Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீண்டும் - திரைப்படம்

Featured Replies

நோர்வேயில் தயாரிக்கப்பட்ட முழுநீளத் திரைப்படம் "மீண்டும்"

மிகவிரைவில் திரையரங்குகளுக்கு வருகிறது.

திரைமுன்னோட்டம் பார்க்க இங்கே அழுத்தவும்.

http://www.youtube.com/sthurupan

Edited by Tamizhvaanam

  • கருத்துக்கள உறவுகள்

திரைமுன்னேற்றம் பார்க்க நல்லாத்தான் இருக்கு. படம் எப்போ வரும்?

நோர்வேயில் தயாரிக்கப்பட்ட முழுநீளத் திரைப்படம் "மீண்டும்"

மிகவிரைவில் திரையரங்குகளுக்கு வருகிறது.

திரைமுன்னோட்டம் பார்க்க இங்கே அழுத்தவும்.

">

  • தொடங்கியவர்

கறுப்பி மற்றும் மாப்பிள்ளை இருவருக்கும் எனது நன்றிகள். இத்திரைப்படம் எதிர்வரும் 12.09.09 அன்று முதல் தடவையாக நோர்வேயில் திரையிடப்பட இருக்கின்றது.

இது தொடர்பான விபரங்கள் மிக விரைவில் வெளிவரும். கலைஞன் நீங்கள் சொல்கின்ற கருத்தோடு நான் உடன்படுகின்றேன்.

ஆனால் எங்கடை ஈழச்சினிமா என்ற தனிப்பெரும் அடையாளத்துடன் ஒரு தமிழ்ப்படமும் வெளிவரவில்லை என்பதும் என் கருத்து. போர் நடைபெற்ற காலங்களில் வெளிவந்த பல படங்களை எங்களுடைய சினிமா என்ற ஒரு வட்டத்திறகுள் கொண்டுவர முடியும். ஆனால் புலம்பெயர்ந்த மண்ணில் இருந்து வெளிவருகின்ற எம்மவர் படைப்புகளை எந்த வகைக்குள் சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. தமிழக சினிமா எங்களை ஆக்கிரமித்துள்ள நிலையில் தமிழிழத்துச் சினிமா என்ற ஒன்றை உருவாக்குவதற்கு எம்மவர் மனசுத்தியோடு பெரிய முயற்சிகளை எடுக்கவேண்டும். அப்படியான ஒரு முயற்சியாக இது இருக்கும் என்று இந்தப் படத்தைத் தயாரித்தவர்கள் சொல்கிறார்கள்.

இந்தப் படத்தில் ஒரு பாடலை மட்டும் எழுதியிருக்கின்றேன். படம் பார்த்த பின்பு இயக்குனர் , தயாரிப்பாளரோடு உரையாடுங்கள்.

நன்றி. :lol:

Edited by Tamizhvaanam

  • 2 weeks later...

IMG4930-1251899673.jpg

தகவல்: வசீகரன்

Poster120907_445%20.jpg

உலகெங்கும் உள்ள புலம்பெயர் வாழ் ஈழத் தமிழர்களின் சினிமா உலகைப் பொறுத்தவரை இப்போது பல திரைப்பட தயாரிப்பு முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. நோர்வேயில் ஒஸ்லோவிலும் நோர்வேத் தமிழ்த் திரைப்பட நிறுவனம் தனது பிரமாண்டமான தயாரிப்பாக "மீண்டும்" எனும் புதிய திரைப்படத்தை தயாரிக்கின்றது. அந்த வகையில் கடந்த 08.09.2007 பூஜையுடன் இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் யாவும் ஆரம்பமானது.

வன்முறை வாழ்க்கையை விரும்பும் இளைஞன் ஓருவன் தன் வாழ்க்கைப் பாதையில் காதல் வயப்படுகின்றான். வன்முறை வாழ்வை விட்டு நல்வனாக வாழ முயற்சிக்கின்றான். ஆனால் அவனால் நல்வனாக வாழ முடிகின்றதா? இல்லையா என்பதை பல புதிய திருப்பங்களுடன் சொல்வதே கதையாகும். புலம்பெயர் வாழ் தமிழ் மக்களின் வாழ்வனுபவங்களைப் பதிவுசெய்யும் ஒரு வித்தியாசமான கதைக்களம் கொண்ட திரைப்பட முயற்சி இதுவாகும்.

