Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னியில் ஒரு பெரும் மனித அவலம் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது - லண்டனின் வீதிகளில் மக்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

14வது தினத்தையடையும் இளைஞன் பரமேஸ்வரனின் உண்ணாநிலை போராட்டத்தை ஆதரித்து 10 ஆயிரத்துக்கு அதிகமான மக்கள் பிரித்தானிய பாராளுமன்றத்தின் முன்னால் திரண்டுள்ளனர். காலை 6 மணியிலிருந்து அங்கு செல்ல ஆரம்பித்த மக்கள் தொடரந்து சென்று கொண்டிருக்கிறார்கள். அண்மைய நாட்களில் புற்தரை பிரதேசத்திற்குள் மக்கள் நுளைய அனுமதி மறுக்கப்பட்டபோதும், இன்று அதிகரித்த தொகையில் மக்கள் திரண்டிருந்ததால், புற்தரைப்பகுதிக்குள் நிற்பதற்கு காவல்துறையினர் அனுமதித்துள்ளனர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரித்தானியப் பாராளுமன்றம் தமிழ் மக்களால் முடக்கம்

சிறிலங்கா மிக மொசமான இனப்படுகொலையை வன்னியில் இன்று நடத்தியுள்ள நிலையில் பிரித்தானியாவில் தமிழ் மக்கள் பெரும் எழுச்சியடைந்துள்ளனர்.

பிரித்தானியாவில் தொடர்ச்சியாகப் போராட்டம் நடத்தி வரும் மக்கள் இன்று வன்னியில் இடம்பெற்றுள்ள அவலத்தை அறிந்து பெரும் சோகத்துடனும், அச்சத்துடனும் பிரித்தானிய பாராளுமன்றத்தை முடக்கி போராட்டத்தில் குதித்துள்ளனர்.

பாராளுமன்றத்திற்கான நான்கு பிரதான வீதிகளும் தமிழ் மக்களால் முடக்கப்பட்டுள்ளதால் நாடாளுமன்றத்திற்கான போக்குவரத்துக்கள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளன.

http://www.sankathi.com/index.php?mact=New...nt01returnid=51

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறிலங்கா மிக மொசமான இனப்படுகொலையை வன்னியில் இன்று நடத்தியுள்ள நிலையில் பிரித்தானியாவில் தமிழ் மக்கள் பெரும் எழுச்சியடைந்துள்ளனர்.

பிரித்தானியாவில் தொடர்ச்சியாகப் போராட்டம் நடத்தி வரும் மக்கள் இன்று வன்னியில் இடம்பெற்றுள்ள அவலத்தை அறிந்து பெரும் சோகத்துடனும், அச்சத்துடனும் பிரித்தானிய பாராளுமன்றத்தை முடக்கி போராட்டத்தில் குதித்துள்ளனர்.

பாராளுமன்றத்திற்கான நான்கு பிரதான வீதிகளும் தமிழ் மக்களால் முடக்கப்பட்டுள்ளதால் நாடாளுமன்றத்திற்கான போக்குவரத்துக்கள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளன.

மேலதிக தகவல்கள் தொடர்ந்து வரும்...

Sankathi

Tamil demonstrators block streets

Tamils staging an ongoing demonstration in central London have broken through police lines and are blocking roads around Parliament.

Hundreds of people gathered in Parliament Square as MPs returned from the Easter recess.

Two weeks ago demonstrators began rallying over the conflict between the Sri Lankan government and the Tamil Tigers separatist group.

Protesters want the UK to end the war in Sri Lanka, which is a former colony.

But the Sri Lankan government has rejected calls for a ceasefire, arguing it would give the Tamil Tigers time to regroup.

The Tigers - or Liberation Tigers of Tamil Eelam - are fighting for a separatist state in the north and east of the island.

They are a proscribed terrorist group in many countries, including the UK.

The latest London incident comes a day after Gordon Brown sent a special envoy to the United Nations in New York for "urgent" talks on Sri Lanka.

Des Browne will work to try to secure a ceasefire between government forces and Tamil Tiger rebels fighting in the north of Sri Lanka.

Foreign Secretary David Miliband said he was "gravely concerned" that 100,000 civilians remained trapped in the area.

Mr Miliband said: "The British government maintains its calls for an immediate ceasefire in Sri Lanka and for civilians to be allowed to leave the conflict area...

Meanwhile, in Sri Lanka, the army said about 5,000 people had escaped from a Tamil Tiger-held area in the north of the country.

The military said the people fled after the army broke through a fortification which had been blocking its advance into the Tigers' last stronghold.

BBC

Edited by suriyan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
http://www.bbc.co.uk/london/content/webcams/546501.shtml

Edited by Muhil

வன்னியில் ஒரு பெரும் மனித அவலம் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது - லண்டனின் வீதிகளில் மக்கள்

நீண்ட விடுப்பின் பின்னர் பிரித்தானியப் பாராளுமன்ற அமர்வுகள் இன்று ஆரம்பமாகின்றன. அவ்வேளையில் வன்னி நிலவரம் குறித்து ஒரு காத்திரமான முடிவை பிரித்தானியப் பாராளுமன்றம் அறிவிக்கவேண்டும் என்பதோடு , கடந்த இருவார காலமாக உண்ணா நிலை போராட்டத்தில் ஈடுபட்டுவரும் திரு. பரமேஸ்வரனுக்கு தக்க பதிலை அம்மன்று தரவேண்டும் என்பதனை வலியுறுத்துமுகமாக இன்று அதிகாலை லண்டன் பாராளுமன்ற சதுக்கத்தில் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடியுள்ளனர்.

