Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கூட்டமைப்பின் தீர்மானத்தைத் தொடர்ந்து உள்ளூர், மேற்குலக அரசியல் போக்கு!-வலம்புரி நாளிதழ்

Featured Replies

கூட்டமைப்பின் தீர்மானத்தைத் தொடர்ந்து உள்ளூர், மேற்குலக அரசியல் போக்கு!-வலம்புரி நாளிதழ்

பெரும்பான்மைத் தமிழ்மக்களின் விருப்பத் திற்கமைவாக தமிழத்தேசியக் கூட்டமைப்பு வரும் ஜனாதிபதித்தேர்தலில் “ஆட்சி மாற்றத்திற்கான ஆதரவை தமிழ்பேசும் மக்களிடம் கோருவதற்கு” முடிவெடுத்திருந்தது.

இம்முடிவைத் தொடர்ந்து தேர்தல் களத்தில் ஏற்படக்கூடிய பாதிப்பை எதிர்கொள்ளக் கூடிய வகையில் ராஜபக்ஷ அரசாங்கம் வாக்குறுதிகள், அன்றாடப் பிரச்சினைகளிற்கான அதிரடித் தீர்வுகள் என பல வழிகளில் தமது செயற்பாடுகளை வேகப்படுத்தியது. இது தமிழ்மக்களின் அரசியல் பலமான வாக்குப்பலத்தின் பெறுமதியை தெளிவாக வெளிப்படுத்தி நிற்கின்றது. அதேவேளை இலங்கையில் ஆட்சி மாற்றத்தை மேற்குலகமும் விரும்புகின்றது என்பதை குறிப்புணர்த்தும் சில செயற்பாடுகளை அவர்கள் முடுக்கி விட்டிருப்பதன் மூலம்புரியக்கூடியதாக உள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவால் கிடைக்காமல் போகும், அல்லது எதிராகப் போகும் தமிழ்மக்களின்வாக்குச் சரிவைச் சரிப்படுத்த வேண்டிய கட்டாய நிலையில் ராஜபக்ஷ உள்ளார். இதனை எதிர்கொள்ள ராஜபக்ஷவிற்கு இருப்பது இரண்டு வழிகளே, ஒன்று சிங்களப் பேரின வாதத்தை உசுப் பிவிடுதல், இரண்டு தமிழ் மக்களின் வாக்குகளைக் கவரக்கூடிய வாககுறுதிகளை வழங்கி விரைவாக நடை முறைப்படுத்துதல்.

உயர்பாதுகாப்பு வலயத்தின் சில பகுதிகளில் மக்கள் மீளக்குடியேறு வதற்கான அனுமதி, யாழ்ப்பாணததிறகான இரு பத்திநான்கு மணிநேர பயண அனுமதி, புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வரும் போராளிகளில் ஆயிரம் பேரை விடுதலை செய்தல் போன்றன தமிழ ;மக்களின் வாக்குகளைப் பெற ராஜபக் ஷவினால் வழங்கப்பட்ட அண்மைய வாக்குறுதிகள்.

மேற்குறிப்பிட்ட வாக்குறுதிகள் அனை த்தும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவருக்கு ஆதர வளித்தல், தேர்தலை புறக்கணித்தல், ராஜபக்ஷவை ஆதரித்தல் போன்ற முடிவுகளை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு எடுக்காததினால் கிடைத்த (எதிர்வினை அரசியல் அடைவு) பிரதி பலன்களாகவே கருதமுடியும்.

அத்துடன், இத்தீர்மானம் தமிழ்மக்களின் வாக்குகள் மீதான அரசியல் தீர்மானத்தின் வலிமையை தமிழ்மக்களுக்கு மீண்டும் தெளிவாக ;கியிருப்பதுடன், சிங்கள அரசி யல் தலை மைகளுக்கு தமிழ்மக்களின் வாக்கு வலிமையை நிச்சயம் புரிய வைத்திரு க்கும். இத்தேர்தல் ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்களுக்கு கடுமையான நெருக ;கடியைக் கொடுத்துள்ளது

மேற்குலகத்தின் போக்கு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஜனா திபதித் தேர்தல் தொடர்பான முடிவைத் தொடர்ந்து அரசியல் களத்தில் ஏற்பட்ட மாற்றங்களால், மனித உரிமைகள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் முன்னுரி மைப்படுத்;தப்பட்டு அதற்கு செயல் வடிவம் கொடுக்கும் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக நெதர்லாந்து, அயர் லாந்து,பிரான்ஸ் போன்ற நாடுகள் போர்க் ;குற்ற விசார ணை தொடர்பில் அக்கறை காட்ட தொடங்கியுள்ளன.

