Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச சமூகம் பெரிதாக எதுவும் செய்துவிட முடியும் என்று நாம் நம்ப முடியாது அது தொடர்பில் நாம் வெகுவாக நம்பிக்கை இழந்திருக்கிறோம் ‐ சுனிலா அபயசேகர: இலங்கையில் நான் வாழ்வதையிட்டு வெட்கமடைகிறேன் ‐ நிமால்க்கா பெனான்டோ

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.youtube.com/watch?v=Jb5o_MHqxIg...player_embedded

இந்த வீடியோ கிளிப் உண்மையா பொய்யா என்பதை விட இதன் பின்னணியில் பல உண்மைச்சம்பவங்கள் உள்ளன. போர் நடந்து கொண்டிருந்த போது அப்பகுதிகளுக்கு சுதந்திரமான ஊடகவியலாளர்களோ கண்காணிப்பாளர்களோ எவரும் செல்ல முடியாததாக தடுக்கப்பட்டிருந்தார்கள். அப்பிரதேசத்திலிருந்து இப்போது இவ்வாறான ஒரு வீடியோ கிளிப் வந்திருக்கிறது.

இரண்டாவது இது ஒரு பாரதூரமான குற்றச்சாட்டு. இதனை வெறுமனே நிராகரிப்பதை விட்டு விட்டு இது தொடர்பான விசாரணையை மேற்கொண்டு இது போலியானதா இல்லையா என்பதை நிரூபிக்க வேண்டும். இது போலியானது என்று சொல்லி விடுவது மட்டும் போதுமான பதிலாக இருக்காது.

வன்னியில் கடந்த நவம்பரில் இறுதியில் இறுதிப் போர் ஆரம்பமாகியதில் இருந்து அப்பிரதேசங்களுக்கு மனிதாபிமானப் பணியாளர்களோ ஊடகவியலாளர்களோ செல்ல அனுமதிக்கப்படவில்லை. ஒரு வகையில் இது சாட்சிகளற்ற ஒரு யுத்தமாகவே நடாத்தப்பட்டிருக்கிறது. எனவே இது போலியானது எனில் விசாரணை நடாத்தி அதனை நிரூபிக்க வேண்டும்.

இதேவேளை இந்த அரசாங்கத்தை விமர்சிக்கும் எவரும் குறிப்பாக புலிகளுக்கு எதிரானது என்று சொல்லப்படும் இந்தப் போரை விமர்சிக்கும் எவரும் கடந்த ஓரிரு வருடங்களாக அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டே வந்திருக்கிறார்கள். இதிலுள்ள பெரிய பிரச்சனை என்னவென்றால் இந்த அச்சுறுத்தல்கள் அனைத்தும் இனங்காணப்படாதவர்களிடமிருந்

ே வருகின்றது. வௌ;வேறு பெயர்களில் இந்த அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுகின்றன. பாக்கியசோதி சரவணமுத்துவுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலில் பெயர் எதுவும் குறிப்பிடப்பட்டிருக்கவில்ல

ஆயுதந்தாங்கிய நபர்கள் கொழும்பில் செயற்படுவதை நாமறிவோம். லசந்த விக்ரமதுங்க, ரவிராஜ் போன்றவர்கள் பட்டப்பகலில் கொழும்பின் மையப்பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள். உண்மையாகவே நாங்கள் எல்லோரும் அச்சமுற்றிருக்கிறோம். ஒருவரைக் கொல்வதனூடாக பெரும்பாலானவரை மௌனமாக்க முடியும். லசந்தவின் படுகொலைக்குப் பிறகு இருபதுக்கு மேற்பட்ட ஊடகவியலாளர்கள் மௌனமாகி விட்டார்கள். இதுவொரு நல்ல தந்திரோபாயம். ஒருவரைக் கொல்வதனூடாக ஆகக்குறைந்தது 30 அல்லது 40 பேரை மௌனமாக்கி விட முடியும்.

