Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு கணம் சிந்தியுங்கள் - தயவு செய்து யதார்த்தமாக...

Featured Replies

அன்பார்ந்த தமிழீழ மற்றும் தமிழக மக்களே!

நம் தர்க்கங்களும் விவாதங்களும் உண்மையில் தேவையா? தேவை எனில் நீங்கள் குழப்பத்தில் உள்ளீர்கள்...எதிரிகள் யார்? நாமே நமக்கு எதிரிகள்...ஏனென்றால் ஒருவர் கூறுவதை ஆராய்வதில்லை. மாவீரர் உரைக்கு விளக்க உரைகள் தேவைப்படுவது போல். நாம் கலக்கம் அடையவேண்டும், நம் போராட்டம் உருகுலைய வேண்டும் என்பதே எதிரிகளின் இலட்சியம் இந்த வாதங்களும் பிரதி வாதங்களும் அந்த பாதையில் தான் நம்மை இட்டுச்செல்கின்றன, இதில் குளிர் காய்பவன் எதிரியே! இந்த தருணத்தில் அவன் தடயங்களை எல்லாம் அழித்தும், சாட்சிகளை கைது செய்தும், சித்ரவதை செய்தும், விடுதலைக்கு ஆதரவானவர்களை தனிமுகாம்களில் சிறைவைத்துக் கொண்டும் இருக்கின்றான்.

வெளியுலக தொடர்பு இல்லாத சூழலில் தான் வன்னி உள்ளது. தேசியத் தலைவர் இருக்கிறாரா? இல்லையா? இருக்கிறார்...............என்னுள்ளே! மிகத் தெளிவாக கூறுகின்றேன். சர்வதேசத்திடம் எம் இயக்கத்தை தடை செய்யவைத்து 3 ஆண்டுகளில் அழிப்பதாக சிங்களம் வாக்குறுதி கொடுத்தது...எனவேதான் வீதிகளில் -40 பாகைகளில் மண்டியிட்டு நாம் கதறியழுத போதும் அது நம்மை கண்டு கொள்ளவில்லை மேலாக இன்னும் சில நாட்களில் முற்று முழுதாக புலிகள் அழிந்து விடுவார்கள் பிறகு நீங்கள் போராடத் தேவையில்லை என்று எம்மிடமே கூறியது.

தொடர்ந்து போராடுவோம்

எத்தனை சவால்களுக்கு முகம்கொடுத்தாலும் எத்தனை இடையூறுகளை எதிர்கொண்டாலும் எத்தனை சக்திகள் எதிர்த்து நின்றாலும் நாம் தமிழரின் சுதந்திர விடிவிற்காகத் தொடர்ந்து போராடுவோம். வரலாறு விட்ட வழியில், காலம் இட்ட கட்டளைப்படி சிங்கள அந்நிய ஆக்கிரமிப்பு அகலும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம்.

இந்த வரலாற்றுச் சூழமைவில், தமிழர் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் எந்தக் கோடியில் வளர்ந்தாலும் எமது தேச விடுதலைக்கு உறுதியாகக் குரலெழுப்பி, எமது சுதந்திர இயக்கத்தின் கரங்களைப் பலப்படுத்துமாறு அன்போடு வேண்டுகிறேன்.

இதை நான் சொல்லவில்லை முழுமையாக வாசியுங்கள் 2008 மாவீரர் உரையினை

தலைவர் ஒரு தீர்கதரிசி அவரின் உரையில் தெள்ளத் தெளிவாக தற்போது நடந்ததை கூறியுள்ளார்....

சர்வதேசம், இலங்கையின் நிர்பந்தத்தினால் வெறுக்கப்பட்ட எம் இயக்கமும் தலைமையும் இல்லாத சூழலலைத்தான் விரும்பியது...அப்படியே தற்போது யாவும் இல்லையென வைத்துக் கொண்டாலும் நன்மை நமக்கே! ஏனென்றால் இனி பயங்கரவாதம் என்ற குற்றச் சாட்டை யார் மீதும் சுமத்த இயலாத கட்டத்திற்கு சிங்களம் தள்ளப்பட்டுள்ளது ஆனால் களம் வன்னியில் இல்லாது உலகெங்கும் விரிந்துள்ளது. இதை முறியடிக்கும் முயற்சியே “தலைவரின் மறைவு குறித்து அது வெளியிட்ட பொய் பிரசாரம்”. இதை நாம் சாதகமாக பயன்படுத்துவது கெட்டித்தனம்.

