Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வளர்ந்து வரும் வல்லாதிக்த்தின் இரும்புப்பிடியில் சிறீலங்கா எனும் அப்பளம்.

Featured Replies

Sri Lankan Puppets in the Hands of Emerging Superpowers

Richard Dixon

We all wept when the Asian Tsunami took the lives of thousands

When the Asian Tsunami struck the shores of Sri Lanka, more than thirty thousands died instantly. They stopped breathing in minutes after they were swept into the ocean. Their last chapters were very brief.

News channels from major broadcasting networks were showing the horrors of tsunami twenty four hours a day, seven days a week. Media and Sports personalities appealed for aid. We packed gifts and took it to our churches and schools. Nations of the free world gave billions as aid to a country that still treats its Tamil minorities as second class citizens.

We have all failed to save many lives in this war but it is still not too late to save the innocents that are still being abused, raped, tortured and killed in the barbed wired concentration camps.

More

தமிழாக்கம்

ஆசியக்கண்டத்தை சுனாமி தாக்கியபோது தவிக்காத நெஞ்சம் இருந்ததா..

ஆழிப்பேரலை இலங்கையின் கரைதொட்டபோது காணாமல்போனது 30,000 உயிர்கள். நொடிப்பொழுதில் வந்து சென்ற அலை அவர்கள் மூச்சையும் கொண்டு சென்றது. அவர்கள் கடைசி அத்தியாயம் நொடிப்பொழுதில் கரைந்துபோனது.

உலகின் முன்னணி ஊடகங்கள் அனைத்தும் 24 மணிநேரமும் 7 நாட்களும் சுனாமியின் கொடூரங்களை காட்டி கதைத்தபடி இருந்தது. பிரபலங்கள் முதல் விளையாட்டு வீரர்கள் வரை உயிரும்; உடமையும் இழந்தவர்களின் வலி அறிந்து, அவர்களுக்கு உதவச்சொல்லிய வண்ணம் இருந்தனர். நாமும் மூட்டை மூட்டையாய் உதவிப்பொருட்களை அனுப்பினோம். இந்த சுதந்திர உலகில் தேசங்கள் பல, எந்த நாடு, இன்றும் தமிழ் மக்ளளை இரண்டாம் தர குடிமக்களாக வாழச்சொல்கிறதோ அந்த நாட்டிற்கு கோடிகளை கொட்டிக்கொடுத்தது தமிழர்களுக்கு உதவ.

ஆனால் ஆயிரம் ஆயிரம் பெண்களையும் குழந்தைகளையும் சிறீலங்கா எனும் கொலைக்களத்திலே கொன்றபோது இந்த உலகம் மௌனி ஆனது.

மீண்டும ஒரு பேரழிவு அந்த மக்களைத் தாக்கியது அது திருட்டுத்தனமாக பல வல்லாதிக்கங்கள் செய்துகொண்ட ஒப்பந்தங்களாலும், வழிநடத்தல்களாலும் விளைந்த போர். மனித குலம் என்றும் பார்த்திராத அளவு 50,000 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 30,000 சிறுவர்களும், பொதுமக்களும் தங்கள் உடல் உறுப்புக்களை இழந்த பேரவலம் நிகழ்ந்தது. கண்ணீர்த்துளி போன்ற பூகோள அமைப்பு கொண்ட அந்த தீவில் ஆசியாவின் சுனாமி ஏற்படுத்திய பாதிப்பைக் காட்டிலும் கொடூரமான விளைவுகளை இந்தப்போர் விளைவித்தது.

ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் மாதக்கணக்கில் உணவின்றி மருந்துகள் இன்றி குண்டுக்காயங்களோடு பதுங்கு குழியிலேயே வாழ வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டனர். அப்பாவித் தமிழ் மக்கள் சீனாவின் கு7 துப்பாக்கிகளுக்கும், ர~;யாவின் ஆஐபு விமானத்திற்கும் இரையானார்கள். கனரக ஆயுதங்களும் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களும் அந்த உதவியற்ற மக்களையும் குழந்தைகளையும் பொசுக்கியது.

