Jump to content

எழிலினி!!! எங்கு நீ? - தொடர் கதை


Recommended Posts

பதியப்பட்டது

வாசகர்களுக்கு வணக்கங்கள்

கதையும் சம்பவங்களும் முழுமையான கற்பனையே. நிகழ்வுகளின் பிரதிபலிப்பாக தெரிந்தாலும் உண்மை சம்பவவங்கள் அல்ல. எங்கேயோ எதையோ முடிச்சு போட்டு வேறு விளக்கம் தேடவோ தவறான கற்பித முயற்சியோ வேண்டாம். ஏனெனில் இது கதை மட்டுமே.

மெருகூட்டல் எனப்படும் சீர்படுத்துதல் முறை வரவேற்கப்படுகிறது . கதையின் போக்கு மற்றும் ஆலோசனைகள் எழுதினால் மிக்க மகிழ்ச்சி

எவர் மனதெனும் புண்படும் படி கருத்துக்கள் இருந்தால் உடனே தெரிவிக்கவும் . நீக்கி விடுகிறேன் . ஆனால் எந்த கருத்தையும் எவர் மீதேனும் திணிக்க இது கருத்துக்களம் அல்ல . கதைக்களம்

உரைநடை மற்றும் கதையின் கோணம் முற்றிலும் மாறுபட்டு இருக்க வாய்ப்புள்ளது . ஏனெனில் இது தமிழ் நாட்டை சேர்ந்த எழுத்துமுறைகள் ( நாவல் )

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

செப்டம்பர் 2006.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணிக்கும் நாகப்பட்டினத்திற்கும் இடையில் உள்ள கடலோர பகுதி. ஏன் தமிழ் ஈழத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையில் பறந்து விரிந்த கடல் என்றும் கூறலாம் . அமைதியான நீலக்கடல் . அங்காங்கே தெரியும் இனம் புரியாத வெளிச்சங்களை தவிர வேறு எந்த சலனமும் இன்றி அமைதியாய் எதற்காகவோ காத்திருந்தது இந்திய பெருங்கடல். ஆளிபேரலையை உருவாக்கி தான் பலிகொண்ட மக்களை நினைத்து வேதனை பட்டுக்கொண்டு இருந்ததோ என்னவோ? தூரத்தில் நின்று கொண்டிருந்த கப்பல்களின் நிழல் ஒளி கூட கடலில் நிழலாடும் அளவு அமைதி . நடுநிசி வேளையை தாண்டிய நேரம் . தூரத்தில் பெரிய கப்பல்கள் இரண்டு . என்ன செய்கிறது என்று யாரும் அலட்டிகொண்டதாக தெரியவில்லை .மீனவர்கள் தங்கள் படகுகளை தயார் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

காத்தமுத்து மற்றும் சுப்பிரமணியன். யாரப்பா இவர்கள்? கடலோர காவல்படையின் கடைநிலை காவலர்கள். சுவின் மாமியார் வீட்டிலிருந்து வந்த ஹீரோ ஹோண்டா கள்ள சாராயம் காய்ச்சுவோரின் கைங்கரியத்தால் எரிபொருள் முழுவதும் நிரப்பப்பட்டு கவலையில்லாமல் கடலோரத்தில் ரோந்து போய்கொண்டு இருந்தது . அவர்களின் வேலைக்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத ரஜினியும் / அரசியலும் அவர்களின் முக்கிய ஆய்வாயிருந்தது அவர்களின் பேச்சிலும் / தைரியமாக காவல் கடமையை செய்பவர்கள் என்று அவர்கள் வாயிலிருந்து வரும் லேசான ரச வாடையும் பறை சாற்றியது .

