Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழம்..இனி ஆயுதப்போர் சாத்தியமா??

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கீழே உள்ள கருத்து சத்திய சீலன் அவர்களின் செவ்வி சம்பந்தமாக எனது நண்பரும் ஒரு பேப்பர் பொறுப்பாசிரியருமான கோபி அவர்களால் என்னுடைய மின்னஞ்சலிற்கு அனுப்பியிருந்த கருத்தினை இங்கு இணைக்கிறேன்..நன்றி.

இலங்கை தீவில் உள்ள அரசியல் பிரச்சனைக்கு (வர்க்க, சமூக, மற்றும் பொருளாதார பிரச்சனைகள்) ஆயுதவழியில்தான் தீர்வினைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற கருத்தினை அறுபதுகளில் வெளியிடடவர் சீன சார்பு கம்யூனிசக் கட்சியின் தலைவராகவிருந்த நா.சண்முகதாசன். ஆனால் அவர் என்றுமே ஆயுதம் தூக்கியதுமில்லை, தூக்கியவர்களை ஆதரித்ததுமில்லை். யாழ்ப்பாணத்தில் சாதிச் சண்டைகளை ஊக்குவித்ததைத் தவிர, வெறும் சித்தாந்தங்களில் அவர' புதையுண்டு கிடந்தார். இக்கட்சியில் அங்கம் வகித்த ரோகண விஜேவீர (அப்போது டொன் நந்தசிறி என்ற இயற்பெயருடன் .இருந்தவர்) போன்றவர்களே, காலனித்துவத்துக்கு பிந்திய, இலங்கைத்தீவில் , ஆயுதப்போராட்டடத்தை மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) அமைப்பினை உருவாக்கியதன் மூலம் முன்னெடுத்தார்கள். அவர்களது போராட்டம் இந்திய உதவியுடன் அடக்கப்பட்டது.

1970 ஆண்டு ஆட்சிக்குவந்த சிறிலங்கா சுதந்திரக்கட்சி, லங்கா சமசமாஜக்கட்சி, கம்யூனிசக்கட்சி ஆகிய உள்ளடங்கிய மக்கள் ஐக்கிய முன்னணி அரசு கொணடு வந்த புதிய அரசியல் அமைப்பு திட்டம் (குடியரசு யாப்பு) தமிழ் மக்களின் உரிமைகளை நிராகரித்ததைத் தொடர்ந்தே வடக்கு -கிழக்கில் தமிழ் மாணவர்கள் - இளைஞர்கள் கிளரந்தெழுந்தனர். பல்கலைக்கழக அனுமதியில் இனரீதியான தரப்படுத்தல் அமுலுக்கு கொண்டுவரப்பட்டமை இந்த கிளர்ச்சியை மேலும் தூண்டிவிட்டது.

பேராதனைப் பல்கலைக் கழக பட்டதாரியான சத்தியசீலன், தமிழ் மாணவர் பேரவையை உருவாக்குவதில் முக்கியமானவர் என்பதை மறுப்பதற்கில்லை. அவருடன் இணைந்து மாணவர் பேரவையில் செயலாற்றியவர்கள் சிறிது காலத்தில் விலகி , தனிப்பட்ட வாழ்க்கைக்கு சென்றுவிட்டார்கள். சத்திய சீலன் சில ஆயுத ரீதியான தாக்குதல்களில் (ஜோசப் வில்வராசா தயாரித்துக் கொடுத்த குண்டை எறிந்தது) ஈடுபட்டது என்னவோ உண்மைதான், ஆனால் தொலைநோக்குடனான ஆயுப்போராட்டம் பற்றி அவர் அப்போது சிந்தித்தாகத் தெரியவில்லை.

நன்றி

கோபி

உங்களுக்கு இந்த சித்தாந்த வரலாற்றை மூலம் தந்த அறிவழக முகவருக்கே யாவும் ஒளிமயாமாகும். இதுவரையும் 30வருட காலம் உங்கள் முதுகில் சுமந்து நீங்கள் தாங்கிய போராட்டத்தை இப்ப சத்தியசீலன் பொறுப்பெடுக்க வந்தார் என்பதை ஏற்றுக்கொள்ள உங்களால் முடியாது தானே. உங்கள் கருத்துப்போன்ற எண்ணங்களே தமிழன் இன்று தெருவில் நிற்க முதல்வழி தேடிக்கொடுத்த பெருமைக்குரியது. நல்லது தொடருங்கள்.

மூலம் கேட்டு வரலாறு எல்லாராலும் எழுத முடியும் அதைத்தான் நீங்களும் செய்திருக்கிறீர்கள்.

அட தேசியத்தலைவர் பெரியதொரு பிழையை விட்டுவிட்டார். பொறுப்பாசிரியர் கோபியை சந்தித்து தொலைநோக்கான பரந்த சிந்தனைகளைப் பெற்றிருக்கலாம். முள்ளிவாய்க்காலில் தமிழீழவிடுதலையின் கதை முடியாமல் இந்தத் தொலைநோக்குனரால் மீட்கப்பட்டிருக்கும்.

  • Replies 59
  • Views 10.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கீழே உள்ள கருத்து சத்திய சீலன் அவர்களின் செவ்வி சம்பந்தமாக எனது நண்பரும் ஒரு பேப்பர் பொறுப்பாசிரியருமான கோபி அவர்களால் என்னுடைய மின்னஞ்சலிற்கு அனுப்பியிருந்த கருத்தினை இங்கு இணைக்கிறேன்..நன்றி.

இருபத்தி ஐந்து வருடத்திற்கு மேலாக, விடுதலைப் போராட்டத்தின், பல்வேறு கால கட்டங்களில் எவ்வித பங்களிப்பு வழங்காத ஒருவரை, முக்கியஸ்தராகக் கருதி நீங்கள் பேட்டி எடுக்க, அவரும் சித்தாந்தம் பேசுகிறார்.

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் தொடர்பாக இனி என்ன செய்ய வேண்டும் என்பதில் ஆக்கபூர்வமான சிந்தனை கொண்டவர்களைத் தவிர்த்துவிட்டு

நன்றி

கோபி

இந்தப்பல்வேறு காலகட்டங்களிலும் நீங்கள் மலையைக்கட்டி மாமடுவையா பிடித்துக் கொடுத்தீர்கள் கோபி ? உங்கள் இக்கருத்திலிருந்து ஒன்று தெளிவாகிறது. சத்தியசீலன் கதைக்க வந்ததை உங்களால் ஜீரணிக்கமுடியவில்லை. நீங்களும் உங்கள் வழிநிற்போரையும் தவிர வேறெவரும் முக்கியஸ்தர் இல்லை. (உங்களை இப்படி எழுத மூலம் தந்தவரும் நீங்களும்தான் முன்னோடிகள் மலையைப்புரட்டிய மாமன்னர்கள் என்பதை இத்தால் சகலரும் ஏகமனதாக ஏற்றுக்கொள்கிறோம்.)

தமிழ் மக்களின் அபிலாசைகள் என்ன என்பதை அந்த மக்களே தீர்மானிக்க வேண்டும். ஏதாவது அவலப்படும் மக்களுக்கு ஒரு யூரோ குடுக்க முடியுமானால் குடுத்திட்டு இருந்தால் அதுவே அந்த மக்களின் உயிர் வாழ்வுக்கு பேருதவியாகும். ஒண்டும் செய்யவும்மாட்டியள் ஆனால் யாரையேன் பிடிச்சு இந்தமாதிரி கிளிப்பிள்ளை விளையாட்டு மட்டும் செய்து கொண்டிருங்கோ. அபிலாசைகள் நிறைவேறும்.

