Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெருக்கமான போட்டியில் தமிழர் வாக்குகளே தீர்மானிக்கும் சக்தி; ஆனால் தேர்தலில் அவர்களுக்கு ஆர்வமில்லை - ஐ. நா. நிறுவன ஆய்வு

Featured Replies

நெருக்கமான போட்டியில் தமிழர் வாக்குகளே தீர்மானிக்கும் சக்தி; ஆனால் தேர்தலில் அவர்களுக்கு ஆர்வமில்லை - ஐ. நா. நிறுவன ஆய்வு

பல்லாயிரக்கணக்கான இடம்பெயர்ந்த மக்களும் புதிதாகச் சிறிலங்காவுக்குத் திரும்பியவர்களும் எதிர்வரும் 26ம் திகதி நடைபெறவுள்ள அரச அதிபர் தேர்தலில் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக இரின் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இரின் [integrated Regional Information Networks - IRIN] எனப்படுவது - ஐ. நா.வின் மனிதார்ந்த விவகார ஒருங்கிணைப்புச் செயலகத்தின் [uN Office for Coordination of Humanitarian Affairs] ஒர் ஆய்வு நிறுவனமாகும்.

இரின் நிறுவன ஆய்வில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வன்னியில் இடம்பெற்ற போரை அடுத்து இடம் பெயர்ந்த 280,000 தமிழரில் சுமார் 170,000 பேர் சொந்த இடங்களுக்குத் திரும்பியுள்ளனர்.

இடம் பெயர்ந்தோர் முகாம்களில் தங்கிருப்போரும், சொந்த இடங்களுக்குத் திரும்பியவர்களும் இந்தத் தேர்தலில் வாக்களிக்கக் கூடியதாக இருக்குமா என்ற சந்தேகம் நீடிக்கிறது.

இது தொடர்பாக இரின் செய்தி நிறுவனத்துக்குத் தகவல் வெளியிட்ட நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான அமைப்பின் [People's Action for Free and Fair Elections - PAFFREL] பிரதம நிறைவேற்று அதிகாரி றோகண ஹெற்றியாராச்சி - " இடம் பெயர்ந்து மீளக்குடியமர்ந்த பலர் வாக்களிப்பதற்கு விண்ணப்பிக்கவில்லை. வாக்காளர் அட்டைகளுக்காக சுமார் 35 ஆயிரம் பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்." என்று கூறியுள்ளார்.

அதே வேளை, Campaign for Free and Fair Elections - CaFFE எனப்படும் மற்றொரு தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் நிறைவேற்று அதிகாரி யான கீர்த்தி தென்னக்கோன் "யார் வாக்களிப்பதற்கு விண்ணப்பித்துள்ளார்கள் என்பதைக் கண்டறிவது மிகவும் சிக்கலானதாக இருக்கிறது.

சிலர் இடம்பெயர்ந்தோருக்கான முகாம்களில் இருந்து விண்ணப்பித்துள்ளனர், அனால், அவர்கள் அண்மையில் சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட்டு விட்டனர். அவர்களின் வாக்காளர் அட்டைகள் முகாம்களுக்கே அனுப்ப்பட்டுள்ளன. அத்துடன் வாக்களிப்பு நிலையங்களும் அங்கேயே அமைக்கப்படவுள்ளன. இது முக்கியமான ஒரு பிரச்சனையாக உள்ளது" என்று கூறியுள்ளார்.

CaFFE அதிகாரிகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் அண்மையில் மீளக் குடியமர்த்தப்பட்ட மக்களச் சந்தித்துத் தரவுகளைச் சேகரித்த போது,அவர்களில் பெரும்பாலானோர் வாக்களிக்க விண்ணப்பிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.

கனகராயன்குளத்தில குடியமர்த்தப்பட்ட 56 குடும்பங்களைச் சந்தித்த போது அவர்களில் ஒன்பது குடும்பங்களைச் சேர்ந்தவர்களே வாக்களிக்க விண்ணப்பித்துள்ளனர்.

வன்னியின் ஏனைய இடங்களிலும் இது போலவே சிறிய எண்ணிக்கையானோரே பதிவுசெய்துள்ளனர்.

இவர்கள் வாக்களிக்க வேண்டுமானால் வாக்களிப்பு நிலையங்களுக்கும் அங்கிருந்தும் போக்குவரத்து வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும்." என்று கூறியுள்ளார் தென்னக்கோன்.

கடந்த 11ம் திகதி "மெனிக் பாம்" [மாணிக்கம் பண்ணை] முகாமுக்குச் சென்றிருந்த போது அங்கிருப்பவர்கள் எப்படி வாக்களிக்கப் போகிறார்கள் என்பது தெரியாமலே உள்ளது.

