் பேசி வந்தவர் என்றும் முத்துக்குமரனுடைய நண்பர்கள் தெரிவித்தனர்.

ஈழத்தமிழர்களுக்காக உயிர்த்தியாகம் செய்திட்ட இந்த தமிழர் ஈழப்பிரச்சனை குறித்து கடைசியாக எழுதிய கடிதம் இதோ:

விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை...

அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே...

வணக்கம். வேலைக்குப் போகும் அவரசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன்.

ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன்.

உங்களைப்போலத்தான் நானும், தினமும் செய்தித்தாள்களையும் , இணையத்தையும் பார்த்துப் பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் என் சக தமிழர்களைக் கண்டு சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், யோசிக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் ஒரு சாமானியன், வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்று, சேட்டனென்றும் வந்தவனெல்லாம் வாழ, சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது.

அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ, இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாகிக்கிறது இந்திய ஏகாதிபத்யம். இந்தியாவின் போர் ஞாயமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே.. ஏன் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும்?

ராஜுவ்காந்தியைக் கொன்றார்கள் என்ற சொத்தை வார்த்தையை வைத்துக்கொண்டு, சில தனிநபர்களின் பலிவாங்கல் சுயநல நோக்கங்களுக்காக ஒரு பெரும் சமூகத்தையே கொன்று குவிக்கத் துடிக்கிறது இந்திய அதிகார வர்க்கம்.

ராஜீவ்காந்தி கொலையில் விடுதலைப்புலிகள் மட்டும் குற்றம் சாட்டப்படவில்லை. தமிழக மக்களையும் குற்றவாளிகள் என்று குற்றம் சாட்டியது ஜெயின் கமிசன் அறிக்கை. அப்படியானால் நீங்களும் ராஜீவ்காந்தியை கொலை செய்த கொலைகாரர்கள்தானா?

ஜாலியன் வாலாபாக்கில் வெள்ளையன் கொன்றான் என்றார்களே, இவர்கள் முல்லைத்தீவிலும் வன்னியிலும் செய்வதென்ன? அங்கு கொல்லப்படும் குழந்தைகளைப் பாருங்கள். உங்கள் குழந்தையின் நினைவு வரவில்லையா?

கற்பழிக்கப்படும் பெண்களைப் பாருங்கள், உங்களுக்கு அதுபோன்ற வயதில் ஒரு தங்கையோ, அக்காவே இல்லையா?

ராஜீவ் கொல்லப்பட்டபோது காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ஏன் அவருடன் இல்லை. கூட்டணிக் கட்சித்தலைவியான ஜெயலலிதா, தமிழ்நாட்டில் ராஜீவ் கலந்து கொள்ளும் ஆகப் பெரிய பொதுக்கூட்டத்தில் ஏன் பங்கெடுக்கப்போகவில்லை

என்பதுபோன்ற கேள்விகள் கேட்கப்படாமலும், இவர்களால் பதில் சொல்லப்படாமலும் கிடக்கின்றன.

மக்களே யோசியுங்கள். இவர்கள்தான் உங்கள் தலைவர்களா? பணம், அடியாள் பலம் ஆகியவற்றைக் கொண்டு மிரட்டல் அரசியல் நடத்தி வரும் இவர்கள் நாளை நம்மீதே பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? அப்படி பாய்ந்தால் யார் நம் பக்கம் இருக்கிறார்கள்?

thanks

nakheeran

சோனியா என்னும் கல்நெஞ்சக்காரியால் ஒரு இனமே அழpகிறது. கலைஞரே உமக்கு முதுகுவலி சுகமா? அடுத்து என்ன நாடகம்??

Edited by Subiththiran

முத்துக்குமார் வினியோகித்த துண்டு அறிக்கையின் விபரம்

29fire2.jpg

இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து, சென்னையில் முத்துக்குமார் (வயது 30) என்ற இளைஞர் இன்று தீக்குளித்து மரணமடைந்தார்.

