Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடைசிக்கடிதமும் காயாத கண்ணீரும்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடைசிக்கடிதமும் காயாத கண்ணீரும்.

அவன் இருக்கிறானா ? எங்கே….? வதைமுகாமிலா அல்லது வவுனியா முகாமிலா பத்தாயிரத்துக்கும் மேல் சரண்புகுந்த தோழ தோழியருள் அவனும் தப்பியிருக்கிறானா ? அக்கா அக்கா என அவன் ஸ்கைபியில் கூப்பிடும் குரலும் மறைந்து…ஸ்கைபியில் அவன் பெயர் இப்போது சிவப்பாகிக் கிடக்கிறது….

ஏதோ எனது வீட்டில் என்கூடப்பிறந்த ஓர் இரத்த உறவு போல அவன் என்னுடன் வாழ்ந்து கொண்டிருந்தவன். தனக்குள்ளான துயரங்களை வெற்றிகளையென எல்லாவற்றையும் கடிதமெழுதி இளைப்பாறிக்கொள்ள “அன்பின் அக்கா” என்று ஆரம்பித்து அனைத்தையும் எழுதியனுப்புவான். எத்தனையோ தோழதோழியரின் எழுத்துக்கள் ஞாபகங்கள் போல இவனும் எனக்கு எழுதிய கடிதங்கள் பேசிய வார்த்தைகளென இவன் ஞாபகமாய் ஏராளம் நினைவுகள்……

யாரையும் கேட்கவோ அறியவோ முடியாமல் அவன் எனக்குள் தேடப்பட்டுக் கொண்டேயிருக்கிறான். அவன் எங்கோ வாழ்ந்து கொண்டிருப்பதாக எனக்குள் நம்பப்படுகிறான். வவுனியாவில் அமைந்துள்ள போராளிகள் முமாமில் அவனும் அழவோ ஆறுதல் தேடவோ இயலாமல் எப்போதும் போல தனிமையைத் தேடுவானா…..? இருக்கிறானா என்பதைத் தேடமுடியாமலும் இல்லையென்று ஆற முடியாமலும் அந்தரிக்கிறேன்.

எல்லோரையும் போல இவனும் அம்மாவும் அக்காவும் அண்ணாவுமென இனிமையான வாழ்வுக்குச் சொந்தக்காரனாய்த்தான் இருந்தான். காலஓட்டம் காதலுக்காய் தன்னுயிரை அண்ணன் மாய்த்துக்கொள்ள அதுவரையிருந்த இனிமைகள் போய் குடும்பம் முதல் முதலாகத் துயரைச் சுமக்கத் தொடங்கியது. அப்பா குடும்பத்தைப் பிரிந்த போது வராத அழுகை அண்ணனை இழந்த போது அவனுக்குள் ஆகாயம் பிழந்து அவன் மேல் இறங்கியது போல அழுத்தியது. கேள்விகளால் தன்னையே துளைத்தெடுத்து அந்த இழப்பிலிருந்து வெளியேற அவனுக்கும் அந்தக் குடும்பத்துக்கும் சிலவருடங்கள் சென்று முடிந்தது. ஆயினும் நினைவுகளோடு அண்ணனை தூக்கியெறிய முடியாதபடி அவன் அவர்களோடு வாழ்ந்து கொண்டிருந்தான்.

அக்கா உயிரியல் படித்துக்கொண்டிருந்த நேரம் அவன் சாதாரணதர பரீட்சையில் அனைத்துப் பாடங்களிலும் அதிவிசேட சித்திபெற்றான். உயர்தரத்தில் கணிதத்தைத் தெரிவு செய்து படிக்க ஆரம்பித்தவனை சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கை கல்வியிலிருந்த கவனத்தையெல்லாம் காவு கொண்டது. அம்மாவோடும் அக்காவோடுமாக சுற்றித் திரிந்த அவனது உலகம் போரையும் அகதி வாழ்வையும் நினைத்து நினைத்து நித்திரையை இழந்து போனான். சாதாரணமான இரவுகளெல்லாம் அவனுக்கு நீண்ட யுகங்களாகின…..என்னால் என்ன செய்ய முடியும் ?

