Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களை அழிக்க சிறிலங்கா அரசுக்கு இந்தியா உதவினால்... தனி ஈழம் அமைக்க தமிழர்களுக்கு உதவுவோம்: இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத் தலைவர்கள் பேச்சு

Featured Replies

இலங்கையில் தமிழர்களை அழிக்க சிறிலங்கா அரசுக்கு இந்திய அரசு உதவினால், இலங்கையில் உள்ள தமிழர்கள் தனிநாடு அமைக்க நாங்கள் உதவுவோம் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ எச்சரித்திருக்கிறார்.

இலங்கைத் தமிழர்களின் நலன் காக்க ஐக்கிய நாடுகள் சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பழ. நெடுமாறன் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் அகதிகள் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்களை பாதுகாக்கும் பொறுப்பை ஐக்கிய நாடுகள் சபையே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னை நினைவரங்கம் அருகில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் நேற்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளதாவது:

இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் 3 லட்சத்திற்கும் அதிகமான தமிழ் மக்கள் உணவு, தண்ணீர், மருந்துப் பொருட்கள் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாததால் அந்த முகாம்களில் நாள்தோறும் 200 தமிழர்கள் உயிரிழக்கின்றனர். முகாம்களில் உள்ளவர்களுக்கு உணவு அளித்து வந்த தனியார் நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய பணத்தை சிறிலங்கா அரசு வழங்காததால் அவர்கள் உணவு வழங்குவதை நிறுத்தி விட்டார்கள்.

இதனால் கடந்த சில வாரங்களாக முகாம்களில் உள்ள தமிழர்கள் உணவின்றி தவித்து வருகின்றனர். 3 ஆயிரம் பேருக்கு ஒரு கழிப்பறை மட்டுமே அமைக்கப்பட்டிருப்பதால் பெரும் சுகாதாரக் கேடு ஏற்பட்டிருக்கிறது.

தமிழ் மக்களை முகாம்களில் அடைத்து விட்டு அவர்கள் வாழ்ந்த பகுதிகளில் சிங்களவர்களைக் குடியேற்றும் முயற்சியில் சிறிலங்கா அரசு ஈடுபட்டிருக்கிறது.

ஈழத் தமிழர்களுக்கு வசதிகளை செய்து தருவதற்காக இந்திய அரசு அளித்த நிதியுதவியைக் கொண்டுதான் சிங்களவர்களுக்கான குடியிருப்புக்களை சிறிலங்கா அரசு கட்டி வருகிறது.

ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபக்சவிடமே, தமிழர்களுக்கான நிதியுதவியை இந்தியா வழங்கியது மிகப்பெரிய தவறு. இலங்கைத் தமிழ் அகதிகளை பாதுகாக்கும் பொறுப்பை ஐக்கிய நாடுகள் சபையே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றார் நெடுமாறன்.

தொடர்ந்து உரையாற்றிய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ, இலங்கையில் தமிழர்களைப் படுகொலை செய்ய ஆயுதங்களைக் கொடுத்து உதவியது இந்தியாதான். இதையெல்லாம் அறிந்த தமிழ் மக்கள் மத்திய அரசு மீது பெரும் கோபம் அடைந்துள்ளனர்.

கைதிகளுக்கு கூட சில உரிமைகள் இருக்கும். ஆனால் ஈழத் தமிழர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. முகாம்களில் அவர்கள் விலங்குகளைப் போல நடத்தப்படுகிறார்கள். இந்த நிலை தடுத்து நிறுத்தப்பட வேண்டும். ஈழத் தமிழர்களை படுகொலை செய்ய சிறிலங்கா அரசுக்கு இந்தியா உதவினால், இலங்கையில் உள்ள தமிழர்கள் தனித் தமிழ் ஈழம் அமைப்பதற்கு நாங்கள் உதவி செய்வோம் என்று எச்சரித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உரையாற்றியபோது தெரிவித்துள்ளதாவது:

போர் முடிவடைந்துவிடவில்லை. தனித் தமிழ் ஈழம் அமைப்பதற்காக தொடர்ந்து போர் நடக்கும். இலங்கைத் தமிழர்களின் போராட்டத்திற்கு தமிழகம் உள்ளிட்ட இந்திய மக்கள் உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து வாசிக்க

  • Replies 54
  • Views 3.1k
  • Created
  • Last Reply

இலங்கையில் தமிழர்களை அழிக்க சிறிலங்கா அரசுக்கு இந்திய அரசு உதவினால், இலங்கையில் உள்ள தமிழர்கள் தனிநாடு அமைக்க நாங்கள் உதவுவோம் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ எச்சரித்திருக்கிறார்.

