Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முதல்வர் கலைஞரின் உண்ணாவிரதத்தைக் கொச்சைப்படுத்துவதேன்?

Featured Replies

முதல்வர் கலைஞரின் உண்ணாவிரதத்தைக் கொச்சைப்படுத்துவதேன்?

ஈழப் பிரச்சினையை ஆயுதமாகப் பயன்படுத்த எண்ணியோர்க்கு ஏற்பட்ட ஏமாற்றமே காரணம்!

தமிழர் தலைவர் அறிக்கை

முதலமைச்சர் கலைஞர் அவர்கள் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துப வர்கள் யார் என்று படம் பிடித்துக் காட்டியுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள். அறிக்கை வருமாறு:-

தமிழ்நாடு முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் நேற்றைய தினம் (27.4.2009) யாரும் எதிர்பாராத நிலையில் சென்னை அண்ணா நினை விடத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

கலைஞரின்

நோக்கம் என்ன?

ஈழத் தமிழர்கள் வாழ்வுரிமை பேணப்படவும், அங்கு மூர்க்கத்தனமாக அவர்களுக்கு எதிராகத் தொடர்ந்து நடத்தப்படும் போர் நிறுத்தப்படவேண்டும் என்பதற்காகவும் கொடுக் கப்பட்ட மிகப்பெரிய அழுத் தம்தான் முதலமைச்சர் மேற் கொண்ட உண்ணாவிரத மாகும்.

அது எதிர்பார்த்த பலனைக் கொடுக்கவும் செய்தது. இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறை அளித்துள்ள செய்திக் குறிப்பு குறிப்பிடத்தக்கதாகும்.

இந்திய அரசின்

செய்திக் குறிப்பு

இலங்கையில் போர் நடவடிக்கைகள் முற்றுப் பெற்று விட்டதென்றும், கனரகத் துப்பாக்கிகள், போர் விமானங்கள், வான் வழித் தாக்கிடும் போர் ஆயுதங்கள் போன்ற குடி மக்களைப் பெருமளவிற்குக் கொல்லும் ஆயுதங்களைப் பயன்படுத்தக்கூடாது என்று இலங்கைப் பாது காப்புப் படைகளுக்கு ஆணை கள் வழங்கப்பட்டுள்ளதாக வும் இலங்கை அரசு அறி வித்துள்ளது. குடிமக்களை மீட்பதற்கும், அவர்களைக் காப்பாற்றுவதற்கும் தேவை யான அனைத்து முயற்சி களையும் மேற்கொள்வதில் இலங்கைப் பாதுகாப்புப் படைகள் இனி கவனம் செலுத்தும்.

போர் முனையில் சிக்கிக் கொண்டுள்ள தமிழ்க் குடி மக்கள் மற்றும் இடம் பெயர்ந்தோர் ஆகியோரின் பாதுகாப்புப் பற்றிய பிரச் சினைகளே முதன்மையா னவை ஆகும். அவற்றைத் தீர்ப்பதற்கு இலங்கை அரசு இன்று செய்துள்ள அறி விப்பு முக்கியமான முதல் படியாகும்.

போர் முனையிலிருந்து வெளிவந்தோரின் துயரங் களைத் தணிப்பது மட்டு மன்றி, போர் நடைபெறாத பகுதியில் இன்னும் தங்கியி ருக்கும் குடிமக்கள் மற்றும் இடம் பெயர்ந்தோர் ஆகி யோரை பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்வதற்கு தேவையான அவசர நடவடிக்கை மேற் கொள்வதுதான் தற் போதைய உடனடித் தேவை யாகும்.

உள்நாட்டில் குடி பெயர்ந்த மக்களும், பொது மக்களும்தான் இப்போரி னால் கடுமையாகப் பாதிக் கப்பட்டவர்கள். அவர் களைப் பாதுகாக்கவும, அவர்களது நலன்களுக்கு உறுதியளிக்கவும் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

போர்ப் பகுதியிலிருந்து வெளிக் கொணரப்பட்டுள்ள அப்பாவி மக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்குவதற்கு இந்தியப் பிரதமர் அவர்கள் 100 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளித்துள்ளார். இந்த நிதியைப் பயன்படுத்துவதற் கான விவரங்கள் பரிசீலிக் கப்பட்டு வருகின்றன.

மனிதாபிமானம் கிடையாதா?

