Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழர் புனர்வாழ்வு நிதியம் (TRF)

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன உறவுகளே ஓடி வந்திடியல் போலிருக்கு.................... என்னக்குதெரியும் நீங்கள் வந்ததிண்ட நோக்கம்..... யாரடா இது புதிசா சுறிட்டிக்கொண்டு போக வந்திருக்கிறான் எண்டு பாக்கத்தானே ????? இது தானே காலம்காலமா நடக்குது எமக்குள்ளே..

சரி நான் விசயத்திக்கு வாறன்..

நோக்கம்: தமிழருக்காக தமிழன்.... ஈழத்தில் சொத்திழந்து , சுகமிழந்து வாழும் தமிழருக்கு உதவுவது.

யாரிடம் கையளிப்பது : முதலிலில் எம்மை நாமே நம்பவேணும்...... எனவே எமது பெயரிலேயே ஒரு சேமிப்பு வங்கியில் ஒரு புதிய கணக்கினை திறப்போம். அதிலே எமது மனசாட்சிக்கு கட்டுப்பட்டு ஒரு தொகையினை வாரந்தமோ மாதாந்தமோ வைப்பிலிட்டு வருவோம்.. ஆனால் மறந்துவிடுவோம்... அதாவது... "இருக்கு ஆனால் இல்லை" உயிர் போனால் கூட அந்த பணம் எனதோ அல்லது எனது குடும்பதிகோ பயன்படுத்தப்பட கூடாது. இதில் தெளிவாக இருப்போம். சிறுதுளிதானே பெருவெள்ளம் எனவே நாம் ஒவ்வொரு வரும் சேர்த்து வைக்கும் பணத்தினை எமது பொருண்மியத்தை கட்டி எழுப்பும் காலம் ஒன்று நிட்சயம் வரும்... அப்போது எமது இந்த நிதியத்தை எமது மக்களின் வளர்ச்சிக்காக பயன் படுத்துவோம்.

எவ்வாறு இதற்கான நிதியை திரட்டலாம் : இந்த நிதியத்தின் அடிப்படை கட்டுமானமே எம்மில் நாம் வைக்கும் நம்பிக்கையில் தான் உள்ளது... எனவே இப்பணத்தினை எமது உழைப்பிலிருந்தே நாமே ஒதுக்கி வைப்போம். அதாவது எமது வீண் விரயத்தை குறைப்போம். களியாட நிகழ்வினை புறந்தள்ளுவோம். எம்மை நாமே கட்டுப்படுத்துவோம். சினிமாக்கள் புறக்கணிப்போம்.. ( சமிபத்தில் இங்கு ஒருவர் பதிவிலிட்டத்தை பார்த்தேன். நடிகர் சிவகுமார் ஈழதமிழ் மாணவருக்கு உதவுகிறார் எனவே அவரின் மகன்கள் நடிக்கும் படங்களை புறக்கணிக்காதீர்கள் உறவுகளே என்று உருக்கமாக ஒரு அறிக்கை விட்டிருந்தார்... அதை வாசித்து ஒரு தமிழனாக கூனி குறுகிநின்றேன். நடிகர் சிவகுமார் ஒருவருக்கு உதவுகிறார் நாம்மேன் 50 பேருக்கு உதவக்கூடாது என்று கேட்க அவரால் ஏன் முடியவில்லை ???? அதாவது தான் செய்துகொண்டிருக்கும் , செயப்போகும் தவறுக்காக மற்றவர்களையும் கூட்டு சேர்கிறார். தன்னை பார்த்து சனம் அங்க கஸ்டப்படுகுது நீ என்ன படத்திக்கு போறாய் என்டு யாரும் கேட்டால் அவற்ற அப்பா தமிழருக்கு உதவுகிறார் என்டு ஒரு சாட்டு வைக்கலாம் எல்லோ)

