Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராசராசன் ரசித்த பாடல்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வா பொன்மயிலே மிக நல்ல பாடல் ராசராசன்.. இணைப்புக்கு நன்றி..! :D

  • Replies 58
  • Views 22.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

வா பொன்மயிலே மிக நல்ல பாடல் ராசராசன்.. இணைப்புக்கு நன்றி..! :lol:

வரவேற்கிறேன் இசைக்கலைஞன் அண்ணா. :D

  • தொடங்கியவர்

இயக்குனர் வம்சியின் இயக்கத்தில் உருவான ஆலாபனா (1984) என்ற தெலுங்குப் படத்தில் மோகன் மற்றும் பானுப்பிரியா ஆகியோர் நடித்திருந்தனர். இயக்குனர் வம்சியின் படம் என்றால் அதற்கு இசையமைத்தவர் அனேகமாக இளையராஜாவாகத்தான் இருப்பார். அந்த அளவுக்கு வம்சி ‍- இளையராஜா கூட்டணி தெலுங்கில் வெற்றி பெற்றது. தமிழுக்கு அடுத்து இளையராஜா அதிகம் இசையமத்ததும் தெலுங்கில் தான். இந்தப் படம் சலங்கையில் ஒரு சங்கீதம் (1985) என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. இந்தப் படத்திலிருந்து அற்புதமான ஒரு நாட்டியப் பாடல் அடுத்து வருகிறது. S. P. பாலசுப்பிரமணியம் மற்றும் S. ஜானகி ஆகியோர் பாடியது. வம்சி - இளையராஜா - பாலு - ஜானகி கூட்டணியின் அற்புதமான படைப்பு இது. பாடலைக் கேட்கும் போதெல்லாம் ஆகாயம் வரைக்கும் என்னுள்ளம் பறக்கும். :D

ஆ... கணுலலோ கலல நாச்செலி (தெலுங்கு)

http://www.youtube.com/watch?v=qnB_UgpdgJ8

பாடலை தமிழில் கேட்பதற்கு இங்கே அழுத்துங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்.ராசன் அண்ணா மிகவும் நன்றாகவே உங்களின் பாடல் தெரிவுகள்.இருவருக்கிடையில் போட்டியே வைக்கலாம் போல் உள்ளது.நன்றி தொடருங்கள். :D:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பூந்தளிர் (1979) என்ற படத்தில் இசைஞானி இளையராஜாவின் இசையில் S. P. பாலசுப்பிரமணியம் பாடிய அற்புதமான ஒரு பாடலை அடுத்து இணைக்கிறேன். பாடல் வரிகள் பஞ்சு அருணாசலம் அவர்களுக்குச் சொந்தமானவை. பாலு ஒவ்வொரு வரிகளையும் உருகி உருகி அனுபவித்துப் பாடி இருப்பார். இசையமைப்பில் வயலினை இளையராஜா நன்கு பயன்படுத்தி இருப்பார். அனேக இரவுகளில் தனிமையில் இப் பாடலைக் கேட்டுக்கொண்டு என் அன்புக்குரியவளின் இனிய நினைவுகளுடன் தூங்கிப் போனதுண்டு. :D

மேனியின் மஞ்சள் நிறம் வான் அளந்ததோ

பூமியின் நீல நிறம் கண் அளந்ததோ

அழகே சுகம் வளர வளர நினைவே தினம் பழக பழக

உரிமையில் அழைக்கிறேன் உயிரிலே கலந்து மகிழ

வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது

என்றும் நீ இன்றி நானில்லை நானின்றி நீயில்லை கண்மணி

வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது

வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது

உந்தப்படம் நான் அங்கையிருக்கேக்கை பள்ளிக்கூடம் கட் அடிச்சுப்போட்டு லிடோ தியேட்டரிலை பாத்த படம் :lol:

  • தொடங்கியவர்

நன்றி குமாரசாமி அண்ணை, யாகினி உங்கள் எண்ணப் பகிர்வுகளுக்கு. :D

  • தொடங்கியவர்

ஊரு விட்டு ஊரு வந்து (1990) என்ற படத்தில் இசைஞானி இளையராஜா இசையமைத்து S. ஜானகி அவர்களுடன் இணைந்து பாடிய பாடல் அடுத்து வருகிறது. பதினாறு வயதினிலே தாய்மண்ணை பிரிந்துவிட வேண்டிய சூழ்நிலை. இந்தப் பாடலைக் கேட்கின்ற போதெல்லாம், அந்தப் பனைமரங்கள், வயல்கள், குச்சொழுங்கைகள், ஒற்றையடிப் பாதைகள், மரங்கள், அணில்கள், கிளிகள், குயில்கள், சில்வண்டுகள், தவளைகள், தும்பிகள், கம்பளிப் பூச்சிகள் எல்லாம் கண்களுக்குள் பரந்து விரிகின்றன. அன்று கிறிக்கட்டும், கால்பந்தும் ஆடிய நண்பர்கள் இனி ஒன்றாக வரப்போவதில்லை, அன்று கேலிபேசிய நண்பிகளை இனி ஒன்றாக காண்போவதில்லை என்ற ஏக்கமும் துக்கமும் மனதை வாட்டும். அந்த இனிமையான தாயகத்தின் சுகமான நினைவுகளை மீட்டித்தரும் பாடல் இது.

சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா?

Edited by ராசராசன்

நன்றி ராசராசன்...இந்த பாடலை இணைத்தமைக்கு...எனக்கு பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று.

ஒவ்வொரு தடவையும்

தோழிகளை அணைச்சு சொல்லி சொல்லி ரசிச்சு

ஆட்டம் போட முடியலையே

ஒரு எந்திரத்தை போல அட இங்கு உள்ள வாழ்க்கை

இத எங்கே போயி சொல்ல மனம் இஷ்டப்படவில்லை

நம் ஊரை போல ஊரும் இல்லை

இந்த வரிகளை கேட்கும் போது என்னால் தாங்க முடிவதில்லை.

உங்கள் ஒவ்வொரு பாடல் தெரிவுகளும் நன்றாக உள்ளன....

நன்றி

  • தொடங்கியவர்

நன்றி ஈழமகள் உங்கள் எண்ணப் பகிர்வுக்கு... :)

  • தொடங்கியவர்

கூந்தல் மலரில் தேனை எடுக்க காத்துக் கிடந்தேன் கால்கள் கடுக்க இதயம் துடிக்க. அம்மா (1982) என்ற திரைப்படத்தில் சங்கர் - க‌ணேஷ் இசையமைப்பில் S. ஜானகி அவர்களுடன் S. P. பாலசுப்பிரமணியம் இணைந்து பாடிய ஒரு அருமையான மழைப் பாடல் ஒன்று அடுத்து வருகிறது. பாடல் வரிகள் கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு சொந்தமானது. எனக்கு அறிவு தெரிந்து முதன் முதல் யாழ்தேவியில் கொழும்புக்கு வந்த நினைவுகளை அள்ளித்தரும் பாடல் இசை இது. இந்த பாடலின் இசையைக் கேட்கும் போது 'யாழ்தேவி ட்ரெயின்', 'ஒறேஞ்ச் பார்லி சோடா', 'பெப்பர் மின்ட்', 'சூயிங் கம்' எல்லாம் மீண்டும் ஞாபகம் வரும். அந்தக் காலங்களில் பாடல் வரிகளில் விளக்கம் இல்லை.

நனைந்த பூவில் வண்டு

ஒதுங்கும் போது ஒரு சோதனை

மார்கழி மாதத்து வேதனை

மடி மீது சாயும் இந்நேரம்

மழைக்கால ஆசை தோன்றும்

இடைவெளி குறைகின்ற நெருக்கம்

இந்த இரவினில் இளமைக்கு பசிக்கும்

மடிமீது சாய்ந்து இருந்தவர்களுக்குத் தெரியும் அந்த மழைக்கால ஆசை. பாடல் வரிகள் ஒவ்வொன்றும் என்னை சிலிர்ப்பின் உச்சிக்கே கொண்டுபோய் விடுகின்றது. கூந்தல் மலரில் தேனை எடுப்பதுவும் சுகம் கொடுப்பதுவும் சுகம். :)

மழையே மழையே இளமை முழுதும்

  • கருத்துக்கள உறவுகள்
:) ம்ம்ம்..மிக நல்ல..நல்ல பாடல்கள் எல்லாம் இணைக்கிறீர்கள்.ராசன் அண்ணா உங்கள் பொறுமைக்கு நல்ல ஒரு பரிசு வெகு விரைவில் கிடைக்கும் கவலைப் படாதீர்கள்...பெரியவர்கள் சொல்லக் கேள்விப்பட்டுள்ளேன் பொறுத்தார் பூமி ஆள்வார்; எண்டு..அதுபோல் நீங்களும் இருப்பீர்கள்..நன்றி. :lol:
  • தொடங்கியவர்

உங்கள் வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி யாயினி. :)

  • தொடங்கியவர்

மனதில் உறுதி வேண்டும் (1987) என்ற படத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவின் இசையில் K. S. சித்ரா மற்றும் K. J. ஜேசுதாஸ் ஆகியோர் இணைந்து பாடிய பாடலை அடுத்து இணைக்கிறேன். பாடல் வரிகள் கவிஞர் வாலிக்கு சொந்தமானவை. இளையராஜாவின் இசையில் உருவான அற்புதமான ஒரு நாட்டியப் பாடல் இது.