இலங்கை தமிழர் பிரச்னையில் மத்திய அரசு பாராமுகமாக இருக்கிறது… இலங்கைத் தமிழர்களை காப்பாற்றுங்கள் என்று கூறியபடியே, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனில் முத்துக்குமார் இன்று காலை 11 மணியளவில், தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.

படுகாயத்துடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த இளைஞர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

சென்னை - கொளத்தூர் மக்கான் தோட்டம் திருவள்ளுவர் தெருவில் வசித்து வந்த முத்துக்குமார், மாத இதழ் ஒன்றில் பணியாற்றி வந்தவர். இவரது சொந்த ஊர், திருச்செந்தூர் அருகிலுள்ள ஆத்தூர் கொழுவை நல்லூர்.

தீக்குளிக்கப் போவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு முத்துக்குமார் வினியோகித்த துண்டு அறிக்கையின் விபரம் வருமாறு:

விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை…

அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே…

வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன். உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், இணையத்தையும் பார்த்து பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சக தமிழர்களைக் கண்டு சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், யோசிக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் ஒரு சாமானியன். வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும், சேட்டனென்றும் வந்தவனெல்லாம் வாழ, சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம். இந்தியாவின் போர் ஞாயமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே.. ஏன் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும்?

ராஜீவ்காந்தியைக் கொன்றார்கள் என்ற சொத்தை வாதத்தை வைத்துக்கொண்டு, சில தனிநபர்களின் பலிவாங்கல் சுயநல நோக்கங்களுக்காக ஒரு பெரும் மக்கள் சமூகத்தையே கொன்று குவிக்கத் துடிக்கிறது இந்திய அதிகார வர்க்கம். ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப்புலிகள் மட்டும் குற்றம்சாட்டப்படவில்லை. தமிழக மக்களையும் குற்றவாளிகள் என்று குற்றம்சாட்டியது ஜெயின் கமிஷன் அறிக்கை. அப்படியானால் நீங்களும் ராஜீவ்காந்தியைக் கொலை செய்த கொலைகாரர்கள்தானா?

ஜாலியன் வாலாபாக்கில் வெள்ளையன் கொன்றான் என்றார்களே, இவர்கள் முல்லைத் தீவிலும் வன்னியிலும் செய்வதென்ன? அங்கு கொல்லப்படும் குழந்தைகளைப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா? கற்பழிக்கப்படும் பெண்களைப் பாருங்கள். உங்களுக்கு அதுபோன்ற வயதில் ஒரு தங்கையோ, அக்காவோ இல்லையா? ராஜீவ் கொல்லப்பட்டபோது காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ஏன் அவருடன் இல்லை, கூட்டணிக் கட்சித் தலைவியான ஜெயலலிதா, தமிழ்நாட்டில் ராஜீவ் கலந்துகொள்ளும் ஆகப்பெரிய பொதுக்கூட்டத்தில் ஏன் பங்கெடுக்கபோகவில்லை என்பதுபோன்ற கேள்விகள் கேட்கப்படாமலும், இவர்களால் பதில் சொல்லப்படாமலும் கிடக்கின்றன. மக்களே யோசியுங்கள். இவர்கள்தான் உங்கள் தலைவர்களா? பணம், அடியாள் பலம் ஆகியவற்றைக் கொண்டு மிரட்டல் அரசியல் நடத்தி வரும் இவர்கள் நாளை நம்மீதே பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? அப்படி பாய்ந்தால் யார் நம் பக்கம் இருக்கிறார்கள்?

