Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வளமான ஆசியாவின் எதிர்காலத்தை நோக்கி சீனாவின் அடுத்த பயணம் --வேல்ஸிலிருந்து அருஷ்

Featured Replies

இலங்கை தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு இலங்கை அரசு நியாயமான அரசியல் தீர்வு ஒன்றை முன்வைக்காது விட்டால் இலங்கையில் மீண்டும் ஆயுத

மோதல்கள் உருவாகுவதற்கு சாத்தியங்கள் உள்ளதாக இலங்கைக்கான முன்னாள் அமெரிக்க தூதுவரும், அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்க ளுக்கான துணை அமைச்சருமான ரொபட் ஓ பிளெக்

தெரிவித்திருந்தார். விடுதலைப்புலிகள் முற்றாக முறியடிக்கப் பட்டுள்ளனர் என நம்பப்படுகின்ற போதும் இலங்கை அரசு தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பான எந்தவிதமான நடவடிக்øககளையும் மேற்கொள்ளாதது மேற்குலகத்தை பெரும் விசனமடைய வைத்துள்ளது.

இலங்கையில் மோதல்கள் நிறைவுபெற்ற பின்னர் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சி

னைக்கான தீர்வு என அரசு ஆலோசனை செய்த விடயங்களும் தூக்கி எறியப்பட்டுள்ளன. 280,000 தமிழ் மக்கள் உதவி நிறுவனங்களின் தொடர்புகள் அற்ற முறையில் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். இது மீண்டும் இலங்கையில் போரை ஆரம்பிப்பதற்கே வழிவகுத்துள்ளதாக பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் "த பினான்ஸியல் ரைம்ஸ்' என்ற நாளேடும் தெரிவித்துள்ளது.

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு வேண்டிய முற்போக்கு சிந்தனை கொண்ட மக்கள் தென்னிலங்கையில் இல்லை எனவும், காலம் காலமாக ஆட்சிபுரிந்த இலங்கை அரசாங்கங்கள் அவர்களை ஒரு இனவாத சிந்தனைக்குள் தள்ளிவிட்டுள்ளதாகவும், இந்த புறச்சூழல்களின் மத்தியில் மத்திய அரசிடம் அதிகாரங்களை ஒப்படைத்துவிட்டு அதிகாரப்பரவலாக்கம் என்ற அதிகாரமற்ற ஆட்சியை தமிழ் மக்கள் அமைக்க முடியாது எனவும் விடுதலைப் புலிகள் தொடர்ந்து கூறி வந்ததன் அர்த்தங்கள் தற்போது மேற்குலகத்திற்கு புரிந்திருக்கும்.

அவற்றின் வெளிப்பாடுகளாகத்தான் அண்மையில் மேற்குலகத்தின் சில நகர்வுகள் அமைந்துள்ளன. இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணைகள் வேண்டும் என பிரித்தானிய நாடாளுமன்றத்திலும் கூறப்பட்டுள்ளது. இந்த அழுத்தங்கள் எல்லாவற்றையும் மீறி தனது அதிகாரத்தை நிலைநாட்டுவதற்கு இலங்கை அரசு இந்தியாவின் ஆதரவைத் தான் அதிகம் எதிர்பார்த்துள்ளது.

வடக்கு, கிழக்கில் கால்பதிப்பதன் மூலம் தென்னிலங்கையில் கால்பதித்துள்ள சீனாவின் ஆதிக்கத்திற்கு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தலாம் என இந்தியாவும் நம்புகின்றது. ஆனால், இந்தியாவிற்குள் ஊடுருவி இந்தியாவை 20 தொடக்கம் 30 நாடுகளாக உடைப்பது எப்படி என்ற திட்டங்களை சீனாவின் கொள்கை வகுப்பாளர்கள் வகுத்து வருகின்றனர்.

ஐரோப்பிய நாடுகளைப் போல இந்தியாவை சிறு சிறு நாடுகளாக உடைப்பதன் மூலம் வளமான ஆசிய பிராந்தியத்தை உருவாக்க முடியும் என சீனா நம்புகின்றது. இலங்கையில் அண்மையில் நடைபெற்ற மிகப்பெரும் மோதல்களைத்தொடர்ந்து மேற்குலகமும் அந்த நிலைப்பாட்டைத் தான் எடுத்துள்ளதாக தெரிகின்றது.

இந்த நிலைப்பாட்டில் மேற்குலகத்தின் பூகோள அரசியல் சமன்பாடுகளும் பொதிந்துள்ளன. அதாவது சோவியத்தின் வீழ்ச்சி தொடக்கம், யூகோஸ்லாவாக்கியாவின் உடைவு வரையிலும் அவர்கள் பயன்படுத்திக்கொண்ட உத்திகளைத்தான் ஆசிய பிராந்தியத்திலும் பயன்படுத்த முற்பட்டு வருகின்றனர்.

