Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இது போலித்தனமில்லாத தமிழர்களுக்கானது

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத் தமிழர்களுக்கு இன்றைய நாள் தீபாவளி திருநாள் அல்ல. எப்பொழுது ம‌கி‌ந்த ராஜப‌‌க்சே எனும் நரகாசுரன் எம்மினத்தை விட்டு நீங்குகிறானோ அன்றுதான் நம்மினத்தவருக்கு தீபாவளி திருநாளாகும். நரகாசுரன் நம்மோடு இன்னும் உயிருடன் இருக்கின்றபொழுது நாம் எப்படி இந்நாளை தீபாவளி திருநாளாகக் கொண்டாட முடியும்.

நரகாசுரன் வன்னியிலே குடி கொண்டிருக்கிறான். நம்மினத்தை நாளும் பலி எடுத்துக் கொண்டிருக்கிறான். நரகாசுரன் உயிருடன் இருக்கும் பொழுது அவன் இறந்து விட்டதாக நாம் கருதி எப்படி நரகாசுரன் இறந்த நாளாக கொண்டாடுவது?

தமிழா நீ கொஞ்சம் யோசித்துப் பார்... உங்கள் வீட்டில் செத்தவீடு நடந்து கொண்டிருக்கிறது அப்பொழுது உங்கள் வீட்டில் விளக்கேற்றி, புத்தாடையுடுத்தி கொண்டாடுவீர்களோ? இல்லையே. அதேபோன்று தான் வன்னியில் நாளும் செத்த வீடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. அப்படியிருக்கும் போது நாம் எப்படி இந்நாளை ஓர் திருநாளாகக் கொண்டாடுவது? எப்பொழுது ராஜப‌‌க்சே நரகாசுரன் அழிந்தொழிந்து போகிறானோ அன்று தான் நம்மினத்தவர் வாழ்வில் ஒளிவீசும்.

இந்துக்களுக்கு வேண்டுமானால் இன்றைய நாள் தீபாவளி திருநாளாக இருக்கலா‌ம், ஆனால் ஈழத் தமிழர்களுக்கு இன்றைய நாள் தீபாவளித் திருநாள் அல்ல. ஆகவே உண்மையான தமிழர்கள் இன்றைய நாளை தீபாவளி திருநாளாக கொண்டாடக் கூடாது.

புராண காலத்தில் நரகாசுரன் ராஜப‌‌க்சேவாக இருந்திருப்பான் போல் தெரிகிறது. தற்போதைய கலியுகத்தில் இரண்டு உருவங்களாக பிறந்துள்ளான். ஒன்று ராஜப‌‌க்சேயாகவும் மற்றது சர‌த் பொ‌ன்சேகராகவு‌ம் பிறந்திருக்கிறான். புராண காலத்தில் நரகாசுரன் பூமித்தாய்க்கும் திருமால் என்னும் தெய்வீக சக்திக்கும் பிறந்தவன். ஆனால் எங்கள் இனத்தை அழிக்கப் பிறந்த ராஜப‌‌க்சே நரகாசுரன், ட‌ன்டினா ‌திசநாயகேவுக்கு பிறந்தவன்.

புராணகால நரகாசுரனும் உலகெங்கிலும் உள்ள பெண்களை சிறையில் தான் அடைத்து வைத்திருந்தவன். ஆனால் ராஜபக்சேவோ தமிழ் பிரதேசம் எங்கும் உள்ள பெண்களை கொண்டு போய் சிறையில் அடைத்து வைத்திருக்கிறான்.

புராணகால நரகாசுரன் எங்கட நரகாசுரனை விட பரவாயில்லை. ஏன் என்றால் அவன் பெண்களை சிறையில் தான் அடைத்து வைத்திருந்தான், அவன் பெண்களை கொல்லவில்லை. ஆனால் எங்கட நரகாசுரன் பெண்களை முழுமையாகக் கொலை செய்யும் கொடியவன்.

