Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘ரங்கநாயகியின் காதலன்’

Featured Replies

வெளியீடு –

ஈழத்து இலக்கியச்சோலை,திருகோணமலை.

தம்பலகாமம் பெற்றெடுத்த தவப்புதல்வன் க. வேலாயுதம் அவர்களைப் பற்றி அறியும் வாய்ப்பு வடக்கு கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தின் வெளியீடான கவின் தமிழ் 2004 மலரினூடாகவே எனக்குக் கிடைத்தது. அந்த அற்புதமான கவிகளையும் ஆற்றல்படைத்த ஒரு இலக்கியவாதியையும் இன்றுவரை அறியாமல் இருந்த எனக்கு கலாவிநோதன் சித்தி அமரசிங்கம் அண்ணனின் குறிப்புக்கள் அவரைப் பற்றியும், அவரது இலக்கிய முயற்சிகளைப் பற்றியும் அறியும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.

வரலாற்று ஆசிரியராகவும், கூத்துக்கலை விற்பன்னராகவும், நல்ல கவிவல்லோனாகவும் சிறுகதை ஆசிரியராகவும் அறிமுகமான தம்பலகாமம் க. வேலாயுதம் அவர்களின் ~ரங்கநாயகியின் காதலன் என்ற குறுநாவல் என்னை ஒருகணம் பிரமிப்படைய வைத்துவிட்டது.

ஆக்க இலக்கியத் துறையில் புனைகதை வகை சாதாரண மக்களின் கவனத்தை ஈர்த்துவிடக்கூடிய ஒரு இலக்கிய வடிவமாகும். அந்த வகையில் காலத்தின் பதிவாகவும், ஒரு குறித்த காலத்தில் வாழ்ந்த மக்களின் பாரம்பரியம், பண்பாடு, வாழ்க்கை முறைகள் மற்றும் சமூக அசைவியக்கம் என்பவற்றை மிக எளிய நடையில் இலகுவில் புரிந்து கொள்ளக்கூடியவகையில் எடுத்துக்கூறும் புனைகதை வடிவமான குறுநாவலினூடாக மிக எளிமையான முறையில் அக்கால இலக்கிய பேச்சு வழக்கு நடையில் தம்பலகாமம் க. வேலாயுதம் அவர்கள் ~ரங்கநாயகியின் காதலன் ஊடாக வெளிப்படுத்தி அதில் வெற்றியும் கண்டுள்ளார்.

~ரங்கநாயகியின் காதலன் என்ற இந்தக் குறுநாவல் ஒரு போர்வீரனுக்கும், ரங்கநாயகிக்கும் இடையான காதலாக மட்டும் படைக்கப்படாமல் காதலுடன் சேர்த்து தமிழர்களின் வீரமும் அவர்களுடைய ஆட்சித் திறனும் எவ்வாறு ஈழத்தி;ல் நிலைகொண்டிருந்தன என்ற வரலாற்று உண்மைகளை ஆவணப்படுத்தும் வகையிலும் படைக்கப்பட்டிருப்பது ஈழத்தில் ஆட்சி நிலவியமைக்கான வரலாற்றுச் சான்றாதாரமாகவும் விளங்குகின்றது.

தம்பலகாமத்தின் சிறப்பையும் அங்கே அந்த அழகிய கிராமத்தை மருவிச் செல்லும் குடமுருட்டியாற்றையும், இயற்கை அழகின் எளிமையையும் வாசகர்களின் மனங்களில் மிக இலாவகமாகப் பதியச் செய்துள்ளார்.

~~ஈழத்தில் தமிழர் ஆட்சி ஒன்று இருந்ததா? என்ற வரலாற்றுத் திரிபு வழிகளுக்கு ஆப்புவைப்பதுபோல் தம்பலகாமம் க. வேலாயுதம் அவர்கள் இக்குறுநாவலினூடாக ஆங்காங்கே 800 ஆண்டுகளுக்கு மேலாக தமிழர் வாழ்ந்த அவர்களால் ஆட்சிசெய்யப்பட்ட பிரதேசங்களை இன்று ஆக்கிரமிப்பாளர்களால் எவ்வாறு பெயர்மாற்றம் செய்யப்பட்டன என்ற தகவல்களை இந்தக் குறுநாவலினூடாக அறிய முடிகின்றது.

