Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இன்னும் ஒரு மாதத்தில் பொருளாதார நெருக்கடியா?

Featured Replies

வரலாற்றில் என்றுமில்லாதவாறு, இவ்வருடம் இலங்கை பென்னம் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு முகங் கொடுக்கும் நிலை உருவாகியுள்ளது என்று பிரதான எதிர்க்கட்சிஐக்கிய தேசியக் கட்சி எச்சரித்துள்ளது.

அக்கட்சியின் சார்பில், நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல தாம் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில், அரசாங்கம் பெரும் நிதி நெருக்கடியை எதிர் நோக்கப்போவதாக விவரித்திருக்கிறார். அதற்கான காரண காரியங்களையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

அரசைக் கொண்டு நடத்துவதற்கு நாட்டை இயங் கச் செய்வதற்கு மக்களின் வாழ்க்கை நிலை மேலும் ஆழமான குழிக்குள் விழாமல் தடுப்பதற்கு இந்த வருடத்துக்கு 40 ஆயிரம் கோடி ரூபா தேவை. ஆனால் அரசாங்கம் 19 ஆயிரம் கோடி ரூபாவை மட்டுமே சர் வதேச நாணய நிதியத்திடம் கடன் கேட்டிருக்கிறது. அந் தக் கடன் உதவியை சர்வதேச நாணய நிதியம் வழங்க மறுத்தால், அல்லது குறைத்து வழங்குவதற்கு முடிவு செய்தால், வழங்கப்படும் நிதி உடனடியாக கிடைக் காவிடின் அரசாங்கம் அல்லாடப்போகின்றது. மக்கள் என் றும் இல்லாதவாறு கஷ்டமுறுவர் என்று ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல புட்டுக் காட்டியிருக்கிறார்.

அரசுக்கு நாட்டுக்கு மக்களுக்கு இப்படியான ஓர் பேரிடி விழக் காத்திருக்கின்றது என்ற விடயம் பல தரப் பினருக்கு இந்த அளவு விவரமாக இதுவரை தெரிந் திருக்காது எனலாம். இந்தப் பெரிய விவகாரம் குறித்து அரசாங்கம் மக்கள் அறியக்கூடியதாக எந்த விவரத்தையும் பகிரங்கப்படுத்தியதாகத்தெரி

இது நமக்கு தேவையில்லாத ஒரு செய்தி எனினும் சில விளக்கங்களை கூற கடமைப்பட்டு இருக்கிறேன்.

அப்போது

வெளிநாட்டில் கடன் வாங்காமல் அரசை நடத்துவோம் என கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்த கதையே வேறு . அவர்களின் கணக்குப்படி தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்றால் உலகமே ஓடி வந்து பணத்தை கொட்டும் .தொழில் மற்றும் வியாபாரம் பெருகும் .மேலும் அப்போது இருந்தது ஜார்ஜ் புஷ் ஆட்சி . துல்லியமாக கூற வேண்டும் என்றால் தீவிரவாதத்திற்கு எதிரான போர் எனக்கூறும் கால கட்டம் அது .

ஆட்சிக்கு வந்த பின்னர் புலிகளை தீவிரவாதிகளாக காட்டுவதற்கு முயற்சி செய்தனர் . பெரும்பாலான நாடுகள் புலிகளை தடை செய்து இருந்தும் புலிகளை தீவிரவாதிகள் என நேரடியாக கூற எவரும் தயாரில்லை . மேலும் தடை செய்யப்பட இயக்கத்தை வெளிப்படையாக தமிழர்கள் ஆதரித்தால் பிற நாடுகள் யோசிக்க ஆரம்பித்து விட்டன . ஏனெனில் புலிகள் இயக்கத்தை யோசிக்காமல் தடை செய்து விட்டு இப்போது மனித பேரவலத்திற்கு மறைமுக காரணம் ஆனது போல மீண்டும் ஒரு வரலாற்று தவறை செய்ய எந்த நாடுமே முன்வரவில்லை . இந்த தடை என்பது பொருளாதார கொள்கையின் விளைவாக வந்த நாடுகளிக்கிடையே நட்பு பாராட்டல் ரீதியில் அனைத்து நாடுகளும் தடை செய்ததே தவிர காரண காரியங்களை ஆலோசித்து செய்யப்ப்பட்ட தடை அல்ல .

புலிகளை தீவிரவாதிகளாக சித்தரிக்க முயன்ற போதே சிங்கள அரசின் மனித உரிமை மீறல்களும் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் இருந்தது . பல நாடுகளும் கண்டும் காணாமலும் நமக்கேன் வம்பு என்ற ரீதியிலும் இருந்து வந்தன . காரணம் இந்தியா என்பது சொல்லி தெரிய வேண்டியது இல்லை . போரும் தொடர்ந்தது.