முதல்வர் கலைஞர் அவர் களின் உண்ணாவிரதம் - மேற்கண்ட விளைவுகளுக் குக் காரணம் என்பது மிக வெளிப்படையாகத் தெரிந்திருந்தும், அரசியல் - தேர்தல் நோக்கோடு தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் சிலர் முதல்வர் கலைஞர் அவர் களின் நேர்மையான ஒரு போராட்டத்தைக் கொச் சைப்படுத்துவது என்பது அநாகரிகமாகும்.

85 வயதைக் கடந்த தமிழ்நாட்டின் மூத்த தலை வர் - முதலமைச்சரின் உண்ணாவிரதத்தைக் கேலி பேசுவது - பேசுபவர் களின் மனிதாபிமானமற்ற தன்மையையும், அநாகரிக உணர்வையும்தான் பறை சாற்றும்.

அன்றும் இதே வார்த்தை!

விடுதலைச் சிறுத்தை களின் தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் ஈழத்தமிழர் பிரச்சினைக் காக உண்ணாவிரதம் இருந்தபோதுகூட அ.இ. அ.தி.மு.க. பொதுச்செய லாளர் ஜெயலலிதா அம் மையார் - கருணாநிதியும் திருமாவளவனும் பேசி வைத் துக்கொண்டு நடத்திட்ட நாடகம் என்றுதான் குறிப்பிட்டார்.

திருமாவளவன் அவர் களின் உண்ணாவிரதத்தை ஆதரித்து அவருக்குப் பக்க பலமாக இருந்ததாகக் கரு தப்பட்டவர்கள் பெரும்பா லோரும் இப்பொழுது ஜெய லலிதாவின் தலைமையிலே அணிவகுத்து நிற்கிறார் கள். இப்படி அணிவகுத்து நிற்பவர்கள் ஈழத் தமிழர் களுக்கு உண்ணாவிரதம் இருக்கும் முதல்வரின் செயல்பாட்டை நாடகம் - நாடகத்தின் உச்சக்கட்டம் (க்ளைமாக்ஸ்) என்றெல் லாம் கேலி பேசுகிறார்கள். (திருமாவளவன் நாடகத் தில் இவர்கள் ஏற்ற பாத் திரம் எதுவோ!)

சேர்ந்த இடம் அப்படி

சேர்ந்த இடம் அப்படி! ஈழத் தமிழர்களுக்கு நல் லது எதுவும் நடந்துவிடக் கூடாது - இலங்கை இராணு வம் குண்டுவீச்சை நிறுத்தி விடக் கூடாது; தமிழர் களின் மரணப் பட்டியல் வந்துகொண்டே இருக்க வேண்டும்; இதைப் பயன் படுத்தி நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் கலைஞர் தலைமையிலான அணி யைத் தோற்கடித்துவிட வேண்டும் என்கிற கழுகு மனப்பான்மையில் - ஜெய லலிதா தலைமையிலான அரசியல் அணியினர் செயல் படத் துடிப்பது பரிதாபத்திற் குரிய ஒன்றே!

குறிப்பிடத்தக்க நிலைப்பாடு அல்லவா!

கனரகத் துப்பாக்கிகள், போர் விமானங்கள், வான் வழித் தாக்கிடும் போர் ஆயுதங்கள் போன்றவை நிறுத்தப்படும் என்று அறி வித்திருப்பது போர் நிறுத் தத்தில் மிகவும் குறிப்பிடத் தக்க ஒரு நிலைப்பாடு என் பதைக்கூட அறியாதவர் களா நம் அரசியல்வாதிகள்?

ஊடகங்கள் விஷமம்

இவர்களோடு தமிழ் நாட்டு ஊடகங்களும் கைகோத்துக் கொண்டு, திசை திருப்பும் தலைப்பு களில் செய்திகளைப் பெருக்கி வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. (ஆனால், வழக்கத்துக்கு மாறாக தினமலர் ஒழுங் காகத் தலைப்புப் போட்டுள்ளது).

கலைஞர் அவர்களின் தலைமையிலான அரசுக்கு எதிராகக் காயை நகர்த்த வேண்டும் என்பதிலேதான் ஊடகங்களின் குறிகள் இருந்துகொண்டே இருக் கின்றன.

முதல்வர் உண்ணாவிரதம் இருந்த காலகட்டம் எது?

எந்தச் சூழ்நிலையில் முதல்வர் கலைஞர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்?