~~தம்பலகாமம் நூறு வீதம் தமிழர்களால் நிர்வகிக்கப்பட்டதால் அது ~தமிழர் பட்டணம் என்ற பெயரில் அன்று இருந்ததை அறியும்போது எமது நெஞ்சுகளும் ஒரு கணம் நிமிர்கின்றன.

ரங்கநாயகியின் காதலை உணர்வுபூர்வமாக இக்குறுநாவலினூடாக வளர்த்துச் சென்று இறுதியில் வாசகர்களின் நெஞ்சங்களைக் கனக்கச் செய்யும் வகையில் கதையை முடித்து அவளது வரலாற்றை தம்பலகாமம் ஆதிகோணேசர் ஆலயத்துடன் முடித்து வைப்பது முத்தாய்ப்பாய் அமைந்துள்ளது.

ஒரு கலைஞனை வாழும்போதே கௌரவிக்க வேண்டும் என்ற உயரிய சிந்தனையைச் செயல்படுத்தும் வகையில் கலாபூஷணம் சித்தி அமரசிங்கம் அவர்கள் ஈழத்து இலக்கியச் சோலையின் வெளியீடாக ~~ரங்கநாயகியின் காதலன் என்ற இந்தக் குறுநாவலைத் தந்து, ஈழத்துத் தமிழ் இலக்கிய வளத்திற்கு அணிசேர்த்துள்ளார். அந்த வகையில் திருகோணமலையில் அவரால் ஆற்றப்பட்டு வரும் இலக்கியப் பணி, தமிழ் உணர்வு கொண்ட ஒவ்வொருவர் உள்ளங்களையும் நிறைவு செய்யும் என்பது மட்டும் நிதர்சனம்!

வல்வை.ந. அனந்தராஜ்

ரங்கநாயகியின் காதலன் குறுநாவலை வாசிக்க

http://vellautham.blogspot.com/

Edited by TJR

  • தொடங்கியவர்

ரங்கநாயகியின் காதலன் குறுநாவலை முழுமையாக வாசிக்க

http://vellautham.blogspot.com/search/label/ரங்கநாயகியின்%20காதலன்

தம்பன் கோட்டை

http://vellautham.blogspot.com/2009/02/blog-post_24.html

என்னுரை - ரங்கநாயகியின் காதலன்

http://vellautham.blogspot.com/2009/02/blog-post_26.html

  • தொடங்கியவர்

தம்பன் கோட்டை

தம்பன் கோட்டை வரலாறும் சுவாரசியமானது. அறியப்பட வேண்டியது.

கலிங்கத்து விஜயபாகு கி.பி.1215 இல் இலங்கை மீது படையெடுத்து பொலன்னறுவையைக் கைப்பற்றி கி.பி. 1236 வரையிலும் இலங்கையை ஆட்சிசெய்தான் என்று சரித்திரம் கூறுகிறது. இலங்கையை ஆண்ட கலிங்க மன்னர்கள், இங்குள்ள பௌத்தர்களைத் திருப்திப்படுத்தி ஆட்சியில் நீடிக்க பௌத்த மதத்தைத் தழுவி பௌத்த மன்னர்களாகவே ஆட்சி செய்தனர்.

ஆனால் கலிங்க விஜயவாகு, கலிங்க மாகன் என்றெல்லாம் பெயர்கொண்ட இம்மன்னனிடமோ வலிமை மிக்க தமிழ், மலையாள வீரர்கள் அதிகமாக இருந்ததால் தன்னை எதிர்த்தவர்களைத் தன் போர் வலிமையால் அடக்கி மதம் மாறாமல் இந்து மன்னனாகவே ஆட்சியில் இருந்தான்.