ஜனநாயகத்தை நம்பும் விரும்பும் எவரும் வேறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருக்க முடியும் என்று நம்பும் எவருக்கும் இது அச்சுறுத்தலாகத் தான் இருக்கிறது. மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருப்பது என்பது இலங்கையில் அச்சுறுத்தலுக்குரிய ஒரு விடயமாக மாறி விட்டுள்ளது. மாறுபட்ட பல்வகைத் தன்மையான அபிப்பிராயங்கள் இல்லாதவிடத்து அங்கு ஜனநாயகம் இருக்க முடியாது.

இடம் பெயர்ந்த மக்களின் பிரச்சினையைப் பொறுத்தளவில் சில விடுதலைப் புலி உறுப்பினர்கள் மக்களிடையே மறைந்து இருக்கலாம் என அரசாங்கம் சொல்கிறது. ஆனால் எங்களது பிரச்சினை என்னவென்றால் முதலில் அரசாங்கம் இவ்வளவு மக்கள் வருவார்கள் என்பதனை எதிர்பார்த்திருக்கவில்லை. இவ்வளவு மக்களுக்கும் தேவையான ஏற்பாடுகள் எதனையும் செய்ய அவர்களால் முடியவில்லை. இவர்களில் பெருமளவானவர்கள் மருத்துவத் தேவையுடையவர்களாக இருந்தார்கள். அதற்கான எந்தத் தயாரிப்பும் அவர்களிடம் இருக்கவில்லை. அந்த மக்களுடைய அடிப்படைத் தேவை எதனையும் பூர்த்தி செய்யக் கூயளவு நிலைமை உருவாக்கப்படவில்லை. இதனால் அம்மக்கள் மிகஇக்கட்டான நிலைமையை எதிர்கொள்ள வேண்டியவர்களாக உள்ளார்கள்.

அத்தோடு தற்போது மழைக்காலம் ஆரம்பமாகியுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் எவையும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்ல

.சில விடுதலைப் புலி உறுப்பினார்கள் என்ற சந்தேகம் காரணமாக ஏறத்தாழ மூன்று இலட்சம் மக்களும் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். அரசாங்கத்திற்குத் தெரியும் இந்த மக்கள் அனைவரும் ஏற்கெனவே புலிகளின் கட்டுப்பாட்டுப்பிரதேசத்தில

தான் இருக்கிறார்கள் என்று. அரசாங்கத்தின் கட்டப்பாட்டில் இருக்கும் மக்களை அரசாங்கம் கட்டுப்படுத்துவது போல விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் மக்களை அவர்கள் கட்டுப்படுத்துகிறார்கள். எனவே இவர்கள் எல்லோரையும் எவ்வாறு புலிகளின் ஆதரவாளர்கள் அல்லது அனுதாபிகள் என்று சொல்வது?

தற்போது மழை காரணமாக அவசரமான பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியிருக்கிறது. ஆனால் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் பயனளிப்பனவாக இல்லை. அரசாங்கம் அவசரகால நிலைமைக்கேற்பப் பணியாற்றவில்லை. உண்மையில் அங்கு தேவையான எதுவுமே நடைபெறவில்லை.

இலங்கை அரசாங்கம் அந்த மக்களை கௌரவத்துடனும் குறைந்த பட்ச தேவைகளையாவது பூர்த்தி செய்யக் கூடிய வகையிலும் நடாத்த வேண்டும்.

அதேவேளை விடுதலைப்புலிகள் என்ற சந்தேகத்தில் இளைஞர் யுவதிகள் அம்முகாம்களிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்

ள். அவர்கள் சில குழுக்களால் அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் எங்கு வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது எவருக்கும் தெரியவில்லை. பெற்றார் தமது பிள்ளைகள் அங்கிருந்து படையினரால் அழைத்துச் செல்லப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்திற்கு இது தொடர்பான பொறுப்பு இருக்கிறது. ஆனால் அவ்களுக்குக் கூட இவ்விபரங்கள் எதுவும் தெரிந்திருக்கவில்லை. எத்தனை போர் காணாமல் போயிருக்கிறார்கள் என்பது கூடத் தெரியாத ஒரு சூழ்நிலையே நிலவுகிறது. அரசாங்கம் எத்தகைய பட்டியலையும் வெளியிடவில்லை. இது மிகவும் நெருக்கடியான நிலைமை கூட.

