Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாறாத புன்னகை மாசற்ற முத்துக்குமரன்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உயிரை கொடுத்து உணர்வை வளர்த்தாய்

நீ இட்ட தீ எரிந்து சமைக்கும் முத்துக்குமரா!!

மாறாத புன்னகையே மாசற்ற முத்துக்குமரா

ஆறாத காயங்களை தாங்கிநிற்கும் தமிழ்மண்ணின்

சோகத்தைத் தாங்காமல் சோதனை தந்தாயோ

பாகத்தின் நிலையுறுத்தி பாரெங்கும் தெளியவைத்து

வீறாகி உன்னுயிரை சுடரேற்றி உரமிட்டாய்

என்னருமைத் தமிழுக்கு வித்தான வெண்ணிலவே

கண்களிலே நீரழைக்க கனலேற்றித் துடித்தாயே

பித்தரைப் போலநாம் புலம்பெயர்ந்த நாட்டினிலே

புத்தரையடி பேணும் புனிதரல்லாச் சிங்களனின்

முத்திரை பதிக்கின்ற போலி முகங்களுடன்

கிண்டலுடன் கேலிபண்ணும் தாயைப்பழி துணைகளுடன்

ஏதுவழி யறியாமல் சட்டதிட்ட வகையுணர்ந்து

பேசவழியறியாது அடக்கமது தான்மருவி

இனமழிக்கும் ராஜபக்ஷ மகிந்தனெனும் மகாவசுரன்

பொய் வாய்மை கொடுத்தங்கே யாசகங் கேட்டுமொரு

சரிதம் மறைத்து சாரீழத் தமிழனுக்கு

உரிமையும் மறுத்தங்கே உண்மைகளும் திரித்துநின்று

தமிழின அழிப்பையங்கே அந்திபகல் பாராது

சினப்படு அசுரன்போல் உயிர்கொள்ளும் மூடன்

கனைப்பொடு கைகாட்டி கருணையென வாய்மையிலே

புனைந்திடு பொய்மையெல்லாம் பாரெங்கும் கேட்டுவிட்டு

தம்பியெடுத்த பணி தமிழனெல்லாம் பயங்கரமாய்

மதங்கொண் டெழுகின்ற மகிந்தரின் ஆட்சிமையில்

வதையிடும் படலமதை வரிசை போட்டெழுதி

தன்மான முள்ளவர்கள் தரணியெங்கும் பேரணியாய்

பதாதைகள் படங்களென்று தாங்கியே உணர்த்திநின்று

சிதறியழிந்த வெங்கள் சிறார்களும் புலியென்று

எறிகணையா லெதிரியழிந் தானென்று

தேசிய வினத்தையெல்லாம் திட்டமிட்டு மாய்ப்பவர்க்கு

அரசியல் தலைவர்சிலர் அமருமாசனத்தின்

பறிபோகும் நிலையையெண்ணி பாசாங்குக் கதைபரப்பி

அறிவுரையால் அரசினையே அரவணைத்து உணவுண்டு

அழித்தோழிக்கு மாயுதமும் ஆட்பலமும் மறைமுகமாய்

வழிதெரியாப் பாவைக்கு ஊன்று கோலளித்தாற்போல்

தினமொரு கதைபேசும் தமிழ்பழுத்த தாத்தாவும்

இறையாண்மை தவறியதால் ஆதரவு தருபவரை

சிறைபிடிக்க அமுலாக்கி சாகடிக்கும் நடுநிலையை

அறிவிலோ ரூடகத்தில் அரும்பணியைத் திறந்துமங்கே

உலகமது தெளிந்திடவே உத்தமனாம் முத்துக்குமரவன்

அக்கினிக்கே இரையாக்கி எடுத்துரைத்தான் சிலவரிகள்

அறவழியால் எழுதிய அமரரது சாசனத்தால்

உறவான தமிழர்க்கு உணர்ச்சியை தூண்டுமென

சாவீடு செய்வதற்கும் சொரிந்தானே சிலவார்த்தை

மாணவச் செல்வங்கள் மனம்வைத்தால் முடியுமென

மானிட உலகிற்கோர் மனிதநேயம் உரைத்தவராய்

சோடை போவதால் சுதந்திர உலகத்தில்

ஆடை களைந்தவொரு அம்மணத்தை காட்டுபவர்

சுணங்கினத்திற் கொப்பாகி அலையுமொரு நாள்வருமே

பேய்தானழிக்கும் பிணங்களின் சிதறல்களால்

ஆய்வுரைகள் காணாத ஆறுபோல் குருதியங்கே

சுதந்திர ஈழத்தின் தேவைப் புரிந்து கொண்டு

மெய்யை வருத்தி மேதினிக் குணர்த்தென்றே

ஏற்புடை வார்த்தைகளை எழுதி வைத்துவிட்டு

மாய்ந்தாயோ மாவீரா மாயா உலகினிலே

உரமாகத் தமிழினத்தின் உள்ளத்தில் நீயிருந்து

உருவாகு மீழத்தில் உன்பெயரும் நிலையாகி

வரமருளும் தெய்வத்துள் வணங்குமொரு நிலவொளியாய்

வந்திப்போம் வல்லதமிழ்வீரா சாந்திகொள்வாய்!!

தம்பிமுத்துக் குமரா தமிழீழங் காப்பதற்காய்

தங்கத் தமிழ்நாட்டில் தனித்துக்குரல் கொடுத்தாய்

தும்பிப் பூச்சிகளின் அலட்சியத்தின் செயலதுவால்

தூயவா நீயுமங்கே தீயிட்டு சாவுகொண்டாய்

அம்பாலே புண்பட்ட உள்ளமதாய் எமையாக்கி

தமிழ்மண்ணே குமுறியழ ஆருயிரை விடுத்தனையோ

நம்பிக்கை யிழக்காமல் நம்மீழதேசமது

நமக்கே யுரித்தென்றுநாயகனே கண்ணுறங்கு

கவிக்குமரன்

மனத்தெழுந்த துயரத்தால் ஏதோ புலம்பிவிட்டேன் பிழையிருந்தால் பொறுத்தருள்வீர் நண்பர்களே! நன்றி

Edited by கவிக்குமரன்

  • கருத்துக்கள உறவுகள்

நம்பிக்கை யிழக்காமல் நம்மீழதேசமது

நமக்கே யுரித்தென்றுநாயகனே கண்ணுறங்கு .................

.புலம்பெயர் நாடிலே புலம்பித்திரியும் உறவுகள் எல்லாம் இன்னும் வாழ்வது நம்பிக்கையிலே .........

சோகத்தை புலம்பி தீர்த்த கவிக்குமரனுக்கு நன்றி .......கவிப்புலமைக்கு என் பணிவான பாராட்டு

காலத்தின் கட்டாயம் கருதி இடை புகுத்தும் என் செயலை மன்னிப்பீர்களாக! கடும் குளிரிலும் குழந்தைகளையும் முதியோர்களையும் 360 யூனிவர்சிட்டி அவன்யூ டொரொண்டோ - விற்கு ஆயிரக்கணக்கில் கூட்டி வந்த குடும்பத்தினரின் வேண்டுகோள் இதுதான். போராட வாருங்கள்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.