பல்லாயிரக்கணக்கான தமிழர்களை ஒரே நேரத்தில் கொன்று குவிக்கும் ரசா யனக் குண்டுகளைப் பயன் படுத்த அதிபர் ராஜபக்சே ஆணை பிறப்பித்துவிட்டார் என்கிற தகவல் வேகமாகப் பரவிக்கொண்டிருந்த ஒரு நேரத்தில் (குறுஞ்செய்தி எஸ்.எம்.எஸ். மூலமாகவும்) விடிந்தால் என்ன நடக் குமோ என்ற வேதனையும் பீதியும் நிலவிய ஒரு முக் கியமான காலகட்டத்தில் கலைஞர் அவர்கள், இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட தன் காரணமாக தமிழர் களுக்கு நடக்க இருந்த ஒரு பேரழிவு தடுக்கப்பட்டது என்பதை மனசாட்சி உள் ளவர்கள் நன்றிக் கண்ணீர் மல்க மனிதநேயத்தோடு போற்றுவார்கள்.

ஏற்பட்ட விளைவும் அரசியல்வாதிகளின் அதிர்ச்சியும்

பல்வேறு போராட்டங் களை நடத்தியும், சட்டப் பேரவையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டும், இந்திய அரசின் பிரதிநிதிகள் பலமுறை ராஜபக்சேயைச் சந்தித்தும், வெளிநாடுகள் பலவும் பல வகைகளில் அழுத்தங்களைக் கொடுத் தும், அய்.நா. செயலாளர் வேண்டுகோள் விடுத்தும் அசைந்து கொடுக்காத இலங்கை அதிபர் ராஜ பக்சேவை, தமிழ்நாட்டின் முதல்வர், மூத்த தலைவர் மேற்கொண்ட ஒரு சில மணிகள் அளவிலான உண் ணாவிரதம் அசைத்திருக் கிறது; இறங்கி வரச் செய் திருக்கிறது - உயர்மட்டக் குழுவை அவசர அவசர மாகக் கூட்டி புதிய அறி விப்பை வெளியிடச் செய் திருக்கிறது என்றவுடன்-

ஈழப் பிரச்சினையை வைத்தே தேர்தலில் கரை ஏறலாம் என்று துடி துடித்துக் கொண்டிருந்த அரசியல்வாதிகளுக்குப் பெரும் அதிர்ச்சியாகப் போய்விட்டது. நம்பியிருந்த ஒரு ஆயுதமும் பறிமுதல் செய்யப்பட்டு விட்டதே என்ற ஆத்திரத்தில் புலம்பும் சொற்களே அவர்களின் விமர்சனங்களாக வெளி வந்துள்ளன என்பதைத் தமிழ்நாட்டு மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

ஈழத்தமிழர்களைக் காக்க ஜெயலலிதாதான் தலைவரா?

ஈழத்தமிழர் பிரச்சி னையில் தொடர்ச்சியாக - இயல்பாக ஈடுபாடு காட்டி வருபவர்கள் யார்? என்பது தான் மிக முக்கியம். சந் தர்ப்பவாதிகளின் சதுராட் டங்களில் ஏமாந்துவிடக் கூடாது.

போர் நிறுத்தம் செய்யச் சொல்வது விடுதலைப்புலி களைக் காப்பாற்றுவதற்கே என்றும், இலங்கையில் தற்போது நடப்பது உள் நாட்டுப் போர் என்றும், அதை நிறுத்துவதற்கான அதிகாரம் இந்திய அரசிடம் இல்லை என்பதை அய்ந்து முறை முதலமைச்சரான கரு ணாநிதி புரிந்துகொள்ளா தது விந்தையாக உள்ளது என்றும், உள்நாட்டு விஷயத் தில் இந்திய அரசு தலை யிட்டால் பின்னர் நம் நாட்டு உள்விவகாரத்தில் அண்டை நாடுகள் தலை யிடுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டு, அது இந்திய இறையாண்மைக்கு ஊறுவிளைவிப்பதாக அமையும் (நமது எம்.ஜி.ஆர். 16.10.2008) என்றும் பச் சையாக கொஞ்சம்கூட சந்தேகத்திற்கு இடமின்றி, ராஜபக்சேயின் சகோதரி யாக அறிக்கை வெளியிட்ட ஜெயலலிதாதான் - ஈழத் தமிழர்களைக் காக்க வந்த - வாராது வந்த மாமணி யாகக் காட்சியளிக்கிறார் சில அரசியல் கட்சித் தலை வர்களுக்கு. ஜெயலலிதா இப்படியெல்லாம் கொச் சைப்படுத்தி அறிக்கை வெளியிட்டபோது இந்த வீராதி வீரர்கள் எங்கே போனார்கள்? ஒரு கண்ட னம் உண்டா?

