Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கையை பர்மா அல்லது ஈரானாக மாற்ற நினைக்கும் கனவானது பகல் கனவாகும் என்பதே எனது நம்பிக்கை‐

Featured Replies

இலங்கையை பர்மா அல்லது ஈரானாக மாற்ற நினைக்கும் கனவானது பகல் கனவாகும் என்பதே எனது நம்பிக்கை‐

விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த யுத்த வெற்றியின் பின்னர் இலங்கை மூன்று சாவல்களை எதிர்நோக்கியுள்ளது. அரசியல் மற்றும் சமூக மாற்றம், சமூக நீதியை இலக்காகக் கொண்ட பொருளாதார அபிவிருத்தி, வடக்கு கிழக்கு தமிழ், முஸ்லிம் மக்களுக்கான சுயநிர்வாக கட்டமைப்பை உறுதிப்படுத்தும் அரசியல் தீர்வு என்பனவே அந்தச் சாவல்களாகும்.

இந்தச் சாவல்கள் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்திருக்கின்றன. இதில் ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்க முடியாது.

இலங்கையை புதிய பாதைக்கு இட்டுச் செல்ல வேண்டுமானால், யுத்தம் நிறைவடைந்த பின்னர், மகிந்த ராஜபக்ஷ தெற்கிலும் வடக்கிலும் அரசியல் மற்றும் சமூக ரீதியிலான ஐக்கியத்தை ஏற்படுத்தும் வழிமுறையைத் தெரிவுசெய்திருக்க வேண்டும். அதற்கு அவருக்கு இரண்டு வருடங்களுக்கும் மேற்பட்ட காலம் மீதமாக இருந்தது. தனது உறுதிப்பாட்டிற்கு அமைய இலங்கையை அபிவிருத்தி நோக்கி கொண்டு செல்வதற்காக அந்த இரண்டு வருடங்களை பயன்படுத்திய பின்னர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட அவருக்குச் சந்தர்ப்பம் இருந்தது.

எனினும், யுத்த வெற்றியின் சூடு தணிய முன்னர் இரண்டு வருடங்களுக்கு முன்னரே மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலை ஏன் நடத்தினார்?. இதுதொடர்பான தர்க்க ரீதியான விளக்கத்தை சிரால் லக்திலக்க தொலைக்காட்சி கலந்துரையாடல் ஒன்றின்போது வழங்கியதை நான் கேட்டேன்.

இரண்டு வருடங்கள் இருக்கும் நிலையில், பலவீனமடைந்துள்ள எதிர்க்கட்சியை மேலும் பலவீனமடையச் செய்து தனது அதிகாரத்தை மேலும் உறுதிப்படுத்திக் கொள்வதற்காகவே ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலுக்குச் சென்றதாக சிரால் லக்திலக்க கூறினார்.

ரணில் விக்ரமசிங்க கட்டாயமாக தேர்தலில் போட்டியிடுவார் எனவும் ஜனாதிபதித் தேர்தலில் தாம் 75 வீத வாக்குகளைப் பெற முடியும் என ராஜபக்ஷவினர் நம்பினர். பலவீனமான எதிர்க்கட்சியைக்கூடப் பொறுத்துக் கொள்ளும் ஜனநாயக அரசியல், ராஜபக்ஷ வேலைத் திட்டத்திடம் இல்லையென லக்திலக்க கூறியிருந்தார்.

எவ்வித எதிர்ப்பும் அற்ற ஒருதலைப்பட்சமான நிர்வாகமே ராஜபக்ஷ வேலைத் திட்டத்திற்குத் தேவையாக இருந்தது. பொன்சேக்கா ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியதால் ராஜபக்ஷ வேலைத் திட்டத்திற்கு எதிர்பாராத அச்சுறுத்தல் ஏற்பட்டது. இதன் காரணமாகவே அண்மைக் காலத்தில் மிகவும் மோசடியான வன்முறையான தேர்தலை நாம் காண நேர்ந்தது.