தொடர்ந்து வாசிக்க

வாய்ச்சொல்லில் வீரரடி கிளியே

ஜயோ பாரதி நீ ஒரு உயிர் கவிஞனாடா.

என்னண்டு கண்டாயோ தமிழன் இப்படித்தான் என்று

வாய்ச்சொல்லில் வீரரடி கிளியே

ஜயோ பாரதி நீ ஒரு உயிர் கவிஞனாடா.

என்னண்டு கண்டாயோ தமிழன் இப்படித்தான் என்று

நெடுமாறன் கிழட்டு வயதில் 2 ஆண்டுகள் சிறையில் கழித்தார்....

வைகோ வும் சிறை சென்றுள்ளார்...

ராமதாஸின் மக்கள் தொலைக்காட்சி மட்டும் தான் ஈழத்தமிழன் பற்றி இன்னும் பேசவாவது செய்கிறது...

இவர்கள் தவிர இவர்கள் கட்சி தொண்டர்கள் பலர் கொடூர சட்டங்களுக்கு ஆளாகி பல ஆயிரக்கணக்கான ரூபாய்கள் பிணையிலும் நீதிமன்ற வழக்குகளாலும் அலைக்கழிக்கப்பட்டும் துன்புறுகின்றனர்...

இவர்கள் எல்லோரும் வாய்ச்சொல் வீரர்களே ......

நீங்கள் தான் நேசன் நிஜ வீரன்..

ஆமாம் நேசன் எந்த நாட்டில் அமர்ந்து கொண்டு தட்டச்சிக்கொண்டிருக்கிறீர்

Edited by வேலவன்

  • கருத்துக்கள உறவுகள்

நியாமான கேள்வி வேலவன்... தலைவரின் கனவை இப்போதும் சுமந்து கொண்டிருப்பவர்கள் தமிழகத்தின் தமிழர்கள் தான்... இன்று கூட புலத்து தமிழர்களின் குரல் அடங்கிப் போய்விட, ஈழ மக்களுக்காக ஏதாவது தீர்வு கிடைக்க வேண்டும் என்று நினைத்து, நினைத்து உருகுகின்றவர்கள் தமிழகத்து மக்களே. இதை உண்மையான மனச்சாட்சியோடும், வெட்கத்தோடும் கூறுகின்றேன்..

யாருக்கும், தமிழகமக்களையோ, ஈழத்துக்காகு:கு குரல் கொடுப்பவர்கள் பற்றியோ கேட்க யோக்கியம் இல்லை...

தமிழகத்தமிழனை விமர்சிக்க கட்டாயம் எல்லா தமிழர்களுக்கும் உரிமை உண்டு ஆனால்......

ஈழத்தமிழனுக்காக சிறிதளவாவது .... தங்களால் முடிந்தவற்றை செய்து கொண்டு ஈழத்தமிழன் பற்றிய நினைவையாவது தமிழக மக்களிடம் கொண்டு சேர்ப்பவர்கள் நெடுமாறன்,சீமான், வைகோ, ராமதாஸ் போன்றோர் அவர்களை கிண்டல் செய்வதால் ஏதாவது ஈழத்தமிழனுக்கு பிரயோஜனம் உண்டா???

இப்படி நீங்கள் கிண்டல் செய்வதை அவர்களின் தொண்டர்கள் உறவினர்கள் பார்க்க நேர்ந்தால் வருத்தப்பட மாட்டார்களா...???