போரில் நிலங்களை விழுங்க விழுங்க பராமரிப்பு மற்றும் பல வகைகளில் செலவு அதிகமானது . போர் தளவாடங்களையும் ராணுவ மனிதவளத்தையும் அழிப்பதில் புலிகள் கவனம் கொடுத்தார்களே ஒழிய நிலத்தில் அல்ல . மேலும் முந்திய பத்தியில் கூறியது போல மனித உரிமை மீறல்களும் ராணுவத்தால் தொடர்ந்தது .

மேலும் போருக்காக குறிக்கப்பட்ட காலகட்டங்களும் பலமுறை பலரால் மேலும் ஒரே முறை பலரால் மாற்றி மாற்றி கூறப்பட்டது

மேலும் தமிழீழத்தின் வளமான பகுதிகள் போரில் கையகப்படுத்தப்பட்டு வளத்தை சுரண்ட திட்டமிடப்பட்டது .

இப்போது

சிங்களர் வென்றதாக கூறப்படும் இடங்களில் உள்ள அசாதாரண சூழல்

போரை ஆரம்பித்த பொது இருந்த பல்நாட்டு ஆதரவு இப்போது மங்கி வருகிறது . காரணம் பொருளாதார மந்தம் . பல நாடுகள் ஈழபிரச்னையை குறித்து மாற்றி யோசிக்க தொடங்கி விட்டனர் .

பத்திரிகை சுதந்திரம் பறிக்கப்பட்டபின் சிறிலங்காவை பற்றி உள்ளொன்றும் வெளியொன்றுமாக அல்லது இன்று ஒன்று நாளை ஒன்று என கொள்கைகள் மாறுகின்றன .

முக்கிய முட்டுகொடுப்பான் இந்தியாவில் அரசியல் மாற்றம் வருகிறது .

குறிப்பிட்ட பகுதிகளில் முடக்கப்பட்டதாக கூறப்பட்ட புலிகள் எங்கெங்கோ தாக்குகிறார்கள் .

பிற நாடுகளின் கோரிக்கையை ஏற்க மறுப்பதால் உதவுவதற்கும் பிற நாடுகள் தயங்குகின்றனர்

வெளியுறவு தூதர்களை அவமதிப்பது போல பேசியதால் குறிப்பிட்ட நாடுகள் கோபம் கொண்டுள்ளன .

நேரடி தொடர்பு இல்லாத நாடுகள் கூட இனப்படுகொலைகளின் மேல் கவனம் கொடுக்க ஆரம்பமாகிவிட்டது . (பிரசில் )

உலக சார்பற்ற நிறுவனங்களை போர் முனைகளில் இருந்து வெளியேற்றியதால் நம்பகத்தன்மை குறைந்து போய் உள்ளது . அதே நேரம் இந்தியாவுக்கு மருத்துவமனை அனுமதி வழங்கியது பல்வேறு ஐயங்களை தோற்றுவித்துள்ளது .

உதவி வந்த ஜப்பான் கடன் கொடுப்போம் என அறிவித்துள்ளது . இந்த நிலை சீனாவின் அணுகுமுறையில் வரவும் சாத்தியம் உள்ளது ( ஐயா எல்லாம் பொருளாதாரம் பண்ணும் வேலை ) . பாகிஸ்தானோ பணம் கொடுத்தால் மட்டுமே ஆயுதம் தரும் .

தன் மக்களிடம் திரட்ட நினைத்த நிதி திட்டமும் குறிப்பிட்டு சொல்லும்படியான முன்னேற்றம் இல்லை . மேலும் புலம்பெயர் தமிழர்கள் வேறு புறக்கணிப்பு போராட்டத்திற்கு ஆயத்தம் ஆகின்றனர் .

சந்தை மதிப்பு நாளுக்கு நாள் குறைகிறது . ( உள்ள பொருட்களின் மதிப்பு குறைவது )

இப்படி பல்வேறு காரணங்களினால் பொருளாதாரம் சரிய வாய்ப்புகள் உள்ளது என தெளிவாக கூற முடியும் . ஆனால் இதனால் நம் ஈழபோருக்கு எவ்விதம் உதவும் அல்லது நமக்கும் பாதிப்புகள் உண்டா? என்ற கேள்வியோடு எதிர்நோக்க வேண்டியுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

பாரிய பொருளாதார நெருக்கடி எதுவும் ஏற்படவில்லை

[13 - March - 2009]

