Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மரங்களிலும் வீதிகளிலும் மனித மாமிசங்கள் சிதறி காணப்படுகிறது – வன்னி சென்று திரும்பியுள்ள மதகுரு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வன்னியில் மக்கள் தஞ்சமடைந்துள்ள பகுதிகளை நோக்கி இலங்கை படையினர் தொடர்ந்தும் எறிகணை தாக்குதல்களை மேற்கொண்டு வருதாகவும் விசேடமாக புதுக்குடியிருப்பு – பரந்தன் வீதியில் வழியாக அரசாங்கம் அறிவித்துள்ள பாதுகாப்பு வலய பகுதிக்கு செல்வது மிகவும் ஆபத்தான பயணம் எனவும் வன்னிக்கு சென்று நேற்று முன்தினம் திரும்பியுள்ள மதகுரு ஒருவர் தெரிவித்துள்ளார்.

வீதியில் காணப்படும் மரங்களிலும் வீதிகளிலும் மனித மாமிசங்கள் சிதறி காணப்படுகிறது. பாதுகாப்பு வலய பகுதிகளை நோக்கி மக்கள் வெள்ளம் சென்று கொண்டிருகிறது. மக்கள் கடும் வெயில் மற்றும் மழையிலும் மரத்தடிகளில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கான உணவு இல்லை. சில மக்கள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உணவு களஞ்சியத்தை உடைத்து உணவு பொருட்களை எடுத்துகொண்டுள்ளனர்.

பலர் கடுமையான பட்டினியில் வாடுகின்றனர்.அதேவேளை பாதுகாப்பு வலய பகுதியை நோக்கி தள்ளப்படுவது காட்டுமிரண்டித்தனமான நடவடிக்கை, பாதுகாப்பு வலய பகுதிக்கு செல்லும் அகதிகளுக்கு அரசாங்க அதிகாரிகள் உணவுப் பொருட்களை விநியோகித்து வருகின்றனர்.இதேவேளை இராணுவம் மேற்கொண்ட கடுமையான எறிகணை தாக்குதல்களில் 300 பேர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்ததை தன் நேரில் கண்டதாக வன்னி சென்று திரும்பிய மத போதகர் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து இடங்களிலும் பெரும் எண்ணிக்கையிலான சடலங்கள் கிடக்கிறது. சடலங்களை எடுத்து அப்புறப்படுத்த எவரும் இருக்கவில்லை அனைவரும் தாக்குதல்கள் காரணமாக பதுங்குகுழிகளுக்கு சென்று பதுங்கியுள்ளனர். எவரும் வெளியில் வருவதில்லை. மூன்று வாரங்கள் அங்கு தங்கியிருந்தது மிகவும் பயங்கரமான ஒரு அனுபவதாக இருந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனக்கு அந்த அனுபவங்களில் இருந்து இன்னும் மீள முடியவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். மக்கள் தமது குடியிருப்பாக பதுங்கு குழிகளையே பயன்படுத்தி கொள்கின்றனர். சிறிய துண்டு ரொட்டியையும் தேனீரையுமே அவர்கள் உணவாக அருந்துகின்றனர். இரண்டு நாட்களுக்கு முன்னர் நான் மெனிக்பாம் பிரதேசத்திற்கு விஜயம் செய்தாகவும் அங்கு தங்கியுள்ள மக்களின் நிலைமை மிகவும் அனுதாபத்திற்குரியது. இந்த மக்கள் சிறை கைதிகளை போல் நடத்தப்படுகின்றனர். இந்த மக்களுக்கு வழங்கப்படும் உணவுகளை அவர்கள் உண்கின்றனர். இதனால் கடும் வயிற்றுளைவு பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

இங்கு தங்கியுள்ள மக்கள் வெளியில் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. அவர்கள் குளிப்பதற்கான ஆற்றுக்கு போகிறார்கள். அவர்கள் குளிக்கும் போது ஏழு அல்லது எட்டு இராணுவத்தினர் அவர்களுடன் காணப்படுகின்றனர். பெண்கள் குளிக்கும் போது ஆண்களான இராணுவத்தினர் அவர்களை கண்காணிக்கின்றனர்.

அந்த பெண்களுக்கு அது மிகவும் கொடுரமான குளியல், அதேவேளை நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ள குழந்தைகளில் பலருக்கு எந்த கல்வி வசதிகளும் பெற்றுக்கொடுக்கப்படவில்லை. தகரத்தினால் அமைக்கப்பட்ட சிறிய அறைகளில் இங்குள்ள மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெப்பமான நேரங்களில் அதில் தங்கியுள்ள மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இதனை தவிர போதுமாளவு சவர்க்காரம் கொடுக்கப்படுவதில்லை, குழந்தைக்கான உரிய பால் மா வகைகள் கொடுக்கப்படுவதில்லை. அதேவேளை வவுனியாவில் உள்ள நெலுக்குளம் முகாமுக்கும் நான் விஜயம் செய்தேன், அங்கு மக்கள் சிறிய அறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சிறைக்கைதிகள் போல் நடத்தப்படுகின்றனர்.

