Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யார் இவர்கள்.....

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யார் இவர்கள்.....

கவிதை - இளங்கவி

தமிழர்களை அழவைத்த

அந்தக் கொலைக்காட்சி

இதுவும் போதாதா உலகத்துக்கு

எங்கள் இனப்படுகொலைக்குச் சாட்சி....

இறந்த உடல்களெல்லாம்

நிர்வாணமாய் கிடக்க

உயிருள்ள ஓர் உறவின்

உயிர் குடிக்கிறது துப்பாக்கி.....

அவர் உதிரம் நிலம் நனைக்க

அவன் சிர்ப்போசை கேட்கிறது....

நாம் சிந்திய இரத்தத்தில்

அவன் சந்தோசம் மிதக்கிறது.....

யார் இவர்கள்....?

எமைக் காத்த தெய்வங்களா....

இல்லை..ஈழத்து இளம் மயிலா...

அல்லது... எம் ஊரு காளைகளா....

எம் மொட்டுக்களின் பெற்றோரா...?

புலியாக இருந்தாலும்

பொதுமகனாக இருந்தாலும்

அவன் இறந்தது உனக்காக.....

உன் தேச மீட்புக்காக.......

கண்ணீரும் வற்றி விட்டோம்

கலங்க நேரமில்லை...

புலம்பெயர் உறவுகளே

புலம்ப பொழுதுமில்லை....

புகலிடமே ஒன்று சேரு

உன் பொறுமை நீங்கி போராடு

நீ ஒன்றுசேரத் தாமதித்தால்

மறுபடியும் ஓடும் அங்கே

தமிழன் இரத்த ஆறு....

இளங்கவி

  • கருத்துக்கள உறவுகள்

இளங்கவி நன்றி உங்கள் கவிதைக்கு...

யார் இவர்கள்.....

யாதும் அறியாத அப்பாவித் தமிழர்கள்.

அம்மணமாக்கப்பட்டு அன்னியனால் உயிர் துறந்த நம் ரத்த உறவுகள்....

புலம் பெயர் உறவுகளே இன்னமும் ஏன் தயக்கம் உங்களுக்குள்...

ஏன் இந்த மயக்கம்......பொங்கி எழமாட்டீர்களா....?

யாயினி.

அற்புதமான கவிதை!!!!!

உண்மையில் அந்த கொடிய காட்சியை பார்த்த போது நெஞ்சு

வெடித்தது.............

கோழை சிங்களவன் கைகளையும் கண்களையும் கட்டிவிட்டு

சுடுகிறான்.........

தமிழரின்ரின் வாழ்க்கை முறையாலும் அவனின் சுயநலத்தாலும் தான்

இன்று மட்டுமல்ல அன்றிலிருந்து இந்த கொடுமை தொடர்கிறது..............

இதில் இன்னும் வேதனைக்கு உரிய விடயம் என்னவென்றால்

இளநீர் குடித்தவன் தப்பி போக அருகில் நின்றவன் பிடிபட்டு சித்திர

வதைப்பட்டு மரணிக்கிறான்!!!!!!!

இளங்கவி உங்களின் அறை கூவல் நியாயமானது தான் ஆனாலும் எங்கட சனம்

இப்ப தங்கட வழமையான வாழ்க்கேக்கை போட்டினம்.........

அவை எல்லாரும் கோயில் திருவிழா விமர்சையான கொண்டாட்டங்கள் ஊர்

சுற்று தொண்டை முட்ட திண்டு குடிச்சு வாந்தியும் எடுத்துக் கொண்டும்

உணவு விடுதிகளிலும் றோட்டு கரைகளிலும் நிண்டு விதண்டாவாதம் பேசிக்கொண்டும்

இருக்கினம்...........

இனி 2 அல்லது 3 நாட்களுக்கு எங்கட தமிழ் கூடகங்கள் எல்லாம் வாய் கிழிய

கத்துவினம் ஆழுக்கு ஆள் வந்து ஒப்பாரி வைப்பினம் பேந்து புலத்து தமிழன் செத்து போவான் ..............அதுக்கு பிறகு ஏதாவது புதிசாய் தகவல் வர திரும்ப விவாதம் கருத்து

பகிர்வு எண்டு வருவினம் இப்படியே தொடர்கதைதான் இந்த துப்பு கெட்ட புலத்து தமிழன் வாழ்வு..........தாய்மண் மக்களின் அவலம் என்பது புலத்து தமிழனால் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கொடுத்துக் கொண்டிருக்கிற ஒரு பாரிய கொடுமை வாழ்வு.............

