Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அகதியாகிப் போன மனிதம் (சிங்களத்திலிருந்து....)

Featured Replies

அகதியாகிப் போன மனிதம் (சிங்களத்திலிருந்து....)

2086FleeRefugees_J.jpg

இன்று சில சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்ட பகுதியொன்றுக்குள் முடக்கப்பட்டுள்ள புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உட்பட பயங்கரவாதிகளின் இறுதி எப்படி இருக்கும் என்பதிலேயே சிங்களவர், தமிழர், முஸ்லீம்கள் மற்றும் உலகமும் வியப்போடு இருப்பது வியப்பான விடயமல்ல. 30 வருடங்களுக்கும் மேலாக சிங்கள மற்றும் தமிழரிடையே அரசியல் வேறுபாடுகளை உருவாக்கி ஒவ்வொருவருக்கும் துன்பத்தை மட்டுமே அளித்து வந்த போர் விரைவில் முடிவுக்கு வரப் போகிறது என்பதை தினசரி செய்திகள் கூறுகின்றன.

இது சிங்களவர் மனங்களுக்கு ஆறுதலையும், மகிழ்வையும், அபிமானத்தையும் தருவதாக இருக்கிறது. ஆனால் தமிழர் மனங்களுக்கோ தமது மன உறுதி தளர்ந்து தோல்வியில் மனமொடிந்து நம்பிக்கையற்ற ஒரு நிலையை உருவாக்கியுள்ளதை காணமுடிகிறது. போர் ஒன்றின் வெற்றி தோல்விகளின் பின் இறுதியாக மனித மனங்களில் ஏற்படும் இந்த உணர்வுகள், எவருக்கும் பொதுவானது. இந்த இரு தரப்பும் தமது மதங்களின் படி இறுதி நிகழ்வுகளையும் நடத்தி ஆத்ம சாந்திக்காக பிராத்தனை கூட செய்வார்கள்.

இதற்கு முன் இரு முறை அதாவது 1971, 1989 ஆகிய வருடங்களில் தேசாபிமானம் கொண்ட சிங்கள இளைஞர்கள் அப்போதைய அரசைக் கவிழ்த்து சமத்துவமான ஒரு சமுதாயத்தை உருவாக்கும் நோக்கோடு நடத்திய புரட்சியின் போதும் இதே போன்ற வெற்றி , தோல்வி இரண்டை பெற்றவர்கள் இருந்தார்கள். ஒரு சாரார் வெற்றிக் கழிப்பில் திழைத்த வேளையில் மற்றொரு சாரார் சோகத்தில் அமிழ்ந்து கண்ணீர் வடித்ததை நம்மால் இன்றும் மறக்க முடியவில்லை.

இந்த வெற்றி பெற்றவர்களிலும், தோல்வியைத் தழுவியவர்களிலும் இடையே நடந்த மோதலுக்குள் அகப்பட்டு சின்னாப் பின்னப்பட்டவர்களது வேதனைகளை உணரும் மனித நேயமுள்ள ஒரு சிலராவது இந்த நாட்டில் எப்படியும் மீதமாகி இருப்பார்கள் என்று நான் நம்புகிறேன். அந்த நம்பிக்கையே இந்த மடலை எழுதும் தைரியத்தை எனக்களித்துள்ளது.

சிங்களம் - தமிழ் என, இனவாதத்துக்குள் மனிதம் தொலைந்து போய் இருந்தாலும் இந்த யுத்த மோதல்கள்களில் ஈடுபட்டு இருப்பவர்கள் மனிதர்கள் என்பதை நிராகரிப்பவர்களாகவே இவர்கள் இருக்கிறார்கள். இப்படியாக நீங்கள் அனைவரும் ஆயுதம் தரித்து ஒருவரை ஒருவர் கொலை செய்வது யாரை? அது தமிழீழ பயங்கரவாதிகள் மற்றும் தேசத்தை காக்கும் வீரர்கள் என்பதாகட்டும், சிங்கள படை மற்றும் விடுதலைப் புலி போராளிகள் ஆகட்டும், நீங்கள் ஏப்படி வேண்டுமானாலும் அழையுங்கள். ஆனால் உங்கள் உணர்வுகளில் இங்கே மனிதர்கள் யாரும் இறக்கவில்லை என்றே நீங்கள் கருதுகிறீர்கள்.