இந்த முயற்சிக்கு தமிழகத்தில் இருந்து இசையமைப்பாளர் வி.எஸ்.உதயாவும் இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக நடிகை சுவேதா அவர்களும் நோர்வே நாட்டிற்கு வருகை தந்திருக்கின்றனர். இத் திரைப்படத்தில் நடிப்பதற்காக அறுவதுக்கும் மேற்பட்ட எம் தமிழ் உறவுகள் இணைந்திருக்கின்றார்கள். ஐPவன், தனா எனும் இரு இளைஞர்கள் துடிப்புடன் நடிக்க அவர்களின் நாடித்துடிப்பறிந்து நடிக்கின்றார் தமிழகத்தில் இருந்து வருகை தந்திருக்கும் நடிகை சுவேதா அவர்கள்.

நோர்வே தமிழ்த் திரைப்பட(Norway Tamil Picture) நிறுவனம் சார்பாக எஸ்.துருபன் அவர்கள் தயாரிக்கும் இத்திரைப்படத்தில் திரைப்படத் தயாரிப்புகளில் அனுபவமிக்க பல தொழிநுட்பக் கலைஞர்கள் இணைந்திருக்கின்றார்கள். இவர்களுக்குப் பக்கபலமாகவும், திரைப்படத் தயாரிப்பு மேலாளாராகவும்; வி.எஸ்.உதயா (இசையமைப்பாளர்) அவர்கள் பணியாற்றுகின்றார்.

ஏற்கனவே தொப்புள்கொடி, நிஐங்கள் போன்ற திரைப்படங்களை இயக்கி பல அனுபவங்களைப் பெற்ற இயக்குனர் ஸ்ரிபன் அவர்கள் இத்திரைப்படத்தை கதை திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகின்றார். இவருடைய மேடை நாடகங்கள் ஓஸ்லோ வாழ் தமிழ் மக்களிடையே மிகவும் பிரபல்யமானது. இவரோடு உதவி இயக்குனராகப் பணியாற்றுகின்றார் நவசுதன் அவர்கள். ஆகவே இந்த மீண்டும் எனும் முழுநீளத் திரைப்படத்தை ஒரு தரமான படைப்பாக்குவதற்கான சகல முயற்சிகளும் மேற்கொள்ளப் பட்டுக்கொண்டிருக்கிறது.

தமிழ் திரைப்படத் தயாரிப்பு ஆரோக்கியமான பாதையில் செல்லவேண்டும் என்ற ஆதங்கத்துடன் ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, தயாரிப்பு ஆகிய முக்கிய பொறுப்புகளை ஏற்றிருக்கின்றார் துருபன் அவர்கள்.

காதல் கடிதம், காதல் மொழி போன்ற இறுவட்டுக்களில் பாடல்களை எழுதியிருக்கும் வசீகரன், இயக்குனர் ஸ்ரீபனும் பாடல்களை எழுத திருவின் இசையில் பாடல் பதிவு பணிகள் திறம்பட நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. ஓளியமைப்பை சாங் அவர்கள் கவனிக்கின்றார். ஒப்பனையாளராக சசி கிரிதரனும், சண்டைப்பயிற்சியாளராக சிவா அவர்களும் பணியாற்றுகின்றார். வரைகலை விக்கி,சனு. நிழற்படங்கள் மனோ. மக்கள் தொடர்பு செழியன். வசீகரன் ஊடகத் தொடர்புகளை மேற்கொள்ளுகின்றார்.