நரகாசுரனுக்கு பல வரலாறுகள் உண்டு. இலங்கையில் பிறந்த இராவணன் இறந்த நாளையும் இந்துக்கள் தீபாவளித் திருநாளாக கொண்டாடுகிறார்கள். ஆனால் இராவணன் யாரையும் துன்பப்படுத்தவில்லை ஆகவே ராஜப‌‌க்சேவை இராவணனின் மறுபிறப்பாக கருத முடியாது. இவன் மகாகொடியவன் சின்னப்பிள்ளைகளையே பிடித்துக் கொலை செய்பவன். இவனை எந்த ஒரு யுகத்தின் நரகாசுரனோடும் ஒப்பிட முடியாது.

ராஜப‌‌க்சே நரகாசுரனின் பிடியில் சிக்கி ஈழ‌த்த‌மி‌ழ‌ர்க‌ள் படாத துன்பங்களையும், துயரங்களையும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அவன் பிடியிலிருந்து மீள வேண்டும். ராஜப‌‌க்சே ஒரு மனிதன் அல்ல. மனித உருவத்துக்குள் ஒளிந்திருக்கும் தமிழர்களை அழிக்கப் பிறந்த அசுரன். நம்மினம் முப்பது வருடங்களாக கொண்டாடிய தீபாவளித் திருநாள் எல்லாம் வெறுமையான வீட்டுக்கு வெளிச்சங்கள் ஏற்றிய நாட்களாகும்.

உண்மையில் இத்திருநாளில் நாங்கள் வீடுகளில் உள்ள விளக்குகளை அணைத்து விட்டு இந்த ஒரு நாளாவது இருட்டில் இருக்க வேண்டும். இறந்தவர்களுக்கு கூட விளக்குகள் ஏற்றக் கூடாது. ஏன் என்றால் இறந்தவர்களைக் கூட ராஜப‌‌க்சே நிம்மதியாக தூங்குவதற்கு விட மாட்டான்.

இன்றைய நாளில் புத்தாடைகளோ, ஆடம்பரங்களோ இன்றி, முடிந்தால் இன்று ஒருநாளாவது உண்ணாநிலை நோன்பு கொள்வோமாக!

தீபாவளி என்பது உண்மையில் ஆரியர்களின் பண்டிகை. ஆரியர்களுக்கும் திராவிடர்களுக்கும் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே உள்ள பகைமையும் அதனால் ஏற்பட்ட போர்களும் அவைபற்றிய கதைகளும் பல.....

முக்கியமானதொன்று இராமாயணம் - ஆரியனாகிய இராமன் திராவிடனான இராவனணை வென்ற கதைதான் இது.

அசுரர்கள் அல்லது அரக்கர்கள் என இக்கதைகளில் குறிப்பிடப்படுபவர்களெல்லாம் திராவிடர்கள்.

தீபாவளி என்பதும் இவ்வாறான ஒன்றே.

நரகாசுரன் எனப்படுபவனை அழித்த நாளை ஆரியர்கள் கொண்டாடுவது நியாயமாக இருக்கலாம். ஆனால் எமது இனத்தவன் ஒருவனை ஆரியர்கள் கொன்றதை நாமே கொண்டாடுவதைப் போல முட்டாளதனம் இருக்க முடியுமா?

இவ்வாறான முட்டாளதனம் எப்பொழுது மறையும்?

Well said Bro. NarakAsuran, sUrapathman, IrAvaNan are all considered as evil according to ariyans. Our ancestors were foolish enough to follow ariyan version of history. We have to change( atleast our next generation)

இராமாயணம் சொன்ன உண்மைகளில் ஒண்று தென்னிந்தியாவில் இருப்பவர்களை வானரங்கள் எண்று... அந்த வானரங்களின் உதவியால் இலங்கையை வெண்று திரும்பிய மன்னனுக்கு தீபம்களை வரிசையாக வைத்து வெளிச்சமூட்டி வரவேற்றலே தீபாவளி..

தென்னக வானரங்கள் கொண்டாட வேண்டிய பண்டிகை இது... :lol:

Edited by தயா

தீபா”வலி”யும் வெட்கம் கெட்ட தமிழரும்!