அதற்குரிய பணத்தினை இந்நிதியத்தில் வைப்பிலிடுவோம். வேண்டும் என்றால் அதற்காகவே ஒரு மணித்தியாலம் மேலதிக வேலை செய்வோம். நாட்டுக்காக தம்மையே ஈகம் செய்தார்களே எம் உடன்பிறப்புக்கள்..... அவர்களுக்காக இதை கூடவா செயமுடியாது எம்மால் ???? சிந்திப்போம் உறவுகளே.... எம்மை நாமே தான் வளப்படுத்த வேண்டும். இப்போதே செயற்படுவோம். இவ்வளவு காலமும் நீ என்ன செய்தாய் நீ என்ன செய்தாய் என்று மற்றவர்களை கேட்டுகொண்டிருந்தோம்.... ஆனால் இன்று எம்முன்னால் பெரிய மலையளவு தடை போடப்படிடுகிறது..... அதை முழுமையாக அகற்ற முடியாவிட்டாலும் ஒரு பாறையை தானும் பிரட்டி விடமுயற்சி செய்வோம்.

பி.கு: இதனை நானே முயற்சி செய்தேன்... நானே பிரமிக்கும் அளவு பணம் எனது நிதியத்தில் உள்ளது. உண்மையை சொன்னால் எனது சேமிப்பில் இதுவரை காணாத அளவு இந்நிதியத்தில் உள்ளது. இதற்காக நான் கடந்த 7 மாதமாக செய்த பிரயோசனம் இல்லாத தியாகம் என்ன தெரியுமா ??ஒன்றுக்குமே பிரயோசனமில்லாத தொடர்களை நிறுத்தினேன், சினிமாவுக்காக செலவு செய்வதை நிறுத்தினேன், களியாட விழாக்களை நிறுத்தினேன் , எனது செலவு அட்டையை (Credit Card) இரத்து செய்தேன். எனது அறையில் உள்ள குளிரூடி பாவனையை நிறுத்தினேன்... எல்லாவற்றுக்கும் மேலாக ஒவ்வொரு பொருள் கொள்வனவின் போதும் வன்னியில் நான் பட்ட கஷ்டங்களை நினைத்துப்பார்த்தேன். இன்று நானே பிரமிக்கும் அளவு பணம் எனது நிதியத்தில் உள்ளது நிட்சயமாக அப்பணம் எனது தாய் நாட்டின் பொருண்மியத்திக்கு பயன்படுத்துவேன் என்று உறுதியுடன் எனக்கு நானே சத்தியம் செய்துகொள்ளுவேன்.

மு. கு : எனது இக்கருத்து யாரையாவது தனிப்பட்ட முறையில் காயப்படுத்தியிருந்தால் மன்னியுங்கள். எனது நோக்கம் அதுவல்ல

Edited by வீரா

1990 களில் நான் சில திட்டங்களுடன் வெளிநாட்டுத்தமிழர்களின் முன்னாள் வியாபாரிகளிடம் கால் கடுக்க நடந்து ஒரு திட்டம் வைத்தேன். அதை அன்று கடைப்பிடித்திருந்தால் இன்று சிங்களவனின் உலக ஆதிக்கம் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும். முல்லைத்தீவினை அடித்தோம் என்று பின்னர் நாம் பெருமைப்பட்டுக்கொன்டோம் தான். ஆனால் இன்று என்ன விருந்தது உலகத்தின் ஆதரவு இல்லாமல், உலக தமிழ்மக்களின் ஒட்டு மொத்த ஆதரவு இல்லாமல். ஒன்றுமே மிச்சமில்லை. ஏன் ஒருவருமேயில்லை ஈழத்தில் ஆனால் புலத்தில் இருக்கிறார்கள்.