தோல்வியடையும் இயலுமையை ராஜபக்ஷவினர் மீதம் வைத்திருக்கவில்லை. தோல்வியென்பது அழிவு என அவர்கள் நோக்க ஆரம்பித்தனர். இதன் காரணமாகவே தோல்வியடைந்த பொன்சேக்காவைக் கூட பரம எதிரியாக ராஜபக்ஷ நிர்வாகம் காண்கின்றது. 58 வீத வாக்குகளைப் பெற்ற கட்சியாக செயற்படாமல் தமது நிழலுக்குக் கூட அஞ்சிய நிர்வாகமாக ராஜபக்ஷ நிர்வாகம் செயற்பட்டு வருகிறது. அதுமாத்திரமல்லாது அமைதியான எதிர்ப்புகளை அடக்குவதற்காக பாதாள உலக வன்முறையாளர்களை காவல்துறையினரின் உதவிக்கு எந்த நிர்வாகம் பெற்றுக்கொடுக்கும்?. பொன்சேக்கா ராஜபக்ஷ நிர்வாகத்தின் பாதுகாப்புப் படையின் கூட்டுப் படைத் தளபதியாவார். அவருக்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவியில் ஒருபகுதியை வழங்க யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது. அவர் ராஜபக்ஷ நிர்வாகத்தின் பாதுகாவலனாக தொடர்ந்தும் குரல்கொடுத்திருந்தால் பொன்சேக்கா மீது எந்தக் குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்பட்டிருக்காது என்பதை முழு இலங்கையர்களும் அறிவர்.

தமது ஒருதலைப் பட்சமான நிர்வாகத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காக முன்னாள் இராணுவ அதிகாரியான ஜெனரல் பொன்சேக்காவை சிறைக்கு அனுப்ப எடுத்தத் தீர்மானத்தின் மூலம் தெரிவது என்னவெனில், அதிகாரத்தினால் குருடாகியுள்ளதையே வெளிக்காட்டுகிறது. அல்லது அதிகாரம் இல்லாமல் போகும் என்ற பயத்தினால் ஏற்பட்ட விளைவு.

விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்கும் யுத்தம் தொடர்பான சகல இரகசியங்களையும் அறிந்த பொன்சேக்காவை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதன் மூலம் இலங்கை அதிர்வடையும் தலையெழுத்து ஏற்படும் என்பதன் காரணமாகவே இந்த அச்சம் ஏற்பட்டுள்ளது.

ராஜபக்ஷ நிர்வாகத்தினர் ஒருபோதும் பொன்சேக்காவிற்கு எதிராக பகிரங்க நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப் போவதில்லை என்பது திண்ணம். மறுபுறம் பொன்சேக்காவை சிறை வைப்பதோ அல்லது கொலை செய்ய முயற்சிப்பதோ ராஜபக்ஷ அரசியலின் அடிப்படையான சிங்கள வீரத்திற்கு வலியை ஏற்படுத்த ஆரம்பித்துள்ளது.

சரத் கைதுசெய்யப்பட்டமை குறித்து அஸ்கிரிய, மல்வத்து மாநாயக்க தேரர்கள் கண்டித்து வெளியிட்ட அறிக்கை இதற்கு சிறந்த உதாரணமாகும். வெள்ளையணிந்த பொய்யர்களான அரசியல்வாதிகள் குறித்து இவ்வாறானதொரு கருத்தை அண்மைக் காலத்தில் நாம் கேட்டதில்லை.

அவ்வாறிருந்த போதிலும் பொன்சேக்காவை சிறை வைப்பதையோ அல்லது கொலை செய்வதையோ கைவிட ராஜபக்ஷ நிர்வாகத்திற்கு முடியாது. எதிர்ப்பைப் பொறுத்துக் கொள்ள முடியாத ஒருதலைப் பட்சமான அடையாளமாக மாறியிருப்பதே இதற்கான காரணமாகும்.