பிரித்தானியாவின் சனல் - 04 தொலைக் ;காட்சி வெளியிட்ட காணொளிக் காட்சி உண்மையானது என சர்வதேசநிபுணர் குழு வைக் கொண்டு பரிசீலித்து உறுதிப ;படுத்திய ஐ.நாவின் நீதிக்குப் புறம்பான படு கொலைகள் தொடர்பான அதிகாரி பேரா சிரியர் பிலிப் அல்ஸ்ரன் அவர்களின் அறிக்;கை ராஜபக்ஷவின் அரசாங்கத்தை நெருக்;கடிக்குள் தள்ளும் என்பதால் அந்த அறிக்கை வெளிவராமல் தடுக்க இலங்கை அரசு பாரிய பகீரதப் பிரயத ;தனம் மேற்கொண்ட போதும் அம்முயற் சிகள் தோல்வியில் முடிந்;தன.

இது ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்களுக்கு மேலும் நெருக்கடியைத் தோற்று வித் துள்ளது. மற்றும் ஜி.எஸ்.பி - பிளஸ் வரிச்சலுகை நீக்கம்தொடர்பில் பிரித்தா னியா உறுதியாக இருப்பதுடன், பிரான்ஸ் நாட்டில் போர்க் குற்ற விசாரணைகளைமேற்கொள்வதற்கு ஏதுவாக தனி நீதிமன்றம் அமைக்க முடிவெடுக்கப் பட்டுள்;ளது. மேற் குறிப்பிட்ட நகர்வு களை வைத்து ஒப்பு நோக்கும்போது தமிழ் மக்கள் வரும் ஜனாதிபதித் தேர்தலில் எடுக்க வேண்டிய நிலைப்பாடு தொடர்பான தெளிவைப் பெறலாம் எனத்தோன்றுகின்றது.

ஏனெனில் ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிவரும் இத்;தருணத்தில் சர்வதேச ரீதியாக குறிப்புணர்த்தப்படும் இந் நகர்வுகளிலிருந்து மேற்குலகமும் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றது என்பது வெளிப்படையாகின்றது. அந்த ஆட்சி மாற்றம் எமக்குச் சாதகமாகப் பயன் படுத்தப்பட வேண்டும்.

படாதபாடுபடும் ராஜபக்ஷ

தனது வெற்றி வாய்ப்பை உறுதி ப்படுத்த உள்ள இரண்டு வழிகளில் ஒன்றான தமிழ் மக்களுக்கு மேலதிக சலுகைகளை வழங்குதல் தொடர்பில், யாழ் விஜயத்தை மேற் கொள்ள முன் ஒரு பரீட்சார்த்த முயற்சியை மேற;கொள்ளத் தீர்மானித்தார். அதில் குறிப்பாக யாழ்குடா நாட்டில் உள்ள உயர் பாதுகாப்பு வலயங்களைஅகற்றும் அறிவிப்பை துரையப்பா விளை யாட்டரங்கில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் வைத்து பகிரங்கமாக அறிவிப்பார் என ராஜபக்ஷ தரப்பால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அத்துடன் யாழ்ப்பாணத்திற் கான இருபத்திநான்கு மணிநேர போக்குவரத்துக்கு பாதையைத் திறந்து விட்டார்.மற்றும் 745 முன்னாள் விடுதலைப்புலிப் போராளிகளை விடுதலை செய்தார். யாழ் துரையப்பா மைதானத்தில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் பிரசார கூட்டத்தில் தமிழ்மக்களைக் கவரும் பல தேர்தல் வாக்குறுதிகளை வெளி யிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முக்கிய வாக்குறுதிகள் எதனையும் வழங்காது, சிறு சிறு தேர்தல் வாக்குறுதிகளை மட்டுமே வழங்கிவிட்டுச் சென்றார் ராஜபக்ஷ அவர்கள்.

