Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனப்படுகொலைக்கு எதிராக தூதுவராலயங்களில் பணிமுடக்கம் செய்தல்.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் இருவர், குறிப்பாக ஈழத்தமிழர்கள் இருவர் சந்தித்துக் கொள்ளும்போதோ அல்லது தொலைபேசியில் உரையாடும் போதோ முதலில் பேசிக்கொள்வது வன்னியில் நடைபெயும் படுகொலைகள் பற்றியதே. இதற்கு என்ன செய்யலாம் என்பதே கேள்வியாகவும், கவலையாகவும் எங்கும் வியாபிக்கின்றது. நாடுகள் தோறும் பல்வேறு வகையிலான கவனயீர்ப்புப் போராட்டங்கள் நடைபெற்ற வண்ணமிருக்கின்றன.

இறுக்கக் கண்மூடியிருக்கும் இந்த உலகின் கண்களைத் திறக்க ஏது வழி எனப் பலரும் எண்ணிக்கலக்கமுறும் வேளையில், மக்கள் தன்னெழுச்சியாகப் புதிய புதிய வழிமுறைகளிலும் போராட்டத்தைத் தொடர்கின்றார்கள். அந்த வகையில் ஒரு சில யோசனைகளை முன் வைத்து மின்னஞ்சலில் வந்தவொரு மடலில் தெரிவிக்கப்ட்டிருக்கும் இந்த யோசனை சற்று வித்தியாசப்படடிருப்பதால் அதனை இங்கே முன்வைக்கின்றோம். - 4tamilmedia Team

நண்பர்களே!

இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலையைக் கண்டித்து, ஈழத்தமிழ்மக்கள் வாழும் புலம் பெயர் நாடுகளிலெல்லாம் கவனயீர்ப்புப் போராட்டங்களும் மனுக் கொடுப்புக்களும, பேரணிகளும், நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. பெருமளவிலான தமிழ்மக்கள் கலந்து கொள்ளும் இந்நிகழ்வுகளால் சர்வதேச நாடுகளின் போக்கில் சிறிதளவு மாற்றம் காணப்பட்டாலும், இதில் கலந்து கொள்ளும் மக்கள் செலவிடும், நேரம், பொருள் என்பவற்றின் பெறுமானத்துடன் ஒப்பீடு செய்து பார்க்கும் போது இவற்றுக்கான பெறுமானத்தை, சர்வதேசசங்கள் மிக்ககுறைவாகவே வழங்குவதாகத் தெரிகிறது. அதற்காக இப் போராட்ட வழிமுறைகள் தவறானவையென்றோ அல்லது தேவையற்றவையென்றோ சொல்ல வரவில்லை. இவைகள் தொடரந்து முன்னெடுக்கப்பட வேண்டியவையே என்ற அக்கறையோடு மேலும் ஒரு யோசனையாகவே பின்வரும் எண்ணத்தினைத் தெரிவிக்கின்றேன்.

தற்போது நடைபெறும் போராட்டங்களின் மூலம், தமிழ மக்களின் எண்ணங்கை மனுக்களாக்கி, தூதராலயங்களின் பிரதிநிதிகளிடம் கொடுப்பதில் எமது கடமை நிறைவு பெறுகிறது. எங்களிடமிருந்து வாங்கும் அந்த மனுக்களைப் பிரத்துப் படிக்கின்றார்களோ தெரியாது. இதையே வேறோர் விதமாகச் செய்யின் நாங்கள் கொடுப்பதை அவர்கள் பிரத்துப்பார்க்க வேண்டிய அவசியமும், அதே சமயம், ஓர் அளவுக்கு மேல் அது அவர்களின் நாளாந்தப் பணிகளில் ஒரு சிரமத்தையும் தோற்றுவிக்கக் கூடும் என நம்புகின்றேன்.