தாம் பல படிவங்களை நிரப்பிக் கொடுதத்தாகவும் ஆனால் அதற்குப் பிறகு எந்தத் தகவலும் தமக்கு வழங்கப்படவில்லை என்றும் அங்குள்ள மக்கள் கூறினர்.

அங்கு டிசம்பர் மாதக் கடைசியில் 108,000 பேர் இருப்பதாக அரசாங்கத் தகவல் கூறுகிறது.

இரு தசாப்தப் போரினால் வன்னியில் வாக்காளர்கள் பதிவுகள் மேற்கொள்ளப்படவில்லை.

1989-இற்குப் பிறகு இங்க சரியான முறையில் வாக்காளர்களைப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.

இடம் பெயர்ந்தவர்கள் வாக்களிக்கச் செல்லும் போது வாக்களாராகப் பதிவு செய்யவில்லை என்று இலகுவாக மறுக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

அரச அதிபர் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்ற 21மில்லியன் வாக்காளர்களில் 14 வீதமான தமிழர்கள் வாக்களிப்பில ஆர்வம் காட்டாதிருப்பது வாக்கு மோசடிகள் இடம்பெற வழிவகுக்கும் என்று அச்சம் வெளியிட்டுள்ளார் PAFFREL அமைப்பின் அதிகாரி ஹெற்றியாராச்சி.

அங்கு இன்னமும் பதற்றமான சூழலே உள்ளது என்று கூறும் PAFFREL அமைப்பு அந்தப் பகுதிகளில் அதிக அளவிலான உள்நாட்டு வெளிநாட்டுப் பணியாளர்களைத் தேர்தல் கண்காணிப்பிற்கு அனுப்ப உள்ளதாகவும் கூறியுள்ளது.

பிரதான வேட்பாளர்களான மகிந்த ராஜபக்சவும் சரத் பொன்சேகாவும் வடக்கிலுள்ள தமிழர்களின் வாக்குகளிலேயே குறிவைத்துள்ளனர்.

அது தேர்தல் முடிவுகளில் முக்கியமானதாக அமையும் என்று கருதப்படுகிறது.

போர் முடிந்த பின்னர் நடைபெறும் இந்தத் தேர்தலில் கடும் போட்டி நிலவுவதால் ஒவ்வொரு வாக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

"நெருக்கமான போட்டி எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் தமிழர்களின் வாக்குகள் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

ஆனால் - அவர்கள் சரத் பொன்சேகா மற்றும் மகிந்த ராஜபக்ச என இரண்டுபட்டு நிற்கிறார்கள் என்று கூறுகிறார் தேசிய சமாதானப் பேரவையின் [National Peace Council] பணிப்பாளரான ஜெகான் பெரேரா.

இரு பிரதான வேட்பாளர்களுமே ஆதரவு கோரிக் கூட்டங்களை நடத்தியுள்ளனர்.

வடக்கில் இராணுவ உயர் பாதுகாப்பு வலயங்களை நீக்கி - மக்களின் மீள்குடியமர்வைத் துரிதப்படுத்துவதாக வாக்குறுதி கொடுத்துள்ள சரத் பொன்சேகாவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது.

அதே வேளை - யாழப்பாணத்தில் நடந்த பேரணியில் உரையாற்றிய மகிந்த ராஜபக்ச - போரினால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கை மீளக் கட்டியெழுப்பி மேம்படுத்தப் போவதாக வாக்குறுதி கொடுத்துள்ளார் என இரின் நிறுவனத்தின் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

http://www.puthinappalakai.com/view.php?20100112100310

மக்ஸ் லேர்னர் சொன்னது போல “இரண்டு அரக்கர்களில் குறைவான கொடூரம் கொண்டவனை தேர்ந்தெடுக்கும் பொழுது மறக்க கூடாதது அவனும் ஒரு அரக்கன் என்பதை“.

சிறிலங்காவில் வரும் அரச தலைவர் தேர்தலில் தமிழருக்கு அக்கறை குறைவு எழுதியது: உலகத்தழிழ் இணையச் செய்தியாளர் இல்12th தை 2010 ( http://www.worldtamilweb.com/?p=1825 )

கடந்த வியாழக்கிழமை ஜ நா இன் நீதிக்கு எதிரான படுகொலைக்கான சிறப்பு வல்லுனர் பிலிப் அல்ஸ்ரன் அவர்கள் பக்கசார்பற்ற சுதந்திர போர் குற்ற விசாரணைக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

ஜனவரி மாதம் 2009 கைதிகளை சிறீலங்கா இராணுவம் படுகொலை செய்யும் போது எடுத்ததாக வெளியான காணொளி பதிவு உண்மையானது என அறிவித்திருந்தார்.