ஒரு காலத்தில் செய்திருக்கவேன்டிய வேலையினை இன்று நீங்கள் செய்ய நினைப்பது காலம் கடந்த ஞானம். ஆனால் அது உங்களில் தவறில்லை. எனிமேல் ஈழதமிழர்களுக்கு யாரும் பணம் கொடுக்க முன் வரமாட்டார்கள். அந்த நம்பிக்கை இல்லாமல் பண்ணப்பட்டுவிட்டது. எனிமேல் யாரும் யாரையும் நம்பி பணம் கொடுக்க நம்பிக்கை வைக்க மாட்டார்கள். உங்களில் நீங்கள் நம்பிக்கை வைத்து உருப்படியாக ஒன்றுமே செய்யமுடியாதுதான். அது உங்களின் நல்ல மனத்தினை மேலும் உயர்த்தி உங்களை மேலும் வாழ்வித்து உயர்த்திவைக்கும். அவ்வளவே.

ஆனாலும் உங்களைப்போன்ற பலர் தம்மில நம்பிக்கை வைத்தால், உலக தமிழர்கள் எல்லோருமாக சேர்ந்து ஈழதமிழர்களையும், இந்திய வறிய தமிழர்களையும் காப்பாற்ற முடியும். அதாவது அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் இருப்பதுபோல, புலம் பெயர்ந்த தமிழர்களை ஒரு பொதுவேலைத்திட்டத்தின் கீழ் ஒருங்குபடுத்த, இந்தியாவில் இருக்கும் மக்கள் தம் குருடாகிப்போன கண்களை எம்மூடு மீண்டும், புதிய கண்களைப்பெற ஒரு வழியுண்டு.

அது என்ன என்பதை கடைசியில் சொல்லுகிறேன். உங்களில் பலருக்கும் அப்படிப்பட்ட திட்டங்கள் இருக்கலாம். :huh:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் சொல்வதும் நியாயம் தான். நானும் எனது வாழ்நாளில் பெரும் பகுதியை அங்கேயே கழித்திருந்தாலும். என்னாலான உதவியை வழங்கியிருந்தேன். ஆனாலும் இப்பொழுதான் எனது வருமானத்தில் நிக்கிறேன். எனவேதான் இவ்வாறு ஒரு முடிவெடுத்து செயட்பட்டுக்கொண்டிருக்கிறே

ஒரு தமிழ்மக்கள் வங்கி அமைப்பு முறையொண்டு அவசியம். அந்த வங்கியினை கொண்டு நடாத்துவது ஒரு இன்டிப்பென்டன் குழு. மக்களே அதில் பங்குதாரர்கள். அதில் கொட்டப்படும் பணம் தமிழ்மக்களுடையது. அதில் வரும் லாபம் தமிழ்மக்களின் வாழ்க்கை சிறக்க பயன்படுத்தப்படும். இதிலே யாருக்கும் சலுகைகள் கொடுக்கப்படமாட்டாது. மிகவும் முக்கியமாக புலம் பெயர்ந்து வரும் மக்களை வரவேற்பது தொடக்கம் அவர்களின் வாழ்க்கைக்கு தேவையான ஆரம்ப உதவிகளை செய்து கொடுப்பதுடன் நின்றுவிடாமல். பாங்கில் வேலை செய்து வருபவர்களுக்கு அந்தந்த நாடுகளில் வேலை செய்வதற்குறிய அறிவை ஊட்ட உதவி செய்யும் கல்வி நிறுவனமாகவும் இருக்கவேண்டும். இந்த பாங்கில் வேலை செய்பவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஒரு குறிக்கப்பட்ட கால வேலை அனுபவம் எடுக்கும் வரை, அல்லது படிக்கும் வரை தம் வாழ்க்கையினை ஓட்டுவதற்கு, இன்னுமொரு வேலையினை தேடுவதற்குறிய வருமானம் வரும் அதே நேரம் வேலை அனுபவம் ஒரு குறிக்கப்பட்ட வரையறுக்கப்பட்ட காலம் வரை எடுக்கக்கூடிய ஒரு சுயநலமில்லாத மனிதர்களால் பராமரிக்கப்படும் ஒரு தொண்டு நிறுவனம் போல செயலாற்றப்படவேண்டும்.தொண்டு செய்பவர்கள் ஒரு குறிக்கப்பட்ட காலம் வரையிலேயே அந்தந்த பொறுப்பில் இருக்கமுடியும். பணவிடயங்கள் பகிரங்கமாகவே ஒரு ரகசிய குழுவினால் கண்காணிக்கப்படும். வஞ்சகம் சூதுவாது இருக்கிறது என்று ஒரு குழு நிரூபிக்கும் பட்சத்தில் அவருக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ் மக்களால். அந்த நபர் வெளியேறும் பட்சக்தில் போட்டியாக இப்படிப்பட்ட மக்கள் வங்கிகளை நிறுவ முடியாத படி மக்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பு செய்து தம் பலத்தினைக்காட்டவேண்டும். கள்ளர் என்று முத்திரை குத்தி அவரை மேலும் இப்படிப்பட்ட துறைகளில் ஈடுபடாதவாறு சட்டத்தின்மூலம் சவுக்கடி கொடுக்கவேன்டும்.