அதாவது முதலில் இந்தியாவின் உடைவை மறைமுகமாக ஆதரிப்பதன் மூலம் தமக்கு சார்பான சில நாடுகளையாவது உருவாக்கிவிடுவது, அதன் பின் அங்கு கால்பதிப்பதன் மூலம் சீனாவை அச்சுறுத்துவது. அதனைத் தான் மேற்குலகம் மறைமுகமாக சாதிக்க முற்படுகி ன்றது.

இந்தியாவின் ஊடாக இலங்கையை தமது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவருவதன் மூலம் தென்ஆசியாவில் ஒரு வலுவான கூட்டணியை உருவாக்க முடியும் என அமெரிக்கா முன்னர் கருதியது. ஆனால், இலங்கைத் தமிழ் மக்களின் விவகாரத்தை இந்தியா கையாண்ட விதம் அந்த நம்பிக்கையை சிதறடித்துள்ளது.

இந்த நிலையில் தான் அமெரிக்கா தற்போது இலங்கைத் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக புலம்பெயர் நாடுகளில் உள்ள அமைப்புகளு டன் நேரடியாக தொடர்புகளை ஏற்படுத்தி பேணி வருகின்றது. இலங்கைத் தமிழ் மக்

களை ஆதரிப்பதன் மூலம் தென் ஆசியாவில் இழந்து போன தமது ஆதிக்கத்தை மீண்டும் தக்க வைக்க முடியும் என அமெரிக்கா நம் புகின்றது.

சீனாவைப் பொறுத்தவரையில், அது தனது வளர்ச்சிக்கு முன்னர் அமெரிக்கா பின்பற்றிய அதே நடைமுறைகளைத் தான் சத்தமின்றி பின்பற்றி வருகின்றது. அதாவது முதலில் தமது பிராந்தியத்தில் உள்ள தனக்கு ஆதர வான நாடுகளில் அமைதியை தோற்றுவிப் பது. அதாவது அமைதியான நாடுகளின் கூட் டணியை அமைப்பது. அதன் பின்னர் தனக்கு சவாலாக மாறும் நாடுகள் என கருதும் நாடுகளை பல நாடுகளாக துண்டாடி விடுவது.

இலங்கையில் நடைபெற்ற மோதல்களை யுத்தத்தின் மூலம் முடிவுக்கு கொண்டுவர உதவிய சீனாவின் தத்துவம் தற்போது அதன் அடுத்த கட்டத்திற்கு நகரப்போகின்றது. இந்தி யாவை சிறிய நாடுகளாக உடைப்பது என்ற சீனாவின் கோட்பாடு எவ்வளவு தூரம் சாத்தி யமானது என்ற கேள்விகளும் உண்டு.

அதாவது, சீனா நினைப்பது போல அது சுலபமானதா? இந்தியாவின் அரசியல் கலாசார உட்கட்டுமானங்களை நோக்கும் போது அது சுலபமானது என்ற முடிவுக்கே பல ஆய்வாளர்கள் வருகின்றனர். ஏனெனில் அங்கு காஷ்மீரிலும், நாகலாந்திலும் பிரிவினைக்கான உந்துதல்கள் உள்ளன. ஏற்கெனவே பிரிவினைக்கான போரை ஆரம்பித்து பின்னர் அடங்கிப்போன சீக்கிய மக்களின் அடிமனதிலும் விடுதலை வேட்கை உண்டு.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் அங்கு ஆட்சியில் இருப்பவர்கள் தமது அதிகார சுகத்திற்காக மத்திய அரசை நம்பி வாழ்ந்தாலும், தமிழ் மக்களிடம் ஒன்றுபட்ட இந்தியா என்ற நம்பிக்கையின் வலு குறைந்துவிட்டது. அவர்கள் தம்மை ஒரு இரண்டாம் தர பிரஜைகளாகவே எண்ணத் தலைப்பட்டுள்ளதாக தமிழகத்தின் மூத்த ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கைத் தமிழ் மக்களுக்கு எதிராக இந்தியா மேற்கொண்ட அண்மைக் கால நடவடிக்கைகள் உலகெங்கும் பரந்துவாழும் பல இலட்சம் இலங்கைத் தமிழ் மக்களினதும், உலகில் பரந்து வாழும் பல கோடி தமிழ் மக்களினதும் ஒட்டுமொத்த வெறுப்பை இந்தியாவை நோக்கி திருப்பியுள்ளது. இந்தியாவை நோக்கி ஒட்டுöமாத்த தமிழ் இனத்தின் கோபமும் திரும்பியுள்ள இந்த சமயத்தில் இந்தியாவின் வீழ்ச்சியை விøரவுபடுத்த முடியும் என சீனாவும் சரி மேற்குலகமும் சரி நம்புகின்றன போலும்.