சங்கத்தமிழ் கவியே சந்தங்கள் சொல்லும் இசைக்குயிலே

தன்னந்தனியாக தவித்தால் தாகம் அடங்கிடுமோ

மாதுளம் பூவிருக்க அதற்குள் வாசனை தேனிருக்க

பாதியை நானெடுக்க மெதுவாய் மீதியை நீ கொடுக்க

காதலன் கண்ணுறங்க தலைவி கூந்தலில் பாய் விரிக்க

ஒருபுறம் நான் அணைக்க...தழுவி மறுபுறம் நீ அணைக்க

சாத்திரம் மீறிய கீர்த்தனம் பாட...சுகங்களில் லயிப்பவள் நான்

சங்கத்தமிழ் கவியே...சங்கத்தமிழ் கவியே

பூங்குயில் பேடைதனை சேரத்தான் ஆண்குயில் பாடியதோ

ஓடத்தை போல் நானும் ஆடத்தான் ஓடையும் வாடியதோ

காதலன் கைதொடத்தான் இந்த கண்களும் தேடியதோ

நீ வரும் பாதையெல்லாம்...அங்கங்கே பார்வையை ஓட விட்டேன்

தோழியர் யாவரும் கேலிகள் பேச...தினம் தினம் நான் தவித்தேன்

சங்கத்தமிழ் கவியே சந்தங்கள் சொல்லும் இசைக்குயிலே

தன்னந்தனியாக தவித்தால் தாகம் அடங்கிடுமோ

காதலன் கண்ணுறங்க தலைவி கூந்தலில் பாய் விரிக்கும் காட்சியை இளையராஜா அற்புதமாக எம் மனக்கண்கள் முன்பாக இசையாலே நிறுத்துகின்றார். இறுதியில் தன் பங்கிற்கு வாலியும் ஆண்குயில் தான் தன் பேடைதனைச் சேர பாடுகின்றது என்ற உண்மையச் சொல்லியிருக்கிறார். இரண்டாவது சரணம் முழுவதும் தலைவன் ‍ தலைவியின் ஏக்கத்தையும் தவிப்பையும் பாடல் வெளிப்படுத்தும் விதம் அருமை. தலைவி வரும் பாதையில் தலைவன் ஏக்கத்தோடு எதிர்பார்த்துக் காத்திருப்பதும், தோழியரின் கேலிப் பேச்சால் தலைவி தவித்துப் போவதும் காதலின் மரபன்றோ! :)

சங்கத்தமிழ் கவியே சந்தங்கள் சொல்லும் இசைக்குயிலே

  • தொடங்கியவர்

பாரதிராஜா - இளையராஜா - ஜானகி - கங்கை அமரன் கூட்டணியில் உருவான அருமையான என்றும் மறக்க முடியாத ஒரு பாடல் அடுத்து வருகிறது. இனி இப்படி ஒரு படைப்பு வராதா என்று மனம் ஏங்கும் வகையில் இளையராரஜாவின் குரலும் இசையும் இருக்கும். அதுகேற்றபடி ஜானகியும் ஈடுகொடுத்துப் பாடியிருப்பார். கல்லுக்குள் ஈரம் (1980) என்ற படத்தில் இளையராஜா இசையமைத்து S. ஜானகி அவர்களுடன் இணைந்து பாடிய பாடல் இது. பாடல் வரிகளை கவிஞர் கங்கை அமரன் எழுதியிருக்கின்றார். பாடலின் இசை என்னை ஒரு கிராமத்துக்கு கூட்டிச் சென்றுவிடுகிறது. :)

சிறு பொன்மணி அசையும்

  • தொடங்கியவர்

புதுமைப் பெண் (1984) என்ற படத்தில் இளையராஜா அவர்களின் இசையமப்பில் உமா ரமணன் மற்றும் K. J. ஜேசுதாஸ் ஆகியோர் பாடிய பாடல் ஒன்று அடுத்து வருகின்றது. கேட்கக் கேட்க என்றுமே தெவிட்டாத பாடல் இது.