இந்தக் காலப்பகுதி என்பது சிறுகியதாகவும் இருக்கலாம். ஆனால் சத்தியசீலன் சொல்வது போல போராட்டம் என்பது முடிவடையவில்லை. ஏனென்றால் நாங்களும் சிங்களவர்களும் 1000 ஆண்டுகளாகப் போராடிக் கொண்டிருக்கின்றோம்....

இப்ப ஆயிரத்திஒருதரமா தூயவன் போராடுகிறோம் ?

Edited by shanthy

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணமாரே அக்காமாரே

எங்கள மாதிரி பொடிசுகளுக்கும ் விளங்குற மாதிரி கொஞ்சம் எழுதுங்கொவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் தொடர்பாக இனி என்ன செய்ய வேண்டும் என்பதில் ஆக்கபூர்வமான சிந்தனை கொண்டவர்களைத் தவிர்த்துவிட்டு, இடுப்பு எழும்பாத, வெறுமனே சித்தாந்தம் (அதுவும் ஒழுங்காக அல்ல) பேசுவர்களுடன் உங்கள் நேரத்தை வீணடிக்கிறீர்கள் எனக் கருதுகிறேன்.

ஒரு பொறுப்புள்ள பத்திரிகை ஆசிரியரின் விமர்சனம்போல இது தெரியவில்லை.. விமர்சனம் என்பது..ஒருவர் சொன்ன கருத்துக்கள் சரியா தவறா என்பதை ஆராவதே தவிர அதைச்சொன்னவரிற்கு இடுப்பு இயங்குகின்றதா?? அல்லது இடுப்பிற்கு கீழே உள்ளவை இயங்குகின்றதா??என ஆராய்ச்சி செய்வதுதான் விமர்சனமா???இந்த கோபி தானே ஒரு முறை பி.பி.சி..ஊடகத்தில் கருத்து நேர்காணல் ஒன்றின் பொழுது ஒரு சிங்கள மாணவனின் கருத்துக்களிற்கு பதில் சொல்லத் தெரியாமல்..திருவிழாவில் காணாமல் போன குழந்தை மாதிரி..பேந்தப் பேந்த ..முழித்தவர்..இவரெல்லாம்..விமர

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணமாரே அக்காமாரே

எங்கள மாதிரி பொடிசுகளுக்கும ் விளங்குற மாதிரி கொஞ்சம் எழுதுங்கொவன்

உண்மை எனக்கும் அப்பிடித்தானுங்கோ படுகுது.

Edited by Valukkiyaru

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாண்புமிகு ஒரு பேப்பரின் பொறுப்பாசிரியர் திரு.கோபி அவர்களுக்கு,

நீங்கள் சத்தியசீலன் அவர்களின் கருத்துக்கு விமர்சனமா எழுதினீர்கள் இல்லது உங்களாலும் இப்படி எழுத இயலும் என்று எழுதினீர்களா ?

பொறுப்பாசிரியர் பொறுப்புடன் பொறுமையுடன் விமர்சனத்தை வைப்பதே உங்கள் பொறுப்புக்குத் தகும்.

(நீங்கள் இனி பொறுப்பாசிரியர் என்ற பதத்தைவிட பொறுக்கியாசிரியர் என போட்டுக் கொள்ளலாம்போலுள்ளது.)

நீங்கள் எழுதிய கருத்தின் இரத்தினச் சுருக்கம் இது - தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் தொடர்பாக இனி என்ன செய்ய வேண்டும் என்பதில் ஆக்கபூர்வமான சிந்தனை கொண்டவர்களைத் தவிர்த்துவிட்டு, இடுப்பு எழும்பாத, வெறுமனே சித்தாந்தம் (அதுவும் ஒழுங்காக அல்ல) பேசுவர்களுடன் உங்கள் நேரத்தை வீணடிக்கிறீர்கள் எனக் கருதுகிறேன்.

ஒருவரின் கருத்துக்கும் இடுப்பு எழும்பாத பதத்தை நீங்கள் உபயோகித்தமைக்கும் என்ன சம்பந்தம் ?

சரி சத்தியசீலன் வெறும் சித்தாந்தம் பேசுகிறார். நீங்கள் இப்படிக் கீழ்மையாக எழுதுவதில் என்ன சாத்தியம் இருக்கிறது ?

:lol: :lol: :):(:o
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சர்வதேசத்தைக் கேட்டு முடிவெடுப்பமோ? நாங்கள் என்ன செய்யுறதெண்டு...

http://www.yarl.com/forum3/index.php?showtopic=62684

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கோபி எனக்கு அனுப்பி வைத்த இன்னொரு மின்னஞ்சலையும் இங்கு இணைக்கிறேன்..

நான் உங்களுக்கு எழுதிய பதிலை நீங்கள் யாழ் களத்தில் இணைத்துள்ளீர்கள். எனது கருத்துக்கள் வெளியில் செல்வது பற்றி எனக்கு ஒரு சங்கடமுமில்லை. ஆனால் பொதுப்பட எழுதும்போது அது எல்லோராலும் விளங்கிக் கொள்ளக்கூடிய ரீதியில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்ற ஆதங்கமே தவிர வேறொன்று மில்லை.

உதாரணத்துக்கு "இடுப்பு எழும்பாத" என்ற பதம்.

எங்களுரில் "எண்ணம்தான் இடுப்பெழும்பாது " என்று சொல்வது வழக்கில் இருக்கிறது. மனம் செய்யவிரும்பினாலும் எழுந்து சென்று செய்ய இடுப்பு இடங்கொடாது . அதனுடைய அர்த்தம் "செய்ய வேண்டும் என்ற விருப்பமிருக்கிறது .. ஆனால் செய்ய மாட்டார்கள் " என்று அர்த்தப்படும், சாய்மனைக் கதிரை விமர்சகர்களை இப்படி அழைக்கலாம்.

இது வட்டாரப் பேச்சு வழக்கா இல்லையா என்பது எனக்கு சரியாகத் தெரியாது.

மற்றயபடி நான் இதனை எழுத மூலம் இன்னொருவர் தந்தார் என நினைப்பவர்களுடன் கருத்தாடல் செய்வது வீண் விரயம் என்றே நம்புகிறேன். ஏனெனில் இலங்கைத் தீவின் அரசியில் விவகாரங்கள் தொடர்பில் எனக்கு போதிய அறிவு இருக்கிறது.

நன்றி

கோபி

  • கருத்துக்கள உறவுகள்

கோபி எனக்கு அனுப்பி வைத்த இன்னொரு மின்னஞ்சலையும் இங்கு இணைக்கிறேன்..

மற்றயபடி நான் இதனை எழுத மூலம் இன்னொருவர் தந்தார் என நினைப்பவர்களுடன் கருத்தாடல் செய்வது வீண் விரயம் என்றே நம்புகிறேன். ஏனெனில் இலங்கைத் தீவின் அரசியில் விவகாரங்கள் தொடர்பில் எனக்கு போதிய அறிவு இருக்கிறது.