சீமான் , பாரதிராஜா போன்றோர்களுக்கு பொருள் இழப்பு ,செருப்பு வீச்சு போன்ற அவமானங்கள் நிகழ்ந்த்தன அவர்களும் நமக்கென்ன என்று போய்விட்டால்..... அதற்காகத்தான் சொல்கிறேன் .... ஆதரவு வார்த்தைகள் சொல்பவர்களை அவமதிக்க வேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையைச் சொல்லப் போனால், புலிகளோடு இருந்த கருணாவையே எதிரி தனக்குச் சாதகமாகப் பாவிக்கின்றபோது, தமிழ்மக்களுக்காக குரல் கொடுத்து ஆதரவாக இருப்பவர்களைப் பற்றி இவர்கள் குறை சொல்கின்றார்கள். உள்ளுக்கு ஏதும் நயவஞ்சகம் இருக்கணும், இல்லை... ஒரு மண்ணும் அடிப்படை தெரியாதா ... எதிரிகள் சொல்வது போன்று செம்மறிகளாக வாழப் பழகிக் கொண்டிருக்க வேண்டும்

நீங்கள் சொல்கின்ற நியாயங்கள் ஏற்புடையவே.. வேலவன்

தமிழகத்தமிழனை விமர்சிக்க கட்டாயம் எல்லா தமிழர்களுக்கும் உரிமை உண்டு ஆனால்......

சீமான் , பாரதிராஜா போன்றோர்களுக்கு பொருள் இழப்பு ,செருப்பு வீச்சு போன்ற அவமானங்கள் நிகழ்ந்த்தன அவர்களும் நமக்கென்ன என்று போய்விட்டால்..... அதற்காகத்தான் சொல்கிறேன் .... ஆதரவு வார்த்தைகள் சொல்பவர்களை அவமதிக்க வேண்டாம்.

சீமான் இன்னும் 10 வருடத்தில அரசியல் கட்சி உருவாக்குவார் ,விமர்சனத்தை ஏற்கும் பக்குவம் நிச்சமாக இவர்களுக்கு இருக்கும்

உண்மையைச் சொல்லப் போனால், புலிகளோடு இருந்த கருணாவையே எதிரி தனக்குச் சாதகமாகப் பாவிக்கின்றபோது, தமிழ்மக்களுக்காக குரல் கொடுத்து ஆதரவாக இருப்பவர்களைப் பற்றி இவர்கள் குறை சொல்கின்றார்கள். உள்ளுக்கு ஏதும் நயவஞ்சகம் இருக்கணும், இல்லை... ஒரு மண்ணும் அடிப்படை தெரியாதா ... எதிரிகள் சொல்வது போன்று செம்மறிகளாக வாழப் பழகிக் கொண்டிருக்க வேண்டும்

நீங்கள் சொல்கின்ற நியாயங்கள் ஏற்புடையவே.. வேலவன்

கருனாவை எதிரி எப்படி பாவித்தானோ,அதே போலத்தான் விடுதலை சிறுத்தைகளின் தலைவர் திருமாவாளனையும் எதிரியின் கூட்டாளி பாவித்துள்ளான் ,

இந்திய பாராளமன்றத்திற்கு செல்வது என்றால் இலகுவான விடயமில்லை, யாருடனாவது கூட்டு வைக்கவேண்டும் ,அந்த வகையில் திருமாவாளவன் இலட்சியத்தை ஜனநாயக முறையில் அடைந்துள்ளார்,இதே போல் நாளை சீமானும் செய்யக்கூடும்

வாய்ச் சொல்லில் வீரர்கள் என்று அவர்களை கூறுவதை நிறுத்துங்கள். நாங்கள் என்ன செய்தோம்? தற்கொலை செய்தோம்.

இல்லை, இவர்கள் இப்படி அறிக்கை விடுவதெல்லாம், அண்ணையின் நிகழ்ச்சி நிரலென அடுத்த ஈழமுரசு எழுதினாலும் எழுதும். :icon_mrgreen:

இல்லை, இவர்கள் இப்படி அறிக்கை விடுவதெல்லாம், அண்ணையின் நிகழ்ச்சி நிரலென அடுத்த ஈழமுரசு எழுதினாலும் எழுதும். :icon_mrgreen:

:icon_idea: இது கொஞ்சம் ஓவரான ஈழமுரசின் அறிக்கைதான் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கருனாவை எதிரி எப்படி பாவித்தானோ,அதே போலத்தான் விடுதலை சிறுத்தைகளின் தலைவர் திருமாவாளனையும் எதிரியின் கூட்டாளி பாவித்துள்ளான் ,