கட்டில் ஆடாமல் தொட்டில்கள் ஆடாது

கண்ணே வெட்கத்தை விட்டுத் தள்ளு

கன்னம் பூம்பட்டு வெட்கத்தை நீ தொட்டு

நெற்றிப் பொட்டொன்று வைத்துக் கொள்ளு

பாலூறும் வாயூறும் பார்த்தாலே வாயூறும்

அருந்த நேரம் சொல்லு

பாலூறும் வாயூறும் பார்த்தாலே வாயூறும்

அருந்த நேரம் சொல்லு

பெண்மையே பேசுமா பெண்மையே பேசுமா

மௌனம்தான் பள்ளியறை மந்திரமா

கட்டில் ஆடாமல் தொட்டில்களால் ஆடமுடியாது என்ற அருமையான தத்துவத்தைச் சொல்லித்தரும் பாடல் இது. நாணத்தினால் சிவந்துவிட்ட தன் பட்டுக் கன்னங்களைத் தொட்டு பொட்டொன்று வைத்துக்கொள்ளும்படி பெண் சொல்லும் வரிகள் என்னைக் கிறங்கடிக்கும். பள்ளியறையில் மௌன மந்திரம் பேசும் பெண்மையின் மென்மையையொத்த இளையராஜாவின் மெலடி இசை அற்புதம். வானம் சொல்லாமல் மேகங்கள் இல்லாமல் இங்கே தேன்மாரி பெய்கின்றதே. :o

கஸ்தூரி மானே கல்யாணத் தேனே

  • தொடங்கியவர்

எங்க ஊரு ராசாத்தி (1980) என்ற படத்தில் கங்கை அமரன் அவர்களுடைய இசையமைப்பில் மலேஷியா வசுதேவன் மற்றும் S. P. ஷைலஜா ஆகியோர் இணைந்து பாடிய சோகப் பாடல் ஒன்று வருகிறது. பாடலை கவிஞர் முத்துலிங்கம் எழுதியிருக்கிறார். எண்பதுகளின் பிரபலமான சோகப் பாடல் இது. விபரம் புரியாத அந்த நாள்களில் எனக்குள்ளும் ஏதோவொரு சோக உணர்வு ஏற்பட்டதாக உணர்கின்றேன். :rolleyes:

பொன்மானைத் தேடி நானும் பூவோடு வந்தேன்

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் பிடித்தமான பாடல். ஆனால் படம் கேள்விப்படாத ஒன்று. பாடலில் வரும் பெண் ராதிகா போலத் தெரிகின்றது. ஆண் யாருங்கோ?

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்......பலதடவைகள் இந்தப் பொன் மானைத்தேடி என்னும் பாடலை நான் இணைக்க திரிந்தேன்....பின்னர் ராசன் அண்ணா எனக்கு அடிக்க வந்தாலும் எண்டு போட்டு பேசாமல் இருந்து விட்டேன்..என்ன திடீர் எண்டு இ;ப்படி பாடல்கள் வருகிறது.?மிகவும் நன்றி உங்கள் பாடல் தெரிவுகளுக்கு ராசன் அண்ணா..

  • தொடங்கியவர்

மிகவும் பிடித்தமான பாடல். ஆனால் படம் கேள்விப்படாத ஒன்று. பாடலில் வரும் பெண் ராதிகா போலத் தெரிகின்றது. ஆண் யாருங்கோ?

நடிகர் சுதாகர் :rolleyes:

ம்ம்ம்......பலதடவைகள் இந்தப் பொன் மானைத்தேடி என்னும் பாடலை நான் இணைக்க திரிந்தேன்....பின்னர் ராசன் அண்ணா எனக்கு அடிக்க வந்தாலும் எண்டு போட்டு பேசாமல் இருந்து விட்டேன்..என்ன திடீர் எண்டு இப்படி பாடல்கள் வருகிறது.? மிகவும் நன்றி உங்கள் பாடல் தெரிவுகளுக்கு ராசன் அண்ணா..

