Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

”ரா’வின் ராஜதந்திரம்..

Featured Replies

”ரா’வின் ராஜதந்திரம்..

”ரா” இதனை பற்றி ஒன்றும் அதிகம் சொல்லி கொள்ள தேவையில்லை...

ஒரு தமிழான சொன்னால்... “ரா” என்பது தமிழர்களுக்கும்... தமிழர் நலனுக்கும் எதிராக செயல்படும் அமைப்பாக எப்போதும் செயல்பட்டிருக்கும்...

நான் கேள்விப்பட்ட வரையில்... “ரா” செயல்பாடுகள்... சிஐஏக்கு குறைந்தது அல்ல என்ற கருத்து உண்டு... சிஐஏ மற்றும் மொசாத் துழைய முடியாத இடுக்குகளிலும் “ரா” துழையும்... நெளிவு சுளிவு... “ரா” உண்டு என்றே கருத முடியும்...

இந்தியாவில் ஆட்சியாளர்கள்... யார் வந்தாலும்... அவர்களது செயல்பாடுகள்... “ரா”வின் வழிகாட்டுதலில் அடிப்படையிலேயே இருக்கலாம்...

இவர்கள்... சிறு குழுவாக இருந்தாலும்... மக்களிம் சென்று அதிகாரம் பெற்றவர்களை... ஆட்டி படைக்கும்... வல்லமை இவர்களுக்கு எப்போது இருந்து கொண்டே இருக்கிறது...

சிஐஏ போல... “ரா”வும் தனியாக ஏஜெண்ட் எல்லாம் கிடையாது... இவர்கள் மக்களிடையே கலந்து... இவர்களுக்கு வேண்டிய தகவல்களை பெறுவதில் வல்லவர்கள்... நம் வாயை பிடுங்கியே... அவர்களுக்கு வேண்டிய தகவல்களை நிரப்பி கொள்வார்கள்... தகவல் தொழில் நுட்பத்தையும் சிறப்பாக பயன்படுத்துபவர்கள்...

“ரா” அமைப்பில் வட இந்திய... ஆதிக்க சமுதாயத்தை சேர்ந்த குப்தா... மாலையாளிகள்... தமிழ் நாட்டில் வாழம்... வழந்த... தமிழ்... மற்றும் மொழிகளை பேசும் தமிழ் தெரிந்த பார்ப்பனர்கள்...

தற்போது நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளை பார்க்கும் போது... “ரா’ ராஜ தந்திரம் மிக்கவர்களாவே தெரிகின்றனர்... இதை சொல்லும் போது...ஈழ விடுதலை போராட்ட அரசியல் பிரிவு சூன்யங்களா என யாரும் கேட்க கூடாது... அப்படி கேட்டால்... இதை எழுதும் நானும்... கேட்பவர்களும் தமிழின துரோகிகள் ஆகி விட 100க்கு 200 விழுகாடு வாய்ப்புண்டு....

கடந்த 6 மாதங்களாக தமிழகத்தில்... மிக தீவிரமான ஈழ தமிழர்கள் மீதான ஆதரவு கிளம்பியது... அந்த ஆதரவை திரட்டியதில் பெரும் பங்கு... திருமாவளவனையும்... பழ.நெடுமாறன், சுப.வீ., தோழர் தியாகு போன்றவர்கள் மட்டுமே சாரும்... அரசியல் கட்சியினர்... விடுதலை சிறுத்தைகளை தவிர... வேறு யாரும்... கடந்த 3 மாதங்களுக்கு முன்... ஈழ மக்களை பற்றி பேசவே இல்லை...

கடந்த 2008 அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை... சமூகத்தில் கடைநிலை மக்களாக ஆக்கப்பட்ட அரவாணிகள் முதல்... தொழில் நுட்ப துறையில் பணி செய்து... அதிக ஊதியம் பெரும் ஐடி பணியாளர் வரை... ஈழ ஆதரவு போராட்டங்களை தொடர்ந்து நடத்தி கொண்டே இருந்தனர்...

2009 ஜனவரி மாதம்... திருமாவின் உண்ணாவிரதம்... சட்ட கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம் முதல்... இறுதி சென்னையில் 50 தாய்மார்கள் உண்ணாவிரதம் வரை நெடிய போராட்டங்கள் நடத்தப்பட்டு விட்டது...