கலைஞரா? நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அப்பொழுதும் அவர் அறிவிப்பார். பிறகு, மத்திய அரசைப் புரிந்துகொள்வார்(?!). பிறகு மறுபடி சரியான முடிவை எடுக்க வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவார் - இந்த மாசம், இந்த வாரம், இதுவரைக்கும் என்ன எவனும் தொட்டதில்ல என்கிற வின்னர் பட வடிவேல் காமெடியைப் போல. காகிதம் எதையும் சாதிக்காது மக்களே! இப்பொழுது, உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டுள்ளார். தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய இந்த சூரப்புலி உண்மையில் தமிழுக்காகவோ, தமிழருக்காகவோ செய்ததென்ன? ஒருமுறை அவரே சொன்னார், ”தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பா”னென்று. இவருடைய பம்மலாட்டத்தையெல்லாம் பார்த்தால் ரொம்பவே நக்கியிருப்பார் போலிருக்கிறேதே…

பட்டினிப் போராட்டத்தின் மூலம் களம் இறங்கியிருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களே… உங்கள் போராட்டம் வெற்றிபெற சகதமிழனாக நின்று வாழ்த்துகிறேன். உங்களோடு களம் இறங்க முடியாமைக்கும் வருந்துகிறேன். ஈழத் தமிழர் பிரச்னை என்றில்லை, காவிரியில் தண்ணீர் விடச்சொல்லும் போராட்டமென்றாலும் சரி, தமிழ்நாட்டிற்காதவரான போராட்டம் எதுவாக இருந்தாலும் சரி, முதலில் களம் காண்பவர்கள் நீங்கள், வழக்கறிஞர்களும்தான். இந்த முறையும் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே களத்தில் இறங்கியவர்கள் இந்த இரண்டு தரப்பும்தான். உங்களுடைய இந்த உணர்வை மழுங்கடிக்கவே திட்டமிட்டு இந்திய உளவுத்துறை ஜாதிய உணர்வைத் தூண்டிவிட்டு, அம்பேத்கர் சட்டக்கல்லூரி அனர்த்தத்திற்கு வழிவகுத்திருக்கலாம் என்பது என் சந்தேகம். உலகம் முழுக்க மக்களுக்கான புரட்சிகரப் போராட்டங்களில் முன்கையெடுப்பவர்களாக இருந்தது மாணவர்கள் என்கிற ஜாதிதான். அதேபோல், தமிழ்நாட்டிலும் உங்களுக்கு முந்திய தலைமுறையொன்று இதுபோன்ற ஒரு சூழலில், இதுபோல் குடியரசு தினத்திற்கு முன்பு களம் கண்டுதான் காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடித்தது.

ஆக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணம் உங்கள் கைகளுக்கு மறுபடியும் வந்து சேர்ந்திருக்கிறது. பொதுவாக உலக சரித்திரத்தில் இப்படியெல்லாம் நடப்பதில்லை. கடந்த முறை நடந்ததுபோல், உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டுவிடாதீர்கள். போராட்டத்தின் பலன்களை அபகரித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. முதலில் செய்த விசயம் மாணவர்கள் அரசியல் ஈடுபாடு கொள்ளக்கூடாது என சட்டம் போட்டதுதான். ஆட்சிக்கு வந்த அது, தமிழின உணர்வுகளை மழுங்கடித்து, ஒட்டுமொத்த தமிழினத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது. அந்த மரபை அடித்து உடையுங்கள். மனு கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும், அவனை நம்பாதீர்கள். நமக்குள்ளிருக்கும் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக்கொள்ள இதுதான் தருணம். உண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள். உண்மையில், இலங்கையில் இந்திய ராணுவ நடவடிக்கை என்பது தமிழர்களுக்கெதிரானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே எதிரானது. சிங்களச் சிப்பாய்களிடம் கற்றுக்கொள்கிற பாலியல் நுணுக்கங்களைத்தானே அவர்கள் அசாமில் அப்பாவிப் பெண்களிடம் பரிசோதித்துப் பார்த்தார்கள்! விடுதலைப்புலிகளை ஒடுக்குவதற்கான சிங்கள வன்முறை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு வடகிழக்கு மாநிலப் போராளிகளிடம் பயன்படுத்திக் கூர் பார்த்தார்கள்! போதாதற்கு, ஹைட்டியில் சமாதானப் பணிக்காக அனுப்பப்பட்ட ஐ.நா.வின் ராணுவத்திலிருந்து இந்திய மற்றும் இலங்கை ராணுவம் அவரவர்களுடைய பாலியல் நடவடிக்கைகளுக்காக அடித்துத் துரத்தப்பட்டிருப்பதிலிருந்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் நாடு மொத்தமும் தீக்குளித்தாலும் திருந்தமாட்டாங்கள்