இலங்கை முழுவதும் உள்ள பௌத்தர்கள் இவனது ஆட்சிக்கு எதிர்ப்பாக இருந்து, அடிக்கடி தொல்லை கொடுத்து வந்துள்ளனர். தமக்கு எதிராக நாட்டில் எந்த மூலையிலாவது கிளர்ச்சி தோன்றினால் அதை முறியடிக்க வசதியாக பொலநறுவை, புலச்சேரி, சதுர்வேதமங்கலம், (தற்போதைய கந்தளாய்) கந்துப்புலு, குருந்து, பதவியா,மாட்டுக்கோணா, தமிழ்ப்பட்டணம் (தற்போதைய தம்பலகாமம்) ஊரார்த்தொட்டை, கோமுது, மீபாத்தொட்டை, மன்னார், மண்டலி, கொட்டியாபுரம் என்று நாட்டின் பல பகுதிகளிலும் தேவைக்கு அளவான கோட்டைகளை நிறுவி படைகளையும் தகுந்தாற்போற் நிறுத்தியிருந்தான் என்பதை சரித்திர நூல்கள் நிரூபிக்கின்றன.

தம்பலகாமத்தில் வேறு இனங்களின் கலப்பின்றி தமிழர்கள் மட்டுமே வாழ்ந்ததால் அதற்கு தமிழ்ப்பட்டணம், தம்பைநகர் என்ற பெயர்கள் வழங்கி வந்ததாக அறியமுடிகின்றது. கி.மு.543ல் இலங்கை வந்து ஆட்சி அதிகாரத்தைப் பெற்ற முதல் ஆரியமன்னரான விஜயன், இந்த தம்பலகாமம் ஊரில்தான் சிவன் ஆலயத்தை அமைத்தான் (என்று செ.இராஜநாயக முதலியார் எழுதிய யாழ்ப்பாணச் சரித்திரம் கூறுகிறது).

இந்த ஆலயத்துக்கு அண்மையில் உள்ள வெண்பில் கலிங்க விஜயவாகு கிழக்குப் பகுதிகளினின்றும் வரக்கூடிய எதிரிகளின் தாக்குதல்களை முறியடிக்கக் கோட்டையொன்றை அமைத்து, தம்பன் என்ற தளபதியின் கீழ் பெரும் படையொன்றை நிறுத்தியிருந்தான். இந்த தளபதி தம்பன் வீரசாகசங்களுக்குப் பேர் போனவர்.

தனது பொறுப்பிலிருந்து கோட்டைமீது இலங்கையின் கிழக்குப் பகுதியில் இருந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை அவர் தம்பன் கோட்டைப் பிரதேசத்திலேயே போரிட்டு முறியடித்தது மில்லாமல், இனிமேலும் அவர்கள், எந்தத் தாக்குதலுக்கும் முயலக்கூடாத வகையில் அவர்களை அடக்கிப்போடவேண்டும் என்ற முனைப்பில் அவர்களைப் பின்தொடர்ந்து துரத்திச் சென்று இறுதிப் போரிட்டு முடக்கிப் போட்டார். அப்படி முடக்கிப்போட்ட இடம்தான் பொலநறுவை மட்டக்களப்பு பாதையில் அமைந்துள்ள தம்பன்கடுவை என்று அழைக்கப்படும் தம்பன் கடவை என்ற இடமாகும்.

கோணேஸ்வர ஆலயத்திற்கு அண்மையில் உள்ள வெண்பில் சுமார் 20 ஏக்கர் நிலப்பரப்பு இன்று கட்டிடச் சிதைவுகளால் உயர்ந்த மேட்டுநிலமாக பற்றைக்காடுகள் எழுந்து காணப்படுகிறது. கோட்டையைச் சுற்றிலும் நாற்புறமும் பெரிய அகழி இருந்து தூர்ந்துபோய், மழைக்காலத்தில் மட்டும் நீர் நிறைந்து கேணிபோல் தென்படுகிறது. தூர்ந்த அகழியில் பிரம்பும் நாணலும் புதராகிப் போயுள்ளன. காடாகிப் போய்விட்ட மேட்டு நிலம் இன்றும் கோட்டை என்றே அழைக்கப்படுகின்றது.

தம்பலகாமம்.க.வேலாயுதம்

Edited by TJR

  • தொடங்கியவர்

நன்றி வசி_சுதா அவர்களே

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி ஜீவன்!!!

  • தொடங்கியவர்

இணைப்புக்கு நன்றி ஜீவன்!!!

நன்றி suvy அவர்களே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.