நன்றி

கோபி

வட்டாரத் தமிழின் வல்லவரான நீங்கள் ஏன் சத்தியசீலன் மீதான காழ்ப்பாக விமர்சிக்கிறீர்கள் என்பதை விளக்குவீர்களா ? உங்களிடம் உள்ள ஒரு நிலமை உங்கள் கருத்தை மறுத்துக் கருத்துச் சொல்லக்கூடாது. (கடந்தகால தமிழ் அரசியல் கள நிலமைகள் போல) அப்படி கருத்து சொன்னால் இப்படித்தான் ஏதாவது மேதாவித்தனமாக சொல்லி தப்பித்துக் கொள்வீர்கள். ஒரு பொறுப்பான பதவியில் இருந்து கொண்டு இப்படி சின்னத்தனமான விமர்சனங்கள் சகிப்பின்மையை மாற்றாதவரை நீங்கள் எத்தனை வெள்ளைவேட்டிக்கதை சொன்னாலும் அது உங்கள் ஆழ்மன வெளிப்பாடு என்று ஏற்றுக்கொள்ள முடியாது கோபி.

கருத்தாடினால் எங்கே உங்களால் கேள்விகளுக்குப் பதில் தரமுடியாமல் போய்விடுமோ என்ற அச்சத்தால் டக்ளஸ் பாணியில் கெளரவமாக தள்ளி நிற்கிறீர்கள். அது உங்கள் சொந்த முடிவும் எண்ணமும்.

உங்களிடம் இலங்கையரசில் பற்றிய தெளிவு அனுபவம் இல்லையென்று சொல்லவில்லை. நீங்கள் எல்லாருடனும் உங்களை மேதாவியாக்கி ஒருபடி முன்னேறி நின்று நீங்கள் சொன்ன சித்தாந்திகளின் வழியில் நின்று கருத்துச் சொல்கிறீர்கள்.

சிலவிடயங்கள் சில மூலங்களிலிருந்து தரப்பட்டு எழுதப்படுகிறது என்பதை நீங்கள் மறுத்தால் சரி. ஆனால் அந்த மூலங்களுடனான பலகால அனுபவங்களிலிருந்து எந்த மூலத்திலிருந்து எந்த நதி பெருக்கெடுக்கிறது என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடியும்.

கருத்தை கருத்தால் வெல்வோம். சளாப்பிவிட்டு தப்பிப்பது உபதேசிப்பது ஒரு சிறந்த தேர்வுக்கான வழியில்லை கோபி. (உங்களை சத்தியசீலனின் செவ்வி தொடர்பாக கேள்வி கேட்டதற்காக பொறுப்பாசிரியர் பதவியை வைத்து அடுத்தடுத்து பல பெயர்களில் பத்திரிகையில் பொறுப்பாக எழுதுவீங்கள். அது உங்களுக்குக் கைவந்தகலை அதைச் செய்யுங்கோ தொடர்ந்து)

Edited by shanthy

  • கருத்துக்கள உறவுகள்

கோபி எனக்கு அனுப்பி வைத்த இன்னொரு மின்னஞ்சலையும் இங்கு இணைக்கிறேன்..

நான் உங்களுக்கு எழுதிய பதிலை நீங்கள் யாழ் களத்தில் இணைத்துள்ளீர்கள். எனது கருத்துக்கள் வெளியில் செல்வது பற்றி எனக்கு ஒரு சங்கடமுமில்லை. ஆனால் பொதுப்பட எழுதும்போது அது எல்லோராலும் விளங்கிக் கொள்ளக்கூடிய ரீதியில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்ற ஆதங்கமே தவிர வேறொன்று மில்லை.

நன்றி

கோபி

சத்தியசீலன் கொடுத்தது பொதுப்பட்ட செவ்விதான். தனிப்பட சாத்திரிக்கும் சயந்தனுக்கும் காதுக்குள் ஓதியதல்ல. இதற்குள் நீங்கள் காதுக்குள் சொன்ன ரகசியத்துக்குப் பதில் போல பதில் எழுதினீங்களா ?

உங்கள் கடிதம் மூலம் யாவும் எல்லோராலும் விளங்கிக்கொள்ளக் கூடியதாகத்தானிருந்தது. உங்கள் நிலைப்பாடு உங்கள் அரசியல் பட்டறிவு ஞானம். இதில் தாழ்வில் விழுந்து நிற்பது போல நீங்கள் திரும்பவும் ஒரு மடலிட்டு விளக்கிமைக்கு நன்றிகள்.

*அருளர் மாயாவின் மார்புக்குள் பெண்ணியம் தேடுவதும்....சத்தியசீலனின் இடுப்பிற்குள் ஈழப்போராட்டத்தை விமர்சிப்பதும் விமர்சனம் இல்லையென்பது எனது சிற்றறிவுக்கு புரிகிறது*

உங்களுக்கு கோபியை பற்றி எதாவது சொல்ல வேண்டமானால் அவரிடம் நேரடியாகவே சொல்லலமே.

அவர் ஒருத்தர் தனக்கு வந்த தனிமடலை வெளியிலபோட இவ ஒருத்தி விமர்ச்சிக்கிறா.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு கோபியை பற்றி எதாவது சொல்ல வேண்டமானால் அவரிடம் நேரடியாகவே சொல்லலமே.

அவர் ஒருத்தர் தனக்கு வந்த தனிமடலை வெளியிலபோட இவ ஒருத்தி விமர்ச்சிக்கிறா.

கழுதை மேலே நான் இணைத்தது எனக்கான தனிமடல் அல்ல..அதே நேரம் கோபிக்கும் அதனை யாழில் இணைப்பதாக் தெரிவித்துவிட்டுத்தான் இணைத்தேன்..சந்தேகம் இருந்தால்..நீங்கள் நேரடியாக கோபியிடம் கேட்டுப்பார்க்கலாம்..நன்றிங்

கோ. :D :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களுக்கு கோபியை பற்றி எதாவது சொல்ல வேண்டமானால் அவரிடம் நேரடியாகவே சொல்லலமே.

அவர் ஒருத்தர் தனக்கு வந்த தனிமடலை வெளியிலபோட இவ ஒருத்தி விமர்ச்சிக்கிறா.

:unsure::lol::):lol::rolleyes::D :D

ஐயோ.....ஐயயோ.... ஐயோ.....ஐயயோ....சின்னப்பிள்ளைத் தனமாவே இருக்கிறாங்களே!

நிங்களே எழுதியதை திருப்பிபடியுங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தப்பல்வேறு காலகட்டங்களிலும் நீங்கள் மலையைக்கட்டி மாமடுவையா பிடித்துக் கொடுத்தீர்கள் கோபி ? உங்கள் இக்கருத்திலிருந்து ஒன்று தெளிவாகிறது. சத்தியசீலன் கதைக்க வந்ததை உங்களால் ஜீரணிக்கமுடியவில்லை. நீங்களும் உங்கள் வழிநிற்போரையும் தவிர வேறெவரும் முக்கியஸ்தர் இல்லை. (உங்களை இப்படி எழுத மூலம் தந்தவரும் நீங்களும்தான் முன்னோடிகள் மலையைப்புரட்டிய மாமன்னர்கள் என்பதை இத்தால் சகலரும் ஏகமனதாக ஏற்றுக்கொள்கிறோம்.)