உதாரணத்துக்கு இங்கிலாந்திலிருக்கும் இந்தியத் தூதரகத்து நாளாந்தம் 1000 கடிதங்கள் வருவது வழக்கமென வைத்துக் கொள்வோம். நாங்கள் இங்கிலாந்தின் பல பகுதிகளிலும் இருந்து தினமும் 4000 கடிதங்களை அனுப்புவோமாயின், அவர்களது வழமையான 1000 கடிதங்களுடன், இந்த 4000 கடிதங்களும் இனைந்து கொள்ள, அவர்கள் அனைத்துக் கடிதங்களையும் பிரத்துப் பார்க்க வேண்டிய தேவையேற்படும். ஆனால் இது தொடர்ச்சியாக ஒரு சில தினங்கள் நடந்தால் மட்டும் வெற்றியளிக்காது. ஆதலால் தொடர்ச்சியாக தினமும் ஆயிரக் கணக்கில் அனுப்பிக்கொண்டிருந்தால் ஒரு கட்டத்தில் இது அவர்களது நாளாந்தப் பணிக்கு இடையூறாக அமையும். ஏறக்குறைய கடிதங்களால் ஒரு முற்றுகை என்ற நிலை ஏற்படும். இது சாத்தியமில்லை என்று எண்ணத் தேவையில்லை. ஆர்ப்பாட்டப் பேரணிக்கு ஒன்றரை இலட்சம் மக்கள் திரண்ட இங்கிலாந்திலிருந்து தினமும் 5000 ஆயிரம் கடிதங்கள் எனக் கணக்கிட்டாலே ஒருமாதகாலத்திற்கு மேல் அனுப்ப முடியும். ஒருவர் மாதத்தில் இரு தடவைகள் அனுப்புவதாக இருந்தாலே போதும். அப்படி அனுப்பும் போது ஒரு சிறு கடிதத்தை வைத்து அனுப்பலாம். அவர்கள் வாசிக்காது போட்டால் கூட, தொடர்ச்சியாகத் தினமும் அப்படி பெருந்தொகைக் கடிதங்கள் அவர்களது வழமையான கடிதங்களுடன் கலப்பது நிச்சயம் இவர்களது பணிக்கு இடையூறாகும்.

இதிலே கவன்னிக் வேண்டிய சில முக்கிய விடயங்கள் , ஓரே இடத்தில் இருந்து அனுப்பக் கூடாது. வெளியிலே எந்த வித்தியாத்தையும் காட்டக்கூடாது. கணனியில் முகவரிப் பதிக்காது, பேனாகொண்டெழுதுவது நல்லது. தொடர்ச்சியாக ஒருவர் அல்லாது மாறிமாறிப் பலரும் எழுதுவது நல்லது. இப்படி பல கடிதங்கள் கிடைக்கும் போது, தங்கள் அலுவலகக் கடிதத்திற்கான சிறப்படையாளம் ஏதேனும் அறிவிக்கலாம். அதையும் கவனித் நாம் இடவேண்டும். இதற்கும் மேலாக ஸ்கேன் பண்ண முயற்சிக்கலாம். அப்படியாயினும் கூட ஆயிரக்கணக்கான கடிதங்கள் தினமும் பார்ப்பதென்பது சிரரமானதே. ..

இது ஒரு யோசனை மட்டுமே. இதை வாசிப்பவர்கள் இது நடைமுறைச் சாத்திமாகுமா? என்பத பற்றிய கருத்துக்களைத் தெரிவியுங்கள். யோசனை சரியெனப்ட்டால் , அவரவர் தத் தம் நாடுகளில், நண்பர்களுடான தொடர்பின் மூலம், பல்வேறு பகுதிகளிலிருந்தும், இந்திய, அமெரிக்கத் தூதுவராலயங்களுக்கு கடிதங்களை அனுப்பலாம். ஈழ மண்ணின் சிறிலங்கா அரசுக்குத் துணைபோகும் நாடுகளின்தூதரலாயங்களின் பணிகளை முடக்கம் செய்யலாம்.

=ஈழமைந்தன்

மேலும் வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக சாத்தியமாகும்.....

பிரித்தானிய பிரதமரின் அலுவலகத்திற்கு நான் அனுப்பிய தொலைநகலுக்கு பிரதமரின் அலுவலகத்திலிருந்து பதில் வந்துள்ளது.

அதில் நன்றி தெரிவித்தும், எனது தொலைநகல் வெளிவிவகார அமைச்சிற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் உள்ளது.

இது ஓரு பெரிய விடயமல்ல..... ஆனால் அவர்களுக்கு ஒரு சிரமமான வேலையாக இருக்கும்...

எனவே எல்லோரும் இணைந்து தூதுவராலயங்களுக்கும் அனுப்பலாம்....

Edited by MEERA

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாவகையிலும் இலங்கை அரசு தமிழர்களுக்கெதிரான பரப்புரை செய்து வரும் இந்நிலையில், நாமும் இயன்றவழிகளிலெல்லாம் முயற்சிக்க வேண்டும். இந்த நடவடிக்கையைத் தனித்தனியாகவோ, குழுக்களாகவோ, அமைப்புக்களாகவோ செய்யலாம். வெளிநாடுகளில் உள்ள அலுவலக வேலைகளுக்க்கு இது பெரும் சிரமம். ஆதலால் இதுவும் ஒரு எதிர்ப்பு நடவடிக்கையே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.