Jump to content

பரிசு ..............


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

பரிசு ..............

அந்த சிறு கிராமத்தில் . வாழ வந்தவள் தான் , சாவித்திரி . தபாற்காரன் சோமுவுக்கு மனைவியாக , இனிதே இல்லறம் நடத்தி வந்தாள் . மூத் தவள் , .சோபனா , சுதா ..இருவரும் படிப்பில் கெட்டிகாரி கள். . கணவனின் வருமானத்துக்கேற்ப செலவு செய்து . தானும் தன பாடுமாக வாழ்ந்து வந்தாள் . சோமுவும் கம்பீரமான தோற்றம் கொண்டவள். அந்த ஊர் மக்களால் மிகவும் விரும்ப பட்டவன் . காதலர்களுக்கு தெய்வமானவன். வழியில் மறித்து தபாலை பெற்று கொள்ளவதில் அந்த ஊர் இளையவர்கள் பலே கிலாடிகள். வீடில் வந்து எதுவுமே சொல்ல மாட்டான் தபால் அதிபர் இருவருடதுக்கு ஒரு முறை மாற்றம் பெறுவார்கள். இடையில் அவர்களது குடும்பத்துக்கு மளிகை பொருட்கள் வாங்கவும் அனுப்ப படுவான் . காலையில் , காக்கி சட்டையுடன் புறப்படும் அவன் . மாலையில் சிலசமயம் ....மதியமே வீடு வந்து விடுவான். ரயில் வர தாமதமாகும் நாட்களில் அவனும் வீடு திரும்ப நேரமாகும் . தபால் கந்தோருக்கு வரும் பென்சன் காரருக்கும் மிக நட்பானவன். அந்த ஊரில் பதினான்குக்கும் பதின் ஆறுக்கும் இடையில் வரும் ஒரு வேலை நாளில் ஓய்வூதியம் கொடுப்பார்கள். வாசிக சாலை பெரியவர்கள் இவனை கண்டால் " சோமு எப்பவாம் இந்த முறை பென்சன் " என்பார்கள். அவனுக்கு தெரிந்தால் அந்த நாளை சொல்வான்.

அந்த ஊரில் விசில் சத்தம் வீட்டு காரரை வாயிலுக்கு அழைக்கும். கடிதம் விநியோகத்துக்காக . இனிமையாக போய் கொண்டிருந்த அவர்கள் வாழ்வு ஒரு நாள் இருண்டு விட்டது ...ஒரு நாள் சோமு கடித பரிமாறல் செய்து கொண்டிருக்கும் போது ஒழுங்கையால் வந்து திரும்பும் போது , எதிரே வந்த லாரி யை ( கன ஊர்தி ,கன ரக வாகனம் )) கவனிக்க வில்லை இவன் மீது மோதி விட்டது சைக்கிள் (மிதி வண்டி ) ஒரு புறம் ....சிதறிய தபால் பொதிகள் ஒரு புறம் ரத்தவெள்ளத்தில் கிடந்தான் . பின்பு அம்புலன்சு ......பொலிசு ( நகர் காவலர் ) ......விசாரணை என்று எல்லாம் முடிய அவனது உயிரற்ற உடல் வீடுக்கு கொண்டு வரப்பட்டது .......ஊரவர்கள் எல்லோரும் கண்ணீர் மல்க விடைபெற்றான் .