தமிழ் மக்களின் அபிலாசைகள் என்ன என்பதை அந்த மக்களே தீர்மானிக்க வேண்டும். ஏதாவது அவலப்படும் மக்களுக்கு ஒரு யூரோ குடுக்க முடியுமானால் குடுத்திட்டு இருந்தால் அதுவே அந்த மக்களின் உயிர் வாழ்வுக்கு பேருதவியாகும். ஒண்டும் செய்யவும்மாட்டியள் ஆனால் யாரையேன் பிடிச்சு இந்தமாதிரி கிளிப்பிள்ளை விளையாட்டு மட்டும் செய்து கொண்டிருங்கோ. அபிலாசைகள் நிறைவேறும்.

இப்ப ஆயிரத்திஒருதரமா தூயவன் போராடுகிறோம் ?

சாந்தி on 13 August, 2009 at 10:36 am #

ஆயினும் தமிழீழத்தில் உள்ள மக்கள் இத்தனை அழிவுக்குப் பின்னரும் தமது இலட்சியத்தில் உறுதியாக இருக்கின்றார்கள். உள்ளுராட்சித் தேர்தல்களில் அந்த மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்திருக்கின்றார்கள்.

சபேசன்,

தமிழீழத்தில் போரால் பாதிக்கப்பட்ட எந்த மக்களும் இப்போது இலட்சியங்களுடன் இல்லை. உயிர் வாழ்ந்தால் போதும் என்ற மனநிலையில்தான் உள்ளார்கள்.

உள்ளுராட்சித் தேர்தலில் மக்கள் வவுனியாவில் வாக்களித்த விகிதம் எவ்வளவு ? வாக்களிக்காத விகிதம் எவ்வளவு ?

இனியாவது உசுப்பாமல் அந்த மக்களுக்கு உயிர்வாழ்தலுக்கு வேண்டியவற்றில் ஒரு துளியை செய்தால் போதும். அவர்கள் விடுதலைக்கான பாதையை தாம் தேர்வு செய்வார்கள்.

கே.பியை வெளிய வா வெளிய வாவென்று கூப்பிட்டு கடத்தும் வரை புதினம் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு இப்போது கண்டனம் செய்யும் கயமைத்தனங்களை கே.பி அறிந்திருக்க நியாயமில்லைத்தான்.

தேசியத்தலைவரையே சாகும் வரை இதோ வாறம் அதோ வாறம் என்று பசப்புக்காட்டிய ஆய்வாளர்கள் அக்கறையாளர்கள் தான் கே.பி யின் கைதுக்கு காரணமானார்கள்.

இந்த இனத்துக்காக இனி யாரும் போராட வேண்டாம். அவர்களும் இந்தச் சுயநலம் பிடித்தவர்கள் போல் தங்களை வாழ்ந்துவிட்டுச் செல்லட்டும்.

அப்ப இதுகும் நீங்களோ அக்கா!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பாடா...!! ஒருத்தரையும் காணேமே.ஓய்ஞ்சுபோட்டாங்களோ..??? :blink::(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னொரு கடீதம் !............

1970ம்ஆண்டு மே மாதம் 27ம்திகதி இலங்கையின் ஏழாவது பாராளுமன்றத்திற்கான பொதுத்தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் வெற்றிபெற்ற “ ஸ்ரீமாவோபண்டாரநாயக்கா” தலைமையிலான ஐக்கியமுன்ணணி 157 பாராளுமன்ற தொகுதிகளில் 116 தொகுதிகளைக் கைப்பற்றி நான்கி;ல்மூன்று பெரும்பான்மையுடன் ஆட்சிஅமைத்தது.

இவ்வாறு ஆட்சிக்கு வந்த “ஸ்ரீமாவோ”அரசாங்கம் உடனடீயாக கொண்டுவந்த இனரீதியாக கொள்கையே தரப்படுத்தலாகும். இத்தரப்படுத்தலானது பல்கலைக்கழக அனுமதிக்காக க.பொ.த உயர்தரத்தில் தேற்றும் தமிழ்மாணவரும் சிங்கள

-மாணவரும் மொழியியல் ரீதியாகப்பிரிக்கப்பட்டு அவர்களுக்கான வெட்டுப்புள்ளிகள் வௌ;வேறாக மாற்றப்பட்டன.

உ+ம்; . .பேராதனைப்;பல்கலைக்கழகத்திற்

கு தெரிவு செய்யப்பட்டபுள்ளிகள்

தமிழ்மாணவர் சிங்களமாணவர்

மருத்துவம் 250 புள்ளிகள் 229 புள்ளிகள்

பொறியியல் 250 புள்ளிகள் 227 புள்ளிகள்

இவ்வாறு இனரீதியாக கொண்டுவரப்பட்ட கல்விக்கொள்கையினால் பாதிக்-

கப்பட்ட தமிழ் மாணவருக்காக கிளர்ந்தெழுந்தவரே திரு.பொன்.சத்தியசீலன் ஆவார்.அக்கா-

-லத்தில் அவர் பேராதனை பல்கலைக்கழகத்தில் கலைப்பீட இறுதியாண்டு மாணவனாக-

இருந்தார். தரப்படுத்தலினால் தமிழ்மாணவருக்கு ஏற்படப்போகும் பாதிப்பினைத் தடுப்பதற-;

;-காக பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இயங்கிவந்த தமிழ்மாணவர் ஒன்றியத்தின் வெளியீடான “தமிழ் இளைஞன்”சஞ்சிகையின் ஆசிரியராக இருந்த இவர் பல்கலைக்கழக--த்திலேயே தரப்படுத்தலுக்கு எதிரான தனது பிரச்சாரத்தை ஆரம்பித்தார்.1970 ஓகஸ்ட

இறுதியில ;பேராதனை;ப் பல்கலைக்கழகத்தில் தனதுபட்டப்படீப்பை முடித்து வெளியேறிய இவர் 1970 நவம்பர் மாதம் 23ந்திகதி “தமிழ்மாணவர் பேரவையை” யாழ்ப்பாணத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். 1972 மே யிலேயே பௌத்த சிங்கள குடீயரசாக இலங்கை மாற்றப்பட்டு “ஸ்ரீலங்கா”என்னும் பெயர்சூட்டப்பட்டது.

இவர் “தமிழ்மாணவர் பேரவையை”ஆரம்பித்தபோது இவருடன் தோளோடு தோள் நின்றவர் இவருடைய அயலவரான பொன்.சிவகுமாரன் ஆவார். இச்சிவகுமாரனே1970

யூலையில் அன்றைய கலாச்சார உதவிஅமைச்சரான சோமவுPரசந்திரசிறியின் காருக்கு வல்வெட்டீத்துறையைச் சேர்ந்த ஆனந்தககுமாரசாமி என்னும “பட்டுவுடன”; இணைந்து குண்டு வைத்தவர் ஆவார். இவ்வாறு பட்டுவும் சிவகுமாரனும் குண்டு வைத்தபோது தமிழ்மாணவர்பேரவை என்ற அமைப்பே கருவாகவில்லை. சத்தியசீலனும் பல்கலைக்கழக மாணவனாக பேராதனையில இருந்தார்.