அம்மா அக்கா இவருவரையும் விட அவன் நேசிப்பில் தாயக விடுதலை நெருப்பு மூண்டு எரியத் தொடங்கியது. ஊரெங்கும் நிரம்பிய துயரமும் அவனையும் நாளடைவில் போராளியாக்கியது. யாழ்மாவட்டமே அகதியாகி வன்னி நோக்கி நகர்ந்து கொண்டிருந்த நேரம் இவன் வன்னிக்காடுகளில் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்தான். ஒரு பெரும் இலட்சியக்கனவு இவனுக்கும் இதயம் முட்ட……ஆயிரமாயிரமாய் அணிவகுத்து நின்ற போராளிகளில் ஒருவனாய் களங்களில் காவியம் எழுதிக் கொண்டிருந்தவனுக்கு அரசியல் பிரிவில் சு.ப.தமிழ்ச்செல்வனின் அருகாமையில் பணி அமைந்து விடுகிறது.

அமைதியும் கடமையும் அவனை ஓர் சிறந்த வீரனாக்கியது. அரசியல் பிரிவுக்குள்ளிருந்து தடைப்பட்ட கல்வியைக் கற்றான். கணணிவரை அவனது கற்றல் விரிந்து உலகைக் கைகளுக்குள் அடக்கும் வலுவையெல்லாம் பெற்றுக் கொண்டான்.

போரால் சிதிலமான வன்னிமண்ணை உலகம் வியந்து பார்க்கும் அளவுக்கு வியக்க வைத்தது வன்னியின் வளர்ச்சியும் எழுச்சியும். ‘அக்கினிகீல’ சமர் சமாதானக்கதவுகளைத் திறக்க வழிகொலியது. வந்த சமாதான காலம் அவனை எனக்கு அடையாளம் காட்டியது.

விரிந்த இணையம் அவனை என்னோடு உறவாக்கியது. ஈழநாதத்தில் நான் எழுதிய பகிர்வுகளில் அவன் வாசகனாகி என்னோடு அவன் உறவாகினான். கருத்தாடல் கவிதைகள் கதைகள் என எல்லாவற்றையும் பகிரத் தொடங்கியவன். மெல்ல மெல்லத் தனக்குள்ளிருந்த எல்லாவற்றையும் என்னோடு பகிரத் தொடங்கினான்.

“ஏதோ கனகாலம் பழகினமாதிரியிருக்கு… உங்களிட்டை எல்லாத்தையும கதைக்கலாம் பகிரலாம் என்ற நம்பிக்கையைத் தருகிறீர்கள் அக்கா”என்றொருதரம் மடலிட்டிருந்தான். அன்றிலிருந்து அவனது மடல்கள் ஈமெயில்கள் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் என அவன் என் பிள்ளைகள் வரையும் நெருங்கியிருந்தான். குறைந்தது வாரம் ஒரு தரம் ஏதாவதொரு வகையில் அவன் தொடர்போடிருந்தான்.

2005 ஒரு மடலிட்டிருந்தான். அக்கா நிலமை இறுகப்போகிறது. வர முடியுமாயின் வாருங்கள். உங்களையெல்லாம் பார்க்க வேண்டும் போலுள்ளது. பிள்ளைகளையும் கூட்டிவாருங்கள். எப்போது சந்திக்க இனிக் கிடைக்குமோ தெரியாதென எழுதியிருந்தான்.

ஊர் போகும் ஏற்பாடுகள் முடியும் தறுவாயில் பயணம் தடைப்பட்டு அவனைச் சந்திக்க முடியாதென்றதை அறிவித்த போது அவன் மிகவும் ஏமாந்து போனான் என்பதை அவன் எழுதிய கடிதங்கள் மெய்ப்பித்திருந்தன. தான் தலைவரிடமிருந்து பெற்ற கணணி , கமரா என எல்லாவற்றுக்குமான தனது சந்தோசங்களென அவன் மகிழ்வோடு எழுதிய மின்னஞ்சல் நிறைய…..

அப்படியொரு நாளில் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட பலர் விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக செய்திகள் பரவிய நேரம் இணையத்தில் நான் ஓடிப்போய் தேடியது அவன் முகத்தைத்தான். ஆயினும் அவன் முகம் அங்கில்லை. அக்கா அக்காவென மடலிட்டுக்கொண்டிருந்த மிகுதன் போய்விட்டதாக மிகுதனின் முகம் கண்ணீரை மறைத்த கண்ணகளின் ஊடாகத் தெரிந்தது. அன்று வீரச்சாவடைந்த அத்தனை பேரின் நினைவுகளிலிருந்து எழ முடியாத படி அடுத்தடுத்த இழப்புக்கள்…..என்ன செய்ய..ஏது செய்ய…எதுவுமே புரியாமல்….என்றோ ஒருநாள் வெல்வோம் என்ற நம்பிக்கையில் காலம் ஓடிக் கொண்டிருந்தது…..