இந்திய பாராளமன்றத்திற்கு செல்வது என்றால் இலகுவான விடயமில்லை, யாருடனாவது கூட்டு வைக்கவேண்டும் ,அந்த வகையில் திருமாவாளவன் இலட்சியத்தை ஜனநாயக முறையில் அடைந்துள்ளார்,இதே போல் நாளை சீமானும் செய்யக்கூடும்

உங்களுடைய புலம்பெயர்ந்த புண்ணாக்குப் பலத்தை வச்சு என்ன கிளிச்சீங்க என்று சொல்லுங்கோ... அண்டைக்கு ஒருதர் வீரக்கதை கதைக்கின்றார்... தாங்கள் கொடுத்த காசில தானாம் புலி பிளேன் வாங்கினது என்று... சிரித்திரன் அண்ணா போன பிளேனைப் பார்த்தாலே தெரியும்.. உள்ளுக்க கம்பியால கட்டி பலன்ஸ் பண்ணியிருந்தாங்கள் என்று...

அப்படியோரு நிலையில் எம் தலைவரையும், போராட்டத்தையும் வைச்சிருக்க வைத்தபடி, அவன் உங்களுக்குப் புடுங்கல்ல, மற்றவன் புடுங்கல்ல என்று விமர்சனம்...

உங்களுக்கு, என்ன மண்ணுக்கு திருமாளவன் போராட வேண்டும். புடுங்க வேண்டும். அவருக்கு என்ன ஊழா?? தாய்நாட்டில பிறந்து போட்டு,அந்த நாட்டின் விடுதலைக்காக ஒரு ஒத்தாசை செய்ய வாக்கிலாத எங்களுக்கு என்ன உரிமை இருக்கு.. சம்பந்தமே இல்லாத திருமாவளவன் பற்றிக் கதைக்க??

அவருடைய அரசியல் முடிவு பற்றிக் கதைக்க என்ன யோக்கிதம்....

நாளைக்குச் சீமான் என்ன செய்வார் என்று கண்டுபிடிச்சுச் சொல்ல நீர் என்ன குடுகுடுப்புக்காரனா?? உம்மை மாதிரியான ஆட்களின் இப்படியான விமர்சனங்களால் தான் அப்படிகின்றார்கள்..

நாளைக்குச் சீமான் என்ன செய்வார் என்று கண்டுபிடிச்சுச் சொல்ல நீர் என்ன குடுகுடுப்புக்காரனா?? உம்மை மாதிரியான ஆட்களின் இப்படியான விமர்சனங்களால் தான் அப்படிகின்றார்கள்..

தூயவனுக்கு தமிழ்நாட்டு ஈழவிசுவாசிகளைப்பற்றி கதைத்தால் சரியான கோபம் வரும் போல கிடக்குது.நேரில நின்று இந்த கருத்தை சொல்லி இருந்தால் நான் அந்த இடத்திலேயே அவுட்.

அவர் ஈழத்தை சொல்லி பிளைப்பு நடத்தலாம் என்றால் நானும் புலத்தில் இருந்து கண்னியில தட்டுறதில தப்பில்லை.

தமிழ்நாட்டில இருந்து ஈழத்திற்காக குரல் கொடுத்தால் அவருக்காக ரசிகர்மன்றம் வைத்து அவரை தூக்கி பிடிக்கவேண்டிய அவசியம்மில்லை.

சீமானைப்பற்றி சொல்லுவதற்கு தமிழ்நாட்டு அரசியல் கொஞ்சம் தெறிந்தால் போதும்

கருனாவை எதிரி எப்படி பாவித்தானோ,அதே போலத்தான் விடுதலை சிறுத்தைகளின் தலைவர் திருமாவாளனையும் எதிரியின் கூட்டாளி பாவித்துள்ளான் ,

இந்திய பாராளமன்றத்திற்கு செல்வது என்றால் இலகுவான விடயமில்லை, யாருடனாவது கூட்டு வைக்கவேண்டும் ,அந்த வகையில் திருமாவாளவன் இலட்சியத்தை ஜனநாயக முறையில் அடைந்துள்ளார்,இதே போல் நாளை சீமானும் செய்யக்கூடும்

நாளை சீமான் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் ......