இவ்வாறு இனரீதியான ஆயுதப்போரில் முதல்க்குண்டை தாக்குதலிற்காக

பயன்படுத்திய பட்டுவும் சிவகுமாரனும் 1967முதல் வல்வெடடீத்துறையில் சமூகரீதியாக இயங்கிவந்த தீவிரவாதக்குழுவுடன் தமது தொடர்பைப்பேணிவந்தனர். இவ்வாறு வல்வெட்டீத்துறையில் 1967 இல் முகிழ்ந்த தீவிரவாதக்குழுவில் மூப்பின் அடீப்படையில்

“பெரியசோதி” தலைவராக விளங்கினார். இக்குழுவில் இருந்த ஏனையோர் “போராட்டத்தின் முனனோடிகளான” குட்டீமணி தங்கத்துரை நடேசுதாசன் {மூவரும் வீரமரணம் அடைந்தவராவர்கள்} சின்னச்சோதி மற்றும் சிலநண்பர்களாவார்கள். இவர்களுடன் அன்று வல்வை சிதம்பராக்கல்லூரியில் எட்டாந்தரத்தில் கல்வகற்- றுக்கொண்டிருந்த எமது தேசியத்தலைவர் “தம்பி” பிரபாகரனும் இக்குழுவிலேயே மிளிர்ந்திருந்தார்;;. இக்குழுவினரால் செய்யப்பட்ட குண்டே உரும்பராயில் வெடீத்தது குறிப்பிடத்தக்கது

1970 டீசம்பர் முதல் வாரத்தில் சத்தியசீலனின் தமிழ்மாணவர் பேரவையுடன ;மேற்குறிபபிட்டகுழுவினர் இணைந்து இனரீதியான போராட்டத்தை முன்னெடுத்தனர் என்பதே உண்மை வரலாறு. இவ்வாறே அன்றைய இலங்கையின் வடகிழக்கில் இருந்த பல தீவிரவாதஇளைஞர்களையும் இணைத்து இனரீதியான ஆயதப்போராட்டத்தை ஆரம்பித்து வைத்தவர் பொன்.சத்தியசீலனே ஆவார். இவ்வகையில் ஈழத்தமிழரின் ஆயுதப்போராட்டத்தைப் பற்றிக்கூற அவருக்கு அதிகஉரிமை உள்ளது. ஆனால் அவரது கருத்தை ஏற்பதோ அல்லது விடுவதோ அவரவர் முடீவு. ஏனெனில் “உண்மைகள் புனிதமானவை. விமர்சனங்கள் சுதந்திரமானவை”

இவ்வகையில் மேற்க்கூறிய செவ்வியில் சத்தியசீலனின் பதிலகளில் எந்தத்தவறையும் காணமுடீயாது. கேள்விக்கு பதில் சொல்வதே செவ்வி. கேட்பதுஎது? எனும் வினையடீயாகப் எழுந்து “செவி” என்னும அடீச்சொல்லில் பிறப்பது தானே “செவ்வி”. எனினும் சத்தியசீலன் பற்றிய அறிமுகத்தில் “பிரபாகரன் உட்பட பல இயக்கங்களையயும் தொடங்கியதலைவர்கள் அனைவரும் தோன்றி இருந்தனர்” என்பதே தவறானது ஆகும். இதுவே அனைத்து வாதப்பிரதிவாதங்களிற்கும் அடீப்படையாக மாறியது.

ஆயுதப்போரை வகுப்பறைப்பாடமாக சத்தியசீலன் கற்கமுனைந்த போதே வல்வெட்டீத்துறையில் செயல்முறை ரீதியாக மேற்குறிப்பிட்டகுழு இயங்கியது. அக்குழுவில் இயங்கிய “சின்னசோதியே” சத்தியசீலன் சிவகுமாரன் போன்றோருக்கு கைக்குண்டு செய்யும் அடிப்படைக்கலையைக் கற்றுக்கொடுத்தார். ஜோசப்வில்வராசாவின்; தொழில்நுட்பஅறிவு மாணவர்பேரவையினர்கு பின்னாட்களில் வேண்டப்பட்டபோதும் அவர் செய்தஎக்குண்டும் சத்தியசீலனால் எறியப்படவில்லை என்பதும் உறுதிப்படு;த்தப்பட்ட தகவலாகும.;

குறிப்பு:- “தலைவர்” தங்கத்துரையின் “நாங்கள் வன்முறையின் மீது காதல் கொண்ட

மனநோயாளிகள் அல்ல” எனும் நீதிமன்ற உரை {1983}

“தேசியத்தலைவர்” பிரபாகரனின் “காலநதிக்கரையில் மீள நினைக்கின்றேன்”

வெளிச்சம் பத்திரிகைபச்செவ்வி {1994}

“தளபதி” கேணல் கிட்டுவி;ன் “புரென்லைன்” செவ்வி {1986}

என்பவற்றின் மூலம் ஆயுதப்போராட்டத்தி;ன்

ஆரம்பகாலங்களினை நாம் கண்டு கொள்ளலாம்.

வரலாற்றைத் தேடும்

“தமிழ்நீ”

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்நீ ஜயா

அவர்களே தயவு செய்து இவற்றை தொடர்ந்து ஒரு புது தலைப்பின் கீழ் எழுதுங்கள்.

ஏனென்றால் என்னை போல பலருக்கு இந்த வரலாறுகள் தெரியாது அதனால் நீங்கள் தொடர்ந்து எமது போராட்ட வரலாறுகளை எழுதினால்

நல்லது.

முடிந்தால் எழுதுங்கள். அனைவர் சார்பாகவும் அன்பான வேண்டுகோள் :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்நீ..உங்களுடைய தகவல்கள் மிகமுக்கியமானவை.இந்த தகவல்களை இணைத்து ஒரு

ஆவணமாக வெளியிட்டால் வருங்காலத்தில் வரலாற்றை புரிந்துகொள்ள உதவியவராக

நீங்கள்; இருக்கமுடியும்.இன்னும் எழுதுங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

1970 டீசம்பர் முதல் வாரத்தில் சத்தியசீலனின் தமிழ்மாணவர் பேரவையுடன ;மேற்குறிபபிட்டகுழுவினர் இணைந்து இனரீதியான போராட்டத்தை முன்னெடுத்தனர் என்பதே உண்மை வரலாறு. இவ்வாறே அன்றைய இலங்கையின் வடகிழக்கில் இருந்த பல தீவிரவாதஇளைஞர்களையும் இணைத்து இனரீதியான ஆயதப்போராட்டத்தை ஆரம்பித்து வைத்தவர் பொன்.சத்தியசீலனே ஆவார். இவ்வகையில் ஈழத்தமிழரின் ஆயுதப்போராட்டத்தைப் பற்றிக்கூற அவருக்கு அதிகஉரிமை உள்ளது. ஆனால் அவரது கருத்தை ஏற்பதோ அல்லது விடுவதோ அவரவர் முடீவு. ஏனெனில் “உண்மைகள் புனிதமானவை. விமர்சனங்கள் சுதந்திரமானவை”

தமிழ்நீ !

தக்க சமயத்தில் வந்து கருத்திட்டீர்கள். நிச்சயம் இந்த வரலாற்றுக் குறிப்புக்கள் எங்களுக்காக எழுதப்பட வேண்டியவைதான்.

அதிரடிப்பொறுப்பானவர்கள் இவ்விடயத்தில் நிதானித்து செவ்வியை கேட்பது சிறப்பாகும்.

நீ யார் தமிழீழம் ஆயுத விடுதலைப்போர் பற்றிப் பேச எனக் கொடுக்குக்கட்டிக் கொண்டு வெளிக்கிடுவோர் தங்கள் அரசியல் மேதாவித்தனத்தை இத்தகைய மூத்தோரின் காலத்தை மறக்காமல் வரலாற்றைச் சொல்வது பொருத்தமாகும்.