கலைஞரா? நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அப்பொழுதும் அவர் அறிவிப்பார். பிறகு, மத்திய அரசைப் புரிந்துகொள்வார்(?!). பிறகு மறுபடி சரியான முடிவை எடுக்க வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவார் - இந்த மாசம், இந்த வாரம், இதுவரைக்கும் என்ன எவனும் தொட்டதில்ல என்கிற வின்னர் பட வடிவேல் காமெடியைப் போல. காகிதம் எதையும் சாதிக்காது மக்களே! இப்பொழுது, உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டுள்ளார். தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய இந்த சூரப்புலி உண்மையில் தமிழுக்காகவோ, தமிழருக்காகவோ செய்ததென்ன? ஒருமுறை அவரே சொன்னார், ”தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பா”னென்று. இவருடைய பம்மலாட்டத்தையெல்லாம் பார்த்தால் ரொம்பவே நக்கியிருப்பார் போலிருக்கிறேதே…

இனியாவது தமிழர் புரிந்து கொள்வார்களா?

ஜானா

Edited by Janarthanan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழம்: முத்துக்குமாரை கொன்ற தீ சுரணையற்ற மனங்களை சுடட்டும்!

ஈழத்ற்காகத் தீக்குளித்து தியாகியானான் ஒரு தமிழன் !

ஈழத்திற்காக தமிழக ஓட்டுக்கட்சிகள் குறிப்பாக தி.மு.கவின் நாடக உணர்ச்சியைத் திருப்தி படுத்துவதற்காக பிரணாப் முகர்ஜி இலங்கை சென்று ஈழத்தமிழர்களைக் கொல்லும் ராஜபக்க்ஷேவுக்கு ஆதரவை அளித்து விட்டு உடன் திரும்பி விட்டார். காங்கிரசுக் கூட்டணி அரசின் தமிழகப் பங்காளிகள் ஏதோ பெரிய கோரிக்கையைச் சாதித்து விட்டதாக பீற்றி வருகின்றனர். இந்த பசப்பலுக்கு மத்தியில்தான் முல்லைத் தீவில் நூற்றுக்கணக்காண மக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர்.

தமிழக ஓட்டுப்பொறுக்கி அரசியல் கட்சிகளின் இந்த வேடதாரி அரசியலுக்கு மத்தியில் தமிழக மக்களின் தன்னெழுச்சியான

போராட்டங்கள் தமிழகமெங்கும் காட்டுத்தீயைப் போல பரவி வருகின்றன. மக்களின் இந்தப் போராட்டம் உணர்ச்சிப்பூர்வமானது. கொல்லப்படும் ஈழத்தமிழனைக் காப்பாற்றுவதற்காக எதாவது செய்யவேண்டும் என்ற ஆதங்கத்திலிருந்து இது கம்பீரமாக எழுந்து வந்திருக்கிறது. முக்கியமாக எல்லாப் போராட்டங்களும் தற்போது இலங்கை அரசுக்கு ஆயுத உதவி செய்து முதுகில் குத்தும் இந்திய அரசின் துரோகத்தை தோலுரிக்கும் வண்ணம் நடந்து வருகிறது. இதற்கு முன் நடந்த போராட்டங்கள் வெறும் மனிதாபிமான கோரிக்கைக்காக நடந்திருக்கும் வேளையில் தற்போது இந்திய அரசின் துரோகத்தனத்தை எதிர்த்து முறியடிப்போம் என்று ஒரு சரியான அரசியல் முழக்கத்துடன் நடந்து வருவது முக்கியமானது.