அப்பாவித் தமிழ் மக்கள், தன் செந்தங்கள் துடிதுடித்து சாவதைப் பார்த்தபடி தன் மரணத்தை எதிர்பார்த்து வாழலாயிற்று. மருத்துவ மனைகளில் உள்ள காயமடைந்தவர்களும் கூட மழைபோல் கொட்டும் கொத்தணிக்குண்டுகளுக்கு இரையானார்கள். வெளிப்படையாகவே அந்த மக்களுக்கு செல்லும் உணவும் மருந்துப்பொருள்களும் தடைசெய்யப்பட்டது. பெண்களும் குழந்தைகளும் நொடிக்கு நொடி மரணவேதனையை அனுபவித்த வண்ணம் இருந்தனர்.

சில வல்லாதிக்கத்தின் விருப்பத்திற்காக இந்த மனிதன் ஏற்படுத்திய சுனாமியை ஒளிபரப்ப எந்த மேற்கத்திய செய்திநிறுவனங்களும் வரவில்லையே?

நிதம் வறுமை ஒழிப்பு மனித உரிமை பற்றிப்பேசும் விளையாட்டு வீரர்களும், பிரபலங்களும் இந்த மனித அவலத்தைக் கண்டிக்க ஒருவிரலையேனும் உயர்த்தினார்களா?

தப்பான இடத்தில் இருந்தவரகளின் தப்புத் தாளத்திற்கு நடனமாடியதே ஒழிய இந்த ஐ.நாவின் ஊழல் அதிகாரிகள் அப்பாவித்தமிழர்களைக் காப்பாற்ற தவறிவிட்டனர்.

ஐ.நாவும் மற்ற பல சர்வதேச அமைப்புகளும், தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கின்ற மக்களை காப்பாற்றுவதை விடுத்து அந்த இன அழிப்புப்போரை, தானே நடத்துவது போன்ற ஒரு தோற்றத்தை அல்லவோ ஏற்படுத்தியது. போரை நிறுத்தும் வல்லமையும் அதிகாரமும் படைத்த சிலர் அதைச் செய்யத் தவறினார்கள். செய்யத்தவறினார்கள் என்பதைவிட செய்யவிரும்பவில்லை என்பதே உண்மை.

சில ஜனநாயக வாதிகளும், மிகப்பெரிய ஜனநாயக நாட்டிற்கு தலைவர்கள் என்ற அடைமொழியோடு திரிபவர்கள் எல்லாம் போர் நடக்கும் போது பேசிய விதம் நிலைமைக்கு சற்றும் பொருந்தாத, யாரோ வேற்றுக்கிரக வாசிகள் எழுதிக்கொடுத்த வசனங்களுக்கு நடிப்பது போலத்தான் தோன்றியது.

ஐ.நாவின் தலைவர் உட்பட பலரும் பேசவேண்டிய நேரங்களில் ஊமையாகிப் போனார்கள் ஐ.நாவின் மூத்த அதிகாரியான விஜய் நம்பியார் உட்பட பலரும் பலமுறை இலங்கை சென்றார்கள். போரை நிறுத்த தவறியதன் மூலம் அவர்களுக்கு பணிக்கப்பட்டதை சரியாக செய்துமுடித்தார்கள்.

அவர்கள் பணியிலிருந்து அப்பட்டமாக விலகி நின்றதோடு மனித குலமே ஏற்கமுடியாத தவறுகளைச் செய்த அரசுக்கு துணை நின்றார்கள் என்பதுதான் வேதனை.

இந்தியாவில் இருந்து சென்றவர்கள் எல்லாம் அங்கே போரை நிறுத்தவும் பட்டினியால் சாகும் மனித அவலத்திலிருந்து அந்த மக்களைக் காக்கவுமா? இல்லை தாங்கள் சொல்லிய போர்த்தந்திரங்கள் சரியாக செயல்படுத்தப்படுகிறதா, அடுத்த கட்டமாக நாங்கள் என்னசெய்யவேண்டும் என்பதைக்கேட்டு, அவர்களைப் பாராட்டி வரவே சென்றனர்.