அப்படி ஒன்றும் பெரிதாக இல்லை. எனக்கு பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று. :wub:

  • தொடங்கியவர்

ஹிந்திப் பட இசையமைப்பாளர் பாப்பி லாஹிரி (Bappi Lahiri) அவர்களுடன் சங்கர் - கணேஷ் இணைந்து இசையமைத்த அபூர்வ சகோதரிகள் (1983) என்ற படத்தில் இருந்து S. ஜானகி அவர்களுடன் S. P. பாலசுப்பிரமணியம் இணைந்து பாடிய பாடல் ஒன்றை அடுத்து இணைக்கிறேன். சொந்தங்கள் பந்தங்கள் வாழ்த்திட இங்கே வா..... :)

நாள்தோறும் எந்தன் ஆராதனை

நெஞ்சோடு உந்தன் பூவாசனை

நான் கொண்ட நாணம் பொல்லாதது

தானாக ஏதும் சொல்லாதது

காலம் இது கனிகின்றது

மடிதனில் விழ.....மயக்கங்கள் வர

மடிதனில் விழ......மயக்கங்கள் வர

எங்கெங்கே நீதான் நான் அங்கங்கே

Edited by ராசராசன்

  • கருத்துக்கள உறவுகள்

அபூர்வ சகோதரிகள் படத்தில் சங்கர்-கணேஷ் இணைந்து வேலை செய்தார்களா? தகவலுக்கு நன்றிகள் ராசராசன்..!

  • கருத்துக்கள உறவுகள்
:):):)
  • தொடங்கியவர்

அடுத்து எனக்கு மிக மிகப் பிடித்த பாடல் ஒன்றை இணைக்கின்றேன். கல்யாணப் பெண்ணாக உன்னைப் பார்த்தது கார்மேகம் மாணிக்கப் பந்தல் போட்டது. காஷ்மீர் காதலி (1983) என்ற படத்தில் G. K. வெங்கடேஷ் இசையமைப்பில் என் அபிமான பாடகர் P. ஜெயச்சந்திரன் அவர்களுடன் P. சுசீலா இணைந்து பாடிய பாடல் இது.

நான் கொண்ட செந்தூரம் உந்தன் நெஞ்சிலே

நாள்தோறும் சேரட்டும் கொஞ்சம் அன்பிலே

நான் கொண்ட செந்தூரம் உந்தன் நெஞ்சிலே

நாள்தோறும் சேரட்டும் கொஞ்சம் அன்பிலே

நாணத்தில் நானும் மோக‌த்தில் நீயும்

நாணத்தில் நானும் மோக‌த்தில் நீயும்

போராடும் காட்சிதன்னை எனென்பதோ

பாடலிலே பெண் சொல்லுகின்றாள் ஒவ்வொரு நாளும் த‌ன்னுடைய நெற்றிக் குங்குமம் அவனுடைய நெஞ்சிலே சேரவேண்டுமாம். மோகத்தில் அவனும் நாணத்தில் அவளும் பள்ளியறையிலே போராடும் காட்சியை அவள் எண்ணிப் பார்க்கிறாள். விரசமில்லாமல் ஒரு காதலியின் எதிர்பார்ப்புக்களை பாடல் வெளிப்படுத்தும் விதம் அழகு. இந்தப் பாடல் வரிகளைக் கேட்கின்றபோதெல்லாம் எனக்குள்ளேஒரு இன்பப் பரவசம் ஏற்படுகின்றது... :)

சங்கீதமே என் தெய்வீகமே

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

வசந்த காலம் (1981) என்ற படத்தில் சங்கர்-கணேஷ் இசையில் S. P. பாலசுப்பிரமணியம் அவர்கள் நடிகர் சுருளிராஜனுக்காக பாடிய நகைச்சுவைப் பாடல் ஒன்றை அடுத்து இணைக்கிறேன்.

கொஞ்சம் ஒதுங்கு நான் தனியா பேசணும்

http://www.youtube.com/watch?v=1UdRe_39054

  • தொடங்கியவர்

ஆயிரம் முத்தங்கள் (1982) என்ற படத்தில் சங்கர்-கணேஷ் இசையில் வாணி ஜெயராம் மற்றும் S. P. பாலசுப்பிரமணியம் ஆகியோர் இணைந்து பாடிய பாடல் அடுத்து வருகிறது. பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர் கவிஞர் வாலி. பாடலை வாணி அவர்களும் பாலு அவர்களும் அனுபவித்துப் பாடிருப்பார்கள். "கற்களும் கற்கண்டா என் ஆசை காதலி கைப்பட்டா" என்ற வரிகளைக் கேட்கின்ற போது நான் எங்கேயோ போய்விடுகிறேன். :lol:

சேலை குடை பிடிக்க காத்து சில்லுன்னு வீசுதடி

http://www.youtube.com/watch?v=oOzSblhgU6Y

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.