மாவீரர் உரையில் தலைவர் எங்களை உறுதியான குரலெழுப்ப வேண்டுகிறார்...இத்தருணத்தில் சர்வதேசத்திடம் நாம் கேட்க வேண்டியன நிறையவே உள்ளது....இதுகாலும் காலம் தாழ்த்தியவாறு தற்போது செய்ய இயலாது.

முதலில் போர் குற்றங்களுக்கான சாட்சியங்களை காப்பாற்ற வேண்டிய கட்டாயம் உள்ளது (3 மருத்துவர்கள், அரசாங்க முகவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்).

இரண்டாவதாக உதவி வழங்கும் அமைப்புகளையும் அய்னாவையும், பன்னாட்டு ஊடகங்களையும் சுதந்திரமாக இயங்கவைக்க இலங்கையை கட்டாயப்படுத்த வேண்டும்.

இவைகளில் 300,000 மக்களின் பாதுகாப்பு, உணவு, மருத்துவம், சிறார் கடத்தல், வதைமுகாம் சித்ரவதை என பல விடயங்கள் உள்ளது.

இப்படி எமக்கு முன் கிடக்கும் பணிகளை விட்டு விட்டு மீண்டும் தேசிய தலைவர் baby sitting செய்வார் என நினைத்தால் எப்படி அவரின் வேண்டுகோளான ”சுதந்திர இயக்கத்தின் கரங்களைப்” பலப்படுத்துவோம்?

நம் மனவலிமையை, நம்முள் இருக்கும் ஒற்றுமையை சோதிக்கும் காலமாக இச்சூழலை தலைவரே தீர்மானித்த ஒன்றாகவே கருதுகின்றேன்.

சிந்தித்துப் பாருங்கள் முதல் மாவீரன் லெப்டினண்ட் கேணல் சங்கரின் வீரமரணத்தின் போதும், திலீபன் வீரமரணத்தின் போதும், கிட்டண்ணா வீரமரணத்தின் போதும் இன்று வரை 30,000 + போராளிகளின் வீரமரணித்தின் போதும் அவர் மனநிலை எவ்வாறு இருந்திருக்கும்? நம்மை போன்று குழம்பியாயிருந்தார்? எவ்வளவு துரோகிகள்? எவ்வளவு துரோகங்கள்? நம்மை போன்று குழம்பியாயிருந்தார்?

இன்று உலகெங்கும் 300,000 போரளிகளுக்கு மேல் போராடுகின்றோம் இதை இலங்கை குழப்பாதா? நமக்கு யாரிருக்கின்றார்கள்? நம்முள் வேற்றுமை அகற்றி ஒற்றுமை கொள்வோம், நிமிர்வோம், வெல்வோம் தமிழீழத்தை.

Edited by Sniper

  • தொடங்கியவர்

தற்சமயம் எமது தேசிய தலைவரைப் பற்றி வரும் பல அறிக்கைகளை ஆராயும் போது பத்மநாதனின் அறிவிப்பு ஸ்திரத் தன்மை இழந்துவிட்டது.

தமிழ்நெட் கூறுவதைப் பாருங்கள்: Claims and scepticism sans evidence

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ஸ்நைபர் ..

(babysitting )........==..பராமரித்தல் .........கவனித்தல் .........கையாளுதல் :icon_idea:

எமது தமிழிழத்திற்காக 34 நான்கு வருட காலமாக ஆயத போரட்டத்திலேயே மூழ்கி இருந்த எங்களுக்கு ஆயுத போரட்டத்தை பற்றியவைகளிலே தேர்ச்சி பெற்றவர்களாக நாம் இருந்திருக்கின்றோம் என்பதை நாம் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் சற்று ஆழமாக சிந்திப்பீர்களாயின் ஒரு உன்மை புலப்படும் எங்களுக்கு அதாவது என்று விடுதலைப்புலிகள் எங்களது ஆயதங்களை நாங்கள் மௌனமாக்குகின்றோம் என்று சர்வதேச ரீதியாக கூறினார்கலோ அன்றே விடுதலைப்புலிகளின் உலகலாவியரீதியில் இரண்டாவது மிகப்பெறும் யுத்தமாக அரசியல் போரட்டம் ஆரம்பமாகியுள்ளது ஆயத போரட்டத்திலேயே மூழ்கி இருந்த எங்களுக்கு இந்த அரசியல் போரட்டம் ஒரு புறியாத புதிறாகவே இருக்கும் என்பதில் ஐய்யம் இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஊடகங்களின் உளறல்களும், பக்கசார்பான பதற்றங்களும் - இராஜவர்மன்.