உலகில் வாழும் அனைத்து இனங்களும் பல வகையான விழாக்களை ஆண்டு தோறும் கொண்டாடி வருகின்றன. போரில் வெற்றி பெற்ற நாள், விடுதலை அடைந்த நாள், வருடத்தின் முதன் நாள், கடவுளோ அல்லது கடவுளின் தூதரோ பூமிக்க வந்ததாக நம்பப்படுகின்ற நாள் என்று மகிழ்ச்சியையும், வெற்றியையும், விடுதலையையும் குறிக்கின்ற பலவிதமான விழாக்களை மனித இனம் கொண்டாடி வருகிறது.

ஆனால் தான் தோற்கடிக்கப்பட்ட, அடிமைப்படுத்தப்பட்ட, இழிவுபடுத்தப்பட்ட ஒரு நாளை மகிழ்ச்சியாக கொண்டாடுகின்ற ஒரு வெட்கம் கெட்ட இனமும் இந்த உலகத்தில் உண்டு.

அது வேறு யாரும் அல்ல. கல் தோன்றி மண் தோன்றா காலத்து முன்னே வாளோடு தோன்றிய மூத்த குடி என்று தன்னை அறிமுகம் செய்கின்ற தமிழினம்தான் அது.

பொங்கல் போன்ற விழாக்களுக்கு கொடுக்காத முன்னுரிமையை தீபாவளிக்கு கொடுத்து, தன்னுடைய அடிமை சாசனத்தை ஆண்டு தோறும் புதுப்பித்துக் கொண்டிருக்கிற தமிழினமாகிய நாங்கள்தான் அந்த பெருமைக்குரியவர்கள்.

இதோ! இந்த ஆண்டும் தீபாவளி வந்து விட்டது. தமிழர்கள் புத்தாடை அணிந்து கோயிலுக்கு போகிறார்கள். நேரிலும், தொலைபேசியிலும் “தீபாவளி வாழ்த்துக்கள்” சொல்லி மகிழ்கிறார்கள். தமிழர் கடைகளில் தீபாவளி சிறப்பு விற்பனை விளம்பரப்படுத்தப்படுகின்றன. தீபாவளி திரைப்படங்கள் அணி வகுக்கின்றன. தொலைக்காட்சி, வானொலி போன்ற ஊடகங்கள் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளை வழங்குகிறன. புத்தக நிறுவனங்கள் தீபாவளி சிறப்பு மலர் வெளியிடுகின்றன. கொண்டாட்டம் களை கட்டுகிறது.

ஆனால் இந்த தீபாவளியின் பின்னணி வரலாறு எத்தனை பேருக்கு தெரியும்? எங்களின் மூதாதையர் அழிக்கப்பட்ட நாளை, தமிழினம் தோற்கடிக்கப்பட்ட நாளை நாம் கொண்டாடுகிறோம் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?

அதைப் பார்ப்பதற்கு முன் தீபாவளியை தமிழினத்திற்குள் திணித்த ஆரியப் பார்ப்பனர்கள் தீபாவளி குறித்து சொல்லுகின்ற கதையை சுருக்கமாகப் பார்ப்போம்.

முன்பொரு காலத்தில் ஒரு அரக்கன் இருந்தானாம். அவன் பூமியை பாயாக சுருட்டி கடலுக்குள் ஒளித்து வைத்துவிட்டானாம். படைப்புத் தொழிலை செய்வதற்கு பூமி இல்லையே என்று கவலைப்பட்ட பிரம்மா விஸ்ணுவிடம் முறையிட்டாராம். விஸ்ணு பன்றியாக மாறி அரக்கனோடு சண்டை போட்டு அவனை கொன்று பூமியை மீட்டாராம். பூமிக்கு தன்னை மீட்ட பன்றியின் மீதே காதல் வந்துவிட்டதாம். பன்றியும் சரியென்று சொல்ல இருவரும் உறவு கொண்டார்களாம். அதனால் ஒரு பிள்ளை பிறந்ததாம். அவன்தான் நரகாசுரன் என்ற அரக்கனாம். அவன் தவம் செய்து தன் தாயைத் தவிர வேறு யாராலும் கொல்லப்பட முடியாத வரம் பெற்றானாம். வரம் பெற்ற அரக்கன் எல்லோரையும் கொடுமைப்படுத்தினானாம். கடைசியில் விஸ்ணு கிருஸ்ணனாகவும் பூமாதேவி சத்தியபாமாவாகவும் அவதாரமெடுத்து நராகசுரனோடு போரிட்டார்களாம். கடைசியில் நரகாசுரன் பெற்ற வரத்தின்படி அவனுடைய தாயாகிய சத்தியபாமாவால் கொல்லப்பட்டானாம். அவன் கொல்லப்பட்ட நாள்தான் தீபாவளியாம்.