இன்று காலை அகில இந்திய பெண்கள் முன்னணி எனும் பெண்கள் அமைப்பு இந்தியாவின் துரோகத்தை எதிர்த்து சென்னையில் இருக்கும் தலைமைச் செயலகத்தை முற்றுகை செய்து போராட்டம் நடத்தினர்.பிரணாப் முகர்ஜி இலங்கை சென்றதற்காக கையொலி எழுப்பிய தமிழக சட்டசபை வீடணர்களில் காதுகளுக்கு கேட்குமாறு இந்தப் போராட்டம் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான

பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காஞ்சிபுரத்தில் கல்லூரி மாணவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருக்கின்றனர். சேலம் சட்டக் கல்லூரி மாணவர்கள் சாகும் வரை உண்ணாவிரதம் போராட்டம் துவங்கியிருக்கின்றனர்.

செங்கல்பட்டு சட்டக் கல்லூரி மாணவர்களின் சாகும் வரை உண்ணாவிரதம் ஏழு நாட்களுக்குப் பிறகு முடிந்தாலும் தமிழகம் முழுவதும் அநேகமாக எல்லாக் கல்லூரி மாணவர்களும் வகுப்புக்களைப் புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். எமது மாணவர் அமைப்பான பு.மா.இ.மு எல்லாக் கல்லூரிகளிலும் மாணவர்களுக்கான அறைக்கூட்டங்களை நடத்தி இந்தப் போராட்டங்களை தொடருவதற்கு முயற்சி செய்கிறது. குறிப்பாக சென்னை, கடலூர், விருத்தாசலம், தஞ்சாவூர் முதலிய இடங்களில் பு.மா.இ.மு சார்பில் போராட்டங்கள் நடந்திருக்கின்றன. தஞ்சையில் மட்டும் எல்லாக்க கல்லூரிகளையும் சேர்த்து 3000 மாணவர்கள் வகுப்புக்களை புறக்கணித்து மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.மேலும் பல அரசியல் கட்சிகளின் மாணவர் அமைப்புக்களும் தமது தலைமை வழிகாட்டுதல் இல்லாமல் தன்னெழுச்சியாக போராடி வருகின்றனர். அரசியல் கட்சிகளின் பின்புலம் இல்லாத மாணவர்களும் அதிக அளவில் போராடி வருகின்றனர். இது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோபிசெட்டிபாளையத்தில் வணிகர்கள் ஈழத்திற்காக இன்று கடையடைப்பு போராட்டத்தை நடத்தினர்.

இந்தப் போராட்டங்களின் உச்சமாக ஒரு தமிழன் தீக்குளித்து உயிரிழந்த போராட்டம் இன்று நடந்திருக்கிறது. தூத்துக்குடியைச்

சேர்ந்த 26 வயது முத்துக்குமார் ஒரு மாதப்பத்திரிக்கையின் தட்டச்சு வேலை செய்பவர். இன்று காலை மத்திய அரசு நிறுவனங்கள் பலவற்றின் தென்மண்டலத் தலைமையகங்கள் இருக்கும் சாஸ்திரி பவனுக்கு வந்த முத்துக்குமார் கையில் கொண்டுவந்திருந்த மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்தார். அவர் கையிலிருந்த ஈழத்தமிழரின் போராட்டத்திற்கன பிரசுரங்கள் காற்றில் பறந்தன. இதை அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருந்த மக்கள் அவரைக் காப்பாற்ற முயன்றனர்.ஆயினும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முத்துக்குமார் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