ஜனவரி 28 ஆம் தேதி... இனபடுகொலைக்கு எதிராக... தன் உயிரை ஈகையாக்கிய தம்பி முத்துகுமார் முதல் இது வரை 16 பேர் உயிரை கொடுத்து போராடியுள்ளனர்...

இந்திய “ரா”வை பொருத்தவரை... ஈழத்தில் நடத்தபடும் தமிழின படுகொலைகள்... சரியாக தெரிகிறது... அவர்கள்... இந்திய நலனிற்காக இந்த கோர கொலை செய்யும் போது... அவர்களுக்கு தடையாக கத்துபவர்கள்... தமிழ் நாட்டு தமிழர்கள்...

கடந்த 2007 ஆம் ஆண்டு... தூத்துகுடி மீனவர்களை கடத்தி... தமிழீழ போராளிகள் கடத்தினார்கள் என கதை... திரைகதை... வசனமெழுதிய... “ரா”வினர் இப்போதும்... அடுத்தடுத்து... தமிழினதிற்கு எதிரான நாடங்களை அரகேற்றி வருகின்றனர்... அவர்களின் சதி வலையில் விழுந்தவர்கள் யார்... யார்... என நான் சொன்னால்... தமிழின துரோகியாகி விடுவேன்...

கடந்த ஏப்ரல் மாதம்... என் நண்பர் ஒருவர் சொன்னார்... தமிழ் நாட்டில் உள்ள ஈழ ஆதரவாளர்களுக்கும்... ஈழ தமிழர்களுக்கும்... இடையில் சண்டையை... தொடங்கி வைத்து... பகையை உண்டாக்கி விடும்... “ரா” அமைப்பு என எச்சரிக்கை செய்தார்... இப்போது நடக்க வில்லை... என்பார்கள்... அறிவை... உணர்வுக்கு தொலைத்தவர்கள்...

கடந்த பல ஆண்டுகளுக்கு பின்... ஈழ ஆதரவளார்கள்... ஈழ மக்களின் தேசிய தலைவர் மற்றும் கொடியுடன் திரண்டது... கடந்த ஜனவரி 31 ஆம் தேதி... சென்னை... முத்துகுமாரின் இறுதி ஊர்வலத்தில்... அதில் கலந்து கொண்டவர்கள்... விடுதலை சிறுத்தைகள்... மக இக... பெரியார் திக... திக... மற்றபடி அமைப்பாக எந்த கட்சியும் கலந்து கொள்ளவில்லை... அந்த ஊர்வலத்தின் முழு தொகுப்பும் அரசிடம் இருக்கும்...

இப்போது... விடுதலை சிறுத்தைகள் மற்றும் திக... திமுக அணியில்... மக இகவினர்... சிலை கைது செய்யப்பட்டுள்ளனர்... பெரியார் திகவினர் கைது செய்யப்பட்டு மன மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்...

இங்கே சில “ரா”வின் செப்புவித்தைகளை எடுத்துக்காட்ட முடியும்...

1. கடந்த மார்ச் மாதம்... சிங்கபூர் தமிழ் முரசு... பத்திரிக்கையில் வந்த செய்தி... வைகோ... ஜெவுடன் கூட்டணி வைக்க... விடுதலை போராளிகள் அறிவுறுத்தியுள்ளனர்... போராடி கொண்டிருக்கும் இந்த போராளிகள்... இதை செய்திருக்க வாய்ப்பு குறைவு என்பது என் கணிப்பு... இந்த “ரா”வின் புரளியை... ராமனடிமை சாதியை சேர்ந்த... தன் சாதி கட்சி இருக்கும் கூட்டணிக்கு பயன்படுத்தி கொள்வதற்கு நடந்த பெருமுயற்சியும் நடந்தது...