சாவித்திரியும் இரு பெண்குழந்தைகள் பத்து ..ஒன்பது அனாதைகளாக விடப்பட்டனர். கையில் இருந்தவ்றி கொண்டு காலத்தை ஓட்டினாள்.எல்லாம் முடிய அவனது பென்சன் பணத்துக்காய் பார்த்து கொண்டு இருந்தாள் ....அது வர மிக தாமதமாகியது ....கூலி வேலைக்கும் சென்றாள். ,,,,பிள்ளைகளும் வளர்ந்து மூத்தவள் பெரியவ ஆனாள் .அத்தோடு ....அவள் பாடசாலை இடை நிறுத்தபடார். இளையவள் ...சிலகாலம் படித்தும் ...முடியவில்லை. ..அவளுக்கு ஆங்கில அறிவும் குறைவு . தபால் அதிபர் ...மேலதிகாரிகள் என்று எல்லாரிடமும் பேசி பார்த்தாள் . இவள் கோலத்தை கண்டு யாரும் மதிக்கவில்லை. ...கையூட்டு கேட்பவராக் இருந்தனர். இதன் போது தான் அந்த ஊர் "கந்தோர் கந்தசாமி "....அறிமுகமானார். இவள் தன பிரச்சினையை சொல்லி . உதவி கேட்டாள் . ஆங்கிலத்தில்கடிதம் எழுத அடிக்கடி இவள் வீடுக்கு வருவார். பென்சநியராக இருந்தாலும் கம்பீரமான இருப்பார் . இரு மகன் கள் பெரியவர்கள் ....வெளி நாடில் இருந்தார்கள். மனைவி சாரதாம்பாள் எந்நேரமும் கோவில் குளம் என்று திரிவாள். பணியாட்களை கொண்டு பூக்கட்டு வித்து கோவிலுக்கு ..சிலைகளுக்கு அணிவிப்பாள் விரதம் இருப்பது என்று . எந்நேரமும் சமய அலுவல் செய்வாள். கந்தோர் கந்தசாமியார் இவள் (சாவித்திரி ) வீடுக்கு போய் வருவது ...ஊரவர்களால் தப்பாக பேசபட்டது . இது சாரதாம்பாளுக்கும் காதில் எட்டவே கணவனை கண்டித்தாள். சிலர் மாலை மங்கும் நேரங்களிலும் போய் வருவதாக சொன்னார்கள். ..

.இப்படி பல மாதங்கள் சென்றன. ஒரு நாள் ....அந்த ஊரில் உள்ள ஒருவருக்கு ரண்டாந்தாரமாக் மூத்த பெண்ணை கேட்டனர். அயல் ஊரில் இருந்தவர்கள். மகளுக்கு சிறியவயது என்று தட்டிக்களித்து விடாள்.ஒரு நாள் ....வழமையாக கூலி வேலைக்கு செல்லும் அவள் வேலைக்கு வராததால் .....அந்த ஊர் பெரியவர் ஒருகூலி ஆளை அனுப்பி சென்று கூப்பிடு பார்த்த போது . அவள் இல்லை. ...பிள்ளிகள் இரண்டும் . தூரத்து கிணற்றுக்கு தணீர் எடுக்க சென்று விடர்கள். வந்து பார்த்தபோது .........

சாவித்திரி ...வீடின் முகட்டின் சீலை இல தொங்கி கொண்டு இருந்தாள் .........பாவம் அந்த சாவித்திரி க்கு ஊர் கொடுத்த் பரிசு .......நடத்தை. கெட்டவள். i

விலைமாதர் ...........விபச்சாரிகள் ....நடத்தை கெட்டவர்கள்.... அவர்களாக பிறப்பதில்லை .......உருவாக படுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாட்டில் நடப்பவற்றை எழுதியிருக்கிறீகள் நன்றி.எங்கட சமுதாயத்தைப் பற்றித் தெரியும் தானே வாழவும் விடாது சாகவும் விடாது.

பிரியமுடன்.யாயினி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாயினி உங்கள் வருகைக்கும் பதிவுக்கும் நன்றி .........

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சோகமான கதை

வழியில் மறித்து தபாலை பெற்று கொள்ளவதில்

தபால்காரரை பற்றி எழுதிய படியால் எனது அனுபவத்தில் நடந்த சம்பவம்...நானும் எனது நன்பனும் கதைத்துகொண்டிருக்கும் பொழுது அவ்வழியே வந்த தபால்காரனிடம் எனது நன்பர் தனது தந்தையின் பெயரை சொல்லி எதாவது இருக்கோ அண்ணே என்றார்...உடனே தபால் காரன் இல்லாமலே நீ வந்த நீ என்று சிரிக்காமலயெ பதில் அளித்து விட்டு சென்றுவிட்டார்

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.