ஏனெனில் தமிழ்மக்களுக்கு என்ன வாக்குறுதி வழங்கினாலும் தனது கட்சிக்கு வாக்குகள் கிடைக்காது என்ற அவ நம்பிக்கையில் ஏற்கனவே குறிப்பிட்ட முக்கிய வாக்குறுதிகளையும் வழங்கு வதை தவிர்த்துவிட்டார். மேலும் தமிழ்மக்களுக்கு பெரியளவில் வாக்குறுதிகளை வழங்கவில்லை எனச் சிங்கள மக்களிற்கு தெரியப்படுத்தி,சிங் களப் பெரும்பான்மையினத்தின் பேரினவா தத்தை தூண்டி தனது வெற்றி யை உறுதிப்படுத்த ராஜபக்ஷ அவர்கள் தீர்மானித்தே இவ்வாறு செயற்பட்டார் என கருதத் தோன்றுகின்றது.

பண்டாரநாயக்கா நினைவுமண்டபத்தில் வெளியிடப்பட்ட ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனததில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால் முன்வைக்கப்பட்டு ராஜ பக்ஷவால் ஏற்றுக் கொள்ளப ;பட்டதாக கூறப்பட்ட கோரிக்கைகளில் எதுவுமே ராஜ பக்ஷ அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனமான “மகிந்த சிந;தனை-02” இல் உள்ளடக்கப்படவில்லை. ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு உரையில் “பயங்கரவாதத் திறகுத் தொடர்ச்சியாக ஆதரவு தெரிவித்துவரும் சில அமைப்புக்கள் மீண்டுமொரு ஈழப் போராட்டத்திற்கு வழி அமைத்துக் கொடுக்க முயற்சி செய்க pன்றன” என மகிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

எனவே தமிழ்மக்களின் வாக்குகள் தனக்கு கிடைக்காது என்ற நிலையில் மீண்டும் ஈழப் போராட்டம் வலுப்பெறும் என்ற கருத்தை விதைத்து சிங்கள மக்களிடம் அச்சத்தை யும் பேரினவாத சிந்தனையையும் தூண்டி தேர்;தலை எதிர்கொள்ள முயற்சிக்கின்றார். ஏனெனில் ஏற்கனவே கிழக்கில் மக்கள் விடுதலைப்படை என்ற ஒரு அமைப்பை கருத்தியல் அடிப்படையில் தோற்றுவித்து தனது அரசியல் நகர்விற்கு சாதகமாகப் பயன்படுத்த முற்பிட்டார்.

ஆனால் இந்தியா பசில் ராஜ பக்ஷவை அழைத்து எச்சரித்ததைத;தொடர்ந்து அக்குறுக்கு வழியினை கிடப்பில் போட்டு விட்டு, மீண்டும் அக் ;கருத்தை வேறு வசனநடைக்குள்ளால் சொல்ல முற்படுகின்றார். தமிழ் மக்களைக் கவருதல் என்ற வழி சாத்தியமாத சந்தர்பத்தில், பேரினவாதத்தை தூண்டி வாக்குப்பெறுவதில் தீவிரகவனம் செலுத் தப்படுவதானது ராஜபக்ஷ அவர் களின் அரசியல் வங்குரோத்து தன்மை யையே வெளிப்படுத்தி நிற்கின்றது.

