Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் எதிர்காலம் இவர்களின் கையிலா?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வன்னியிலும் முள்ளி வாய்க்காலிலும் நந்திக் கடலிலும் தமிழ் மக்களைத் துளைத்த குண்டுகளும் மக்கள் மீது வீழ்ந்த குண்டுகளும் கனடா போன்ற புலம்பெயர்ந்த நாடுகளிலிருந்தே ஏவப்பட்டன! மாறாக சிங்கள ராணுவம்தான் அதைச் செய்தது என்று குய்யோ முறையோ என்று பதறுவதால் பயனில்லை.

நடந்து முடிந்திருக்கின்ற ஆயுதவழியிலான போராட்டம் தமிழ் மக்கள் அனைவரினாலும்தான் தொடங்கப்பட்டது. மிதவாத பாராளுமன்ற அரசியல் வாதிகளினாலும் அவர்களை பெரும்பான்மையாக ஆதரித்த தமிழ் மக்களாலும்தான் இந்தப் போராட்டம் தொடங்கப்பபட்டது.

ஆனால் போராட்டம் பல இடங்களில் பல முனைகளில் தொடங்கப்பட்டு பின்னர் அது ஓரிடத்தில் நிலைகொண்டு 33 ஆண்டுகாலம் நடந்திருக்கிறது. தொடர்ந்தும் ஆயுதவழியிலான போராட்டத்தைக் காரணம் காட்டிப் புலம்பெயர்ந்தவர்கள் புலம்பெயர்ந்து கொண்டிருந்தார்கள். எப்போதும் ஆயத வழிப்போராட்டம் தமிழர்களாகிய எங்களையும் குறிவைக்கிறது என்ற ஓலம்தான் பெரும்பாலான அகதி விண்ணப்பங்களில் அனைத்துநாடுகளிலும் பதியப்பட்டன. அங்கேயே தொடங்கிவிட்டது துரோகத்தின் முதல்படி! புலம் பெயர்பவர்கள் ஏற்படுத்தும் அறியாத் துரோகம்தான் இதைப்போல இன்னும் தொடர்கிறது! தொடர்ந்தது!

தொடர்ந்த பலவற்றில் ஆயுதவழிப் போராட்டத்திற்குப் பணம் கொடுத்தவர்கள் செய்ததும் விட்டுவிட்டு ஓடிவந்த குற்ற உணர்வின் ஒரு பகுதியாகத்தான் என்கிறது நடந்துமுடிந்த நிகழ்வுகள்.

போராட்டம் நடக்கையில் யாரும் எதையும் கேள்வி கேட்கும் மனநிலையில் இருக்கவில்லை. விடுதலைப்புலிகள் களத்தில் நின்று செய்யும் பங்கிற்கு இணையாக எதுவும் இருக்கமுடியாது என்பதில் மக்கள் அனைவரும் உறுதியாக இருந்தார்கள். அவர்களுக்கு தொலைவில் இருக்கும் நாங்கள் பணத்தையாவது கொடுப்போமே என்றுதான் கொடுத்தார்கள். கொடுத்ததோடு அதைப்பற்றி எதையும் கண்டுகொள்வில்லை. எவ்வளவு பணம் கொடுத்தோம் எங்கே போகிறது என்று எதுவுமே புலம்பெயரந்த தமிழ் மக்கள் கேட்கவில்லை.

ஆனால் மக்களே ஆற்றில் போட்டாலும் அளந்து போடு என்பது தமிழ் முதுமொழி. அடுத்த பழமொழி இருக்கிறது… தேனெடுத்தவன் புறங்கையை நக்காமல் இருப்பானா என்பதே அது.

மக்கள் எதையும் கேட்கவில்லை அல்லது கேட்பதை விரும்பவில்லை என்றாலும் அவற்றைச் சேகரித்து வன்னிக்கு அனுப்பியவர்கள் முறையாகத்தான் செய்துமுடித்தார்களா?

வன்னியில் இருந்த விடுதலைப் புலிகளின் பல முன்னேற்பாடுகளில் ஒன்றாக ஆங்காங்கே சேமிப்பாகவும் சொத்துக்களாகவும் பின்னிருப்பில் வைக்கப்பட்டவை பல பலரிடம் சிக்கிக் கிணற்றில் விழுந்த கோயில் சொத்தாக ஆகிவிட்டது. அவை இனித் தமிழ் மக்களின் பொதுச் சொத்துக்களாக வரப்போவதில்லை என்பதும் தெரிகிறது.

சொத்துக்களும் பணமும் அல்ல இப்போது எழுந்திருக்கும் பிரச்சினை.

