Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உங்கள் சிந்தனைக்கு: வெளிநாடுகளில் எங்கள் கவனயீர்ப்பு போராட்டங்களும் தாயக மாவீரர் நினைவுநாளும்!

Featured Replies

உங்கள் சிந்தனைக்கு: வெளிநாடுகளில் எங்கள் கவனயீர்ப்பு போராட்டங்களும் தாயக மாவீரர் நினைவுநாளும்!

அறிமுகம்:

அனைவருக்கும் இனிய வணக்கங்கள்!

நேற்று தாயக மக்களின் அவலங்களை வெளிஉலகிற்கு எடுத்துச்சொல்லி சர்வதேசத்திடம் நீதியும், உதவியும் கேட்கும் மக்கள் போராட்டம் ஒன்று கனடாவில் வெற்றிகரமாக நிகழ்ந்து உள்ளது. இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டபோது தோன்றிய ஓர் ஆதங்கத்தை உங்களுடன் இங்கு பகிர்ந்து கொள்கின்றேன்.

ஆதங்கம்:

உங்களிடம் நேரடியாகவே விடயத்திற்கு வருகின்றேன்; எனது ஆதங்கம் மாவீரர் தினத்தை வெளிநாடுகளில் நாங்கள் ஏன் ஓர் கவனயீர்ப்பு போராட்டமாக செய்யக்கூடாது என்பதுதான்! அதாவது, நேற்று நடைபெற்ற அதே மனிதச்சங்கிலி முறையில் தாயகத்தில் மக்களின் அவலங்களை நிரந்தரமாக நீக்குவதற்காக தமது இன்னுயிர்களை தியாகம் செய்த மாவீரர்களை நாம் நன்றியுடன் நினைவுகூறவும், கெளரவப்படுத்தவும் முடியும்.

கருப்பொருள்:

நேற்று கவனயீர்ப்பு பேரணிக்கு வந்து இருந்த மக்களில் ஏறக்குறைய அனைவருமே சுலோகங்களை தாங்கும் அட்டைகளை தமது உடலில் தாங்கி/கட்டி இருந்தார்கள். இவ்வாறே, மாவீரர்கள் ஒவ்வொருவரினதும் பெயர்/புகைப்படம் அடங்கிய அட்டைகளை தங்கள் உடலில் தாங்கியபடி மனிதச்சங்கிலியாக நின்று வேற்று இனத்தவர்களிடம் எமதுபிரச்சனையை சரியான முறையில் வெளிக்காட்ட முடியும். நேற்று நடைபெற்ற கவனயீர்ப்பு ஒழுங்குகளையும், அமைப்பையும் அவதானித்தபோது பகிரங்கமாக மாவீரர்களை நினைவுகூறும் இவ்வாறான ஓர் நிகழ்வை நேர்த்தியுடன் செய்துமுடிப்பது நம்மவர்களுக்கு முடியாத ஓர் வேலையாக இருக்காது.

மாவீரர்கள் ஒவ்வொருவரினதும் புகைப்படங்களையும் பெயரையும், புகைப்படம் இல்லாதுவிட்டால் பெயர் விபரத்தை மட்டும் தனித்தனியாக அட்டைகள் வடிவில் செய்து நிகழ்விற்கு வருகை தருகின்ற மக்களிடம் கொடுக்கமுடியும். இதேபோல மக்களும் தாமாக மாவீரர்களான தமது குடும்ப உறவுகள், உறவினர்கள், நண்பர்கள் விபரத்தை அட்டையாக தயாரித்து கொண்டுவர முடியும். மாவீரர்களை நன்றியுடன் நினைவுகூறும், கெளரவப்படுத்தும் சுலோகங்களை, பதாதைகளை நிகழ்வில் பயன்படுத்தவேண்டும்.

22,000 பேருக்குமேல் தாயகத்து மக்களின் அவலங்களை நிரந்தரமாக நீக்கும் போராட்டத்தில் தங்கள் இன்னுயிர்களை தியாகம் செய்து இருக்கின்றார்கள். நேற்று நடைபெற்றதுபோல் அதே தொகையில் அல்லது அதற்கு மேற்பட்ட தொகையில் மக்கள் வருகை தந்தால் மாவீரர்கள் அனைவரையும் 'நடமாடும் கல்லறைகளான அட்டைகளில்' நம்மவர்கள் தங்கள் உடலில் காவியபடி தெருவில் வைத்து பகிரங்கமாக நினைவுகூறுவது கடினமான ஓர் காரியம் அல்ல.