இதேவேளை இவ்விடயங்கள் குறித்து இந்த அரசாங்கத்தில் பொறுப்புக் கூறக் கூடிய எவரும் இல்லை. பிரேமதாச காலத்தில் அவருடைய செயலாளராக இருந்த பிரட்மன் வீரக்கோனுடன் தொடர்பு கொண்டு சில விடயங்களை அறிந்துகொள்ளக் கூடியதாக இருந்தது. ஆனால் இப்போது ஜனாதிபதி செயலகத்தில் தொடர்புகொள்ளக் கூடிய எவரும் இல்லை. மனித உரிமைகள் ஆணைக்குழு செயலிழந்துள்ளது. மனித உரிமைகள் அமைச்சு மௌனம் காக்கிறது. மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க சில சமயங்களில் காலஅவகாசம் கேட்பார். இந்த நிலைமையில் துரதிர்ஸ்டவசமாக ஐநாவும் கூட மிக அமைதியாக இருக்கிறது. அரசாங்கம் சொல்லும் சாட்டுக்களை அது ஏற்றுக் கொள்கிறது. மனித உரிமை ஆணையகமும் அவ்வாறு அரசாங்கம் சொல்வதை ஏற்றுக் கொள்கிறது. அரசாங்கம் எது சொன்னாலும் அதனை ஏற்றுக் கொள்கிறது. சர்வதேச சமூகம் பெரிதாக எதுவும் செய்துவிட முடியும் என்று நாம் நம்ப முடியாது.

அது தொடர்பில் நாம் வெகுவாக நம்பிக்கை இழந்திருக்கிறோம்.

இலங்கை எனும் நாட்டில் நான் வாழ்வதையிட்டு வெட்கமடைகிறேன்நிமால்கா பெர்ணாண்டோ:

சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலைமை என்பது பொதுவாகவே மிகவும் மோசமானதாகத் தான் உள்ளது. 2005ஆம் ஆண்டிலிருந்து எவ்வித விசாரணைகளுமற்ற ஆட்கடத்தல்களும் சட்டத்திற்குப் புறம்பான கொலைகளும் சர்வசாதாரணமாகி விட்டன. இவை குறித்து பின்னரும்கூட எவ்வகையான விசாரணைகளும் நடத்தப்படவில்லை. இது 1988 1989 காலகட்டத்தை ஞாபகப்படுத்துவதாக உள்ளது.

இந்தப்பின்ணியில் சணல் 4 வெளியிட்டுள்ள அந்த வீடியோ குறித்தும் குறிப்பாக இராணுவத்தினரின் இவ்வகையான நடத்தைகள் குறித்தும் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். வெறுமனே நிராகரிப்பது என்பது போதுமானதாகி விடாது.

இது தவிர சிவராம் போன்ற ஊடகவியலாளர்களுடைய உடல்கள் கண்டெடுக்கப்பட்டது. அதேபோன்று பல ஊடகவியலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது. ஆட்கள் காணாமல் போவது. அடையாளம் காண்பதற்கென குடும்பங்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பது. விசேட அதிரடிப்படையினiராலும் இராணுவத்தினராலும் கைது செய்யப்படுவது என்று தொடரும் சூழலில் இவ்வாறான ஒரு வீடியோ வெளிவருவது என்பது ஆச்சரியப்படக் கூடியதல்ல.

ஊடகவியலாளர்களோ வேறெவருமோ செல்ல அனுதிக்கப்படாத சூழலில் மோதல் நடைபெறும் பிரதேசங்களிலிருந்து இவ்வாறான வீடியோக்கள் வெளிவருவது தவிர்க்க முடியாதது.

ஒரு மனித உரிமைப் பணியாளர் என்ற வகையில் இவ்வாறான வீடியோக்கள் பலஸ்தீனம் மற்றும் காஸ்மீர் போன்ற பல பிரதேசங்களிலிருந்தும் இவ்வாறான வீடியோக்கள் வெளிவந்திருக்கின்றன என அறிவேன்.