தமிழீழத் தேசியத் தலைவர் இருக்கிறார். இருக்க வேண்டும். போராட்டத்தைக் கொண்டு நடத்த வேண்டும் என்ற அவா ஒவ்வொரு தமிழனின் மனதிலும் நிரந்தரமானதாகப் பதிந்ததோடு, பிரார்த்தனையாகவும் அமைந்துவிட்டது. அதுவே எனது பிரார்த்தனையும் கூட. ஆனால் உண்மை அதற்கு மாறுபட்டதாக துரதிஸ்டவசமாக அமைந்துவிட்டால் அதனை அவர் நியமித்த பிரதிநிதியே அறிவிக்கும் போது அதனை நேர்மையாக மக்களிடம் எடுத்துச் செல்வதில் என்ன தயக்கமிருக்கிறது என்பதே எங்களது தற்போதைய கேள்விக்குறி.

தமிழீழத் தேசியத் தலைவரால், தமிழர்களின் தலைமையால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட, அதிகாரபூர்வமுள்ள ஒரு தொடர்பாக தற்போது புலம்பெயர் தமிழர்களிற்கு உள்ளவர் திரு. கே.பி. பத்மாநதன். அவ்வாறான ஒருவரின் அறிக்கையின் மீது சேறுபூசுகின்ற அல்லது விமர்சனத்திற்கு உட்படுத்துகின்ற செயலானது எள்ளளவும் பொருத்தமற்றதொன்று என்பதைவிட பத்திரிகா தர்மத்தைக் குழி தோண்டிப் புதைக்கும் ஒரு படுபாதகச் செயல் என்பதை நாங்கள் ஏனோ இலகுவாக மறந்து விடுகிறோம்.

தேசியத்தலைவரால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட ஒருவரை அவருடைய வார்த்தைகளை உதாசீனப்படுத்துவது என்பது எங்களின் விருப்பு. ஆனால் ஒரு மாபெரும் வீர மரணத்தின் மீது களங்கம் ஏற்படுத்துவது என்பது நாங்கள் இவ்வளவு நாளும் விரும்பியேற்ற தொண்டுக்கு நாங்களே செய்யும் ஒரு வரலாற்றுப் பழி.

ஆகமொத்தம் தமிழீழத் தேசியத்தலைவரின் உத்தியோகபூர்வ நியமனத்தைப் புறந்தள்ளி எதிரிகள் வகுத்த வியூக வலைக்குள் ஒட்டுமொத்த தமிழினத்தையும் தள்ளிச் சிதைக்கும் பணியை நாங்களே செவ்வனே முன்னெடுக்கிறோம்.

ஜெயசிக்குறு உச்சச் சமர் காலகட்டத்தில் கிளிநொச்சி இராணுவ முகாமிற்கும் முறிகண்டியின் வடக்குப் புறமாக இராணுவம் நிலை கொண்டிருந்த இடத்திற்குமிடையே எஞ்சியிருந்த தூரம் வெறும் நான்கு கிலோ மீற்றர்களே…அத் தருணத்தில் போரின் போக்கையே மாற்றத் தேவையான முழுத் தேவைகளையும் செவ்வனே பூர்த்தி செய்யும் செயலை மாத்திரமல்ல கனரக ஆயுதப் பாவனைக்கான விநியோகத்தையும் அதிநவீன ஆயுதங்களையும் களத்திற்கு விநியோகம் செய்தவர் என்று பாராட்டப்பட்டவரை நாங்கள் ஏன் விவாதிக்க வேண்டும்?