2. ஜெ... திடீர்... என்று... மார்ச் மாதம் 9ஆம் தேதி... சிங்கள அரசியல் சட்டதிற்கு உட்பட்ட தீர்வை ஆதரிப்பதாக சொன்னார்... பின்னர் திடீர்... திடீர்... என்று தமிழீழத்தை ஆதரிப்பதாக சொன்னார்... சோனியா... தமிழின அழிப்பிற்கு அனுப்பிய ராணுவத்தை... திரும்பி விட்டு... சிங்களர்களை அடிக்க போவதாக சொல்லியுள்ளார்... இவரது பேச்சு... ஆஸ்ரேலியா... சுவிடன், கனடா தமிழர்களுக்கு ஆன்ம பலத்தை அளித்துள்ளது... ஈழ தமிழர்களுக்கு ஜெ... ஈழ தாயக்கப்பட்டுள்ளார்... தமிழ் நாட்டில் கிளம்பிய திடீர் ஈழ ஆதரளர்கள்... நீண்ட காலமாக... குரல் கொடுத்து வந்த ஈழ ஆதரவாளர்களை... தமிழின துரோகிகள் எனவும்... ஜெவுக்கு ஓட்டு போடாத தமிழன் எவனாக இருந்தாலும் மலத்தை தின்பவர்கள் எனவும் அழைக்கப்பட்டார்கள்...

3. சிங்கள காட்டுமிராண்டிகளிடம்... தமிழர்களை அடைத்து வைத்துள்ள... சித்ரவதை முகாம்கள்... தமிழ் நாட்டில் உள்ள அகதி முகாம்களை விட சிறப்பாக இருப்பதாக சான்றிதழ் அளித்து வந்த... பெண் பொறுக்கி குருஜி... அவர் சாதியை சேர்ந்த தலைவரிடம்... சிடி கொடுத்து தமிழர்கள் அவதி படுவதாக காட்டினாராம்... அந்த ஆதிக்க சாதி தலைவியும்... மனமிரங்கி விட்டாராம்... இப்போது அந்த தலைவி... தமிழீழம் பேசி... புலம் பெயர்ந்த ஈழ தமிழர்களின் தாயாகி விட்டார்...

ஆனால் கடந்த மாத இறுதிக்கு பின்... தமிழின அழிப்பை நிறுத்த போராடிய... மேற்கத்திய நாடுகளின் தமிழர்கள்... இப்போது வேகத்தை குறைத்து... தமிழக தலைவியை நம்பி கொண்டுள்ளனர்... மே... 16 வெற்றி பெற்று... மே 22 பிரதமராக... இவர் ஈழம் வாங்கி கொடுத்து விடுவார் என எதிர்பார்த்து... தமிழக தலைவியை தாயாக்கி விட்டு... இவர்கள் போராட்டத்தை குறைத்து விட்டனர்...

இப்போது... சிங்கள வெறி பிடித்த காட்டுமிராண்டிகளிடம் சிக்கி தவிக்கும்... 2 லட்சதிற்கும் மேலான மக்களை பற்றி கவலைபடாமல்... ஈழ ஆதரவாளர்கள் எல்லோரும்... தமிழக ஆதிக்க சாதி தலைவியை... பிரதமராக்கவோ... துணை பிரதமர் ஆக்கவோ... முதல் அமைச்சர் ஆக்கவோ போராடி கொண்டுள்ளனர்... வன்னி பகுதியில் கொல்லபட போகும் உயிர்களை காக்க தொடங்கப்பட்ட போராட்டம்... தமிழக தலைவிக்கு ஆதரவான போராட்டமாக்க திசை திருப்பப்பட்டது...

2 லட்சம் தமிழர்களை பலி கொடுத்து விட்டு... யாருக்காக ஈழம் வாஙக போகிறார்கள்? மண்ணை காக்க போராடியவர்களை... கொடுத்து விட்டு... தமிழக தலைவியை... தாயாக்கிய பின்... இவ்வளவு நாள் மக்களோடு... போராடிய போராளி தலைவரை என்ன சொல்ல போகிறார்கள்... ஈழ தாயின்... வார்த்தைகளிலேயே... தீவிரவாதியா என்றா?

போராளிகளும் பேச்சுவார்த்தைக்கு... சரியான ஆளை தேர்ந்தெடுக்க வில்லை... பொறுக்கி பயல் கஞ்சா குடுக்கி குருஜியை பேச்சுவார்த்தைக்கு அனுப்பினால் காட்டி கொடுத்து விடுவான் என்ற எச்சரிக்கை கூட இல்லையா? இவனே... போராளிகளுக்கு எதிரான உளவாளிதானே? போராளிகள் இந்த இக்கட்டான நிலையில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனும் ஆதங்கத்தில் எழுதுகிறேன்... எப்போதும்... பொறுக்கி குருஜி போன்ற அயோக்கி பயல்களை நம்ப கூடாதே?