இவ்வாறான ஓர் கவனயீர்ப்பு நிகழ்வு நிச்சயம் வேற்றினத்தவர்களும், ஊடகங்களும் தாயக போராட்டம் மீதுகொண்டுள்ள மிகவும் தவறான பார்வையை நீக்குவதற்கும், உண்மையை வெளி உலகிற்கு பறைசாற்றுவதற்கும் உதவும்.

வெளிநாடுகளில் ஜனநாயக வழியில் எமது உரிமைகளை, உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு பல்வேறு முட்டுக்கட்டைகள் போடுகின்ற சிறீ லங்கா பேரினவாத பயங்கரவாத அரசாங்கத்திற்கு இவ்வாறான ஓர் நிகழ்வு செருப்படியாக அமைய வாய்ப்பு இருக்கின்றது. கடந்த 2008ம் ஆண்டு மாவீரர் தினத்தின்போதுகூட கடைசிவரை நம்மவர்கள் ஆரம்பத்தில் திட்டமிட்டபடி குறிப்பிட்ட இடத்தில் நிகழ்வை நடாத்தமுடியாதபடி இடையூறுகள் ஏற்படுத்தி சிறீ லங்கா இனவாதிகள் வெற்றிபெற்று இருந்தார்கள். இப்படியானவர்களிற்கு இவ்வாறான ஓர் கவனயீர்ப்பு நிகழ்வே சரியான பாடமாக இருக்கமுடியும்.

சிறீ லங்கா பேரினவாத தீவிரவாதிகளின் பலத்த கெடுபிடிகளுக்கு மத்தியில், பல்வேறு சந்தேகக்கோணங்களில் - கண்களில் கொச்சைப்படுத்தப்பட்டு, பல்வேறுபட்ட திரிவுபடுத்தப்பட்ட பரப்புரைகளுடன் 'உள்அரங்குகளில்' நிகழ்கின்ற மாவீரர் நினைவுநாளா அல்லது எதுவித மூடிமறைப்புக்கள் இல்லாமல் எமது உணர்வுகளை ஒளிவுமறைவு இன்றி நாம் வாழும் சமூகத்தின் முன் பகிரங்கமாக வெளிப்படுத்தி மிகவும் குறைந்த பொருட்செலவுடனும், குறைந்த சிரமங்களுடனும் நிகழ்த்தப்படக்கூடிய மாவீரர் திருநாளா தாயக போராட்டத்திற்கு வலுச்சேர்க்கவும், தாயக மக்களின் அவலங்களிற்கு நிரந்தரமான ஓர் தீர்வினை விரைவில் பெற்றுத்தரவும் உதவும்?

சட்ட நடைமுறைகள்:

சட்டரீதியாக பார்த்தால்கூட உயிருடன் இல்லாத ஒருவரை மதிப்பு அளித்து, கெளரவப்படுத்தி, நன்றிகூறுவதை தவறான ஒரு செயலாக கருதமுடியாது. இந்தவகையில், மாவீரர்களை நாங்கள் பகிரங்கமாக நினைவுகூறுவது சட்டரீதியான சிக்கல்களை ஏற்படுத்தமுடியாது. தாயக விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கும் அமைப்பு தடைசெய்யப்பட்டுள்ள நாடுகளில் சட்டரீதியாக நாங்கள் அதற்கு ஆதரவு கொடுக்க முடியாது. ஆனால், 'தற்போது உயிருடன் இல்லாதவர்களுக்கு' மதிப்பு அளித்து, நன்றிகூறுவதை, கெளரவப்படுத்துவதை சட்டரீதியாக பிழையான ஓர் செய்கையாக கருதமுடியுமா?

ஓர் உதாரணத்துக்கு கூறினால், முன்னாள் ஈராக் அதிபர் சதாம் குசைனை ஓர் கொலையாளி என பட்டம்கட்டி ஈராக்கில் உருவாக்கப்பட்ட அமெரிக்க அரசாங்கத்தின் பொம்மை அரசாங்கம் அவரை தூக்கில் இட்டது. எனினும், தற்போது ஈராக்கில் சதாம் குசைனை பகிரங்கமாக நன்றியுடன் நினைவுகூறும் மக்களை, சதாம் குசைனிற்கு பகிரங்கமாக மதிப்பு அளிக்கும் மக்களை சட்டத்திற்கு முரணாக செயற்பட்டார்கள் என்றுகூறி கைது செய்யமுடியுமா? தண்டனை வழங்க முடியுமா? இந்தவகையில், சட்டரீதியாக பார்த்தால்கூட தாயக விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிர்களை தியாகம் செய்த மாவீரர்களை பகிரங்கமாக நினைவுகூறுவது தவறாக கருதப்படமுடியாது.