அவர்களை பார்ப்பதற்கு எவரும் அனுமதிக்கப்படுவதில்லை. முகாமை சுற்றி இராணுவத்தினர் குவிந்துள்ளனர். இங்குள்ள மக்களுக்கு சில அரசசார்பற்ற நிறுவனங்கள் உதவிகளை வழங்கிய போதும், இந்த உதவி பொருட்கள் தமது தேவையில்லை எனவும் தம்மை மனிதர்களாக வாழ அனுமதிக்க வேண்டும் என இங்குள்ள மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஒரு அறையில் 17 முதியவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர் கண் பார்வையற்றவர்கள், சிலருக்கு நடக்க முடியாது, அத்துடன் சிலர் நோயாளர்களாக உள்ளனர். அவர்கள் ஒழுங்காக கவனிக்கப்படுவதில்லை. மிஷனரி சகோதரிகளின் உதவுடன் இவர்களின் 7 பேர் அங்கிருந்து அவர்களது விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இதேவேளை வன்னியில் காயமடைந்த நிலையில் அங்கிருந்து வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ள நோயர்ளர்களை பார்வையிட சென்றதாகவும் அவர்களை பார்வையிட எவரும் அனுமதிக்கப்படுவதில்லை எனவும் இவர்கள் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாதகவும் வன்னிக்குசென்று திரும்பிய மத குரு குறிப்பிட்டுள்ளார்.

அவர்களுடன் உதவிக்கு வந்தவர்கள் அங்கிருந்து நேரடியாக நெலுக்குளம் நலன்புரி நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். மூன்று நாட்களுக்கு முன்னர், 264 பேர் வன்னியில் வவுனியா வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டனர். இவர்களுடன் மேலும் 154 பேர் நோயாளிகளுக்கு உதவிக்கு சென்றவர்கள் எனவும் இவர்கள் அனைவரும் உடனடியாக நெலுக்குளம் நலன்புரி நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் கணவர் வைத்தியசாலையில் இருக்கும் போது மனைவி நலன்புரி நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இது என்ன கீழ்த்தரமான நடவடிக்கை. கணவர் முகாமில் இருக்கும் மனைவிக்காக வைத்தியசாலையில் இருந்து அழுகிறார். மனைவி கணவருக்காக முகாமில் இருந்தவாறு கண்ணீர் வடிக்கிறார். உண்மையில் இது போன்ற கொடுமையான மனித உரிமை வன்முறையை காணவில்லை.

அரசாங்கம் மக்களை வன்னியில் இருந்து வெளியில் வருமாறு கோருகிறது. இவ்வறானா நிலையில் எப்படி அவர்கள் வருவார்கள். அங்கிருந்த வந்தவர்கள் சிறைக் கைதிகள் போல் நடத்தப்படுகின்றனர். நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளவர்கள் அங்கிருந்ததை விட இங்கு தாம் பெரும் துன்பத்தை அனுபவிப்பதாக கூறியுள்ளதாகவும் வன்னி சென்று திரும்பியுள்ள மதகுரு தெரிவித்துள்ளார்.

http://www.globaltamilnews.net/tamil_news....d=5532&cat=

எங்கள் சக்திக்கு மீறிய ஒன்றிற்கு ஆசைப்பட்டு இருந்ததையும் தொலைத்து விட்டோம்... இனி தருவதை கொண்டு வாழ்வதை விட வேறுவழியில்லை!

அல்லது இறந்து புதிதாக தமிழன் அல்லாத ஒரு இனத்தில் பிறப்போம்!

நீங்க விரும்பினா கொடுங்கோ, இல்லாட்டி பிரச்சினையில்ல , அண்ண உங்கள பத்தி தெரியாததே, நீங்க ரொம்ம நல்லவர்

நீங்க கவலை படாதைங்கோ, அந்த விசயமெல்லாம் நான் பாத்துகொள்ளுறன்

எங்கள் சக்திக்கு மீறிய ஒன்றிற்கு ஆசைப்பட்டு இருந்ததையும் தொலைத்து விட்டோம்... இனி தருவதை கொண்டு வாழ்வதை விட வேறுவழியில்லை!