அத்துடன் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன கண்டியில் நடைபெற்ற செய்தியாளர் மாநாடு ஒன்றில் “தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு ஜனாதிபதியிடம் முன்வைத்த பத்து அம்சக் கோரிக்கைகளை ஜனா திபதி ஏற்க மறுத்து விட்டார். அவற்றை ஏற்பது நாட்டைக் காட்டிக் கொடுப்பதற்கு சமம் என்று கருதியே ஜனாதிபதி அவற் றை நிராகரித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகள் அரசியல் நடவடிக்கை ஊடாக ஈழத்தை அடைவதற்கான நோக் கத்தைக் கொண்டவை. முப்பது வருடங் களாக பல்லாயிரம் உயிர்களை இழந்து போராடி மீட்ட தாய்நாட்டின் சுதந்திரத்தை அடகு வைததுத் துரோகி ஆவதற்கு ஜனாதிபதி விரும்பவில்லை. சரத் பொன்சேகா தமிழ்த் தேசியக் கூட் டமைப்பின் கோரிக்கைகளை ஏற்றது நாட்டைக் காட்டிக் கொடுக்கும் வேலை” என சிங்களப் பேரினவாதத்தை உசுப்பி யுள்ளார். இக்கருத்துருவாக்கமானது ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்கள் சிங்கள போரினவாத த்தை மீண்டும் உசுப்பேற்றி, உணர்ச்சி வசப்படுத்தி, சிங்களமக்களின் அடிப ;படைப் பிரச்சனைகளை மறைத்து ஆட்சி யில் அமர முயலும் உத்தியாகும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட சர்வதேச நாடுகளும், பல மனித உரிமை அமைப்புக்களும் காரணமின்றி கைது செய் யப்பட்டவர்களின் விடுதலை, மக ;களின் சுதந்திர நடமாட்டம், மீள்குடியேற் றம், உயர் பாதுகாப்பு வலயநீக்கம் உட்பட தமிழ்மக்களின் தீர்க்கப்படக் கூடிய பல அடிப்படைப் பிரச்சினைகளை தீர்க்குமாறு கோரிககை களை முன் வைத்தன.கோரிக்கைகள் நிராகரிக ;கப்பட்ட நிலையில் சர்வதேச நாடுகள் அரசியல்,பொருளாதார ரீதியாக பல அழுத்தங்களைப் பிரயோகிக்கத் தொடங்கின.

அண்மைக்காலம் வரை எதற்கும் மசிந்து போகாமல் செயற்பட்ட ராஜபக்ஷ அவர்களின் அரசாங்கம், ஜனாதிபதித் தேர் தல் அறிவிக்கப்பட்டபின் குறிப்பிட்ட அகதிகளை மீள்குடியேற்றியதாகக் காட்டியது. அத்துடன் குறிப்பிட்ட சில முகாம்களைச் சேர்ந்தவர்களை சுதந்திர மாக நடமாட அனுமதித்தல், யாழ்ப்பாண போக்குவரத்து தடையை குறிப்பிட்டளவு நேரம் நீக்குதல் போன்ற சலுகைகளை வழங்கி தமிழ்மக்க ளின் வாக்குகளை கவரும் செயற்பாடுகளை முன்னெடுத;தது.

மேலும், தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் தீர்மானத்திற்குப் பின்னால் மாற்றமடைந்த உள்ளுர் மற்றும் சர்வ தேசஅரசியல் நிலைப்பாடுகளை வெல்வதற்கு தமிழ்மக்களின் ஆதரவு தேவை என உணர்ந்துள்ளதால், மேலும் பல சலுகைகளை வழங்கி தமிழ் மக்க ளின் வாக்குகளை பெற கடும்பிரயத் தனத்தை மேற்கொள்கின்றது. அதில் “கைதுசெய்யப்பட்ட முன்னாள்; போராளிகளின் விடுதலை” முதன்மையா னதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் நீண்ட காலமாக சந்தேகத்தின் பேரில் தடுத்து வைத்திருப்பவர்களை விடுதலை செய்;வ தைப்பற்றி சிந்திக்காமல்,மக்கள் அபிமா னத்தைப் பெற்ற விடுதலைப்புலிப் போரா ளிகளை விடுதலை செய்வதனூடாக தமிழ் மக்களின் மனங்களை கவர்ந்து, உச்சக்கட்ட வாக்குவேட்டையை மேற் கொள்;ளலாம் என்பதே இச்சலுகையின் பின்னாலுள்ள நோக்கம் என்பது தெளி வாகப் புலப்படுகின்றது.

