Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிறுத்தப்பட்ட புதினம் இணையதளம் புதிய பெயரில் தொடக்கம்!

Featured Replies

முன்னுக்கு நாற்காலீயில் அமர்ந்து கொண்டு நிற்க்கும் சில "மூத்தவர்கள்" மனசு வைக்க வேண்டும்.

கசப்பாண உண்மை தான்

ஆனால் ஏன் இந்த கொள்கை அற்ற இந்த ஒரு சில மூத்ததுகளை நாம் இன்னும் முன்னால் உட்காரவைத்திருக்கின்றோம் ???

மே 18க்கு பின் நடைபெற்ற மாற்றங்களில் கனேடிய தமிழ் வானொலிகள் வழமையாக கட்டளைகளுக்கு பணியாது தாமே ஊடகங்கள் தொடர்பான விடயங்களை கையாள்வது சற்று மாறுதல் எனலாம்.

மே18 வரை இவர்கள் சுயமாக இயங்க புலிகள் தடையாக இருந்தார்கள் என்கின்றீர்களா ?? அல்லது

மே 18 பின்னர் புலிகளின் தலைமைக் கட்டளை இல்லாத போது உருவான போலிகளின் கட்டளைக்கு பணியவில்லை என்கின்றீர்களா ??

இதிலும் புலிகள் மேல் பழிபோட்டு நழுவுகின்றீர்களா ??

ஆனால் அவையும் "பொது" சொத்து என்ற நிலையிலிருந்து "தனி" சொத்து ஆவது என்பது கூட தவிர்க்க முடியாத ஒன்றாகும் என்றே தோன்றுகின்றது.

பொதுச் சொத்து என்று ஒன்று இருந்ததா ??

பொதுமக்களால் உருவாக்கப்பட்ட வானொலிகள் தொலைக்காட்சிகளே தனிச் சொத்துகளாகவே இருக்கின்றன ??

"தனி" உரிமை கொண்டவர்களால் தரமான நிகழ்வுகளை வழங்க முடியும் ஆனால் தமிழ் தேசியத்தை பற்றி அக்கறை கொள்ள முடியுமா? என்பது கேள்விக்குறியே!

தற்போதய சூழலில் தமிழ்த்தேசியம் இல்லாத ஊடகங்கள் எமக்கு தேவையா ?

தரமான நிகழ்ச்சிக்காகவா நமக்கு இப்போது ஊடகங்கள் வானொலிகளும் தொலைக்காட்சிகளும் தேவை

தரமான நிகழ்ச்சிகளை உருவாக்கும் இவர்களின் இயலாமைக்கு புலிகள் எப்படி பொறுப்பாகமுடியும் ?

அரசாங்கத்தில் வேலை பார்ப்பவர்கள் சோம்பேறிகளாக இருப்பது ஏன் என்று தெரியும் தானே ??

புதினம் நீயுஸ் உதயமான காரணம் தீர்க்கமாக அறிந்துகொள்ள முடியவில்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கசப்பாண உண்மை தான்

ஆனால் ஏன் இந்த கொள்கை அற்ற இந்த ஒரு சில மூத்ததுகளை நாம் இன்னும் முன்னால் உட்காரவைத்திருக்கின்றோம் ???

உண்மையில் யாரும் விரும்பி அவர்களை அங்கு உட்காரவைக்கவில்லை. மாறாக மாற்றீடாக யாரும் உட்காரத்தயாாராய் இல்லை. அதுவே மூல காரணம். பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க யாரும் தயார் இல்லை. அதுவே இன்றைய முக்கிய பிரச்சினையாக உள்ளது.

மே18 வரை இவர்கள் சுயமாக இயங்க புலிகள் தடையாக இருந்தார்கள் என்கின்றீர்களா ?? அல்லது

மே 18 பின்னர் புலிகளின் தலைமைக் கட்டளை இல்லாத போது உருவான போலிகளின் கட்டளைக்கு பணியவில்லை என்கின்றீர்களா ??

இதிலும் புலிகள் மேல் பழிபோட்டு நழுவுகின்றீர்களா ??