இப்படி ஒரு ஆபாசமான புராணக் கதையைக் அடிப்படையாகக் கொண்டு இந்த தீபாவளியை ஆரியப் பார்ப்பனியம் தமிழர்களுக்குள் திணித்தது. உருண்டையாக இருக்கின்ற பூமியை எப்படி பாயாக சுருட்டலாம் என்றோ, பூமியிலே இருக்கின்ற கடலுக்குள் எப்படி பூமியையே ஒளித்து வைக்கலாம் என்றோ, பூமியாலும் பன்றியாலும் உறவு கொள்ள முடியுமா என்றோ கேள்விகளை எழுப்ப முடியாதபடி தமிழினத்தை மடமைக்குள் தள்ளியது

ஆனால் தீபாவளி கொண்டாடப்படுவதன் பின்னணி வேறு. இங்கே நராகசுரன் என்று உருவகப்படுத்தப்படுபவன் யார்? புராணங்களில் அசுரர்கள் என்று சொல்லப்படுபவர்கள் யார்? இதற்கு பதில் தெரிந்தவர்கள் தீபாவளியை கொண்டாட மாட்டார்கள். தெரிந்த பின்பும் கொண்டாடினால் அவர்கள் சூடு சுரணை உள்ளவர்களாக இருக்க மாட்டார்கள்.

பாரத கண்டத்தின் வரலாறு என்பது ஆரிய திராவிடப் போரை அடிப்படையாகக் கொண்டது. திராவிடர்கள் எனப்படுகின்ற தமிழர்கள் ஆண்டு கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பை வந்தேறு குடிகளான ஆரியர்கள் மெது மெதுவாக ஆக்கிரமிக்கத் தொடங்கினார்கள். நில ஆக்கிரமிப்போடு, மொழி ஆக்கிரமிப்பும், பண்பாட்டு ஆக்கிரமிப்பும் நிகழந்தது. ஆரியர்களின் இந்த ஆக்கிரமிப்பை எதிர்த்து தமிழர்கள் நீண்ட காலம் வீரப் போர் புரிந்தார்கள். இந்தப் போர்கள்தான் புராணக் கதைகளில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடந்த போர்களாக வர்ணிக்கப்படுகின்றன.

சுர பானம் அருந்துகின்ற ஆரியர்கள் சுரர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். சுர பானம் அருந்தாத திராவிடர்கள் அசுரர்கள் என்று குறிப்பிடப்பட்டார்கள். அத்துடன் அசுரர்கள் தெற்கே வாழ்பவர்கள் என்றும் புராணக் கதைகளில் குறிப்பிடப்படுகிறார்கள். கிருஸ்ணனும் சரி அதற்கு முந்தையவனாக சொல்லப்படுகின்ற இராமனும் சரி, அசுரர்களை அழிப்பதற்கு தெற்கு நோக்கி படை எடுத்து வந்ததாகவே ஆரியர்களின் புராணங்கள் சொல்லுகின்றன. அசுரர்கள் கறுப்பாக இருப்பார்கள் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறார்கள். புராணக் கதைகளை ஆரய்ந்த பாரதத்தை சேர்ந்த நடுநிலையான ஆராய்ச்சியாளர்களும், மேல் நாட்டு ஆராய்ச்சியாளர்களும் அசுரர்கள் என்று திராவிடர்களையே குறிப்பிடப்படுகிறது என்று கூறி உள்ளார்கள்.