இதே ஜெயலலிதா மே 13 ஆம் தேதிக்குப் பிறகு என்ன பேசுவார்? அது அவருக்கே கூடத் தெரியாத ஒன்றாயிற்றே!

ஜெயலலிதாவின் திடீர் ஞானோதய உரைகள் தேர்தலுக்குப் பிறகும் தொட ரும் என்று அவரது கூட் டாளிகளால் உத்தரவாதம் கொடுக்க முடியுமா?

தமிழர்கள் எச்சரிக்கை யாக இருக்கவேண்டிய நேரம் இது.

உண்மை நண்பர்கள் யார்? நண்பர்கள் போல நடிப்பவர்கள் யார்? பகை வர்கள் யார்? பாம்புக்கும் பழுதைக்கும் உள்ள வேறு பாடு என்ன? என்பதை அறிவதில் தமிழர்களுக்குத் தடுமாற்றம் ஏற்பட்டுவிடக் கூடாது - எச்சரிக்கை எச்சரிக்கை!

சென்னை

28.4.2009

தலைவர்,

திராவிடர் கழகம்.

http://files.periyar.org.in/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா வீரமணி... நீங்கள் ஏன் இந்த அறிக்கையால் பெரியாரையும், திராவிட கொள்கைகளையும், சுயமரியாதையயும், தமிழுணர்வயும் கொச்சைப்படுத்துகிறீர்கள்?...

Edited by காட்டாறு

அய்யா வீரமணி! தமிழ் நாட்டில் எல்லோருக்கும் தெரியும் நீங்கள் ஒரு பெரிய மணி இல்லை என்பது. நீங்கள் வீர மணியாக இல்லை. ஆனால் கருணாநரியின் குஞ்சுமணியாக இருப்பது அண்மையில்தான் எல்லோருக்கும் தெரியவந்தது.

பெரியார் மீண்டும் எழுந் வரமாட்டார் என்ற தைரியம்தானே?....

வெங்காயம்....

பல்வேறு போராட்டங் களை நடத்தியும்இ சட்டப் பேரவையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டும்இ இந்திய அரசின் பிரதிநிதிகள் பலமுறை ராஜபக்சேயைச் சந்தித்தும்இ வெளிநாடுகள் பலவும் பல வகைகளில் அழுத்தங்களைக் கொடுத் தும்இ அய்.நா. செயலாளர் வேண்டுகோள் விடுத்தும் அசைந்து கொடுக்காத இலங்கை அதிபர் ராஜ பக்சேவைஇ தமிழ்நாட்டின் முதல்வர்இ மூத்த தலைவர் மேற்கொண்ட ஒரு சில மணிகள் அளவிலான உண் ணாவிரதம் அசைத்திருக் கிறது; இறங்கி வரச் செய் திருக்கிறது - உயர்மட்டக் குழுவை அவசர அவசர மாகக் கூட்டி புதிய அறி விப்பை வெளியிடச் செய் திருக்கிறது என்றவுடன்-

ஈழப் பிரச்சினையை வைத்தே தேர்தலில் கரை ஏறலாம் என்று துடி துடித்துக் கொண்டிருந்த அரசியல்வாதிகளுக்குப் பெரும் அதிர்ச்சியாகப் போய்விட்டது. நம்பியிருந்த ஒரு ஆயுதமும் பறிமுதல் செய்யப்பட்டு விட்டதே என்ற ஆத்திரத்தில் புலம்பும் சொற்களே அவர்களின் விமர்சனங்களாக வெளி வந்துள்ளன என்பதைத் தமிழ்நாட்டு மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

ஈழத்தமிழர்களைக் காக்க ஜெயலலிதாதான் தலைவரா?

வீரமணி ஐயா? நீங்களுமா?

ஐயா இலங்கை அதிபர் எந்த ஒரு நாட்டினுடையதும் சொல்லைக் கேட்கவில்லை என்பது உண்மைதான்.இந்தியா நடாத்திக்கொண்டிருக்கிற யுத்தம் இது.இந்தியாவை மீறி எந்தவொரு உலக நாடும் நேரடியாக இலங்கை விசயத்தில் தலையிடாது என்பது எல்லோருக்கும் தெரியும்.அது உங்களுக்கும் நன்கு தெரியும்.