பயங்கரவாதிகள் மற்றும் தீவிரவாதிகள் என்று கூறி அவர்களுக்கு எதிரான ஆயுதநடவடிக்கைகள் படைகளால் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் சந்தர்ப்பங்களில் இவ்வாறான சம்பவங்கள் பல இடம் பெற்றிருக்கின்றன. உலகம் முழுவதும் இவ்வாறான சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

சட்டத்திற்குப் புறம்பான ஆட்கடத்தல்கள், சித்திரவதைகள், மரணதண்டனைகள், மரணதண்டனை வழங்கும் முறைகள், ஆடைகளை களைந்து நிர்வாணமாக்குதல் என்று இவை யாவும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் இது குறித்து நான் அதிர்ச்சி அடையவில்லை. ஆனால் துக்கமடைந்தேன். இந்தச் செயலை யார் செய்திருந்தாலும் அது கண்டிக்கப்பட வேண்டியதே. அரச படைகள் உலகம் முழுவதும் இவ்வாறு தான் செயற்பட்டு வருகின்றன.

நான் சிறிலங்கா அரச இராணுவத்திற்கு வெள்ளையடிக்க முயற்சிக்கப் போவதில்லை. அமெரிக்கப் படையினரே அவ்வாறு நடக்கும் போது இலங்கைப் படையினர் நல்லவர்களாக நடப்பார்கள் என்று எதிர்பார்ப்பதில் ஒரு நியாயமுமில்லைத் தானே.

இவற்றுக்கெதிராகத் தான் நாம் தொடர்ச்சியாகப் போராடி வருகிறோம். சட்டத்திற்குப் புறம்பான படுகொலைகள், மரண தண்டனைகள் சித்திரவதை, மரண தண்டனை முறைகள் போன்ற எல்லாவற்றுக்கும் எதிராகத் தான் மனித உரிமையாளர்கள் போராடி வருகிறார்கள்.

அரசாங்கம் உண்மையான விடயம் என்ன என்பதைச் சொல்லியாக வேண்டும்.

ஆனால் அரசாங்கம் இந்த விடயத்தை மறுத்திருக்கிறது. அது இவ்வாறான எல்லா விடயங்களையும் நிராகரித்துக் கொண்டு தானிருக்கிறது. ஆரம்பத்தில் மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் வன்னியில் இருப்பதாக சொன்னபோது அதனை அரசுநிராகரித்தது. ஆக ஐம்பதாயிரம் பேர் மட்டுமே இருப்பதாக சொன்னது. பின்னர் இரண்டு இலட்சம் பேராக அது மாறியது. இப்போது இறுதியில் மூன்று இலட்சம் மக்கள் வந்து சேர்ந்திருக்கிறார்கள். ஆக அரசாங்கம் எப்போதும் எல்லாவற்றையும் நிராகரித்துக் கொண்டு தானிருக்கிறது.

அரசாங்கம் இவ்வாறு நிராகரிப்பதை விட்டு விட்டு உண்மையை ஆராய்ந்து இது தான் நடந்தது என்று நிரூபிக்க வேண்டும்.

மற்றையது இவ்வாறான மனித உரிமை மீறல்கள் குறித்துப் பேசுபவர்கள் மரண அச்சுறுத்தலுக்குள்ளாகிறார்

ள். இது மிக துரதிர்ஸ்டமானது. 1970க்குப் பின்னர் இலங்கை அரசாங்கத்திற்கு அளவுக்கதிகமாக அதிகாரம் குவிந்துள்ளது. நாங்கள் 71 இலோ 88 இலோ என்ன நடந்தது என்பதைப் பார்க்க வேண்டும். இப்போது அது அதன் உச்சத்திற்கு வந்துள்ளது.

ஆனால் அரசாங்கத்தின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிராக தனிப்பட்டதும் அமைப்பு ரீதியானதுமான எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டு தானிருக்கின்றன. மக்கள் ஒடுக்குமுறைக்காளாவார்கள் கொல்லப்படுவார்கள். ஆனால் இந்த எதிர்ப்பு நிலைமைகளில் மாற்றத்தை ஏற்படுத்தும்.

ஜனாதிபதியும் இவ்வாறான எதிர்ப்பு நடவடிக்கைகளில் 1989 இல் ஈடுபட்டிருக்கிறார். இவ்வாறான விபரங்களை எடுத்துச் சென்றதற்காக அவர் ஒரு முறை விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார். மாத்தறையிலிருந்து கதிர்காமத்திற்கு அன்னையர் முன்னணியின் பாதயாத்திரையை தலைமை தாங்கி நடாத்திச் சென்றுள்ளார்.