அவர்களின் உரையாடலில் வெட்டு விழுவது போல வயர்லெஸ் அழைப்பு அழைத்தது . கடலில் புதிதாக தோன்றிய படகு பற்றிய உச்சகட்ட உஷார்நிலை அறிவித்தது . கடற்படை ஹெலிகாப்டர் கடலுக்குள் படகை நோக்கி புறப்பட்டது. மூன்று ஜீப்புகளும் ஒவ்வொன்றாக கடல் பகுதியில் ஹெட் லைட் வெளிச்சத்தை உமிழ்ந்து தோன்ற ஆரம்பித்தது . சோம்பல் முறித்த காவல்துறையும் அலேர்டாக ஆரம்பித்தது .

எதையுமே கண்டுகொள்ளாமல் படகு அமைதியாக கரை நோக்கி தளும்பிகொண்டிருந்தது . படகில் பதினைந்து பேர் அனைத்து தலைமுறையும் கலந்து இருந்தனர் . அனைவர் கண்களில் பயமும், விரக்தியும் , தெளிவும், சோர்வும், வேதனையும் இன்னும் என்னன்னவோ இனம் புரியாத புரிந்து கொள்ள முடியாத அனைத்து உணர்ச்சிகளும் தென்பட்டது . ஆனால் ஒரே ஒரு ஜோடி மீன் கண்கள் மட்டும் வெறிச்சோடி நிலை குத்தி தனியான உணர்வுகளோடு விழித்து கொண்டிருந்தது. படகை யாரும் செலுத்துவது போல இல்லை. ஏற்கனவே செலுத்தி வந்த களைப்பாலும் தொப்புள் கொடி பாசம் தன்னால் கரைக்கு இழுக்கும் என்ற என்னமோ படகில் இருந்தோர் அதிகம் பதட்டமோ கவலையோ பட்டது போல தெரியவில்லை

ஆச்சு . என்னவோ விசாரணைகள் . பலமுனை விசாரணைகள் எல்லாம் முடிந்து மாவட்ட ஆட்சியாளர் காவல்துறை ஆணையரை விளக்கம் கேட்டுக்கொண்டு இருந்தார் .

எத்தனை பேர்?

பதினாலு பேர் சார்...

எதுவும் சந்தேகம் இருக்குதா?

இல்லை சார்...

மெடிக்கல் செக்?

டாக்டர் இல்லை சார் காலைல பண்ணிரலாம்...

கேம்புக்கு மெசேஜ் கொடுத்தாச்சா?

ஆச்சு சார்...

தோண்ட வரண்டுருச்சு தண்ணீ ஏதாவது கிடைக்குமா?

இதோ கொண்டுவர சொல்றேன் சார்...

அமைதியாக இறுக்கமாக இருந்த கடல் இவர்கள் கரை ஒதுங்கியதும் இறுக்கத்தை தளர்த்து லேசாக புன்னகைக்கும் விதமாக சிறிய அலைகளை உருவாக்கியது . கொஞ்சம் தூரத்தில் பெரிய அலைகளை உருவாக்கி எதோ ஒரு முக்கியமான கடமையை செய்ய எத்தனித்து கொண்டு இருந்தது.

தொடரும்...........................................................

...........................................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

கதையின் ஆரம்பம் ஆவலைத்தூண்டுகிறது. உங்கள் ஆக்கம் சிறக்க வாழ்த்துக்கள்.

Posted

கதையின் ஆரம்பம் ஆவலைத்தூண்டுகிறது. உங்கள் ஆக்கம் சிறக்க வாழ்த்துக்கள்.

உங்களின் ஊக்கத்திற்கு நன்றி . உங்களின் எதிர்பார்ப்பை வீனடிக்க மாட்டேன் . நன்றி

................................................................................

.................................................................................

.....................................

அதே செப்டம்பர் 2006. அதே நாள்

அதிகாலைபொழுது . சூரியன் எழுவதா இன்னும் கொஞ்ச நேரம் தூங்கலாமா என யோசித்துக்கொண்டு இருந்த வேளை. காய்ந்த மீன்களையும் மிச்சத்தையும் உண்ட காகங்கள் சில விழித்துக்கொண்டு அங்கொன்றும் இங்கொன்றுமாக கரைந்து கொண்டு பறந்தன. வேளாங்கண்ணி கடற்கரை இன்னும் இரவு விற்கும் மீன் வருவல்களின் மணத்தை இன்னும் தொலைக்காமல் இருந்தது. மீனவர்களின் வருகைக்காக இப்போதிருந்தே காத்திருக்கும் கிராமப்புற மீன் வியாபாரிகள் .