இதில் என்னை இழுத்துவிட நினைக்கிறீர்களா? இல்லை உங்கள் சந்தெகத்தை கேட்கின்றீர்களா? என்று எனக்கு தெரியவில்லை. கனேடிய தமிழ் ஊடங்கள் ஒரு போதும் புலிகளால் கட்டுப்படுத்தப்படவில்லை. அப்படி நடந்திருந்தால் என்னவோ ஒழுங்காக இருந்திருப்பார்கள். ஆனால் புலிகளில் பெயரில் இயங்கியோராலும் பின்னர், நாம் தான் தலமை, அவர் துரொகி என்று சொல்லித்திருந்தவர்ககளின் கட்டளைக்களுக்கு பணிய மறுத்தமையையே நான் குறிப்பிட்டேன்.

பொதுச் சொத்து என்று ஒன்று இருந்ததா ??

பொதுமக்களால் உருவாக்கப்பட்ட வானொலிகள் தொலைக்காட்சிகளே தனிச் சொத்துகளாகவே இருக்கின்றன ??

அவை பொதுச் சொத்துக்களாகவே பார்க்கப்படுகின்றன. அதுவே உண்மையும் கூட அத்தனை ஊடக நிறுவனங்களின் வளர்ச்சியிலும் தமிழ் மக்களின் உழைப்பும் கலந்தே உள்ளது.

தற்போதய சூழலில் தமிழ்த்தேசியம் இல்லாத ஊடகங்கள் எமக்கு தேவையா ?

தரமான நிகழ்ச்சிக்காகவா நமக்கு இப்போது ஊடகங்கள் வானொலிகளும் தொலைக்காட்சிகளும் தேவை

தரமான நிகழ்ச்சிகளை உருவாக்கும் இவர்களின் இயலாமைக்கு புலிகள் எப்படி பொறுப்பாகமுடியும் ?

அரசாங்கத்தில் வேலை பார்ப்பவர்கள் சோம்பேறிகளாக இருப்பது ஏன் என்று தெரியும் தானே ??

நல்லது நண்பரே, நீங்கள் சொல்வது சரியோ ஆனாலும், நம் ஊடகங்கள் தங்களால் முடிந்த அளவுக்கு தேசியம் பேசின, பேசிக்கொண்டிருக்கின்றன, ஆனால் அவர்கள் பக்கத்து நியாயங்களையும் நாம் புரிந்து கொண்டே ஆக வேண்டும். கனடாவில் ரி.வி.ஐ பார்ப்பவர்களை விட சன் ரீ.வி பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகம். காரணம் தேசியம் அல்ல. பொழுது போக்கு, எம்மவர்கள், எம் மக்கள் மந்தைக் கூட்டங்கள். இவர்களை பார்த்து புறக்கணிப்பு பற்றி எல்லாம் பேசினோம் என்கின்ற போது நாமே வெட்கி தலை குனிந்து கொள்கின்றோம்.

வெறுமனே நாம் ஊடகங்கள் மீது மட்டும் குறை சொல்ல முடியாது. புதினம் நிறுத்தப்பட்டதற்க்கு ஆயிரம் விளக்கம் சொல்லலாம் ஆனால் புதினம் இணையத் தனி மனித உழைப்பாகது. அதில் எம் மக்களின் எமது தேசத்தின் தொண்டர்களில் அர்பணிப்புமிக்க ஊடக வியலாளர்ககளின் உழைப்பு மூலதனமாக்கப்பட்டது.

இப்படித்தான் எல்லாம்...!

இதில் என்னை இழுத்துவிட நினைக்கிறீர்களா? இல்லை உங்கள் சந்தெகத்தை கேட்கின்றீர்களா? என்று எனக்கு தெரியவில்லை.

நீங்கள் விளக்கமாக எழுதாததால் புலிகளை சாடுகின்றீர்களோ என்று கேட்டேன் மன்னிக்கவும்

ஏன் என்றால் இப்போது எல்லோரும் எல்லாவற்றுக்கும் புலிகளின் மேல் பழியைப் போட்டு விட்டு நழுவுகின்றார்கள் தாங்கள் நல்லவர்கள் போல்

கனேடிய தமிழ் ஊடங்கள் ஒரு போதும் புலிகளால் கட்டுப்படுத்தப்படவில்லை. அப்படி நடந்திருந்தால் என்னவோ ஒழுங்காக இருந்திருப்பார்கள். ஆனால் புலிகளில் பெயரில் இயங்கியோராலும் பின்னர், நாம் தான் தலமை, அவர் துரொகி என்று சொல்லித்திருந்தவர்ககளின் கட்டளைக்களுக்கு பணிய மறுத்தமையையே நான் குறிப்பிட்டேன்.