2008 நடுப்பகுதிக்குப் பின்னாலான இழப்புகளின் பின்னான சோர்வுகளை அவன் நிமிர்வுகளாக்குங்கள் அக்கா என எழுதிக் கொண்டிருந்தான். அப்படியே தொடர்பிலிருந்தவனின் தொடர்புகள் அற்றுப்போக அவனுக்காய் எழுதிய வரிகள் இவை…..

நலமறிய ஆவலுடன்.....,

"அன்புள்ள அக்கா,

நலம் நலமறிய ஆவல்"

அம்மாவுடன் கதைத்தேன்

அக்காவுடன் சண்டை பிடித்தேன்

பேச்சுவார்தைகள் நடக்கிறது

புலிகளின் நிலவரம்

போர்ப்பிள்ளைகளின் துணிகரம் என

இணையஞ்சல் ஊடாய்

நேசமொடு - என்

நெஞ்சில் இடம் கொண்டான்.

"ஊருக்கு வா அக்கா

உனைக்காண வேண்டும்

போருக்குள் நின்று வன்னி

பாருக்கு அறிமுகமாய்

ஆனகதை சொல்ல

ஊருக்கு வா அக்கா"

அடிக்கடி அஞ்சல் எழுதிய புலி.

பூவுக்கும் அவனுக்கும்

பொருத்தம் நிறைய.

அத்தனை மென்மையவன்.

போராளிப் பிள்ளையவன்

போர்க்களம் புடமிட்ட புலியவன்.

புலம்பெயரா உறுதியுடன்

பலம்பெற்ற தம்பியவன்

ஞாபகத்தில் நிற்கின்றான் - என்

நினைவகத்தில் பத்திரமாய்.

அம்மாவின் கதை

அண்ணாவின் கதை

அக்காவின் கதையென

உள்ளிருந்த துயர் யாவும்

இணைமடலில் கொட்டி

இளைப்பாறிய வேங்கையே !

வன்னியில் குண்டு விழ

இங்கென் இதயத்தில் இடிக்கிறது.

என் போராளித் தம்பியுன்

நினைவுகள் கனக்கிறது.

நலமா நீயென்று கேட்கேனடா - உன்

நலமறிய ஆவலுடன்.....,

எங்காவது இணைவலைத் தொடர்பிருந்தால்

ஒருவார்த்தை எழுதிவிடு

நலமாயிருக்கிறேனென்று.

அன்புடன்

**************

அவன் இருப்பான் என்று நம்பவோ அவன் இல்லையென்று சொல்லவோ தொடர்புகள் அற்றுப்போயின….ஆனால் அவனது கடிதங்களாக கருத்துக்களாக….நிழற்படங்களா

12ஆயிரத்துக்கும் மேலாக போராளிகள் சரணடைந்ததாக செய்திகள் வந்த போதும் எதையும் நம்பும் நிலையில் மனசு இல்லை. 3லட்சத்துக்கும் மேலாக மக்கள் முகாம்களில் முடங்கியுள்ளதாக முகாம்களுக்குள்ளிருந்து வந்த உறவுக் குரல்கள் கேட்ட பின்னும் நம்பிக்கையோடிருந்தது எல்லாம் பொய்த்து எல்லாம் முடிந்து போய்
……

சகலர் மனதிலும் இன்று இதே எண்ணம்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

……

சகலர் மனதிலும் இன்று இதே எண்ணம்

உண்மைதான் ஜில்.

காயாத கண்ணீரும் துயர் நிறைந்த அனுபவங்களும் தொடர்வது தவிர்க்க முடியாதுள்ளது.

இப்படி இன்னும் எத்தனை எத்தனை பேர்............

முகம் தெரியாத அந்த உறவுகளுக்காகவும்

முகம் தெரிந்து தொடர்பு இல்லாத

என் உறவுகளுக்காகவும்

காத்திருக்கிறேன்

என்றோ ஓர் நாள்

வானம் விடியும்

எல்லாமே வெளிச்சத்துக்கு வரும்

என்ற நம்பிக்கையில்

அந்நாளுக்காய்

காத்திருக்கிறேன்.

  • 5 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கதைக்குரிய தோழன் *கடைசிக்கடிதமும் காயாத நினைவுகளுமாக* கடைசிக்கள முனையில் தனது மூச்சை நிறுத்திக் கொண்டதாக அவனுடனிருந்த அவன் தோழன் ஒருவனால் உறுதிப்படுத்தப்பட்ட செய்தி 05.12.09 அன்று ஸ்கைப் வழி வந்து சேர்ந்தது.