பொன்சேக்கா சிறைவைக்கப்பட்டமை தொடர்பாக விரிவான அரசியல் வளர்ச்சி குறித்து விமர்சிக்கும் அரசியல் விமர்சகரான திசரணி குணசேகர, ராஜபக்ஷ குடும்பத்தின் ராஜ்ஜியத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல வேண்டுமானால், அவர்களுக்குரியதான அரசியல் சாசனமொன்றை உருவாக்கும் தேவை இருப்பதால் பொன்சேக்காவின் கைது நேரடியாக பொதுத் தேர்தலுடன் சம்பந்தப்பட்டுள்ளதெனக் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறான அரசியல் திருத்தத்தை நிறைவேற்றிக்கொள்ள முடியாது போனால், இரண்டாவது பதவிக் காலத்தின் இறுதியில் ராஜபக்ஷ இராஜ்ஜியத்தின் வேலைத் திட்டம் கட்டாயமாக வீழ்ச்சியடையும் என அவர் வாதிட்டுள்ளார்.

ராஜபக்ஷ வேலைத் திட்டத்தை ஏன் தோற்கடிக்க வேண்டும் என கூறும் குணசேகர, பொன்சேக்கா கைதுசெய்யப்பட்டமை தனிமைப்படுத்தப்பட்டமை ஒரு தனிப்பட்ட சம்பவமல்ல. ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னரான முழு அடக்குமுறையின் ஒருபகுதியாகும் எனக் கூறியுள்ளார்.

எமக்கு இந்த ஒடுக்குமுறை குறித்து மற்றுமொரு கோணத்தில் பார்க்க முடியும். அரசியல் பொருளாதார எழுச்சி என்பது குறைந்தது அரசியல் பயணத்தின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுகிறது.

ராஜபக்ஷ நிர்வாகத்தின் கீழுள்ள பொருளாதார மற்றும் அரசியல் நிபுணர்கள் இந்த ஒருதலைப்பட்சத்திற்குப் பொருத்தமான பொருளாதார நடைமுறை குறித்துப் பேசுகின்றனர். அவர்கள் அதனை அரச அபிவிருத்தி நடைமுறையெனக் கூறுகின்றனர். இதற்கு உதாரணமாக அவர்கள் சிங்கப்பூர் மற்றும் சீனா போன்ற நாடுகளைச் சுட்டிக்காட்டுகின்றனர்.

இலங்கை, சிங்கப்பூராக மாற முடியாது என்ற விவாதமானது சுமார் 25 வருடங்கள் பழைமையானதாகும். சீனாவிடம் இருக்கும் வளங்களானது இலங்கை எண்ணிப்பார்க்க முடியாததாகும். முக்கியமான விடயம் அதுவல்ல, இந்த பொய்யான இராஜ்ஜிய அபிவிருத்தி அரசியல் கருத்தியலை அடிப்படையாகக் கொண்டே இம்முறை மகிந்த சிந்தனை ஆவணம் எழுதப்பட்டுள்ளது. அதில் எவ்வித ஜனநாயக அரசியல் மறுசீரமைப்பு குறித்த யோசனைகளும் காணப்படவில்லை.

17வது அரசியல் திருத்தம் உண்பதற்கா என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பதுளை மக்களிடம் கேட்டமையானது இந்தத் திட்டத்தின் வெட்கமற்ற அறிக்கையிடலாகும். இதன் காரணமாகவே ஜனநாயகத்தின் ஆடையை அவிழ்த்துவிட்டு மிலிந்த மொரகொட மரண தண்டனையைக் கேட்கின்றார்.

நாட்டின் அபிவிருத்திக்கு ஜனநாயக சுதந்திரம் தேவையில்லை என்பதற்கு இந்த கருத்தியல்வாதம் ஒரு சிறிய சுருக்கமாகும். ஜனாதிபதித் தேர்தல், பொன்சேக்கா சிறைவைக்கப்பட்டமை மற்றும் எதிர்வரும் பொதுத் தேர்தல் என்பன குறித்து நாம் விளங்கிக்கொள்ள வேண்டிய அரசியல் அடிப்படைகள் இவையாகும்.