தொடக்கத்தில் இருந்தே... தமிழர்கள் விடுதலை போராட்டம்... தந்திரமான துரோகங்களால் பின்னடைவை சந்தித்து வருகிறது... போராட்டத்தின் அரசியம் பிரிவு... உணர்வு ரீதியாக மட்டுமில்லாமல்... அரசியல் ரீதியாக செயல்பட வேண்டும்...

தமிழர்களுக்கு எதிரான “ரா”ஜ தந்திரங்கள் தோற்கடிக்கபட வேண்டும்...

எப்போதும் எதிரிகளை குறைவாக மதிப்பிட கூடாது... எதிரியின் செயல்பாடுகள் பற்றி கணக்கிடாமல்... உணர்ச்சி வச பட மட்டுமே தெரிந்த தமிழன்... தந்திரத்திற்கு அறிவை அடகு வைத்து... தமிழன் ஒருவனுக்கு ஒருவன் சண்டையிட்டு கொண்டுள்ளான்...

வெற்றி பெற்று கொண்டிருப்பது... “ரா”வின் ராஜ தந்திரமே...

http://maalaithendral.blogspot.com/2009/05/blog-post.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
:D
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"தொடக்கத்தில் இருந்தே... தமிழர்கள் விடுதலை போராட்டம்... தந்திரமான துரோகங்களால் பின்னடைவை சந்தித்து வருகிறது... போராட்டத்தின் அரசியம் பிரிவு... உணர்வு ரீதியாக மட்டுமில்லாமல்... அரசியல் ரீதியாக செயல்பட வேண்டும்...

தமிழர்களுக்கு எதிரான “ரா”ஜ தந்திரங்கள் தோற்கடிக்கபட வேண்டும்...

எப்போதும் எதிரிகளை குறைவாக மதிப்பிட கூடாது... எதிரியின் செயல்பாடுகள் பற்றி கணக்கிடாமல்... உணர்ச்சி வச பட மட்டுமே தெரிந்த தமிழன்... தந்திரத்திற்கு அறிவை அடகு வைத்து... தமிழன் ஒருவனுக்கு ஒருவன் சண்டையிட்டு கொண்டுள்ளான்..."

மிக நன்றாக சொன்னீர்கள். என்னுடைய பயமும் இது தான். எமது விடுதலை போராட்டம் திசை திருப்ப படக் கூடாது. எமது கொள்கையில் நாமும் உறுதியாக இருந்து போராட்டத்தை வழி நடத்த வேண்டும். யாராவது எமக்காக போராடி பெற்று தருவார்கள் என்று நம்பி எமது வேகத்தை தளர்வு பட விட கூடாது. தமிழக மக்கள் ஆதரவு எமக்கு மிக மிக முக்கியம். அதே வேளை எமது விடுதலைக்கான முன்னெடுப்பை நாமும் தளராமல் மேற்கொள்ள வேண்டும்.

பிரசவ வலியால் துடிக்கும் தமிழ் ஈழ விடுதலை போராட்டத்திற்கு ஆதரவாக, அரவணைப்பாக தமிழக, உலக மக்கள் தேவை. "அழுதாலும் பிள்ளை அவள் தானே பெறவேண்டும்". தாமதிக்கும் ஒவ்வொரு வினாடியும் தாய்க்கும் சேய்க்கும் ஆபத்தாக முடிய வாய்ப்பு உண்டு.

தெளிவான ஆய்வு....இப்ப நான் என்ன செய்ய??......கருநாநிதிக்கு ஜால்ரா அடிக்கவா இல்லை ஜெயாவுக்கு அடிக்கவா....ஏதாவது தெளிவா சொல்லுங்கப்பா...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்கள் எமது கடமையை சரியாக செய்வோம். எமது குறிகோளுடன் நகர்வோம்.

தவளைக்கு கேடு அதன் வாய் தான்!

இது போன்ற கட்டுரைகள் ரோவுக்கு வழங்கும் செய்திகள் ஆயிரம்!

எல்லாம் தெரிந்த மிகப்பெரிய அறிவாளிகளாக தங்களை காட்டிக்கொள்ள பலவேளைகளில் முயற்சிக்கும் முட்டாள்தனம்

தமிழர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பலவீனங்களில் ஒன்று.

அது எதிரியை எச்சரிக்கைப்படுத்தி அவன் திட்டங்களை மாற்றிப் போட உதவுமே ஒழிய வேறெதற்கும் உதவப்போவதில்லை!

Edited by vettri-vel

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.