செயற்பாடு:

நாட்கள் கிழமைகளாகி, மாதங்களாகி, வருடங்களாகி மிகவிரைவாக கண் இமைப்பொழுது போல ஓடிவிடும். எனவே, நம்மவர்கள் இப்பொழுதே சிந்தித்து செயலாற்றி 2009ம் ஆண்டு மாவீரர் தினத்தையும், இதன்பின்னரான காலங்களில் வரப்போகின்ற - மண்ணின் மைந்தர்களின் நினைவுநாளை ஓர் கவனயீர்ப்பு போராட்டமாக எழுச்சிபூர்வமாக அனுஷ்டிக்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுப்பார்களா?

முடிவுரை:

சிறீ லங்கா தீவிரவாத அரசு பாரிய வாகனங்கள் மூலம் தாயகத்தில் மாவீரர்கள் கல்லறைகளையும், மயானங்களையும் அடித்து நொறுக்கி உடைத்து தனது தமிழ் இன அழிப்பின் உச்சக்கட்டத்தை நிரூபித்து உள்ளது. அதாவது தமிழர்கள் கல்லறைகளில் கூட நிம்மதியாக உறங்கமுடியாது. சுடுகாட்டில்கூட தமிழனுக்கு நிம்மதி இல்லை! கல்லறையின் சுவடுகளே இல்லாதபடி அழித்து மயானத்தில்கூட கொலைவெறி காட்டுகின்ற சிறீ லங்கா பேரினவாத தீவிரவாதிகளிற்கு வெளிநாடுகளில் வாழ்கின்ற நம்மவர்கள் தகுந்த ஓர் பாடம் புகட்டவேண்டாமா?

பி/கு:

மக்களுக்காக மரணித்தவர்களை நினைவுகூறுவது எப்படி என்று மக்கள்தான் தீர்மானிக்கவேண்டும். எனவே, அனைவரினதும் ஏகோபித்த ஆதரவை மேற்கூறிய ஆலோசனை பெறாவிட்டாலும், வெவ்வேறு நாடுகளில் - வெவ்வேறு ஊர்களில் - வெவ்வேறு குரிச்சிகளில் வாழும் சிலபத்து தமிழர்களிற்காவது ஆக்கபூர்வமான - செயலுருவம் பெறக்கூடிய ஓர் எண்ணமாக இருப்பதனால் இங்கு பொதுக்கருத்தாடல் தளத்தில் இவ்விடயம் பகிர்ந்துகொள்ளப்பட்டு உள்ளது. இதேபாணியில் ஏற்கனவே வேறு எங்காவது நம்மவர் நிகழ்வுகள் நடந்து இருந்தால் அவற்றின் விபரங்களை அறியத்தாருங்கள்.

நன்றி! வணக்கம்!

Edited by முரளி

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் முர‌ளி உங்கள் கட்டுரையில் இருந்து எனது மனதில் தோன்றிய சில கருத்துகள் தப்பாயிருந்தால் மன்னிக்கவும்.

முதல் முத‌லாக கவனயீர்ப்பு பேரணியில் செய்யும் போது போரில் இற‌ந்த‌ அப்பாவி பொது மக்களின் பட‌ங்களை கட்டிக் கொண்டு நிற்கலாம்.அதற்கு பிற‌கு பொது மக்களினதும் அந்த‌ நாட்டு அர‌சினதும் நிலையை பார்த்து அடுத்த‌ த‌ட‌வை மாவீர‌ர்க‌ளினது பட‌ங்க‌ளையும் பொது மக்களினது பட‌ங்களோடு சேர்த்து கட்டிக் கொண்டு நிற்கலாம்.இறுதியாக இது வெற்றியளித்தால் மாவீர‌ர் வார‌த்தின் போது தனிய மாவீர‌ர்களின் பட‌ங்களை கட்டிக் கொண்டு நிற்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.