இந்திய அதிகாரிகளின் நோக்கம் எல்லாம் பிரபாகரன் என்னும் அந்த மக்கள் தலைவன் கொல்லப்பட வேண்டும், அல்லது கொல்லப்பட்டார் என்ற செய்தியோடு அதற்கான மரணச்சான்றிதழ்கள் வேண்டும். அப்படி செய்வதன் மூலம் நாங்கள் ஒரு தீவிரவாதத்திற்கு எதிராக செயல்பட்டோமே ஒழிய இனப்படுகொலைக்கு துணைநிற்கவில்லை என்றும், சிறீலங்கா கடலோரப்பகுதியில் காணப்படுகின்ற எண்ணெய் வளத்திற்கு எங்களுக்கும் உரிமை உண்டு என்று இந்த உலகிற்கு தம்பட்டம் அடிக்க நினைத்தது.

இந்நிலையில் டேவிட் மில்லிபாண்ட் என்பவர் மட்டும் தொடர்ந்து மனித அவலத்திற்கு எதிர் நின்றார். தடைசெய்யப்பட்ட ஆயுதங்களால் ஏற்பட்ட உயிர்நாசங்களை ஆதாரத்தோடு சிங்கள அரசை நோக்கி கேள்வி எழுப்பினார். அங்கே நடக்கும் கொடுமைகளை சாடினார் பேரினவாத வன்செயல்களை உலகிற்கு சொல்லிவந்தார். ஆனால் சிறீலங்கா அரசு வழமைபோல் அவரையும் வெள்ளைப்புலி என்றும் மஞ்சள் புலியென்றும் காக்கிப்புலி என்றும் அவரவர் தோல்நிறத்திற்கேற்ப சாடிவந்தது.

தீவிரவாதத்திற்கு எதிரான போர் முடிந்தாலும் இனப்படுகொலை இன்றும் தொடர்கிறது.

சிறீலங்கா அரசு பிரபாகரன் அவர்களை கொன்றுவிட்டதாகவும், அந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்களைக் கூண்டோடு அழித்துவிட்டதாகவும் அறிக்கை விட்டு ஆனந்தப்படுகிறது. அவர்கள் சொற்படி தீவிரவாதம் முற்றாக அழிக்கப்பட்டு விட்டது.

ஆனால் களம் சொல்லும் கதையோ வேறாக உள்ளது. போர் முடிந்தது ஆனால் கொலைகள் ஓயவில்லை, மரண ஓலங்கள் ஓயவில்லை. சிங்கள அரசு தமிழர்களை விடுவதாய் இல்லை. ஒவ்வொரு தமிழ்க்குழந்தையும் பெண்களும் ஆண்களும் சந்தேகத்திற்குரியவர்கள் என்கிறது இராணுவம். அங்கே இன்றும் அமுலில் உள்ள அவசர கால சட்டத்தின் படி எந்தத் தமிழனை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யலாம். ஏன் சந்தேகத்திற்கு உரியவர் என்று சுட்டும் கொல்லலாம். இப்போது சிறீலங்காவில் ஒரு தமிழனாக வாழ்வது ஆயிரம் ஆயிரம் நாகங்கள் கொட்டப்பட்ட பள்ளத்தாக்கு மேலே கயிற்றில் நடப்பது போன்று உள்ளது.

தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்ற புனைபெயருடன் நடந்த இனப்படுகொலை நம் கண்ணுக்கு முன்னால் ரத்தக்களரியாகி முடிந்துவிட்டது. ஆனால் கொலைகள் தெடார்கின்ற இந்தநேரத்திலாவது போர் சரியான விதிமுறைகளோடு தான் நடந்ததா என்று ஒவ்வொருவரும் கேள்வி எழுப்பவேண்டும். இந்தப்பூமிப்பந்தில் எந்தப்பகுதியை ஆளும் அரசும் தனி மனிதனைக் கொல்ல சிங்கப்பூரைப் போன்று இரண்டு மடங்கு நிலப்பரப்பை போர்க்கோலமாக்கி, 50 ஆயிரம் உயிரைக் குடித்து, 30 ஆயிரம் பேரை ஊனமுற்றவர்களாக்கிய மனித அவலத்தை செய்ததே இல்லை.

சிறீலங்கா 1948 ஆம் விடுதலைபெற்று அரசமைத்தபோதே தமிழினப்படுகொலையயையும் தொடங்கியது இந்த இனப்படுகொலை தமிழர்கள் தனக்கென்று தனிநாட்டைப் பெறும்வரை ஓயப்போவதில்லை.