ஆரியர்களுக்கும் திராவிடர்களுக்கும் நடந்த போரை கூறுகின்ற கதையே இராமயணம். அன்று தமிழ் மண்ணை ஆண்ட மன்னன் இராவணனாக உருவகப்படுத்தப்படுகிறான். ஆக்கிரமிப்பு போர் நடத்திய ஆரியர்களின் மன்னனாக இராமன் இருக்கின்றான். தமிழ் மண்ணின் பல பகுதிகளை கைப்பற்றி தமிழ் மன்னர்களை ராமன் வெற்றி கொள்கிறான். கடைசியில் தமிழர்களின் தலைநகரான இலங்கை வரை சென்று பல சூழ்ச்சிகள் செய்து இராவணனையும் கொல்கிறான். இதுதன் இராமயணக் கதை. இராவணனை பேரரசனாகக் கொண்டே அன்று தமிழர்களின் அனைத்து அரசுகளும் இருந்தன என்பதை இராமாயணத்தை ஆராய்கின்ற போது புரிந்து கொள்ள முடிகிறது.

இராவணனின் வீழ்ச்சிக்கு பிறகு சில காலம் கழித்து ஆரிய ஆக்கிரமிப்பை எதிர்த்து போர் புரிந்த தமிழ் மன்னர்களில் ஒருவனே நரகாசுரன். நரகாசுரனும் மற்றைய பல மன்னர்களும் ஆரிய ஆக்கிரமிப்பை எதிர்த்து போர் புரிந்து வீர மரணம் அடைந்தார்கள்.

கடைசியில் தமிழினத்தை வெற்றி கொண்ட ஆரியர்கள் தமிழர்களின் வரலாற்றை திரிவுபடுத்தினார்கள். இன்று விடுதலைப் போராளிகளை ஆக்கிரமிப்பாளர்கள் பயங்கரவாதிகள் என்று சொல்வது அன்று ஆரியர்கள் அன்று தமிழின விடுதலைக்காக போரடியவர்களை அரக்கர்கள் என்று சொன்னார்கள். முறிக்கிய மீசையோடு கம்பீரமாக நின்று தமிழ் மண்ணைக் காக்க இறுதிவரை போராடி தன்னுயிரை ஈந்தவர்களுக்கு கொம்புகளும் கோரமான பற்களும் முளைத்து விட்டன.

ஒரு முறை சிந்தித்துப் பாருங்கள்!

சிங்களப் படைகள் யாழ் நகரைக் கைப்பற்றிய நாளை நாம் கொண்டாடுவோமா? நிச்சயமாகக் கொண்டாடுவோம், சிங்களம் தமிழினத்தை முழுமையாக வெற்றி கொண்டால். அப்பொழுது எங்களின் விடுதலைப் போரளிகளுக்கும் கொம்புகளும், கோரமான பற்களும் முளைக்கும். வெற்றி பெற்றவன் திணிப்பதே வரலாறு என்று ஆகின்றது. தோற்று போனவனின் வரலாறு அவனுடனேயே புதைகுழிக்குள் புதைக்கப்படுகிறது. எமது தமிழ் மன்னர்கள் அன்று தோற்றுப் போனார்கள். அதனால் அரக்கர்கள் ஆகி விட்டார்கள்.

இப்படி அரக்கன் ஆக்கப்பட்டு விட்ட ஒரு விடுதலைவீரனின் நினைவுநாளை நாம் மகிழ்ச்சியாகக் தீபாவளி என்று கொண்டாடுகிறோம். ஆரியர்கள் தமிழினத்தை வென்றது மாத்திரம் அன்றி, வென்ற நாளை தமிழர்களையோ கொண்டாட வைத்து விட்டார்கள். இதை உணர்ந்து தமிழினம் இந்த தீபாவளியை கொண்டாடுவதை நிறுத்த வேண்டும்.

இங்கே இன்னும் ஒன்றையும் குறிப்பிடுதல் பொருத்தமாக இருக்கும். இன்றைய நாகரீக உலகில் யாருடைய இறப்பும் கொண்டாடப்படுவதில்லை. எம்மை ஆயிரக்கணக்கில் கொன்றொழித்த எதிரிகள் கொல்லப்பட்ட நாளை நாங்கள் யாரும் கொண்டாடுவதில்லை. கோடிக்கணக்கில் மனிதர்களை கொன்ற கிட்லரின் இறப்பையும் யாரும் கொண்டாடுவதில்லை. இப்படி யாராக இருந்தாலும், ஒரு இறப்பு கொண்டாடப்படுவதில்லை.

