Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்களுக்கு மட்டும் ஏன் இந்த கொடுமை

Featured Replies

எங்களுக்கு மட்டும் ஏன் இந்த கொடுமை... தமிழ்னா பிறந்தது அவ்வளவு தப்பா>? உலகில் இருக்கும் எல்லா உயிர் இனத்துக்கும் நிம்மதி கிடைத்தாலும் எங்களுக்கு கிடைக்க விட மட்டார்கள் போல.. என விம்மி விம்மி அழுதாள் அமுதா??????

கடவுளுக்கு கூட கண் இல்லை போல... எங்களை மட்டும் மீண்டும் மீண்டும் சோதிக்கிறார்... என்ன பாவம் பண்ணினம்.. இன்றுடன் சாப்பிட்டு எத்தினை நாள் வயதான தாயை பார்த்தாள்..பாவம் வயதான காலத்தில் நிம்மதி கூட இல்லாமல் தெரு தெருவாய் ஒட்டம்... இன்று ஆவாது சாப்பாடு வாங்கி குடுக்க வேணும் என்று நினைத்த படி தன் பழைய நினைவில் நோக்கினாள்..

தனது 20வயதிலையே கல்யாணம் பண்ணிய அமுதா ஒரு வருசம் தன் கணவனுடன் இனியமாக சந்தோசமாக வாழ்ந்தாள்..அவளோட வசந்த காலம் எவ்வளவு இனிமையானது... விட்டில் கஸ்ரம் இருந்தாலும் கணவன் புடித்து தரும் மீனில் குழம்பு வைத்து சோறு சாப்பிட்டாலே வயுறு நிரம்பி விடும்.. மகிழ்ச்சிக்கு குறை இருக்க வில்லை.... என்று இந்த சிங்களவன் கால் எடுத்து வைத்தானே அன்றுடன் எல்லாம் எரிந்து சாம்பல் ஆகி விட்டது....

அமுதாவுக்கு அப்பா இருக்க வில்லை அம்மா மட்டும்தான்.... அமுதா பிறந்து 1வயதிலையே தகப்பனை இழந்தாள் அதில் இருந்து தாய் கூலி வேலை செய்து மகளை தன்னையும் பார்த்து கொண்டார்கள்.. மகள் பெரியவள் ஆனாள்... அமுதாவின் நல்ல குணத்துக்கு நல்ல மாப்பிளையே தேடி வந்து கல்யாணம் பண்ணினான்..விதி யாரைதான் விட்டு வைத்தது... அவள் வாழ்க்கையில் புயலாய் எல்லாம் நடந்து முடிந்து விட்டது...

கடலுக்கு போகும் கணவனுடன் கடக்கரை வரை போனாள் அமுதா...கணவன் சென்று முடியவும் பார்த்து கொண்டு இருந்தாள் அமுதா...சில மணித்தியாலங்கள் இருந்து விட்டு வீடு திரும்பினாள்.. கொஞ்ச நேரத்தில் குண்டு சத்தம் கேட்டது அமுதாவுக்கு நித்திரையே வர வில்லை... கடவுளை வேண்டி கொண்டாள் கணவன் வீடு திரும்பணும் சுகமாக என்று...விடிந்தும் விடியாது கடல்க்கரை நோக்கி ஓடினாள் அமுதா... பல மணி நேரம் ஆனது கணவன் திரும்பி வரவே இல்லை....

பக்கத்து வீட்டு கார அண்ணா வருவது போல இருக்கே அவரிடம் கேட்கலாம் என்று போகலாம் என்று எண்ணும் போது அவளை தேடி வருவது போல இருந்தது.. ஏன் இந்த அண்ணா என்னையே பார்த்த படி வாறார் என்று ஜோசனையுடன் பார்த்தாள்.. அதுக்கு இடையில் மகளை காண இல்லை தேடி வந்த தாயும் அவளுக்கு பக்கத்தில் வந்தார்...