தகவல் NT picture: http://www.ntpicture.com/index.php?option=...view&id=139

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

IMG4930-1251899673.jpg

"மீண்டும்"திரைப்பட விமர்சனம் 1

12.09.09 அன்று திரையிடப்பட்ட மீணடும்

திரைப்படம் பற்றிய விமர்சனம்

எம்மவர் படைப்பக்கு ஆதரவு தரவேண்டும் என்ற நோக்கத்தோடும்

பிரமாண்டமான தயாரிப்பாம் சரி என்னதான் இருக்கும் பார்த்துவிடலாம்

என்ற எதிர்பார்ப்போடும் படத்துக்குப்போனேன் ஆனால் எதிர்பார்ப்பையும்

கடந்து எம்மவர்களாலும் இப்படித் தரமான படைப்புகளை தர முடியும்

என்ற நம்பிக்கையையும் தந்திருக்கிறார்கள்

படம் ஆரம்பித்தவுடனேயே இம்முறை எல்வாவிதமான ரசிகர்களையும்

கவரவேண்டும் என்ற நோக்கத்தோடு அதிரடியாக களமிறங்கியிருக்கிறது

nt picture என்பது முதல் காட்சியிலேயே புரிந்துவிடுகிறது. அதனால்

எனது புத்திஐpவித் தனத்தையும் தூக்கி வைத்துவிட்டு சராசரி ரசிகனாய்

படத்துக்குள் நுழைகிறேன் புத்திஐPவித் தனமென்பது சில அறிவுஐPவிகள்

உக்காந்து பேசிவிட்டு பின் அந்த விடயத்தையே மறந்து விடும் ஒரு

சராசரி நிகழ்வுதான் இது ஒரு கலையை வளர்க்க எந்த வகையிலும்

உதவி செய்யாது என்பது எனது தாழ்மையான கருத்து.

இரண்டு வரிகளில் சொல்லிவிடக்கூடிய ஒரு கதையை இரண்டுமணி நேரம்

அசைவில்லாமல் உட்கார்ந்து பார்த்துவிட வைத்த திரைக்கதை அமைப்பை

என்னவென்று சொல்ல இந்திய சினிமாவின் ஐhம்பவான்களால் கூட முடியாத

ஒரு விடயத்தை நோர்வேயிலிருந்துகொண்டு இவ்வளவு சுலபமாக செய்து

காட்டியிருக்கிறார் இயக்குனர் ஸ்ரீபன்.

கதையிலோ திரைக்கதையிலோ நடிப்பு இயக்கம் கமரா இசை எதிலும் குறை தெரியவல்லை

ஆனாலும் படம் நெடுகிலும் ஒரு வறுமை தெரிகிறது இது மிகக் குறைவான

பட்ஐட்டில் தயாரிக்கப்பட்ட படம் என்பதை நாயகியின் உடையமைப்பு காட்சியமைப்பு

போன்ற விடயங்கள் சொல்லிக் கொண்டே இருக்கிறது நோர்வேயில் இவ்வளவு தமிழ்

ஆட்கள் இருந்தும் ஏன் யாரும் ஒத்துழைக்கவில்லை என்று தெரியவில்லை

இந்திய சினிமாவில் ஊறிப்போன எம்மவர்களை அவர்களின் பாதையிலேயே

போய் கவரவேண்டும் என்ற நோக்கத்தோடு இந்திய சினிமாவைபோலவே

ஓரு சினிமாவை தயாரித்து உரையாடல்களிலெல்லாம் புதுமையான முறைகளைப்

பயன்படுத்தி எம்மவர் உரையாடல் நாடகம்மாதிரி இருக்கும் என்ற கணிப்பை

பொய்யாக்கி புதுமை செய்திருக்கிறார்கள் இது நிச்சயமாய் எல்லாருக்கும் பிடிக்கும்

சண்டை காட்சிகள் காட்சி அமைத்தவிதம் எல்லாவற்றிலும் ஒரு வேகம் தெரிகிறது.

காசை அள்ளி வீசியிருந்தால் இந்த படத்தை எங்கோ கொண்டுபோயிருப்பார்கனெ;றே

தோன்றுகிறது.

ஓஸ்லோவில் இவ்வளவு காலம் இருக்கிறேன் இவ்வளவு அழகான இடங்களை

துருபனின் கமரா மட்டும் எப்படிக் கண்டுபிடித்தது பல காட்சிகளில் துருபனின் கமரா

பேசுகிறது வசதிகள் குறைவாக இருந்தும்கூட சண்டைக்காட்சிகளில் கமரா விளையாடி

இருக்கிறது திருவின் இசையில் வேகமெடுக்கிறது படம். எந்த இடத்திலும் நெருடலில்லாத

இசை பாடல்கள் வெளியில் வந்தபிறகும் காதுக்குள் ஒலிக்கிறது இவ்வளவு திறமையான

கலைஞர்கள் நோர்வேயிலிருந்து வீணடிக்கப்படுகிறார்களோ என்று கவலை வருகிறது.