ஆனால் நாம் எமக்காக உயிரை ஈந்த ஒரு மன்னனின் நாளை தீபாவளி என்று மகிழ்ச்சியாக கொண்டாடுகிறோம். இந்த நிலை மாறும் நாளே உண்மையில் தமிழினம் விடுதலை அடைந்த நாளாக இருக்கும்.

கு.கண்ணன்

பெரியார் திராவிடர்கழகம்

“தமிழ்க் குடில்”

6/28, புதுத்தெரு

கண்ணம்மாப்பேட்டை

தியாகராயர் நகர்

சென்னை – 6000 017

தீபாவளி என்பது உண்மையில் ஆரியர்களின் பண்டிகை. ஆரியர்களுக்கும் திராவிடர்களுக்கும் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே உள்ள பகைமையும் அதனால் ஏற்பட்ட போர்களும் அவைபற்றிய கதைகளும் பல.....

முக்கியமானதொன்று இராமாயணம் - ஆரியனாகிய இராமன் திராவிடனான இராவனணை வென்ற கதைதான் இது.

அசுரர்கள் அல்லது அரக்கர்கள் என இக்கதைகளில் குறிப்பிடப்படுபவர்களெல்லாம் திராவிடர்கள்.

தீபாவளி என்பதும் இவ்வாறான ஒன்றே.

நரகாசுரன் எனப்படுபவனை அழித்த நாளை ஆரியர்கள் கொண்டாடுவது நியாயமாக இருக்கலாம். ஆனால் எமது இனத்தவன் ஒருவனை ஆரியர்கள் கொன்றதை நாமே கொண்டாடுவதைப் போல முட்டாளதனம் இருக்க முடியுமா?

இவ்வாறான முட்டாளதனம் எப்பொழுது மறையும்?

Return of Rama to Ayodhya: Diwali also celebrates the return of Rama, King of Ayodhya, with his wife Sita and brother Lakshmana to Ayodhya after a 14 year exile, and a war in which he killed Ravana. It is believed that the people of Ayodhya lit ghee lamps along the way to light their path in the darkness. Since Ram traveled from South India to his kingdom in North India, he passed through the south earlier. This is the reason why the festival is celebrated a day earlier in South India. Diwali usually comes 19 or 20 days after Dasara.

The Killing of Narakasura: Celebrated as Narak Chaturdashi, one day before Diwali day, it commemorates the killing of Narakasura, an evil demon who created havoc, by Krishna's wife Satyabhama. This happened in the Dwapara Yuga during this time of Krishna's avatar. In another version, the demon was killed by Krishna ( Krishna provokes his wife Satyabhama to kill Narshna defeating Indra: Govardhan Puja is celebrated the day after Diwali. It is the day Krishna defeated Indra, the deity of thunder and rain. As per the story, Krishna saw huge preparations for the annual offering to Lord Indra and questions his father Nanda about it. He debated with the villagers about what their 'dharma' truly was. They were farmers, they should do their duty and concentrate on farming and protection of their cattle. He continued to say that all human beings should merely do their 'karma', to the best of their ability and not pray for natural phenomenon. The villagers were convinced by Krishna, and did not proceed with the special puja (prayer). Indra was then angered, and flooded the village. Krishna then lifted Mt Govardhan and held it up as protection to his people and cattle from the rain. Indra finally accepted defeat and recognized Krishna as supreme. This aspect of Krishna's life is mostly glossed over[citation needed] but it set up the basis of the 'karma' philosophy later detailed in the Bhagavat Gita.

http://en.wikipedia.org/wiki/Diwali

SO WHAT?

What are you trying to say?

ஈழவன்!

ஈழவன் எண்டு பேரை வைச்சுக்கொண்டு... தமிழ்ல எழுத ஏலாது... அல்லது வராது.... நல்லது....

விக்கிப்பீடியாவில நாங்கள் விசயங்களை அறியலாம், ஆனால் அவை சரியாயிருக்குமா எண்டது கேள்வி...

அது சரி இப்ப நீங்கள் என்ன சொல்லவாறியள்??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.