இப்போர் அவர் அதிகாரத்திற்கு வந்திருக்கிறார். எனவே அவர் தனது கடந்தகாலத்தை மறந்திருப்பார் என்று நான் நினைக்கவில்லை. சிவில் சமூகத்தன் செயற்பாடுகளை சமூகத்திலிருந்து அகற்றி விட முடியாது.

ஆனால் துரதிர்ஸ்டம் என்னவென்றால் முன்னர் சிவில்சமூகத்துடன் சேர்ந்து செயற்பட்ட ஜனாதிபதி இப்போது அதற்கெதிராக இருப்பது தான்.

நானோ பாக்கியசோதியோ எமது நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் சென்று கொண்டிருப்போம்.

அதேவேளையில் மூன்று இலட்சம் மக்களை வவுனியாவில் நலன்புரி நிலையங்கள் எனப்படும் முகாம்களில் தடுத்து வைத்திருப்பதானது ஒரு சித்திரவதை என்று தான் நான் சொல்வேன். மூன்று நான்கு மாதங்களுக்கு மேலாக இந்த இனவதை முகாம்களில் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். நாஸி ஜேர்மனியில் மக்கள் இவ்வாறு அடைத்து வைக்கப்பட்டிருந்த முகாம்கள் பலவற்றை நான் அங்கு சென்ற போது பார்த்திருக்கிறேன். வரலாற்றின் ஒரு பகுதியாக அவை இன்றும் பேணப்பட்டு வருகின்றன. அம்முகாம்களில் மக்கள் நடாத்தப்பட்டதைப் போன்று தான் இம்மக்களும் நடாத்தப்படுகிறார்கள். மனித உரிமைப் பணியாளர்கள் அங்கு செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.

15 பேர் ஒரு சிறிய இடத்தை பங்கிட்டுக் கொள்கிறார்கள். ஐயாhயிரம் காயப்பட்ட மக்கள் அங்கிருக்கிறார்கள். போதுமான மருத்துவ வசதிகள் அங்கில்லை. போதுமான உணவு வசதிகள் இல்லை. சுகாதார வசதிகள் இல்லை. அண்மைய மழை அந்தமக்களைப் பெரிதும் பாதித்திருக்கிறது. ஐயாயிரம் காயப்பட்ட மக்கள் அங்கிருக்கிறார்கள். இவ்வாறு ஏராளமான பிரச்சினைகள் அங்கிருக்கின்றன.

அங்குள்ள அரசாங்க அதிகாரிகளுக்கு அந்த நிலைமை நன்கு தெரியும். அவர்கள் அரசாங்கத்திற்கு எடுத்துச் சொல்லி வலியுறுத்த வேண்டும்.

அந்த மக்கள் கடும் அவஸ்தை மிகத்துயரமானது. அவ்வாறான ஒரு நாட்டில் நான் வாழ்வதையிட்டு வெட்கமடைகிறேன்.

இந்த மக்கள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப்பிரதேசத்தில

வாழ்ந்ததால் நாங்கள் பழிவாங்குகிறோமா என்று எண்ணத் தோன்றுகிறது.

அரசாங்கமும் அரசாங்க அதிகாரிகளும் நிலைமையை உணர்ந்து கொள்ள வேண்டும். நாங்கள் எதுவும் செய்ய முடியாது என்று சொல்லி விட்டு இருந்து விட முடியாது.

இதேவேளை விடுதலைப்புலகள் என்ற சந்தேகத்தில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அறிகிறோம். தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்த இளைஞர் யுவதிகளது பெயர் விபரங்களை நாங்கள் அரசாங்கத்திடம் கோரியிருக்கிறோம்.

இவர்களில் மூன்று வகையினர் உள்ளனர்.