வெறுமனே நாம் ஊடகங்கள் மீது மட்டும் குறை சொல்ல முடியாது. புதினம் நிறுத்தப்பட்டதற்க்கு ஆயிரம் விளக்கம் சொல்லலாம் ஆனால் புதினம் இணையத் தனி மனித உழைப்பாகது. அதில் எம் மக்களின் எமது தேசத்தின் தொண்டர்களில் அர்பணிப்புமிக்க ஊடக வியலாளர்ககளின் உழைப்பு மூலதனமாக்கப்பட்டது.

புதினம் கூட மே 18 க்கு பின்னர் அதன் புலி எதிர்ப்புக்கொள்கை யாரால் உருவாக்கப்பட்டது ?

வழுதி புழுதி என்று புதினம் தன்னை யார் என்று சுயவிமர்சனம் செய்து கொண்டதே ?

அப்படியானால் புதினம் இதுவரை வன்னித் தமிழர்களின் உழைப்பைப் பயன்படுத்தி நாறடித்திருக்கின்றதே ?

புதினத்தை யாரும் முடக்கவில்லை மாறாக அது விலை போயிருக்கின்றது என்பது அதன் புதிய வரவுகள் காட்டுகின்றன

இதைப் படியுங்கள்

தமிழீழச் செய்திகளைத் தருவதில் பிரபலமாகத் திகழ்ந்த puthinam.com புதினம் இணைய தளம் புதினப்பலகை எனும் பெயரில் புதிய நிர்வாகத்தின் கீழ் மீண்டும் செயல்படத் துவங்கியுள்ளதாக அதில் முன்பு பணியாற்றியவர்கள் அறிவித்துள்ளனர்.

வன்னிப் போர்க்களச் செய்திகளை தங்கள் சிறப்புச் செய்தி யாளர் மூலம் உடனுக்குடன் வெளியிட்டு வந்தது புதினம். ஆனால் முள்ளிவாய்க்காய் துயரங்களுக்குப் பின் பல மாறுபாடுகளும் குழப்பங்களும் நீடித்ததால் புதினம் பரவலான விமர்சனத்துக்குள்ளானது. ‘முன்னாலே சென்றோரின் பின்னாலே சென்றோரின் பின்னாலே…’ என்று புதினத்தின் குரலில் மாறுதல் தொனிக்கத் துவங்கியதுமே கடும் விமர்சனங்கள் கிளம்பின.

அதன் பிறகும் தொடர்ந்து இயங்கி வந்த இந்தத் தளம், திடீரென்று முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந் நிலையில் புதினம் என்ற பெயர் மற்றும் சின்னத்தைப் பயன்படுத்தி ஒரு இணையத்தளம் வெளியானது. ஆனால் அது ஒரிஜினல் புதினம் அல்ல என்றும், மலிவான நோக்கத்தில் சிலர் செய்யும் வேலை என்றும் புலம் பெயர் தமிழர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக

நமது தளத்திலும் செய்தி வெளியாகியுள்ளது.

இந் நிலையில் புதினம் தற்போது, புதிய நிர்வாகத்தின் கீழ், புதினப்பலகை என்ற பெயரில் செயல்படத் துவங்கிவிட்டதாக, அந்த தளத்தில் பணியாற்றியவர்கள் அறிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக புதினப்பலகை தளத்தில் வெளியாகியுள்ள ‘வாக்குமூல’த்தின் முக்கிய பகுதியை மட்டும் இங்கே தருகிறோம்:

இணைய ஊடகங்களான “புதினம்” மற்றும் “தமிழ்நாதம்” ஆகியன நிறுத்த வைக்கப்பட்ட நிகழ்வு- ஒரு வரலாற்றுத் துயரம்தான்.

ஈழத் தமிழரின் போராட்ட வாழ்வில் இதுவும் ஒரு பரிமாணத்தில் பின்னடைவுதான்.

புதினம் தளம் மூட வைக்கப்பட்டது என்பது, தமிழர்களுக்குள் குருட்டு நம்பிக்கைகளை வளர்த்து, நடைமுறைச் சாத்தியமற்ற கனவுகளைக் காணவைத்து, தமிழினத்தைத் தொடர்ந்தும் ஒரு மாயைக்குள் வைத்திருக்க முயலுகின்ற நேர்மையற்றவர்களின் சதி.

தமிழர்களிடம் உண்மை சென்றடைவதைத் தடுக்க முயல்வோர் புரிந்து வரும் தொடர் அடாவடித்தனத்தின் உச்சம்தான் இது.