ஆனால் நீங்கள் சொன்ன தமிழின தலைவர் (நான் சொல்லவில்லை) என்பவரிடம் தான் இந்திய மத்திய அரசை ஆட்டுவிக்கும் சக்தி இருந்தது.இப்போதும் இருக்கிறது என்பது உங்களுக்கு நன்கு தெரியும். ஒரு இனத்தின் தலைவன் என்றால் தன் இனத்திற்கு தீங்கு நடக்கும் போது தன் இனம் கண்முன்னே அழியும் போது இதனைத் தடுக்க உயிரையும் கொடுக்கத் துணிந்தவன் தான் தலைவனாக இருக்க முடியும்.

நீங்கள் சொன்ன மாதிரி உங்கள் தலைவரினுடைய உண்ணா விரதத்தை யாரும் கொச்சைப்படுத்தவில்லை. இவ்வளவு அதிகாரத்தையும் கொண்டிருந்த நீங்கள் உங்கள் அதிகாரத்தை ஏன் உரிய முறையில் பயன்படுத்தவில்லை? ஈழத்தமிழனுக்காக ஏன் உங்களின் பதவியை தூக்கி எறியவில்லை. இதைக் தான் இன்று எல்லோரும் உங்களிடம் கேட்கிறார்கள்.

அவ்வாறு நீங்கள் செய்திருந்தால் உலகத் தமிழ் இனமே உங்களை புகழ்ந்திருக்கும். என்றைக்குமே நீங்கள் தான் தமிழக முதலமைச்சர்.உங்களுடைய பதவியைக் கொண்டு உங்களுடைய குடும்ப நலனை அல்லா நீங்கள் செழிப்புறச் செய்தீர்கள். இதைத்தான் இன்று எல்லோரும் கேட்கிறார்கள்.

வீரமணி ஐயா நீங்கள் சொன்னது உண்மைதான்.

உண்மை நண்பர்கள் யார்? நண்பர்கள் போல நடிப்பவர்கள் யார்? பகை வர்கள் யார்? பாம்புக்கும் பழுதைக்கும் உள்ள வேறு பாடு என்ன?

நாங்கள் நன்றாகவே உணர்ந்து விட்டோம் யார் உண்மையான நண்பர்கள் என்று. எங்களின் இரத்தத்தின் மேல் அரசியல் நடாத்தும் ஈனப்பிறவிகள் எங்களின் நண்பர்களாக முடியாது.

நீங்கள் நடத்திய உண்ணாவிரதத்தால் என்ன பயன்?நேற்றும் இன்றுமாக 300 க்கும் மேற்பட்ட உடன்பிறப்புக்களை இழந்து நிற்கிறோம்.நீங்களும் உங்கள் கூட்டணியும் ஆட்சியில் இருக்குமட்டும் இதுதான் எங்கள் மண்ணில் நாளும் நடக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

காலையில் தொடங்கிய உண்ணாவிரதத்தை மதியம் முடித்துக்கொண்டு வீடு திரும்பும் போது கலைஞர், "வெற்றி...வெற்றி..வெற்றி.."என்று கூவிக்கொண்டு வீடு சென்றாராம். அவர் சொன்னதைக் கேட்டபோது எனக்கு இவர் சொன்ன "வெற்றி,..வெற்றி" தான் ஞாபகத்துக்கு வருகிறது. ரெண்டிற்கும் பெரிய வித்தியாசமில்லை. நீங்களும் கேட்டுப்பாருங்கள்.

http://www.youtube.com/watch?v=uQNyxaOlUuU

இதற்கு பதிலாக கீழுள்ள ஆக்கம் பொருத்தமாக இருக்கும்.

இது ஒரு புலம்பெயர் தமிழ் பொடியனின் உள்ளக்குமுறல்.

அன்பான எம் தமிழ் உறவுகளே...!!! தமிழ் ஊடகங்களே..!!!

சாவின் விளிம்பில் நிற்கும் ஈழத்தமிழினத்தின் வேதனைகளையும் வலிகளையும் விலைபேசி விற்கும் தமிழகத்து அரசியல் சாக்கடை ஈனபிறவிகளின் கோமாளித்தனமான செயல்களையும்,அவர்களது உப்புசப்பில்லாத பேச்சுக்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்காதீர்கள்.

உண்மையான தியாகத்தை புரிந்து தீயில் சங்கமமான முத்துக்குமார் போன்ற சகோதரர்களின் உணர்வுகளின் முன் இந்த அரசியல் கோமாளிகளின் அற்பத்தனமான செயல்கள் ஈழத்தமிழனையும் விடுதலைப்போராட்டத்தையும் கொச்சைப்படுத்துகின்றன.