யோசிப்பதற்கே நேரம் இல்லாத ராஜேஷ் எனும் ராஜேந்திரன் மிக வேகமாக கவனமாக மனிதர்களின் போட்ட எதையும்(???) மிதிக்காமல் ஓடிக்கொண்டு இருந்தான். பண கஷ்டம் இல்லாத அவன் உடம்பு அவன் மனம் போன போக்கில் ஒத்துழைத்தது. அவன் மனமோ அவன் கட்டப்போகும் புதிய ஹோட்டேலை பற்றி கணக்கும் கற்பனையும் செய்து கொண்டிருந்தது . கணக்கின் போது அவ்வப்போது அவன் தந்தை வெள்ளையப்பன் வந்து போனார்.

வெள்ளையப்பன் ? ? ?

மிகவும் சாதுவானவர் . கதர் பிடித்த உடை . அமைதி அன்பு மற்றும் அஹிம்சை விரும்பும் உண்மையான காங்கிரஸ் காரர் . இந்தப்பகுதி அரசியல் வாதிகள் அனைவரும் மதிக்கும் பெரிய மனிதர் .( காசு பலம் அதிகம் என்பதாலா ? பதவியை விரும்பாததாலா ? ) சரி இவரைப்பற்றி அவ்வப்போது பார்ப்போம் .

ஓடிக்கொண்டு இருந்தான் ராஜேஷ் . வழியில் இவனைப்போலவே சிலரின் வணக்கங்களையும் புன்னகையையும் ஏற்றுக்கொண்டு ஓடிக்கொண்டே இருந்தான்.

நாகப்பட்டினத்திற்கும் வேளாங்கண்ணிக்கும் உள்ள கடற்கரையில் நாகையிலிருந்து ஆரம்பித்து வேளை நகர் ( வேளாங்கண்ணி செல்லபெயர் ) வரை மீண்டும் நாகை வரை இவனது தினசரி ஓட்டம் . மனிதர்கள் சாப்பாட்டுக்காக உலகில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இவனைப்போன்ற சிலர் நன்றாக சாப்பிடுவதற்காகவும் சாப்பிட்டது உடம்பில் மெருகேற்றவும் ஓடுவார்கள் . என்னே முரண்பாடு .

திரும்பிக்கொண்டு இருந்தான் . எதிரில் ஹோண்டாவில் வந்து கொண்டிருந்த போலீஸ் காரர்கள் வணக்கத்தையும் வாங்கிக்கொண்டு ஓடினான் . திடீரென எதோ ஒரு அமானுஷ்ய நிலை . இனம் புரியாத ஒலி. உள்ளுணர்வு அவன் கண்களை கடலை நோக்கி திருப்பியது .

1 ........... 2 ........... 4 ........... 8 ........... 16 இன்னும் பெரிது என்ன ???????? சிறிதாக உருவாகி கரையை நோக்கி வரும் பேரலை .ஆனால் இது சிற்றலைகளில் சேரும் வகை . ஏனெனில் கடல் சார்பு வாழ் மக்களுக்கு இது தெரிந்திருக்கும் . இந்த அலையின் தாக்கம் தூர அளவில் இருக்காது . உதாரணமாக அலையின் மைய புள்ளி 15 அடிகள் என்றால் இரு பக்கவாட்டிலும் கொஞ்சம் கொஞ்சமாக உயரம் குறைந்து அதிகபட்சம் அரை அல்லது ஒரு கிலோமீட்டருக்கப்பால் இதன் தாக்கம் இருக்காது . மேலும் நீர் கரையை தாண்டி வந்து நிலத்திலேயே பாதி இருந்து விடும் .