இலங்கையை நிர்வாகிப்பதற்கும் அபிவிருத்தி செய்வதற்கும் ஜனநாயக அரசியல் முறைமை அவசியமில்லை என்பதே ராஜபக்ஷ வேலைத் திட்டத்தின் அழிவுசார்ந்த கருத்தியலாகும். இதனால், இதுவரை காலமும் ஜனநாயகம், மனித உரிமைகளுக்காக குரல்கொடுத்த அரசியல்வாதிகள், புத்திஜீவிகள், ஊடக ஆசிரியர்கள் ஆகியோர் எதிர்காலத்தில் இந்த கருத்தியல்வாதத்தின் பேச்சாளர்களாக களமிறங்குவார்கள் என்பதை நாம் எதிர்பார்க்க முடியும்.

மனித உரிமைகள் திண்பதற்கா என அவர்கள் நாளை எம்மிடம் கேட்கலாம். ஜனாதிபதித் தேர்தலில் காணக்கிடைத்த அரச வளங்களை முறைகேடாக பயன்படுத்துவதைப் பகிரங்கமாக கண்டித்து ஒருவார காலம் கடக்க முன்னர் பொதுத் தேர்தலில் இவ்வாறு மேற்கொள்ள வேண்டாம் எனத் தேர்தல் ஆணையாளரின் போதனை இதற்கு சிறந்த நிதர்சனமாகும்.

முன்னாள் இராணுவத் தளபதி குறைந்தது 40 வீத வாக்களார்களின் நம்பிக்கையை வென்றெடுத்த சிங்கள பௌத்த வீரத்தின் முன்னணி அடையாளமான சரத் பொன்சேக்காவை சிறைவைக்க அல்லது கொலை செய்ய ராஜபக்ஷவினர் மேற்கொள்ளும் முயற்சியின் மூலம் வெளிக்காட்டப்படும் முக்கியமான அரசியல் தர்க்கம் என்ன? அது ஒடுக்குமுறை நிர்வாகத்தை இடைநடுவில் நிறுத்த முடியாது என்பதாகும்.

மகிந்த ராஜபக்ஷவை நெருங்கக் கூடிய அல்லது சமமான பிரபல்யத்தைக் கொண்டுள்ளவர்களை அழிக்கும் வழிமுறைகளையே தெரிவுசெய்துகொண்டுள்ளனர். தற்போது பின்நோக்கித் திரும்ப முடியாது. பொன்சேக்காவை சிறைக்கு அனுப்ப வேண்டும். அதனால் ஏற்படப் போகும் எதிர்ப்புக்களை இரும்பு கரத்தால் அடக்க வேண்டும். ஊடக ஒடுக்குமுறைகளை அதிகரிக்க வேண்டும். வன்முறையாளர்களைப் பயன்படுத்தி எதிர்க்கட்சியினரைத் தாக்க வேண்டும். முக்கியமாக ஜே.வி.பியை ஒடுக்க வேண்டும். தேர்தல் ஆணையாளரை அச்சுறுத்த வேண்டும். தொலைக்காட்சிகள் மூலம் உயர் நீதிமன்றத்தை முட்டாள்கள் எனக் கூற வேண்டும். இராணுவத்தை அரசியல்மயப்படுத்த வேண்டும். தமக்கு ஆதரவு வழங்காத காவல்துறை அதிகாரிகளை அவமானப்படுத்த வேண்டும். அரச நிர்வாகம் தலையாட்டிகளிடம் செல்ல வேண்டும். தமது நிழலுக்குக்கூட அஞ்சும் அரசியல் தாசர்கள் தம்மைச் சூழ வைத்துக்கொள்ள வேண்டும். தமது கட்சியில் வாக்கு வங்கி இல்லாதவர்களை பலமற்றவர்களாக்க வேண்டும். இவ்வாறான துரஷ்திடவசமான சீரழிவு செயற்பாடுகள் எமக்கு எதிர்காலத்தில் தோன்றப்போகிறது.

யுத்தத்தின் பின்னரான இலங்கை எதிர்கொள்ளும் சவால்களை வெற்றிகொள்வதற்குப் பதிலாக ராஜபக்ஷ அரசியல் வேலைத் திட்டம் இலங்கையை மேலும் பிளவடைந்த மோதலான அரசியல் நிலைக்கே இட்டுச் செல்கிறது.