நாடுகடந்த அரசு என்ற அறிவிப்பிற்குள்ளால் பழைய பெருச்சாளிகளே மீண்டும் திண்ணையைப் பிடிக்கப்பார்க்கிறார்கள். “அண்ணன் எப்போ சாவான் திண்ணை எப்போ காலியாகும்” என்று தலைமைப் பதவிக்குப் பறந்துகொண்டிருந்திருப்பார்கள் போல.

நாடு கடந்த அறிவிப்பு வெளிவந்த பிற்பாடு பல முகங்கள் வெளி வந்தன. இது புலம் பெயர்ந்த தமிழர் உலகமெங்கும் நடந்தது. நடக்கின்றது.

கனடாவில் இருக்கும் நாங்கள் கனடாவை மட்டும் கவனித்துப் பார்ப்போமே!

நாடுகடந்த அரசு அறிவிப்பு வந்த பிற்பாடு அதற்கு எதிர்ப்பு கிளம்பியது. தற்போது கே.பி என்கின்ற செல்வராசா பத்மநாதன் கைதானப் பிற்பாடு பலரும் களத்தில் தீவிரமாகக் குதிக்கிறார்கள்.

யாரிவர்கள்? எங்கிருந்து வந்தார்கள்?

“கனடா உலகத் தமிழர்” செய்தி ஏட்டில் ‘விடுதலைப்புலிகள் காட்டிச்சென்ற வழியில் நாடுகடந்த தமிழீழ அரசு’ என்று முதற்பக்கத்தில் இப்போது செய்தி வருகிறது.

உலகத்தில் எங்கேயும் இல்லாதவாறு கோடை விடுமுறைக்காக 5 மாதம் விடுமுறை விட்டுவிட்டு தற்போது மற்றொரு செய்தி ஏடு மீண்டும் வருகிறது. போதாக்குறைக்கு ‘நாடுகடந்த தமிழீழ அரசு’ என்ற பெயரிலேயே ஒரு செய்தி ஏடும் வரப்போகிறது. (வந்துவிட்டது)

கனடியத் தமிழர் சமுகமும் கனடிய தமிழ் மாணவர் சமூகமும் சேர்ந்து ஆரும் அறியாத இடங்களில் மேடைபோட்டு மேடைக்கு மேடை புரட்சி செய்கிறார்கள்.

அவர்களுக்கும் குறி நாடுகடந்த தமிழீழ அரசாக இருக்கிறது. இந்தப் பந்தயத்தில் இன்னும் சிலரும் சிறிது சிறிதாக ஓடுகிறார்கள்.

மொத்தத்தில் முன்னர் வன்னியில் இருந்து கட்டளை வந்தது. கடமை செய்வோம் என்று காத்திருந்தார்கள். (பலர் பொய்யாகவும் … நடித்தபடி காத்திருந்தார்கள்.) இன்றோஇ அங்கே ஆணையிட எதுவும் இல்லை என்றவுடன்இ குறுநில மன்னர்களாகப் புறப்பட்டுவிட்டார்கள்.

நரை தட்டிய தாடியைத் தடவிக்கொண்டு ராச ரிசிகளும் வலம் வருகிறார்கள்.

அனைவருக்கும் ஒரே ஆசை …பதவி ஆசை. போட்டியிடும் இவர்கள் யார்?

முன்னர் செல்வராசா பத்மநாதன் இருந்தால் பருப்பு வேகாது என்று இருந்தவர்களும் புறநடை காட்டியவர்களும் களத்தில் குதிக்கிறார்கள்.

முன்னர் உலகத் தமிழர் அமைப்பு தமிழர்களின் ஏகப்பிரதிநிதியாக உரிமை கோரிக்கொண்டு கனடாவில் இருந்தது. அது கனடாவின் அரசால் - அரசுத் தனிச்சிறப்புக் காவல்துறையால் தடைசெய்யப்பட்டது. அதற்குக் காரணமானவர்களும் அதற்குள்ளேயே இருந்தார்கள்.

அது முடிந்த பிற்பாடும் அப்போதைய உலகத் தமிழர் அமைப்பிற்குச் சொந்தமான கட்டத்தில் இருந்து இயங்கி வந்த ‘கனடா உலகத் தமிழர்’ பேப்பர் எவ்வித தடையும் இல்லாமல் இன்றும் தொடர்ந்தும் வருகிறது.

உலகத் தமிழர் அமைப்புக்குக் காசு கொடுக்க விரும்பியவர்களும் வேண்டியவர்களுமே அதற்கும் (‘கனடா உலகத் தமிழர்’ பேப்பருக்கும்) சந்தா கொடுத்தார்கள். உலகத் தமிழர் அமைப்பின் பிரதேசங்களில் காசு சேர்த்த பிரதிநிதிகளே இந்தப் பேப்பரையும் விநியோகித்தார்கள். ஆனால் உலகத் தமிழர் அமைப்பு தடைசெய்யப்பட்ட பின்பும் அது - ‘கனடா உலகத் தமிழர்’ பேப்பர்வெளிவருகிறது. வரட்டும் நல்லதுதான்.