நாளை நடப்பதை யாரறிவார்.... இன்று என்ன செய்கிறார்கள் என்று பாருங்கள் .

குறுக்காலப்போவான் என்று ஒருவர் களத்தி,ல் போர் நடந்த போது .... வெற்றிச்செய்தியை எதிர்பார்த்து கிடந்த மக்களிடம் ... நீங்கள் வாழும் நாடுகளில் மக்களின் வன்னி மக்கள் அவலங்களை எடுத்துச்சொல்லுங்கள் என்று கூச்சல் போட்டுப்பார்த்தார் ..

அப்போது யாரும் செவிசாய்க்கவில்லை..... இன்றும் நேர்முக வர்ணணை செய்யும் பழக்கத்தை தமிழர்கள் விடவில்லை....

சிங்களன் செய்வதை ப்பாருங்கள்..

இந்து ராம் என்னும் ஊடக விபசாரியை அழைத்து பணம் கொடுத்து அழைத்துச்சென்று முகாம்களை காட்டியது போலவும்.... அங்கு மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வது போலவும் ராம் வாயால் சொல்ல வைத்து பிரசாரம் செய்கிறான்... ராம் போன்றவர்கள் அறிவு ஜீவிகள், உண்மை விளம்பிகள் என்று தமிழகத்தில் நம்புவோர் ஏராளம்....

இப்படி அவன் தெளிவாக அடி எடுத்து வைக்கும் போது அதற்கு ஈடு கொடுப்பது போல் நாம் என்ன செய்கிறோம்????

எத்தனை ஊடகவியலாளர்களை சந்தித்து நாம் கதறி அழுது அவர்கள் நெஞ்சை கரைத்திருக்க வேண்டும்....

பணத்திற்கு விலை போகும் ஊடகவியலாளர்களை பணத்தால் வளைத்திருக்க வேண்டும் .... நாம் எதையும் சரியாகச்செய்யவில்லை.... அப்படி இருக்க அவன் சரியில்லை இவன் சரியில்லை என்றால் ஒன்றும் உருப்படாது!

தூயவனுக்கு தமிழ்நாட்டு ஈழவிசுவாசிகளைப்பற்றி கதைத்தால் சரியான கோபம் வரும் போல கிடக்குது.நேரில நின்று இந்த கருத்தை சொல்லி இருந்தால் நான் அந்த இடத்திலேயே அவுட்.

அவர் ஈழத்தை சொல்லி பிளைப்பு நடத்தலாம் என்றால் நானும் புலத்தில் இருந்து கண்னியில தட்டுறதில தப்பில்லை.

தமிழ்நாட்டில இருந்து ஈழத்திற்காக குரல் கொடுத்தால் அவருக்காக ரசிகர்மன்றம் வைத்து அவரை தூக்கி பிடிக்கவேண்டிய அவசியம்மில்லை.

சீமானைப்பற்றி சொல்லுவதற்கு தமிழ்நாட்டு அரசியல் கொஞ்சம் தெறிந்தால் போதும்

உங்களுக்கு தமிழ்நாட்டு அரசியல் ரொம்ப அத்துப்படி போல ....

சீமானுக்கு,பாரதி ராஜாவுக்கு ஈழத்தை ச்சொல்லி பிழைப்பு நடத்த என்ன அவசியம்???

...அவர்கள் ஒரு தொலைக்காட்சி சீரியல் இயக்கினாலே பணம் கொட்டும்.... அப்படி இருக்க செருப்புவீச்சு தேசியபாதுகாப்புச்சட்டத்தில

Edited by வேலவன்

உங்களுடைய புலம்பெயர்ந்த புண்ணாக்குப் பலத்தை வச்சு என்ன கிளிச்சீங்க என்று சொல்லுங்கோ... ..

10000 வீரர்களை வைத்துக்கொன்டு என்ன செய்தவர்கள் என்று அடுத்த கேள்வியை கேட்டால் உங்களுக்கு இன்னும் கோபம் வரும்,மன்னாரில இருந்து மக்களை முள்ளிவாய்க்கால் வரை அழைத்துவந்து பின்பு சிங்கள அகதி முகாமில் அடைத்துவைத்தவை ஏன் என்று அடுத்த கேள்வியை கேட்டால் அதைவிட கோபம் வரும் .இப்படி புலம் பெயர் புண்ணாக்குகள் கேள்வி கேட்போம்

வீரன் களத்தில் தான் நிற்பான் ஏன் வீரனை கொச்சைப்படுத்துகிறீர்.