நடிகர்களின் தெரிவு சரிதான் என்று நிருபிக்கிறார்கள் நடிப்பில குறிப்பாக சந்துருவும்

கடைசியாக வரும் சிட்னி என்ற பாத்திரமும் அசத்தல்.

குறைகளும் நிறைய இருக்கத்தான் செய்கிறது வியாபார நோக்கில் செலவு செய்து

இந்தியாவில் தயாரிக்கப்படும் படங்களிலேயே நிறைவை விட குறைகளே அதிகமெனும்போது

வெறும் பொழுதுபோக்காகவும் எம்மவர்களும் திரைப்படங்களை தயாரக்கவேண்டும் என்று

முன்மாதிரியாக உழைக்கும் இவர்களின் உழைப்பில்; குறைகாணவேண்டாமே

எம்மவர்களே இது எம்மவர் படைப்புத்தானே இதில் என்ன இருக்கப்போகிறது என்று

ஆலட்சியமாய் இருந்துவிட்டீர்கள் ஆனால் இதுவும் ஒரு இந்தியப் படைப்புப்போலத்தான்

சுpலவேளை அதையும் தாண்டிய தரம் என்று உறுதியாகச் சொல்ல முடியும்

அதற்காகவாவது ஒரு முறை போய்ப் பாருங்கள்

-ரசிகன்

மீண்டும்"திரைப்பட விமர்சனம் 2

”மீண்டும்” ஒரு பார்வை

- கவிதா

இந்தியத் திரைப்படக்குவியலுக்குள் புதைந்து கிடக்கும் எம் உறவுகள் தமது சொந்த ஈழப் படைப்புகளுக்கு வரவேற்ப்புக் கொடுப்பதில்லை என்பதை நாம் அறிந்திருந்தாலும், அங்கொன்றும் இங்கொன்றுமாக ஈழத் தமிழ்த் திரைப்பட படைப்பாளர்களும் தமது படைப்புகளை வெளிக்கொணர முயற்சிப்பதை நாம் அவதானிக்கக்கூடியதாகவே இருக்கிறது. அந்த வரிசையில் நோர்வே நாட்டில் பல குறும்படங்களைத் தயாரித்து வழங்கிய nt picture ன் ”தொப்புள்க்கொடி” யைத் தொடர்ந்து இரண்டாவது முழுநீளத்திரைப்படம் ”மீண்டும்” 12.09.09 அன்று மாலை ஒஸ்லோவில் இரண்டு தடவைகள் திரையிடப்பட்டது.

காதலுடன் கூடிய அடிதடிக் கும்பலின் சில பக்கங்களே திரையின் கதை. புலம் பெயர்ந்து பல குற்றச்செயல்களைச் சாதாரண வாழ்க்கையாக்கிக் கொண்ட ஒரு ரவுடியின் காதல் கதை. ஆரம்பத்தில் இருந்து விறுவிறுப்பாக கதை நகர்ந்த விதத்திற்கு இயக்குனரை பாராட்டியாக வேண்டும். படப்பிடிப்பும் தொகுப்பும் கண் உறுத்தவில்லை. உறுத்திய விசயம் இந்தியத் நகைச்சுவை நடிகரின் ”என்ன கொடுமை சார்” ”ரூம் போட்டு யோசிப்பாங்களோ” போன்ற வசனங்களை நாம் மீள்பிரசுரிப்பது இரசிப்பை எற்படுத்தவில்லை. திணிக்கப்படவேண்டும் என்று சேர்க்கப்பட்ட இந்நகைச்சுவைபோல் கதாநாயகியின் இந்தியத்திரையுலகப் பேச்சுத்தமிழ் முயற்சி வீண் என்றே தோன்றியது. கதாநாயகி நிலாவின் அம்மா அப்பாவின் நடிப்பும் பேச்சும் யதார்த்தம். இலங்கைத்தமிழை நாடகத்தன்மையின்றி பேசி மனதில் இடம் பிடித்தவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அடிதடிக் காட்சிகள் ஆரம்பத்தில் அதிக அளவில் காணப்பட்டாலும் பல சந்தர்பங்களில் மிக நேர்த்தியான நடிப்புத் தெரிகிறது. தொழில்நுட்பத்தில் பல அடிதடிக்காட்சிகளில் கூடுதலான ஒளிப்பதிவுக்கருவி பாவித்திருக்கலாமோ என்றே தோன்றியது. படத்தொகுப்பில் முறிவுகள் அவதானிக்கக்கூடியதாக இருந்தாலும் இரண்டு மணிநேரங்களுக்கும் மேலாக இரசிகர்களை கட்டிவைத்த படத்தொகுப்பாளிக்கும் நெறியாழ்கைக்கும் இசைக்கும் சபாஷ் போடலாம். என்னால் இசிரக்க முடியாதிருந்த ”பஞ்ச்” வசனத்திற்கும் சில நடன அசைவுகளுக்கும் அப்பால் ”த்றொம்சோவின் ஈரக் காற்று... அது உன்னைக் கண்டு அகதியாச்சு” என்ற பாடலின் பல்லவியும் இசையும் படம் முடிந்தபின்னும் மனதில் ஈரமாகவே இருக்கிறது.