தமிழர்கள் கூட்டம் கூட்டமாகக் கொல்லப்பட்டதை இந்த உலகம் எப்படிப்பார்க்கிறது?

47 நாடுகள் சிறீலங்கா விவகாரத்தில் தங்கள் நிலைப்பாட்டை விளக்க வாக்களித்தார்கள். அதில் பெரும்பாலானவர்கள் சிறீலங்கா அரசிற்கு ஆதரவாக வாக்களித்ததோடு அங்கே நடப்பது, நடந்தது உள்நாட்டு விவகாரம் என்று கூறியது. விடுதலைப் புலிகளை அழித்ததற்கு வாழ்த்துத் தெரிவித்ததோடு, சிறீலங்கா மீது எந்த வித போர்க்குற்ற விசாரணையும் தேவையற்றது என்று கூறியது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கவுன்சில் அதன் நம்பகத் தன்மையை முற்றிலுமாக இழந்து விட்டது. எந்தக் காரணங்களுக்காக அந்த அமைப்பு இயங்கி வந்ததோ அந்தக் காரணங்களிலிருந்து முற்றாக விலகிநிற்கிறது.

சிறீலங்காவிற்கு ஆதரவாக பெரும்மாலான நாடுகள் வாக்களித்ததன் மூலம் ஒன்றை மிகத்தெளிவாக விளக்கியுள்ளது. அது சிறீலங்கா, தமிழர்களுக்கு எதிராக எத்தனை பெரிய மனித அவலத்தை செய்தாலும் நாங்கள் சிறீலங்காவிற்கு தோளோடு தோள் நிற்போம். ஏனெனில் எங்களுடைய வைப்பறைகளிலும் எலும்புக்கூடுகள் இருந்திருக்கிறது.

எனவே சிறீலங்கா அரசு தமிழ்க் குழந்தைகளையும், பெண்களையும், குண்டுகளுக்கு இரையாக்கினாலும், பட்டினி போட்டு கொன்றொழித்தாலும், காயம் அடைந்தவர்களுக்கு மருந்துப்பொருட்களை தர மறுத்தாலும் ஏன் அத்தனை தமிழர்களையும் கொன்று குவித்து ஒரே குழியில் புதைத்தாலும் நாங்கள் அந்த தீவிரவாத சிங்கள பேரினவாத அரசுக்கு துணைநிற்போம். நாங்களும் அந்த அரசும் ரகசியமாக செய்த ஒப்பந்தங்களும் சொந்த லாபங்களுமே எங்களை வழிநடத்தும் என்பதே ஆகும்.

இதுதான் இந்த உலகின் நிலை. பெரும்பாலான நாடுகள் மனித உரிமை பற்றி கவலைப்படுவதாக தெரியவில்லை. அவர்கள் நோக்கமெல்லாம் தங்கள் தங்கள் பேராசைகளை நிறைவேற்றிக் கொள்வதில்தான் மையம் கொண்டுள்ளது.

இந்த அவசரமான சூழலில், நெருக்கடி நிலையில் உயிர்களைக் காப்பாற்ற வேண்டிய தருணத்தில் வாக்கெடுப்பு நடத்தி அதில் பெரும்பாலானவர்கள் வாக்கு யார்பக்கம் இருக்கிறது என்று பார்த்துத் தான் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்று கூறும் இவர்கள் சட்டம் எனக்கு வியப்பை அளிக்கிறது.

ஒரு கட்டிடம் எரிகின்ற போது அந்ததீயில் மாட்டிக்கொண்ட உயிர்களை காப்பாற்ற நினைப்போமா? இல்லை என்ன செய்யச்சொல்லி பெரும்பாலானவர்கள் வாக்களித்திருக்கிறார்கள் என்று பார்த்து முடிவெடுப்போமா?

மூழ்கிற கப்பலை காப்பாற்ற வாகெடுக்கும் சட்டத்தை, எந்த எந்த மூடனாவது முன்வைப்பானா? அப்படியே இருப்பினும் நம் இதயங்கள் கப்பலில் தவிக்கும் உயிர்களை காக்க நினைக்குமா அல்லது வாக்குப்போட வரிசையில் நிற்குமா?