இந்தப் பின்னணியில் உலகத் தமிழர் அமைப்பு தடைசெய்யப்பட்ட பின்னர் புதிய தலைமைகள் உருவாக்கப்பட்டன. வன்னியில் அனைத்தும் முடியும் வரை அவையும் இருந்தன. இன்று அவை எங்கென்று தெரியவில்லை. இனி ஏனென்று நினைத்திருப்பார்களோ?

கனடாவில் உலகத் தமிழர் அமைப்புத் தடை செய்யப்படுவதற்கு முன்பு தலைமயேற்றவர்கள் இன்று ‘நாடுகடந்த தமிழீழ அரசு’ என்று பேப்பர் நடத்த வருகிறார்கள்.

ஆக கனடாவில் உலகத் தமிழர் அமைப்பின் தடைக்கு முதலிருந்தவர்களும் தடைக்கு பிறகு இருந்தவர்களும் நாடுகடந்த அரசு ஒட்டத்தில் தற்போது இருக்கிறார்கள்.

அத்தோடு உலகத் தமிழர் அமைப்பு தடைசெய்யப்படுவதற்கு முன்பும் தடைசெய்யப்பட்ட போதும் பின்பும் ஒட்டி ஒட்டி ஓடியவர்கள் இன்னும் ஒட்டி ஒட்டி ஓடி ஓடி நாடுகடந்த அரசு பந்தயத்திலும் ஓட இருக்கிறார்கள்.

இவர்கள் சொல்வது புலிகளின் தொடர்ச்சியாக நாடு கடந்த அரசின் ஓட்டத்தில் நாங்கள் வருகிறோம் என்பதுதான்.

புலிகளின் தொடர்ச்சியாக யாரும் வருவதை எப்படிக் கனடாவின் அரசு விரும்பும்? இன்னும் தடைசெய்யபட்ட நிலையில்தானே இருக்கிறது! தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் படமும் உலகத்தமிழர் அமைப்பும் விடுதலைப்புலிகள் அமைப்பும். விடுதலைப்புலிகள் சின்னமும். அந்தத் தொடர்ச்சியில்… நாடுகடந்த அரசின் செயற்பாடுகள் கனடாவில் அமையுமானால் அது அரசியல் வகையில் தமிழர் நலனுக்கு எதிராகத்தான் அமையுமே தவிர நன்மையல்ல என்பது அனைவருக்குமே தெரியும்.

இது இவ்வாறிருக்க மேற்சொன்னவாறு முன்னர் இருந்த தங்கள் ஒட்டுக்களை உறவுகளை வைத்து தொடர்ந்து ஓடநினைப்பவர்கள் தங்கள் நன்மையை மட்டும்கருதி இறந்து பட்ட மாவீரர்களின் விடுதலைப்புலிகளின் பெயரை முன்னிறுத்தி ஆதாயம் தேட நினைக்கிறார்கள்.

இவர்களுக்கு தமிழ் மக்களுக்கும் சமூகத்திலும் எள்ளளவும் அக்கறை இருந்திருக்குமானால் நாடுகடந்த அரசு அறிவிக்கப்பட்டவுடன் ஓர் ஒருமைப்பாட்டைத் தங்களுக்குள் ஏற்படுத்தி அதை முன்வைத்து அரசியல் காய்களை நகர்த்தியிருப்பார்கள்!

அவ்வாறு செய்வில்லை. தற்போதும் ஒன்றுபடவில்லை. மல்லுக்கட்டுகிறார்கள். தலைமைக்கும் அதிகாரத்துக்கு இறந்து பட்ட புலிகளின்இ மாவீரர்களின் ஆவிகளை முன்னிறுத்தி மல்லுக்கட்டி ஆதாயம் தேடுகிறார்கள்.

இவர்கள் யோக்கியத்துக்கு நல்ல உதாரணம்:

உலகத் தமிழர் அமைப்பு இருந்து இயங்கி வந்த கட்டடம். அது அண்மையில் விற்பனைக்குப் போடப்பட்டது. அது விற்கப்பட்டது ஓர் வெளிச் சமூகத்தைச் சேர்ந்த விற்பனை முகவரால்? ஏன்? தமிழர் ஒருவருக்கு அந்த கொமிசன் பணம் போனால் என்ன?