சகல அடக்குமுறைகளின் மூலமே நீண்டகால பல்லின அரசியல் கலாசாரத்தைக் கொண்ட இலங்கையை ஒடுக்குமுறையிலான ஒருதலைப்பட்ச நிர்வாகத்தினால் ஆளமுடியும். இதனை நாம் மாத்திரமல்ல ஒருகாலத்தில் எம்முடன் வீதியில் இறங்கிப் போராடிய மகிந்த ராஜபக்ஷவும் அறிவார். அவரது எண்ண ஓட்டம் எதனைக் கூறக்கூடும்?. ஒடுக்குமுறையா?, ஜனநாயகமா?. தேர்தலின் பின்னரான கட்டுரையில் இறுதியாகக் குறிப்பிட்டது உங்களுக்கு நினைவிருக்கிறதா? சகோதரர்களே, சகோதரிகளே நிலைமை நினைத்ததைவிட மிகவும் அபாயகரமானது. அதனை உறுதிப்படுத்த ஒருசில நாட்களே தேவைப்பட்டன. எனினும், இலங்கையை பர்மா அல்லது ஈரானாக மாற்ற நினைக்கும் கனவானது பகல் கனவாகும் என்பதே எனது நம்பிக்கையாகும்.

‐ சுனந்த தேசப்பிரிய

http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=21592&cat=1

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை ஈரானை போல் மேற்கத்திய நாடுகளை துணிந்து எதிர்க்கவோ அல்லது பர்மாவைபோல் சீனாவின் இன்னோரு காலனி நாடாகவோ ஆவது ஈழதமிழர்களின் கைகளில் தான் உள்ளது.. மேற்கத்திய நாடுகளில் பரந்து வாழும் ஈழதமிழர்கள் இதை ஒரு புள்ளியில் நிறுத்த இயலும் ..ஆனாலும் இதில் பல சிக்கல் உள்ளது .. மேற்கத்திய நாடுகள் தங்களின் பொருளாதார நலன்களுக்கு தாங்களே ஆப்புவைத்துகொள்ள விரும்புவதில்லை. அதாவது அருகாமையில் உள்ள பொந்தியாவின் நுகர்வு வெறி மக்கள் கூட்டம்... "பன்னி " குட்டி போடுவது போல பெருகி கொண்டே செல்கிறது.. இரண்டாவது இலங்கையின் இருப்பிடம் .. இலங்கையில் ஒன்றும் பெட்ரோலோ தங்கமோ கிடைக்கவில்லை.. ஆனால் அதன் இருப்பிடத்தை வைத்து மேற்கூரிய "பன்னி " கூட்டத்தை அதி உச்ச ராஜ தந்திரத்தை உபயோகபடுத்தி தனக்கு சாதகமாக பயன் படுத்து கிறது..

இதை உடைக்க வழிகள்

பொந்தியா சிதற வேண்டும் அதற்கு ஈழத்தவர்கள் தாங்கள் இருக்கும் நாடுகளில் இருந்து இங்கு சுயநிர்ணய உரிமைக்காக போராடும் தேசிய இனங்களை ஆதரிக்க வேண்டும்..பண உதவி.. தார்மீக ஆதரவு .. என அனைத்தையும் நல்க வேண்டும்..

ஈழத்தவர்கள் தாங்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளின் அரசியலில் பங்கேற்று முக்கிய அரசில் பதவிகளை பெற்று கொண்டு தமிழ்தேசியத்திற்கான ஆதரவை நேரடியாகவோ மறைமுகமாகவோ அந்த அந்த நாடுகளின் தன்மையை பொறுத்து அளிக்கலாம்.

ஈழத்தவர்கள் அதே போல உலக அரசியல் அதாவது ஐ.நா .. போன்ற சபைகளில் பங்கேற்கும் அளவிற்கு தங்கள் நிலையை மேம்பட செய்யவெண்டும்.. அங்கு எதிர்ப்பவர்களையும் எதிரியை அரவணைப்பவர்களையும் சிரித்து கொண்டே முதுகில் குத்த பழக வேண்டும். அதாவது அவரை கொடி சுரை கொடி.. தந்தையர் நாடு பாட்டி நாடு என்று...