ஆனால் இந்த சலசலப்புக்கு நாங்கள் அஞ்சமாட்டோம்.

“புதினம்” தளத்தின் பல்துறை பங்காளர்களாகிய நாங்கள்- அதன் செய்தியாளர்கள் மற்றும் அதன் ஆர்வலர்களின் துணையுடன், சமூக அக்கறை கொண்டவர்கள் பலரின் ஒத்துழைப்புடன் “புதினப்பலகை” www.puthinappalakai.com, www.TamilNewsBoard.com ஆகிய தளத்தைத் தொடங்கியுள்ளோம்.

சுருக்கமாக- புதிய நிர்வாகத்தின் கீழ் இயங்கத் தொடங்கும் தளத்தின் புதிய பெயர் தான் “புதினப்பலகை.”

செய்திகளில் நம்பகத்தன்மையையும், அவற்றை வெளியிடுவதில் தனித்துவத்தையும், ஊடகவியலில் ஒரு தரத்தையும் “புதினம்” தளத்தில் பேணிய நாங்கள்- அதே நம்பகத்தன்மையையும், தனித்துவத்தையும், தரத்தையும் “புதினப்பலகை”யிலும் தொடர்ந்தும் பேணுவோம்.

ஆனால்- மே 2009 வரையான காலத்தில் தமிழ் பேசும் மக்களின் “நலனும்” தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் லட்சியமும் ஒன்றோடு ஒன்று தொடர்புற்று இருந்ததால்- “புதினம்” தளமானது- விடுதலைப் புலிகளின் “ஊதுகுழல்” என ஒரு சாராராலும், அவர்களது “அதிகாரபூர்வத் தளம்” என இன்னொரு சாராராலும் கருதப்பட்டு வந்தது.

மே 2009க்குப் பின்னான காலத்தில்- தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் முழுமையாகவே செயலிழக்கச் செய்யப்பட்ட போதும்- “புதினம்’, எப்போதும் போல, தமிழ் பேசும் மக்களின் “நலன்” என்ற இலக்கு நோக்கியே தொடர்ந்தும் இயங்கி வந்தது.

மே 2009க்குப் பின்னான அந்தக் காலத்தில்- தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் எஞ்சியிருந்த பகுதி தன்னை ஒரு சுய மீளாய்வுக்கு உட்படுத்திய போது- “புதினம்”, எப்போதும் போல, தொடர்ந்தும் தமிழ் பேசும் மக்களின் “நலனை” மட்டுமே முன்னிறுத்தி அவர்களிடம் உண்மையைக் கொண்டு சென்றது.

ஆனால்- அதுவே பின்பு பெரும் சர்ச்சையாகி, ஒரு வகையில் “துரோகம்” எனவும் ஆகி, பழிச்சொல்லுக்கும் உள்ளாகி- கடைசியில், ஆயுதங்களற்ற வன்முறைக்கும் இலக்காகியபோது- “தனிப்பட்ட காரணங்களினால்” என அறிவித்து விட்டு “புதினம்’ தளத்தின் பழைய நிர்வாகம் அதனை இழுத்து மூடும் நிலைக்கும் வந்தது.

“புதினம்” தளத்தை மீண்டும் இயக்குவதற்கு நாங்கள் எடுத்த எந்த முயற்சியும் கைகூடாது போன பின்னணியில்- அதன் பெயரிலும் அதே வடிவத்திலும் புதுத் தளம் தொடங்கி அதன் நற்பெயரையும், நம்பகத் தன்மையையும், உயர் தரத்தையும் மாசுபடுத்த சிலர் முயன்றுள்ள சூழ்நிலையில்- புதிய நிர்வாகத்தின் கீழ்- “புதினப்பலகை” என்ற புதிய பெயரின் கீழ் இயங்கத் தொடங்குவதற்கு “புதினம் குழுமம்” ஆகிய நாங்கள் தீர்மானித்துள்ளோம்.

“புதினப்பலகை” தமிழ் பேசும் மக்களுடன் என்றென்றும் இணைந்திருந்து- உண்மையை மட்டுமே அவர்களிடம் எடுத்துச் செல்லும் பணியைத் தொடர்ந்தும் முன்னெடுக்கும்..”என நீண்டதொரு விளக்கத்தினை அளித்துள்ளது.

-என்வழி-

Edited by tamilsvoice

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.