திரைவசனங்களில் செருகப்பட்டிருந்த ஆங்கிலப்பிரயோகம் அதிக அளவில் சேர்க்கப்பட்டது மட்டுமில்லாமல் பல இடங்களில் உச்சரிப்புகளும் முகம் சுழிக்கவைக்கிறது. மக்கள் இரசனைக்கேற்ப படைப்புகளைக் கொடுப்பவன் கலைஞன் அல்ல> மக்கள் தேவை அறிந்து படைப்புகள் செய்து அதில் வெற்றி காண்பவன் சிறந்த கலைஞன். இந்தியத் திரையுலகின் மசாலாப்படங்களைத்தான் முன்மாதிரியாக எடுக்க வேண்டும் என்ற கருத்தில் உடன்பாடில்லை ”பசங்க” ”நாடோடிகள்” போன்ற படங்களையும் முன்மாதிரியாகக் கொள்ளலாம். நாடோடிகள் கலைப்படமோ வியாபாரப்படமோ அல்ல.. ஆனால் சிறந்த கலையம்சத்துடன் வந்து வியாபாரத்திலும் மக்கள் மனதிலும் வென்று நின்ற மாற்றுசினிமா என்பது பொதுக் கருத்து. எம் சமூகத்தின் இரசிகத் தன்மையை நாம் எந்த விதத்திலும் குறைத்து மதிப்பிடக்கூடாது.

எந்த ஒரு படைப்பும் இன்னொரு படைப்பைப்போல் இருக்கவேண்டும் என்று அல்லாமல் எதைப்போலும் இல்லாது தனித்துவம் சூடி சிறக்கவேண்டும். இயல்பாக இருப்பது என்பது சுகம் மட்டுமல்ல அது அழகும் கூட. இயல்பான கதை கதைக்கேற்ற மனிதர்கள் என இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள் மாற்றத்திற்கான பாதையில் பயணிக்கையில் நாம் ஏன் பின்னோக்கிச் செல்ல வேண்டும்? இன்று தமிழ்நாட்டிலும் இலங்கை வானொலிச் சேவையை விரும்பிக் கேட்பவர்கள் அதிகம். அதே போல் எம் ஈழத்து திரையுலகமும் மேம்பட வேண்டும்.

”மீண்டும்” திரைப்படம் வியாபார நோக்கத்துடன் எடுக்கப்பட்டதல்ல> இருந்தும் ஏன் இந்திய சராசரியான தமிழ்ச்சினிமாவை முன்னோடியாகக் கொண்டு பெண்களை அழகு பொம்மைகளாகவும் கவர்ற்சிப்பபெருளாகவும் பல காட்சிகள் தொகுக்கப்பட்டுக் காட்டி இருப்பதின் நோக்கம் புரியவில்லை என்றாலும் வன்முறையில் வாழத்தொடங்கியவன் தன் வாழ்க்கைமுறையை மாற்றிக் கொண்டாலும் மீண்டும் அந்த வன்முறையால் அழிந்து போவதற்குரிய வாய்ப்புகள் இருப்பதை சுட்டிக்காட்டும் திரையின் இறுதி வசனம் (கரு) படத்தை நிறைவுப்படுத்தியது என்பது என் கருத்து.