முதலாவது வகையினர் பெற்றார் அல்லது உறவினர்கள் தாமாகவே இவர்களை படையினரிடம் கையளித்துள்ளனர். அவர்கள் கைது செய்யப்பட்டுக் கொண்டு போகப்படுவதை விட அவர்களைக் கையளிப்பது அவர்கள் எங்கு வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதையோ அல்லது அவர்களைக் கையளித்ததற்கான ஆதாரமோ தங்களிடம் இருக்கும் என்பதால் அது பாதுகாப்பானது என்று அம்மக்கள் அவ்வாறு செய்திருக்கிறார்கள். அதுவும் அவ்வாறு செய்தால் இராணுவம் தாங்கள் பொறுப்பெற்றதாக ரசீது தரும் என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் அவ்வாறான எவ்வகையான ரசீதையும் இராணுவம் அம்மக்களுக்கு வழங்கவில்லை.

இரண்டாவது வகையினர் இவர்கள் புலிகள் என்று ஏனையவர்களால் சொல்லிக் கொடுக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டவர்கள்.

மூன்றாவது வகையினர், தாமாகவே சரணடைந்துள்ளவர்கள்.

இவர்களில் சிறுவர்களான சிலர் எங்கு தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது தெரிய வந்திருக்கிறது. பெற்றார் சிலர் கூடச் சென்று பார்வையிட்டிருக்கிறார்கள்.

ஏனையவர்கள் பற்றிய விபரங்களை வெளியிடுமாறு நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறோம்.

இது முதல் தடவையல்ல 71, 88 ஆகிய காலங்களிலும் இவ்வாறு நடந்துள்ளது. அவர்கள் புனர்வாழ்வுக்குட்படுத்தப்ப

்டிருக்கிறார்கள். அதேபோன்று இவ்விளைஞர்களும் புன்வாழ்வுக்கு உட்படுத்தப்படுத்தப்பட வேண்டும்.

எனவே முதலில் பட்டியலை வெளியிடுமாறு நாம் கேட்கிறோம். இந்நடவடிக்கைகளில் வெளிப்படைத் தன்மையைப் பின்பற்றுமாறு வலியுறுத்துகிறோம். இவர்களுக்குப் புனர்வாழ்வளிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். குறற்வியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் சட்டத்தன்படி நடாத்தப்பட வேண்டும். இவர்கள் சித்திரவதைக்குள்ளாக்கப்படவ

சட்டத்திற்குப் புறம்பான முறைகளில் நடத்தப்படவோ கூடாது இதனை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்.

71 88காலகட்டத்தை விட இது சற்று வித்தியாசமானது. அது சிங்கள் சமூகத்தினுள்ளேயே இடம் பெற்றுள்ளது. ஆனால் இது தமிழ் சமூகம் பற்றியது. இது வடக்கில் நடந்துள்ளது. சிங்கள சமூகத்திலிருந்து அந்நியப்பட்ட வகையிலே இது நடந்து வருகிறது. இதனைத் தவிர அரசாங்கம் முழுக்க முழுக்க இராணுவ மயப்படுத்தப்பட்டுள்ளது. எனவே அரசாங்கம் சிவில் சமூகத்திற்று எதிராகவே உள்ளது. சிவில்சமூகத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக அது செயற்படுகிறது. சிவில் சமூகமும் கூட தமிழ் பிரச்சினையில் பிளவு பட்டு நிற்கிறது. இதுவும் கூட பலவீனமானதாகவே இருக்கிறது. இதைப் போல தமிழ் சமூகத்திலும் பல்வேறு பிளவுகள் காணப்படுகின்றன. இத்தகைய சூழ்நிலையில் பாரியளவிலான போராட்டங்களை நடாத்தமுடியாத நிலையிலேயே சிவில் சமூகம் உள்ளது.

இடம் பெயர்ந்தவர்கள், தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள், காணாமல் போனவர்கள் பற்றி அவற்றுக்கான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். சிறுவர்களும் பெண்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இது மிகவும் துக்ககரமானது.

Edited by ஜீவா

ஆனால் ஆனந்தசங்கரி, டக்ளஸ்,கருணா, போன்ற சிங்களத்தலைவர்கள் இனிவரும் பொருளாதாரத்தால் தமது சிங்கள இனம் அழிந்துபோகாமல் காப்பாற்ற முழு முயற்சியில் உள்ளனர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.