நாஜிப்படைகளின் முகாம்களைப்போல சிறீலங்காவிலே தமிழர்கள் கொல்லப்படுவதை இனியாவது ஐ.நா தடுத்து நிறுத்த வேண்டும். ஆனால் அந்த நாட்டு சிறுபான்மையினரை கொன்று குவிக்கும் சிங்கள பேரினவாத அரசுக்கு துணைநின்று தூபம் காட்டுவது மனித குலத்திற்கே ஒரு பெரும் அவலம்.

இரத்தக் காடாகாமல் தடுத்திருக்க முடியுமா?

ஆம் என்பது தான் பதில். ஆனால் இந்த இன அழிப்புப்போரினால் லாபம் அடைந்தவர்கள் அதை விரும்பவில்லை. எத்தனை குழந்தைகள் கொல்லப்பட்டாலும், இறுதிவரை அந்தப்போர் நடத்தப்பட Nவுண்டும் என்பதே அவர்கள் எண்ணமாயிருந்தது. சீனாவும், இந்தியாவும், பாகிஸ்தானும் காலங்காலமாய் எதிரிகாளய் இருந்தும் இந்த விடயத்தில் நண்பர்களாயினர். பிணந்தேடி அலையும் கழுகு போல பறந்தனர். கிடைக்கும் கறியில் ஆளுக்கொரு துண்டு என்று ஒப்பந்தம் போட்டுக்கொண்டனர்.

சிலர் பேசினார்கள்...

இங்கு ஒரு வார்த்தையும், அங்கு ஒரு வார்த்தையும். ஆனால் அங்கே நடப்பது இனப்படுகொலை அது தடுத்து நிறுத்தப்படவேண்டும், கொலை வெறி அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும், என்று எழுந்து நின்று ஆண்மையோடு சொல்ல ஒரு தலைவர்களும் இல்லை. சொல்லுகின்ற அதிகாரம் படைத்தவர்களெல்லாம் பேசாமல் இருந்தது தான் வெட்கக்கேடு.

ஐ.நா நித்தம் தனது அறிவிப்புப் பலகையில் இறப்பின் எண்ணிக்கையை குறித்துக்கொண்டிருந்ததே ஒழிய, இறப்பு எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 1000த்தை தொட்டபோது கூட வாய் திறக்கவில்லை.

அமெரிக்க செயற்கைக் கோள்கள், அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டதை அந்;த இரத்தக் குளியல்களை படம் பிடித்ததே ஒழிய, கொல்லப்படுவதை நிறுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த் உலகின் இதயம் இரும்பாகிப்போனது, பேராசைப் பேய்கள் லாபம் காணுவதற்காக.

மனித உரிமைப்பாதுகாவலர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் எல்லாம் இந்த அவலத்தை தங்கள் காலை உணவுக்கு மத்தியில் கேட்டுவிட்டுச்சென்றனர். அவர்களுக்கு இந்த இறப்புகளளெல்லாம் கதைகேட்பது போல இருந்தனவே ஒழிய அந்த மக்களைக் காக்க வேண்டும் என்று தோன்றவில்லை. மனித உரிமைப் பேரறிஞர்கள் எல்லாம் தங்கள் கட்டுரைகள் என்று பிரசுரிக்கப்படும் என்பதில் கவனம்கொண்டனரே அன்றி அந்த மக்களை காக்க வேண்டும் என்று என்னியதாக தோன்றவில்லை

கொல்லப்படும் அந்த மக்களின் அயல்நாடு வாழ் உறவுகள் வீதிக்கு வந்தார்கள் கதறினார்கள்,கெஞ்சினார்கள் மன்னர்களுக்கும் ராணிகளுக்கும் முன்பு அவர்கள் மண்டியிட்டு கதறினார்கள் ஆனால் அந்த செவிட்டு காதுகளுக்கு அந்த மக்களின் ஓலம் கேட்கவேயில்லை, இரும்பு இதயங்களுக்கு அவர்கள் துயரம் புரியவேயில்லை. அவர்கள் எவ்வாறு எல்லாம் முடியுமே அவ்வாறு எல்லாம் முயன்றனர், அங்கே நடக்கும் அவலம் சொல்ல. ஆனால் அவர்கள் துயரம் துடைக்க நினைப்பதை விடுத்து வீதிகளை விட்டு அகற்றுவது எப்படி என்று தான் நினைத்தனர். எங்கள் வானொலியிலும் அதையே சொன்னார்கள்

இப்போது நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம் இப்போது வீதிகளில் பேரணிநடத்த போவதில்லை. ஏனெனில், யாருடைய உயிர்களை காப்பாற்ற சொல்லி அவர்கள் பேரணி நடத்தினார்களோ அவர்களில் பெரும்பாலானவர்கள் இறந்து விட்டார்கள்.