அப்ப வெள்ளைத்துண்டை விரிச்சு குத்துவம் எண்டு சொல்லுரீர் .........நான் ரெடி சனம் (நீர்) ரெடியோ?????

. .

இனி தருவதை கொண்டு வாழ்வதை விட வேறுவழியில்லை!

ஏதும் தருவானெண்டு இப்பவும் நம்புறீங்களா?

அப்ப வெள்ளைத்துண்டை விரிச்சு குத்துவம் எண்டு சொல்லுரீர் .........நான் ரெடி சனம் (நீர்) ரெடியோ?????

அடக்கடவுளே.. இப்ப மட்டும் என்ன செய்யிறதா நினைச்சுக் கொண்டு இருக்கிறியள் முகத்தார்?

ஏதும் தருவானெண்டு இப்பவும் நம்புறீங்களா?

மெனின்பாமில கொடுக்கிறதைதான் சொல்லுறன்... நீங்கள் தான் உப்பிடிக் கதைச்சுக் கதைச்சு இந்ததளவில கொண்டுவந்து விட்டுஇருக்கிறியள்! உங்களுக்கென்ன...!

நீங்க விரும்பினா கொடுங்கோ, இல்லாட்டி பிரச்சினையில்ல , அண்ண உங்கள பத்தி தெரியாததே, நீங்க ரொம்ம நல்லவர்

நீங்க கவலை படாதைங்கோ, அந்த விசயமெல்லாம் நான் பாத்துகொள்ளுறன்

நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீங்கள், பாத்துக்கொள்ளுவீங்கள் அது தெரியும்தானே! முதலில மேல செய்தியில சொல்லியிருக்கிற மக்களுக்கு என்ன பதில் சொல்லுறீங்க?

QUOTE (vvsiva @ Feb 3 2009, 11:32 PM)

ஏதும் தருவானெண்டு இப்பவும் நம்புறீங்களா?

மெனின்பாமில கொடுக்கிறதைதான் சொல்லுறன்... நீங்கள் தான் உப்பிடிக் கதைச்சுக் கதைச்சு இந்ததளவில கொண்டுவந்து விட்டுஇருக்கிறியள்! உங்களுக்கென்ன...!

உங்களைப்போன்றவர்கள்தான் நமது உரிமைப் போர் வீழ்ச்சி அடையக்காரணம்

இதைவாசியுங்கள் புரியும்

இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்தியமைக்கான நோபல் பரிசு தனக்கு வழங்கப்பட்டால் அதனை, அப்படியே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கத் தயாரெனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அகாசியிடம் கூறியுள்ளார்.

Edited by vvsiva

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தக்கொடுமைக்கெல்லாம் விடிவு நிச்சயம் உண்டு

  • கருத்துக்கள உறவுகள்

மெனின்பாமில கொடுக்கிறதைதான் சொல்லுறன்... நீங்கள் தான் உப்பிடிக் கதைச்சுக் கதைச்சு இந்ததளவில கொண்டுவந்து விட்டுஇருக்கிறியள்! உங்களுக்கென்ன...!

இந்த அளவு என்றால் எந்த அளவு? அரக்கதனம் உலகில் ஆடுவாது இதுதான் புதிதல்ல....புராணகாலம் தொட்டு இதுதான் நடக்கிறது. கிட்லர் கூட வெற்றிவாகை சூடிகொண்டு லெனின்கிரேட் வரையில் போனதாகதான் நாங்கள் வரலாறு படித்துள்ளோம். அந்த வரலாறுகள் எல்லாம் படித்தபின்தான் நாம் போராட்டத்தையே தொடங்கினோம்..... அழிவுகள் என்பது மனிதஉயிர்களை கொடுக்க வேண்டிய தருணங்கள் எல்லாம் வரும் என்பதும் உங்களுக்குதான் புதிது அதுதான் இந்த நிலை இந்த நிலை என்று தற்போதைய அரக்கஆட்ங்களை காட்டி எம்மை ஒரு வழிபண்ணலாம் என்று நப்பாசை கொண்டு அலைகின்றீர்கள். நாங்கள் இதை 1980ம் ஆண்டே கண்டவர்கள் ஆதலால் திரும்பவும் உங்களுக்கு உறுதிபட சொல்கிNறுன் இந்தகளத்தில் நீங்கள் கூச்சலிட்டு ஆகபோவது ஒன்றுமில்லை...... கடைசி புலி உள்ளவரை எமது புலிகளுக்கான ஆதரவை எந்த நாய்களாலும் புடுங்கிவிட முடியாது. கடைசி புலி நெஞ்சுலே குண்டெந்தும் காலம் அது கடைசி ஈழதமிழன் இந்த உலகில் வாழும் காலம் இதையும் விளங்கிகொள்ளவும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.