இந்த அறிக்கையை சிறீலங்கா அரசாங்கம் வழமை போல் உண்மையாது இல்லை என மறுத்துள்ளது. அத்துடன் அல்ஸ்ரன் அவர்கள் பக்கசார்பாக நடக்கின்றார் என்று குற்றம் சாட்டியுள்ளனர். எந்த விசாரணை என்றாலும் சிறீலங்கா ஜனாதிபதி தேர்தலில் நிற்கும் இன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சா மற்றும் முன்னை நாள் இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா ஆகிய இரண்டு முக்கிய வேட்பாளர்கள் உட்படுத்தப்பட வேண்டும்.

சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கா ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிராக செயல் பட்டதால் பகல்பொழுது சுட்டுக்கொல்லப்பட்டார். இதுவரை எவரும் இந்த கொலைக்காக தண்டிக்கப்படவில்லை. அத்துடன் இப்படுகொலையில் அரச தரப்பிற்க்கும் பங்குண்டு என சந்தேகிக்க படுகின்றது. ஜெனரல் சரத் பொன்சேகா அவர்கள் தமிழ் நாட்டு அரசியல்வாதிகளை கோமாளிகள் என்று குறிப்பிட்டதுடன் கனடாவின் நசனல் போஸ்ற்க்கு அளித்த பேட்டியில் தான் சிறீலங்கா முற்றிலும் சிங்கள மக்களுக்கு சொந்தமானது ஆனால் அங்கே சிறுபான்மை மக்கள் இருக்கின்றார்கள் நாங்கள் அவர்களை எங்களுடைய மக்களாகவே கருதுகின்றோம். அவர்கள் எங்களுடன் இருக்கலாம் ஆனால் அவர்கள் தேவையில்லாத கோரிக்கைகள் வைக்கக்கூடாது என தெரிவித்துள்ளார். இக்கருத்து இனவாதத்தை தூண்டுவதாக பொதுவாக கருதப்படுகிறது.

மற்றவர்களுடன் சேர்த்து இவர்கள் இருவருமே 2006ம் ஆண்டு முதல் 2009 மே மாதம் வரை 80000கும் மேற்பட்ட போரளிகளும் பொதுமக்களும் படுகொலை செய்ய காரணமானவர்கள்.

தற்போதைய ஜெனாதிபதியின் ஆட்சியில் நடைபெறும் மனித உரிமை மீறல்களும், அரச விதிவிளக்கு நடைமுகள் காரணமாக ஐரோப்பிய ஒன்றியம் கொடுக்கும் வரிச்சலுகையை நிறுத்த உத்தேசித்துள்ளதாக அறிவித்துள்ளது, மூன்று தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளனர். நீதிக்கு எதிரான படுகொலைகள் ஆட்கடத்தல்கள் சர்வ சாதாரணமாக நடைபெறுகிறது. எட்டு வரையிலான ஊடகவியாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். அதுமட்டுமன்றி பல ஆயுத தாங்கிய ஒட்டுக்குழுக்கள் அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த பின்னனியில் வரும் ஜனாதிபதி தேர்தலில் சிங்கள மக்களின் வாக்கு சரிபாதியாக பிரியும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆகவே தமிழ் மக்களின் வாக்கு பதிவுகளில் தான் வெற்றி தங்கியிருப்பதாக கருதப்படுகின்றது.

எனினும் 7 மாதங்களுக்கு முன்பு ஈடேறிய போரினால் தங்கள் சொந்த உறவுகளையும், நிலங்களையும், வீடு வாசல்களை இழந்த தமிழ் மக்கள் தேர்தலுக்கு தயாராக இல்லை. அவர்கள் இராணுவம் மற்றும் ஆயுதம் தாங்கிய ஒட்டுக்குழுக்களின் கண்காணிப்பின் கீழ் பயத்துடன் வாழ்கின்றனர். அத்துடன் மனித உரிமை மீரல்கள் சர்வசாதாரண்மாக நடைபெறும் சூழலில் வாழ்கிறார்கள்.

1977 ஆம் ஆண்டு ஜனநாயக முறையில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் தமிழ் மக்கள் ஒரு சுதந்திரத்தனி நாட்டிற்கான கோரிக்கையை பெருமளவில் ஆதரித்து வாக்களித்தனர். ஆறாம் திருச்சட்டத்தை நடமுறைபடுத்தியதின் மூலம் மட்டுப்படுத்தப்பட்ட பேச்சு சுதந்திர சூழலில் கூட பல தேர்தல்களில் ஈடுபட்டுள்ளார்கள். அடக்கப்பட்ட பேச்சு உரிமையினால் கடும் வெறுப்படைந்த தமிழ் மக்கள் இதன் பின்பு இதுபோல் பல தேர்தல்களை மேற்கொண்டனர்.