இந்தப்போர் பல நாடுகளின் முழு ஆதரவோடு நடந்து முடிந்திருக்கிறது என்பது தெளிவாக தெரிந்த ஒன்று.யார் திவிரவாதிகள் என்று சொல்லி போரை நடத்தியதோ அவர்கள் போரை நிறுத்திக் கொல்வதாக அறிவித்த பின்னராவது இந்த உலகம் போரை நிறுத்தியதா? போர் முடிவதற்க்கு முன்னரே போரின் பங்குதாரர்கள் அதன் லாபக்கணக்கில் சீனாவாலும் சிறீலங்கா ஒரு அப்பளம் போல கையாளப்பட்டிருக்கிறது. தங்கள் தங்கள் நாடுகளுக்கு சிறீலங்கா தீவின் பிரதேசங்களில் என்னென்ன லாபம் அடைய முடியுமோ அதை இந்த போரினால் பெற்றுவிட்டது இந்தியாவும், சீனாவும்.

மெல்ல மெல்ல அந்த தீவிலிருந்து கொன்றொழிக்கப்படும் தமிழ் சமுதாயத்தை தவிர அனைவரும் மகிழ்ச்சியோடு இருக்கின்றனர்

குண்டுகள் விழுந்து களங்கிய குட்டையில் சீனா மின்பிடிக்க நினைக்கிறது. யார் வலிமையானவனோ அவனுக்கு நாசகர ஆயுதங்களை கொடுத்ததன் மூலம், தன் போராசையை சிறப்பாகவே நிரைவேற்றிக் கொண்டது. சிறீலங்காவில் தன் கட்டுமான பணிகளை ஆரம்பித்ததோடு தன் கடற்ப்படை பயன்பாடடிற்;;காக ஒரு துறைமுகத்தையும் நிறுவிக்கொண்டது.

இந்தியாவோ ஏற்கனவே சிறீலாங்கா கடற்பறப்பில் காணப்படும எண்ணை வளங்களை தன் வசப்படுத்த, திட்டமுன்வரைவுகளை தீட்டியோதடு அல்லாமல் கீழக்கு மற்றும் வடக்கு பகுதிகளில் கட்டுமான பணிகளை தன் வசப்படுத்த முயற்சிகள் மேற்கொண்டுள்ளது.

பாக்கிஸ்தானும் சீனாவும்ள நாசகர ஆயுதங்களை வழங்கிய போதும போருக்கான திட்டவரைவுகளை தீட்டுவதிலோ,அதை செயல்படுத்துவதிலோ இறங்கவில்லை.

தற்போது சிறீலங்காவின ஜனாதிபாத நாங்கள சீனா மற்றும் பாக்கிஸ்தானின ஆயுதங்களைக் கொண்டு இந்தியாவின் போரை நடத்தியுள்ளோம் எனக்கூறியதிலிருந்து, இந்தப் போரில் இந்தியாவின பாங்கு என்னவென்பது புரிகிறது.இந்தியாவின் முன்னால் ராணுவ அதிகாh ஒருவர்கூட இலங்கை தமிழர்களின் ரத்தம் இந்தியாவின் கரங்களிலும் படிந்துள்ளது என்று கூறியுள்ளார்.

சிறீலங்காவில் நடந்த போர் திவிரவாதத்திற்கு எதிரானதில்லை.அது அம் மக்கள் தலைவனின் பெயரைச் சொல்லி,வெற்றியைக் கொண்டாடி பலரின் மூலைக்குள் படமெடுத்து ஆடிக்கொண்டிருக்கும் பல விசபாம்புகளை மறைக்கத்தான்.

சிறீலாங்காவின் போர்க்குற்றங்கள்.