எம் சமூகத்திடையே உள்ள இந்தியத் திரை மோகமும் எம்மவர் படைப்புகளுக்கு அளிக்காத ஊக்கமும் மனவருத்தத்தை அளிக்கிறது. பாதியே நிறம்பிய இரண்டாவது காட்சி நோர்வேயில் உள்ள எம் கலாஇரசிகர்களை மட்டுமல்ல பிற கலைஞர்களையும் எங்கே என்றே கேட்க வைக்கிறது. எந்த ஒரு கலைஞனும் தனது படைப்புகள் மக்களிடம் போய்ச் சேரவேண்டும் என்றே ஆதங்கப்படுவான். கருத்துவேறுபாடு> உடன்பாடின்மை> மோதல்களைத் தாண்டி தனது நிகழ்ச்சிகளுக்கு மட்டுமல்ல எம் சககலைஞர்களின் நிகழ்வுகளுக்கும் மக்கள் சமூகம் அளிக்க வேண்டும்> எமது கலைத்திறன் வளர வேண்டும் என்ற மனப்பான்மை இருந்தால் அது எம்மையும் எம் ஈழத்துக் கலைஞர்களையும் மேம்படுத்தும்.

இந்தியாவில் திரையுலகம் நிறுவனமாக்கப்பட்ட நிலையில் இங்கு சிலர் கூடி ஒரு முழுநீளத்திபை;படம் எடுப்பது என்ற முயற்சியும் அதில் வெற்றி பெறுவதென்பதும் இலகுவல்ல. அந்த வகையில் வே piஉவரசநரையும் அதில் பணியாற்றிய அனைத்துக் கலைஞர்களையும் வாழ்த்துவதோடு நில்லாமல் பாராட்டியும் ஆகவேண்டும். படம் முடிந்து வெளியே பேசப்பட்ட விடயங்களில் ”மீண்டும்” திரைப்படம் பலர் மனதைக் கவர்ந்ததாகவே சொல்ல வேண்டும். இரசிகர்களை இரண்டு மணிநேரம் கட்டிவைக்கக் கற்றுக்கொண்ட திரைப்படக்கலைஞர்கள் மேலும் இனி ஆக்கபூர்வமான படைப்புகளை வழங்குவர் என்றே நம்பத்தோன்றுகிறது. nt picture ன் முந்தய முழுநீளத் திரைப்படத்துடன் (தொப்புள்க் கொடி) ஒப்பிடும் போது ”மீண்டும்” திரைவிருந்தில் இயக்குனர், படப்பிடிப்பாளர் மற்றும் படத்தொகுப்பாளர்களின் சிறப்பான வளர்ச்சி தெரிகிறது. குறை நிறைகளுக்கப்பால் தனிப்பட்ட மனிதர்களாக நின்று சாதிக்கவேண்டும் என்ற தாகத்திற்கு கிடைத்த வெற்றியே ”மீண்டும்”. குறைகளும் கருத்துக்களும் சொல்வது இலகு, நிறுவனமாக்கப்படாத நிலையில் தமது நேரங்களை அர்ப்பணித்த கலைஞர்களை மேற்கூறிய கருத்துக்கள் மேலும் மேம்படுத்திக் கொள்ள உதவும் என்ற நம்பிக்கையோடு...

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

கடந்த ஜுuன் மாதம் சந்தித்தபோது மீண்டும் திரை படம் தயாரிப்பில் இருப்பதுபற்றி நண்பர் துருபன் கூறினார். நோர்வேயில் தோழர்கள் பிறேம் (துரொணியம்) தமயந்தி (ஸ்ரவாங்கர்) துருபன் போன்றவர்களது குறும்பட முயற்ச்சிகள் எனக்கு மிகுந்த ஆர்வம்தருவதாக அமைந்தது.ந்த வகையில் மீண்டும் முழு நீழ திரைப்பட முயற்ச்சி மகிழ்ச்சி தந்தது. கவிஞர் வசீகரனைப்போலவே துருபனும் உறுதியாக திரைப்பட முயற்சியில் செயல் படுகிறவர். மீண்டும் படம் வெற்றிபெற நோர்வே தமிழர்கள உதவுவார்கள் என நம்புகிறேன். துருபனுக்கும் ஸ்டீபனுக்கும் திருவுக்கும் உதயாவுக்கும் என்னுடைய நல் வாழ்த்துக்கள். - வ.ஐ.ச.ஜெயபாலன்

Edited by poet

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.