ஆரம்பத்தில் தோன்றிய இயக்கங்கள் எல்லாரினதும் கொள்ளை தமிழருக்கான விடுதலை. ஆனால் காலம் அவர்களை பகைத்துக் கொண்டது. அதற்காக கொள்கையில்லாத வீரா்கள் என சத்தியசீலன் போன்றவர்களை கேலிபண்ணும் வித்தகர்கள் இனிமேல் வரலாற்றை ஆய்ந்து பார்க்க வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2006 ம் ஆண்டு நான் ஒரு பேப்பர் பத்திரிகையில் எழுதிய அரசியல் தொடரில் தமிழ் மாணவர் பேரவையின் தோற்றம் பற்றியும்..எழுதியிருந்தேன்.. அதனை இங்கு இணைக்கிறேன்..

1970ம் ஆண்டு கார்த்திகை மாதம் 13ஆம் திகதி அந்தக் காலத்தில் யாழ்ப்பாணநகரத்தில் மசால் வடைக்குப் பெயர் போன மலயன் கபே என்கிற உணவு விடுதியின் மேல் மாடியில் உரும்பிராயை சேர்ந்த சத்திய சீலனால் அப்போது இலங்கையரசிற்கு எதிரான தீவிரவாத போக்கு கொண்ட சில இளைஞர்களை ஒன்று சேர்த்து ஒரு கூட்டம் கூட்டபடுகிறது அந்த கூட்டத்தில் இருந்தவர்கள் 1.திரு பொன். சிவகுமாரன்(உரும்பிராய்). 2.முத்துகுவார சுவாமி 3. அரியரட்ணம் ஏழாலை 4.வில்வராயா (நல்லூர்) 5 இலங்கை மன்னன் 6. மகா உத்தமன் (யாழ்.சென்யோன்ஸ் கல்லூரி மாணவன்) 7. சிவராசா(கல்வியங்காடு) 8. தவராசா(இவர்தான் இன்று ஈ.பி.டி.பி யின் முக்கிய உறுப்பினராக உள்ளவர்.).9.சேயோன் (சென்பக்றிஸ் கல்லுரி மாணவன்)10. ஆனந்தன் (சென்யோன்ஸ் மாணவன்) 11. ஞானம் அண்ணா(மண்டைதீவு .)ஆகியோரோடு இன்னும் சிலருடனும் கிட்டத்தட்ட பதினைந்து பேரளவில் அந்த கூட்டத்தில் சமூகமளித்திருந்தனர்.

இதில் ஞானம் அண்ணா என்பர் சிறீலங்கா காவல் துறையில் கடைமையாற்றியவர் இலங்கையரசின் சிங்களம் மட்டும் என்கிற சட்டத்தால் சிங்களம் படிக்க முடியாது என தனது வேலையை உதறி எறிந்து விட்டு யாழ்நகரில் உள்ள ராணி திரையரங்கில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த இளைஞர்களின் கூட்டத்திற்கும் வேறு பல திட்டங்களிற்கும் அவர்களிற்கு ஒர் உந்து சக்தியாகவும் ஊக்கம் அளிப்பவராகவும் செயற்பட்டு வந்தவர் என்பதும் குறிப்பிட வேண்டும். இந்தக் கூட்டத்தில் அந்த இளைஞர்களால் 1970ஆம் ஆண்டு இலங்கையரசின் கல்வியமைச்சர் பதியுதீன் முகமது அவர்களால் கொண்டுவரப்பட்ட கல்வி தரப்படுத்துதல் சட்டம் மற்றும் தமிழர்களை ஒடுக்குவதற்காக சிங்கள ஆட்சியாளர்களின் பல்வேறு சட்டங்களை எதிர்த்தும் மற்றும் அதன் நிறைவேற்று அதிகாரிகளை எதிர்க்கவும் தமிழர் மத்தியில் ஒரு அமைப்பு தேவை என சத்தியசீலனால் முன்மொழியப்பட்டது.

அத்துடன் இலங்கையரசிற்கு தமிழர் மற்றும் தமிழ் மாணவர்களின் எதிர்ப்பைக் காட்டுவதற்காக மாபெரும் ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்றை நடத்த தீர்மானிக்கப்பட்டு அதற்காக வடக்கிலுள்ள அத்தனை பாடசாலை உயர் வகுப்பு மாணவர்கள் மற்றும் மாணவத்லைவர்களை அணுகி அந்த அரச எதிர்ப்பு பேரணிக்கு ஆதரவு திரட்டுவது என தீர்மானிக்கப் படுகிறது .அந்த தீர்மானத்தின் படியே அங்கிருந்தவர்கள் வடக்கிலுள்ள அத்தனை பாடசாலைகளிற்கும் சென்று மாணவர்களை சத்தித்து விழக்கம் கொடுக்கப்டுகிறது மீண்டும் அதே மாதம் 17ந் திகதி அதே இடத்தில் வடகிழக்கின் பல்வேறுபட்ட இடங்களிலில் இருந்தும் வந்திருந்த சுமார் நூற்றியம்பது இளைஞர்கள் மற்றும் உயர் வகுப்பு மாணவர்களை ஒன்றிணைத்துத் தமிழ் மாணவர் பேரவை தலைவர் செயலாளர் பொருளாளர் என்று எவரிற்கும் எவ்வித பதவிகளுமற்ற ஒரு அமைப்பாகவும் அந்த அமைப்பின் அமைப்பாளர் என்கிற ரீதியில் சத்தியசீலன் அவர்கள் இருப்பார் எனவும் முடிவுகள் எடுக்கபட்டது (முன்னைய கட்டுரையில் இந்த அமைப்பின் தலைவர் என்று நான் குறிப்பிட்டிருந்தேன் பின்னர் அது சத்தியசீலன் அவர்களால் தலைவர் என்கிற பதவி இல்லை அமைப்பாளர் மட்டுமே என்று சுட்டிக்காட்டப்பட்டது) சத்தியசீலன் அவர்களால் தமிழ் மாணவர் பேரவை என்று அந்த அமைப்பிற்கு பெயர் சூட்டப்பட்டு இனி வருங்காலங்களில் அந்த அமைப்பின் செயல்த் திட்டங்கள் பற்றியும் விவாதிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்திலேயே தமிழ் மக்கள் இனியும் சிங்கள ஆட்சியாளர்களின் கீழ் வாழ முடியாது என்றும் தமிழர்கள் ஒரு தனியரைசை அமைக்க வேண்டிய கட்டாயத்தை வலியுறுத்தி அந்த தனியரசை அமைக்க வன்முறையிலான ஆயுதப் போராட்டமே ஒரேயொரு வழியென தீர்மானம் எடுக்கப்பட்டு அதற்கான ஆரம்பக் கட்ட வேலைகளான மாணவர்கள் மற்றும் பொது மக்களிற்கு தமிழ் தனியரசு பற்றிய விளக்கங்களையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்த அங்கிருந்தவர்கள் பகுதி பகுதியாகப் பிரிக்கப் பட்டு தமிழ் பிரதேசத்தின் அனைத்து கிராமங்களிற்கும் மற்றும் அனைத்து பாடசாலைகளிற்கும் செல்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது. அவர்கள் திட்டப்படி கார்த்திகை மாதம் 24ந்திகதி மிக குறுகிய காலத்திலேயெ ஒழுங்கு செய்யப்பட்டாலும் வடக்கின் அனைத்து பாடசாலை மாணவ மாணவியர் மற்றும் பொது மக்கள் என எதிர்பார்த்ததற்கும் மேலாக பல்லாயிரக்கணக்காணவர்கள் பங்கு பற்றி தங்கள் எதிர்ப்பை இலங்கை அரசிற்கு காட்டினர்.