தேர்தல் வெற்றி ஒன்றே குறியாக கொண்ட இந்த கபட நரிகளின் பசப்பு வார்த்தைகளை இனியும் நம்ப ஈழத்தமிழன் எவனும் கேணையர்கள் இல்லை.

ஈழத்தமிழனுக்கும் ஆதரவு என்ற மாயையை தமிழக மக்களிடம் ஏற்படுத்திவிட்டு காங்கிரசுக்கும் மத்திய அரசுக்கும் வால் பிடிக்கும் இந்த அரசியல் பரதேசிகளின் மனதில் என்ன இருக்கிறது என்று எல்லோருக்கும் தெரியும்.இருந்தாலும் அவ்வப்போது அவர்கள் விடுகின்ற உணர்வு பூர்வமான கயிறு திரிப்புகளுக்கும் அற்புத வாக்குறுதிகளையும் நம்பி நம்மில் சில பழமைவாதிகள் அவர்களை புகழ்ந்து பாடுவது படு கேவலமாக இருக்கிறது.

உண்மையில் தமிழத்தின் தொப்புள் கொடி உறவுகள் ஈழத்தமிழர்கள் மேல் வைத்திருக்கும் அன்பும் பாசமும் வார்த்தைகளால் சொல்லமுடியாதவை.ஈழத்தமிழனின் வலிகளினை உளப்பூர்வமாக உணர்திருக்கும் அவர்களின் ஆத்மார்த்தமான துடிப்புகளின் முன் இந்த அரசியல் சனியன்களின் கபட நாடகங்கள் வலியில் துடித்துக்கொண்டிருக்கும் ஈழத்தமிழனின் வேதனையை மேலும் மேலும் அதிகரிக்கின்றது.

'உண்ணாவிரதம்' என்ற சத்திய வேள்வித்தீ உருவான தேசத்தில் அந்த போராட்டத்தின் தார்ப்பரியத்தினையே கொச்சைப்படுத்தும் இந்த அரசியல் அசிங்கங்களினை இனியும் நம்பி எமக்கு நாமே மொட்டையடிக்கும் கேவலத்தினை செய்ய நாம் தயாரில்லை.

தேர்தல் வெற்றி,பதவி,பணம் என்ற அற்பத்தனங்களுக்கு ஆசைப்பட்டு ஈழத்தமிழனின் வாழ்வாதார பிரச்சினையை தங்களது சுய லாபங்களுக்காக விலைபேசி விற்கின்ற இவர்களுக்கு தமிழக உறவுகள் சரியான தீர்ப்பினை வெகுவிரைவில் வழங்குவார்கள்.

அன்புடன்

தமிழ்ப்பொடியன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மை இதுவல்லோ

உண்ணாவிரதத்தை கொச்சைபடுத்தியது கலைஞர் எனும் கொலைஞர்

உண்மையில் தமிழத்தின் தொப்புள் கொடி உறவுகள் ஈழத்தமிழர்கள் மேல் வைத்திருக்கும் அன்பும் பாசமும் வார்த்தைகளால் சொல்லமுடியாதவை.ஈழத்தமிழனின் வலிகளினை உளப்பூர்வமாக உணர்திருக்கும் அவர்களின் ஆத்மார்த்தமான துடிப்புகளின் முன் இந்த அரசியல் சனியன்களின் கபட நாடகங்கள் வலியில் துடித்துக்கொண்டிருக்கும் ஈழத்தமிழனின் வேதனையை மேலும் மேலும் அதிகரிக்கின்றது.

இது மறுக்க முடியாத உண்மை.... ஒரு சீரியல் நாடகத்தை பார்த்து கண்ணீர்விடும் தாய்த் தமிழகம் ஈழத்தின் துயர் கண்டு நிச்சயம் துடிக்கும்....

'உண்ணாவிரதம்' என்ற சத்திய வேள்வித்தீ உருவான தேசத்தில் அந்த போராட்டத்தின் தார்ப்பரியத்தினையே கொச்சைப்படுத்தும் இந்த அரசியல் அசிங்கங்களினை இனியும் நம்பி எமக்கு நாமே மொட்டையடிக்கும் கேவலத்தினை செய்ய நாம் தயாரில்லை.