தமிழ் மக்களின் சில அடிப்படைப் பிரசசி;னைகளை தீர்ப்பது தொடர்பில் சரத் பொன்சேகா அவர்கள் வாக்குறுதிகள் வழங்கியபோது அதை விமர்சித்த ராஜ பக்ஷவின் அரசாங்கத்தைச் சார்ந்தவர் ;கள் தற்போது ‘பல்டி’ அடித்து தாமே முன்னின்று அவற்றைச் செய்யத் தொடங் கியுள்ளனர். சில வேளை சரத் பொன்சேகா அவர் கள் தமிழ் மக்களுக்குச் செய்வதாகக் கூறிய சில சலுகைகளைக்கூட ராஜ பக்ஷ அவர்கள் தேர்தலுக்கு முன்செய்து முடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை!.

ஆனால் தேர்தல்கால கரிசனைகள் நீண்ட ஆயுள் கொண்டவை அல்ல. தூர நோக்கில், தமிழ்மக்கள் இலங்கையில் தனித்துவமான அரசியல் உரிமை களுடன் வாழ வேண்டும் என்பதை நிலை நிறுத்த தமிழ் மக்களின் பலமாக இருக் கும் வாக்குகளை சரியாகப் பயன்படுத்த வேண்டும்.மிகப்பெரிய மனிதக் கொலையை நடத்திய இலங்கையின் அதிகார பீடத்தை சர்வதேச “மனித உரிமை” நிதிமன்றின் குற்றவாளிக் கூண்டில் ஏற்ற வேண்டும். இச்சந்தர்ப்பத்தை தவறவிட்டால் இப்போதைக்கு தமிழ்மக்களை யாரா லும் காப்பாற்றமுடியாது.

தமிழ்ப்புத்தாண்டு பிறந்துள்ள நிலை யிலும் இன்னும் பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்கள் அகதிகளாக முகாம்களுக் குள் வழியற்று, கையேந்தி, இழி நிலை யில் வாழ்ந்து கொண்டு இருக்கின் றார்கள். தமிழ் மக்கள் இப்புதிய ஆண்டில் தமக்கான அரசியல் பாதையை சரியாக தெரிவு செய்வதே அவர்களின் அவலவாழ்வை விடிவுகாலமாக்கும்.

புதிய ஆண்டு அவல வாழ்வின் தொடர்ச் சியாக இருந்தாலும் தமிழ்மக்கள் தமது அரசியல் செயற்பாட்டினூடாக அவல வாழ்க்கையிலிருந்து சிறிது சிறிதாக விடு பட்டு வாழ்வதற்கான ஏதுநிலைகள் எம்முன் தெளிவாக உள்ளது. தமிழ்மக்களின் அரசியல் தலை மைகள் தமிழ்மக்களை சரியான வழியில் நகர்த்தி இப்புதிய தமிழ் புத்தாண்டிலா வது நிம்மதியான, அவலமவற்ற, கையேந்தும் நிலையற்ற சமூகமாக, பொருளாதார மேம்பாட்;டோடும் அரசியல் உரிமைகளோடும் ஈழத் தமிழ்ச்சமூகம் வாழ தமிழ்த்தேசியத் தலை மைகளும், தாயகமக்களும், புலம்பெயர் தமிழ்ச்சமூகமும் ஓரணியில் நின்று செய ற்பட வேண்டும்.

-அபிஷேகா

http://www.valampurii.com/online/viewnews.php?ID=2019

Edited by vimalk

ஆனால் தேர்தல்கால கரிசனைகள் நீண்ட ஆயுள் கொண்டவை அல்ல. தூர நோக்கில், தமிழ்மக்கள் இலங்கையில் தனித்துவமான அரசியல் உரிமை களுடன் வாழ வேண்டும் என்பதை நிலை நிறுத்த தமிழ் மக்களின் பலமாக இருக் கும் வாக்குகளை சரியாகப் பயன்படுத்த வேண்டும்.மிகப்பெரிய மனிதக் கொலையை நடத்திய இலங்கையின் அதிகார பீடத்தை சர்வதேச “மனித உரிமை” நிதிமன்றின் குற்றவாளிக் கூண்டில் ஏற்ற வேண்டும். இச்சந்தர்ப்பத்தை தவறவிட்டால் இப்போதைக்கு தமிழ்மக்களை யாரா லும் காப்பாற்றமுடியாது.

எனக்கு இக்கருத்து பிடித்திருக்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.