இதை யாரும் மறுத்து கருத்து சொல்ல மாட்டார்கள் என உறுதியாக சொல்லி விடலாம்.....

இன்று வெளிநாட்டு கூடகங்களும் ஒரு சிலமனித நேய நிறுவனங்களும் அக்கறை படும்

அளவிற்கு நாங்கள் செயல்படவில்லை என்பது தான் கசப்பான உண்மை!!!!!!!!! நாங்கள் ஏதோ

புடுங்கி விட்டோமாம் அனால் சர்வதேசம் திரும்பி பாக்கேலையாம் எண்டு போட்டு

ரிவிக்கு முன்னால படுத்துக் கிடந்து நாடகத்தில வாற காட்சிக்கு கண்ணீர் விட்டுக்கொண்டிருக்கிறம்!!!!!!!.

இறுதியாக:

ஒரு வெள்ளைக்காரர் எம்மவர் ஒருவரைப் பார்த்து

நீங்கள் உங்கள் தாய் மண்ணில் புத்தவிகாரை கட்டுவதை சட்டப்படி

குற்ரம் எண்டு சொல்லுறியள் ஆனால் எங்கட நாட்டில அதுவும்

எங்கட சொந்த மண்ணில உங்கட கோயில் கட்டுறியள்......

அப்ப இஞ்ச கோயில் கட்டுறது சட்டத்திற்கு சரியாய்

படுகுதோ........ ஏன் உங்கட நாட்டில போய் கோயில்

கட்டலாம் தானே எண்டு கேட்டாராம்.........

இதில் இருந்து இந்த புலத்து தமிழன் நிறைய புரிஞ்சு கொள்ள இருக்கிறது................!!!!!

அன்புடன் தமிழ்மாறன்

Edited by thamilmaran

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண்கள் கட்டப்பட்டு

கைகள் இரண்டும் பின்னால் பிணைக்கப்பட்டு

பிறந்த மேனியுடன் அவர்களே உட்காருகின்றார்கள்

இராணுவ காலணியால் முதுகில் உதைக்கின்றான் - உணர்வில்லாதவன்

பலவேறாக பேசி மற்றவன் சுடுவதற்கு ஏற்றாற்போல் உற்காரவைக்கின்றான்

சுடுபவன் கூட அருகில் நின்று சுட்டால் சன்னம் திரும்பி வந்து தனைத்தாக்கு மென்றெண்ணி

சில அடி பின்னால் வைத்து பிடரியிலே சுடுகின்றான்

சுட்டகணத்துடன் பயத்தினால் பின்னோக்கி ஓடி வருகின்றான்

பின்பு ஏதோ தம்மைக்கொல்ல வந்த எதிரியை நேருக்கு நேர் நின்று

மோதிக்கொன்றது போல் சிரிப்பொலி கேட்கின்றது

சிறுகணத்தில் அவ்வீரத்தமிழனின் உயிர்பிரிய

கீழே விழுகின்றது வீரம்நிறைந்த சரீரம் - தன்னியக்கமின்றி

இனவெறியரில் ஒருவன் தாங்கள் செய்த சாகசங்களை

தம்முறவினருக்குக்காட்டி வீரவார்த்தை பேச - படம் பிடிக்கின்றார்

அன்று உரிமைகோராத உங்கள் உடல்களிற்கு புலிகள் தந்த

இராணுவ மரியாதையைக் கூட மறந்து விட்டார்கள் இந்த சிங்கபுத்திரர்கள்

மாறி மாறி விளையாடுவது போல் சுட்டுக்கொல்கின்றார்கள்

அந்தோ பரிதாபம் இரண்டாம் வீரதமிழனும் வீழ்கின்றான்

என்ன கொடுமையடா, இதுவா எம்மினத்தின் போராட்டத்தின் பரிசு - இறைவா

நீ எவ்வாறு பதில் சொல்வாய் உன்னைத்தான் இம்மறவரிற்கு முன் சுட்டுக்கொன்று விட்டார்களே

அற்புதமான கவிதை இளங்கவி, தமிழ்மாறன்

வாழ்த்துக்கள் - உங்கள் பணிதொடர

அண்மையில் CTR வானொலியில் இளங்கவியின் படைப்பைக் கேட்கும் சந்தர்ப்பம் எட்டியது

அருமையான இன்றைய காலத்திற்குரிய தயாரிப்பு

  • கருத்துக்கள உறவுகள்

இளங்கவி இதுவரை எந்த ஊடகமும் எங்கள் அழிவைப் பார்க்கவுமில்லை கேட்கவுமில்லை வாய்மூடி கண்பொத்தி ஊமையாக இருந்து விடுப்புப்பார்த்தார்கள். இத்தொலைக்காட்சி கூட இதுவரை எங்கே நின்றது என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாயினி

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி......