சதாம்உசைன, குர்தி~; இன மக்களுக்கு எதிராக செய்த போர்க்குற்றங்களைக்காட்டிலு

Edited by tamilsvoice

உண்மைகள் எப்பவும் உறுதியானவை

இங்கு எம்மக்கள் செத்துக்கொண்டிருக்கிறார்கள

சிறீ லங்கா அப்பளமாய் இருக்கின்றது என்பது அல்ல.. நாங்கள் தும்புமுட்டாயாய்கூட இல்லாமல் இருக்கின்றோம் என்பது கவலைக்குரிய விடயம். அவனுக்கு ஓர் நாடு இருக்கின்றது. அப்பளமாய் இருந்தால் சோறுதின்னவாவது உதவும். தமிழருக்கு என்று ஒருபிடி மண்கூட இல்லாமல் போய்விட்டது.

சிங்களவன் சாகப்போறான் என்பது அல்ல.. அவன் செத்தாலும்கூட நாங்கள் வாழமுடியாமல் போய்விட்டது என்பது, வாழமுடியாது என்பது கசக்கிறது.

. தமிழருக்கு என்று ஒருபிடி மண்கூட இல்லாமல் போய்விட்டது.

கடைசித்தமிழன் இருக்கும் வரை போராடுவோம் இறுதிவரை போராடுவோம்.ஜயா நெடுமாறன் ,அண்ணன் சீமான் ,தளபதிவைகோ ,தளபதி ராமதாஸ் தலமையில் தொடர்ந்து போராடுவோம் ,வெற்றி நிச்சயம் எமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மைகளை சிரமத்துடன் உறங்க வைக்கலாம். அது மீண்டும் உயிர்பெற்று எழும்போது தாக்கம் பாரியதாக இருக்கும். என்பது வரலாறு கொண்ட உண்மை.

இன்றல்ல நேற்றல்ல வருங்காலமும் அப்படித்தான்.

உரோமர்கள் ஆண்டார்கள் இப்போது எங்கே?

ஸ்பானியர்கள் ஆண்டார்கள் இப்போது எங்கே?

போலந்து ஆண்டது இப்போது எங்கே?

நெதர்லாந்து ஆண்டது இப்போது எங்கே?

பிரிட்டிஷ் ஆண்டது இப்போது எங்கே?

அமெரிக்கா ஆண்டது. ஆட்டம் கண்டுவிட்டது இப்போது அனுபவிக்கின்றது.

இந்தியா எடுத்த எடுப்பிலேயே தமிழரை கொன்று குவித்துவிட்டது. வெகுவிரைவில் ஆட்டம் காணும்

இவையெல்லாம் அநீதியின் தாண்டவங்கள் தான். அடங்கும்போது எழும்பமுடியாதவையாக இருக்கும்.

என்பதற்கு இவை சான்று.

நாம் தோற்றுவிடடோம் என்று கலங்குபவர்கள் அவர்களின் அறியாமையே.

நீதிக்காக போராடுபவர்கள் மழுங்கடிக்கப்பட்டாலும் தோற்றது மாதிரியான தோற்றப்பாடேயன்றி தோல்வியல்ல.

மீண்டும் தர்மம் வெல்லும். மனது சோராது அவ்வழியில் செல்வதே வெற்றிக்கு வழிதேடும்.

உறுதிதான் எமது ஊன்றுகோல். அதை விட்டுவிடாதீர்.

அநீதிக்கு அழிவு நிச்சயமும் நிரந்தரமும். நீதிக்கு அழிவு நிரந்தரமல்ல. இழப்புக்கள் தவிர்க்கமுடியாதவை.

ஈழத்தில் தமிழனை உலகம் ஒன்றுகூடி அழிக்கும் என்ற முன்கூட்டிய ஆருடத்தால் தான் ஈழத்தமிழனை உலகெங்கும் இறைவன் பரவச்செய்தான்.

அதில் எங்கள் பங்கு எமது மக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதும் போராட்டத்தின் ஒரு அங்கம் என்பதை நமது மக்கள் மறந்துவிடக்கூடாது. களத்தில் போராடாவிட்டாலும், குலத்தில் எண்ணிக்கையைப்பலப்படுத்தலாம

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.