அகதிநாட்டில் அகதியால் என்ன செய்ய முடியும்? றோட்டில நிண்டு கத்தலாம், காசுகொடுக்கலாம், நாலு பேரை சேத்து ஊர்வலம் போகலாம். நான் என்ன ஓபாமா விட்ட போய் பேசேலுமே.

அகதியை ஜ.நா கூட கூப்பிடாது.

இதுதான் புலம் பெயர் தமிழரின் நிலை. பலம் உள்ளவர்கள் யார் என்று பார்த்தால் தமிழக மக்களின் தலைவர்கள் தான்.

அவர்கள் விட்ட தவறு நாங்கள் பெற்ற துன்பம் எல்லாம் ஒரு ஆதங்கத்தின் ஒரு வெளிப்பாடே இப்படியான கருத்துக்கள்.

சீமானே மேடையில் சொல்கிறார் 7 கோடி தமிழக தமிழர் ஈழத்தமிழரை காப்பாத்த முன்வராதது அவமானம் . தனக்கு வெட்கமாக இருக்கிறது என்று சொல்கிறார்.

அவரே சொல்கிறார் 3 கோடி மக்களாவது விழித்திருந்தால் அந்த மக்களை நாங்கள் காப்பாற்ற்றி இருக்கலாம் என்று.

உண்மை அதுதான்.

அங்கு பிழை இருக்கிறது என்பதை ஒத்து கொள்ளவேண்டும். இந்த இன அழிப்பில் இன்றைய தமிழக அரசின் பாராமுகம் ஒரு முக்கிய காரணம் ,உதவினார்கள் என்பதே உண்மை.

தமிழன் என்ற வகையில் விமர்சனம் செய்ய உரிமை உண்டு.

செத்தவீடு முடிந்தபிறகு எட்டு வீட்டுக்கு வந்து தேவாரம் பாடுவதில் பிரயோசனம் இல்லை. செத்தவன் செத்து விட்டாண்,

ஈழம் அவர்கள் உணர்வில், அவர்கள் பேச்சில் தான் வாழ்கிறது என்றால் வாழ்ந்திட்டு போகட்டும்.

தமிழகம் விட்ட பிழை ,பிழை தான்.

Edited by நேசன்

கேள்வி கேட்கும் அருகதை வன்னி மக்களுக்கு உண்டு......

ஆனால் வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்ற கோழைகளுக்கில்லை அந்த உரிமை...

10000 போராளிகளை க்காப்பாற்ற போதுமான ஆயுதங்களும்...... விடுதலைப்போராட்டத்திற்கு அங்கீகாரமும் பெற்றுத்தராதது யார் குற்றம்???

வீரன் களத்தில் தான் நிற்பான் ஏன் வீரனை கொச்சைப்படுத்துகிறீர்.

அகதிநாட்டில் அகதியால் என்ன செய்ய முடியும்? றோட்டில நிண்டு கத்தலாம், காசுகொடுக்கலாம், நாலு பேரை சேத்து ஊர்வலம் போகலாம். நான் என்ன ஓபாமா விட்ட போய் பேசேலுமே.

அகதியை ஜ.நா கூட கூப்பிடாது.

இதுதான் புலம் பெயர் தமிழரின் நிலை. பலம் உள்ளவர்கள் யார் என்று பார்த்தால் தமிழக மக்களின் தலைவர்கள் தான்.

அவர்கள் விட்ட தவறு நாங்கள் பெற்ற துன்பம் எல்லாம் ஒரு ஆதங்கத்தின் ஒரு வெளிப்பாடே இப்படியான கருத்துக்கள்.

சீமானே மேடையில் சொல்கிறார் 7 கோடி தமிழக தமிழர் ஈழத்தமிழரை காப்பாத்த முன்வராதது அவமானம் . தனக்கு வெட்கமாக இருக்கிறது என்று சொல்கிறார்.