இவை காலா காலமாக ஒருவர் அடுத்தவர் மேல் உருவாக்கிக் கொண்ட, அச்ச உணர்வுகளின் பாதிப்பாகவும், அடுத்த ஒரு பகுதியினர் மீது தமது பல பிரயோகங்களை பிரயோகிக்கும் ஆசை கொண்ட அதிகார மனிதர்களால் ஏற்படுத்தப் பட்ட கொலை வெறி கொண்ட அரசியல் தன்மை என்பதாகவுமே இதை நாம் பதிவு செய்யலாம்.

அதை இப்படியும் அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். கொல்லப்படும் மக்களை ஒரு வெறுப்புதத் தன்மைக்குள் தள்ளி அல்லது திணித்து, அவர்களின் மனிதத் தன்மையை மறக்க வைப்பதே இந்தக் அதிகார வர்க்கத்தின் முதல் முயற்சியாகும். அவர்களால் கொடுக்கப்படும் அல்லது குறிக்கப்படும் அல்லது அழைக்கப்படும் பெயர்கள் ஆரம்பத்தில், அவர்களை மனிதர்களாக ஏற்றுக் கொள்ளும் தன்மையையே மனித மனங்களிலிருந்து அகற்ற வழி செய்கிறது.

அதனால் இவர்கள் மனிதர்களாக இல்லாமல் நம்மிலிருந்து வேறுபட்டுப் போகின்றனர். அப்படி வேறுபடுத்தப் படுவோர் தன்னைச் சார்ந்தவர்கள் இல்லை என்றாகி விடுகிறது. தன்னைச் சாராத எதிரியை கொல்வது நியாயப்படுத்தப்படுகிறது. அது பின்னர் நியாயாமானதாகியும் விடுகிறது.

பிரிவினைவாதி - பரதேசி - துரோகி - வேற்று மதத்தவன் - இனத்துரோகி - தேசத்துரோகி - கோத்திரத்தின் எதிரி - பச்சைத் துரோகி -கெரில்லா .............. இப்படியான பெயர்களால் நாமம் சூட்டப்படுவோர் கொல்லப்படக் கூடியவர்கள் என்றாகிவிடுகிறது. அப்படி கொல்லப்படுவோர்ர் அல்லது மரணிப்பவர்கள் மனிதர்கள் அல்ல. அந்த மனிதர்கள் மேல் அனுதாபம் கொள்ளத் தேவையில்லை. அந்த மனிதர்கள் எம்மை விட்டு அகன்றுவிட்ட அல்லது எம்மால் தூக்கி எறியப்பட்டவர்கள் என்பதால் அவர்கள் தொடர்பாக கலங்கவும் தேவையில்லை. அவர்களது மரணங்களே எமது வெற்றிச் சின்னங்ககள் என ஊடகங்களில் சொல்லி பெருமை கொள்ளலாம். சந்தோஷப்படலாம். அப்படி இறந்தவர்களை காட்சிப்படுத்துவதால் மகிழலாம். அவர்கள் பிணங்களைப் பார்த்து இன்பம் அனுபவிக்கின்றனர். டுட்ஸி இனத்தவரது பிணங்கள். அப்கன் போராளிகளது பிணங்கள். அசாம் பிரிவினை வாதிகளின் பிணங்கள்.பாலஸ்தின போராளிகளின் பிணங்கள் இவை அனைவரும் எம்மைப் போன்ற மனிதர்கள் என்பதை மக்கள் மறக்கவே செய்கின்றனர். அங்கும் இறந்து போனவர்கள் எம்மைப் போன்ற சராசரி மனிதர்கள்தான் என்பதை எம்மிடையே மறைக்க வைக்க அவர்களால் இலகுவாக முடிகிறது. எம்மிடம் உருவாகும் அந்த அனுதாபத்தையும் சோகத்தையும் எம் இதயஙங்களிலிருந்து மறக்கடிக்க வைக்க அவர்களால் நிச்சயம் முடிகிறது.