இது ஒரு தமிழர்களின் மக்கள் வங்கி இங்கே உலக தமிழர் நாம் என்ற பதமே பாவிக்கப்படவேண்டும். பிரிவினை வாதம் என்ற சொல்லுக்கே முன்னுரிமை அழிக்கக்கூடாது. இது வரை நான் எழுதியது பிடித்திருந்தால் மீதியினையும் சொல்லுகிறேன்.

எனக்கெண்டா ஒரே கொன்பியூசன் உந்த ஸ்ரேட்மன்ட்களில. அங்கால ஒருத்தர் சொல்லுறார் ஒரு பொதுக்கொள்கை அதனூடு ஒரு பொதுவேலைத்திட்டமென்று. இங்கால ஒருத்தர் சொல்லுறார் ஒரு பொதுவேலைத்திட்டம் அதை செயற்படுத்த ஒரு பொதுக்கொள்கை. எனக்கென்டா மண்டையை விறைக்குது.

உங்க உங்களுக்கு உதட தமிழ் அர்த்தம் விளங்குதோ பிள்ளையள்?

ஒரு பொதுக்கொள்கை எண்டத முதலில வைக்கிறது யார்? ஏன் வைக்கிறார்கள்? எதற்க்காக வைக்கிறார்கள்?

அப்புறம் பொதுக்கொள்கையினை வைத்துவிட்டு ஒரு பொதுவேலைத்திட்டம். இதில யாரை யாரு குசப்படுத்த ஒரு பொதுவேலைக்திட்டமோ எண்டு ஒரு கேள்வி எம்மோட மக்களிட மனதில உருவாகுமெல்லோ.

ஆனா பின்னையதில ஒரு பொதுவேலைத்திட்டமிருக்கு. அதை மக்களுக்கு முதலில விட்டு அதை முதலில மக்கள் வரவேற்கிரீனமோ இல்லையோ எண்டெல்லோ முதலில் பார்க்க வேன்டும். அப்புறம் மக்களால் மக்களுக்கு சேவை செய்ய மக்கள் ஒன்று சேர்ந்து மக்கள் பிரதிநிதிகளையெடுப்பதல்லோ நியாயம். அதை விட்டுட்டு சாப்பட்டுக்கடை நடத்தியவன், சந்தனக்கடத்தல் காரர் எல்லோரும் பொதுக்கொள்கை, பொதுவேலைத்திட்டமென்று வந்தால் உங்க உது எனிமேல் எடுபடாது கண்டீயளோ.

எம்.ஜி.ஆர் அப்பு வாழ்ந்தது அவரின் முக கவர்ச்சியில அப்பு. அவருக்கு கோடி ரசிகர்கள் இன்ரும் 22 வருடத்துக்கு பின்னாலையும் இருப்பதுன் அந்த முக வெட்டுக்குக்கும், உந்த சண்டைக்காட்சிகளுக்கும் தான்.