அவரே சொல்கிறார் 3 கோடி மக்களாவது விழித்திருந்தால் அந்த மக்களை நாங்கள் காப்பாற்ற்றி இருக்கலாம் என்று.

உண்மை அதுதான்.

அங்கு பிழை இருக்கிறது என்பதை ஒத்து கொள்ளவேண்டும். இந்த இன அழிப்பில் இன்றைய தமிழக அரசின் பாராமுகம் ஒரு முக்கிய காரணம் ,உதவினார்கள் என்பதே உண்மை.

தமிழன் என்ற வகையில் விமர்சனம் செய்ய உரிமை உண்டு.

செத்தவீடு முடிந்தபிறகு எட்டு வீட்டுக்கு வந்து தேவாரம் பாடுவதில் பிரயோசனம் இல்லை. செத்தவன் செத்து விட்டாண்,

ஈழம் அவர்கள் உணர்வில், அவர்கள் பேச்சில் தான் வாழ்கிறது என்றால் வாழ்ந்திட்டு போகட்டும்.

தமிழகம் விட்ட பிழை ,பிழை தான்.

எல்லாம் முடிந்து விட்டது என்று நீங்கள் ஒதுங்கி விட்டீர்கள் ....

முகாம்களில் இருக்கும் மக்களையும் அம்போவென் விட்டு விட வேண்டுமா???

தமிழகம் தவறு செய்தது ஆனால்.... அதற்கு முகாம்களில் வாடும் மக்களை காப்பாற்ற குரல் கொடுத்தால் ... செத்த வீட்டில் தேவாரம் பாடுவதாக சொல்வதா???

ஈழம் பற்றி விழிப்புணர்வை தமிழகத்தில் உருவாக்காதது தமிழகத்தலைவர்களின் குற்றம் மட்டுமா .............

பணத்திற்கு விலை போகும் ஊடகவியலாளர்களை பணத்தால் வளைத்திருக்க வேண்டும் .... நாம் எதையும் சரியாகச்செய்யவில்லை.... அப்படி இருக்க அவன் சரியில்லை இவன் சரியில்லை என்றால் ஒன்றும் உருப்படாது!

வேலவன் நீங்கள் சொல்லும் இந்த விடயத்தில நான் உங்களுடன் ஒத்துபோகிறேன்.நாங்கள் என்ன சொன்னாலும் மேற்குலக பத்திரிகையாளர்கள் சரி,அரசியல் வாதிகள் சரி,சராதணபிரஜைகளாகட்டும் சொல்லுவது ஆயுதம் வைத்திருந்து உரிமைக்காக போராடினாலும் பயங்கரவாதம்தான்

அதற்கு காரணம் நாம் பிறர் மீது மட்டுமே குற்றம் காண்கிறோம் நம் குற்றம் காண்பதில்லை....

மேற்குலக நாடுகளில் பெண்கள் தற்காப்புக்காக ஸ்ப்ரே ... ஷாக் அடிக்கும் ஆயுதங்கள் எல்லாம் வைத்திருப்பார்கள் .அது பயங்கரவாதமா என்று தமிழர்கள் பதிலுக்கு ஏன் நீங்கள் கேட்கவில்லை????

தற்காப்புக்காக ஆயுதம் ஏந்துவது தவறில்லை என ப்புரிய வைக்க தவறி விட்டோம்!

சரி ஆயுதப்போராட்டம் முடிந்த்ததாக சொன்ன பின் ஏன் அப்பாவிகள் முகாம்களில் உள்ளனர்.... இப்படி எல்லாம் ஏன் தமிழர்கள் கேட்கவில்லை!

கேள்வி கேட்கும் அருகதை வன்னி மக்களுக்கு உண்டு......

ஆனால் வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்ற கோழைகளுக்கில்லை அந்த உரிமை...

அந்த வன்னிமக்களின் உறவுகளுக்கு அந்த உரிமையுண்டு,அவர்கள் கோழையாக வெளிநாட்டில தஞ்சமடைந்து இருந்தாலும்.மேலும் முகாமிலுள்ள உறவுகளை வெளியே எடுப்பதற்கு இந்த கோழைகள்தான் பணம் கொடுக்க வேண்டிய சூழ்நிலை,சில .....அவர்களுக்கும் உதவி செய்து வெளிநாடுக்கும் எடுத்துள்ளனர்.