திரு. பரமேஸ்வரன் அவர்களின் உடல்நிலை தொடர்ந்தும் மோசமாகி வருகின்றது. அதேவேளை வன்னியில் மக்கள் தொடர்ந்தும் மடிந்தவண்ணம் உள்ளனர். இதனால் பெரும் கவலை அடந்துள்ள மக்கள் பிரித்தானியாவின் பலபாகங்களில் இருந்தும் லண்டனை நோக்கி வந்து திரண்டுள்ளனர். மக்கள் தொகை அதிகரிக்கவே சதுக்கத்தின் மூடிவைக்கப்பட்ட பல பகுதிகளை காவல் துறையினர் திறந்து விட்டுள்ளனர்

வன்னியில் ஒரு பெரும் மனித அவலம் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது என்ற செய்தி தற்போது வந்துள்ளது.

லண்டனில் திரு. பரமேஸ்வரன் அவர்களின் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கவென கூடியிருந்த மக்கள் வன்னியின் செய்தியை அறிந்ததும் சொல்லொணாத் துயரடைந்ததோடு , பிரித்தானிய அரசு இவ் அழிவைத்தடுக்க தனக்கே உண்டான முழுப் பலத்தையும் பிரயோகிக்க வேண்டுமெனக் கூறி , வீதி மறியலில் தற்போது இறங்கி விட்டனர். இதனால் லண்டனின் மையப்பகுதி போக்குவரத்துக்கள் பாதிக்கப் பட்டுள்ளது.

வன்னியின் இச்செய்திகேட்டு கண்ணீர் விட்டு அழும் அம்மக்கள் லண்டனில் உள்ள அனைத்து தழிழரும் அங்கு வந்து தம்மோடு இணையுமாறு அழைக்கின்றனர். நிலைமையை நன்கு உணர்ந்த காவல் துறையினர் ஒருவகை மென் போக்கையே கடைப்பிடிக்கின்றனர். இதுவரை கலகமடக்கும் காவல் அணியினர் அழைக்கப்படவில்லை.

ஆனாலும் வன்னியின் தெருக்களில் எம் உறவுகளின் பிணங்கள் வீழ்வது தடுக்கப்படும் வரை தாம் லண்டன் வீதிகளில் அமர்ந்திருக்கப் போவதாக குறிப்பிடும் மக்கள் உறவுகள் அனைவரையும் அங்கு அழைக்கின்றனர்

அதே வேளை திரு. பரமேஸ்வரன் அவர்களை , இப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருமாறு பிரித்தானிய காவல் துறை உயர் அதிகாரிகள் அடங்களாக பல்வேறு தரப்பினரால் வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகின்றது. ஆனாலும் வன்னியில் போர்நிறுத்தம் ஒன்றிற்கான காத்திரமான உத்தரவாதம் ஒன்றைப் பெறாமல் தமது போராட்டத்தை கைவிடப்போவதில்லை என பரமேஸ்வரன் கூறிவிட்டார். பரமேஸ்வரன் தனது இறுதி ஆசையாக பிரித்தானியாவில் வாழும் மூன்று லட்சம் தழிழ் உறவுகளை தன் அருகே கூடுமாறு ஏலவே அழைத்திருந்தமை குறுப்பிடத்தக்கது.

அதேவேளை வீதிகளில் மக்கள் வெள்ளம் அதிகரிக்க தொடங்க தம்மை நோக்கி சர்வதேச ஊடகங்களும் , அரசியல் பிரமுகர்களும் வர ஆரம்பித்துள்ளதாக குறிப்பிடும் மக்கள் தாம் தொடர்ந்தும் விழித்திருந்து போராடப்போவதாகக் கூறுகின்றனர்.

மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப் படுகின்றது.

Westminster%20Parliament%20protest%2020042009.jpg

Westminster%20Parliament%20protest%2020042009%20(1).jpg

Westminster%20Parliament%20protest%2020042009%20(2).jpg

Westminster%20Parliament%20protest%2020042009%20(3).jpg

Westminster%20Parliament%20protest%2020042009%20(4).jpg

Westminster%20Parliament%20protest%2020042009%20(5).jpg

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்துலக புலம்பெயர் சமூகமும் ஒன்றிணைந்து லண்டன் மாநகரை தமிழீழ விடுதலைவரைக்கும் முற்றுகையிடுவோம். ஆயுத்தமாகுங்கள் அனைத்துலகத் தமிழர்களே, தமிழீழம் பிறக்கட்டும்! தரணியில் தமிழர்தேசியக் கொடியாம் புலிக்கொடி பறக்கட்டும். எதிரியானவனும் ஈனர்களும் புறமுதுகு காட்டி ஓடிடவே.

அனைத்து இங்கிலாந்து வாழ் மக்களும் இப்போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள் . .

இனியும் தாமதம் வேண்டாம்.

சென்ற முறை விட்ட தவறை இம்முறை விட்டுவிடாதீர்கள்...

நன்றிகளுடன்

தர்மா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.