எனக்கு தெரிந்தப்பு அவருக்கு பின்னால் இன்னுமொரு முகமும் இருந்தது அது இண்டில்லை எண்டு சொல்லினம் ஆனால் அதை நான் நம்பல. மாண்டுபோன முருகன் எண்ட எம்.ஜி.ஆர் உலகம் சுற்றும் வாலிபன் எண்ட எம்.ஜி.ஆர் படத்தில் வந்தது போல வந்தாலொழிய எனிமேல், எம்.ஜி.ஆரைப்போல என்ன அதன் பின்னால் பிறந்த இன்னுமொருவரைப்போல யாராலும் பிறந்துவரமுடியாது. தமிழன் ஒரு வழியில் ஒற்றுமையாக நிற்கவும் முடியாது. உதுக்காகவே அந்தக்காலத்தில சொல்லுவாங்கள். லெப்பட் வுட் நொட் சேஞ் இட்ஸ் பொஸிஸன். இது லெப்பெட்டுக்கு சரிப்படுதோ இல்லையே...உதை தமிழருக்கு அழகாக மாத்தி எழுதலாம். தமிழன் ஒருபோது ஒற்றுமையாக ஓரணியில் அணிதிரளவேமுடியாது. அது அவன் குலப்பழக்கம். வருகிறேன் உந்த ஆச்சி வட சுடவேண்டிக்கிடக்கு அங்க இன்னுமொரு இடத்தில.

தமிழர்களை ஒரு குடையின் கீழ் கொண்டுவருவதென்பது ரொம்ப கடினமான விடயம்.

எண்ட குட்டி சிற்பி, உதைச்சொல்ல மனிதனுக்குள்ள ஆறாம் அறிவை பயன்படுத்த தேவையில்லை. முதல் அறிவோடவே சொல்லிடலாம். ஆனாலும் குஞ்சு உப்பிடியே நாம உந்த தமிழர்களை நடக்கவிட்டால், தமிழினமே ஒரு தனியினமாக ஒரு காலத்திலென்ன நாளையே அடிமைகளுக்கெல்லாம் ஒரு அடிமைகளாகவே வாழவேண்டியிருக்கும். குருதிப்பெருக்கு ஏற்பட்டிருக்கேயொழிய முற்றுமுழுதா போகல கண்டீரோ.

ஆறாவது கண்ணை நாம் எல்லோரும் துறக்கணும் அதுதான் உலக தமிழனுக்கு தேவையான முதல் முதலுதவி. அதை உந்த ஆச்சி செய்யட்டோ? ஆச்சியெண்டு சும்மா கிழடு எண்டு நினைச்சிராடீங்கோ. ஆச்சி சொன்னா அம்புலிமாமா கைகட்டி நின்று கேட்பார்.

தமிழர்கள் பொறக்கேக்கையே பல மன உளைச்சல்களை காவிக்கொண்டே பொறகிறீனம் கண்டியளே! ஏன் அடுத்த புறப்பிலயாவது உன்னை நான் ஒரு கைபார்ப்பேன் எண்ட அளவு கோபம் கொண்டு காட் அட்டக். அதுதானப்பு இந்த லப்பு, டப்பு, லப்பு, டப்பு எண்டு எங்களோட இருந்துபோட்டு ஒரேயடியா ஸ்டொப் பண்ணுமே உந்த இயத நோயால இறந்தவை. இப்ப மீண்டும் பிறப்பெடுத்திருக்கிறீனமென்