மேற்குலக நாடுகளில் பெண்கள் தற்காப்புக்காக ஸ்ப்ரே ... ஷாக் அடிக்கும் ஆயுதங்கள் எல்லாம் வைத்திருப்பார்கள் .அது பயங்கரவாதமா என்று தமிழர்கள் பதிலுக்கு ஏன் நீங்கள் கேட்கவில்லை????

சரி ஆயுதப்போராட்டம் முடிந்த்ததாக சொன்ன பின் ஏன் அப்பாவிகள் முகாம்களில் உள்ளனர்.... இப்படி எல்லாம் ஏன் தமிழர்கள் கேட்கவில்லை!

தனி நபர் தன்னை பாதுகாக்க வைத்திருந்தால் அது தப்பில்லை,ஆனால் மரபுவழி இராணுவமாக ஒரு குழு வைத்திருந்தால் தப்பு என்ற விளக்கம் கொடுக்கலாம் தானே

[quote name='வேலவன்' date='Jul 26 2009, 10:18 AM' post='531447

எல்லாம் முடிந்து விட்டது என்று நீங்கள் ஒதுங்கி விட்டீர்கள் ....

முகாம்களில் இருக்கும் மக்களையும் அம்போவென் விட்டு விட வேண்டுமா?

நாங்களும்தான் கத்தி பார்க்கிற்றம் எநத நாடும் கேட்கவில்லை. ஆனால் தமிழகம் நினைத்தால் நாளையே அந்த மக்கள் சொந்த இடத்திற்கு போக கூடிய பலன் வரும். தமிழ்நாடு அசைந்தால் இந்திய மத்திய அரசு அசையும். ஆனால் தமிழக அரசை அசைக்க தமிழக மக்கள் இன்னும் தயாராக வில்லை. கருநாநிதி சிறைமக்கள்பற்றி இன்றுவரை ஒரு வார்த்தை கூட தமிழக மக்களிடம் கதைக்கவில்லை, பத்திரிகையாளரிடம் பேசவில்லை பிறகு மத்திய அரசுக்கு என்ன கவலை.

புலியை விட்டாலும் இப்ப மக்களுக்காக தமிழகமக்கள் சேர்ந்து குரல் கொடுத்து தமிழக அரசை மாற்ற முன்வராதது மற்றைய தமிழ் பாடும் கட்சிகளின் குறையே தவிர வேறொன்ன்றும் இல்லை.

Edited by நேசன்

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரன்.. எதிரி.. இந்த ரெண்டு பேரிலும் பிழை இருக்கிறது என்றால், சிங்களவன் முதலில் எதிரியின் பிழையையே தூக்கிப்பிடிப்பான். சகோதரப் பிழையை சிறிது ஓரம்கட்டி வைத்து விடுவான், பிறகு பார்த்துக் கொள்ளலாமென்று.! நாமெல்லாம் அப்படியே தலைகீழ்..!

சரியாக சொன்னீங்கள் டங்குவார்,அத்துடன் இறையாண்மையுள்ள அரசு அவனுக்கு உண்டு அதனால் அவன் நினைத்தபடி நடக்கிறது.எமது சகோதரர்களுக்கு இறையான்மை யுள்ள அரசு இல்லை அதனால் பல இடைஞ்சல்கள்

  • கருத்துக்கள உறவுகள்

தேவையில்லாத வாக்குவாதங்கள் எதற்குமே உதவாது. தமிழக மக்களுக்கு விழிப்பு உணர்வு ஊட்டுகின்ற விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரைத் தவிர மற்றயவர்கள் எல்லோரும் தமிழக மக்களுக்கு விழிப்புணர்வு வரக்கூடாது என்று சிந்தித்து செயலாற்றுபவர்கள்.ஆகவே தமிழக உறவுகளை எழுச்சி கொள்ள வைக்கும் உறவுகளைத் திட்டாதீர். என்றோ ஒருநாள் தமிழகம் எழுச்சி கொள்ளும் அன்று உலகத் தமிழினத்திற்கு விடிவு பிறக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.