Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தமிழர்களது வரலாறு பற்றி படிக்க விரும்புவோர்

Featured Replies

தமிழர்கள் தங்களது வரலாற்றை எழுத்தெண்ணிப் படிக்காவிட்டாலும் அதில் நல்ல தேர்ச்சி பெறுவது விரும்பத்தக்கது.

தமிழர்களுக்கு வரலாற்று உணர்வு இருக்கவில்லை. அதனால் வரலாற்றை ஆண்டுவாரியாக ஒழுங்காக எழுதிவைக்கவில்லை. இது ஒரு பெரிய குறை. சிங்களவர்களது 2500 ஆண்டு வரலாறு புராணவடிவில் எழுதி வைக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் பவுத்த தேரர்கள்.

யாழ்ப்பாண இராச்சியத்தின் வரலாறு - குறிப்பாக தொடக்க வரலாறு - குழப்பமாக இருக்கிறது. யாழ்ப்பாண வைபவமாலை எழுதிய மயில்வாகனப் புலவர் வரலாற்று ஆசிரியர் அல்ல. ஒரு ஒல்லாந்த அதிகாரி கேட்டுக் கொண்டதற்கு இணங்க தனக்கு முன் 200 ஆண்டுகளுக்கு முன் நடந்த வரலாற்றை எழுதினார். அதில் பல மயக்கங்கள் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக கண்டியையும் அனுராதபுரத்தையும் ஒன்றாகப் பார்க்கிறார். யாழ்ப்பாண வைபவமாலையைப் பதிப்பித்த குல.சபாநாதன் இந்தத் தவறுகளைச் சுட்டிக் காட்டி விளக்கம் அளித்துள்ளார்.

ஈழத்தமிழர்களது வரலாறு பற்றி படிக்க விரும்புவோர் பின் வரும் நூல்களைப் படிப்பது நல்லது.

எனது இணையதளத்திலும் http://nakkeran.com/history.htm வரலாறு பற்றிய பல கட்டுரைகளை இணைத்துள்ளேன்.

கடந்த கால வரலாறு தெரிந்தால் மட்டுமே நிகழ்கால அரசியலை அறிவுபூர்வமாகப் புரிந்து கொள்ளலாம். ஆங்கிலத்தில் ஒரு பொன்மொழி உண்டு. வரலாற்றில் இருந்து படிப்பினை படிக்க முடியாதவர்கள் தாங்கள் விட்ட பிழைகளை மீண்டும் விடத் தள்ளப்படுவார்கள் (Those Who Do Not Learn From History Are Doomed to Repeat It.) எமது வரலாற்றை ஒரு நாளிலோ ஒரு மாதத்திலோ அல்லது ஒரு ஆண்டிலேயோ படித்து முடித்துவிட முடியாது. அது ஒரு தொடர் முயற்சியாக இருக்க வேண்டும். கீழே தமிழ் வரலாற்று நூல்கள் பற்றிய ஒரு பட்டியலைத் தந்துள்ளேன். முடிந்தளவு இவற்றைப் படிக்க முயற்சி செய்யுங்கள்.

பரராசசேகரம் - ஐ.பொன்னையாப்பிள்ளை (பதிப்பு 1928-1936)

வையா பாடல் - வையாபுரி அய்யர் (14-17 ஆம் நூற்றாண்டு)

பதிப்பு க.செ. .நடராசா 1980)

கைலாயமாலை - முத்துக்கவிராயர் (16-17 ஆம் நூற்றாண்டு) - நல்லூர் கைலாசநாத கோயில் புராணம்

யாழ்ப்பாண வைபவமாலை - மயில்வாகனப் புலவர் (பதிப்பு குல.சபானாதன் 1949)

யாழ்ப்பாண சரித்திரம - ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை (1912)

புராதன யாழ்ப்பாணம் - முதலியார் செ. இராசநாயகம் (1926)

யாழ்ப்பாணச் சரித்திரம் - முதலியார் செ. இராசநாயகம் (1933)

யாழ்ப்பாண வைபவ கவ்முதி - ஆசு கவி கல்லடி வேலுப்பிள்ளை (1918 – வல்வை நகுலசிகாமணி 2001 பதிப்பு)

யாழ்ப்பாண அரசர்கள் (1920) - சுவாமி ஞானப்பிரகாசர்

யாழ்ப்பாண இராச்சியம் - கலாநிதி சி. பத்மநாதன்

யாழ்ப்பாண இராச்சியம் - பேராசிரியர் க. சிற்றம்பலம் (1992)

யாழ்ப்பாண வரலாற்று மூலங்கள் - கலாநிதி முருகர் குணசிங்கம் (1953)

பவுத்தரும் சிறுபான்மையினரும் - ச.கீத. பொன்கலன் (1987)

இலங்கையில் தமிழர்கள் - கலாநிதி முருகர் குணசிங்கம் (2008)

யாழ்ப்பாண அரச பரம்பரை - க. குணராசா

தொல்லியல் நோக்கில் இலங்கைத் தமிழர் பண்பாடு - ப. புஷ்பரட்ணம்

என்று முடியும் எங்கள் போட்டிகள் - எஸ்.கே.மகேந்திரன், எம்.ஏ.தஷிணகைலாச புராணம் - சிங்கை செகராசசேகரன் (பதிப்பாசிரியர் சி.பத்மநாதன் (1995)

The Fall and Rise of the Tamil Nation - V.Navaratnam (1995)

Sri Lanka The National Question - Satchi Ponnambalam (1983)

Sri Lanka: Witness to History – S.Sivanayagam (2000)

S.J.V. Chelvanayakam The Crisis of Sri Lankan Tamil Nationalism – A.Jeyaratnam Wilson (1993)

The Break-Up of Sri Lanka – A Jeyaratnam Wilson (1988)

Sri Lankan Tamil Nationalism – Murugesar Gunasingam (1999)

The Evolution of An Ethnic Identity – K.Indrapala (2005)

...

ஈழத்தமிழர்களது வரலாறு பற்றி படிக்க விரும்புவோர் பின் வரும் நூல்களைப் படிப்பது நல்லது.

எனது இணையதளத்திலும் http://nakkeran.com/history.htm வரலாறு பற்றிய பல கட்டுரைகளை இணைத்துள்ளேன்.

...

tuyhW

# jkpoH jpUkzk;

# jkpoH jpUkzk;

# Cop fhyk; eP ePL tho Ntz;Lk;!

# ty;ntl;bj;Jiw tuyhw;Wr; RtLfs;

# jkpoH Nghuhl;l tuyhW

# jkpoH murpay; tuyhW

# khtPuH ePq;fNs! kwg;Nghkh ehq;fNs!

# ,uhruhrNrhod;

# rq;f fhy jkpoH r%f tuyhW

முதலில், உங்கள் ஆக்கபூர்வமான முயற்சிக்கு நன்றி ...

உங்கள் தளத்தை பார்கக எந்தக் கண்ணை உபயோகிக்க வேண்டும் ? utf-8 ஆல்லோ அல்லது western (windows 1252)ஆல்லோ பார்தால் ஒன்றும் சரியாகத் தேரியவில்லை ...!

--

இதையெல்லாம் தலைமுடி நரைத்த கிழடுகள்தான் வாசிப்பார்கள் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.

இதையெல்லாம் தலைமுடி நரைத்த கிழடுகள்தான் வாசிப்பார்கள் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.

:lol: இப்பவே வாங்கி வைச்சால், கிழண்டினாப் பிறகு உதவுமில்ல?

இணைபிற்கு நன்றி அகூதா.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.