சீனாவின் இந்த கருத்து எவ்வளவு தூரம் சரியானது என்பது தொடர்பாக புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் ஊடகவியலாளர்கள் பலரின் கருத்துகள் கடந்த வாரம் திரட்டப்பட்டன. இந்த கருத்துக்கணிப்பில் வெளிவந்த முடிவுகள் ஆச்சரியமானவை. அதாவது இந்தியாவை பல நாடுகளாக உருவாக்குவதன் மூலம் வளமான ஆசியாவை உருவாக்க முடியும் என சீனா கருதுவதற்கு அப்பால் இலங்கைத் தமிழ் மக்களுக்கும் ஒரு வளமான எதிர்காலத்தை அது உருவாக்கும் என்பதே பெரும்பõலானவர்களின் கருத்தாக அமைந்திருந்தது.

அதாவது இந்தியாவைச் சுற்றி அதற்கு பாதகமான ஒரு புறச்சூழலை சீனா உருவாக்கி விட்டது. மேலும் தெற்காசிய பிராந்தியத்தில் அமைந்துள்ள சிறிய பல ஆசிய நாடுகளுக்கும் "வளமான ஆசியா' என்ற சீனாவின் சொற்பதம் ஊக்க மருந்தாகவே தோன்றும்.

இதனிடையே விடுதலைப்புலிகள் முறியடிக்கப்பட்டு விட்டனர் என்ற இலங்கை அரசாங்கத்தின் அறிவித்தலுக்குப் பின்னர் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா பகுதிகளில் நடை பெற்ற உள்ளூராட்சி மாநகரசபை தேர்தல் முடிவுகளும் இந்திய இலங்கை அரசுகளின் வடபகுதி மீதான அரசியல் ஆதிக்கத்திற்கு பலத்த பின்னடைவாகவே கருதப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் 18 சதவீதமான வாக்கு பதிவுகள் நடைபெற்றது. அந்த மக்கள் அரசாங்கத்தின் அரசியல் நடைமுறைகளில் எவ்வளவு தூரம் நம்பிக்கை இழந்துள்ளனர் என்பதை தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளது.

2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலை தமிழ் மக்கள் புறக்கணித்த போது அது விடுதலைப்புலிகளின் அழுத்தங்களால் மேற்கொள்ளப்பட்டது என்ற ஒரு கருத்து ஏற்படுத்தப்பட்டிருந்தது. அதனை அனைத்துலகமும் நம்பியிருந்தது. ஆனால் தற்போது விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ள நிலையில் தமிழ் மக்கள் தேர்தலில் அக்கறை காண்பிக்கவில்லை. தேர்தலில் பங்குபற்றிய சிறிய தொகை மக்களிலும் பெரும்பாலானவர்கள் தமிழரசுக் கட்சியை ஆதரித்துள்ளனர்.

மேலும் இந்த தேர்தல்களில் பல குளறுபடிகள் நிகழ்ந்துள்ளதாக எதிர்க்கட்சிகளும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் தெரிவித்து வருகின்றன. அங்கு ஒரு இயல்பான தேர்தல் நடைபெறுவதை உறுதிப்படுத்தக்கூடிய அமைப்புகளோ, அனைத்துலக ஊடகங்களோ இருக்கவில்லை. அவ்வாறான ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டிருந்தால் தற்போது எட்டப்பட்ட 18 சத வீத வாக்குகளிலும் பல மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும்.

இலங்கைத்தமிழ் மக்களின் விடுதலைக்கான தாகம் தற்போதும் உள்ளது என பிரிட்டனின் "த ரைம்ஸ்' வாரஏடு தெரிவித்திருந்தது. அதனைப் போலவே மிகப்பெரும் இராணுவ அழுத்தத்தின் மத்தியில் வாழ்ந்தாலும் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் தமது அரசியல் உரிமைகளைப் பெறவேண்டும் என்ற கோட்பாட்டை தக்கவைத்துள்ளனர்.

களத்திற்கு அப்பால் இந்த கோட்பாடுகள் புலத்தில்தான் அதிகம் தீவிரம் பெற்று வருகின்றது. அதனை முறியடிக்க இலங்கை, இந்திய அரசுகள் தீவிரமாக முயன்று வந்தாலும் வெளிநாடுகளின் சட்டவிதிகள் அவர்களின் நடவடிக்கையை ஒரு எல்லைக்கு அப்பால் அனுமதிக்கப்போவதில்லை.