சரி ராஜேஷ் என்ன ஆனான்??? பக்கத்தில் இருந்த சவுக்கு தோப்பில் அடித்து தள்ளப்பட்டான் . வேளை நகரிலிருந்து நாலு கிமீ தொலைவில் இந்த சவுக்கு மரங்கள் அடர்ந்த பகுதி உள்ளது . ஓரிரு நிமிடங்களில் நடந்ததை அவன் நம்ப முடியாமல் சில நிமிடங்களும் ஆசுவாசப்படுத்திக்கொள்ள சில நிமிடங்களும் எடுத்துக்கொண்டு எழுந்தான் . அதிர்ந்தான்???. அவனுக்கு பின் புறமிருந்து ஒரு பெண்ணின் முனகல்......................................தொடரும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தொடக்கம் நல்லாயிருக்குது. போகப்போகத்தான் கதையின் போக்கிற்கேற்ப விமர்சனங்களினை முன்வைக்க முடியும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

நல்லதா தாங்க

எதிர்பார்க்கின்றேன்...

வளர்க... தமிழுடன்...

Posted

நல்லதா தாங்க

எதிர்பார்க்கின்றேன்...

வளர்க... தமிழுடன்...

கருத்துக்கு நன்றி. என்னால் முடிந்த அளவு நன்றாக அமைக்கிறேன்

தொடக்கம் நல்லாயிருக்குது. போகப்போகத்தான் கதையின் போக்கிற்கேற்ப விமர்சனங்களினை முன்வைக்க முடியும்

பாராட்டலுக்கு நன்றி

----------------------------------------------------------------------------------------------------------------

பெண்ணின் குரல் வந்த திசையை நோக்கி கவனித்தான் . ஒரு பெண் . மாநிறம் இருக்கும் . ஆனால் பார்த்தவுடனே வசீகரிக்கும் தோற்றம் . ஆனால் தற்போது அந்த நிலையில் இல்லை . மேலும் காயப்பட்டிருக்கும் பெண் உடலை வர்ணிப்பது உலகிலேயே மிக கேவலமான மனிதப்பிறவிக்கே லாயக்கில்லாதவர்கள் செய்யும் செயல் என்பதால் மனிதத்தன்மையோடு இப்போது வர்ணிக்க விரும்ப வில்லை . சட்டை பாவடை உடுத்தி இருந்தாள். காலில் பெரிய கட்டு . கட்டையும் மீறி ரத்தம் கசிந்து கொண்டு இருந்தது . அவனைப்போலவே அலையில் தூக்கி எறியப்பட்டு இருப்பாள் போலுள்ளது .

பார்த்தவுடன் அதிர்ந்த ராஜேஷ்க்கு தன்னை ஆசுவசப்படுத்திக்கொண்ட பின் அவள் ஈழப்பெண் என அனுமானிக்க பல நிமிடங்கள் ஒன்றும் ஆக வில்லை . உடனே அனுமானித்து விட்டான் . அவன் வளர்ந்த வளர்ப்பால் அவன் மனம் உடனே உதவ துடித்தது . அக்கம் பக்கம் யாராவது வருகிறார்கள உதவிக்கு என எதிர்பார்த்தான்.

வெகு தூரத்தில் கடலுக்கு எதிர் திசையில் அவனுக்கு வணக்கம் போட்டுவிட்டு போன காவலர்கள் அவர்களின் வண்டியை நிமிர்த்தி ஸ்டார்ட் செய்து கொண்டிருந்தது தெரிந்து உதவ கூப்பிட்டான் . இவன் குரல் அவர்களுக்கு கேட்கவில்லையோ அல்லது வேண்டுமென்ற கேட்காதது போல இருந்தார்களோ தெரியாது . ஆனால் அவர்கள் பேசியது இவன் காதில் தெளிவாகவே விழுந்தது .