எம் உறவுகள் செத்து விழுந்ததைப் பார்த்தபோது வந்த கண்ணீரின் ஈரம் இன்னும் காயவில்லை... அவர்கள் பட்ட அவலங்கள் மனக்கண்ணின் முன் தெரிந்தாலும் எல்லாம் எழுதமுடியவில்லை காரணம் துன்பத்திலிருக்கும் எம் உறவுகளை எனது வரிகள் மேலும் காயப்படுத்தக் கூடாதென்பதற்காக....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனது கவிதைக்கு உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி...

மேலும் நீங்கள் குறிப்பிட்ட அந்தக் கசப்பான உண்மைகள் மனதை நெருடும் நிகழ்வுகள் தான்...

ஆனால் அவற்றையிட்டு நாமும் கவலையடைந்து எமது கடமைகளை செய்யாமல் விடுமிடத்து நாமும் அவர்களில் ஒருவராகிவிடுவோம்... மேலும் எங்கள் கவிஞர் புதுவை இரத்தினதுரை அண்ணன் கடைசி நேரங்களில் எழுதிய கவிதையொன்றில் எல்லாக் கவிஞர்களுக்கும் ஓர் அறைகூவல் விடுத்திருந்தார் எங்கள் மண்ணுக்காக, மக்களின் உணர்வுகளை தட்டிவிடும் வரிகளை எழுதுங்கள் என்று.

நானும் எனது நாட்டுக்காக செய்யும் சராசரிக் கடமைகளுடன் எழுதுவதையும் ஓர் கடமையாக எடுத்துச் செய்கிறேன்.... இராமாயணத்தில் ராமர் பாலங்கட்ட அணிலும் உதவியதுபோல எனது வரிகள் சிலர் மனதைத் தட்டினாலும் அதுவும் சந்தோசமே...

மற்றும் ஒவ்வொருவரும் எங்கள் தாய் நாட்டிற்காக தாங்கள் தாங்கள் செய்யவேண்டிய கடமைகளை தாங்களாகவே உணர்ந்து செய்யவேண்டுமென்பதே எல்லோருடைய விருப்பமுமாகும்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாந்தன் தமிழன்

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றிகள்....

இப்படியொரு கோரத்திலும் கோரமான காட்சியைப் பார்த்து தமிழ் மனங்கள் முழுவதுமாக உடைந்துவிட்டது, இப்படியொரு இனப்படுகொலைக்கான சாட்சியிருந்தும் உலக நாடுகள் பாராமுகம் காட்டுவதேன். இதுபோன்ற பல கேள்விகள் நாமே எங்களைக் கேட்டு பதில் தெரியாமல் இருக்கும் ஓர் நிலையில் தமிழினம் இன்று.....

மேலும் நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள் C.T.R வானொலியில் என் படைப்பு ஒன்றைக் கேட்டதாக அது என்ன படைப்பு என்று கூறமுடியுமா? காரணம் எந்தவொரு படைப்பும் இந்த வானொலிக்கு நான் அனுப்பவில்லை. எனது ஆக்கமொன்று வானொலியில் வருகிறது அதை ஆனால் அதை நானே கேட்கமுடியவில்லை.... எது எப்படியோ அது மக்களைப் போய்ச் சேர்ந்தால் சரி.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் இளங்கவி,

எனக்கு சரியாகத்தெரியவில்லை எந்த ஊடகமென்று

ஆனால் கதையும் கானமும் என்ற நிகழ்ச்சியில் நீங்கள் எழுதிய ஓர் உயிருக்காய் துளி கண்ணீர்...., சிறுகதையை இடையிடையில் பாடல்களுடன்

திறம்பட செய்திருந்தார்கள்

இரண்டிலொன்று CTR or CMR TORONTO (part time)

அது மட்டும் நிச்சயம்

சாந்தன் தமிழன் உங்கள் வாழ்;த்துக்களுக்கு நன்றிகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

shanthy

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி....

உங்கள் ஆதங்கம் புரிகிறது.... பாராமுகத்துடன் இருக்கும் எங்கள் ஊடகங்கலைப் பார்க்கவைப்பது மக்களாகிய எங்கள் கைகளிலேயே தங்கியுள்ளது.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.