தமிழ்நாட்டு அரசியலுக்கும் ஈழ விடுதலைக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று வைத்துக்கொண்டாலும், இந்திய நாட்டின் மத்திய அரசில் ஏற்ப்படும் மாற்றங்களின் மூலம் (முடிந்தளவுக்கு எவர் பக்கமும் சாராது) நாம் பயன் பெற எத்தனிப்பதுவே நமக்கு பலம சேர்க்கும்..... அதுவே, இந்திய பாராளுமன்றத்தில் ஈழப்பிரச்சினை பற்றிய விவாதங்கள், கேள்விகள் எழும்பொழுது எமக்கான எதிர்ப்பு குரல்களை வலுவிழக்கச் செய்யும்....

தேர்தல் வெற்றி,பதவி,பணம் என்ற அற்பத்தனங்களுக்கு ஆசைப்பட்டு ஈழத்தமிழனின் வாழ்வாதார பிரச்சினையை தங்களது சுய லாபங்களுக்காக விலைபேசி விற்கின்ற இவர்களுக்கு தமிழக உறவுகள் சரியான தீர்ப்பினை வெகுவிரைவில் வழங்குவார்கள்.

நாங்கள் செய்வது அரசியல் அல்ல அரசியல்வாதிகளுடன் போட்டி போடுவதற்கு...சர்வதேசத்துடனான ராஜதந்திர போர்....

எமக்கு சார்பான அல்லது எதிரான ஒவ்வொரு அரசியல், ராஜதந்திர நகர்வுகளில் இருந்து எமக்கு பயன்படக் கூடியவற்றை இனம்கண்டு அதை எம் வழிக்கு திசை திருப்ப வேண்டும் என்பது தான் எனது கருத்து.

அந்தாள் வழமையா "எவெரி மோர்னிங்" யோகா போறவராம். சும்மா ஒரு "சேஞ்சுக்கு" "மெரினா பீச் இல " சன் பாத் எடுக்க போனவர உன்னாவேரதம் இருகேறார் என்று படமும் எடுத்து போடுறாங்கள்......:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா வீரமணி ,

உங்களது அறிக்கை " வேலிக்கு ஓணான் சாட்சி " என்பது போல் உள்ளது .

ஏப்பிரல் 27 ம் திகதியில் தமிழரை முட்டாளாக்காமல் இருந்திருக்கலாம் .

கலைஞர் உண்ணாவிரதம் இருந்த அன்று பயங்கரவாத ஸ்ரீலங்கா அரசு தமிழர் பகுதியில் நடாத்திய கனரக தாக்குதலை பாருங்கள் ...........

நளன் சொன்னது…

கலைஞ்ர் உண்ணாவிரதம் என்பது ஒரு நாடகமே. அதை நியாயப்படுத்த யாராலும் முடியாது. இத்துனைகாலமும் தமிழுக்கு அவர் செய்த அத்தனையையும் அவரே குழி தோண்டி புதைத்துவிட்டார் என்பது மட்டுமே உண்மை. இந்த தமிழின துரோகத்தை தமிழினமும், வரலாறும் என்றும் மண்னிக்கப்போவதில்லை.

selva சொன்னது…

உண்ணாவிரத நாடகத்தை தான் கொச்சைப்படுத்தினார்கள்.

கலைஞர் ஏன் வீணாக பொய் சொன்னார். கலைஞரின் நாடகத்தால் ஈழத்தமிழரின் வேதனைகள் அதிகரித்துள்ளதே தவிர குறையவில்லை

இரா.சுகுமாரன் சொன்னது…

//ஊடகங்கள் விஷமம்

இவர்களோடு தமிழ் நாட்டு ஊடகங்களும் கைகோத்துக் கொண்டு, திசை திருப்பும் தலைப்பு களில் செய்திகளைப் பெருக்கி வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. (ஆனால், வழக்கத்துக்கு மாறாக தினமலர் ஒழுங்காகத் தலைப்புப் போட்டுள்ளது).//

\

எப்போதும் தினமலர் அந்த தவரை செய்யாது. இந்த முறையும் ஒரு மிகப்பெரிய பொய்யை சொல்லியுள்ளது.

அது தான் தலைப்பு செய்தி

bala சொன்னது…

திராவிட முண்டம்,கருப்பு சட்டை பொறிக்கி நாய்,அரை டிக்கட் தமிழ் ஓவியா அய்யா,

வழக்கம் போல் சூரமணி அய்யா மஞ்ச துண்டின் உண்ணாவிரதம் என்ற அயோக்யத்தனத்துக்கு ஜல்லி அடித்திருக்கிறது.ஆஸ்தான பாசறை நாயான நீங்களும் சாப்பிட்ட பாசறை பிரியாணிக்காக விசுவாசத்தோடு குரைத்திருக்கிறீர்கள்.வாழ்க வாழ்க.