ஆச்சியினை அதுதானப்பு உந்த அம்புலிமாமியினை உள்ளதைச்சொல்லுறன் தடுப்பு வதையில்லாத தடுப்பு முகாமில எத்தனைகாலம் தான் இருக்கவிடப்போறீயள் எண்டு கேட்க்கிறன். அங்க சிங்கள ஆமி எங்கட மக்களை தடுப்பு முகாமில வைச்சிறுக்கிறீனம் அது பிழை எண்டு சத்தம்போட்டுறீயள். ஆனால் இங்க தடுப்பு முகாம் அமைச்சா சைலண்டா இருக்கிறீயளென்ன. ஏன் உந்த ஆச்சி என்ன குண்டோடவா வந்திருக்கு அதை எறிய. அப்ப சிங்களவனும் தமிழர்களை சந்தேகிக்கிறதை நான் முழுமனதோட ஏற்க வேண்டிய ஒரு சூழலையும் இப்ப உந்த அகிலத்துகே வெளிச்சம் தருகிற அப்புவுட ஆச்சிக்கும் தந்து என்னையும் உங்க எதிரியாக்கிவிட்டு ஒரு இன்னுமொரு சாதனை செய்திருக்கிறீயள் எண்டு உங்கட தோளிலேயே நீங்கள் தட்டுங்கப்பு. நான் பின்ன வாறனென்ன. உந்த புலம் பெயர்ந்த இடத்தில தமிழனுக்கெல்லோ போராட்ட உணர்ச்சி பொத்துக்கொண்டு வந்திட்டுத்தாம் அதை ஒருக்கா சத்திரசிகிச்சை செய்து அழுக்கற்ற வேண்டி ஒரு முக்கிய வேலையொண்டு செய்யவேண்டிக்கிடக்கு. மீண்டும் நான் வந்தா சந்திப்பமென்ன. அப்ப நான் வரட்டா..ஆச்சி ஒரு தடவை சொன்னா ..... :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ராபஸ்டன் அண்ணே, நீங்கள் சொல்வதை நூற்றுக்கு நூறு நான் வழிமொழிகிறேன்.. ஆனால் இன்றைய நிலையில் அவ்வாறான ஒன்றை உருவாக்க வரமாட்டார்கள். ஒரு வைபகத்திற்கு அந்நாட்டு சட்ட திடத்திக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டிய தேவை உண்டு. அதை மீறினால் அந்நாட்டு அரசே அதன் நிர்வாகத்தை கையேற்று விடும். அண்மையில் செலானுக்கு நடந்தது உங்களுக்கு தெரியும். அப்படி பல நாடுகளிலும் நடந்துள்ளது. தற்போதைய காலகட்டத்தில் ஒருவரும் சும்மா கொண்டுவந்து வைப்பிளிடமாட்டான். வங்கியின் நம்பகத்தன்மை, அரசு அங்கிகாரம், அதில் வைப்பிளிடுவதால் தனது முதலீடுக்கு கிடைக்கும் வருமானம் எல்லாவறையும் பார்ப்பான். உண்மையை சொன்னால் நான்கூட தமிழீழ வைப்பகத்தில் என்னது மேலதிக சேமிப்பையே வைத்திருந்தேன். நடைமுறை தேவைக்காக தனியார் வைப்பகத்தையே நாடினேன். காரணம் இலங்கையில் எங்கு சென்றாலும் அதை நடைமுறைப்படுத்தலாம். ஏன் TRO கூட கோடிகணக்கான பணத்தை இழந்ததே அரசிடம்!!! அவற்றை அவர்களால் மீளபெறமுடியுமா ?? இல்லையே !! எனவேதான் நான் சொன்னேன் நாமே நாமக்காக ஒரு அங்கிகாரம் பெற்ற நிறுவனத்தில் ஒரு கணக்கை தமிழர் புனர்வாழ்வுக்கென ஆரம்பித்து நடைமுறை படுத்துவோம்... பின்பு நீங்கள் சொல்வதுபோல ஒரு வைப்பகம் வந்தால் அவற்றை அதற்கு மாற்றி எமது தேசத்திற்கு பங்களிப்பை வழங்குவோமே.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.