"சீக்கிரம் சீக்கிரம். இல்லையின்னா பெரிசா அலை வந்திட போகுது . அப்படியே வயல் பக்கமாகவே வண்டிய விடுங்க . கடற்கரை ஓரம் வேண்டாம் . இப்ப பிழைச்சதே பெரிய விஷயம்"

அவர்கள் உயிரோடு இருந்து இன்னும் செய்ய வேண்டிய சேவைகளுக்காக தங்கள் உயிரை காத்து கொள்ள பிறரை பற்றி கவலை படாது வேகமாகவே கடலுக்கு எதிர் திசையில் ஓடினார்கள் . பின்னங்கால் பிடரியில் பட ஓடினான் என கதையில் ராஜேஷ் படித்து இருக்கிறான் . ஆனால் நேரடியாக அதுவும் பின்னங்கால் பிடரியில் பட வண்டி ஓட்டுபவர்களை இப்போது தான் பார்க்கிறான் .

போலீஸ் க்கு தகவல் சொல்லிவிட்டு போய்க்கொண்டே இருக்கலாமா ? ஏனோ தேவையின்றி சென்ற மாதம் படித்த "பெண்களிடம் தகாத முறையில் நடக்க முயன்ற காவலர்" தலைப்பு ஞாபகம் வந்தது .

ஜி ஹெச் க்கு சொல்லலாமா . அவர்கள் வருவதற்குள் இவள் உயிரே போகலாம் . மேலும் சென்ற வாரம் காலரா நோய் நகையில் பரவிய போது பொது மக்களை பார்க்க சென்ற போது ஜி ஹெச் நிலையம் கண்முன்னே தெளிவாக ??? தெரிந்தது.

அப்படியே விட்டு விட்டு போய் விடலாமா ? அந்த யோசனை வருமுன்னே மறைந்தது .

பக்கத்தில் உள்ள மீனவ கிராமத்தில் சொல்லலாமா ?? ஐயோ . நான் எதோ அந்த பெண்ணை செய்து விட்டதாக என்னி விவரம் கேட்காமல் சாத்தி விட்டார்கலேனில் ???

அனைத்து யோசனைகளும் உலக பொருளாதாரம் ஒன்றன் பின் ஒன்றாக வீழ்வது போல வீழ்ந்தன.

ஒரே ஒரு யோசனை மட்டும் உள்நாட்டு பொருளாதாரம் போல நிலைத்து மீண்டும் வந்தது . அது அவன் என்றோ படித்த அன்னை சொல்மிக்க மந்திரம் இல்லை .தந்தை சொல்மிக்க தந்திரம் இல்லை. ( எங்கு படித்தானோ??? எனக்கு தெரியாதையா!!! ) கைப்பேசியை எடுத்தான் / அழைத்தான் / பேசினான் / காத்திருந்தான்.

ராஜேஷின் தந்தை ஜீப்பிலிருந்து இறங்கினார் . கூடவே காத்தமுத்து அங்கிள் கையில் ஒரு பெட்டியோடு. பார்த்தார் / சோதனையிட்டார் / கட்டளையிட்டார் .

ஒன்னும் பயப்படும் படியா இல்ல . வீட்டுக்கு தூக்குங்க . அங்க போய் பார்த்துக்கலாம் .இல்லன்னா என் ஹொஸ்பிதல்ல விடுங்க . நான் பார்த்துக்கறேன் . இந்த காத்த முத்துவும் ராஜேஷின் அப்பா கேஸ் தான் . அதனால் மீண்டும் மீண்டும் வேண்டாம் .

வீடு வந்தது . மாடியிலிருந்து ராஜேஷின் அம்மா அகிலாண்டம் அகிலம் கேக்கும் படி கத்தினாள் . மேலே கொண்டு வந்து போட்டு உங்க சமூக சேவையை பாருங்கோ . கீழ் ரூமில போட்டுட்டு வர்றவங்களுக்கு எல்லாம் நான் விளக்கம் சொல்ல முடியாது .

ரூமில் கிடத்தி அய்யா காத்தமுத்து தன் மருத்துவத்தை ஆரம்பித்தார் . மற்றவர் எல்லோருமே அவள் யாராயிருக்க கூடும் என்ற கற்பனைகளை ஆரம்பித்தனர் .

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.