சொல்லப்போனால் மஞ்ச துண்டின் உண்ணாவிரதத்தை யார் எதற்காக கொச்சைப் படுத்த வேண்டும்?மஞ்ச துண்டு அய்யா தான் அவ்வப்போது உண்ணாவிரதம் என்ற சமாசாரத்தை கொச்சைப் படுத்துகிறார்.இது கூட புரியாமல் பாசறை நாய்கள் ஊளையிடுகின்றன.வெட்கம் வெட்கம்.

அஹோரி சொன்னது…

நம்பிட்டோம் ..... நீங்கள் புட்டு புட்டு வைத்த காரணங்களை படிச்சிட்டு நம்பிட்டோம் ....

தமிழர்களுக்காகவே வாழ்ந்து ... தன் பிள்ளைகள் நலனை விட , மக்கள் நலனே முக்கியம் என வாழும் உன்னத தலைவர் ...

உடன் பிறப்புக்களுக்கு கூசாதா இப்படிப்பட்ட பதிவுகளை எழுத ?

மு.மயூரன் சொன்னது…

வீரமணியை விடுங்கள், இந்த அபாண்டப்புளுகை, அயோக்கியத்தனமான நியாயப்படுத்தலை பதிவுடும்போது உங்களுக்கே மன உறுத்தலாக இருப்பதில்லையா?

கருணாநிதியின் உண்ணாவிரதக்கூத்து கடைந்தெடுத்த அரசியல் அயோக்கியத்தனம், அதையும் தாண்டிய அரசியல் கோமாளித்தனம் என்பது தமிழ் கூறும் நல்லுலகே உணர்ந்துகொண்ட ஒன்று.

கருணாநிதியை நேர்மைக்கு மாறாக நியயப்படுத்த நீங்கள் தொடங்கியதிலிருந்து வரும் எதிர்வினைகளை வைத்தே சிந்தித்துப்பாருங்கள்.

கருணாநிதியையும் காங்கிரசையும் நேர்மைக்கு விரோதமாக காப்பாற்ற முயல்வதன்மூலம் தி.க, சாகும் தமிழ் மக்களுக்கு மன்னிக்க முடியாத வரலாற்றுத்துரோகம் ஒன்றினைச் செய்துகொண்டிருக்கிறது.

ஈழத்தமிழர்கள் சிந்தும் ரத்தத்தினதும் கண்ணீரினதும் பெயரால் கேட்கிறேன் தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள். போரை நடத்துவது இந்திய அரசு. நடைமுறைப்படுத்துவது காங்கிரஸ் அரசாங்கம். அதற்கு ஒத்து ஊதி முட்டுக்கொடுப்பது கருணாநிதியின் கட்சி. ஈழத்தமிழரை இவர்கள் எல்லாம் சேர்ந்துதான் கொல்கிறார்கள்.

இவர்களை தனிமைப்படுத்தி தண்டிக்கும் சரியான முடிவை தி.க எடுக்க வேண்டும்.

இந்தி என்று பேசினாலே அந்தக்கட்சிக்கு வரலாறு இல்லாமலாக்கியது திராவிடர் இயக்கம். பார்ப்பனீயத்தை ஒட்ட நறுக்கித் தனிமைப்படுத்தியது திராவிடர் இயக்கம். மதவாதம் பேசிக்கொண்டு இன்றும் கூட தமிழ் நாட்டுக்குள் எவனும் வரமுடியாதளவு அதிரிவுகளை உருவாக்கியது திராவிடர் இயக்கம்.

அந்த இயக்கத்தின் முன்னால் பாரிய வரலாற்றுப்பணி இருக்கிறது.

ஈழத்தமிழர் அவலத்தில் குளிர்காய்பவர்களை தனிமைப்படுத்தி, தமிழீழத்தை அங்கிகரிக்காமல் ஓட்டுக்கேட்டு வரவே முடியாதென்ற ந்லையை உருவாக்க வேண்டிய பணி. ஈழத்தமிழரை கொன்றுகுவிக்கும் காங்கிரஸ்-தி.மு.க கூட்டணியின் அரசியல் எதிர்காலத்தையே கருவறுக்கும் பணி.

http://thamizhoviya.blogspot.com/2009/04/blog-post_6057.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.