வருவான் எங்காவது வாழ்வான் என்ற நம்பிக்கைகள் மீது இனிமேல் வரவேமாட்டானென்ற செய்தியுடன் அவன் நினைவுகள் மட்டும் மிஞ்சிக் கிடக்கிறது.....கடிதங்களாக.....அவனது கருத்துக்களாக....நிழற்படங்களாக...

கடைசிக்கடிதத்தில் அவன் தனக்குப் பிடித்த பாடலான நான் கடவுள் படத்திலிருந்து *அம்மா உன் பிள்ளை நான்* என்ற பாடலை எழுதியிருந்தான். அப்பாடலின் இணைப்பு இது - அம்மா உன் பிள்ளை நான்

:lol::) :) ^_^:)

இக்கதையை இக்கதை கதைப்பகுதியில் இணைக்கப்பட்டு சில வாரங்கள் சென்ற பின் நெல்லையன் என்ற கருத்துக்கள உறவினால் ஊர்ப்புதினம் பகுதியில் இணைக்கப்பட்டிருந்தது. அப்போது இக்களத்தில் உள்ள ஒரு முன்னாள் போராளி இக்கதையில் உயிராய் நிற்கும் தோழன் போன்றவர்களால் தான் முள்ளிவாய்க்கால் முடிவு வந்ததென எழுதியிருந்தார். பின்னர் மட்டுறுத்தினர் அத்தலைப்பையே நீக்கியிருந்தார். யாழ்கள முன்னாள் போராளியின் பதிலுக்கு அப்போது எந்தப் பதிலையும் எழுதவில்லை. எழுதும் மனநிலையும் இருக்கவில்லை. எங்காவது அவன் இருப்பான் இக்கருத்துக்களுக்கும் பதில் தருவான் என்ற நம்பிக்கை கனவாகவே போய்விட்டது.

ஒவ்வொரு போராளியும் தனக்குள் ஆயிரமாயிரம் விருப்பங்கள் கனவுகளோடுதான் வாழ்ந்தார்கள். தாயகத்தை நேசித்த அவர்களால் தங்களுக்குப் பிடித்த நண்பர்களுக்கு மட்டுமே தமது சின்னச் சின்ன விருப்புகளையும் பகிர்ந்து கொள்வார்கள். இவர்கள் போராடப்போனது தாயகத்தின் விடுதலைக்காக ஆனால் இவர்களுக்கும் எல்லோரையும் போல அவர்களுக்கென்று தனியே மனசு உணர்வுகள் யாவும் இருந்தன இருக்கும். இவர்களது நினைவுகளைப் பகிர்தல் ஒன்றும் தண்டனைக்குரிய குற்றம் இல்லையென்பதை கோபமுடன் கருத்து வைப்போர் புரிந்து கொள்ளல் வேண்டும்.

இதில் நான் குறிப்பிட்ட முன்னாள் போராளிக்கு,

உங்கள் மீது எந்தவித தனிப்பட்ட கோபமும் இல்லை. ஆனாலும் உங்கள் போல தாயகத்துக்காகப் போராடியவனின் உணர்வுகள் கடிதங்களாக வந்தவையால் தான் முள்ளிவாய்க்கால் முடிவு வந்தது. இதையெழுதியவரை மண்டையில போடாமல் விட்டது தவறென்ற உங்கள் கருத்தில்தான் வருத்தம்.

என்னைப்போல உங்களைப்போல இவனும் வாழ்ந்திருக்க வேண்டியவன். கோடிகோடியாய் கொடுத்து அவனை வாழ்விக்க உரிமையுள்ள உறவுகள் காத்திருக்க இவன் வராமலே போனது இவன் இல்லையென்ற செய்தியை இன்னும் நம்ப முடியாமல் உள்ளது இது கூட சுயநலமான எண்ணம்தான்.

எம்முடன் எத்தனையோ பேர் பழகுகிறார்கள். பலரை மறந்து விடுகிறோம் சிலரை தொடர்ந்து நட்பாக்கிக் கொள்வோம். இதிலும் சிலர் என்றென்றும் எம்மோடு வாழ்ந்து கொண்டிருப்பார்கள். அவர்கள் வரிசையில் இவனும் என்னோடு எனது பிள்ளைகளோடு எனது குடும்பத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.