இலங்கையில் முதலாவது மிகப்பெரும் தமிழ் மாணவர்களின் எழுச்சி என்று இந்த ஊர்வலத்தை சொல்லலாம்.இறுதியாக யாழ் முற்றவெளியில் நடந்த பொது கூட்டத்துடன் இந்த ஊர்வலம் நிறைவு பெற்றது.

Edited by sathiri

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதைவிட சிறையில் இருப்பவர்கள் தங்கள் நேரத்தை போக்க தங்கள் கவலைகள் பிரச்சனைகள் எல்லாவற்றையுமே மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வது வழமை. அப்படி சிறையில் வாடிய ஆரம்பகால ஆயுதமேந்திய இளைஞர்கள் பலர் இன்று உயிருடன் இல்லை இருக்கும் ஒரு சிலரும் தங்கள் குடும்ப வாழ்வில் மூழ்கிப் போய் பெரிதாக எந்தவித பதிவுகளையும் எழுதாததினால் புஸ்பராசா அப்படி அவர்கள் பகிர்ந்த கொண்ட கருத்தக்கள் சம்பவங்களை எல்லாம் சேர்த்து தன்னிடமிருந்த எழுத்துத் திறைமையினால் விடிந்து கோழிகூவுவதற்கு முதலே நாங்கள் எதிரியை தேடி ஆயுதங்களுடன் பறப்பட்டு விடுவோம் என்று தனது வாழ் நாளில் துப்பாக்கியால் ஒரு கோழியைக் கூட சுட்டிருக்காத இவர் தனது புத்தகத்தில் எங்களிற்கு பெரிய பூமாலையொன்றை சுத்துகிறார். " புஸ்பராஜாவின் விடுதலைப்போராட்டபுத்தகத்து

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
அதைவிட சிறையில் இருப்பவர்கள் தங்கள் நேரத்தை போக்க தங்கள் கவலைகள் பிரச்சனைகள் எல்லாவற்றையுமே மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வது வழமை. அப்படி சிறையில் வாடிய ஆரம்பகால ஆயுதமேந்திய இளைஞர்கள் பலர் இன்று உயிருடன் இல்லை இருக்கும் ஒரு சிலரும் தங்கள் குடும்ப வாழ்வில் மூழ்கிப் போய் பெரிதாக எந்தவித பதிவுகளையும் எழுதாததினால் புஸ்பராசா அப்படி அவர்கள் பகிர்ந்த கொண்ட கருத்தக்கள் சம்பவங்களை எல்லாம் சேர்த்து தன்னிடமிருந்த எழுத்துத் திறைமையினால் விடிந்து கோழிகூவுவதற்கு முதலே நாங்கள் எதிரியை தேடி ஆயுதங்களுடன் பறப்பட்டு விடுவோம் என்று தனது வாழ் நாளில் துப்பாக்கியால் ஒரு கோழியைக் கூட சுட்டிருக்காத இவர் தனது புத்தகத்தில் எங்களிற்கு பெரிய பூமாலையொன்றை சுத்துகிறார். " புஸ்பராஜாவின் விடுதலைப்போராட்டபுத்தகத்து

இனி தமிழன் இலங்கயில் வாழ முடியுமா? இதுதான் இன்றுள்ள கேள்வி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்மாணவர் பேரவை பற்றியும் சத்தியசீலன் பற்றியும்..பொன் சிவகுமாரனின் நினைவுநாளில் புலிகளின் குரல் வானொலிக்கு இளங்குமரன் வழங்கியிருந்த செவ்வியொன்று..

தியாகி பொன். சிவகுமாரனின் கனவுகளை நிறைவேற்றியவர் பிரபாகரன்: வெ.இளங்குமரன்

Wednesday, 06 June 2007

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இளைஞர்கள் ஈடுபட்ட எழுச்சிக்கு வித்திட்ட உரும்பிராய் பொன்.சிவகுமாரனின் கனவுகளை தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் நிறைவேற்றினார் என்று தமிழீழ கல்விக் கழகப் பொறுப்பாளர் வெ.இளங்குமரன் தெரிவித்துள்ளார்.

"புலிகளின் குரல்" வானொலியில் இது தொடர்பாக வெ. இளங்குமரன் பகிர்ந்து கொண்ட தகவல்களின் தொகுப்பு:

உரும்பிராயில் 1950 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 26 ஆம் நாள் பொன். சிவகுமாரன் பிறந்தார். யாழ். இந்துக் கல்லூரியில் உயர்கல்வி கற்றவர். அந்தக் காலகட்டத்தில்தான் தரப்படுத்துதல் அறிமுகப்படுத்தப்பட்டது.

இத்தரப்படுத்தல் திட்டத்துக்கு எதிராகத் தொடங்கப்பட்ட தமிழ் மாணவர் பேரவையில் தன்னையும் முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு சிவகுமாரன் செயற்பட்டார். 1970-களின் தொடக்கத்தில் சிறிமாவோ அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த சோமவீர சந்திரசிறீயின் வாகனத்துக்கு குண்டு வைத்தவர் சிவகுமாரன் என்று குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.

1971 ஆம் ஆண்டு தொடக்கத்தில் யாழ். நகர மேயராகவும் அப்போது சிறிமா கட்சியின் அமைப்பாளராகவும் இருந்த அல்பிரட் துரையப்பாவுக்கு குறிவைத்து 2 ஆம் குறுக்குத் தெருவில் உள்ள பிரீமியர் கபே என்ற உணவுச் சாலைக்கு அருகே அவரது வாகனத்தில் குண்டு பொருத்தினார். குண்டுவெடித்து சிதறி வாகனத்தின் மேல்பக்கம் எல்லாம் பெருந்தொலைவுக்கு சென்று விழுந்தது. ஆனால் துரையப்பா வருவதற்கு முன்னரே குண்டு வெடித்துச் சிதறியது. இந்தத் தாக்குதல்கள் எமது விடுதலைப் போராட்டத்தில் முதல் தாக்குதல்கள் என்று சொல்லலாம். அவர்களின் முயற்சிகள்- இலக்குகள் வெற்றி பெறாவிட்டாலும் விடா முயற்சியாக அவை இருந்தன. அதன் பின்னர் துரையப்பாவின் வாகனத்துக்கு குண்டு வைத்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு இரண்டு ஆண்டு காலம் சிறையிலே கழித்தார். சிறையிலிருந்து வெளியே வந்த பின்னர் மீண்டும் அவர் சில முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார். தனியே தாக்குதல் முயற்சி என்பதுமட்டும் அல்ல. குறிக்கோளை வைத்துக் கொண்டு பல்வேறு நிகழ்வுகளில் ஈடுபடுத்திக்கொண்டார். இளைஞர் பேரவை அப்போது நடத்திய உண்ணாவிரதம் போன்றவற்றில் பங்கேற்று மதியுரைகளை வழங்கிச் செல்வார்.