34 வருடங்களாக தேசியத் தலைவர் சொன்னவற்றை செய்து கொண்டேயிருக்கும் ஒரு வயதான போராளி என்றுமே மேடைப்பேச்சிற்குப் பழக்கப்பட்டவருமல்ல அல்லது சிலாகித்துச் பேசுதல் அவரது துறையுமல்ல. உள்ளதை உள்ளபடி மக்களிற்கு கூற முற்படுவதை நாங்கள் கிரகிப்பதில் தான் தவறிருக்கிறதே தவிர அவரிடம் எந்தத் தவறையும் நான் காணவில்லை.

வரலாற்றின் முக்கியமான சில சந்தர்ப்பங்களின் சிலர் தங்கள் நேர்மைத்தன்மையை பரிதாபரமாக இழந்து வீண்பழிக்கு ஆளாவதுண்டு. இன்று அவ்வாறான ஒரு துர்ப்பக்கிய நிலைக்கு சில தமிழ்த் தேசியம் சார் ஊடகங்கள் உள்ளாவது மிகவும் ஆபத்தானதொரு நிலைக்கு புலம்பெயர் சமூகத்தையும் தமிழ்த் தேசியத்தையும் இட்டுச் செல்லுவதோடு தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் வீரமரணத்தின் மீது சேறு பூசும் கைங்கரியத்தையும் கச்சிதமே செய்து வருகின்றன.

தேசியத் தலைவர் இருந்தால் அவர் தனது இருப்பை நிச்சயம் உறுதி செய்திருப்பார். இது நவீன தொழில்நுட்பக் காலம் ஒரு நிமிட நொடியில் எங்குமே தொடர்பு கொள்ளக் கூடிய வகையிலேயே விடுதலைப்புலிகள், அவர்கள் தலைமை இருந்தார்கள். அவ்வாறானதொரு தொடர்புப் பேணலில் அவர்கள் இருந்தார்கள். எனவே தமிழீழத் தேசியத் தலைவர் இருந்திருந்தால் அவர்கள் அது நிச்சயமாக உறுதி செய்யப்பட்டிருக்கும் என்று நம்புவதில் எள்ளளவும் தவறில்லை. ஆனால் அவரின் இறப்பு உண்மையாக இருந்தால் அதற்கான அஞ்சலியைச் செலுத்துவதிலிருந்து மக்களை திசை திருப்புகின்ற, எதிரிகளால் கூடச் செய்ய முடியாத ஒரு துரோகத்தை எமக்குள்ள விடுதலையின் விருப்பின் பேரால் செய்வதென்பது எங்கள் தூக்கத்தை நாங்களே தொலைத்து நிம்மதியற்று உழலும் ஒரு நிலைக்கு, ஒரு பாவ நிலைக்கு எங்களை இட்டு செல்லவே உதவும்.

ஊதியத்திற்கு வேலை செய்யும் கூட்டம் தங்களின் நிகழ்ச்சி நிரலை தொடர்ந்து எடுத்துச் செல்ல தங்களால் இயன்றவற்றைச் செய்து கொண்டேயிருக்கும். ஆனால் தொண்டு ரீதியில் செயற்பட்ட பத்திரிகா தர்மத்;தைக் கடைப்பிடிக்கும் நாங்களுமா பலியாக வேண்டும்.

இன்று நாங்கள் இழக்க முற்படும் நம்பகத்தன்மையை மீளக் கட்டியெழுப்புவதென்பது மிகவும் சிரமம். அதைவிட தேவையற்ற விதத்தில் செய்திகளின் மீது சத்திரசிகிச்சைகளை செய்ய முனைவது கருணா கூடச் செய்யாத ஒரு மாபெரும் துரோகமாக மாறிவிட்டால் என்ன மகிந்தாவையா ஆதரிக்கப் போகிறோம்? அல்லது ஆனந்தசங்கரியையை முன்பக்கச் செய்தியில் இருத்தப் போகிறோம்?

நாங்கள் மறக்காதிருக்க வேண்டிய ஒரேயொரு விடயம்… வரலாற்றின் முக்கியமான சில சந்தர்ப்பங்களின் சிலர் தங்கள் நேர்மைத்தன்மையை பரிதாபரமாக இழந்து வீண்பழிக்கு ஆளாவதுண்டு. இன்று அவ்வாறான ஒரு துர்ப்பக்கிய நிலைக்கு சில தமிழ்த் தேசியம் சார் ஊடகங்கள் உள்ளாவது மிகவும் ஆபத்தானதொரு நிலைக்கு புலம்பெயர் சமூகத்தையும் தமிழ்த் தேசியத்தையும் இட்டுச் செல்லுவதோடு தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் வீரமரணத்தின் மீது சேறு பூசும் கைங்கரியத்தையும் கச்சிதமே செய்து வருகின்றன.