அவர் சொன்ன செய்தியை கேட்டு அமுதா மயக்கம் ஆனாள்.. ஆமாம் சிங்களவன் வெறி ஆட்டத்துக்கு அவள் கணவன் பலி ஆகி இருப்பார் என்று சொன்னார்.. அவளால் நம்ப முடியாமல் இரவு ஆகியும் கணவன் வருவான் என்ற நம்பிக்கையுடன் கார்த்து இருந்தாள்.. இன்றுடன் 2வருடங்கள் போனாது கணவனை பத்திய தகவலும் கிடைக்கலை அவன் உடலும் கிடைக்க வில்லை... குழந்தைக்கும் இருவயது ஆக போகிறது இன்றும் இந்த நாய்கள் வெறியாட்டத்தால் ஒடி கொண்டே இருக்கிறம் என்று எண்ணினாள்..

குழந்தை அழும் சத்தம் கேட்டு பழைய நினைவில் இருந்து மீண்டும் நிகழ்காலத்துக்கு வந்தாள்.. இன்று ஆவாது அம்மாவுக்கு சாப்பாடு வாங்கி குடுக்க வேணும் வெளிய கூட போக முடியாது போல இருக்கே இந்த நாய்கள் வெறியாட்டம் போட்டு கொண்டே இருக்கிதுகள்... குண்டு மழை போல பொழியுது... கணவனை இழந்தாளும் குழந்தையின் சிரிப்பில் தன்னையே மறந்து வாழ்ந்தாள் அமுதா..குண்டு மழை ஓயுந்து போன மாதிரி இருந்தது.. இந்த நேரத்தில் போய் சாப்பாடு வாங்கி வந்து விடணும் என்று நினைத்தாள்#

தாயிடம் மகனை பார்க்க சொல்லி விட்டு மகனுக்கு பாலும் தாயுக்கு சாப்பாடு வாங்க போனாள் அமுதா...அவள் நினைக்க வில்லை அவளுக்கு உறவுகளே இல்லாமல் போக போகிறது என்று... பால் வாங்க போன நேரம் திரும்பவும் செல் அடிக்க தொடங்கினான்.. ஐயோ அம்மா என் குழந்தை என்று ஒட்டம் எடுக்க ஆரம்பித்த அமுதாவை பக்கத்தில் இருந்தவர்கள் இழுத்து படுக்க வைத்தார்கள்... அவள் என்னை விடுங்கோ என் குழந்தையும் அம்மாவும் என்று கத்தினாள்... அதுக்கு பக்கத்தில் இருந்தவர்கள் சொன்னார்கள் அவர்கள் இருப்பார்கள் அமுதா நீ முதலில் படுத்து இரு அப்பதான் நீ உயிருடன் அவர்களட்ட போக முடியும் என்றார்கள்.. எவ்வளவு பேர் அதில் இருக்கிறார்கள் அவர்களுடன் தானே அம்மாவும் குழந்தையும் இருக்கு... பயப்படாமல் இரும்மா என்றார்கள்... அழுத படியே அமுதா படுத்து இருந்தாள்.. ஒரு பதினைந்து நிமிடம் போய் இருக்கும் எல்லாம் சத்தம் குறந்த மாதிரி இருந்தது...எழுந்து ஒடினாள் தயையும் மகனையும் தேடி...கிட்ட போக போக சனம் அழுது கேட்கிற மாதிரி இருந்தது அவர்கள் இருந்த இடத்தில் போல ...

விரந்து ஒடி போனாள் அவர்கள் இருந்த இடத்தில் கை கால் என்று சிதறி போய் இருந்தது அதில் இருந்த சனம் எல்லாமே அப்படியே மடிந்து விட்டார்கள்... அமுதா கதறி அழுதாள்.. இதில் எதை அவள் மகன் அம்மா என்று பொறுக்கி எடுப்பாள்... என் பிள்ளை பால் கூட குடிக்கவே இல்லையே என் செல்லமே என்று கதறி கதறி அழுதாள் அமுதா??????? அவள் வாங்கிய வந்த பால் தெரு ஒரம் போட்ட படி இருந்தது...அமுதாவின் நிலை தொடரும்.........

  • கருத்துக்கள உறவுகள்

காலத்துக்கேற்ற கதை .......எல்லோருடைய மனமும் சோகமாய் தான் இருக்கிறது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.