இனப்பிரச்சினையின் தீர்வை கருத்தில் கொண்டு சுதந்திரம் கிடைத்து கடந்த 62 ஆண்டு காலமாக தமிழ் தலைவர்கள் நல்லெணத்துடன் சிங்கள தலைவர்களுடன் பல ஒப்பந்தங்களில் கைசாத்திட்டுள்ளனர். இவ்வரிசையில் இறுதியாக சர்வதேச மட்டத்தில் கைச்சாத்திட்ட ஒப்பந்தம் 2002ம் ஆண்டு கைச்சாத்தான போர்நிறுத்த ஒப்பந்தம். இவ்வொந்தம் உட்பட அனைத்து ஒப்பந்தங்களும் சிங்கள கட்சிகளால் ஒரு பட்சமாக நிராகரிக்கப்பட்டு கிழித்தெறியப்பட்டவை. தற்போது பொன்சேகா பிரதான தமிழ் கட்சியுடன் ஓர் ”ஒப்பந்தத்தில்” கைச்சாத்திட்டுள்ளார். இவ் ”ஒப்பந்ததில்” வடக்கு கிழக்கை ஒன்றினைப்பதாக கூறியுள்ளார் என்பது உத்தியோக பட்டற்ற செய்தி. முன்னைய ஒப்பந்தமான இந்தோ லங்கா ஒப்பந்தம் வடக்கு கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைத்து தமிழர்களின் பூர்வீக பிரதேசம் என உருவாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு நாள் கூட தாமத்திக்காமல் சிங்கள இனவாத்தை தூண்டும் வகையில் தான் தமிழர்களின் பூர்வீக பிரதேசமான வடக்கு கிழக்கு ஒன்றிணைவதை ஒரு போதும் ஏற்க்க மாட்டேன் என அறிக்கை விட்டுள்ளார்.

”சரித்திரம் மீண்டும் திரும்புகிறதா என எண்ணத்தோன்றுகிறது.”

சில குறுகிய கால சலுகைகளுக்காக நல்லெண்ணத்துடன் தமிழ் தலைவர்களால் முன்னைய கால ஒப்பந்தங்கள் போல கைச்சாத்திடப்பட்டதே இவ்வொப்பந்தமும் ஆகும். தென் ஆபிரிக்காவில் கறுப்பினத்தவரின் விடுதலைக்காக போராடிய ஆபிரிக்க தேசிய அமைப்பின் (ANC) தலைவர்கள் சர்வதேச அழுத்தினால் சில குறுகிய கால சலுகைகளுக்காக தங்களுடைய நீண்டகால விடுதலை குறிக்கோள்களை அடைவு வைத்திருந்தார்கள் என்றால் இன்றும் தென்னாபிரிக்காவில் கறுப்பினத்தவர் தங்கள் சொந்த நிலத்தில் இரண்டாம் தர பிரையைகளாக இருந்திருப்பர்.

மேலும் சந்தேகம் எழுகிறது இந்த புதிய ஒப்பந்ததில் சிங்கள இனத்திற்க்காக கையொப்பம் இட்ட சரத் பொன்சேகா தான் தேர்தலில் வெற்றி பெற்றால் ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதாக கூறி உள்ளார், அச்சந்தர்ப்பத்தில் அவருக்கு இவ் ஒப்பந்ததை நடைமுறைப்படுத்த முடியாமல் போய்விடும். மேலும் அவருடைய உத்தியோகபூர்வமான தேர்தல் விஞ்ஞாபனத்தில் இவ் ஒப்பந்தத்தில் இருக்கும் பல கருத்துக்களை உள்ளடக்கவில்லை. அது மட்டும் அல்ல சரத் பொன்சேகாவை இத்தேர்தலில் பிரதான இரு சிங்கள கட்சிகள் ஆதரித்தாலும் ஒரு கட்சியே இவ் ஒப்பந்ததில் கைச்சாத்திட்டுள்ளது.

தற்போதைய தமிழ் தலைவர்களை தேசதுரோகிகள் என சரித்திரம் எடைபோடாது என்பதே பலரின் எதிர்பாப்பாகும்.

மக்ஸ் லேர்னர் சொன்னது போல “இரண்டு அரக்கர்களில் குறைவான கொடூரம் கொண்டவனை தேர்ந்தெடுக்கும் பொழுது மறக்க கூடாதது அவனும் ஒரு அரக்கன் என்பதை“.

மக்ஸ் லேர்னர் சொன்னது போல “இரண்டு அரக்கர்களில் குறைவான கொடூரம் கொண்டவனை தேர்ந்தெடுக்கும் பொழுது மறக்க கூடாதது அவனும் ஒரு அரக்கன் என்பதை“.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.