சரி ஒருவருக்கு கொடுத்தால் மற்றவருக்குப் பிரச்சினை என்று கருதினால் தமிழ் முகவர்களின் பெயரை எழுமாற்றாக குலுக்கல் முறையில் தெரிவு செய்து கொடுத்திருக்கலாமே? விற்பனை முடிக்கப்பட்டிருப்பது விஜய் குமார் குப்தா என்பவரால். ஓர் இந்தியரால் !!! இந்தியாவில் கனடா உலகத் தமிழர் அமைப்புக்கு என்ன ஓர் அக்கறை. அது நடந்திருப்பது கடந்த 14 ஆவது திகதி. இந்த டீலை உன்னிடம் தந்தால் எனக்கு எவ்வளவு தருவாய் என்று தனியாய் யாரும் குப்தாவிடம் கேட்டிருப்பார்களோ?

இந்த லட்சணத்தில் வணிகம் புத்தகத்துக்கான விளம்பரத்தில் “எமது வணிகம் எம்மிடமே இருக்கட்டும்” என்று வாசகம் வேறு போட்டிருக்கிறார்கள்!!!

இவர்களா தமிழ் மக்களிடம் அக்கறையில் நாடுகடந்த அரசியலில் குதிக்கிறார்கள் என்று நம்புவது? அவர்களா வன்னிக்கு உண்மையான துணையாக ஒத்துழைப்பாக இதுவரைநாளும் இயங்கியிருப்பார்கள் என்று நாம் நம்புவது?

அடி மடியில் சிங்கள அரசு கைவைத்தபிறகு இவர்கள் விழித்துக்கொண்டு - முழித்துக்கொண்டு நடத்திய அவசரத் தெருப்போராட்டங்கள் அரசியல் நாடககங்கள் செய்ததெல்லாம் சிங்கள இனவாத அரசு தனது பரப்புரையை வேகமாக்கிஇ மூடிமறைத்துஇ இன அழிப்பை முடிக்க ஊக்கப்படுத்தியதற்குத்தான் துணையானது.

இந்நிலையில் கனடாவில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை முன்வைத்து அதன்மீது வாக்கெடுப்பு நடத்த இருப்பதாகத் தெரிவிக்கிறார்கள். இது அடுத்த துரோகம். வட்டுக்கொட்டைத் தீர்மானம் அனைத்து தமிழ்க் கட்சிகளின் ஒருமைப்பாட்டில் வந்த ஒன்று. அதாவது தமிழர்களின் 99 விழுக்காட்டு ஒப்புதல் கொண்டது.

அதற்கேன் இப்போது கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு என்பதை யோசிக்க வேண்டும்?

இப்போது எடுக்கும் வாக்கெடுப்புக்கு அந்தத் தீர்மானத்தில் பாதிப்பு எதையும் ஏற்படுத்தும் அதிகாரம் இல்லை. அது ‘தாயகத்தின் மக்களையும்’ சேர்த்து உருவாக்கப்பட்டது. வவுனியாவின் முகாமில் மட்டும் இருக்கும் மக்களின் தொகை கொண்ட கனடாவின் தமிழ மக்கள் மீண்டும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கு எதற்காக வாக்களிக்கிறார்கள்.

மீண்டும் மீண்டும் இந்தக் கனடாவில் இருக்கும் புலிகளின் பெயரால் அரசியல் செய்கிறோம் என்று சொல்வோர்கள் செய்வதெல்லாம் தமிழ மக்களுக்கும் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைக்கும் சேதம் விளைவிப்பதுதான். எதிர்வரும் நாட்களில் இவர்கள் அமைதியாயிருந்தாலே பல நன்மைகள் நடக்கும் வாய்ப்பிருக்கிறது. இதுவரைநாளும் நுட்பமாக ஓர் அரசியல் காயைக்கூட கனடாவின் அரசியலில் நடத்திக் காட்ட திராணியில்லாத இவர்கள் சற்று விலகியிருப்பதே தமிழ் மக்களுக்குச் செய்யும் நன்மையாக அமையும்.

எழுதியவர் : மாமூலன்

செப்ரெம்பர் 25 20009 ரொறொன்ரோ கனடா

கோயில் கிணத்துக்கை விழுந்த பணத்துக்கு ஒண்டும் செய்யமுடியாது. ஆருக்கு யாருக்கு சுக்கிரனிண்ட பார்வை இருந்திச்சிதோ அவையள் சுருட்டிக்கொள்ள வேண்டியதுதான்.மிச்சம் வன்னி தமிழ்மக்களுக்கு சனி ஏழரையில நிக்கிது. சனி பகவான் பாத்துக்கீத்து ஏதாவது அருள் புரிஞ்சால் ஒழிய அவையள் பாடு நிர்க்கதிதான். வெளிநாட்டு தமிழருக்கு பிரச்சனை இல்லை. நல்லாய்த்தான் இருக்கறீனம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.