* அமைச்சர் அநுர யாப்பா

-எம்.ஏ.எம். நிலாம்-

தாராள பொருளாதாரக் கொள்கையை இலங்கை தொடர்ந்து கடைப்பிடித்திருந்தால் எமது நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டு மீட்சி பெற முடியாத நிலை ஏற்பட்டிருக்குமெனத் தெரிவித்திருக்கும் அரசாங்கம், அமெரிக்காவுக்கே தாக்குப்பிடிக்க முடியாத தாராள பொருளாதாரக் கொள்கையை இங்கு நடைமுறைப்படுத்த ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்தபோது முயற்சித்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

தேசிய உற்பத்தியை ஊக்குவிக்காத எந்த நாடும் பொருளாதார முன்னேற்றத்தை அடையமுடியாதெனவும் அரசு குறிப்பிட்டுள்ளதோடு ஐக்கிய தேசியக்கட்சி தெரிவிப்பது போன்று எந்தவொரு நாட்டிடமும் பிச்சை கேட்டு கையேந்தவில்லையெனவும் தெரிவித்துள்ளது.

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்தச் செய்தியாளர் மாநாடு நேற்று வியாழக்கிழமை அரச தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்றபோது, அமைச்சரவைப் பேச்சாளரும், தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சருமான அநுர பிரியதர்ஷன யாப்பா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சர் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது;

எமது நாட்டின் பொருளாதாரம் ஆரம்பத்தில் சிறிதளவு ஆட்டம் கண்ட போதிலும் தற்போது நல்ல நிலைமைக்குத் திரும்பி வருகின்றது. எதிர்க்கட்சியினர் தெரிவிப்பது போன்று நாட்டில் பாரிய நிதி நெருக்கடியோ பொருளாதார நெருக்கடியோ ஏற்படவில்லை. உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றின் உறுப்பு நாடுகளில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. தேவைப்படும் போது அவற்றின் உதவிகளைப் பெற்றுக்கொள்வதில் எந்தவிதமான தவறுமில்லை. அதனை பிச்சை கேட்பதாகக் கருத முடியாது.

தாராள பொருளாதாரக் கொள்கை காரணமாக ஜீ 20 நாடுகள் கூட பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளன. இதனால், அந்த நாடுகளில் ஒரு கோடிப் பேர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். 2001 இல் ரணில் விக்கிரமசிங்க "மீண்டெழும் இலங்கை' என்ற திட்டத்தினூடாக தாராள பொருளாதாரக் கொள்கையை முன்வைத்தார். அவரது ஆட்சி தொடர்ந்திருந்தால் இந்த உலகப் பொருளாதார நெருக்கடிக்குள் எமது நாடும் சிக்குண்டு பெரும் சவாலை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டிருக்கும். அக்கால கட்டத்தில் அவர் அரச சேவையை பலவீனப்படுத்தியதன் காரணமாகவே நாட்டின் பொருளாதாரம் ஆட்டம் காணும் நிலை ஏற்பட்டது. அத்திட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால் இன்று அமெரிக்கா எதிர்கொண்டிருக்கும் பாரிய பொருளாதாரச் சவாலை எமது இந்தச் சின்ன நாடும் எதிர்கொண்டு தலைதூக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும்.

அமெரிக்காவில் இன்று 81 பாரிய வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இவ்வாண்டு ஜனவரியில் அங்கு ஆறு இலட்சத்து 50 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். அவ்வாறானதொரு நிலைமைக்கு எமது நாடு இன்னமும் தள்ளப்படவில்லை. அதற்கு இடமளிக்காதவிதத்தில் இலங்கையின் பொருளாதாரக் கொள்கையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் என்பவற்றின் நிபந்தனைகளுக்கு இலங்கை அடிமைப்படவில்லை. அவ்வாறான நிபந்தனைகள் விதிக்கப்படுமானால் அத்தகைய உதவியை நாம் பெற்றுக்கொள்ளப் போவதில்லை. இலங்கையில் எந்தவொரு அரச நிறுவனத்தையும் தனியார் மயமாக்கப்போவதில்லை. அதற்கு எவராவது முயற்சித்தால் இடமளிக்கப் போவதுமில்லை.

சர்வதேச முதலீடுகள், தேசிய உற்பத்தித்துறை இரண்டையும் சமாந்தரமாக பேணக்கூடிய பொருளாதாரக் கொள்கையையே அரசாங்கம் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றது. எதிர்க்கட்சியினர் அரசுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தக்கூடிய விதத்தில் தவறான பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா மேலும் தெரிவித்தார்.

http://www.thinakkural.com/news/2009/3/13/...s_page69742.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.