ஏங்களது நிலைப்பாடு பிழையாக இருந்தால் மன்னிப்புக் கேட்டுவிட்டு நாங்கள் மீண்டும் எங்கள் தொடரலாம் என்று நாங்கள் நினைக்கலாம். ஆனால் தேவையில்லாம் ஒரு நிலைப்பாடு எடுக்கும் நிலைக்கு நாங்கள் சென்றதை அதற்கான சந்தர்ப்பத்தை மக்கள் தராமல் விடலாம். நாங்கள் தூக்கி வீசப்படலாம். ஏனெனில் நாங்கள் இங்கே புறக்கணிப்பது யதார்த்தத்தை.

மக்களிற்கு உண்மைகளை மறைத்து அவர்களை யதார்த்த்திலிருந்து புறந்தள்ளி வைத்து "ஆய்வாளர்கள்" என்ற போர்வையிலும் "ஊடகங்கள்" என்ற போர்வையிலும் மீண்டும் மீண்டும் மக்களை யதார்த்திலிருந்து புறந்தள்ளி அவர்களை ஒரு மாயவலைக்குள் வைத்திருந்து தாங்கள் தங்களை நலன்களை பாதுகாக்கும் கைங்கரியத்தை செய்வார்கள். ஆனால் யதார்த்த்தை மக்களிற்கு மறைத்து மீண்டும் மீண்டும் அவர்களை மாயையில் வைத்திருக்க விரும்புபவர்களிற்கு நாங்கள் துணை போகக்கூடாது. உண்மையை உள்ளபடி ஏற்கப்பழகும் மனப்பக்குவத்தை பெற்றால் மாத்திரமே நாங்கள் கொண்ட கொள்கையில் வெற்றி பெற முடியும்.

  • தொடங்கியவர்

நன்றி ஸ்நைபர் ..

(babysitting )........==..பராமரித்தல் .........கவனித்தல் .........கையாளுதல் :icon_idea:

நன்றியக்கா. இதற்காகத்தான் அக்காக்கள் தேவை அவ்வப்போது வழிநடத்திட.

நம் மனவலிமையை, நம்முள் இருக்கும் ஒற்றுமையை சோதிக்கும் காலமாக இச்சூழலை தலைவரே தீர்மானித்த ஒன்றாகவே கருதுகின்றேன்.

சிந்தித்துப் பாருங்கள் முதல் மாவீரன் லெப்டினண்ட் கேணல் சங்கரின் வீரமரணத்தின் போதும், திலீபன் வீரமரணத்தின் போதும், கிட்டண்ணா வீரமரணத்தின் போதும் இன்று வரை 30,000 + போராளிகளின் வீரமரணித்தின் போதும் அவர் மனநிலை எவ்வாறு இருந்திருக்கும்? நம்மை போன்று குழம்பியாயிருந்தார்? எவ்வளவு துரோகிகள்? எவ்வளவு துரோகங்கள்? நம்மை போன்று குழம்பியாயிருந்தார்?

இன்று உலகெங்கும் 300,000 போரளிகளுக்கு மேல் போராடுகின்றோம் இதை இலங்கை குழப்பாதா? நமக்கு யாரிருக்கின்றார்கள்? நம்முள் வேற்றுமை அகற்றி ஒற்றுமை கொள்வோம், நிமிர்வோம், வெல்வோம் தமிழீழத்தை.

தெளிவான கருத்துக்கள், நன்றி ஸ்னைப்பர்!

  • தொடங்கியவர்

ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் இது யாவரும் அறிந்ததே! கூத்தாடி சிங்களத்தின் வஞ்சத்துக்கு இந்தியா,சீனா,பாக்கிஸ்தான் ஆகியன சேர்ந்து எண்ணெய் ஊத்துகிறது தமிழரே ஒன்றுபடுவோம் விரட்டுவோம் சிங்களத்தை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.