மேலும் வலுவான அரசியல் கட்டமைப்புகளுடன் அனைத்துலகத்துடன் இராஜதந்திர உறவுகளை வளர்த்துக்கொள்ளும் போது நாம் ஒரு பலமான சக்தியாக எம்மை இலங்கைக்கு வெளியில் கட்டியமைத்துக்கொள்ள முடியும். அதனூடாக இலங்கைத் தமிழ் மக்களின் அரசி யல் உரிமைக்கான அடுத்த கட்ட நகர்வு முனைப்பாக்கப்படும். அதனை அடைவது எவ்வாறு? அரசியல் வழிமுறையிலா அல்லது ஆயுதவழியிலா என்பதை மேற்குலகம் புரிந்து கொள்ளும்.

http://www.paranthan.com/index.php?option=...9&Itemid=53

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் குடாநாடு புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தகாலப்பகுதியில் நடைபெற்ற ஒரு கருத்தரங்க நிகழ்வில் பொருளியல் பேராசிரியர் திரு வரதராஜன், பொருளியல் ஆசிரியர் திரு குமாரவேல், யோகரத்தினம் யோகி மற்றும் பல கல்விமான்கள் கலந்துகொண்டு தமது கருத்துக்களை முன்வைத்திருந்தார்கள் அக்கருத்தரங்கின் முடிவில் தீர்மானகாக் ஒரு பொழிப்புரை வழங்கப்பட்டது அதுவெதுவெனில் "இந்தியா எனும் உபகண்டம் இன அடிப்படையிலான சிறு சிறு நாடுகளாகப் பிளவுபடுமாகவிருந்தாலே தமிழீழம் சாத்தியமானதாகும், இவை நடந்தேறுவதற்கு பலவருடங்கள் தேவைப்படலாம் அனால் இந்திய உபகண்டம் நிச்சயமாகப் பிளவுபட்டேயாகும் என்பதை ஆணித்தரமாக அவர்கள் கூறினார்கள்.

அதற்கான ஆரம்பம் இப்போதல்ல எப்போதோ தொடங்கி விட்டது.

இன்னுமொரு செய்தி, எமது தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் இந்தியாவில் இருந்த காலப் பகுதியில், சோவியத் யூனியன் துண்டாடப்படவில்லை. ஆனால் அங்கு பல களமாற்றங்கள் ஆரம்பமாகத் தொடங்கியிருந்தது இதனைப்பற்றி தேசியத்தலவர் தனது கருத்தில் "இதே நிலை சோவியத் ஒன்றியத்தில் தொடருமாகவிருந்தால், அந்நாடு துண்டு துண்டாக விரவிலேயே பிளவுபட்டுப் போகும் எனக் கூறியிருந்தார். அப்போது திரி அன்ரன் பாலசிங்கம் அண்ணர் அவர்களும் உடனிருந்து அவரது கருத்தினை அவதானித்திருந்தார். சிறிதிகாலத்தில் அந்நாடு சிதறுண்டுபோனது. பின்வரும் காலங்களில் யாழ்ப்பாணத்தில் விடுதலைப்புலிப் போராளிகட்கு பாலா அண்ணர் அரசியற் பாடமெடுக்கும்போது தலைவர் கூறிய கருத்து சாத்தியப்பட்டதியும் அப்போதே தலைவரிற்கு உலக அரசியலின் ஒழுங்குமுறையை அவதனிக்கக்கூடிய அறிவாற்றலிருந்ததையும் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே நண்பர்களே எமது தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரவாகரன் அவர்களது சீரிய சிந்தனையின்மூலம் தமிழீழ விடுதலைப் போராட்டமானது ஏற்கனவே தலைவரால் தீர்மானித்த பாதையிலேயே பயணம் செய்கிது தனது இலக்கினையடையுமென்பதை காலம் உங்களுக்கு உணர்த்தும்.

  • தொடங்கியவர்

எமது தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரவாகரன் அவர்களது சீரிய சிந்தனையின்மூலம் தமிழீழ விடுதலைப் போராட்டமானது ஏற்கனவே தலைவரால் தீர்மானித்த பாதையிலேயே பயணம் செய்கிது தனது இலக்கினையடையுமென்பதை காலம் உங்களுக்கு உணர்த்தும்.

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவிற்கு அடுத்ததாக பெரிய சந்தை வாய்ப்புள்ள நாடாக இந்தியா விளங்குகிறது, ஆரம்பத்தில் சீனாவில் கூட நுளைய முடியாமல் இருந்த பல் பல் தேசிய கம்பனிகள் ஆக்கிரமித்துவிட்டன இந்தியாவை சிறு துண்டுகளாக்கினால் மேற்கின் சந்தைவாய்புகள் கேள்விக்குறியாகிவிடும் ஆகவே அதற்கான வாய்புகள் குறைவாகவே உள்ளது.

ஆனால் இந்திரா குடும்பம் ஆட்சியில் தொடர்ந்தால் இந்தியா பிளவுபட வாய்ப்புண்டு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.