சிங்கள இனவெறி அரசின் தமிழின அழிப்புக்கான போரில் சுடுவதற்கென்றே இந்திய பீரங்கிகள் தமிழகம் வழியே அனுப்பப்பட்ட மண்ணில் எந்த ஆயுதமின்றி தனது உயிரை அழித்து ஒரு மாபெரும் ஆயுதத்தை தமிழக மக்களுக்கு வழங்கியிருக்கிறான் ஒரு வீரன். தமிழக அட்டைக்கத்தி அரசியல் தலைவர்கள் வெறுமனே அறிக்கைகள் விட்டு ஈழத்திற்காக நாடகமாடிக் கொண்டிருக்கும் சூழலில் தனது உயிரை அழித்து தமிழக மக்களின் உணர்ச்சியைத் தட்டி எழுப்பியிருக்கிறான் ஒரு போராளி. இறுதி வேண்டுகோள், இறுதி எச்சரிக்கை, பதவியைத் துறப்போம் என தமிழக ஆளும்கட்சி நடித்துக் கொண்டிருக்கும் காலத்தில் தனது உடலை தீக்கிரைக்காக்கி இந்தியாவின் துரோகத்தை எதிர்த்திருக்கிறான் ஒரு தமிழன். ஈழத்தில் புலிகளுக்கெதிரான போரில் ஈழத்தமிழ் மக்கள் கொல்லப்படுவதை பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தமென அகமகிழும் பார்ப்பனப் பத்திரிகையுலகின் கொழப்பைத் தனது இன்னுயிரைத் தந்து அம்பலமாக்கியிருக்கிறான் ஒரு பத்திரிகையின் தொழிலாளி.

முத்துக்குமார் எனும் போராளியின் உடலைக் கருக்கிய தீயின் நாக்குகள் சுரணையற்றிருக்கும் மனங்களை சுட்டுப்பொசுக்கி திருத்தட்டும். முத்துக்குமார் எனும் வீரனின் உயிரைத் துறக்கத் துணிந்த தியாகம் கொழும்பில் இந்திய- இலங்கை கிரிக்கெட் ஆட்டத்தை ரசிக்கும் அற்பங்களின் இழிவை எள்ளி நகையாடட்டும். முத்துக்குமார் எனும் இளைஞனின் தியாகம் ஈழத்தில் கொத்துக் கொத்தாய் செத்து விழும் ஈழத்தமிழனின் பிணங்களைக் கண்டு உவகை கொள்ளும் சுப்பிரமணிய சுவாமி, ஜெயலலிதா, இந்து ராம், தமிழக காங்கிரசு நரிகள் முதலான ஒநாய்களின் வெறியை தமிழக மக்கள் அறுப்பதற்கு உதவட்டும். முத்துக்குமார் எனும் அந்தத் தொழிலாளியின் மரணம் புலம்பெயர்ந்த நாடுகளில் வில்லு படத்தை ரசித்துக் கொண்டிருக்கும் ஈழத்தமிழனின் மரத்துப் போன சுரணையை மீட்டுக் கொண்டு வரட்டும். முத்துக்குமாரின் தீக்குளிப்பு பதிவுலகில் அக்கப்போரையும், அரட்டையையும், வாடிக்கையாகக் கொண்டிருக்கும் சில பதிவர்களுக்கு சமூக அக்கறை என்றால் என்ன என்பதைக் கற்றுக் கொடுக்கட்டும். முத்துக்குமார் எனும் அந்த வார்த்தை இதுவரை ஈழத்திற்காக இது வரை ஒரு துரும்பையும் எடுத்துப் போடாதவர்களின் மனச்சாட்சியை கிளறி எழுப்பட்டும்.

ஆம் மரத்துப்போயிருக்கும் தமிழுலகில் ஒரு இளைஞன் ஈழத்திற்காக தன்னுயிரைப் பலிதானம் செய்திருக்கிறான். அவனுக்கு அஞ்சலி செலுத்த விரும்புகிறவர்கள் என்ன செய்யப் போகிறீர்கள் ?

http://vinavu.wordpress.com/2009/01/29/eelam13/

இவன் கோழையல்ல இவனும் உலகத்தை தட்டியெழுப்பிய மாவீரன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.