வனாந்தரங்களில் உள்ள மிருகங்கள் கூட, மனிதர்கள், மனிதர்களை வேட்டையாடுவது போல வேட்டையாடுவதில்லை. மிருகங்கங்களுக்கு இல்லாத அளவு நாகரீகமும் , கலாச்சார விழுமியங்களும் கொண்டு வாழும் மனிதன், இன்னொரு மனிதனை சாகடிப்பதில் திருப்பதி அடைகிறான். இவர்களிடம் ஜெனித்த புத்தரும் , காந்தியும், யேசுவும், அல்லாவும், மனித உயிர்கள் மேல் மட்டுமல்ல விலங்குகள், செடி கொடி, ஆகியவற்றின் மேல் கூட அன்பு செலுத்துங்கள் என்றது மட்டுமல்லாமல் முழு உலகின் தன்மையையும் சீரழிக்காது பாதுகாக்க வேண்டுமானால் அன்பு - கருணை - நேசம் - பாசம் ஆகியவற்றை பகிர்ந்து கொள்ளுமாறு பல நூறு தத்துவ விளக்கங்களோடு சொல்லிச் சென்றார்கள்.

அந்த உத்தமர்களின் தர்மத்தை, கிளிப்பிள்ளைகள் போல் மனப்பாடமாக சொல்லிக் கொண்டும், கோயில் குளங்களை நிர்மாணித்துக் கொண்டும் , உலகம் பூஜிக்கும் படைப்புகளை உருவாக்கிய மனிதன், கொலை கலாச்சாரத்தை மென் மேலும் வளர்த்துக் கொண்டே செல்கிறான்.

முதலாம் - இரண்டாம் உலகப் போரில், மாபெரும் மனித அழிவுகளுக்கு மத்தியிலும், கிரோஷீமா நாகசாக்கி போன்ற அணு சங்காரங்களிலும் மனித உரிமைகளை காப்பதற்காகவே ஐநா உருவானது. இருந்தாலும் கடந்த 50 வருடங்களாக மனித உயிர்களைப் பலி கொள்ளும் மோதல்களும் போர்களும் அதிகரித்ததே தவிர குறைந்தபாடில்லை.

அண்மையில் சூடான் ஜனாதிபதி டிமால் அல் பஷீருக்கு எதிராக, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது செய்யும் ஆணையொன்றை பிறப்பிக்க முயன்ற போது, அரபு லீக் மற்றும் ஆப்பிரிக்க சங்கம் அதைத் தடுத்து விட்டது. 2003ம் வருடம் சூடான் ஓர்பூர் பிரதேசத்தில் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்களின் சாவுக்கு காரணமானவர் தப்புவதற்கு அது காரணமாகியுள்ளது. இது ஐக்கிய நாடுகள் எனும் ஈனியா தன்மை கொண்ட செயலகத்தின் வீழ்சியையே ஏமக்கு காட்டுகிறது. கொலைக் கலாச்சாரம், உலக அரங்கில் தனது அதிகாரத்தையுயும், அனைத்து மதக் கோட்பாடுகளையும் மிதித்துக் கொண்டு இன்று எழுந்து நிற்கிறது. இது மனிதனுக்கு வாழும் உரிமை இல்லாதாக்கியுள்தையே காட்டுகிறது.

நமக்காக நாம் என்போர் பிரபாகரன் மற்றும் பயங்கரவாதிகளின் மரண ஊர்வலத்தை தொலைக் காட்சிகளில் பார்க்க தயாராவார்கள். நாட்டுக்காக உயிர் நீத்த இராணுவ வீரர்களுக்காக ஆத்ம சாந்திகள் வேறு நடைபெறும்.

ஆனால் , நம்மால் செய்ய வேண்டியது ஒன்று உண்டு. அதாவது , வடக்கு கிழக்கில் இருந்து வந்து முகாம்களுக்குள் அடைபட்டு இருக்கும் அந்த அப்பாவி தமிழர்களுக்காக எமது மனங்களில் இருக்கும் இரக்கத்தோடு உதவ முயலவோம். தமிழர்கள் என்று உதறித் தள்ளாமல் மனிதர்களாக பிறந்தவர்கள், மனிதர்களை நேசிப்பதற்கானவர்கள் எனும் உணர்வோடு, எமது கரங்களால் அவர்களை அன்போடு பற்றிக் கொள்வோம். அது எம்முள் உள்ள மனிதத்தை அர்த்தப்படுத்தும்.

- ஆக்கம் சிங்களத்தில் : ஜோ செனவிரத்ன

- மொழி பெயர்ப்பு :: அஜீவன்

- http://www.lankaenews.com/Sinhala/news.php?id=8696

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.