ஈழத்தவர்கள் அதே போல அணுக்கரு ரசாய வேதியல் உயிராயுங்களை பற்றிய கல்வியை பயின்று ஈழத்தில் தனக்கு தெரிந்த அதை அங்கு பயிற்றுவிக்க வேண்டும். "வலிமையே ஆயுதம்" .. அப்போதுதான் எவனும் கை வைக்க அஞ்சுவான்.. இங்கு இஸ்ரேலை பல நாடுகள் அங்கிகரிக்கவில்லை ஆனாலும் அவர்கள் மேல் எவரும் கை வைக்க முடியவில்லை என்பதோடு இல்லாமல் கொரியா.. ஈரான் போன்ற நாடுகளையும் நினைவுகூறுதல் நன்று...

இது எனக்கு தெரிந்த சில வழிமுறைகள்.. வேறு ஏதாவது இருந்தால் ஈழத்தோழர்கள் கூறலாம்

புரட்சிகர தமிழ்தேசியன் - திருவண்ணாமலை..

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

சொற்பிரயோகம் கடுமையாக இருந்தாலும் உங்கள் தர்கத்தை ஏற்காமல் இருக்கமுடியவில்லை.

மேற்கின் விருப்பு வெறுப்புகளில் நாம் எங்கிருக்கிறோம் என்பது முக்கியம்... எமது சூழலை சரியாகக் கணிப்பிட்டால் தான் போகவேண்டிய இடத்துக்கு சரியான பாதையை அமைக்கமுடியும்.

நன்றிகள் புரட்சிகர தோழரே.

இதை உடைக்க வழிகள்

பொந்தியா சிதற வேண்டும் அதற்கு ஈழத்தவர்கள் தாங்கள் இருக்கும் நாடுகளில் இருந்து இங்கு சுயநிர்ணய உரிமைக்காக போராடும் தேசிய இனங்களை ஆதரிக்க வேண்டும். தார்மீக ஆதரவு .. நல்க வேண்டும்..

ஈழத்தவர்கள் தாங்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளின் அரசியலில் பங்கேற்று முக்கிய அரசில் பதவிகளை பெற்று கொண்டு தமிழ்தேசியத்திற்கான ஆதரவை நேரடியாகவோ மறைமுகமாகவோ அந்த அந்த நாடுகளின் தன்மையை பொறுத்து அளிக்கலாம்.

ஈழத்தவர்கள் அதே போல உலக அரசியல் அதாவது ஐ.நா .. போன்ற சபைகளில் பங்கேற்கும் அளவிற்கு தங்கள் நிலையை மேம்பட செய்யவெண்டும்.. அங்கு எதிர்ப்பவர்களையும் எதிரியை அரவணைப்பவர்களையும் சிரித்து கொண்டே முதுகில் குத்த பழக வேண்டும். அதாவது அவரை கொடி சுரை கொடி.. தந்தையர் நாடு பாட்டி நாடு என்று...

ஈழத்தவர்கள் அதே போல அணுக்கரு ரசாய வேதியல் உயிராயுங்களை பற்றிய கல்வியை பயின்று ஈழத்தில் தனக்கு தெரிந்த அதை அங்கு பயிற்றுவிக்க வேண்டும். "வலிமையே ஆயுதம்" .. அப்போதுதான் எவனும் கை வைக்க அஞ்சுவான்.. இங்கு இஸ்ரேலை பல நாடுகள் அங்கிகரிக்கவில்லை ஆனாலும் அவர்கள் மேல் எவரும் கை வைக்க முடியவில்லை என்பதோடு இல்லாமல் கொரியா.. ஈரான் போன்ற நாடுகளையும் நினைவுகூறுதல் நன்று...

இது எனக்கு தெரிந்த சில வழிமுறைகள்.. வேறு ஏதாவது இருந்தால் ஈழத்தோழர்கள் கூறலாம்

புரட்சிகர தமிழ்தேசியன் - திருவண்ணாமலை..

:)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.