தமிழ் மொழி மீது அவர் வைத்திருந்த பற்று அளப்பரியது. அதை நான் நேரில் காணக்கூடியதாக இருந்தது. அப்பொழுதெல்லாம் எழுத்துப் பிழைகள் விட்டு எழுதுவது என்பதை அவர் பொறுத்துக் கொள்ளமாட்டார். அப்போது நடைபெற்ற தொடர் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றில் மூன்றாம் அல்லது 4 ஆம் நாளில் உண்ணாவிரத அறிவித்தல் பலகையில் தமிழ் ஒழுங்காக எழுதப்படவில்லை என்பதற்காக ஒழுங்கு செய்தவர்களைக் கடிந்து தானே திருத்தி சரியாக எழுதியும் வைத்தார்.

1973-1974 ஆம் ஆண்டு என நினைக்கிறோம் பரிஸ்டர் அம்பலவாணனர் என்பவர் இலங்கை- இந்தியா இணைப்பு என்ற குறிக்கோளை வைத்துக்கொண்டு செயற்பட்டுக் கொண்டிருந்தார். மயிலிட்டியில் இது தொடர்பாக அவர் நடத்திய கருத்தரங்கில் கலந்து கொண்ட சிவகுமாரன், இலங்கை- இந்திய இணைப்பு என்பது எவ்விதத்திலும் பொருத்தமற்றது என்று கடுமையாக வாதாடினார்.

மயிலிட்டியில் அப்போது அவர் தலைமறைவாக இருந்தார். அவர்தான் சிவகுமாரன் என்று யாருக்கும் தெரியாது. இருப்பினும் மக்களிடத்திலே ஒரு தவறான கருத்து பரப்ப்பட்டு விடக்கூடாது என்பதற்காக, ஒரு அடிமைத்தனத்தை நீக்க வல்லரசு மாதிரியான நாட்டிடம் அடிமையாக இருக்கக்கூடாது என்பதற்காக வாதிட்டார் சிவகுமாரன். சிவகுமாரனுக்கு இந்தியா பற்றிய அரசியல் ரீதியான தெளிவு, மொழி மீதான பற்று கொண்டவராகவும் தவறான கருத்து ஒன்றுக்கு எதிராக வாதிடக்கூடியவராகவும் அவர் இருந்தார்.

திருநெல்வேலியில் அமைச்சர்களுக்கு கறுப்புக்கொடி போராட்டம் ஒன்று நடத்தப்பட்ட போது அங்கே பங்கேற்றவர்கள் ஆங்கிலத்திலே உரையாடிக்கொண்டிருந்தார். சிவகுமாரன் அந்த இடத்தில் போய் சிங்களத்திலே உரையாடத் தொடங்கினார். தமிழுக்கான ஒரு போராட்டத்தில் பங்கேற்கிறவர்கள் ஆங்கிலத்திலே உரையாடுவதைவிட சிங்களத்திலே உரையாடலாம் என்று கூறி தவறுகளை திருத்தினார். தவறு என பட்டதை தட்டிக் கேட்கக் கூடியவராக அவர் இருந்தார்.

1973 இல் மாணவர் பேரவையின் பொறுப்பாளராக இருந்த சத்தியசீலன் போன்றவர்கள் கைதான காலகட்டம். அதற்கு முதலே சிவகுமாரன் கைதாகி, அனுராதபுரம் சிறையிலே அடைக்கப்பட்டு மல்லாகம் நீதிமன்றில் வழக்குகளும் நடைபெற்றன. சிவகுமாரன் தனித்து இயங்கவில்லைதான். அவருடன் இணைந்திருந்தோர் சரியாக ஒத்துழைப்பு அளிக்காத காரணத்தால் அவரது முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை.

யாழ். தமிழாராய்ச்சி மாநாட்டுக்குப் பின்னர், அப்படுகொலைக்கு உத்தரவிட்ட சந்திரசேகரவைக் கொல்ல வேண்டும் என்ற முடிவை எடுத்தவர் சிவகுமாரன். மாநாடு நடைபெற்ற 9 நாளும் தன்னை தொண்டராகப் பதிவு செய்து கொண்டு மாநாடு வெற்றிபெற வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்தவர். அந்த நிலையில் மாநாட்டுக்கு குழப்பம் விளைவித்த சந்திரசேகரவை அங்கேயே கொல்ல வேண்டும் என்று வெளிப்படையாகக் கூறியவர். அதனாலேயே சிவகுமாரன் தேடப்பட்டார். சந்திரசேகரவைக் கொல்வதற்காக சிவகுமாரன் மேற்கொண்ட முயற்சி சூழ்நிலைகளால் தோல்வியடைந்தது.

பொன். சிவகுமாரனும் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனும் தமிழீழ மாணவர் பேரவையில் உறுப்பினராகச் செயற்பட்டனர். இருவருமே சத்தியசீலன் தலைமையை ஏற்றிருந்தனர். தலைவரைவிட சிவகுமாரன் 4 வயது மூத்தவர். அந்தந்த பகுதிகளில் இயங்கிய மாணவர்களை வைத்து மாணவர் பேரவையை சத்தியசீலன் வழிநடத்திக் கொண்டிருந்தார். அந்த வகையில் சிவகுமாரன் ஒரு பகுதியிலும் தேசியத் தலைவர் ஒரு பகுதியிலுமாக இயங்கிக் கொண்டிருந்தனர்.

சாவகச்சேரியில் இருவரும் ஒருமுறை நேரில் சந்தித்துப் பேசினர். குறிபார்த்துச் சுடுவதில் தலைவர் தேர்ந்தவர் என்பது அப்போதே தெரிந்திருந்த விடயம். இருவரும் சந்தித்த போதே ஒரு தாக்குதல் முயற்சியை மேற்கொண்டனர். உரும்பிராய் நடராஜா என்பவர் விடுதலைக்குப் போராடிய இளைஞர்களைக் காட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தவர். அவர்மீது தாக்குதல் நடத்துவதற்கு சிவகுமாரன் தலைமை ஏற்றார். கோப்பாயில் காவல்துறையினர் சுற்றிவளைத்த போது அகப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக சயனைட் அருந்தி வீரச்சாவை தழுவினார். முதன் முதலில் சயனைட் அருந்தி தன்னுயிரை மாய்த்தவர். சிவகுமாரன் முயற்சித்த அல்பிரட் துரையப்பா, உரும்பிராய் நடராஜ் ஆகிய தாக்குதல்களை இயக்கம்தான் நிறைவேற்றியது. அதன்மூலம் சிவகுமாரன் எண்ணம் நிறைவேறியது.

சிவகுமாரனின் வீரச்சாவு இளைஞர்களிடத்திலே ஒரு எழுச்சியை ஏற்படுத்தியது. சுடுகாட்டுக்குப் பெண்கள் முதன் முதலில் வந்த நிகழ்வாக அது அமைந்தது.

எமது அமைப்பின் முதல் மாவீரரான லெப். சங்கரின் நினைவாக மாவீரர் நாளை நாம் நினைவுகூர்ந்த அந்த காலகட்டத்தில், இளைஞர்களிடத்திலே எழுச்சியை ஏற்படுத்திய சிவகுமாரனை தொடர்ந்து நினைவுகூரும் வகையிலே மாணவர் எழுச்சி நாள் கடைபிடிக்கப்பட்டது. சுற்றுச் சூழல் நாளும் ஜுன் 5 ஆம் நாள் வருவதால் ஜுன் 6 ஆம் நாள் சிவகுமாரன் நினைவாக "தமிழீழ மாணவர் எழுச்சி நாளாக" கடைபிடிக்கப்பட்டு வருகிறது என்றார் வெ. இளங்குமரன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.